Advertisement

நெஞ்சம் 4:
“நீ ப்ரெசன்ட் பண்ணின செமினார் ரொம்ப நல்லா இருந்ததும்மா… எல்லாருக்கும் புரியுற மாதிரி படங்களும் அது கூடவே விளக்கமும்னு தெளிவா இருந்துச்சு… “ என்று வேளாண் கண்காட்சி கலந்துரையாடலுக்கு வந்திருந்த பெரியவர் ஒருவர் நிகழினியின் முயற்சியைப் பாராட்ட,
“என்னை விட நிறையப் பேர் இன்னும் அழகா பண்ணியிருந்தாங்க… உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி சார்” என்று பணிவோடு அதை ஏற்றுக் கொள்ள,
“உங்களை மாதிரி படிச்சவங்க விவசாயத்துல காட்டுற ஆர்வத்தைப் பார்க்குறப்போ ரொம்பச் சந்தோஷமா இருக்கும்மா… கார்ப்பரேட் தந்திரங்கள் குட்ட குட்ட குனிஞ்சு போய்ட்டு இருக்க விவசாயத்தைக் காப்பத்த உங்களைப் போலவங்க கையில் எடுக்குறதை நினைக்கும் போது நிமிர்ந்து நிற்கும்னு ஒரு நம்பிக்கை வருது… “
“என்ன சார்! பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றிங்க… இது நம்ம கடமை தானே சார்… என்ன தான் டெக்னாலஜி வளர்ந்து செவ்வாய் கிரகத்துக்கே போனாலும், அரை ஜான் வயிறுக்கு தேவை உணவு தானே… அதைப் புரோகிராம் செய்ய முடியுமா என்ன??? மண்ணைப் புரட்டி உழுது விதைச்சா தானே சாப்பாட்டைக் கண்ணுல பார்க்க முடியும்… யாராவது வந்து செய்யட்டும்னு எல்லோரும் ஒதுங்கிட்டா நிலைமை என்னாகுறது… நமக்குனு சமூகப் பொறுப்பும் கடமையும் இல்லையா??? என்னோட கடமையை நான் செய்யுறேன் அவ்வளோ தான் சார்” என்று சொல்ல
புன்னகை தவழும் முகத்தோடு “உன்னோட முயற்சி எல்லாத்துக்கும் என்னோட வாழ்த்துக்கள்மா” என்று நிகழினியின் கைகளைப் பிடித்துக் குலுக்கியபடி, அடுத்த முறை வருகையில் தன் வீட்டிற்கு வர வேண்டும் என்ற அன்புக் கட்டளையோடு அங்கிருந்து விடை பெற, நிகழினியும் பார்டிக்குச் செல்வதற்கு நேரம் ஆகிவிட்டதை உணர்ந்து தான் தங்கியிருக்கும் விடுதியை நோக்கி நடந்தாள்.
அறையில் நுழைந்ததும் அலைப்பேசி குரலெழுப்ப, அவளது தந்தை தான் அழைத்திருந்தார்… “என்னடா! செமினார் எல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?” என்று கேட்க,
“சூப்பரா பண்ணினேன்பா…நிறைய பேர் வந்து பராட்டுனாங்க தெரியுமா???” என்றவளின் குரலில் இருந்த துள்ளலே அவளது மகிழ்ச்சியின் அளவை காட்ட,
“எனக்குத் தெரியும்டா! என் பொண்ணு எந்த விஷயத்தையும் கையில் எடுத்தாலும் அதைப் பிரமாதமா செய்து முடிப்பாள்னு” என்றவரின் வார்த்தையில் மகள் மீதான கர்வம் பொங்கி வழிந்தது.
“அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்… முதல்ல மதியம் சாப்பிட்டியா??? வேலை இருந்தா சாப்பிடணும்ன்றதையே டீல்ல விட்ருவியே நீ! அப்போவே போன் பண்ணனும்னு நினைச்சேன்… ஒரு வேளை நீ வேலையா இருந்து உன்னைத் தொந்திரவு செய்திட கூடாதேனு தான் கூப்பிடலை” என்று கேட்க,
“ஹி ஹி! டைமே இல்லப்பா… அதனால ப்ரெஷ் ஜூஸ் மட்டும் தான் குடிச்சேன்” என்று தந்தையிடம் பொய்யுரைக்க மனமில்லாது உண்மையைக் கூறிவிட,
“எத்தனை டைம் சொல்றது பாப்பா! சாப்பாடை ஸ்கிப் பண்ணக்கூடாதுனு…சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்” என்று சொல்ல, வருத்தத்திலோ இல்லை கோபத்திலோ இருந்தால் மட்டுமே தந்தை தன்னைப் பாப்பா என்று அழைப்பது வழக்கம் என்பதால், அவரது வார்த்தையில் இருந்த ஆதங்கத்தைப் புரிந்தவளாய்,
“சாரிப்பா! இனிமே நோ ஸ்கிப்… கழுத்து வரை சாப்பிட்டுறேன் ஓகே வா?? ஈவ்னிங் சுகன்யா பார்ட்டி கொடுக்குறாப்பா.. அதுக்குத் தான் கிளம்பிட்டு இருக்கேன் போய்ட்டு வந்து நைட் கூப்பிடுறேன்” என்று விட்டு அழைப்பை துண்டித்தவள்,பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிட்ருந்த உணவு விடுதிக்கு கிளம்பி சென்றாள்.
“க்ராண்ட் சோழாஸ்” வாசலில் கால் டாக்ஸி நின்றதும் இறங்கிய நிகழினி பயணத்திற்கு உண்டான பணத்தைக் கொடுத்து விட்டு உள்ளே நுழைய எத்தனித்த நேரம் சரியாய் துவாரகேஷூம் வந்து சேர, நிகழினியை கண்டவன் “ஒன் மினிட்! பைக் பார்க் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று சொல்லி விட்டு சென்றுவிட, நிகியும் அங்கேயே நின்றிருந்தாள்.
அவள் அருகில் வந்தவன் “சாரி! ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா??” என்று கேட்டவாறே அவளுடன் இணைந்து நடக்க,
“இட்ஸ் ஓகே! பைஃவ் மினிட்ஸ்ல நான் என்ன கோட்டையையா பிடிக்கப் போறேன்..” என்று இயல்பாய் பேசியவளிடம்,
“கேட்க மறந்துட்டேன்…! ஹவ் வாஸ் யுவர் செமினார்” என்று கேட்க, இவனுக்கு எப்படித் தெரியும் என்ற கேள்வி அவள் கண்களில் தொக்கி நிற்க,
அதை உணர்ந்தவனாய் “கிருஷ்ணா சொன்னான்! அதான் நீ நேத்து ரொம்ப அர்ஜென்டா கிளம்புனனு” என்று முடித்தவனிடம்,
“ஓகே … செமினார் நல்லா போச்சு… என்னைப்போல இன்னும் நிறைய யங்ஸ்டர்ஸ் ப்ரெசன்ட் பண்ண வந்திருந்தாங்க… அதைப் பார்க்கும் போது ரொம்ப ஹேப்பியா இருந்துச்சு” என்று சொல்ல,
“வாவ்..! ரொம்பச் சந்தோஷமான விஷயம் தான் இல்ல… இப்போ இருக்குற எல்லோருக்கும் ரொம்ப இல்லாவிட்டாலும் ஓரளவு அக்ரிகல்சர் பத்தின ஒரு அவர்னெஸ் கிரியெட் ஆகியிருக்கு… ஐ ஹோப் இட் கிரியேட்ஸ் அ ரிவ்ல்யூஷன் இன் ஈச் அன்ட் எவெரி கார்னர் சூன்” என்று சொல்லவும்,
