Advertisement

அத்தியாயம் 17:

பொங்கியெழும் கடலலை

கரை தாண்டி வந்து தீண்டுவது போல

உன் மேல் எனக்கிருக்கும் காதலும்

நின் பாதங்களை நினைக்கும்

என்ற நம்பிக்கையில் நான்!

“ஏன் இப்போ அமைதியா இருக்க. பிடிக்கலைனா பிடிக்கலைனு நேரடியா சொல்ல வேண்டியது தான. நீ சொல்ல மாட்ட அது ஏன்னும் எனக்கு தெரியும்” என்றபடி குனிந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்த முயற்சி செய்ய, அவன் நெருங்குவதை கண்டதும் இரண்டடி பின்னால் நகர்ந்தாள் தனுஷா.

அவளது செய்கை அவன் மனதை நோகடித்தாலும் அவள் மேல் கொண்ட காதல் மேலெழும்ப, அவள் அருகில் சென்றவன் “சரி நீ எதுவும் சொல்ல வேண்டாம். நீ இப்படி இருக்கிறதுக்கான காரணம் எனக்கே தெரியும் போது அதை உன்னை திரும்ப சொல்ல சொல்லி ஏன் வற்புறுத்தணும்” என்றான்.

அதற்கும் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருப்பவளை கண்டு பெருமுச்சு ஒன்றினை வெளியிட்டவன், “என்ன கேட்டாலும் வாயை திறக்க மாட்டா சரியான் அழுத்தம் டி நீ” என்று முணு முணுத்து கொண்டு சென்றான்.

நேராக சமையலறையில் நுழைந்தவன் பம்பரமாக சுழன்று மதிய வேளைக்கான உணவை தயார் செய்துவிட்டு தான் வெளியே வந்தான். அவன் போகும் போது எந்த நிலையில் இருந்தாலோ அதே நிலையில் இருப்பதை கண்டு “ஷப்பா இப்போவே கண்ணை கட்டுதே. இதுல இனி இவளை நான் என்னைக்கு சமாதனப்படுத்தி முடியலை” என்று நொந்து கொண்டு,  

“சின்னு மதியத்திற்கு சாப்பாடு செய்து வச்சுட்டேன். நீ எதுவும் செய்ய வேண்டாம் சாப்பிட்டு ரெஸ்ட் எடு. மீதியை ஈவினிங் பேசிக்கலாம்” என்றதுடன் கிளம்பி விட்டான்.

இளா சென்றுவிட்டான் என்பதை அறிந்து கொண்டவள் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து விட்டாள். அவளுக்கு கண்கள் இருண்டு கொண்டு வருவதை போல இருந்தது.

அவள் மனம் நினைப்பது அவளுக்கே புரியவில்லை. இளாவை காணும் முன்பு வரை அவளுக்கு அவன் நினைப்பு வந்ததே இல்லை.அவனை அவளுக்குப் பிடிக்கும் தான் ஆனால் அவனை காதலிக்கிறாளா என்றால் அதற்கு பதில் இல்லை தான்.அப்படியிருக்க, அவன் கேட்டதும் அமைதியாய் இருந்த தன் மடத்தனத்தை நொந்து கொண்டாள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தியாவிற்கு சஜன் வீட்டை மிகவும் பிடித்து விட்டது. நேற்று தான் இங்கு வந்திருந்தாலும் புதிய இடம் என்ற நினைப்பே இல்லாமல் இருந்தது. சஜன் மட்டும் அவளை புரிந்து கொண்டிருந்தால் இதே இடம் சொர்க்கமாக காட்சியளித்திருக்கும்.

