Advertisement

அத்தியாயம் 4:

வானிலிருந்து நீக்க இயலா

நீலம் போல

ஆழியிலிருந்து பிரிக்க முடியாத

மழைத்துளி போல

என்னில் இருந்தும் உன்னை பிரிக்க

முடியாதடி – பிரித்த நேரம் என் உயிர்

இம்மண்ணில் வாழாதடி!

காலையில் எழுந்து வந்து ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த இளாவின் பின்புறமாய் வந்து கழுத்தை கட்டிக் கொண்டு “டேய் தடியா..! எப்போடா வந்த..? “ என்றபடி செல்லம் கொஞ்சினாள் அனன்யா.

“நைட்டே வந்துட்டேன்… அம்மணி தான் கும்பகர்ணன் கூட டூயட் பாடிட்டு இருந்திங்களே..! அதான் டிஸ்டர்ப் பண்ணலை…”

“சரி… சரி..! அசிங்கப்படுத்தாத… என்னை கொஞ்சம் ஹாஸ்பிட்டல்ல ட்ராப் பண்ணுவியாடா அண்ணா..? ப்ளீஸ்…”

“எனக்கு டயர்டா இருக்கே… என்னால முடியாதுப்பா…” என சொல்ல

“ஹேய்…! ஓவரா பண்ணாதடா…  உன்கூட பைக்ல போயி ரொம்ப நாள் ஆச்சுடா.. அதான் கேட்குறேன்… சரி ஒண்ணும் வேண்டாம்… போ..!” என்று சொல்ல

அவளின் சுணங்கிய முகத்தை தாங்க இயலாதவனாய் “ஓய் கும்பகர்ணி..! ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணு… ரெடியாயிட்டு வர்றேன்…” என்றாவாறு தன் அறைக்குள் நுழைந்தான்.

சிறிது நேரம் கழித்து ரெடியாகி வந்தவன் அணிந்திருந்த ஆலிவ் கிரீன் நிற டீசர்ட்டும், அடர் கறுப்பு நிற ஜீன்ஸூம் அவனுக்கே தைத்தாற் போன்று அவ்வளவு பாந்தமாக பொருந்தி இருந்தது.

இளா கிளம்பியிருந்ததை கவனித்த அவனது அன்னை விசாலாட்சி “கண்ணா..! வெளிய எங்கேயும் போறியா..?”

“இல்லமா…! அனு அவளை ட்ராப் ப்ண்ண சொன்னா அதான் அப்படியே ஹரிஷை பார்த்துட்டு வரலாம்னு போறேன்மா…”

“ஏன்ப்பா..! நேத்து நைட் வந்ததே லேட்… கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்ல… பாரு..! கண்ணெல்லாம் சிவந்து போயி இருக்கு…” என்றவரின் குரலில் கவலை தெரிய

“பஸ்ல வரும் போதே தூங்கிட்டேன்மா… தூக்கம் வரலை… அதான் நைட் கொஞ்ச நேரம் முழிச்சுட்டு இருந்தேன்… வேற ஒண்ணும் இல்லை… ரொம்ப பசிக்குது டிஃபன் ரெடியாமா..?”

“எல்லாம் ரெடியாதான் இருக்கு… வா சப்பிடலாம்…”

“நாமெல்லாம் சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு… அனுவையும் கூப்பிடுங்கம்மா சேர்ந்தே சாப்பிடலாம்…”

“அதெல்லாம் உன் தங்கச்சி கரெக்ட் டைமிற்க்கு ஆஜராகிடுவா… அங்க பாரு…!” என டைனிங் டேபிளை காட்ட அனுவோ கிண்ணத்தில் இருந்த சாம்பாரை வாசனை பிடித்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டு புன்னகைத்தவாறே அருகில் வந்தவன் அவளது தலையில் செல்லமாக கொட்டிவிட்டு அமர்ந்தான்.

