Advertisement

அத்தியாயம் 24:

என் மனமெனும் தீவினில்  

உனை அறியாமல் கால் பதித்து

சென்றாய்! அதை நீ அறியாது போனாலும்

உன் கால் தடம் மட்டும் என் நெஞ்சில்

என்றும் அழியாத சிற்பமாய்!

தூரத்தில் இருந்தே சஜன் இருக்கும் இடத்தை கண்டு கொண்ட தனுஷா அவன் அருகில் வந்து “க்கும்” என்று செறும, அவளை நிமிர்ந்து பார்த்தவன் ஏதும் சொல்லாமல் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க,

சற்று இடைவெளி விட்டு அமர்ந்தவள் “சஜன் சுத்தி வளைச்சு பேச விரும்பலை நேரா விஷயத்துக்கு வர்றேன். நீங்களும் என் தங்கச்சியும் சந்தோஷமா தான இருக்கீங்க “அப்படியில்லை என்று தெரிந்தும் வேண்டுமென்றே தான் கேட்டு வைத்தாள்.

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் கத்தும் கடலையே பார்க்க தொடங்க, அவனின் மௌனத்தை கலைக்கும் பொருட்டு, “இங்க பாருங்க சஜன் உங்களோட ஏமாற்றம் பெரிசு தான் நான் இல்லைனு மறுக்கலை அதே சமயம் மறக்க முடியாத ஒன்றும் இல்லை நிதர்சனத்தையும் புரிஞ்சுக்கோங்க. எத்தனையோ நிச்சயிக்கப்பட்ட திருமணம் மேடை வரை வந்து நின்று போயிருக்கு. யாருக்கு யார்னு கடவுள் போட்ட முடிச்சை யாரலையும் மாத்த முடியாது எனக்கு அமைஞ்ச வாழ்க்கையில் நான் சந்தோஷமா இருக்கேன் அதுபோல் நீங்களும் நடந்ததை மறக்க முயற்சி பண்ணுங்க” என்று அவனது மானசீக காதலை பற்றி அறியாதவளாய் சொல்ல,  

சஜனோ வெறும் விரக்தி புன்னகையை மட்டும் பதிலாய் தந்துவிட்டு எதுவும் பேசாமல் இருக்க “இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி இருக்க போறிங்க? ம்ம் நடந்ததை நினைச்சு நடக்க போறதை கோட்டை விடாதிங்க” என்று இளா கூறிய அதே வார்த்தைகளை சொல்ல,

அதில் கோபம் கொண்டவன் தன் அமைதியை உடைத்தெறிந்தவனாய் “இப்படியெல்லாம் பேச சொல்லி அந்த ஃப்ராட் சொல்லி அனுப்பினானா” என்று கேட்க,

“எதுக்கு இவ்வளவு கோபம் சஜன்? உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் யார் சொல்லியும் சொல்லலை அவர் ஃப்ராடும் இல்லை” என்று சொல்ல,

“ஹோ ஆமா அந்த உத்தம புத்திரனை தப்பா சொல்லிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க” என்று நக்கலாய் சொல்ல,

இளாவின் அறிமுகம் முதல் கடைசி வரை சுருக்கமாக சொல்லியவள் “எங்க வீட்டுல சொன்னதால தான் இதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். மற்றபடி வேறு எந்த எண்ணமோ தனிப்பட்ட விருப்பமோ எனக்கில்லை. நானும் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை. இதுக்கு மேல என்ன சொல்லி புரிய வைக்குறதுனு எனக்கு தெரியலை ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்குறேன் நடந்த இந்த கல்யாணத்தாலே உங்களுக்கு நல்லது தான் நடந்திருக்குனு கூடிய சீக்கிரம் புரிஞ்சிப்பீங்க” என்று சஜன் மேல் தியா வைத்திருக்கும் காதலை மனதில் கொண்டு சொல்ல,

இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்பது போல் சஜன் எழுந்து கொள்ள,” தியா சின்ன பொண்ணு அவளை நல்லா பார்த்துக்கோங்க” என்று கூற,

அவள் கண்களை நேராக சந்தித்தவன் “என் பொண்டாட்டியை எப்படி பார்த்துக்கணும்னு நீங்க எனக்கு கிளாஸ் எடுக்க வேண்டாம்” என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

மனம் முழுதும் வேதனை மண்டி கிடக்க மற்றவர்களின் சுயநலத்தில் தான் பந்தாடப்பட்டதை நினைக்க நினைக்க மனம் இறுக இருக்கும் கோபம் வெறுப்பு இயலாமை என அனைத்தையும் வாயில்லா ஜீவனான அந்த வண்டியில் காட்ட,

என்ன தான் வாய்விட்டு சொல்ல முடியாவிட்டாலும் எனக்கும் உணர்வுகள் உண்டு என்பதை சொல்லுவது போல்  இதற்கு மேல் தன்னால் முடியாது என்று கார் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது.

“ச்சை இது வேற நேரம் காலம் தெரியாமல்” என கடுகடுத்தவன் இறங்கி பேனட்டை திறந்து பார்க்க வயர் எறிந்து புகை வெளி வந்து கொண்டிருந்தது. “புல்ஷிட்” என்று “டங்” என்று அதை சாத்தியவனின் கண்களில் அந்த உயர்தர பார் பட கால்கள் தானாய் அதை நோக்கி நடைபோட்டது.

அவன் நண்பர்கள் எல்லாம் எவ்வளவோ வற்புறுத்தியும் மதுவின் பக்கம் தலைவைத்து படுக்காதவன் இன்று தன் பாரத்தை குறைக்கும் வழி தெரியாது மதுவின் துணையை நாடி சென்றான்.

குவளைகள் பல காலியான போதும் மனதில் இருக்கும் பாரம் மற்றும் இம்மியளவும் குறைந்ததாக தெரியவில்லை. புதிதாக குடித்ததால் வந்த நெஞ்செரிச்சல் கவலைகளோடு சேர்ந்து மேலும் மனதை ரணமாக்க முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்பதை தவறாய் புரிந்து கொண்டு மேலும் இரண்டு மூன்று குவளைகளை வாயில் சரித்தான்.

போதை தலைக்கேற வெளியேறியவன் காரில் வந்தது கூட நினைவில்லாமல் நடை போட்டான். அவன் சோகத்தை கண்டு அந்த வானம் கூட கலங்கியதோ என்னவோ மழை வலுக்க தொடங்கியது.

மழையில் நனைந்தவாறே வீட்டிற்குள் நுழைந்தவன் சத்தமில்லாமல் மாடியேறி தனதறைக்குள் நுழைய ஈரம் சொட்டிய பாதம் தரையில் பட்டு வழுக்க தொப்பென்று விழுந்தான்.

அந்த சத்தத்தில் பதறி அடித்து எழுந்த தியா விழுந்து கிடந்த சஜனை கண்டு திடுக்கிட்டவள் வேகமாக வந்து அவனை தூக்க முயற்சிக்க, “ஹே யாரு நீ பிக்பாக்கெட் அடிக்க வந்தியா? டோன்ட் டச்” என்று குனிந்திருந்தபடி உளறிக் கொண்டிருக்க,

“குடிச்சிருக்கீங்களா?” என்று அப்பட்டமான அதிர்ச்சியில் வினவிய தியாவின் குரலை கேட்டு,

“என்ன ஏதோ பொண்ணு வாய்ஸ் கேட்குது” என்றபடி நிமிர்ந்தவன் அங்கு நின்றிருந்த தியாவை கண்டு “நீ நீ நீ” என்று நெற்றியில் தட்டி யோசிப்பது போல் பாவனை செய்ய,

“நான் தியா” என்று சொல்ல,

“தியாவா நீ யாரு ?  நீ இங்க என் ரூம்ல என்ன பண்ற” என்றவனிடம் “நான் உங்க வொய்ஃப்” என்றவள் அவனை எழுப்பி நிற்க வைத்து விட்டு டவலை எடுத்து அவன் கையில் குடுக்க அதை வாங்காமல் அவள் முன் தலை குனிந்து நின்றான்.

என்ன செய்கிறான் என புரியாமல் முழித்துக் கொண்டிருக்க ரொம்ப நேரமாக குனிந்திருந்தவன் அவள் அமைதியாய் இருக்க அவளை நிமிர்ந்து பார்த்தவிட்டு “என்ன துவட்டி விடு ம்ம்ம்” என்று சொல்லி மீண்டும் குனிந்து கொள்ள,

“நானா?” என அவன் சொல்ல வருவதை நம்பாமல் கேட்க, “நீ தான என் பொண்டாட்டினு சொன்ன அப்போ நீ தான் செய்யணும் சீக்கிரம் சீக்கிரம்” என்றவனின் பேச்சில் இனிதாக அதிர்ந்தவள் “அவன் தலையை துவட்டி விட்டு அவனிடம் ட்ரெஸ்ஸை கொடுக்க “நீ திரும்பு அப்போ தான் நான் இதை போடுவேன்” என சிறு குழந்தை போல் சிணுங்கியவனின் அழகில் தன்னை தொலைத்தவள் “ம்ம் சரி” என்று திரும்பி கொண்டாள்.

அவன் கைகளை பிடித்துக் கொண்டு “ப்ளீஸ் இனிமே குடிக்காதீங்க” என்றபடி கண்ணில் நீர் வழிய கூறிவிட்டு நகர போனவளை கைபிடித்து தடுத்தவன் “அப்போ உனக்கும் என்னை பிடிக்கலையா?” என்று கேட்க, பதில் கூறாமல் அமைதியாய் நின்றிருந்த தியாவை பார்த்து “சொல்லு சொல்லு சொல்லு உனக்கு என்னை பிடிக்கலையா?” என்று கலங்கிய முகத்துடன் கேட்டவனை கண்டு

“உன்னை மட்டும் தான்டா பிடிக்கும். இந்த உயிரே உனக்காக தான்” என்று மனதிற்குள் சொல்லி கொண்டவள் அவனது முகத்தை கையில் ஏந்தி “ரொம்ப பிடிக்கும்” என்று விட்டு அவன் உச்சியில் இதழ் பதித்தவள் அவனை அழைத்து கட்டிலில் படுக்க செய்து அவன் கழுத்து வரை போர்வையை போர்த்தி விட்டு,நகரப் போனவளை கை பிடித்து தடுத்துவன் “நீயும் இங்க படு” என்று சொல்ல, தியா அதிர்ந்து போனாள்.

“இல்லை வேண்டாம்” என்றவளின் கையை இறுக்கி பிடித்தவன் “நான் சொன்னா கேட்கமாட்டியா ம்ம்ம் அப்புறம் எனக்கு கோபம் வரும் சொல்லிட்டேன்” என்று அவளை இழுக்க அவன் மேலேயே போய் விழுந்தாள் தியா.

அவனின் உதடுகள் அவள் கழுத்து வளைவில் இயல்பாய் பதிந்ததை கண்டு எழுந்த சிலிர்ப்பை தாங்க இயலாது அவனது நெஞ்சில் முகம் புதைத்து கொள்ள,

அவளது அருகாமையும் ஏற்கனவே தலைக்குமேல் ஏறியிருந்த போதையும் அவனது உணர்வுகளை எழுப்பிவிட அவளை தன்னோடு இறுக்கி கொண்டவன்  அவள் மேல் படர்ந்து மேலும் முன்னேறினான்.