“அத்தை என்ன ஹெல்ப் செய்யணும்னு சொல்லுங்க செய்யுறேன்” என்று கேட்க,

“அதெல்லாம் வேண்டாம் தியா இன்னைக்கு நான் செய்யுறதை கவனமா பார்த்துக்கோ சரியா அப்புறம் நீ செய்யலாம்? என்றபடி தன் கணவருக்கும், மகனுக்கும் என்ன பிடிக்கும் பிடிக்காது என்பதை சொல்ல, அதை கவனத்துடன் கேட்டுக் கொண்டாள்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் போர் அடித்துவிட, அத்தை காய்களையாவது கட் செய்து தருகிறேன் என்று விடாப்பிடியாக, அதை செய்து கொடுத்தாள்.

இருவரும் சலசத்துக் கொண்டிருந்த நேரம் அங்கு வந்த சிவப்பிரகாசம் “ஆஹா இன்னைக்கு மருமகளோட சமையலா? வாசனையே பிரமாதமா மூக்கை துளைக்குதே” என்றபடி அங்கிருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தார்.

“ஏன் இதுவரை நான் சமைக்கும் போது வாசனை வந்தது இல்லையா?“ என்று கயல்விழி பொய்யாக கோபம் கொண்டு கேட்க,

“வாசனையா? நீ சமைச்சுருக்கனு சாப்பாடு பார்க்கும் போது தானே தெரியும் இதுல எங்க வாசனை வர்றது” என்று அவரும் அவர் பங்குக்கு கிண்டல் செய்ய,

“ஓ அப்படியா வாசனை வரலையா? சரி இன்னைக்கும் நான் தான் உங்களுக்கு பிடிச்ச ஐட்டம் எல்லாம் சமைச்சேன் உங்களுக்கு தான்  என் சாப்பாடு பிடிக்காதே அதனால உங்களுக்கு இன்னைக்கு சாப்பாடு கிடையாது”

“அப்படி என்ன பொல்லாததை செய்திருக்க போற?” என்று யோசனை செய்வது போல் பாவனை செய்ய,

அதற்கு கயல்விழி சொன்ன மெனு ஐட்டங்களை கேட்ட சிவப்பிரகாசத்திற்கு நாவில் எச்சில் ஊற “அய்யோ கயல் சும்மா சொன்னேன்டா உன் சமயலை அடிச்சுக்க ஆளே கிடையாது இனி பிறந்து தான் வரணும்” என்றபடி சொல்ல,

“சரியான ஆள் தான் பிஸினஸ் புத்தி. உங்களை” என்றபடி கரண்டியால் ஓங்க “ பார்த்தியாமா உங்க அத்தை பண்ற கொடுமையை இதெல்லாம் நீ கேட்க மாட்டியா “ என்று மருமகளை துணைக்கு அழைக்க,

கயல்விழியோ “தியா நீ யார் பக்கம் என் சைடு தானே அப்படினா அவரை கேளு” என்று சொல்ல,

மாறி மாறி அவர்கள் கூறுவதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்தவள் கயல் விழி இவ்வாறு கேட்கவும் இயல்பான குறும்புத்தனம் தலை தூக்க, “எங்க அம்மா அப்போவே சொல்லுச்சு இவங்க கூடலாம் சேராதனு நான் தான் கேட்கலை” என்று சொல்ல,

அவள் பாவனைகள்ளுடன் கூறியதை கேட்டதும் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “அடிப்பாவி உன்னை” என்று துரத்துவது போல் ஒரு எட்டு வைக்க, ஓட தொடங்கினாள்.

அவள் ஓடத் தொடங்கவும் “இரு இரு என் பையன் வரட்டும் அவங்கிட்ட உன் பொண்டாட்டி  என்னை கிண்டல் பண்றானு சொல்றேன்?” என்று சொல்லி சிரிக்க,

சஜன் பெயரை கேட்டதும் ஆணி அடித்தாற் போல் நின்றவள் “சும்மாவே கோபமா இருக்கான் இதுல அத்தை இதை ஜாலிக்கு சொன்னாலும் அவன் இதை எப்படி எடுத்துக் கொள்வானோ? என்ன சொல்லுவானோ?” என்ற பயத்தில் பாவமாக கயல்விழியை திரும்பி பார்க்க,

“ஹே தியாம்மா என் முகம் இப்படி போகுது அதெல்லாம் சொல்ல மாட்டேன்” என்று அவளின் அருகில் வந்து தோளை தட்டிக் கொடுக்க, அப்போது தான் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது தியாவிற்கு.

“தியா அந்த கார்ட்லஸ் போனை எடுத்துட்டு வா சஜனையும் மதியம் சாப்பிட கூப்பிடலாம். காலையில கூட சாப்பிடாம போயிட்டான்.” என்று சொல்ல,

போனை எடுத்துக் கொண்டு கயல்விழியிடம் சென்றவள் அமைதியாய் நிற்க “என்ன தியா போன் பண்ணு” என்று சொல்ல,

அவளோ “நம்பர்” என்று இழுக்க,  “சரி குடு நான் டயல் பண்றேன்” என்று சஜனை அழைத்தார். அவனோ போனை அட்டன்ட் செய்யாமல் இருந்தான்.

மூன்று முறை முயற்சி செய்தும் எடுக்காமல் இருக்கவே இன்னும் கோபத்தோடு இருக்கிறானோ என்று நினைத்தவர் சரி இன்னும் ஒரு தடவை முயற்சிக்கலாம் என மீண்டும் அவனது எண்ணிற்கு தொடர்பு கொண்ட நேரம் கயல்விழியை சிவா அழைக்க,

“தியா அட்டன்ட் பண்ணினா சாப்பிட வர சொல்லுமா. நான் இப்போ வந்திடுறேன்” என்று தொலைப்பேசியை அவள் கையில் திணித்துவிட்டு சென்றுவிட,

அவள் நேரமோ என்னவோ “இந்த அம்மா ஏன் இப்படி ஓயாம போன் பண்றாங்க ஒரு தடவை எடுக்கலைனா விட வேண்டியது தான” என்று பொருமியவன் இப்போதும் எடுக்கலைனா திரும்பவும் தொந்தரவு பண்ணுவாங்க என்று நினைத்தபடி “ ஹலோ அம்மா எதுக்கு இத்தனை தடவை கால் பண்றிங்க” என்றான்.

பதில் ஏதும் இல்லாமல் இருக்கவே “ஹலோ மா” என்று மறுபடியும் கேட்க,

“அத் அத்தை இல்லை நா நான் பேசுறேன்” என்று திக்கி திக்கி சொல்ல,

“ஹோ நீயா உனக்கு அறிவே இல்லையா? ஒருத்தன் போன் அட்டன்ட் பண்ணலைனா ஏதாவது முக்கியமான வேலையில இருப்பான்னு கூட யோசிக்காம இப்படி தான் பண்றதா? எதுக்கு கூப்பிட்ட?” என்று கோபத்தில் எரிந்து விழ,

அவனது கோபத்தில் சற்று மிரண்டவளின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள, “மதியம் சா சாப்பிட கூப்பிடலாம்னு அத்” என்றவளை இடையில் நிறுத்தி,

“சாப்பாடு இப்போ அது ஒண்ணு தான் குறைச்சல். மனுஷன் நிலைமை புரியாம போன் பண்ணி டார்ச்சர் பண்ணிக்கிட்டு. இனி போன் பண்ற வேலையெல்லாம் வச்சுக்காத “ என்றுவிட்டு கட் செய்து விட்டான்.

அவன் காதல் மொழிகளை கேட்பதற்க்கு கனவு கண்டவள் அவனின் கோப மொழிகளை கேட்டு உடைந்து போனாள். அழுவதை விரும்பாது எப்போதும் குதுகல மாக சுற்றிக் கொண்டிருந்த தான் என்று தன்னுள் காதல் நுழைந்துதோ அன்றிலிருந்து அழுகையும், பிறரிடம் தன் மன பாரத்தை கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலைக்கு ஆளானாள்.