“ஹேய்..! தலையில அடிக்காதடா பக்கி… என் ஹேர் ஸ்டைல் கலைஞ்சிரும்…” என்று கூறியவாறு தலையை சரி செய்து கொள்ள,

“ஆமா..! பத்ரகாளி மாதிரி விரிச்சு போட்டுட்டு இதுல என்ன ஹேர் ஸ்டைல் இருக்கு… என் பையன் கலைச்சுவிடுறதுக்கு…” என சாலா தன் மகனுக்கு சப்போர்ட்டாக பேச

“அம்மா..! இப்போலாம் இது தான்மா ஸ்டைல்…” என்று இளா தன் தங்கைக்கு சதகமாக பேச,

“ஒன்னு கூடிட்டாங்கயா ஒன்னு கூடிட்டாங்க… இனி என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டிங்க… அதனால சீக்கிரம் இடத்தை காலி பண்றேன்…” என்றபடி தன் அன்றாட வேலைகளை கவனிக்க செல்ல,

“சாலா கொஞ்சம் நில்லுங்க…! ஏன் ஓடுறீங்க..? எங்களை பார்த்தா அவ்ளோ கேவலமாவா இருக்கு..?” என அனு குரல் குடுக்க,

“ஹான்..! அஸ்க்கு புஸ்க்கு… நான் வரமாட்டேன்..!” என்று புன்னகைத்தபடி சென்றுவிட இளாவும், அனுவும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

தனது அப்பாச்சியை ஸ்டார்ட் செய்தவன் கூலர்ஸை அணிந்து கொண்டவாறு,

“ ஏய் அனு..! இன்னும் என்ன பண்ற வா…  சீக்கிரம்..!”

“ஏன்டா கத்துற…? வந்துட்டு தான இருக்கேன்… அப்படி என்ன அவசரம்..? அந்த வீணாப்போன ஹரிஸை தான பார்க்க போற… ஏதோ கோயம்புத்தூர் கலெக்டர்கூட மீட்டிங் போற மாதிரி ஓவர் சீன் போடுற…”

“ஹா ஹா ஹா…! அவன் மேல உனக்கு ஏன் இவ்ளோ கடுப்பு..? என்ன பண்ணுனான்…?” என்றபடி வண்டியை கிளப்பினான்.

“அவனுக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா அன்னைக்கு வீட்டுக்கு வந்திருக்கும் போது எங்க வீட்டு பக்கம் ஒரு கிழவி இப்போவோ அப்போவோனு இருக்கு… நீ வந்து ட்ரீட்மென்ட் குடு பொட்டுனு போயிடும்ன்றான்…”

“ஹா ஹா..! மச்சிக்கு எப்போதும் ஹியூமர் நல்லா வரும்… யூ நோ..?”

“ஏன் சொல்ல மாட்ட..? அதுமட்டுமில்லாம ஊசி கூட வேண்டாம்…. மேக்கப் இல்லாம உன் முகத்தை காட்டு போதும் பாட்டி மேல போய் சேர்ந்திடும் அதுக்கு நான் கிராண்டினு மிக்ஸி விளம்பரம் மாதிரி சொல்றான்… ஒரு நாள் இருக்கு அவனுக்கு… “ என்று சொல்லி முடிக்கவும் ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேரவும் சரியாய் இருந்தது.

அனுவை இறக்கிவிட்டவன் “அனுமா பை…!” என்றவாறு தன் நண்பனை காண விரைந்தான்.

மிகவும் உற்சாகத்தோடு உள்ளே நுழைந்த அனன்யாவை கண்ட அருண் “ என்ன மேடம்…? ஓரே குஷி மூட்ல இருக்கீங்க….” கேட்க

“ரொம்ப நாள் அப்புறம் என் அண்ணன் பைக்ல வந்தேனா அதான் கொஞ்சம் ஹேப்பி மூட்ல இருக்கேன் ஹி ஹி”

“உன் அண்ணன் வந்திருக்கானா..? சொல்லவே இல்லை..!”

“ஏன் சொன்னா உடனே அவனை பார்த்திற போறிங்களா..? இல்லைல… அப்புறம் என்ன..? நேத்து நைட் தான் வந்தான்…”

“என் தங்கச்சிங்களுக்கு கல்யாணம் முடியட்டும்… அப்புறம் வந்து உங்க அண்ணன்கிட்ட பேசுறேன்…. சரி அது இருக்கட்டும்… வேலை விஷயம் என்னாச்சு..?”