கண்களை மூடி உணர்வுகளின் பிடியில் சிக்கி உதடுகள் துடிக்க இருந்தவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, ஏதோ உயிரை துளைப்பது போல் தோன்ற மெல்ல கண்களை திறந்தவளின் விழிகளில் எதை கண்டானோ? என்ன நினைத்தானோ? துடிக்கும் அவள் இதழை தன் இதழ் கொண்டு மூடினான்.

பெண்ணாய் அவளது தற்காப்பு உணர்வு எழுந்தாலும் அவன் மேல் இருந்த அளவு கடந்த காதல் அதை முறியடிக்க  அவனது இதழ் முத்தத்தில் உருகியவள் அவனின் மார்பில் தஞ்சம் அடைய அந்த அணைப்பு அவனுக்கும் இதமாய் இருக்க, ஆறுதல் தேடும் குழந்தை அரவணைப்பை நாடுவது போல அவளின் கதகதப்பான அரவணைப்பு தந்த சுகத்தில் தன்னை தொலைத்தவன் அவளுடன் கலந்தான்.

அவனது தொடுகையில் மெழுகாய் கரைந்து அவனோடு ஓன்றியவளை காண அவனுள்ளும் உணர்வுகள் கிளர்ந்தெழ மீண்டும் மீண்டும் அவளுக்குள் புதைந்தான்.

காதலும் இன்பமும் போட்டி போட்டு கூட வேண்டிய கூடலோ இன்று அவனின் சுயநினைவில்லாத பொழுதா நடக்க வேண்டும் என்று தியாவின் மனம் ஒரு புறம் கலங்கினாலும் தன்னால் அவன் மன காயத்திற்க்கு ஆறுதல் தர முடிந்ததை நினைத்து நிம்மதியும் தோன்றியது.அந்த சிறு கலக்கமும் கூட  கூடல் முடிந்த பின் அவன் நெற்றியில் இட்ட முத்தத்தில் காணாமலே போனது.

காலையில் விழித்தவள் தன் அருகில் கலங்கமற்று குழந்தையை போல் சுருண்டு படுத்து கிடந்தவனின் முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவளின் கைகள் தானாய் உயர்ந்து அவனது தலையை கோதி விட அந்நேரம் ஜன்னலின் வழியே உள் நுழைந்த வீரியம் குறைந்த கதிரின் வெளிச்சம்  நேரமானதை உணர்த்த எழுந்து குளிக்க சென்றவள் தன் மேல் தண்ணீர் படவும் தான் இவ்வளவு நேரம் இருந்த மயக்கம் மறைந்து அப்போது தான் மனதில் அந்த கேள்வியெழ ஸ்தம்பித்து போனாள்.

”நான் சுயநினைவு இல்லாமல் இருந்ததை பயன்படுத்தி கொண்டாயா?” என்று கேட்டால் என்ன பதில் சொல்வது ஏற்கனவே அட்வான்டேஜ் எடுக்காதே என்று கூறுபவன் இன்று ஏன் என்னை நீ தடுக்கவில்லை என்று கேட்டால்? அய்யோ “என்று நினைத்து மனதிற்குள் கலங்கியவள், மனதில் எழுந்த பாரத்தை மேனியில் பட்ட தண்ணீர் மூலம் கரைக்க முயற்சி செய்தவள் தோற்று போய் அதே கலக்கத்தோடு வெளியே வந்தாள்.

போதையின் தாக்கம் மெல்ல குறைய கண்விழிக்காமல் “நீ எனக்கு வேண்டாம் தனு  உன் நினைவு எனக்கு வேண்டாம் தனு நீ எனக்கு உன் நினைவு “என்று உளறிக் கொண்டிருக்க, குளித்து முடித்து வெளியே வந்தவள் கடைசி மூன்று வார்த்தையை கேட்டு ஆணியடித்தாற் போன்று அங்கேயே நின்று விட்டாள்.