சோர்ந்து போய் நின்றிருந்தவள் கயல்விழி வந்த்தை கூட கவனிக்காமல் இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தாள்.

“தியா என்னாச்சு போன் எடுத்தானா? நீ வர சொன்னியாமா என்ன சொன்னான்” என்று கேட்க,

பதிலை அவள் கண்கள் தான் சொல்லியது தன் கண்ணீரின் மூலம்.

அதை கண்டு கவலையுற்றவர் “இந்த பையன் என்ன தான் நினைச்சுட்டு இருக்கான். இப்படியே விட்டா சரிவராது. ஏதோ திடீர்னு கல்யாணம் நடந்து இருக்கு விட்டு பிடிக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தா இவன் இந்த சின்ன பொண்ணை காயப்படுத்துறானே இதுக்கு முடிவு கட்டியே ஆகணும்” என்று மனதில் நினைத்தவர் தியாவை சமாதனப்படுத்தி அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு தன் கணவனை காண சென்றார்.

“ஏங்க இந்த பையன் செய்யுறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கலை” என்று கூற,

“என்னம்மா கயல் இப்படி திடீர்னு யாரை சொல்ற நான் என்னனு நினைக்குறது ம்ம்”

“வேற யாரை பற்றி சொல்ல போறேன் எல்லாம் நம்ம பையனை பத்தி தான்” என்று நடந்ததை சொல்ல,

“ஆமா கயல் காலையிலயே அந்த பொண்ணு நின்னதை பார்த்ததும் எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு”

“ஆமாங்க இப்போ கூட நான் வந்ததை கூட கவனிக்காம எங்கேயோ வெறிச்சு பார்த்துட்டு இருந்தா” என்று புலம்ப,

“நாம அட்வைஸ் பண்ணினோம்னு வை அந்த கோபத்தை கூட இந்த பொண்ணு மேல தான் காட்டுவான். கொஞ்சம் விட்டு பிடிப்போம்“

“என்ன பேசுறீங்க அப்போ அவன் இப்படி நடந்துகிறதை வேடிக்கை பார்க்கலாம்னு சொல்றிங்களா?”

“கயல் நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. இப்போ இருக்க சூழ்நிலையில சஜன் கொஞ்சம் அப்செட்டா இருக்கான் அதான் யார் மேல கோபத்தை காட்டுறதுனு தெரியாம சுத்திட்டு இருக்கான் இப்போ நாம எதாவது சொன்னோம்னு வை அதுக்கும் சேர்த்து தியாகிட்ட தான் காமிப்பான். இருக்குற கோபத்தை வெறுப்பா மாத்திடக்கூடாதுனு சொல்றேன்”

“சரி இப்போ என்ன செய்யலாம்னு சொல்றிங்க”

“கொஞ்ச நாள் ஆறப் போடலாம். தியாவும் வீட்டுலேயே அடைஞ்சு கிடக்குறதை விட காலேஜ் போகட்டும் இது அவளுக்கு கடைசி வருடம் தான இந்த கல்யாணத்தால அது தடைபட்டதா இருக்க வேண்டாம். அதுக்குள்ள சஜனும் இந்த கல்யாணத்தை ஏற்றுக்குற பக்குவத்திற்கு வந்துடுவான். கயல்விழிக்கும் அவர் சொல்வது சரி என்று தோன்றவே சம்மதமாய் தலையசைத்தார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தனுஷா இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என்று அருண் நினைக்கவே இல்லை.வரும் வழி முழுவதும் இதை யோசித்து அவனுக்கு கோபமாக வந்தது.

அந்த நேரம் பார்த்து தொலைப்பேசியில் குறுந்தகவல் வந்ததற்கான ஒலி எழும்ப அதை எடுத்து பார்த்தவன் “மிஸ் யூ” என்று அனுவிடம் இருந்து வந்த தகவலை கண்டு போனை உடைத்தெறியும் அளவிற்கு எரிச்சல் மண்டியது.