“நல்லபடியா முடிஞ்சுது… அடுத்த மாதம் ஜாயின்ட் பண்ணனும் சொல்லிட்டு இருந்தான்…”

“ஹே அனு..! சொல்ல மறந்துட்டேன்… நான் நாளைக்கு ஊருக்கு போறேன்…. ரெண்டு நாள் லீவ் சொல்லியிருக்கேன்… சோ மன்டே தான் வருவேன்…”

“ஓகே அருண்..! பார்த்து போயிட்டு வாங்க… வீட்டுல எல்லோரையும் கேட்டதா சொல்லுங்க…”

“எல்லார்கிட்டயும் எங்க சொல்றது தனுக்கு மட்டும் தான் தெரியும்… சரி போ..! ரவுண்ட்ஸ் போகனும்… டைம் ஆயிடுச்சு பை “என்றவாறு நகர

“வேலைனு வந்துட்டா தீயா வேலை செய்யுங்க….!” என்று கூறி புன்னகைத்து விட்டு சென்றாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

வேலைக்கு புறப்பட்ட தனு வழியில் ட்ராபிக்கில் மாட்டிக் கொள்ள லேட் ஆகிவிட்டதோ என்ற பதட்டத்தில் கம்பனியின் உள்ளே நுழைந்து போது அங்கு வழக்கத்திற்கு மாறாக அமைதி நிலவியது. தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்தவள் அவளுக்கு பக்கத்தில் இருந்த அவளின் தோழி வெண்பாவிடம்,

”வெண் என்னடி ஆச்சு…? ஹிட்லர் வந்தாச்சா..? ஆபிஸே இவ்ளோ அமைதியா இருக்கு… வந்திருந்தா இந்நேரம் கேட் வரைக்கும் அவரோட சத்தம் கேட்கணுமே..?”

“அதையேன்டி கேட்குற… ஹிட்லர் வந்திருச்சு… அது சொன்ன நியூஸ்ல தான் எல்லாரும் அமைதியாகிட்டாங்க…”

“ஏன் இன்னையிலருந்து அஹிம்சாவதியா மாறப்போறேனு எதுவும் சொன்னாரா..?”

“அப்படி சொல்லியிருந்தா பரவாயில்லையே… இனி நமக்கு புவா கிடையாதுனு சொல்லிட்டாரு…”

“புவா? என்னடி லாங்குவேஜ் பேசுற நீ” என தனு சலித்துக் கொள்ள

“நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணிகிட்டு இனிமே நமக்கு வேலை இல்லை இங்க கம்பெனியை ஷாப்பிங் காம்பெளக்ஸ்க்காக வித்துட்டு வெளிநாட்டுல இருக்க மகளோட செட்டில் ஆகப் போறாராம் “

“இது என்னடி திடீர்னு சொன்னா எப்படி..?“

“ஏதோ அவசரமாம்… சோ வேற வேலை தேட வேண்டியது தான்… ஒரே ஒரு நல்ல விஷயம் அப்படினா அடுத்த மாதம் சாலரியை போனஸா தர்றேனு சொல்லிருக்காரு… அது வரைக்கும் தப்பிச்சோம்..!”

“அடுத்த வேலை தேடணுமா..? ஹய்யோ வேலை தேடுறது எல்லாம் செம கடுப்பு மச்சி…இப்போ என்ன பண்றது..?”

“கவலைப்படாதடி..! நாளைக்கு ஒரு கம்பெனியில இன்டர்வியூ இருக்கு… சோ நாம போகலாம்”

“அப்போ உனக்கு வேலை போக போகுதுனு முன்னாடியே தெரியுமா? அதுக்குள்ள எங்க இன்டர்வியூ நடக்குதுனு தெரிஞ்சி வச்சுருக்க”

“ஹிட்லர் சொல்லிட்டு போனதும் என் காலேஜ் ப்ரண்ட்கிட்ட அவ கம்பெனியில எதாவது வேகன்ட் இருக்கானு கேட்டேன்…. அவ தான் அவங்க சித்தப்பா வேலை பார்க்குற கம்பெனியில நாளைக்கு இன்டர்வியூ இருக்குனு சொன்னா?”

