Advertisement

சுரங்கம் 4
முதல் நாளே பேண்ட் நண்பர்கள் அனைவரும் தொலைபேசி எண்களை பரிமாறி இருக்க இப்போது ஆறு பேரும் ஒரு பார்க்கில் அமர்ந்திருந்தனர் இதற்கு நடுவில் பெண்கள் வீட்டில் விசாரணை தொடங்கி பாதி அளவு வந்திருந்தது அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு பேர் வந்து இவர்களிடம் பேசிய பின்பே விட்டு சென்றிருந்தனர்
லியான் “இன்னும் ரெண்டு வாரம்  நமக்கு டைம் இருக்கு இத காம்படிஷனா எடுக்க வேண்டாம் இந்த ரவுண்ட்ட சும்மா ஜாலிக்காக எடுத்துக்கோங்க உங்களோட ஒப்பினியன் சொல்லுங்க”
சரண் “எல்லாரும் என்ஜாய் பண்ற மாதிரி தானே இப்ப புதுசா ட்ரண்ட்ல இருக்கே நம்ம தளபதியோட லிட்டில் ஸ்டோரி பாடலாம் எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கும்” என்று கூறி அனைவரையும் பார்க்க யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வில்லை
லியான் “பாட்டு ஓகே பட் நமக்கு பிராக்டிஸ் பண்றதுக்கு பிளேஸ் வேணுமே எப்படியும் இந்த காம்படிஷன் ரெண்டு வருஷம் போகும்னு சொல்றாங்க அதுக்கு ஏத்த மாதிரி நம்ம ஒரு பிளேஸ் அலார்ட் பண்ணனும்”
கிஷோர் “ப்ரோ எங்க அப்பா ஜிம் வச்சிருக்காரு நாங்க எப்பவும் அங்கதான் பிராக்டிஸ் பண்ணுவோம் நமக்கு வேணும்னா தனி ரூம் கூட எடுத்துக்கலாம் சில திங்க்ஸ் எல்லாம் போட்டு வைக்கிற மாதிரி இருக்கும் நான் அரேஞ்ச் பண்ணுறேன்”
லியான் ” ஜிம் எங்கே இருக்கு ஏன்ன சிஸ்டர்ஸூக்கு வர முடியனும் இல்ல”
கிஷோர் “ரொம்ப தூரம் இல்ல இங்கிருந்து நேரா போனா ஒரு இடத்தில பெட்ரோல் பங்கு வரும்ல அங்கிருந்து லெப்ட் கட் பண்ணனும் கொஞ்சம் தூரத்துல ரைட்ல இருக்கும்” என்று கூற அனைவரும் சாருவையும் மதியையும் பார்த்தனர்
மதி “எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எங்கே இருந்தாலும் எங்களைத் தனியே அனுப்ப மாட்டாங்க யாராவது வந்து விட்டுட்டு அவங்களே கூட்டிட்டு போவாங்க சோ ப்ராப்லம் இல்லை”
மாணிக் “அப்புறம் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துட்டீங்களே நம்ம பேண்டுக்கு சூப்பர் நேம் ஒன்னு வைக்கணும்”
சாரு “அட ஆமால்ல இது யோசிக்கவே இல்லை”
மாணிக் “அப்ப இப்போ யோசிங்க சிஸ் “
சிறிது நேரம் யோசித்தவர்கள் பூக்களின் பெயரையும் பழங்களின் பெயரையும் மாறி மாறி கூறிக் கொண்டிருந்தனர்
லியான் “இப்போ உங்களுக்கு எல்லாம் பசிக்குதா என்ன?”
கிஷோர் “ஏன் ப்ரோ இப்படி கேக்கறீங்க”
மதி “பின்ன எப்படி கேட்பாங்க நீ ஸ்டார்டிங் லேந்து பழத்தோடு நேமாதான் சொல்லிக்கிட்டு இருக்க”
கிஷோர் “அங்க மட்டும் என்ன ரோஜா மல்லிகைனு பூ பேரு தான் வருது”
சாரு “இசை சுரங்கம் எப்படி இருக்கு”
சரண் “ஆமா போய் குழி தோண்டுங்க இசை தான வரும் அப்படி தானே”
மதி “மியூசிக் மைன்”
சரண் “இந்த பேரு ரொம்ப நல்லா இருக்கு” என்று கூற மதியம் லியானும் சிரிக்க ஆரம்பித்தனர் சாரு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்
கிஷோர் “என்ன ஆச்சு ப்ரோ ஏன் சிரிக்கிறீங்க”
லியான் “நீங்க காலேஜ்ல அப்படி என்னதாண்டா படிக்கிறீங்க மாணிக் உனக்கும் புரியலியா”
அவ்வளவு நேரம் மொபைலை பார்த்துக்கொண்டிருந்த மாணிக் தன் பெயரைக் கூறி அழைக்கவும் நிமிர்ந்து முழித்தான்
சரண் “மதி சிஸ் ஒரு பேண்ட் நேம் சொன்னாங்க நல்லா இருக்குன்னு சொன்னேன் அதுக்கு சிரிக்கிறாங்க”
மாணிக் “அப்படி என்ன நேம் சொன்னிங்க சிஸ்”
மதி “மியூசிக் மைன்”
மாணிக் “நல்லாதானே இருக்கு இதுக்கு எதுக்கு சிரிக்கணும் நீ என்கிட்ட ஏதோ சொல்ல மிஸ் பண்ணற மாதிரி இருக்கு”
கிஷோர் “முதல்ல சாரு சிஸ் நேம் சொன்னாங்க அத இவன் கிண்டல் பண்ணா அப்புறம் மதி சிஸ் சொன்னாங்க அது நல்லா இருக்குன்னு சொன்னதும் சிரிக்கிறாங்க”
மாணிக் “சாரு சிஸ் என்ன நேம் சொன்னாங்க”
சரண் “இசை சுரங்கம்னு சொன்னாங்க ஆன இவங்க சிரிக்கிறதுக்கும்  அதுக்கும் என்ன சம்மந்தம்”
மாணிக் ” மர மண்டைகளா இவங்க தமிழ்ல சொன்னத அவங்க இங்கிலீஷ்ல சொல்லிருக்காங்க அவ்வளவுதான் வித்தியாசம் இது கூட புரிஞ்சுக்காம உங்களையெல்லாம் என்னடா பண்றது”
சரண் அசடு வழிந்து கொண்டே “உனக்கு தான் தெரியும்ல நாம இங்கிலீஷ் சைடு ரொம்ப வீக்னு என்ன கேட்கிறத விட்டுட்டு அந்தப்பக்கம் கேளு “
அந்தப் பக்கம் பார்க்க கிஷோர் ஒரு மாதிரியாக முழித்துக் கொண்டிருந்தான் மாணிக் கேள்வி கேட்க ஆரம்பித்ததும் அழனுக்கு ஓரளவுக்கு புரிந்தது
“நாம இங்கிலீஷ்ல அந்தப்பக்கமும் கிடையாது இந்த பக்கமும் கிடையாது அவ்வளவுதான்” என்று கூற அனைவரும் சிரித்தனர்
லியான் “ஓகே அப்ப நம்ம ஃபர்ஸ்ட் பாடுற  பாட்டு முடிவு ஆயிடுச்சு நாம ப்ராக்டிஸ் பண்ண போற இடமும் முடிவு ஆயிடுச்சு அதோட நம்ம பேண்ட் நேம் மும் முடிவு ஆயிடுச்சு சரிதானே ” என்று கேட்க அனைவரும் இரு கைகளையும் உயர்த்தி காட்டினார்
மதி ” ப்ராக்டிஸ் பண்ற இடம் எல்லாம் ஓகே அங்க எல்லா இன்ஸ்ட்ருமென்ட்ஸூம் இருக்குமா”
லியான் “அவங்க பொதுவா அங்கதானே  ப்ராக்டிஸ் பண்றதா சொன்னாங்க சோ இன்ஸ்ட்ருமென்ட்ஸ் இருக்கும்ல”
கிஷோர் “இதுக்குதான் சிஸ் கொஞ்சம் அறிவு வேணும்கறது எப்படி ப்ரோ கண்டுபிடிச்சாங்க பார்த்தீர்களா “
மதி  “நாங்க வாசிக்கிற வயலின் புல்லாங்குழல் கூட இருக்கா”
மாணிக் “அங்க பியானோ கிடார் டிரம்ஸ் இதெல்லாம் இருந்தது வேற எல்லாம் இருக்கா இல்லையான்னு தெரியலையே”
கிஷோர் “நான் மியூசிக் கத்துக்க ஆசைபட்டதும் என்னோட அண்ணா அது சம்பந்தமான இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறைய வாங்கி கொடுத்தாங்க நாங்க எங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கிட்டு மத்ததெல்லாம் அப்படியே போட்டுட்டோம் அதுல இருக்குமா இல்லையானு தெரியல பார்த்தாதான் தெரியும்”