“கண்டிப்பா…! உங்களுக்கு இதுல இன்ட்ரெஸ்ட் இருந்தா நாளைக்கு எக்ஸ்பீஷன் வாங்களேன்…! இன்னும் இதைப் பத்தி அதிகமா தெரிஞ்சுகலாம்” என்றவளிடம்,
“நாளைக்கா??? லெட் மீ ஸீ … அங்க வந்து நான் என்ன பண்ண போறேன்… உங்களை மாதிரி விவசாயம் பண்றவங்க பார்த்தா அதுல ஒரு யூஸ் இருக்கும்… “ என்று சொல்ல,
“அது என்ன எங்களை மாதிரி… ஹ்ம்ம் நீங்க பண்ற ப்ரோகிராமிங் எங்கேயோ இருக்குற வெளிநாட்டுக்காரனுக்குச் சோறு போடுது ஆனால் உலகமே உட்கார்ந்து சாப்பிடுறதற்கு உழைக்குற ஜாதி தான் விவசாயிங்க.. அவங்க பண்ணட்டும் அவங்க கஷ்டப்படட்டும்னு ஒதுங்கி நிற்குறீங்க… அப்புறம் மூணு வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்ண போறதா உத்தேசம்?? வந்து பார்க்குறதுல என்ன தப்பிருக்கு…?? மூணு வேளை நாம வயிறார சாப்பிடுறதை எப்படி உருவாக்குறாங்க… என்னென்ன டிபிகல்ட்டீஸ் இருக்குனு தெரிஞ்சுக்கலாமே அதுல என்ன வந்திடப் போகுது..” என்று தம் கட்டியவளிடம்,
“அய்யோ! நான் எதும் தப்பா சொல்லலை… நான் தெரிஞ்சுக்க மட்டும் தான் முடியும் இதே அதைத் தொழிலா செய்றவங்க பார்த்தா இன்னும் யூஸ்புஃல்லா இருக்குமேன்ற அர்த்தத்துல சொல்ல வந்தேன்.. நாளைக்கு வரணும் அவ்வளோ தானே… வர்றேன் ஓகேயா??” என்று சரணடைந்தவனிடம்,
“நான் சொன்னதுக்காக ஒண்ணும் வர வேண்டாம்…! உங்களுக்குத் தெரிஞ்சுக்க ஆர்வம் இருந்தா மட்டும் வாங்க..” என்று கூற,
இதேதடா வம்பு..! வரலைனு சொன்னாலும் மைக் பிடிச்சு பேசுறா? வரறேன்னு சொன்னாலும் குற்றம் சொல்றா? என்று நினைத்தவன், “நாளைக்கு என்னோட ஷெட்யூல் பார்த்துட்டு முடிஞ்சா வர்றேன்” என்று சொல்லவும் பார்ட்டிக்காகப் புக் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு வந்து சேரவும் சரியாய் இருந்தது.
இவர்களைக் கண்டு விட்ட கிருஷ்ணா “வாங்க..! வாங்க..! ஏன்டா இவ்வளோ லேட்??” என்று விட்டு அழைத்துப் போக ,
அங்கே வந்த விஷ்ணு, துவாரகேஷிற்கு மட்டும் கேட்கும் குரலில் “என்னடா! ரெண்டு பேரும் ஒண்ணா வந்துருக்கீங்க என்ன மேட்டர்?? அதுவுமில்லாம ரெண்டு பேரும் ஒரே கலர் ட்ரெஸ்ஸ்ஸ்” என்று இழுக்க, அவன் சொன்னதும் தான் “ஓரே கலரா?” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன், திரும்பி சுகன்யாவிடம் பேசிக் கொண்டிருந்த நிகழினியை பார்த்தான் தூவாரகேஷ்.
விஷ்ணு கூறியதைப் போல இருவருமே ஓரே நிறத்தில் ஆடை அணிந்திருக்க , இதழோரம் மெலிதாகப் பூத்த புன்னகையை மறைத்தவனாய் “ரிஷப்ஷன்ல நின்னுட்டு இருந்தா.. கரெக்டா நானும் அந்த நேரம் வந்தேன் சோ சேர்ந்து வந்தோம்… தான் அவளைக் காத்திருக்கச் சொன்னது தெரிந்தால் அவனது ஓட்டை வாய் சும்மாயிருக்காது என அதை வசதியாக நண்பனிடம் மறைத்துவிட்டான்.