“ம்ம் சரி வெண் நாளைக்கு போகலாம்… கொஞ்சம் வொர்க் இருக்கு அதை முடிச்சுட்டு வர்றேன்… அப்புறம் நாளைக்கு போறதை பத்தி விவரமா பேசுவோம் “ என்றபடி தனக்கு முன்னிருந்த கோப்பின் மீது கவனத்தை திருப்பினாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@

“யாரை கேட்டு இப்படி ஒரு முடிவு எடுத்திங்க..? நீங்க முதலாளியா..? இல்லை நானா..?” என தன் பி.ஏ வினோத்தையும் மேனஜரையும் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான் சஜன்.

“இல்லை சார்..! இப்போதைக்கு நமக்கு நாலு பேர் தான் சார் தேவை… ஓபன் நோட்டிஃபிகேஷன் குடுத்தா மினிமம் ஒன் வீக் ஆகும் சார்… இப்போ அர்ஜன்ட்டா தேவைப்படுறதால தான் கான்பிடன்ஷியல் இன்டர்வியூ பண்ணலாம்னு முடிவெடுத்தோம் சார்… “ என ஹெச்.ஆர் டிபார்ட்மென்ட் மேனேஜர் சொல்ல

அவர் சொல்வதும் ஒரு விகிதத்தில் சரி என்றாலும் ஏனோ தகுதி இல்லாதவர்கள் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த சஜன் “ஓகே..! பட் ஓன் கண்டீஷன்… எனக்கு சேட்டிஸ்ஃபை ஆகலைனா அடுத்த நிமிஷம் ஓபன் காம்படீஷனுக்கு தேவையான ப்ராசஸ் ஸ்டார்ட் பண்ணிருக்கனும்… காட் இட் யூ மே கோ நவ்” என சீற தப்பித்தால் போதுமென மேனேஜர் தனது கேபினுக்கு சென்றார்.

அங்கேயே நின்று கொண்டிருந்த வினோத்திடம் “உனக்கு தனியா வேற சொல்லனுமா? போ போய் அந்த எஸ்.ஆர்.கம்பெனிக்கு அனுப்பி வேண்டிய லெட்டர் ரெடி பண்ணி எடுத்துட்டு வா” என சொல்ல

“சாரி சார்..! இதோ ஃபைவ் மினிட்ஸ்ல ரெடி பண்ணிடுறேன்…” என்றவாறு வெளியே வந்தவன்,

“ஷப்பா…! இவர்கிட்ட வேலை பார்க்குறதுக்கு பேசாம ஏதாவது சாமியார்கிட்ட அசிஸ்டன்டா போயிடலாம்…”

“டேய்..! இப்போலாம் சாமியார்கிட்ட வேலை பார்க்குறது தான்டா டேஞ்சர்” என மனசாட்சி குரல் குடுக்க

“அய்ய்யோ…! வேண்டவே வேண்டாம்டா சாமி…” என முணுமுணுக்க

“என்னது மறுபடியும் சாமியா…?” என மனதின் உள்ளே ஒரு குரல் கேட்க

“நோ.. நோ..! இது ஆசாமி இல்லை… படைச்ச சாமியை சொன்னேன்…” என்று நினைத்துக் கொண்டிருக்க அப்போது இன்டர்காம் ஒலிக்க அதை எடுத்தவன் பதில் சொல்லும் முன் “லெட்டர் ரெடி பண்ண சொல்லி டென் மினிட்ஸ் ஆகுது… இன்னும் என்ன பண்ற..?” சஜன் கேட்க

“இதோ வந்துட்டேன் சார்…!“என்றபடி தன் வேலையை கவனிக்கலானான்

@@@@@@@@@

மதிய உணவு வேளைக்கான நேரம் ஆகவும் தன் இருக்கையில் இருந்து எழுந்த வெண்பா “ஹேய் சின்சியர் சிகாமணி..!  வா டி சாப்பிட போலாம்… மணி ஒன்றரை ஆகப் போகுது..!”