சாரு “மதி நாளைக்கு வரும்போது நம்மளோடத கொண்டு வரலாம் இவங்க சொல்றத பார்த்தா நம்ம யூஸ் பண்றது இருந்தாலும் அத ரொம்ப நாளா யூஸ் பண்ணாம போட்டுருப்பாங்க அதனால சரியா வராது” என்று கூற மதியும் அவளது பேச்சை ஆமோதித்தாள்
இவர்கள் அடுத்த நாள் மாலை கிஷோரின் தந்தை ஜிம்மிற்கு செல்ல அங்கு அவன் சொன்ன மாதிரி மியூஸிக் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் அனைத்து இருந்தது ஆனால் இவர்கள் உபயோகப்படுத்துவதை தவிர அனைத்தும் தூசி படிந்து இருந்தது
சாரு “இங்கு வேலை பாக்குறவங்க யாரும் இல்லையா இவ்ளோ பெரிய ஜிம் வச்சிருக்கீங்களே வேலை பார்க்க ஒரு ஆள் கூடவா இல்லை இது எல்லாத்தையும் கிளீன் பண்ண சொல்ல மாட்டீங்களா மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் எல்லாம் இப்படியா போட்டு வைக்கிறது ” என்று அவனுக்கு மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் பற்றி கிளாஸ் எடுக்க ஆரம்பித்தாள்
அவர்கள் மாலை நேரங்களில் மட்டும் ப்ராக்டிஸ் செய்ய இரண்டு வாரங்கள் மிகவும் நன்றாகவே கழிந்தது அவர்களுக்குள்ளும் ஒரு மெல்லிய நட்பு அழகாய் மலர்ந்தது சாரு மதி வீட்டில் உள்ளவர்களும் இவர்களை பற்றி முடிந்த அளவு அறிந்து கொண்டனர்
இருபது பேண்ட்களும் அந்த ஆடியோ ஆடிட்டோரியத்தில் நுழைய தாங்கள் முதல் முதலாய் வந்த ஆடிட்டோரியமா இது என்று வியக்கும் வண்ணம் இருந்தது அத்தனை பிரமாண்டமாய்
நியூ பேண்ட் காம்பெடிஷனின் தொடக்க விழாவை லைவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதால் தொடக்க விழாவிற்கு மூன்று மணிநேரம் ஒதுக்கியிருந்தனர் டிவி சேனல்
லியானின் பேண்ட்டிற்க்கு பன்னிரண்டாவது  இடம் கிடைத்தது அதனால் அவர்கள் அமைதியாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அறையில் சென்று அமர்ந்து கொண்டனர்
சாரு நொறுக்குத் தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இரந்தாள்
சரண் “இப்படியை சாப்பிட்டு இருந்தா தொண்டையில் சிக்கி ஏதாவது ஆகப்போகுது”
மதி “அவ அப்படி தான் டென்ஷனா இருந்தாலும் கோபமா இருந்தாலும் அதிகமாக சாப்பிட்டு வா’
சரண் “இப்ப கோபமா இருக்காங்களா இல்ல டென்ஷனா இருக்காங்களா”
மதி “இப்போ டென்ஷனா தான் இருக்கா நீ இப்படியே பேசிட்டு இருந்தா கொஞ்ச நேரத்தில் கோபமோடுக்கு மாறிவிடுவா” என்று கூற அவன் கப்சிப் ஆனான்
தொடக்க விழாவிற்காக இசை அறிவு உள்ளவர்கள் பலரை அழைத்து இருந்தனர் அவர்கள் முன்பு ஒவ்வொரு பேண்ட்டாக பர்வாமன்ஸ் கொடுத்து அவர்களின் பாராட்டுகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொண்டு தங்களின் பேண்ட் நேமை அனைவருக்கும் அறிவித்து விட்டு சென்றனர்
ஏனென்றால் இந்த முறை மட்டும் தான் நம்பர் பிரகாரம் பர்வாம் செய்கிறார்கள் அடுத்த முறையிலிருந்து பெஸ்ட் பர்வாமன்ஸ் பேண்ட் முதலில் பர்வாம் செய்ய அதன் வரிசையில் அனைத்து பேண்ட்களும் செய்வதாக ஏற்பாடு