அப்புறம் என்ன சொன்ன ஒரே கலர்ரா ??? இந்த உலகத்துல ப்ரைமரி கலரே மூன்று தான்.. அதை வ்ச்சு தான் மத்த கலர்ஸ் அப்படிப் பார்த்தா நாம எல்லாருமே ஒரே கலர்ல தான் போட்ருக்கோம்” என்று அவன் சொல்லிய விளக்கத்தில் விஷ்ணு தான் “ஙே” என்று விழித்தான்.
ஆட்டம் பாட்டம் எனப் பார்ட்டி கலைகட்ட தொடங்கியிருக்க, அங்கிருந்த டேபிள் ஒன்றில் அமர்ந்து பழரசத்தைப் பருகியபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நிகழினி. நேரம் போவது தெரியாமல் எல்லோரும் பார்ட்டியை என்ஜாய்ச் செய்து கொண்டிருக்க, நிகழினி தனது கைக் கடிகாரத்தில் மணியைப் பார்க்க அது எட்டு மணியைத் தொட்டு விட்டிருந்தது.
“அய்யோ டைம் ஆகிடுச்சு! இந்தப் பசங்க கால் பண்ணவே இல்லை?? ரீச் ஆகிட்டானுங்களானு தெரியலையே??” என்று யோசித்துக் கொண்டிருக்க, சரியாய் அவளது தொலைப்பேசி ஒலிக்கத் தொடங்க,
“ஹலோ! ஹே கைய்ஸ் ரீச் ஆகிட்டீங்களா??? வண்டி இப்போ எங்க வந்துட்டு இருக்கு?” என்று கேட்க,
“வந்துட்டோம்கா… இன்னும் டென் மினிட்ஸ்ல காலேஜ் நெருங்கிடுவோம்… ஹெவி ட்ராபிக்கா இருக்குகா” என்றவர்களிடம்,
“சாரி பாய்ஸ்! நான் வெளிய இருக்கேன்… நீங்க சேஃப்பா ரீச் ஆகிடுங்க.. இன்னும் பிஃப்டீன் மினிட்ஸ்ல நான் அங்கே வந்துடுவேன்” என்றதும்,
“பரவாயில்லைக்கா நீங்க பொறுமையா வாங்க நாங்க வெயிட் பண்றோம்” என்று விட்டு அழைப்பை துண்டித்து விட, தான் கிளம்ப வேண்டியதன் அவசியம் உணர்ந்து சுகன்யாவிடம் சொல்லிக் கொண்டு திரும்ப, தூரமாய்த் துவாரகேஷ் டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
சொல்லிக் கொண்டு செல்ல்லாம் என நினைத்தவள் பின் தன் எண்ணத்தை மாற்றித் தொந்திரவு செய்ய வேண்டாம் என நினைத்து கிளம்பி விட, எதிரே வந்த கிருஷ்ணாவிடம் விடை பெற்றுத் துவாரகேஷிடம் சொல்லிவிடுமாறு கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
நிகழினி வேளாண் கண்காட்சி நடக்கும் வளாகத்தைப் பதினைந்து நிமிடங்களில் அடைந்து விடலாம் என நினைத்து கிளம்பியவள், போக்குவரத்து நெரிசல் காரணமாக மேலும் பதினைந்து நிமிடங்கள் எடுத்துக் கொள்ள, அரை மணி நேரம் கழித்தே வந்து சேர்ந்தாள்.
அவளுக்காகக் காத்திருந்த கம்பெனியில் பணியாற்றுபவர்களின் எட்டு பேர் கொண்ட குழு நின்றிருந்த இடத்திற்குச் சென்றவள், “ஹாய்! வந்து ரொம்ப நேரம் ஆச்சா???… சீக்கிரம் வந்துடலாம்னு தான் கிளம்பினேன்… வர்ற வழியில ட்ராபிக்ல மாட்டிக்கிட்டேன்.. சாரி க்ய்ஸ்” என்று தாமதாய் வந்ததற்கு விளக்கம் தந்து மன்னிப்பை வேண்ட,
“பரவாயில்லைக்கா.. நாங்க வந்தும் பைஃவ் மினிட்ஸ் தான் ஆகுது… எங்கே போய்ச் செட் பண்ணனும்னு சொன்னீங்கன்னா அரேஞ்ச் பண்ணிடுவோம்” என்று அவர்களில் ஒருவன் கேட்க,
“ஓகே! நமக்கு ஸ்டால் நம்பர் 107 தந்திருக்காங்க… நேராய் போய் லெஃப்ட் எடுத்தா லாஸ்ட் கௌன்டர்… வாங்க போகலாம்” என்று சொல்ல, அனைவரும் கொண்டு வந்திருந்த இயந்திரங்களை ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொண்டபடி நிகழினியை பின் தொடர்ந்தனர்.
அடுத்த நாள் கண்காட்சி ஆரவரமாய் நடந்து கொண்டிருக்க, அங்கு வந்திருந்த பார்வையாளர்களுக்குத் தாங்கள் காட்சி படுத்தியிருந்த இயந்திர உபகரணங்களை உபயோகப்படுத்தும் முறையையும், அதன் பயன்பாடுகளையும் விளக்கி கொண்டிருந்த போது நிகழினியின் தொலைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டிருந்தது.
“ஒரு நிமிஷம்” என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லி விட்டு எடுத்து பார்க்க ஏதோ தெரியாத என்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது.. யாராக இருக்கும் என்ற சிந்தனையுடன் அலைப்பேசியைக் காதிற்குக் கொடுத்தவள் , “ஹலோ” என்று சொல்லவும்,
“ஹாய் நிகி! நான் துவாரகேஷ் பேசுறேன்… கிருஷ்ணாகிட்ட உங்க நம்பர் வாங்கினேன்” என அவளது அடுத்தக் கேள்விக்கும் சேர்த்தே பதில் சொல்ல,
“ஹாய் சொல்லுங்க… என்ன விஷயம் கால் பண்ணிருக்கீங்க…” என்று கேட்க,
“என்னங்க இப்படிக் கேட்கிறீங்க.. நீங்க தானே எக்ஸ்பிஃஷன் பார்க்க டைம் கிடைச்சா வர சொல்லி இன்வைட் பண்ணீங்க” என்று சொல்லவும்,
“ஹோ.. சாரி சாரிங்க.. கிளம்பிட்டீங்களா?? “
“வந்துட்டேங்க… காலேஜ் மெயின் ப்ளாக்கிட்ட நிற்கிறேன்.. நீங்க எங்க இருக்கீங்க?”
“அப்படியே ஸ்ட்ரைட்டா வந்து லெஃப்ட்ல கட் பண்ணி வந்திங்கன்னா கேட் நம்பர் ஐந்தாவதுல. ஸ்டால் நம்பர் 107 வாங்க”
“ஓகே நிகி.. தேங்க்ஸ் வர்றேன்” என்று சொன்னவனுக்குச் சத்தியமாய்த் தெரியவில்லை.. செய்வதெற்கென வேலைகள் வரிசைக் கட்டிக் கொண்டிருக்கும் போது அவள் வர சொன்னாள் என்ற ஒரு காரணத்திற்காக நேரம் ஒதுக்கி ஏன் வந்திருக்கிறோம் என..?
நேற்று நிகி கண்காட்சிக்கு வர சொன்ன போது கூட, கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை.. ஆனால் யோசிக்கும் போது ஏனோ செல்ல வேண்டும்… அவளுடன் சிறிது நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணம் அவனுள் ஊறத் தொடங்கியிருந்தது… இதற்குப் பெயர் காதல் என்ற அர்த்தம் கொள்ளத் தேவையில்லை அது அவனுக்கும் தெரிந்தே இருந்தது… அறிமுகமே அதகளமாக நடந்தேறி அதன் பின் சிறு நட்பிழையோடு பழகிய ஒரு நபரை அறிந்து கொள்ளத் துடிக்கும் ஆர்வம் என்று சொல்லலாம்…

Advertisement