அவள் மனதில் கலவையான உணர்வுகள் தோன்றி அலைக்கழிக்க“அவள் அக்காவை நினைப்பில் வைத்துக் கொண்டு தான் தன்னை தொட்டானா?” அதை யோசிக்க கூட முடியவில்லை அவளால், அக்காவிற்காக தன் காதலை தியாகம் செய்ய துணிந்தவள் தான் ஆனால் இன்று அவன் மனைவியாகி விட்ட பின் அவனை யாருக்கும் விட்டு குடுக்க முடியாத இந்நிலையில் கணவன் தன்னை வேறொருவளின் நினைப்பில் தன்னை தீண்டியிருக்கிறான் என்ற அந்த நினைப்பே மனதில் கசப்பை ஏற்படுத்த, ஊமையாய் கதறினாள்.

அவன் எழ முற்படுவது போல் தெரிய விருட்டென்று கிளம்பி கீழே சென்றாள் தியா.  அடுப்பறையில் வேலையாக இருந்த கயல்விழி அப்போது அங்கு வந்த தியாவை கண்டவர் மருமகளின் முகத்தில் தெரிந்த பொலிவும் களைப்பும் அவருக்கு நடந்ததை சொல்ல மகிழ்வுடன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

கலந்த காபியை அவள் கையில் தந்துவிட்டு சந்தோஷத்தை தன் கணவரிடம் பகிர்ந்து கொள்ள சென்றுவிட, அவர் அங்கிருந்து நகர்ந்தது தான் தாமதம் தியாவின் கண்களில் இருந்து கண்ணீர் கர கரவென பாய்ந்து அவள் கன்னத்தை நனைக்க, மனதில் இருப்பதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் கயல்விழி வரும் அரவம் கேட்டதும் கண்களை அழுந்த துடைத்தவள் அங்கிருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்க, “அத்தை நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்” என்று சொல்ல,

“தாராளமா போயிட்டு வாம்மா சஜன் எழுந்ததும் இரண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வாங்களேன்” என்று சொல்ல,

அவர் சொன்னதும் அதிர்ந்தவள் அவனை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல் தானே முழி பிதுங்கி கொண்டிருக்கிறேன் என்று மனதிற்குள் முணு முணுத்தவள் “இல்லை அத்தை இன்னைக்கு ஏதோ முக்கியமான மீட்டிங்னு சொன்னார் இன்னொரு நாள் சேர்ந்து போறோம்” என்று எதையோ சொல்லி சமாளிக்க,

“சரிம்மா போயிட்டு சீக்கிரம் வந்திடு” என்று வழியனுப்ப விட்டால் போதுமென அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

போதையின் தாக்கம் குறைந்ததும் எழுந்து அமர்ந்தவனுக்கு தலை பாரமாகி வலியெடுக்க தலையை இரு கைகளால் தாங்கி பிடித்தவாறு அமர்ந்தவனுக்கு தன்னில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது போல் தோன்ற, நேற்று நடந்தது மங்கலாக நினைவு வர உறைந்து போனான்.

“நானா? இப்படி நடந்து கொண்டேன் ச்சை என்ன தான் போதையில் இருந்தாலும் என்னால் எப்படி இதை செய்ய முடிந்தது. அந்த அளவிற்கா என் மனம் வலிமையற்று கிடைக்கிறது“என்றவன் தன்னை பற்றிய கழிவிரக்கத்தில் நொந்து கொண்டு தன்னை தானே கன்னம் கன்னமாக அறைந்து கொண்டான்.

“ஹேய் அவ உன் மனைவிடா எதுக்காக இப்படி ஓவரா ரியாக்ட் பண்ற” என்ற மனசாட்சியின் குரலெல்லாம் அவனை சற்றும் சமாதனப்படுத்தவில்லை.

