Advertisement

சுரங்கம் 9
நேஹா தன் தந்தையிடம் லீயின் வீட்டில் தங்கிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தாள்
“அப்படின்னா நீ லியான் கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்ட அப்படித்தானே”
“ப்ரொபோஸ் பண்ணல ஆனா அவன எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லிட்டேன்”
“சரிதான் ஆமா அவன் வீட்ல உள்ளவங்க எல்லாம் எப்படி இருந்தாங்க “
“ஆன்ட்டியும் சிஸ்ஸூம் நல்லா பேசினாங்க அங்கிள் அந்தளவுக்கு பேசல ஆ அப்புறம் டாடி என்னோட டிசைனர் கிட்ட இன்னைக்கு வீட்டுக்கு  டிரஸ் எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன்”
“ஷூட் ஏதாச்சும் சைன் பண்ணி இருக்கியாடா”
“இல்ல டாடி நான் கொஞ்சம் சுடிஸ் எடுக்கலாம்னு நினைக்கிறேன் “
“என்ன பேபி திடீர்ன்னு”
“டாடி லீ தான் அவன் சிஸ்க்கு டிரஸ் எடுத்து கொடுப்பானா அவங்க வீட்டில் பார்த்தேன் அவன் நிறைய சுடிதார் தான் எடுத்துக் கொடுத்து இருக்கான் அவனுக்கு அந்த மாதிரி டிரஸ் தான் பிடிக்கும்னு நினைக்கிறேன் அது தான் நானும் அதே மாதிரி டிரஸ் எடுக்க போறேன் நீளமா”
“ஓஹோ அப்ப நீ நீளமா டிரஸ் போட்டாதான் லியான்க்கு பிடிக்குமா”
“அப்படி இல்லை டாடி இதுவரைக்கும் லீயோட கண்ணு என் முகத்த விட்டு கீழே போனதே இல்லை அவனுக்கு இந்த மாதிரி ட்ரஸ் அந்தளவுக்கு கம்பர்டபிளா இல்லைன்னு நினைக்கிறேன்”
“டிரஸ் போடுறது நீ ஆனா அவனுக்கு கம்பர்டபிளா இல்லையா”
“டாடி” என்று தன் தந்தையை அதட்டிவள் “எனக்கு சுடி பத்தி எல்லாம் அந்தளவுக்கு தெரியாது அதனால தான் என்னோட டிசைனர வர சொல்லி இருக்கேன் நான் இன்னைக்கு ரொம்ப பிசி டிரஸ் செலசன் முடிச்சதும் நான் என்னோடு லீ கிட்ட போயிடுவேன் ஓகே”
“அவன் கிட்ட போனதும் டாடியை மறந்துடாத பேபி”
“டாடி என்ன பேச்சு இது உங்களை நான் எப்படி மறப்பேன்”
“சரி பேபி நீ பாரு எனக்கு ஆபீசுக்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன்” என்று கூறி விடைபெற்று சென்றார்.
சுடியில் உள்ள பல வகை மாடல்களை அள்ளிக்கொண்டு அவளது டிசைனர் வர இரண்டு மணி நேரம் செலவிற்கு பின் இரண்டு மூன்று சுடிதார்களை அவளுக்கென தேர்ந்தெடுத்து கொடுத்தார் அவளது டிசைனர் வந்தவர்கள் அனைவரும் சென்றபின் அலைபேசி மூலம் லீயை அழைத்தாள்
“ஹாய் லீ எங்க இருக்க பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கியா”
“இல்ல இன்னைக்கு எனக்கு ஒரு இம்போர்ட்டண்ட் ஒர்க் இருக்கு அதுக்காக வெளிய வந்து இருக்கேன்”
“அப்ப இன்னிக்கு பார்க்க முடியாதா”என்று அவள் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்க
“எல்லாரும் பிராக்டிஸ் ரூம்ல தான் இருக்காங்க நீ அங்க போ நான் இந்த வேலை முடிஞ்சதும் வந்துருவேன்”
“ஓகே நீ சீக்கிரமா வந்துடு நான் உனக்காக வெயிட் பண்ணுவேன் பாய்”
“வெயிட் பண்ணு திடீர்னு எங்க காணாம போயிட்டேனு  கேட்டா என்ன சொல்லுவ”
“நீதான் என்ன துரத்திட்டேனு சொல்லுவேன்” என்று கூறி அழைப்பை துண்டித்தான் அவன் முகத்தில் புன்னகை பூத்தது
அவள் அழைக்கும் போது அவன் அவனது அலுவலகத்திற்கு வெளியே தான் நின்றுகொண்டிருந்தான் அன்று கபூரை பார்ப்பதற்காக வந்திருந்தான் அவள் அழைப்பை துண்டித்ததும் அவளால் தொற்று கொண்ட புன்னகையுடன் அலுவலகத்துக்குள் நுழைந்து தன் நண்பனை பார்த்து விட்டு கபூரின் அரை நோக்கி சென்றான்
“மே ஐ கமின் சார்”
“யா கமின்”
“குட் மார்னிங் சார்” என்று கூறி அவர் முன் வந்து அமர்ந்த அவனை பார்த்ததும் அவர் முகம் யோசனையை காட்டியது
“குட்மார்னிங் மேன் பிராக்டிஸ் எல்லாம் எப்படி போகுது”
“நல்லா போகுது சார்”
“ஏதாவது வேலை வந்துருச்சா என்ன ப்ராக்டீஸ் பண்ணாம இந்த நேரத்துல இங்க”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அதான்”
“என்ன விஷயமா”
“நேஹாவ பத்தி”
“ம்”
ஒரு நொடி ஆழ்ந்து மூச்செடுத்துக் கொண்டவன்”நான் நேஹாவ ரொம்ப விரும்புறேன் சார் எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறீங்களா உங்க அளவுக்கு என்னால நல்லா பாத்துக்க முடியுமான்னு தெரியாது ஆனா நிச்சயமா நான் உங்க பொண்ண சந்தோஷமா பார்த்துப்பேன் அவளோட கரியர்க்கு தடையா நான் எப்பவும் இருக்கமாட்டேன் துணையா தான் இருப்பேன்”
 
சிறிது நேரம் அவனை உற்றுப் பார்த்த அவரின் கண்களில் மெதுமெதுவாக புன்னகை குடிகொண்டது “இப்பதான் நிம்மதியா இருக்கு லியான்”
“சார்” உண்மையிலேயே மிகவும் ஆச்சரியப்பட்டு தான் போனான்
“என் பொண்ணோட பேச்சிலிருந்தே அவ உன்ன விரும்புறானு நான் தெரிஞ்சுகிட்டேன் அதே அளவுக்கு விருப்பம் உன்கிட்ட இருக்கும்னு நினைச்சேன் நேஹாவோட அம்மாவுக்கும் எனக்கும் அரேஞ்ச் மேரேஜ் தான் ஆனா நாங்க வாழ்ந்தது ஒரு அழகான காதல் வாழ்க்கைதான் அதே மாதிரி வாழ்க்கை தான் என் மகளுக்கும் கிடைக்கணும் நினைச்சேன் அது அவளோட கரியரையும் பாதிக்கக்கூடாது அதான் நான் உன்கிட்ட பேசினேன் ஆனா கொஞ்ச நாளுக்கு அப்புறம்  நீ யாரையோ லவ் பண்ணிறதா சொல்லி ரொம்ப அழுதா எனக்கு எதுவுமே புரியல நான் உன்ன பத்தி விசாரித்த வரைக்கும் அந்த மாதிரி எதுவுமே இல்ல ஒருவேளை நான் மிஸ் பண்ணிட்டேனோனு நினைச்சேன்”
