Advertisement

நெஞ்சம் 9:

 

“ஐ லவ் யூ நிகி..! லவ் யூ சோ மச்ச்ச் ஃப்ரம் மை பாட்டம் ஆஃப் தி ஹார்ட்..” என்று கண்களில் காதல் வழிய சொன்ன துவாரகேஷை சற்றும் எதிர்பார்க்காதவளாய் உறைந்து போய் நின்றிருந்தாள் நிகழினி.

 

அவளது அதிர்வை உணர்ந்து கொண்டவனாய் , “ எனக்குத் தெரியும் நிகி..! யூ டிட் இன்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் மீ.. ஏன் எனக்குமே இது புரிய வந்தப்போ ஈவன் ஐம் ஆல்சோ ஷாக்ட்… அதான் த்ரீ டேஸ் டைம் எடுத்துகிட்டேன்.. என்னால அந்த உணர்வுகளோட அழுத்தத்தை தாங்க முடியலை..ஏதோ ஒரு மாதிரி பாரமா என் மனசு ஃபீல் பண்ணுது… உன்மேல எனக்கு இருக்க ஃப்பீலிங்கஸ் எக்ஸ்பிரஸ் பண்ணாம என்னால இங்க இருந்து போக முடியும்னு தோணலை.. நீ என்னோட லைஃப் ஜர்னியில ஒரு சோல் மேட்டா கூட வந்தா ஃபுல்பில்டா இருக்கும்னு என் உள் மனசு சொல்லுது… அதான் உங்கிட்ட சொல்லிட்டே போகலாம்னு வந்துட்டேன் “

எதுவும் சொல்லாமல் அமைதியாய் அவனது விழிகளைக் கூர்பார்வையால் அளவிட்டுக் கொண்டிருந்த நிகியிடம் ,

 

“இப்போவே சொல்லணும்னு எந்த அர்ஜென்ஸியும் இல்லை… நான் திரும்பி வர சிக்ஸ் மன்த் ஆகும்… இந்த டைம் ப்ரியட்டை யோசிக்க எடுத்துக்கோ… இந்த இடைப்பட்ட டைம்ல நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… ஆஃப்டர் சிக்ஸ் மன்த் நான் வந்ததும் சொன்னா போதும்.. அதுக்கு முன்னாடியே “டேய் இடியட்..! நானும் உன்னை லவ் பண்றேன்னு” நீ சொன்னாலும் ஐ வோன்ட் மைன்ட்” என்று மயக்கும் புன்னகை ஒன்றை இதழ்களில் பரவ விட்டவன்,

“ஈகர்லி வெயிட்டிங் பார் யுவர் ரிப்ளை …! பை டே கேர்” என்று விட்டு கிளம்பி விட, குழப்பத்தில் நின்றதென்னவோ நிகழினி தான்!

 

துவாரகேஷ் சென்று வெகு நேரமாகியும், நிகழினிக்கு அவன் சொன்னதைக் கிரகித்துக் கொள்ளச் சிறிது நேரம் பிடித்தது… இது வரை பேசிய பொழுதுகளிலும் சரி, நேரில் சந்தித்த போதும் சரி இது போன்ற பிடித்தம் இருப்பதாய் கோடிட்டு காட்டியதில்லை எனும் போது திடீரென்று தேவதூதன் போல் எதிர்பாரத நேரம் கண்முன் தோன்றி விருப்பத்தைச் சொல்லி விட்டு பறந்து சென்றுவிட்டவனை எவ்விதம் கையாளுவது எனப் புரியவில்லை… ஆனால் அவன் ப்ரபோஸ் செய்த பாங்கு ரசிக்கும் படியாக இருந்ததாகத் தான் தோன்றியது.

