Advertisement

சுரங்கம் 8
அவள் போனதற்கு தன்னை காரணமாய்க் கூறியும் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் கையை கட்டிக்கொண்டு பால்கனி கதவில் சாய்ந்து நின்றவாறு அவளையே பார்த்திருந்தான்
“இப்போ நான் திரும்பி திடீர்னு வந்ததுக்கு காரணமும் நீதான் இன்னைக்கு நான் உன்னோட ஒன் டே வேக் லவ்வர பார்த்தேன்”
“யாரு வித்தியாவா”
“ம் ஆமா”
“இதுக்கும் நீ போறதுக்கு என்ன சம்பந்தம்”
“என்ன சம்பந்தமா அன்னிக்கு அந்த பொண்ணு அவளை உன்னோட லவ்வர்னு சொல்லும்போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா நான் எவ்ளோ‌ அழுதேன் தெரியுமா இவ்வளவு மாசம் எப்படி போச்சுனு கூட எனக்கு தெரியல ஆனா இன்னைக்கு அந்த பொண்ண அவளோட லவ்வர் கூட பார்த்தேன் அப்படியே மனசுல லேஸ் ஆயிடுச்சு அதான் உன்ன பாக்க ஓடி வந்துட்டேன்”
அவன் பதில் எதுவும் பேசவில்லை என்றாலும் இவள் ஏதோ மோன நிலையில் இருப்பது போல் சந்தோஷத்தில் அவனிடம் அனைத்தையும் கூறிக் கொண்டே இருந்தாள்
“நான் உன்னை முதல் முதல்ல ஸ்கூல் படிக்கும் போது ஒரு அஞ்சு ஆறு  வருஷத்துக்கு முன்னாடி பார்த்தேன் பார்க்ல நீ கிட்டார் வாசிச்சுட்டு இருந்த அன்னைக்கு என்னோட மூடு எப்படி இருந்தது தெரியுமா என் அம்மா அப்பதான் என்ன விட்டு போய் இருந்தாங்க அன்னைக்கு உன்னோட இசைதான் என்ன ரிலாக்ஸ் பண்ணுச்சு”
“அதுக்கப்புறம் உன்ன ஒரு ஹோட்டல்ல பார்த்தேன் அப்போ உன்னோட சிஸ்டர் பர்த்டேனு நினைக்கிறேன் அங்கே நீ பாட்டு பாடுன கேக் சாப்ட்ட‌ அப்போ நான் உன்னை தான் பார்த்துட்டு இருந்தேன் தெரியுமா”
“அதுக்கப்புறம் மழைல ஒரு நாள் பார்ல்தேன் இப்படி ஒவ்வொரு இடத்திலேயும் பார்த்துட்டு தான் இருந்தேன் ஏனோ உன்ன பாத்துட்டே இருக்கணும் தோணுச்சு அப்பா கூட சொன்னாங்க என் பாத்துட்டே மட்டும் இருக்க பேசுனு அப்பதான் எனக்கு பேசணும்னு தோணுச்சு நான் எதிர்பார்க்கவே இல்ல நீ நம்ம ஆபீஸ்ல ஒர்க் பண்ணுவேன்னு எவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு தெரியுமா”
“அப்பதான் உனக்கு கிட்டார் வாசிக்கிறது எவ்வளவு பிடிக்கும்னு தெரிஞ்சுகிட்டேன் நான் டாடிகிட்ட பேட் காம்படிஷன் பற்றி சொன்னேன் டாடியும் ஓகே சொல்லிட்டாங்க அப்புறம்தான் நான் உன்கிட்ட பழக ஆரம்பிச்சேன் எனக்கு உன் கூடவே இருக்கணும்னு தோணுது எனக்கு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ம்ப பிடிக்கும் லீ”
என்று அவள் மனதை அவனிடம் திறந்து காட்டினாள் அப்போது அவன் தங்கை வந்து “நேஹா வாங்க சாப்பிடலாம்” என்று அழைக்க அவள் லியானை பார்த்தாள் “அண்ணா முன்னாடியே சாப்பிட்டாங்க நீங்க வாங்க நாம சாப்பிடலாம்” என்று அவளை அழைத்து சென்றாள் நேகாவும் சந்தோஷமாகவே அவளூடன் சென்றாள்
அவள் கண்களை விட்டு மறையும் வரை அவளையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்த லீயின் முகம் அதற்க்கு முன் இருந்ததற்கு நேர்மாறாக உணர்ச்சி குவியலாக மாறியது அவனுக்கு சந்தோஷத்தை அடக்க முடியவில்லை அவனுக்கு கத்தவேண்டும் போல் இருந்தது
அவன் நிச்சயம் இப்படி ஒன்று நடக்கும் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை அவளை முதன் முறையாக பார்த்த நாளுக்கு அவன் நினைவு சென்றது
அவள் எப்போது இவளைப் பார்த்தாளோ அதன் முன்பே இவன் அவளை பார்த்திருக்கிறான் அவள் கூறிய அதே பார்க்கில் அவள் தாயோடு வருவதை தூர நின்று பார்த்திருக்கிறான் குட்டி பொம்மை போல் இருக்கும் அவளை அவனுக்கு பார்க்க மிகவும் பிடித்திருந்தது அந்த வயதில்
அதனால் எப்போதும் அந்த பார்க்கை  கடந்து செல்லும்போது அவள் இருக்கிறாளா என்று நொட்டம் விட்டே செல்வான் அவள் கண்ணில் பட்டாள் அங்கிருந்து அவர்கள் செல்லும் வரை அங்கேயே இருந்து அவளைப் பார்த்து வருவான் ஏன் எதற்கென்று காரணம் தெரியாது