“நேத்து  வந்து நீ யாரையும் லவ் பண்ணலைன்னு சொன்னா அப்பதான் எனக்கு ஏதோ புரியற மாதிரி இருந்துச்சு நானே என்னோட பொண்ணு அழ காரணம் ஆய்ட்டேன் இல்ல”
“அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார் அந்த மாதிரி ஒரு விஷயம் நடக்கலைன்னா எனக்குள்ளே இருக்கது காதல தான்னு நான் புரிஞ்சுக்காமலே இருந்திருப்பேன்”
“அப்றம்  நான் இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லனும் “
“சொல்லுங்க சார்”
“எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ண தான் நான் சம்பாதுச்சது எல்லாமே அவளுக்கு தான் இத உன்ன சோதிப்பதற்காக சொல்றேனு நினைக்காதே இதெல்லாமே அவளும் பார்த்துப்பா ஆனால் அவளுக்கு ஒரு உதவியும் தேவைப்படும்”
“நம் முன்னாடி உங்க கிட்ட சொன்னது தான் சார் அவளோட கரியர்ல நான் துனையா தான் இருப்பேன் அது எதுவா இருந்தாலும் சரி”
“அப்புறம் இன்னொரு விஷயம் உனக்கு விருப்பம் இருந்தா என்னை நீ டாடினே கூப்பிடு”
“டாடி வேண்டாம் அப்பான்னு கூப்பிடவா”
“உனக்கு எப்டி பிடிக்குதோ அப்டி கூப்டு”
“சரிப்பா நான் போயிட்டு வரேன் உங்களோட பொண்ணு எனக்காக காத்துகிட்டு இருப்பா”
“இன்னிக்கு அவ கிட்ட சொல்ல போறியா”
“இல்ல இந்த காம்படிஷன்ல வின் பண்ணிட்டு சொல்றேன்”
“வின் பண்றதுக்கு என்னோட வாழ்த்துக்கள் லியான்”
“தேங்க்ஸ் பா “என்று கூறி விடைபெற்று சென்றான் ஏனோ அவரிடம் நேரில் கூற வேண்டும் என்று தோன்றியதால் வந்து விட்டான் தான் ஆனால் அவர் இப்படி பட் என்று சம்மதம் சொல்லுவார் என நினைக்கவில்லை அது அவனுக்கு அதிர்ச்சியையும் சந்தோஷத்தையும் ஒருங்கே அளித்தது
அங்கு பிராக்டிஸ் ரூமில் நேஹா முழித்துக் கொண்டிருக்க மியூசிக் மைன் அவளை கேள்விகளால் அடித்துக் கொண்டு இருந்தது ஆனால் ஒரு கேள்விக்கும் அவள் வாயைத் திறக்கவே இல்லை
சாரு “கேட்டுக்கிட்டே இருக்கோம் நீ பிடிச்சு வச்ச பிள்ளையாராட்டம்  நிக்குற”
நேஹா “சாரி”
கிஷோர் “திடீர்னு எங்க காணாம போயிட்ட அத முதலில் சொல்லு”
நேஹா “சாரி”
மது “உன்ன இப்ப சாரி சொல்ல சொல்லல்ல ஆன்சர் கேட்கிறோம் எதுக்காக ஒரு கால் கூட அட்டென்ட் பண்ணல நீ எங்களோட நம்பரையும் பிளாக் பண்ணி வச்சிருக்க அப்டி தானே ஆனா ஏன்”
நேஹா “சாரி”
சரண்” இப்ப நீ சாரி கேட்கிறது நிறுத்தப் போறியா இல்லையா” என்று கேட்க அவள் தலை குனிந்து நின்றாள்
மாணிக் “பிரண்ட்ஸ் கூல் பர்சனல் பிராப்ளம்ஸ் ஏதாவது இருந்திருக்கும்”
சாரு “பிரெண்ட்ஸ் கூட ஷேர் பண்ண முடியாத அளவுக்கு பர்சனல் இருக்குமா என்ன”
