Advertisement

அத்தியாயம் 23:

அனலில் இட்ட மெழுகு உருகி

கரைந்தோடினாலும் அதன் துளிகள் இறுகி

மீண்டும் பழைய நிலை எய்துவது போல

உன் கோபம் எனை உருக செய்தாலும்

இறுகி மீண்டும் உனையே நெருங்கிடுவேன்!

சஜனின் கையணைவில் இருந்த சுகம் இன்னும் மனதில் இருந்து நீங்காமல் ஒரு வித பரவசத்தோடு திரிந்து கொண்டிருந்த தியாவை கண்டு மனதிற்குள் மகிழ்ந்த கயல்விழியின் முகம் அதை அப்பட்டமாய் வெளிப்படுத்த புன்னகையுடன் “என்ன தியா முகம் பிரகாசமா இருக்கு என்ன விஷயம்” என்று கேட்டு வைக்க,

என்ன சொல்வது என்று தெரியாமல் திரு திருவென முழித்தவளை கண்டு வாய்விட்டு சிரித்தவர் “சரி சரி எதுவும் கேட்கலை இந்த ஜூஸை கொண்டு போய் சஜனுக்கு குடுத்துட்டு காலேஜ்க்கு கிளம்பு அதுக்குள்ள நான் உனக்கு மதியத்திற்கு லஞ்ச் பேக் பண்றேன்” என்றவரிடம்,

“லஞ்ச் வேண்டாம் அத்தை நாளையில இருந்து ஸ்ட்டி லீவ் ஸ்டார்ட் ஆகுது சோ இன்னைக்கு ஹால்ப் டே தான் “என்று விட்டு ஜூஸை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்கு சென்றாள்.

குளியலறையில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்கவே மெத்தையில் அமர்ந்து அவனுக்காய் காத்திருக்கலாம் என நினைத்தவள் ஏதோ யோசனையில் மூழ்கிவிட்டாள்.

சஜன் வெளியே வந்தது கூட தெரியாமல் அமர்ந்திருக்க அவளை கண்டு புருவம் உயர்த்தியவன் பின் அவளை கண்டு கொள்ளாது அலுவலகம் செல்ல தயாரானான்.

அந்நேரம் அவனது தொலைப்பேசி ஒலியெழுப்ப அந்த சத்தத்தில் தன் யோசனையின் பிடியில் இருந்து எழுந்தவள் அவன் வெளியே கிளம்புவதை கண்டதும் ஜூஸ் கிளாசை எடுத்துக் கொண்டு வேகமாக அவன் பின்னே சென்று அவன் திரும்பியதை பார்க்காமல் அவன் மேல் கொட்டிவிட,

“ஏய் என்ன பண்ணி வச்சுருக்க ஹம்ம்ம். ஒழுங்கா பார்த்து வர தெரியாதா? ச்சை” என்று கடுப்படிக்க,

மனதில் அது வரை இருந்த சந்தோஷம் எல்லாம் பறந்தோட அவனை கண்டு முழித்தவள் அமைதியாய் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க,

அவளது செய்கையில் மேலும் எரிச்சல் அடைந்தவன் “என்ன இந்த பாவமா பார்க்குற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம். நேற்று நடந்ததை வச்சு ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கலாம்னு நினைச்ச அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் பீ கேர்புல்” என்று விட்டு,

வேறு உடை மாற்றியவன் “என்னைக்கு இந்த கல்யாணம் நடந்துச்சோ அன்னையில இருந்து என் நிம்மதியே போச்சு” என்று முணு முணுத்துவிட்டு வெளியேறி விட்டான்.

“என்ன சொல்லிட்டு போறான் நிம்மதியே போச்சாமா? என் வாழ்க்கையே நீ தானு நினைச்சுட்டு இருக்கேன். ஆனா நீ உன் நிம்மதியை நான் கெடுக்குறேனு சொல்ற என்னை என்னைக்கு தான் புரிஞ்சுக்க போறடா நீ. உன் பக்கத்தில் இருக்கும் போது தான்டா நான் நிம்மதியாவே இருக்கேன் அது எப்போ உனக்கு புரியும்” என்று மனதிற்குள் மறுகியவள் கல்லூரிக்கு செல்ல மனமில்லாமல் அப்படியே படுத்து விட்டாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எதற்காக இவ்வளவு கோபம் என்று தெரியாமலே அவளிடம் எரிந்து விழுந்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தவன் நேரே தன் அலுவலகம் நோக்கி பறந்தான்.

விறு விறு வென்று அலுவலகத்திற்க்குள் நுழைந்தவன் அங்கு நின்றிருந்த வினோத்திடம் “என்னோட கேபினுக்கு உடனே வா” என்றுவிட்டு தனதறைக்குள் நுழைந்தான்.

“மே கம் இன் சார்” என்று உள்ளே நுழைந்த வினோத்தை கண்டு தலையசத்தவன் “இன்னைக்கு அந்த சீதாராம் கூட மீட்டிங்கிற்கு ஏற்பாடு பண்ணிட்டியா?” என்று கேட்க,

“யெஸ் சார் ஆஃப்டர் நூன் லஞ்ச் டைம் **** ஹோட்டல்ல மீட் பண்ணலாம்னு சொல்லிருக்காரு” என்று சொல்லிவிட்டு வெளியேறியவனின் பார்வை வெண்பாவின் கேபினை வட்டமிட அவளோ அவனை கண்டதும் குனிந்து கொண்டாள்.

“என்ன பார்த்தா இவளுக்கு எப்படி இருக்கு? நானும் இந்த நாலு நாளா பார்த்துட்டு இருக்கேன் ஓவரா பண்ணிட்டு இருக்கா என்னை பார்த்தா மூஞ்சை திருப்புறதும் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லிகிட்டு இருக்கதும் இது சரிப்படாது இன்னைக்கு இதுக்கு ஒரு வழி பண்றேன்” என்று விட்டு தன் அறைக்கு சென்றான்.

அவன் சென்றதும் நிமிர்ந்தவள் தனக்குள் புன்னகைத்துக் கொண்டு வேலையை தொடர நேரம் போனதே தெரியாமல் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டவள் ஒரு காபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபடி கேன்டீனை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

செல்லும் போது வினோத் கேபினை வெளியில் இருந்து எட்டி பார்க்க அவனது சீட் காலியாக இருக்க  “எங்க போனான்” என்று முனகிவிட்டு திரும்பிய நொடி அவளை உள்ளே இழுத்து அறைக்கதவை மூடினான் வினோத்.

திடீரென்று அவன் இழுப்பான் என எதிர்ப்பார்க்காத வெண்பா சற்றே திடுக்கிட பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் அவனை பார்த்து முறைக்க, அதில் எரிச்சல் அடைந்தவன் “என்ன முறைப்பு? உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க ம்ம்” என்று கேட்க,

“உன்னை தான்டா லூசு” என மனதிற்குள் கவுன்டர் கொடுத்தவள், அவனை நேராய் பார்த்து “நான் என்ன நினைச்சா உங்களுக்கு என்ன வினோத் சார்” என்று அந்த சார்-ல் சற்றே அழுத்தம் குடுக்க,

அவளின் பேச்சைக் கேட்டு பல்லை கடித்தவன் “நானும் பார்த்துட்டே இருக்கேன் இப்போ எல்லாம் சரியா பேசுறது இல்லை என்னை பார்த்தாலும் மூஞ்சை திருப்பிக்குற” என்று தன் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி விடும் நோக்கில் கேட்டுக் கொண்டிருக்க,

“இதையெல்லாம் நான் ஏன் செய்யணும்னு சொல்றிங்க? இந்த கம்பெனியில நீங்களும் நானும் வொர்க் பண்றோம் அதை தவிர வேற என்ன இருக்கு நமக்குள்ள நான் ஏன் உங்ககிட்ட பேசணும்னு நீங்க எதிர்ப்பார்க்குறிங்க” என்று அவனின் பொறுமையை சோதிக்கும் வண்ணம் கேட்க,

அவளது நேரடி கேள்வியில் சற்றே  தடுமாறியவன் “இல்லை அது அது வந்து” என்று ஏதோ ஒரு தைரியத்தில் அவளை உள்ளே இழுத்து விட்டான் மற்றபடி எப்படி சொல்வது என தெரியாமல் திக்கி கொண்டிருக்க, அவனது தடுமாற்றத்தை பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டவள் “சொல்லுங்க வினோத் ஏன் தடுமாறுறிங்க” என்று கேட்க,

தன்னை திடப்படுத்திக் கொண்டவன் “அது நான் உன்னை” என்று மீண்டும் கிராக் விழுந்த சி.டியை போல் கரகரத்துக் கொண்டிருக்க, அதற்கு மேல் அவனது வழ வழ கொழ கொழவை தாங்க முடியாமல் அவன் அருகில் வந்து சட்டென்று அவன் எதிர்ப்பார்க்காத நேரத்தில் கன்னத்தில் இதழ் பதித்தாள்.

அவள் இதழ் ஒற்றலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத வினோத்தின் கண்கள் கோழி முட்டை அளவிற்கு விரிய அதை கண்டு புன்னகைத்தவள் “சோ ஸ்வீட் ஐ லவ் யூ வினு” என்றவாறு அங்கிருந்த நகர்ந்தது மட்டும் தான் தெரியும். அடுத்த நொடி வினோத்தின் இறுகிய அணைப்பில் இருந்தாள் வெண்பா.

அவனது அணைப்பை மனம் விரும்பினாலும் வெளியில் “வினு என்ன பண்றிங்க விடுங்க” என்று அவளுக்கே கேட்காத குரலில் வினவ,

“ஏன் பார்த்தா தெரியலையா? உன்னை கட்டிபிடிச்சுட்டு இருக்கேன் “ என்றவாறு அவளை மேலும் தன்னோடு இறுக்கி கொண்டான்.

“ஹய்யோ என்ன வினு இது ஆபிஸ் அது நியாபகம் இருக்கா? விடுங்க ” என்று சொன்னவனளின் குரல் தான் உயர்ந்திருந்ததே தவிர அவனை விலக்க சற்றும் முற்படவில்லை.

“ஹோ இப்போ தான் இது ஆஃபிஸ்னு நியாபகம் வருதா? எனக்கு முத்தம் குடுத்து உசுப்பேத்துறதுக்கு முன்னாடி தெரியலையா” என்று கூறியவனின் பேச்சில் முகம் சிவந்தவள் அவனை விலக்கி நழுவ பார்க்க,

தன் பிடியை சற்றே தளர்த்திவிட்டு அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் “ஐ லவ் யூ டி” என்று சொல்ல அதை கேட்டு தடதடத்துக் கொண்டிருந்த அவள் இமைகளின் துடிப்பை தன் இதழ் கொண்டு நிறுத்தினான்.

அவனின் இதழ் தீண்டல் உயிர் வரை இனித்த போதும் அதை தாங்க இயலாதவளாய் அவன் அசந்த நேரம் அவனது பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓரே ஓட்டமாய் தன் டேபிளுக்கு சென்றுவிட, அவள் ஓடுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இதழ் பட்ட தன் கன்னத்தை தடவிக் கொண்டு புன்னகைத்துக் கொண்டான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

“உள்ளே வரலாமுங்களா?” என்ற குரல் கேட்டதும் தன் கையில் இருந்த ஃபைலில் இருந்து கண்ணை எடுத்து நிமிர்ந்தவன் வெள்ளை வேட்டி சட்டை கண்ணில் கறுப்பு கண்ணாடி கையில் தடிமனான ப்ரேஸ்லெட் விரல்களை மூடிவிடும் அளவிலான மோதிரம் கழுத்தில் இரட்டை வட சங்கிலியின் அகலத்தில் மைனர் செயின் அணிந்து வாயெல்லாம் பல்லாக நின்று கொண்டிருந்தவரை அடையாளம் கண்டு கொண்டவன் “வாங்க” என்றுவிட்டு மீண்டும் விட்டிருந்த இடத்தில் இருந்து கேஸ் ஃபைலை பார்க்க தொடங்க,

அவனது அலட்சிய போக்கு கோபத்தை ஏற்படுத்த மனதிற்குள் “இது மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன் நீயெல்லாம் எனக்கு ஜுஜிபிடா” என்று நினைத்து நக்கலாக சிரித்தவர்,

“என்ன தம்பி கூப்பிட்டு அனுப்பிச்சிங்களாம்? நானெல்லாம் சட்டத்தை மதிக்குறவன் அதான் என் ஸ்டேட்டஸை விட்டுட்டு நீங்க கூப்பிட்டிங்களேன்ற காரணத்துக்காக வந்தேன்” என்று விட்டு ஹ ஹ என்று சிரிக்க,