 

“பாப்பா…! மழை வர்ற மாதிரி இருக்கு… வீட்டுக்கு போங்க… நான் எல்லாத்தையும் எடுத்துவச்சிட்டு போறேன்” என்ற முத்தண்ணாவின் குரலை கேட்ட பின்பு தான் அவனைப் பற்றிய நியாபகத்தில் வெகு நேரமாக நின்று விட்டது புரிய,

 

“இப்போ வரை அவன் மேல ஒரு ஃப்லீங்க்ஸூம் வரலை.. சோ இதைப் பத்தி ரொம்ப யோசிக்க வேண்டாம்.. அதன் போக்குல போகட்டும்… ஒரு வேளை பிடிச்சிருந்தா அடுத்து என்னனு யோசிக்கலாம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள்,

 

“இதோ கிளம்பிட்டேன்..! நீங்களும் சீக்கிரம் கிளம்பிடுங்க முத்தண்ணா” என்று அறிவுறுத்தி விட்டு வீட்டிற்குச் செல்லும் பாதி வழியிலேயே மழை பிடித்துக் கொள்ள, வீட்டை அடையும் போது முழுதும் நனைந்திருந்தாள் நிகழினி.

 

தொப்பலாக நனைந்தபடி உள்ளே வந்தவளைக் கண்ட சாரதா, ” ஏன்டி..! மழை வந்தா ஒதுங்கி நின்னு விட்டதும் வரக் கூடாதா..? இப்படியா நனைஞ்சுட்டு வருவ..” எனக் கடிந்து கொள்ள,

 

“பக்கத்துல வந்துட்டோமே விரட்டி வந்துடலாம்னு நினைச்சேன்மா… ஆனா நனைஞ்சுட்டேன்” என அசடு வழிய,

 

“ஆமா…! இதென்ன பூங்க்கொத்து கையில” என்று கேட்க,

 

“ஹான் …இது.. இது வந்து ” எனத் தடுமாற ஆரம்பிக்கையில்,

 

“என்னடா…! இப்படி நனைஞ்சுட்டு வந்து ட்ரெஸ் சேஞ்ச் பண்ணாம நின்னுட்டு இருக்க” எனக் கேட்டுக் கொண்டே அறையில் இருந்து வந்த தந்தையின் குரலில் ஆசுவாசமானவள்,

 

“ஹப்பா எப்படியோ அப்பா வந்து நம்மளை எஸ்கே பண்ணி விட்டுட்டாங்க” மனதிற்குள் சொல்லிக் கொண்டவள்,

“இதோ போறேன்ப்பா..! அம்மா ரொம்பக் குளிருதும்மா .. ஒரு காபி போட்டுக் கொடும்மா.. நான் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்” என்று அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

“ஏனுங்க மாமா..! என்னைக்கும் இல்லாத திருநாளா நிகி இப்படி டைப் அடிக்குறா.. என்னாச்சு இவளுக்கு” என மகளின் தடுமாற்றத்தை கண்டு கணவனிடம் கூற,

 

“ஆராய்ச்சி எல்லாம் அப்புறம் பண்ணலாம்…முதல்ல போய்க் காஃபி போட்டுக் கொடு” என்று விட,

 

“என்னவோ போங்க..! அந்தக் கழுதை முகமே சரியில்ல..நாம சொன்னா யார் கேட்குறா இந்த வீட்டுல.. உனக்கு மரியாதை அவ்வளோ தான்டி சாரு..” என முணு முணுத்தப்படி சாரதா செல்ல, சந்திரனோ தனக்குள் புன்னகைத்துக் கொண்டார்.

 

அவரின் புன்னகைக்குக் காரணம் இது தான்…! துவாரகேஷ் நிகழினியிடம் தன் விருப்பத்தைச் சொல்லி விட்டு நேராக வந்து பார்த்தது சந்திரனைத் தான்..! அவரிடம் எல்லாவற்றையும் சொல்லி அவரது சம்மதம் கேட்க, அவர் தான் துவாரகேஷிடம் இருந்து இப்படி ஒரு நாள் விஷயம் வெளிப்படும் என்று தான் அவர் முன்பே கணித்திருந்தாரே..

 

“எனக்கோ இல்லை என் மனைவிக்கோ இதுல எந்த வித மறுப்பும் இல்ல.. ஆனா நிகிக்கு பிடிக்கணும்.. அது மட்டும் தான்.. அவளுக்கு இஷ்டம் இல்லைனா எங்களால அவளைக் கட்டாயப்படுத்த முடியாது” என்று விட,

 

“கண்டிப்பா.. நிகிக்கு என்னைப் பிடிக்கும் அங்கிள்… வர்றேன்” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்..