கிஷோர் “பிரெண்ட்ஸ் கிட்ட கூட சேர் பண்ண முடியாத பர்சனல் பிராப்ளம்னா அது கண்டிப்பா லவ் தான் ரைட்டா” என்று நேஹாவை பார்து கேட்க அவள் மேலும் கீழுமாய் தலையாட்டினாள்
சாரு “லவ்னா பிரெண்ட்ஸ் கிட்ட தானே முதல்ல சொல்லுவாங்க”
கிஷோர் “நாங்களும் முன்னாடி அப்படித்தான் நினைச்சோம் பட் அந்த மாதிரி இல்லைன்னு மாணிக் புரிய வச்சிட்டான் அவன் லவ் பண்ணதே மூனு வருஷம் கழிச்சு தான் எங்களுக்கு சொன்னான்”
சரண் “அத விடுடா லவ் ஒகே ஆய்டுச்சா”
நேஹா ” ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் ஓகே ஆய்டும் ஆனதும் சொல்றேன்”
கிஷோர் “உன்ன வெயிட் பண்ண வைக்கவும் ஒரு ஆளா அம்மாடியோ அவனுக்கு கண்ணல்லேனு நினைக்கிறேன்”
நேஹா “ஓய் என்னோட லவ்வர ஏதாச்சு சொன்ன உனக்கு கண்ணில்லாமல் பண்ணிடுவேன்”
மதி “செம லவ் போல”
நேஹா “லவ் னா சும்மாவா”
சரண் “யாரு அந்த லக்கி பாய்”
அத்தனை நேரம் அமைதியாய் இருந்த மாணிக் “ப்ரோ” என்று கூற அனைவரும் அவனைப் பார்த்தனர் “ப்ரோ வந்துட்டாங்கனு சொன்னேன்” என்று கூற லியான் இவர்கள் அருகே வந்தான் “பிராக்டிஸ் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க”
மதி “நேஹாவோட லவ் ஸ்டோரி கேட்டுட்டு  இருந்தோம் ” என்று கூறியவுடன் அவன் சடாரென திரும்பி அவளைப் பார்த்தான் அவளும் அவனை தான் பார்த்துகொண்டு இருந்தாள் பார்வையை சற்று நகர்த்தவில்லை
கிஷோர் “ப்ரோ நேஹா மாதிரி ஒரு பொண்ணு வந்து லவ் ப்ரொபோஸ் பண்ணா எவனாவது நோ சொல்லுவானா ” என்று கேட்க
நேஹா தன் புருவத்தில் உயர்த்தி “உண்மையா லீ கிஷோர் சொல்ற மாதிரி நான் ப்ரொபோஸ் பண்ணா கண்டிப்பா நோ சொல்ல மாட்……”
லியான் “இப்ப இது ரொம்ப முக்கியமா ஃபைனலுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை ஒழுங்கா பிரக்டிஸ் பண்ற வேலையை பாருங்க” என்று அவர்களிடம் கூறியவாறு கிட்டாரை எடுத்தான் நேஹா முகத்தில் தவழ்ந்த புன்னகையோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவளது பேச்சும்கும் பார்வைக்கும் அதனிடம் பிரதிபலிப்பு இருப்பது அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது
லியான் கடந்த ஒரு மாதமாக வொர்க் பிரம் ஹோம் என்று கம்பெனியில் கொடுத்திருந்தான் அதனால் அவன் வேலைப் பளுவும் சற்று கம்மியாகத்தான் இருந்தது முழுமூச்சாக காம்படிஷனில் கவனமாக இருந்தான்
அவர்களது நாளும் விடிந்தது நியூ பேண்ட் கம்பெடிசனின் பத்தொன்பதாவது ரவுண்ட் அதாவது கடைசி ரவுண்டிரற்க்கு ஆடிட்டோரியம் கோலாகலமாக தயாராகிக்கொண்டிருந்தது தன்னை பார்ப்பவர்களை கவர்வதற்கு