அதை டெலிட் செய்து முடிக்கவும் வாட்ஸ் அப்பிலும் தகவல் வர கடுப்பானவன் அவளின் எண்ணை பிளாக் செய்துவிட்டு பையில் வைத்தான்.

மதியம் மூன்று மணி அளவில் கோவை வந்தடைந்தவன் தனது அறைக்கு சென்று ரெஃப்ரெஷ் செய்து கொண்டு மருத்துவமனைக்கு வந்தான். அன்று ப்ராக்டிகல் மட்டும் இருந்ததால் மாணவர்களுக்கு மதியத்திற்க்கு மேல் விடுமுறை இருந்ததால் அனுவை பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை பார்க்கவும் அவன் விரும்பவில்லை.

அருண் வருகிறான் என்று அனுவிற்க்கு தெரிந்திருந்தால் நிச்சயம் அவனுக்காய் காத்திருந்திருப்பாள். அடுத்த நாள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவரின் கேஸ் ஃபைலை எடுத்து அதை ஸ்டடி செய்தவன் அதில் மூழ்கிப் போனான்.

அப்போது மொபைல் ஒலிக்க எடுத்து பார்த்தவன் தன் தந்தை என்று அறிந்தும் எடுக்காமல் இருக்க, மீண்டும் மீண்டும் அது ஒலி எழுப்பி தன் இருப்பிடத்தை காட்டிக் கொண்டிருந்தது.

ஒரு நிலைக்கு மேல் தந்தையை காக்க வைக்கும் எண்ணத்தை வெறுத்தவனாய் “ ம்ம் சொல்லுங்க” என்றான்.

அவன்து குரலிலேயே கோபம் சிறிதும் போகவில்லை என்று அறிந்தவராய் “ தனுவை விட்டுட்டு வந்துட்டேன்பா. அவகிட்ட போன் பண்ணி பேசிடு. நீ கோபமா போயிட்டியேனு வருத்தப்பட்டா” என்று வைக்க போக, “ம்ம் சரி” என்று போனை வைத்தான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கடந்த மூன்று நாட்களாய் இருந்த குழப்பத்தில் விட்டுப் போன கேஸ் கட்டுகளை எடுத்து எழுத சொல்லி அதை முடித்து பின் அன்றைய கம்ளைன்ட்ஸ் லிஸ்ட்களையும், முடிந்து போன கேஸ்களின் விவரங்களையும் தன் மேலதிகாரிக்கு ரிப்போர்ட் செய்துவிட்டு, இரவு ரோந்து பணிக்கான காவலரை நியமித்து விட்ட இளா நிமிர்ந்த போது மணி பத்தை தொட்டிருந்தது.

அப்போதுதான் பசி என்ற உணர்வை வயிறு சுட்டிக் காட்ட, “அய்யோ சின்னுகிட்ட பேசவே இல்லையே சாப்பிட்டாளோ என்னவோ” என்று நினைத்தவன் தனது பைக்கை வீடு நோக்கி செலுத்தினான்.

அடுத்த பத்தாவது நிமிடம் வீட்டை அடைந்தவன், காலிங் பெல்லை அழுத்த முயற்சிக்க அப்போது தான் கதவு லேசாக திறந்திருப்பதை கன்டு,

“மணி பத்துக்கு மேல ஆகுது கதவை கூட லாக் பண்ணாம என்ன பண்றா?””என்ற யோசனையோடு உள்ளே நுழைந்தவனின் கண்கள் தனது சின்னுவை தேட, தனுஷாவோ அங்கிருந்த சேரில் அமர்ந்து வண்ணமே தூங்கி கொண்டிருந்தாள்.