******************************************

ஆன்சைட் பயணத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த துவாரகேஷ் தன் தந்தையை தனியே அழைத்து “அப்பா…! நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குல்ல…உங்களை நம்பி தான் நான் போறேன்.. அதுமட்டுமில்ல நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. நான் இல்லாத ஆறு மாதமும் அம்மா வேற எதும் ஏற்பாடு பண்ணாம பார்த்துக்கணும்” எனத் தன் தந்தையிடம் எச்சரிக்க,

 

“டேய்…உனக்கே இதெல்லாம் நியாயமா இருக்காடா… இதுவரை உன் அம்மாக்கு எதிரா நான் ஒரு துரும்பை கூட நகர்த்துனது இல்ல… நகர்த்தவும் அவ விட்டது இல்ல.. அப்படி இருக்கும் போது என் கிட்ட இவ்வளோ பெரிய வேலையைக் கொடுக்குறியே” என அங்கலாய்த்தவரிடம்,

 

“அது உங்க பிரச்சனைப்பா… அதை நீங்க பார்த்துக்கோங்க… ” என அசால்ட்டாய் நழுவிக் கொண்டவனை

“நல்லா வருவடா மகனே..! ” என வாழ்த்த தான் முடிந்தது மனைவிக்குப் பயந்த அந்த அப்பாவி அப்பாவால்..!

 

அன்றிரவு ஃப்ளைட்டில் மெல்பர்ன் சிட்டியை நோக்கி தன் பயணத்தைத் துவக்கியிருந்தான் துவாரகேஷ்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சில மாதங்களுக்குப் பிறகு:

சொன்ன காலக்கெடுக்கு முன்னமே ப்ராஜெக்ட் முடிந்து விட்டதால் பதினைந்து நாட்கள் முன்னரே துவாரகேஷ் இந்தியா வந்திருந்தான். இதற்கிடையில் கீதாவின் ஒன்று விட்ட அண்ணன் வீட்டுக் கிரகப் பிரவேசத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கக் குடும்பத்தோடு சென்றிருந்தனர். விழா நடைபெறும் இடத்திற்கும் நிகழினியின் ஊரிற்கும் இரண்டு கிலோ மீட்டர் தான் தூரம்.

 

விழாவை சிறப்பித்து விட்டு எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் கீதாவின் உறவினர்கள் ஆளாளாக்கு ஒரு வரன் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்க, இனிமேலும் அன்னையிடம் சொல்லாமல் இருப்பது வேலைக்கு ஆகாது என்ற முடிவிற்கு வந்தவன் தந்தையிடம் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

 

அதன்படி வரும் வழியில் விஷயத்தைப் போட்டுடைத்து கீதாவின் நெற்றிக் கண்ணில் இருந்து வரும் வெப்பத்தில் எப்படியோ தந்தையும், மகனும் தப்பிப் பிழைத்து, ” பார்த்ததும் உங்களுக்கே பிடிக்கும்மா.. ப்ளீஸ்ம்மா ரொம்ப நல்ல பொண்ணு .. நீயே இவ தான் உனக்குக் கரெக்ட்டான ஜோடினு சொல்லுவ பாரு” என என்னென்னவோ சொல்லி தாஜா செய்து அழைத்து வந்திருந்தான். வெடிக்கப் போகும் பூகம்பம் பற்றி அறியாமல்…

 

தனது தோட்ட்த்தில் வேலையாய் இருந்த தன்னை “நிகிம்மா ..! கொஞ்சம் கிளம்பி வீட்டு வாடா..! என்று அலைப்பேசியில் அழைத்த தந்தையிடம்,

 

“இதோ வேலை முடிஞ்சுதுப்பா.. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி முடிச்சிட்டு வந்துடுறேன்.. எதும் அவசரமாப்பா..?”

 

“ம்ம் ஆமாடாம்மா..! உன்னைப் பொண்ணு பார்க்க வந்திருக்காங்க” என்று சொன்னதும் அதிர்ந்தவள்,

 

“என்னப்பா இதெல்லாம் நான் தான் சொன்னேன்ல… நான் கேட்ட டைம் முடிய இன்னும் நாள் இருக்கே..அதுக்குள்ள இப்படிப் பண்ணா எப்படி..?”