இவர்கள் இங்கே ஒருவரையொருவர் வாரிக் கொண்டும் தங்களது டென்ஷனை குறைத்துக் கொண்டும் அமர்ந்திருக்க அவர்களது நேரமும் வந்தது ஆறு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு மேடை நோக்கி சென்றனர்
மாணிக்கும் லியானும் கையில் கிட்டாரோடு மைக் அருகே இருந்த பெரிய ஸ்டுலில் ஒரு காலை கீழே ஊன்றியவாறு அமர்ந்துகொண்டனர் சரணும் மதியும் அவர்களின் வலப்பக்கம் உள்ள இருக்கைகளில் அமர சாருவும் கிஷோரும் இடப்பக்கம் அமர்ந்தனர் அவர்களது இன்ஸ்றுமெண்ட்ஸூக்கு ஏற்றவாறு சீட்டுகளை அட்ஜஸ்ட் செய்து கொண்டனர்
அனைவரும் அவர்களிடத்தில் தயாரானதும் மாணிக்கும் லியானும் ஒரே நேரத்தில் கிட்டாரை வாசிக்கத் தொடங்க அதனைத் தொடர்ந்து அனைவரும் தங்களது இன்ஸ்றுமெண்ட்ஸை இசைத்தனர் அவர்கள் இசையை அடுத்து வரப்போகும் பாடலை காட்டிக் கொடுத்திருக்க அனைவரும் எழுந்து ஆரவாரம் செய்தனர்
Let Me Sing A Kutty Story
Pay Attention Listen To Me
If You Want Take It Or Else
Venam Tension Leave It Baby
Life Is Very Short Nanba
Always Be Happy
Palavidha Problems Will Come And go
Konjam Chill Pannu Maapi
Together Man
Let Me Sing A Kutti Story
Pay Attention Listen To Me
If You Want Take It Or Else
Venam Tension Leave It Baby
Life Is Very Short Nanba
Always Be Happy
Design Designa  Problems Will Come And go
Konjam Chill Pannu Maapi
No Tension Baby
Speeda Pona Gavaman Mustu
Slow va Pona  Steadyum Mustu
Anger Always Misery Baby
Friendsa Ninna Powerful Maapi
Hater Are Gonna Hate Ignore Calmly
Negativity Ella Thalli  Vai Baby
Focus On What you
Dream And Don’t Worry Maappi
Positivity Unna Lift Pannum Baby
Life Is Very Short Nanba
Always Be Happy
இந்தியாவில் எங்கு இருந்தாலும் தளபதிக்கு ஃபேன்ஸ் அதிகம் தான் போலும் அவர்கள் பாடி முடிக்கும் வரைக்கும் ஆரவாரம் குறையவில்லை
அவர்கள் பாடி முடிக்கவும் அசோக் அவர்கள்  அருகே வந்தான் அவன்தான் தொடக்க விழாவை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தான் “சூப்பரா பண்ணீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணதுலயே உங்களுக்கு தெருஞ்சிருக்கும் நீங்க வின் பண்றதுக்கு என்னோட வாழ்த்துக்கள் உங்க பேண்ட் நேம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா” என்று கேட்க ஆறு பேரும் ஒரே போல் இரண்டு கைகளையும் மேலே தூக்கி மியூசிக் மைன் என்று கூறினர்
அசோக் “மியூசிக் மைன் ரொம்ப நல்லா இருக்கு இதுக்கு அர்த்தம் மியூசிக் என்னுடையது கரெக்டா சொல்லிட்டேனா”
மாணிக் “நீங்க சொன்னது கரெக்ட் தான் சார் ஆனா நாங்க யோசிச்சது இசை சுரங்கம் “
அசோக் “இது தாம்பா சரி இல்ல ஒரு இங்கிலீஷ் வார்த்தைக்கு தமிழ்ல பத்து அர்த்தம் சொல்லுவாங்க நமக்கும் மண்டைல வைச்சிருக்க முடியாது பட் இசை சுரங்கம் ரொம்ப நல்லா இருக்கு ஒன்ஸ் அகேன் நீங்க வின் பண்றதுக்கு என்னோட வாழ்த்துக்கள் “
அதற்க்கு அடுத்து வரும் பர்வாமன்ஸ்ஸை  ஆடிட்டோரியத்தின் கீழே அமர்ந்து பார்த்து கொண்டிருந்தனர் சிறிது நேரத்தில் கீழே அமர்ந்திருந்த சரணின் முகம் சுருங்கியது