பார்வையாளர்களாலும் போட்டியாளர்களின் குடும்பத்தினராலும் அந்த ஆடிட்டோரியம் நிறைந்திருந்தது போட்டியாளர்கள் மனத்துக்குள் எத்தனை பதட்டம் இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில்  அவ்களின் காதுகளிலும் அரங்கத்தில் இருந்து வந்த சத்தம் கேட்டுக் கொண்டே தான் இருந்தது ஸ்பிரின்ட் மியூசிக் மியூசிக் மைன் என்று வந்திருந்த ரசிகர்கள் மாறி மாறி கத்திக் கொண்டே இருந்தனர்
அப்பொழுது நேஹா அவர்களின் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அவளைப் பார்த்த லியான் எழுந்து நின்றுவிட்டான்
“ஹாய் ஃப்ரெண்ட்ஸ்”
“ஹாய்” என்று கூறிய அத்தனை பேரின் குரல்களும் பதட்டத்தை வெளிப்படுத்தியது
“எதுக்கு இவ்வளவு பதட்டம் இன்னைக்கு நீங்க தான் பர்ஸ்ட் பர்வாம் பண்ண போறீங்க நீங்க தான் பர்ஸ்ட் வர போறீங்க கான்ஃபிடன்ஸோட இருங்க”
“ம் ” என்று கூறி மறுபடியும் அமைதியாகினர்
லியானின் அருகே வந்து கையை நீட்ட அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பின் அவளே அவன் கையை பிடித்து வாழ்த்துக் கூறினாள்
“கண்டிப்பா நீதான் வின் பண்ணுவ அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்”
அவள் கூறியது எதுவுமே அவன் காதில் விழவில்லையோ என்னவோ அவளைப் பருகிக்கொண்டே “லுக்கிங் கார்ஜியஷ்” என்று கூறினான் அவள் முகம் சந்தோசத்தில் ஜொலித்தது அன்று வெள்ளை நிற ஃபுல் ஹேண்ட் லாங் சுடிதாரில் வந்திருந்தாள் அவனிற்க்காக
மாணிக் “ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆயிடுச்சு நீ கிளம்பு ஃபர்ஸ்ட்  எங்களோடது தான் நாங்கள் ரெடி ஆகுறோம்”
“ஓகே பாய் பாய் ஆல் த பெஸ்ட்” என்று லீயை  பார்த்துக்கொண்டே கூறி சென்றாள்
“இப்ப இங்க முதல்ல வந்து பர்வாம் பண்ண போறது மியூசிக் மைன் பேண்ட்?? ” என்று தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் சத்தமாக கூற கைத்தட்டல் அரங்கை நிறைத்தது
ஒவ்வொருவராக மேடையேற ஒவ்வொருவரின் பெயரை சொல்லி அவர்களின் ரசிகர்கள் கத்த ஆரம்பித்தனர் ஒருவரை ஒருத்தர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு அவர்களின் இசை சுரங்கத்திற்குள் நுழைந்தனர்
maa Daddy Pockets epuDu Plenty Plenty raa..
naa renDu Pockets epuDu Empty Empty raa..
maa Daddy Pockets epuDu Plenty Plenty raa..
naa renDu Pockets epuDu Empty Empty raa..
Campus Canteen lo nannu choosindi o pillaa.. entho Sudden gaa maaraanu thanavalla..
Sun-Glasses thane konindi.. neekosame ee Gift anindi..
aa Next One Month thiragani chote leduraa..
aa Next One Week naalo ne lenuraa..
aa Next Friday Disco lo thana Birthday Party kada..
aa Next Moment.. aa Bill ke chillare migilindi..
maa Daddy Pockets epuDu Plenty Plenty raa..
naa renDu Pockets epuDu Empty Empty raa..
maa Daddy Pockets epuDu Plenty Plenty raa..
naa renDu Pockets epuDu Empty Empty raa..