“அய்யோ அவள் என்னை பற்றி என்ன நினைத்திருப்பாள்? என்னிடம் இருந்து விடுபட எப்படியெல்லாம் போராடினாளோ? இதற்கு தான் என்ன விளக்கம் குடுக்க முடியும் அப்படி தந்தாலும் அது செய்ததற்கு சமாதானம் ஆகுமா?” என நினைத்து மனதிற்க்குள்ளே உழன்று கொண்டிருந்தவன் அவளை கண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முடிவோடு எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

கீழே வந்தவன் சமையல் அறையை நோட்டம் விட்டுக் கொண்டே இருக்க அவனது செயல்களை கண்டு சிரித்துக் கொண்ட கயல் அவன் முன் வந்து “யாரை தேடுற சஜன்” என்று கேட்க,

அவருக்கு பதில் சொல்லாமல் திரு திருவென முழித்தவனை கண்டவர் “என்ன பண்ணி வச்ச அவ முகமே சரியில்லை கோவிலுக்கு போயிட்டு வர்றேனு சொல்லிட்டு போயிருக்கா” என்று சிரிப்பே இல்லாமல் சொல்ல,

ஏற்கனவே குற்ற உணர்ச்சியில் இருந்தவன் மேலும் நொந்து போய் அவளிடம் இன்று பேசியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் காத்திருக்க தொடங்கினான்.

மணி பத்தை கடந்த போதும் அவள் வராமல் இருக்க, அதற்க்குள் வினோத்திடம் இருந்து நிறைய போன் கால்கள் வரவே சரி ஈவ்னிங் வந்து பேசிக் கொள்ளலாம் என்ற முடிவோடு கிளம்பி சென்றான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

இரவு பயணம் செய்த களைப்பு நீங்க தூங்கி எழுந்த அருண் அலுப்பு தீர குளியலை போட்டு விட்டு வந்து தந்தையிடம் “அப்பா தியாவை பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்” என்று கூற,

“ம்ம் சரிப்பா அப்படியே தனுவையும் போய் பார்த்துட்டு வா” என்று சொல்ல,

“இல்லைப்பா நான் அங்க போறதா இல்லை வேணும்னா அவளை இங்க கூப்பிடுறேன் அப்படியே தியாவையும் கூட்டிட்டு வந்திடுறேன். ரொம்ப நாள் ஆச்சு நாம எல்லாரும் சேர்ந்து இருந்து” என்று சொல்ல,

“தனுவையும் போய் கூட்டிட்டு வா அது தான் முறை” என்று சொன்ன தந்தையை முறைத்தவன் “இங்க எல்லாம் முறையோட தான் நடக்குது பாருங்க நீங்க வேற ஏன்ப்பா நான் போனா அங்க அடிதடி தான் நடக்கும் பரவாயில்லையா” என்று சொல்ல,

தாமோதரன் அதற்கு மேல் எதுவும் பேசாது இருந்துவிட தியா வீட்டிற்கு கிளம்பும் முன் தனுஷாவிற்க்கு அழைக்க “அண்ணா எப்படியிருக்க?” என்று தன் நலத்தை பற்றி கேட்டவளிடம்,

“நல்லா இருக்கேன்டா நீ எப்படி இருக்க?” என்று கேட்க,

“இப்போ தான் உனக்கு என் நியாபகம் வருதா” என்று குரல் கம்ம கேட்க,

“சாரிடா தனு உனக்கு என் நிலைமை புரியுதா? உன்னோட வாழ்க்கை எப்படியெல்லாம் அமையணும்னு நினைச்சுட்டு இருந்தேன் அது இந்த மாதிரி ஆனா ஒரு அண்ணனா என் வலி உனக்கு தெரியுதா?” என்றதும்,

தன் மேல் அவன் வைத்திருக்கும் அன்பு பற்றி தெரிந்தாலும் புதிதாய் இப்போது தான் கேட்பது போல் கண்ணில் நீர் குளம் கட்ட” ம்ம் புரியுது” என்று சொல்ல,

“தனும்மா அண்ணன் சென்னைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்திட்டேன். இன்னைக்கு தியாவையும் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வர போறேன் நீயும் வர்றியா?” என்று கேட்க,