மாணிக் “என்ன ஆச்சு உன் முகம் இப்படி சுருங்குது”
சரண் “எல்லாரயும் எவ்வளவு பாராட்டுறாங்க நம்மகிட்ட இப்படி எல்லாம் சொல்லலியே”
கிஷோர் “நாம நல்லா பண்ணி இருந்தா நமக்கும் சொல்லி இருப்பாங்க”
சரண் “அப்போ நாம நல்லா பண்ணலையா”
மாணிக் “ஏன்டா டேய் என்ன பேச்சு இது ஸ்பிரிங் மியூசிக் இப்ப பண்ணும் போது ஏதோ ஃபைனல் ரவுண்ல பர்வாம் பண்ற மாதிரிதான் பண்ணாங்க”
சரண் “நாம ஏன் அப்படி பண்ணல”
மதி “ஏன்ன இது ஃபைனல் இல்லையே”
சரண் “இல்ல நாம வேற ஏதாவது சாங் சூஸ் பண்ணி இருக்கலாம் நான் வாயை மூடிட்டு இருந்திருக்கணும்”
சாரு “இப்ப என்ன தாண்டா ஆச்சு உனக்கு வாங்க ரூமுக்கு போலாம் இங்க இருந்தா இப்படித்தான் புலம்பிகிட்டு இருப்பான் ” என்று கூற அனைவரும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றனர் ஆடிட்டோரிய ஸ்டேஜின் பின்புறம் தான் அறைகள் அமைக்கப்பட்டிருந்தது
தொடக்க விழா முடியும் தருவாயில் அனைத்து பேண்ட்களையும் ஸ்டேஜுக்கு அழைக்க இவர்களும் அறையிலிருந்து சென்றனர்
அசோக் “ஏன் எல்லாரும் வரிசையா நிக்குறீங்க இங்க என்ன போட்டோவா எடுக்க போறாங்க ஸ்டேஜ் பத்தாது டா” என்று மைக்கில் அலறிக் கொண்டிருந்தான் அனைவருமே அவளது அலறலை கேட்டு சிரித்தனர்
“ஓகே இங்க வந்து இருக்கவங்க எல்லாருக்கும் ஒரு சோகமான செய்தி சொல்லப் போறேன் இந்த காம்பெடிஷன நான் கோஸ்ட் பண்ண போறது இல்லை ” என்று கூற அனைவரும் கைகளை தட்டினர்
“டேய் இப்ப நீங்க பீல் பண்ணனும் டா எல்லாம் என் தலையெழுத்து சரி இப்ப நான் யாரு கோஸ்ட் பண்ண போறாங்கன்னு சொல்ல போறேன் அவங்கள உங்க எல்லாருக்குமே தெரியும் ஆனால் ஆங்கரிங் மூலமா இல்லை இதுதான் அங்களோட ஃபர்ஸ்ட் ப்ரோக்ராம் வெல்கம் மிஸ் நேகா” என்று சத்தமாக சொல்லி கையை ஸ்டேஜுக்கு நடுவில் காட்ட அது இரண்டாக பிரிந்து எப்போதும் போல் முழங்காலுக்கு மேலேயே ஆடை முடிய அழகு தேவதையாய் ஒயிலாய் நடந்து வந்தாள்
நேகா “ஹாய் எல்லாரும் விளம்பரம் பார்த்தப்பவே கொஞ்சம் கெஸ் பண்ணி இருப்பீங்கன்னு நினைக்கிறேன் நான் இங்க இதுக்காகத்தான் வரப்போறதா இங்க போட்டிக்கு வந்து இருக்கவங்க எல்லாம் எவ்வளவு எக்ஸைட்மெண்ட்டா இருக்காங்கண்ணு எனக்கு தெரியாது ஆனா நான் ரொம்ப ரொம்ப எக்ஸைட்மெண்டா இருக்கேன் அதுக்கு ஒரு முக்கியமான காரணம் எனக்கு எந்த இன்ஸ்றுமெண்ட்ஸூம் வாசிக்கத் தெரியாது ஆனால் வாசிக்கிறத கேட்க ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுக்காகவே தான் நான் இங்க முக்யமா வந்திருக்கேன்”
“ஓகே கய்ஸ் இன்னும் அடுத்த ஒரு மாசத்துல”
அசோக் “ஹலோ ஹலோ அடுத்த மாசம்தான் நீங்க ஆங்கரிங் பண்ணனும் இப்ப நானு”
நேகா “ஓகே பாஸ் யூ கேரி ஆன்”
அசோக் “இன்னும் ஒரு மாசத்துல இருபது புது பேண்ட் அப்புறம் உங்க நேஹாவ சந்திக்கலாம் அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ஃபர்ஸ்ட் ரவுண்டிலேயே எலிமினேஷன் இருக்கும் அதில் யார் எலிமினேட் ஆகப்போகிறதுனு முடிவு பண்ண பொறது மக்கள் நீங்கதான் ஓகே காய்ஸ் உங்களுக்கு இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கு பாய் பாய் டாட்டா”
 

Advertisement