Tring Tring Tring Tring antu mogindi naa i-phone.. kalavaali antoo kshaNamlo rammandi..
chamkeesi Ring kanipettu andi..
thwaralone o Surprise anindi..
aa Next One Month thelaa nene gaalilo..
aa Next One Week unnaa Tension lo..
aa Next Friday Life-Time Thrill thagile naaku mari..
aa Next Moment.. vaaDevaDiko Ring ne thoDigindi…
So Bottom Line Of The Story Is..
maa Daddy Pockets epuDu Plenty Plenty raa..
naa renDu Pockets epuDu Empty Empty raa..
maa Daddy Pockets epuDu Plenty Plenty raa..
naa renDu Pockets epuDu Empty Empty raa…
“ஹாய் ஹாய் ஹலோ 
எல்லாரும் நல்லா மியூசிக் மைன் performance பார்த்து என்ஜாய் பண்ணீங்களா இப்ப அடுத்ததா உங்கள் அசத்த வராங்க ஸ்பிரிண்ட் மியூசிக் ??”
Paayum Oli Nee Enakku
Paarkkum Vizhi Naan Unakku
Thoyum Mathu Nee Enakku
Thumbi Adi Naan Unakku
Vaayuraikka Varuguthillai
Vaazhi Nindran Menmai Ellaam
Thooya Sudar Vaan Oliye
Soorai Amudhe
Kannamma En Kaathali
Kannamma En Kaathali
Kaathaladi Nee Enakku
Kaantham Adi Naan Unakku
Vetham Adi Nee Enakku
Vidthai Adi Naan Unakku
 Pothamuttra Pothinilae
Pongi Varum Theenchuvaiyae
Naathavadivaanavale Nalluyirae
Theeraatha Vilaiyattu Pillai Kannan
Theeraatha Vilaiyattu Pillai
Theeraatha Vilaiyattu Pillai Kannan
Theeraatha Vilaiyattu Pillai
Theruvile Penngalukkoyaatha Thollai
Theeraatha Vilaiyattu Pillai
Kannamma En Kaathali
Kannamma En Kaathali
Nalla Uyire Nee Enakku
Naadiyadi Naan Unakku
Selvamadi Nee Enakku
Saemanithi Naan Unaku
Ellaiyattra Paerazhage
Engum Nirai Pørchudare
Mullai Nigar Punnagaiyaai Møthum Inbame
Theeraatha Vilaiyattu Pillai Kannan
Theeraatha Vilaiyattu Pillai
Theeraatha Vilaiyattu Pillai Kannan
Theeraatha Vilaiyattu Pillai
Theruvile Penngalukkøyaatha Thøllai
Theeraatha Vilaiyattu Pillai
Theruvile Penngalukkøyaatha Thøllai
Theeraatha Vilaiyattu Pillai
Theeraatha Vilaiyattu Pillai
Kannamma Èn Kaathali
Kannamma Èn Kaathali Èn Kaathali Kaathali
Nalla Uyire Nee Ènakku
Naadiyadi Naan Unakku
Šelvamadi Nee Ènakku
Šaemanithi Naan Unaku
Èllaiyattra Paerazhage
Èngum Nirai Pørchudare
Mullai Nigar Punnagaiyaai Møthum Inbame
Kannamma Èn Kaathali
Kannamma Èn Kaathali Èn Kaathali Kaathali
ஓ ஓ ஓ ஓவ் வ் வ் வ் உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லைனு ஸ்பிரிண்ட் மீயூசிக் காட்டிட்டாங்க 
ஒகே இப்போ இது உங்களுக்கான நேரம் இந்த நிமிடத்திலிருந்து நீங்க வோட் பண்ண ஆரம்பிக்கலாம் உங்களுக்கு இருப்பது இரண்டே இரண்டு நாள்
இன்னும் ஒரு வாரத்துக்கு அப்றம் நாங்க கொடுக்க போற மியூசிக் நைட் ல பர்வாம் பண்ண போறது யாருனு சொல்ல போறது நீங்க மியூசிக் நைட்ல உங்களை அசத்த போவது மியூசிக் மைனா இல்ல ஸ்பிரின்ட் மியூசிக்கா
 
இதுக்கான பதில தெருஞ்சுக்க நான் ரொம்ப ஆர்வமா இருக்கேன் இன்னும் ரெண்டு நாள் தான் பதில் தெரிஞ்சிடும் என்ன மாதிரி நீங்களும் காத்திருங்கள்

Advertisement