 

“நான் எதும் சொல்லலைடா… அவங்களா திடீர்னு வந்துட்டாங்க.. வீட்டுக்கு வந்தவங்களை விரட்டவா முடியும்…நீ வர்றியா?”

 

“ம்ம் சரி சரி வைங்க… வர்றேன்” என்று விட்டு கிளம்பியவள் மனதிற்குள் துவாரகேஷை தாளித்துக் கொண்டிருந்தாள்.

“பெரிய இவன் மாதிரி ஆறு மாசம் டைம் சொல்லிட்டு அவன் போயிட்டான்.. இதை அப்பாகிட்ட சொல்ல முடியாம நான் தவிக்க வேண்டியதா இருக்கு… இதுக்கு முன்ன எனக்குப் பழக்கமில்லாத விஷயத்தை எல்லாம் செய்ய வைக்குற உன்னை… இருக்கு உனக்கு ” எனக் கடிந்து கொண்டாள்.

 

துவாரகேஷை அவள் விரும்புகிறாளா?? என்று கேட்டால் அவளுக்குப் பதில் தெரியாது… ஆனால் ஆறு மாதம் கழித்து உன் பதிலை சொல்லு என்று கூறி விட்டு சென்றவனை ஒதுக்கி தள்ளிவிட்டு வேறு எந்த முடிவை எடுக்கவும் விரும்பவில்லை அவள்… எதுவாக இருந்தாலும் அவனிடம் பேசி தெளிவுபடுத்தி விட வேண்டும் என்பது அவளது எண்ணமாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடத் திருமண விஷயம் பற்றித் தந்தை பேச்செடுத்த போது இன்னும் ஒரு நாலு மாசம் போகட்டும் என்றிருந்தாள்.

 

வீட்டிற்குள் நுழைந்ததுமே அவள் கண்டது தன் அன்னையின் வயதொத்த பெண்மணியின் முகம் சுழித்த பார்வையைத் தான்…!

 

காரணம் த்ரி போர்த் உடையில், உடலில் ஆங்காங்கே தெறித்திருந்த சகதியுடன் நின்றிருந்தாள் நிகி..! அதென்ன பார்க்கும் முதல் பார்வையிலேயே இந்த அம்மாவுக்கு இவ்வளோ நக்கல்.. தானும் சளைத்தவளில்லை என்பதாக ஒரு முறைப்பான பார்வையை அப்பெண்மணியை நோக்கி சிந்திவிட்டு ” வாங்க” எனப் பொதுவாய் மரியாதை நிமித்தம் வரவேற்றவள் அப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் அப்பெண்மணியின் பிபியை எகிற வைக்கும் பொருட்டு..!

 

அவள் அன்னை அருகில் வந்து “ஹே நிகிம்மா..! போய் முகத்தைக் கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா…! ” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல,

 

“அல்ரெடி எனக்காக ரொம்ப வெயிட் பண்ணிட்டாங்க… இப்போ சேஞ்ச் பண்ணிட்டு வந்தா ரொம்ப லேட் ஆகும்…அது அவங்களுக்கு எரிச்சலா இருக்கும் இல்லையா ஆன்ட்டி..” என அவருக்கு கேட்கும்படி சொல்லிக் கொண்டே திரும்பியவளின் கண்ணில் அப்போது தான் ஷோபாவின் கடை ஓரத்தில் தந்தையுடன் அமர்ந்திருந்த துவாரகேஷ் பட்டான்.

 

இவரா..? எனத் துவாரகேஷின் தந்தையைப் பார்த்தவளின் விழியில் கேள்வி தொக்கி நிற்க,

 

துவாரகேஷை கண்ட பின்போ.. “ப்ராட்.. எல்லாம் ப்ளான் பண்ணி செய்றியா… என் கிட்ட மாட்டுவதானே அப்போ இருக்கு” எனக் கறுவிக் கொண்டாள்.