“ஒரு டூ மினிட்ஸ் டி… இந்த அமௌன்ட் மட்டும் டேலி ஆகுதானு பார்த்துட்டு வந்திடுறேன்…”

“அட ராமா..!  என்னை ஏன் இந்த மாதிரி களிசடைகள் கூட கூட்டு சேர வைக்குற..? “ என புலம்ப

“அம்மா தாயே..! வா போகலாம்… இல்லைனா நீ என்னை பேசியே கொன்றுவ…” தனது லஞ்ச் பேக்கை எடுத்துக் கொண்டு வெண்பாவை பின் தொடர்ந்தாள் தனு.

“ஹேய் வெண்..! கேட்க மறந்துட்டேன். நாம நாளைக்கு போறது எந்த கம்பெனி டி“

“அடிப்பாவி..! இப்போவாது கேட்டியே…? ‘ரிதம் டெக்கரேஷன்ஸ்’ கம்பெனிக்கு தான் நாம போறோம்….”

“நீ நேரா அங்கேயே வந்திடு… நானும் வந்திடுறேன்… ஓகே டி எத்தனை மணிக்கு இன்டர்வியூ…”

“சரி தனு…! டென் ஒ கிளாக் ஷார்ப்பா வந்திடு…. அந்த எம்.டி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் வொர்க் விஷயத்துல…”

“நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற பாரு..! எல்லாம் என் நேரம்…”

“ஹேய்..! இன்னைக்கு ஹிட்லர் என்னமா பேசுச்சுங்குற… ஒரே பாச மழை தான் போ…”

“தொல்லை விட்டதுனு சந்தோஷத்துல பேசிருப்பாருடி… நீ அதை பாச மழைனு நினைச்சுட்ட போல…”

“எதுவா இருந்தா என்ன..? இன்னைக்கு பாஸ் தெறிக்க விட்டுட்டாரு…”

“அதெல்லாம் எங்க தல மட்டும் தான் தெறிக்க விடுவாரு… நீ உங்க பாஸை இதுல சேர்க்காத…அவர் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாரு…”

“அவரு தெறிக்க விடுறது இருக்கட்டும்… நாளைக்கு மட்டும் வேலை கிடைக்கலை… எங்க வீட்டுல என்னை பொறிக்க விட்டுருவாங்க கிட்சன்ல…”

“ஏன்டி..! சமையல் பண்றது அவ்ளோ பெரிய தண்டனை மாதிரி பேசுற…”

“உனக்கென்னடி நீ சமையல்ல புகுந்து விளையாடுவ…. நான் அப்படியா வேலைக்கு போறேனு சாக்குல சமையல் கத்துக்காம டிமிக்கி குடுத்துட்டு இருக்கேன்… வேலை மட்டும் கிடைக்கலை… என்னை ஃபுல் டைம் கோர்ஸ் பண்ண வச்சுடுவாங்க”

“அய்யோ..! அண்ணா அதான் உன் ஹஸ்பன்டா வரப் போறவங்க ரொம்ப பாவம்டி… நீ சமைச்சு அவர் சாப்பிடணும்னு தலையெழுத்து…”

“ஓ..! நான் சமைப்பேனு வேற நினைச்சுட்டு இருக்கியா நீ…! வேற நான் சமைச்சு அவர் சாப்பிட்டு ஆபிஸ் போறதுக்குள்ள விடிஞ்சிரும்”

“அடிப்பாவி..! நல்லா வருவடி நீ… சரி வா வேலையை கவனிப்போம்…” என்றவாறு தனு எழ

“எத்தனை ஆயிரம் சோம்பேறிகள் வந்தாலும் உன்னை திருத்த முடியாதுடி… எப்போ பாரு வேலையை பார்ப்போம்னு சொல்லிக்கிட்டே திரியுற…” என சீரியஸாக சொல்ல

“அடிங்க..! ஓபி அடிக்குறதுக்கு இவ்ளோ பேசுற நீ…” என்றபடி தன் இடத்தில் அமர்ந்து மீதமிருந்த வேலைகளை செய்ய தொடங்கினாள்.

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement