முழங்கை கொண்டு அவனது விலாவில் குத்தியவள், “தள்ளி போங்க பார்த்தி” என்றாள்.
கட்டாயப் படுத்தி கரண்டியை வாணலியில் வைக்க செய்தவன் அவளை அப்படியே தூக்கி மேடையில் அமர வைத்து விட்டான். அவள் விட்ட வேலையை அவனே செய்ய ஆரம்பித்தான்.
“நானே செஞ்சிருப்பேன்” என்றாள்.
“சேவ் யுவர் எனர்ஜி சுஹா”
“ம்ஹூம்! எதுக்கு பார்த்தி?”
“கொஞ்ச நேரத்துல சொல்றேன்”
“என்ன சொன்னாலும் எனக்கு புரியாது”
“விளக்கமா நான் சொல்லி தர்றேன்”
“ம்ம்ம்! எங்க என் கண்ணை பார்த்து சொல்லுங்க பார்ப்போம்” என சவாலாக அவள் கேட்க, அவளை ஏறிட்டவன், “நான் சொல்லத்தான் போறேன், நைட் நீங்களும் என் கண்ணை பார்த்தே இருக்கணும்” என அவனும் சவாலாக கேட்டான்.
“இன்னிக்கு என்னாச்சு பார்த்தி உங்களுக்கு?”
“காலைல என் பொண்டாட்டி என்கிட்ட ஒன்னு கேட்டா”
“எவ… எவ கேட்டா?” என அவள் கேலி செய்யவும், அவளை பார்த்தவன், “நீங்கதான்” என்றான்.
“ம்ம்ம்… நாங்க…தான்! நான் கேட்டதுக்காகவா?” என முறைத்தாள்.
“ப்ச் முழுசா சொல்ல விடுங்க, டூ ஹண்ட்ரட் பெர்சென்ட் உங்களை நான் மனைவியா நினைக்கிறேன் பார்க்கிறேன், அதை உங்களுக்கு தெரிய படுத்தணும். அதைவிட உங்க ஹஸ்பண்ட்குள்ள ஒரே போராட்டம், இன்னிக்கு அதை முடிவுக்கு கொண்டு வரலைனா பாவம் அவன் தாங்க மாட்டான்”
“முதல்ல என்னை பார்த்து என் பேர் சொல்லுஙக ஸார்!”
அவளை பார்த்தவன், “அது பழக்கம் ஆச்சி, அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களால வாடா போடான்னு என்னை பேச முடியுமா?” எனக் கேட்டான்.
“நீங்க என்ன விட வயசுல மூத்தவர் பார்த்தி”
“இந்த காலத்துல வயசு பார்த்தா பொண்ணுங்க பசங்கள மரியாதையா கூப்பிடுறாங்க? உங்களுக்கும் என்னை மரியாதையா கூப்பிடுறது பழக்கம். டக்குனு எல்லாம் மாறாது” என அவன் சொல்லிக் கொண்டிருக்க,
“அப்படிலாம் இல்லடா பார்த்தி” என்றாள் அவள்.
அவன் அதிர்ந்து போனவனாக பார்க்க, அவளுக்கே இயல்பாக இருக்க முடியவில்லை.
“உங்களுக்கு அப்படி கூப்பிட பிடிச்சா கூப்பிட்டுகோங்க ஆச்சி, ஆனா எந்த நாளும் வாடி போடின்னுலாம் உங்களை என்னால பேச முடியாது. அப்படி பேசினாதான் உரிமைன்னு ஏதும் இல்லை ஆச்சி” என சொல்லிக் கொண்டே ஊற்றிய தோசையை தட்டில் வைத்து சட்னி வைத்து அவளிடம் நீட்டினான்.
அதற்கு மேல் அவனை சீண்ட அவளுக்கும் மனமில்லை. தோசை ஊற்றிக் கொண்டிருந்தவனுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் சாப்பிட்டு முடிக்கும் முன் அவனுக்கும் தோசைகள் ஊற்றி விட்டான். அவள் எல்லாம் ஒதுங்க வைக்க, அவன் ஹால் சென்று சாப்பிட்டான்.
சற்றே புழுக்கமாக இருக்க, பால்கனி போய் நின்றிருந்தாள். சற்று நேரத்தில் அவனும் வந்து விட்டான்.
அவள்தான் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன் பார்வை அவளை விட்டு அகலவே இல்லை. ஒரு கட்டத்தில் அவனது கண்களை கை வைத்து மறைத்தவள், “இப்படி பார்த்தா எப்படி நார்மலா நிப்பேனாம் பார்த்தி?” என சிணுங்கினாள்.
“அவ்ளோ சொல்லியும் பேசிட்டே இருந்தா நானும் என்ன பண்றது?” அவளது கையை விலக்கி விட்டு சொன்னவன், அப்படியே அவளை தூக்கிக் கொண்டான்.
அவனது கழுத்தை சுற்றி கைகளை கோர்த்துக் கொண்டவள், புருவங்களை உயர்த்தி ‘என்ன?’ என்றாள்.
அவளது விழிகளை தவிர்க்காமல் நேராக சந்தித்தவன், “உன் பக்கத்துல என்னெல்லாம் எனக்கு மாற்றம் வருது சுஹா, சொல்லு” என்றான்.
இதழ்க் கடையில் புன்னகை வழிய, “உங்க கண்ணும் உடம்பும் உங்க சொல் பேச்சு கேட்கிறது இல்லை. மேக்நெட் பக்கத்துல இருக்க இரும்போட நிலை ஆகிடுது உங்க நிலை” என்றாள்.
ஆமோதிப்பது போல சிரித்தவன், “இரும்பு பக்கத்துல இருக்க மேக்நெட் நிலை?” என வினவினான்.