 

“என்னடா ரெண்டு பேரும் உன்னை இந்த முறை முறைக்கிறாங்க” எனத் தன் மனைவியையும், நிகழினியையும் காட்டி சுந்தரம் தன் மகனின் காதை கடிக்க,

 

“யுவர் ஹானர்… உங்க சம்சாரம் உங்களைத் தான் முறைக்குறாங்க… என் ஆள் என்னை முறைக்குறா… எல்லாப் பாலையும் (BALL) என் பக்கமே திருப்ப ட்ரை பண்ணாதீங்க”

 

“பொண்டாட்டிக்கு அடங்கி நல்ல பையனா இருந்த என்னை எதை எதையோ பேசி இப்படி என் வைஃப்க்கு எதிரா மாத்திட்டியேடா” என்று வராத கண்ணீரை துடைக்க,

 

“நீங்க இருக்கும் வரை எனக்கு எதற்குமே பயமில்லைப்பா” எனப் பாகுபலி பட பாணியில் சொல்ல,

 

“கடைசியில போட்டு தள்ளாம இருந்தா சரி..” என்று சொல்ல, இவ்வளவும் இருவருக்குள்ளே முணு முணுப்போடு நடந்து கொண்டிருந்தது.

 

அதற்குள் எழுந்து கொண்ட கீதா, “நாங்க இங்க ஒரு வேலையா தான் வந்தோம்.. இவ்வளவு தூரம் வந்துட்டோம் பார்த்துட்டு போகலாம்னு பையன் சொன்னதால வந்தோம்.. வீட்டுக்குப் போய்க் கலந்து பேசிட்டு கூப்பிடுறோம்..” என்று கை கூப்பி விடை பெற,

 

நிகியிடம் தனியாகப் பேசலாம் எனக் கிளம்பாமல் நின்று கொண்டிருந்தவனை நோக்கி ” என்ன நின்னுட்டு இருக்க.. போய்க் காரை எடு” எனக் கீதா சொல்லவும் வேறு வழியில்லாமல் கிளம்பி விட்டான்.

******************************************

வீட்டிற்குள் நுழைந்தது தான் தாமதம்.. தாம் தூம் என்று குதிக்கத் தொடங்கியிருந்தார் கீதா. வரும் வழியிலேயே வறுத்தெடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த துவாரகேஷுக்கும் அவன் தந்தைக்கும் வீட்டிற்கு வந்த பின் பொங்கல் வைக்க ஆரம்பித்ததில் சற்றே ஆறுதல்.

 

“எல்லாமே நீங்களே முடிவு செஞ்சுட்டு கடைசியில என்னைக் கேனைச்சி ஆக்கிருக்கீங்க… நீங்களும் இவன் கூடக் கூட்டு சேர்ந்து எல்லாத்தையும் என் கிட்ட மறைச்சுருக்கீங்க” எனக் கணவனையும் மகனையும் மாறி மாறி முறைக்க, இருவரும் அமைதியாய் நின்றனர்.

 

“அவ்வளவு நாள் இடத்தை வித்துட்டு சென்னையில வீடு வாங்கிச் செட்டில் ஆயிடுவோம்மானு சொல்லிட்டு இருந்தவன் திடீர்னு விற்க வேண்டாம்மா.. அங்கேயே வீடு கட்டுவோம் .. பொலியுஷன் இருக்காது இயற்கை செருப்புனு கதை விட்டது எல்லாம் அது அந்தப் பொண்ணு ஊர்ன்றதால தானே…? நான் ஒரு கிறுக்கச்சி அப்பனும் மகனும் சொல்றதெல்லாம் நம்பிட்டு இருந்திருக்கேன்..” என்று புசு புசுவென முச்சு விட,

“விடுடி… ஏதோ அந்தப் பொண்ணு மேல இருக்க ஆசையில் இப்படிச் செஞ்சுட்டான்…” என்று சமாதானம் செய்ய முற்பட,

 

“நீங்க பேசாதீங்க… எல்லாம் தெரிஞ்சும் அமுக்குனியாட்டம் இருந்திருக்கீங்கல்ல.. இத்தனை வருஷத்துல எதாச்சும் ஒன்னு உங்களுக்குத் தெரியாம செஞ்சிருப்பேனா?? ஆனா நீங்க ம்ஹூம்” என்று இல்லாத கண்ணீரை முந்தானையில் துடைத்துக் கொள்ள,

 

“எல்லாம் இவனால தான் கீத்து… நான் அப்படிச் செய்வேனா… பேசி பேசியே என்னை மயக்கிட்டான்.. இன்னும் ஏன்டா இங்க நிற்குற போடா போ” எனச் சத்தமிட்டவர் மனைவி அறியாமல் மகனிடம் கண்சிமிட்ட, சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றான் துவாரகேஷ்.