அவள் தூங்கி கொண்டிருந்த நிலை அவனுக்கு புன்னகையை வருவிக்க, “தூங்கிட்டா? சாப்பிட்டாளானு தெரியலையே எழுப்பி கேட்கலாமா” என்று நினைத்தவன் அவளை எழுப்ப அருகில் வர புருவம் சுருங்க படுத்திருந்தவளை கண்டு தூங்கும் போதும் எதையோ யோசித்துக் கொண்டிருப்பாள் போல என தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவளை எழுப்ப மனம் இல்லாமல் கிட்சனில் சென்று பார்க்க அங்கு அவள் உண்ட்தற்கான அடையாளங்கள் இருக்கவே திருப்தி உற்றவனாய் தானும் ரெஃப்ரெஷ் செய்து சாப்பிட்டு விட்டு, தூங்கி கொண்டிருந்த அவளை தன் கைகளில் ஏந்திக் கொண்டு அறைக்கு சென்றான்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கடல் காற்று பரபரவென்று வீச , மக்கள் கூட்டம் குறைந்தது காணபட்ட கடற்கரை சாலையில் தன் காரை நிறுத்திவிட்டு கண்மூடி சாய்ந்திருந்தான் சஜன்.

கொஞ்ச கொஞ்சமாய் நடந்ததை அசை போட்டவன் தன் வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்று எண்ணினான். மதியம் வீட்டிற்கு கிளம்பியவன், வினோத்திடம் ஒரு ஃபைலை ரெடி செய்ய சொல்லிவிட்டு செல்லலாம் என நினைத்து அங்கு செல்ல, அப்போது வெண்பா “ஹே சாரிலாம் வேண்டாம்டி. நானும் நேரம் காலம் தெரியாம அப்படி பேசியிருக்க கூடாது தனு”  என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த பக்கம் வந்து கொண்டிருந்த சஜன் தனு என்ற வார்த்தையில் சடன் பிரேக் போட்டு நின்றான்.

“ஹே என்னடி சொல்ற இளா சார் வீட்டுக்கு போயிட்டியா?” என்று சொல்ல, அவன் மனம் எப்படி உணர்கிறது என்று அவனுக்கே தெரியவில்லை.

அதன் பின் அங்கு நிற்காமல் நேரே தனது அறைக்கு சென்றுவிட்டான். இதோ இருக்கும் மனக் குழப்பத்திற்கு விடை தேடி இங்கு வந்துவிட்டான்.

தன்னை யாரும் தொந்திரவு செய்யா வண்ணம் தொலைபேசியை அணைத்து வைத்தவனின் மனம் மட்டும் அடங்காமல் கடல் அலையில் சிக்குண்ட ஓடமாய் தவித்தது.

அங்கிருந்த அமைதி சிறிது நேரத்திற்கு பின் நெஞ்சை குத்திக் கிழிக்க, மியூசிக் பிளேயரை ஆன் செய்தான்.

காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய்” என்ற பாடல் எஸ்.பி.பியின் காந்த குரலில் மெல்லிசைக்க கண்களை மூடி அதை உள்வாங்கினான்.

சஜனுக்காக காத்திருந்தவர்கள் அவன் வர நேரமானதும் “தியா நீ சாப்பிட்டு போய் படும்மா. அவன் வரும் போது வரட்டும். நாளைக்கு காலையில பேசிக்குறேன்” என்று சிவா சொல்ல,

கயல்விழியும்” ஆமா தியா இவ்வளவு லேட் ஆகுதுனா சாப்பிட்டு தான் வருவான் நீ வா வந்து சாப்பிட்டு போய் தூங்கு” என்றார்.

இருவரும் அவளை வற்புறுத்தி சாப்பிட சொல்லியும் மதியம் தான் வரவில்லை அட்லீஸ்ட் இரவு உணவுக்காவது வருவான் அவனுடன் உண்ணலாம் என நினைத்திருந்தாள். எல்லோரும் இருக்கும் போது அருகில் அமர்ந்து உண்டால் ஒன்னும் சொல்ல மாட்டான் என்று எண்ணி ஆசையாய் காத்திருந்தாள். ஆனால் அவன் தான் வந்த பாடாக இல்லை.