“நீங்க ஒரு முடிவோட இருக்கீங்கன்னு தெரியுது, எனக்கு ரொம்ப நெர்வஸ் ஆகுது பார்த்தி” என அவனது காதில் சொன்னாள்.
“அதெல்லாம் நார்மல்தான், சரியாகிடும்”
“அது… ஒரு ரெண்டு நாள் போகட்டுமே பார்த்தி, நான் பிரிப்பேர் ஆகிக்கிறேன்”
“அதுக்கு ரெண்டு நாள் எதுக்கு?”
“வேணாமா?”
“ம்ஹூம்” என்றவன் அவளை தூக்கிக் கொண்டே ஹால் வந்திருந்தான். கைகளில் இருந்தவளை தன்னோடு இன்னும் நெருக்கமாக்கி அவளது நெற்றியில் முத்தமிட்டவன், “என்னிக்கா இருந்தாலும் இது நமக்குள்ள நடக்க போகுதுதான், ஆசை இருந்தாலும் உங்க சம்மதம் இல்லாம எதுவும் செய்ய மாட்டேன், ஆயுள் முழுக்க கூட காத்திருப்பேன். ஆனா நீங்க ஒரு செகெண்ட் கண்ணை மூடி யோசிச்சு சொல்லுங்க” என்றான்.
கண்களை மூடியவள் எதுவும் சொல்லவில்லை. அவனது தோள் வளைவில் முத்தமிட்டு அவனது மார்பில் முகம் பதித்துக் கொண்டாள். அவளது வாய்மொழி அவனுக்கு அவசியமாக இருக்கவில்லை.
எப்படி படுக்கைக்கு வந்தோம் என்பதையே உணரவில்லை அவள். பார்த்தியின் மீதான மயக்கத்தில் மற்ற எதுவுமே அவளின் கவனத்தில் பதிந்திருக்கவில்லை.
அவளின் கையை எடுத்து தன் தோளில் வைத்து அழுத்தியவன், “இங்கதான் எக்ஸ்ட்ரா ரிப் இருக்கு, மத்த ரிப்ஸ்’ம் கவுண்ட் பண்றியா?” எனக் கேட்டான்.
தன் கையை அவள் பின்னுக்கு இழுக்க முனைய, அவன் விட்டால்தானே?
வெட்கத்தில் குளித்திருந்தவளிடம், அவன் தனக்கான ஆசைகளை சொல்லி அனுமதி வேண்ட அவன் முகத்தை பார்க்க முடியாமல் விழிகளை இறுக மூடிக் கொண்டு “ம்…” என சொல்லி அனுமதி தந்தாள்.
மூடியிருந்த இமைகளில் தொடங்கியது முத்தம். இடம்தான் மாறியது, அவனது முத்தங்களின் யாத்திரை நிற்கவில்லை. அவளுக்கு மூச்சு முட்டச் செய்து விடாமல் இறகு போல அவளில் பயணித்தான்.
அவள் தடை போடும் நேரமெல்லாம் “சுஹா!” என செல்லமாக அதட்டினான். அவள் மறுப்பு சொல்லும் போதெல்லாம் “ஆச்சி…” என கெஞ்சினான்.
சில சமயங்களில் “பார்த்தி!” என அவள் கண்டிப்பாக அழைத்தாலும் அடுத்த நொடி அவள் இதழ்களை இதழ்களால் தழுவி சமாதானம் செய்தான்.
அவளை முழுதாக தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்குள் படுத்தித்தான் வைத்து விட்டாள். அவளின் அசைவுகளை கொண்டே அவளின் மனம் புரிந்தான். தன்னை அவளுக்கு உணர்த்தி அவளையும் தெரிந்து கொண்டான்.
கண்கள் மூடியிருந்தவளை தன் விழிகளை பார்க்க சொன்னான். அவனது பெயரை சொல்லி அவள் சிணுங்க, “என்னை பார் சுஹா” என வேண்டுகோளாக கேட்டான்.
மறுக்க மனமில்லாமல் கண்களை திறந்தாள்.
தன்னிலை மறந்து அவளில் சிந்தை மயங்கிய பார்த்தியை, மென்மையான போர் நடத்தி அவளை ஆட்கொண்ட பார்த்தியை, இதுவரை அவள் கண்டிராத பார்த்தியை அவளை பார்க்க வைத்தான் அவன்.
இருவரின் தேகமெங்கும் வியர்வை பூத்திருந்தது. அவளது நீல விழிகளின் பாவையில் அவனது முகம் நிறைந்திருந்தது. அவளது கழுத்து வளைவில் புதைந்து ஆசுவாசம் கொண்டான். ஒருவரால் அடுத்தவரின் இதயத் துடிப்பை உணர முடிந்தது.
அவளிடமிருந்து விலகியவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான். தன்னை தன் கணவன் எவ்வளவு காதலிக்கிறான் என்பதை தெரிந்து கொண்டதில் அவளிடம் உண்டான அதீத மகிழ்ச்சி கண்ணீராக வெளிப் பட்டது.
“சுஹா…” என அவன் பதறி விலகப் போக, அதற்கு அனுமதிக்காதவள், “ஷ்ஷ்ஷ்… விடாதீங்க என்னை” என்றாள்.
அவள் சொல்படி செய்தவன், “எதுக்காக எமோஷனல் ஆகுற சுஹா? காலம் முழுக்க சந்தோஷமா தாங்கிப்பேன் உன்னை, அழுகையை நிறுத்து” என்றான்.
“ம்ம்…” என்றவள் அவன் மார்பிலேயே கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டு அவனுக்குள் வாகாக அடங்கிப் போனாள்.