 

“யார் நீங்க மயங்குற ஆளா..? ம்க்கும்” எனச் சிலிர்த்துக் கொள்ள,

 

“மயக்குன உனக்குத் தெரியாதா..? நான் மயங்குற ஆளா இல்லையானு” எனக் காதல் வசனம் பேச,

 

“கிழவனுக்குப் பேச்சைப் பாரு..!” எனக் கணவனின் கையில் ஓர் அடி வைத்து எழுந்து சென்றார் கீதா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“மேடம்.. உங்களைப் பார்க்க துவாரகேஷ்னு ஒருத்தர் வந்திருக்கார்.. வெளிய ரிஷப்சன்ல வெயிட் பண்ணிட்டு இருக்கார்” என நிகழினியின் உதவியாளர் வந்து தகவல் சொல்ல,

 

“நேத்து பண்ணின கூத்து பத்தாதுனு இன்னைக்கு நேர்லயே வந்தாச்சா வரட்டும் பார்த்துக்குறேன்” என மனதிற்குள் முணு முணுத்தவள், தன் பதிலுக்காய்க் காத்திருப்பது புரிய,

 

“ம்ம்ம் வர சொல்லுங்க” என்று அவரிடம் கூறி விட்டு, மேஜையில் இருந்த பேப்பர் வெயிட்டை சுழற்றியபடி துவாரகேஷின் வரவிற்காய் காத்திருந்தாள்.

 

கருப்பு நிற முழுக்கை சட்டை அதற்குப் பொருத்தமாய்க் காக்கி நிற பேன்ட் அணிந்து கை ஸ்லீவ்வை த்ரி போர்த் அளவிற்கு மடித்து விட்டிருந்தான்.சட்டையில் மாட்டப்பட்டிருந்த ரேபான் கிளாஸ், கையில் ராப் செய்யப்பட்ட கிப்ட் பாக்ஸ் சகிதம் உள்ளே வந்தவனைக் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள்.

 

“ஹாய்..! இது உனக்காக வாங்கிட்டு வந்தேன்..” எனக் கையில் இருந்த கிப்ட் பாக்ஸை அவளிடம் நீட்ட, நிகியோ அதை வாங்காமல் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியபடி அவனையே கூர்ந்து பார்க்க,

 

பாக்ஸை அங்கிருந்த மேஜையில் வைத்தவன், ” சாரி நிகி! நீ கோபமா இருப்பனு தெரியும்..பட் நேத்து உங்க வீட்டுக்கு சொல்லாம வர்றதா ப்ளானே இல்ல…திடீர்னு வேற வழி இல்லாம தான் அம்மா அப்பாவை கூட்டிட்டு வந்தேன்.. வர்றதுக்கு முன்னாடி மாமாகிட்ட கேட்டுட்டு தான் வந்தேன்”

 

” மாமாவா??? அது யாரு…” என நக்கல் குரலில் கேட்க,

 

“உங்க அப்பா தான்” என்று அவன் சொன்னதும்

 

“இது எப்போதில இருந்து…ஹ்ம்ம்” என்று கேட்க,

 

“அன்னைக்கு உன் கிட்ட பேசிட்டு நேரா அங்கிளை தான் போய்ப் பார்த்து பேசினேன்.. நிகிக்கு பிடிச்சா எங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லனு சொன்னாங்க…அதை கேட்ட பிறகு தான் என்னால நிம்மதியா ஊருக்கு போக முடிஞ்சுது… கண்டிப்பா இந்த சிக்ஸ் மன்த் கேப்ல உனக்கும் என் மேல் ஃப்லீங்க்ஸ் வரும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு அதான் வேற யாரும் முந்திட கூடாதுனு உங்க அப்பாகிட்ட பேசினேன்” என்று சொன்னதும்,

 

“எல்லாம் ஓகே… பட் ஐம் சாரி… எனக்கு எந்த ஃப்லீங்கும் உங்க மேல வரலை” என அவனுக்குத் திருப்பிக் கொடுக்க,