இங்கு வராதது வருத்தத்தை தந்தாலும் வந்தால் இங்கு நடக்கும் அசாம்பாவிதங்களை நினைத்தவள் வராமல் இருப்பதே நல்லது என தன் சகோதரனை பற்றி அறிந்தவளாய் “என்ன வர்றியானு பெர்மிஷன் கேட்குற வானு சொன்னா வரப்போறேன்” என்றுவிட, “சரிடா நீ நேரா இங்கே வந்திடு நான் தியாவை கூட்டிட்டு வந்திடுறேன்” என்று சொல்ல அவளும் சரி என்பதாய் வைத்தாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தியா வீட்டிற்க்கு சென்றவனை கயல்விழி முறையாக வரவேற்க “வாங்க தம்பி உட்காருங்க அப்பா வரலையா?” என்று கேட்க,

“இல்லை அத்தை நான் தான் தியாவை பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்” என்று வாங்கி வந்திருந்த தின்பண்டங்களை அவர் கையில் கொடுக்க  

“எதுக்குப்பா இதெல்லாம் இங்க என்ன சின்ன பிள்ளைங்களா இருக்காங்க?” என்று சொல்ல,

“பரவாயில்லை இருக்கட்டும் அத்தை” என்று சொல்லிவிட்டு வீட்டை சுற்றி தங்கையை தேடி பார்வையை சுழல விட,

அவனது தேடலை கண்டு கொண்டவர் “தியா கோவிலுக்கு போயிருக்காப்பா வர்ற நேரம் தான். நீ என்ன சாப்பிடுற “என்று கேட்க,

“ஒண்ணும் வேண்டாம் அத்தை வரும் போது தான் வீட்டுல சாப்பிட்டு வந்தேன்” என்றதும்,

“உன் தங்கச்சி வீட்டுக்கு வந்திருக்க அது எப்படிப்பா உன்னை சாப்பிடாம அனுப்ப முடியும் நீ இரு நான் உனக்கு காபியாவது கொண்டு வர்றேன்” என்று சமையலறைக்குள் நுழையவும் தியா வரவும் சரியாக இருக்க, அங்கு அமர்ந்திருந்த தன் அண்ணனை கண்டதும் மனதில் இருந்த கவலைகளை சற்று நேரத்திற்க்கு ஒதுக்கி வைத்தவளாய் பழைய உற்சாகம் திரும்ப “டேய் அருண் ஐஸ்கிரீம்” என்று ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டவள் “எப்போடா வந்த எருமை” என்று கேட்க,

“இப்போ தான் வந்தேன்” என்று வாய் சொல்ல கண்களோ அவளை ஆதுரமாய் வருட, சிறு குழந்தையென சுற்றி திரிந்தவள் இன்று நெற்றி வகிட்டில் குங்குமமும் கழுத்தில் மஞ்சள் கயிறுடன் பெரியவள் போல் இருந்தவளை கண்டவனின் கண்கள் கலங்கி இருந்தது.

அங்கு வந்த கயல் தன் மருமகளின் சந்தோஷத்தை கண்டு திருப்தி அடைந்தவராய் அருணிடமும் தியாவிடமும் காபியை நீட்டியவர் தானும் ஒன்றை எடுத்துக் கொண்டு அமர்ந்து கொள்ள, அருணும் சிறிது நேரம் கயல்விழியுடன் அமர்ந்து பேசிவிட்டு “அத்தை தியாவை வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு வரட்டுமா? நைட் நானே கொண்டு வந்து விடுறேன்” என்று கேட்க,

“இதையெல்லாம் கேட்கணுமா? தாரளமா கூட்டிட்டு போப்பா” என்று சொல்ல, சந்தோஷத்தில் கயல்விழியை அணைத்து விடுவித்தவள் “போயிட்டு வர்றேன் அத்தை” என்று அருணுடன் கிளம்பினாள்.

செனோரீட்டா வருவாள்.

 

Advertisement