“தம்பியா? நான் உன்கூட பிறந்தேனா? இல்லை நீயும் நானும் பெரியப்பா சித்தப்பா பசங்களா? இந்த உறவு முறை சொல்லி பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம் சார்ன்ற வார்த்தைக்கு மறு பேச்சு இருக்க கூடாது நியாபகத்துல வச்சுக்கோ” என்றதும்

“என்ன வார்த்தை தடிக்குது. உனக்கு என்னை பத்தி சரியா தெரியாது ஊருக்கு புதுசு இள ரத்தம் வேற அதான் ஓவரா துள்ளுற என் செல்வாக்கு என்னனு தெரியுமா நான் நினைச்சா அடுத்த நிமிஷமே உன்னை காணாம போக வைக்க முடியும். உன்னை மதிச்சு நான் இங்க வந்ததே பெரிசு” என்று சொல்லிக் கொண்டே சென்றவரை கை நீட்டி தடுத்தவன்

“ஹலோ உன்னை விசாரணைக்காக தான் கூப்பிட்டுருக்கு அதை விட்டுட்டு உன் வீர தீர பராக்கிரமத்தை கேட்க இல்லை அதை கேட்கவும் எனக்கு நேரம் இல்லை புரிஞ்சுதா?” என்று சொல்ல,

“என்ன மரியாதை குறையுது வார்த்தையை விடாத அப்புறம் கஷ்டப்பட போறது நீ தான் தெரிஞ்சுக்கோ? என்னை பத்தி உனக்கு இன்னும் சரியா தெரியலை” என்று சொல்ல,

“அப்படிங்களா அதை கஷ்டப்படும் போது பார்த்துக்கலாம். இப்போ விஷயத்துக்கு வர்றேன் கணபதி என்றவரோட நிலத்தை நீ  ஏமாத்தி வித்துருக்கனு அவர் உன் மேல கம்ப்ளைன்ட் குடுத்துருக்காரு” என்று சொல்ல,

ஏதோ ஜோக் சொல்லியது போல் இளா சொன்னதை கேட்டு உரக்க சிரித்தவர் “ என்ன சொன்ன நான் ஏமாத்தி வித்தேனா? நல்லா சொன்ன போ” என்று சொல்லி முடித்த நொடி , கணபதி என்றவன் அவர்கள் இருந்த அறைக்கு வந்து தன்னுடைய புகாரை வாபஸ் வாங்குவதாக சொல்ல,

அதை கேட்டு கோபம் அடைந்த இளா “ உங்களுக்கெல்லாம் எங்களை பார்த்தா எப்படி தெரியுது நீங்க வேணும்னா கம்ப்ளைன்ட் எடுத்துக்கணும் வேண்டாம்னா விட்டுடணுமா? எங்களுக்கு வேற வேலை எதுவும் இல்லைனு நினைச்சீங்களா?” என்று கேட்க,

கணபதியோ தன் இயலாமையை எண்ணி தலை குனிந்துவாறு நிற்க, சீதாராமின் முகத்திலோ வெற்றி களிப்பு தாண்டவமாட “ இப்போவாது தெரியுதா என் பவர்” என்ற கேலி அவர் கண்களில் அப்பட்டமாக தெரிய,

அவரை தன்னால் முடிந்த வரை முறைத்தவன்  கணபதியை நோக்கி திரும்பி “ போங்க சார் உங்களுக்கு பொழுது போகலைனா வேற எதாவது பண்ணுங்க, பிரச்சனையை ஃபேஸ் பண்ற தைரியம் இல்லைனா எதுக்கு கம்ப்ளைண்ட் குடுக்க வர்றிங்க” என்று இருந்த கோபத்தை அவரிடம் காட்ட,