 

“இட்ஸ் ஒகே நிகி…! எனக்கு உன் மேல லவ் இருக்கு சோ நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்… நீ கல்யாணம் ஆனது என்னை லவ் பண்ணு நோ இஸ்யூஸ்” என வழக்கம் போல் எதிரில் இருப்பவர்களை ஈர்க்கும் காந்த புன்னகையோடு சொல்ல,

 

அவன் கூறிய விதத்தில் சிரிப்பு வந்தாலும் அதைக் காட்டாது, “வெரி ஸ்மார்ட்…ஆனா ஒத்து வரும்னு தோணலை..”

 

“ஆஃப்டர் மேரேஜ் நீ இங்கேயே இருக்கலாம் நிகி..! எப்போதும் உன்னை என் கூட வந்து இருக்கச் சொல்லி கம்பெல் பண்ண மாட்டேன். இன்பாஃக்ட் நீ கண்டிப்பா சம்மதிப்பேன்ற நம்பிக்கையில் தான் நான் இங்க இருந்த நம்ம நிலத்துல வீடு கட்ட ஸ்டார்ட் பண்ண ஆரம்பிச்சேன்” என்று சொல்ல,

 

“நேத்தே தெரியும்… உங்க அப்பாவை ரெண்டு மூணு தடவை கன்ஸ்ட்ரக்ஷன் நடக்கும் போது பார்த்திருக்கேன்.. ”

 

” சரி இப்போ சொல்லு… உனக்குப் பிடிச்சிருக்கு தானே??”

 

“உங்க அம்மாக்கு இதுல விருப்பம் இல்லனு நினைக்குறேன்.. என்னால டிபிகள் மாமியார் மருமக சண்டையெல்லாம் போட முடியாது” என்று நிகி சொல்ல,

 

” அடியேய் ..! நான் என்னைக் கேட்குறேன்.. நீ என்ன சொல்ற…?”

 

“என்னது ‘டி’ யா…?” என முறைத்தவளிடம்,

 

“பின்ன…! நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம நீ பாட்டுக்கு ஒன்னு சொல்லிட்டு இருக்க… எங்க அம்மா பார்க்க தான் டெரர்… மத்தபடி ஷி ஹார்ம்லெஸ் எங்கப்பா ஒரு ஆள் போதும் அவங்களைச் சம்மதிக்க வைக்க… நான் கேட்டதுக்கு இப்போ பதில் சொல்லு”

 

“அப்பா அம்மாக்கு ஒகேனா.. எனக்கொன்னும் அப்ஜெக்ஷன் இல்ல” என்றதும் கடுப்பானவன்,

 

“டேய்..! உனக்கு இந்தப் பெட்டர்மேக்ஸ் லைட்டே தான் வேணுமா” தன் முகத்திற்கு முன்னால் விரல் நீட்டி தன்னைத் தானே கேட்டுக் கொள்ள,

 

“ஓய்…! உனக்கு என்னைப் பார்த்தா பெட்டர்மேக்ஸ் லைட் மாதிரி இருக்கா..? யூ….” என ஒருமைக்குத் தாவியிருந்தவள் கையை அவனை நோக்கி விளையாட்டாய் ஓங்க,

 

இரு கைகளை அவள் முதுகின் பின்னால் கோர்த்துப் பிடித்துத் தன்னை நோக்கி இழுத்தவன், ” சரியான ட்யூப் லைட் நீ… நான் தான் பெட்டர்மேக்ஸ் லைட்னு தப்பா சொல்லிட்டேன்.. ” என அவள் நெற்றியில் முட்டி சொல்ல,

 

“ஹலோ மிஸ்டர்.. என்னதிது…?” தன்னைச் சுற்றி வளைத்திருந்த அவனது கைகளைச் சுட்டிக் காட்ட,

 

“நீ என் லவ்வை அக்செப்ட் பண்ணிக்கிட்டல்ல அதுக்குத் தான் இது… ஜஸ்ட் அன் காம்ப்ளிமென்ட்ரி” என்று அவளைப் பார்த்துக் குறும்பாய்க் கண்சிமிட்டினான் அந்தக் கள்வன்.