அத்தையையும் மாமாவையும் தான் சாப்பிட்டுக் கொள்வதாக கூறி போக சொல்லிவிட்டு சஜனுக்காய் வழி மேல் விழி வைத்து காத்திருந்தாள்.

கயல்விழி இன்னொருமுறை சஜனுக்கு அழைக்க இப்போது அவன் அழைப்பை எடுத்தான். “சஜன் எங்கடா இருக்க? வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு நேரம்” என்று கேட்க “கொஞ்சம் வேலை அதான்” என்றான்.

“என்ன வேலைனு எனக்கு தெரியும் வீட்டுக்கு வா தியா உனக்காக சாப்பிடாம காத்திட்டு இருக்கா? மதியம் கூட சரியா சாப்பிடலை சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேரு” என்று வைத்து விட்டார்.வெகு நேரம் காத்திருக்க வைத்துவிட்டு பதினோரு மணிக்கு வீடு வந்து சேர்ந்தான் சஜன்.

உள்ளே வந்தவன் வாசலில் நின்றிருந்த தியாவை கண்டு புருவம் சுருக்கியவன் பின் தன் தோள்களை குலுக்கி கொண்டு அவளை கடந்து சென்றான்.

அவன் தன்னை கண்டு கொள்ளாமல் செல்வதை கண்டு முகம் வாடியவள் பின் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டு,”ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க சேர்ந்து சாப்பிடலாம்” என்று தைரியமாக சொல்லி விட்டாள்.

இந்த தைரியம் எல்லாம் காலையில் கயல்விழியின் உபதேசத்தால் கிடைத்த ஒன்று. “இங்க பாரு தியா நீ இப்படியே அவன் என்ன சொன்னாலும் அமைதியா கண் கலங்கிட்டு இருந்தனு வை அப்புறம் அவன் ரொம்ப ஆடுவான். கொஞ்ச கொஞ்சமாய் நீ தான் அவனை சரிகட்ட பழகிக்கணும்” என்றதன் விளைவு தான் இது.

அவள் கூறியதும் திரும்பி நின்றவன் “நான் சப்பிட்டாச்சு. சாப்பிடாதவங்க சாப்பிடட்டும் யாரும் இனி எனக்காக காத்திருக்க தேவையில்லை” என்றுவிட்டு அறைக்கு சென்றுவிட,

“நான் யாரோவா?” என்று வருந்தியவள் சாப்பிடாமல் அவளும் அவன் பின்னால் அறைக்கு சென்று விட்டாள்.

அறையில் இருந்த ஷோபாவில் படுப்பதற்கு ஆயத்தமானவளிடம் “ஹே இப்போ நீ எதை நிருபிக்க இப்படி பண்ற” என்று கேட்க,

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் “என்ன சொல்றிங்க எனக்கு புரியலை” என்று சொல்ல,

“சாப்பிடாம வந்து படுத்து எதை நிருபிக்க ட்ரை பண்ற” என்று கேட்க,

“எனக்கு பசிக்கலை” என்று மீண்டும் படுக்க ஷோபாவை நோக்கி நகர முற்பட அவளின் கையை பிடித்து இழுத்தவன்,

“ஏற்கனவே என்ன பாவம் செஞ்சேனோ என் வாழ்க்கை இப்படி அந்தரத்துல தொங்குது இதுல உன்னை சாப்பிடவிடாம அந்த பாவத்தையும் தலையில சுமக்கணுமா? வா” என்று இழுத்துக் கொண்டு கீழே வந்தவன்,

“சாப்பிட்டு தொலை” என்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.கோபத்தில் சொன்னாலும் அவன் கூறியது அவளுக்கு சந்தோஷமாகவே இருக்க, சாப்பிட்டு முடிக்க, தியாவின் வயிறும் மனமும் நிறைந்து இருந்தது.  

செனோரீட்டா வருவாள்.

Advertisement