அவர் சென்றதும் சீதாராம் இளாவை நோக்கி “ இவ்வளவு கோபம் உடம்புக்கு நல்லது இல்லை தம்பி. சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும் இனியாவது மோதுறதுக்கு முன்னாடி யார் எவர்னு தெரிஞ்சுகிட்டு பண்ணுங்க ப்ரீயா இருந்தா வீட்டு பக்கம் வாங்க காபி சாப்பிட்டு போகலாம் வரட்டா” என்று விட்டு செல்ல. “நேரம் வரட்டும் அப்புறம் இருக்குடா உனக்கு” என்று மனதிற்க்குள் கறுவிக் கொண்டவன் அதற்காய் காத்திருக்க தொடங்கினான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அந்த புகழ் பெற்ற உணவகத்தில் சஜன் சீதாராமுடனான மீட்டிங்கிற்காக காத்துக் கொண்டிருக்க ஐந்து நிமிடம் அவனை காக்க வைத்து விட்டு அங்கே வந்தவர் “என்ன தம்பி வந்து ரொம்ப நேரமாச்சா?” என்று கேட்டுக் கொண்டே அவனுக்கு எதிரில் இருந்த சேரில் அமர,

“அதெல்லாம் இல்லைங்க சார் ஜஸ்ட் இப்போ தான் வந்தேன்” என்று பதில் சொல்ல, அவனது பணிவான பதிலில் தன்னை கர்வமாக எண்ணிக் கொண்டவர், “சரி தம்பி விஷயத்திற்கு வருவோம் உங்க கம்பெனிக்கு இடம் வேணும்னு பத்திரிக்கையில விளம்பரம் குடுத்திருந்தீங்க என் கைவசம் இப்போ ஒரு இடம் இருக்கு பார்க்குறிங்களா?” என்று கேட்க,

“ஓ யெஸ் பார்க்கலாம் எல்லாம் ஒத்து வந்தா உங்க இடத்தையே ஃபைனலைஸ் பண்ணிக்குறேன்” என்று சொல்ல,

“நீங்க கவலைப்படவே தேவையில்லை தம்பி எல்லாம் பக்காவா இருக்கும் நீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க மற்றதை நான் பார்த்துக்குறேன்” என்று சொன்னதும்,

“சரி சார் நீங்க பேமென்ட் அன்ட் நிலத்தை பத்தின டீடைல்ஸ் சொல்லுங்க நான் அப்பாகிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சீக்கிரம் முடிவை சொல்றேன்” என்று சொல்ல,

“தாராளமா சொல்லுங்க ஆனா லேட் பண்ணிடாதீங்க ஏன் சொல்றேன்னா இது மெயின் ஏரியாவில இருக்க லேண்ட் நாளுக்கு நாள் வேல்யூ ஏறிக்கிட்டே இருக்கு சொல்றதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம் “என்றவரிடம்

“புரியுது சார் சீக்கிரம் சொல்றேன்” என்றுவிட்டு உணவை ஆர்டர் செய்து பொதுவாக பேசிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் மதிய உணவை உண்ண அங்கு வந்திருந்த இளா இவர்களை கண்டதும் யோசனையோடு அவர்களை கண்காணிக்கும் தூரத்தில் அமர்ந்து கொண்டு நோட்டம் விட தொடங்கினான்.

சாப்பிட்டு முடிந்ததும் சஜனிடம் விடை பெற்று சீதாராம் சென்றதும், தானும் கிளம்பி செல்ல எத்தனித்த நேரம் அவன் முன் வந்து நின்றான் இளா.

அவனை கண்டதும் அடிமனதில் இருந்த கோபம் பெருக்கெடுக்க இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு தன் கோபத்திற்கு கடிவாளமிட்டவன் இளாவை கண்டு கொள்ளாது அவனை தாண்டி செல்ல, அவன் பின் சென்ற இளா “சஜன் ஒரு நிமிஷம் உங்கிட்ட பேசணும்” என்று சொல்ல,

“ஹே லுக் என் பெயரை கூட சொல்ற தகுதி உனக்கு கிடையாது வழியை விடு” என்று சீற,

“சஜன் கோபப்படாம நான் சொல்றதை கேளு இது ரொம்ப முக்கியமான விஷயம்” என்று சொல்ல,

“இளா டோன்ட் கிரியேட் எனி சீன் உன்னால நான் பட்டதெல்லாம் போதும் இப்போ நீ சொல்றதை கேட்டு மறுபடியும் நான் அவமானப்பட விரும்பலை”