 

“நான் இன்னும் அக்செப்ட் பண்ணிக்கவே இல்லையே..” என நிகி சொன்னதும்,

 

அவளைத் தன் பிடியில் இருந்து விளக்கியவன் “ஏன் சொல்லு நிகி என்னை உனக்குப் பிடிக்கலையா??”

 

“பிடிக்கலைனு இல்லை DK..! உங்களோட கேரக்டர், காதலை நீங்க சொன்ன விதம்… இப்போ கூடக் கியூட்டா என்னைக் கன்வின்ஸ் பண்ற உங்க ஸ்டைல் எல்லாம் பிடிச்சுருக்கு… ஆனா எல்லாமே ஒரு பாஸ் (PAUSE) இல்லாம நடக்குற மாதிரி இருக்கு.. எனக்கு அதை எப்படிச் சொல்றதுனு தெரியலை” என்று சொல்ல,

 

“நீ என்ன சொல்றனு புரியுது… என்னடா இவன் திடீர்னு அறிமுகமான்… கொஞ்ச நாள் நல்ல பேசுனான் இப்போ காதல், கல்யாணம் வரை இழுத்து விட்டிருக்கான்னு தானே யோசிக்குற” என்று கேட்க, அவளின் மௌனமே அது தான் விஷயம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி விட,

 

“இங்கே பாரு நிகி..! வருஷக்கணக்கா பழகின பிறகு தான் ஒருத்தர் மேல காதல் வரணும்லாம் ஒண்ணும் இல்ல… எத்தனை வருஷம் ஆனாலும் இப்போ இருக்குற காதலை விட இன்னும் அளவுக்கு அதிகமா காதலிக்கவும், காதலிக்க வைக்கவும் தோணனும்.. எனக்கு அது உன் மேல தோணுது.. அந்த உணர்வை வெறு நாள் கணக்கை வச்சு எடை போட்டு நிராகரிக்க என்னால முடியாதுனு தெரிஞ்சதும் தான் உங்கிட்ட நேர்ல வந்து சொன்னேன்… இப்போவும் சொல்றேன் என் கையைப் பிடிக்கப் போற உன்னைப் பிடிச்ச கையை விட்டா நிம்மதியா இருக்கலாம்னு யோசிக்குற நிலைக்கு ஒரு நாளும் உன்னைத் தள்ள மாட்டேன்… அந்த நம்பிக்கை உனக்கு இல்லைனா இந்த ப்ரோபசல்ல ட்ராப் பண்ணிடலாம்.. லெட் பீ ப்ரெண்ட்ஸ்… ஐ வோன்ட் டிஸ்டர்ப் யூ.. “

 

இவ்வளவு சொல்லியும் எதுவும் சொல்லாது அமைதியாய் இருப்பவளை கண்டவனின் மனம் கலங்க, “ என்ன தான் லெட் பீ ப்ரெண்ட்ஸ்னு சொன்னாலும் உன் வாயால என்னை வேண்டாம்னு சொல்றதை கேட்குற தைரியம் எனக்கில்லை நிகி … நான் கிளம்புறேன் பை” என்று நகரத் தொடங்க,

 

“கையைப் பிடிக்கிறேன்… காலை பிடிக்கிறேன்னு டையலாக் விட்டீங்க.. இப்போ நீங்க பாட்டுக்கு கிளம்புறீங்க” என்ற நிகழினியின் குரலில் துள்ளி குதிக்காத குறையாக  அவள் புறம் திரும்பியவன்

 

“ஹே… என் என்ன சொன்ன..??? அப்போ உனக்கு ஓகேவா..?.” என்று சந்தோஷத்தில் திக்கு முக்காடிய குரலில் கேட்க,

 

“பட் நிறைய டைம் என் காலை தான் பிடிக்க வேண்டியிருக்கும்.. உங்களுக்கு ஓகேவா” எனத் திருப்பிக் கேட்க,

 

அவள் சொன்னதில் இதழோரம் புன்னகையில் விரிய “உன்னையே பிடிச்சுக்கச் சொன்னாலும் எனக்கு டபுள் ஒகே..!” எனக் கண்சிமிட்டியபடி மென்மையாய் அவளை அணைத்துக் கொண்டான்.

 

Advertisement