“சஜன் நீ இன்னும் நடந்ததை நினைச்சு நடக்க போறதை கோட்டை விடாதே அந்த சீதாராம் நல்லவன் இல்லை அவன் ஒரு ஃப்ராட் அவன்கிட்ட ஜாக்கிரதையா இரு” என்று சொன்னதும்

“ஹ ஹா வாவ் உன்னை விடவா? என்னை நம்ப வைச்சு கழுத்தறுத்தியே மறந்து போச்சா? நீ வேணும்னா அதை மறந்திருக்கலாம் நான் அதை மறக்கலை” என்று பொரிந்தவனை கண்டு,

“சஜன் நான் செய்தது தப்பு தான் அது உன்னை எந்த அளவு கஷ்டப்படுத்தி இருக்கும்னு எனக்கு புரியுது. ஆனா அந்த கல்யாணம் நடந்திருந்தாலும் அது உனக்கு வலி தான் “ என்று தியாவின் காதலை பற்றி தெரிந்தால் தனுஷா அவளுடைய வாழ்க்கையையும் சூனியமாக்கி கொண்டிருப்பாள் என அவளை பற்றி தெரிந்தவனாய் இளா சொல்ல,

“என்ன உளர்ற” என்று கேட்டவனிடம் தியாவின் காதலை பற்றி சொல்லிவிடலாமா? என ஒரு நொடி நினைத்து விட்டு பின் இது தியாவே சொன்னால் தான் நல்லது என நினைத்தவன் “தனு என்னை தான் காதலிக்குறா? எங்க ரெண்டு பேர்க்குள்ள சின்ன மிஸ் அன்டர்ஸ்டான்டிங் அதான்” என்று அவன் சொல்ல,

அதற்குள் அவன் சொல்ல வருவதை கேட்க முடியாமல் “நீ சொல்றதை கேட்க வேண்டிய அவசியம் எனக்கில்லை அன்ட் ஐ டோன்ட் ஹவ் டைம் டூ டால்க் எஸ்பெஷ்லி வித் யூ” என்று விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

காரை ஓட்டிக் கொண்டிருந்தவனின் மனமோ கொதித்து கொண்டிருந்தது “அவ என்னை தான் காதலிக்குறா” என்று கூறிய இளாவின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் ஒலிக்க, அந்த சத்தம் கேட்காத தூரத்திற்கு ஓடுபவனை போலான மனநிலையில் இருந்தவனின் கைகளில் வண்டி ஓடாமல் பறக்க தொடங்கியது.

கொஞ்ச கொஞ்சமாக வேகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தவனின் கால்கள் ப்ரேக்கை அழுத்த வந்து நின்ற இடமோ கடற்கரை. மனதில் இருக்கும் பாரத்தை வெளியேற்ற துடிக்கும் எண்ணத்தோடு காரை விட்டு இறங்கியவன் அந்த கடற்கரை மணலில் கால்கள் புதையுற நடந்தவன் ஓரிடத்தில் அமர்ந்து விட்டான்.

அந்நேரம் மொபைல் விடாமல் அழைக்கவே அதை எடுத்து பார்க்க கூட விரும்பாமல் ஆர்ப்பரிக்கும் கடலையே வெறித்துக் கொண்டிருந்தவனை கலைப்பதற்க்கென்றே மீண்டும் மொபைல் ஒலிக்க “ம்ச்ச்” என்ற சலிப்போடு அதை எடுத்தவனின் கண்கள் யோசனையில் சுருங்க “ஹலோ””என்றான். “ஹலோ நான் தனுஷா பேசுறேன்” என்று சொன்னதும்,

“ம்ம் சொல்லுங்க” என்றதும் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். இப்போ ஃப்ரீயா நீங்க” என்று கேட்க,

“எங்க வரணும்” என்றதும் “நீங்க எங்க இருக்கீங்கனு சொல்லுங்க நான் வர்றேன்” என்றவளிடம்,

தான் இருக்கும் இடத்தை சொன்னதும் “நான் பீச் பக்கத்துல தான் இருக்கேன் வெயிட் பண்ணுங்க வந்திடுறேன்” என்று வைத்துவிட அவள் எதற்காக வருகிறாள் எதை பற்றி பேசப்போகிறாள் என்று எதை பற்றியும் யோசிக்காமல் கடலையே வெறித்துக் கொண்டிருந்தான்.

 

Advertisement