அப்படி தான் ஒருநாள் அவள் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்தான் சிறிது நேரம் அவளைப் பார்த்தவன் அந்த சோகத்தை எப்படி விரட்டுவது என்று யோசித்து தன் வீட்டிற்கு சென்று அவனது ஆயுதத்தை எடுத்து வந்தான்
அவள் முகம் பார்க்குமாறு சற்று தொலைவில் அமர்ந்து அதை வாசிக்க ஆரம்பித்தான் சிறிது நேரத்தில் அவள் பார்ப்பதை உணர்ந்தவன் அவள் பக்கம் தன் பார்வையைத் இருப்பவை இல்லை அவள் அங்கிருந்து நகரும் மட்டும் அவனும் அங்கிருந்து இசைத்துக் கொண்டே இருந்தான்
பின் அவளை சர்ச்சில் வைத்து ஒரு முறையும் கடற்கரையில் வைத்தும் ஒரு முறையும் பார்த்திருக்கிறான் இரண்டு நாளுமே அவள் ஷூட்டிற்க்கு தான் வந்திருந்தாள் தூரத்தில் நின்று அவளை ரசித்து விட்டு சென்றுவிட்டான்
அவள் கூறியது போல் அவனும் எதிர்பார்க்கவில்லை அந்த அலுவலகத்தில் அவளைப் பார்ப்பான் என்று அதுவும் அந்த அலுவலகத்தில் சொந்தக்காரியாக ஆனால் வேறு ஒன்றும் தோன்றவில்லை அன்று அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் அவனுக்கும் சந்தோஷத்தையே கொடுத்தது அதற்கு மேல் அவன் ஏதும் யோசிக்கவுமில்லை 
தன்னை அவள் ஈர்த்தது போல் தானும் ஏதோ ஒரு வகையில் அவளை ஈர்த்து இருக்கிறேன் என்பது அவனுக்கு சந்தோஷத்தை வாரி இறைத்தது இப்போது அவள் அவனிடம் பேசி செல்கையில் அவன் மனம் அடைந்த சந்தோஷம் இதுவரை இசை கூட அவனுக்கு அழித்ததில்லை என்று உணர்ந்தான் அவன் மனமோ அவனது கிட்டாரை நினைத்து “ஏய் உனக்கு போட்டிக்கு ஆள் வந்தாச்சு நீ கன்டிப்பா ஜெய்க்க போறதில்ல”என்று கூவியது
கீழிருந்து வந்ல அவன் தாயின் குரல் அவன் நினைவுகளை இழுத்து வந்தது “லியான் பால்கனியில் நிற்காத மழை வருது பாரு லைட் ஆப் பண்ணிட்டு போய் படு”
“சரிம்மா” என்று இங்கிருந்து குரல் கொடுத்தவன் அவர் கூறியது போலவே லைட்டா ஆப் செய்து தன் அறைக்கு சென்று படுத்தான்
இப்போது அவன் மனது எட்டாவது ரவுண்டுக்கு பின் அவள் தந்தையை சந்தித்ததை நினைவு கூர்ந்தது
அன்று அவனிடம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று “என் பொண்ண பத்தி என்ன நினைக்கிற” என்று கேட்டார் அவரின் கேள்விக்கு எந்த மாதிரி பதில் கூறுவது என்று அவனுக்கு தெரியவில்லை
“எனக்கு புரியல சார் ஏன் இப்படி கேக்கறீங்க”
“இந்த ப்ரோக்ராம் ஆரம்பிச்சதுல இருந்து அவ மாடலிங் பக்கம் போகவே இல்லை உங்களோடதான் ரொம்ப நேரம் இருக்கா நிறைய சான்ஸ் வந்ததும் அவை யூஸ் பண்ண மாட்டேங்குறனு எனக்கு தோணுது”
“ஓ..”
“உனக்கு நான் சொல்றது புரியுதா மாசத்துல ஒருநாள் தான் அவளுக்கு இந்த ப்ரோக்ராம் மத்த நாள் அவ அவளோட ப்ரோவசன பாத்துக்கலாம் ஆனா பண்ண மாட்டேங்குற காரணம் என்னன்னு புரியுதா”
இவன் ஏதும் கூறாமல் அமைதி காக்கவும் “இப்படி எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம் உன்னோட மனசுல என்ன இருக்குன்னு சொன்னாதானே தெரியும்”
“சரி சார் நான் பார்த்துக்கிறேன்” என்று கூறி வந்தவன் பல நாட்கள் யோசித்து எடுத்த முடிவு தான் தனக்கு காதலி இருப்பதாகக் கூறுவது கபூர் பேசத் தொடங்கியதுமே அவர் பேச வரும் விசயத்தை புரிந்து கொண்டான் அவள் பார்வையில் முன்பே உணர்ந்திருந்தாலும் இப்போது அவள் தந்தை கூறும் போது அவனுக்கு அது தெளிவாக புரிந்தது
அவனுக்கு அவர் கூறியதில் ஒன்று மட்டும் தான் மனதில் பதிந்தது அது அவள் இப்படியே செய்து கொண்டிருந்தாள் அவள் கரியர் நிச்சயமாய் முடிந்துவிடும் என்பது அதற்காகவே அவளுக்காகவே இந்தத் திட்டம்”
அன்று அனைவருக்குமே வித்தியாவை அறிமுகப்படுத்த தான் எண்ணியிருந்தான் ஆனால் நேஹா அவளை மண்டபத்தின் வெளியே வைத்து பார்த்ததும் இனிமேல் யாரிடமும் கூற வேண்டிய தேவையில்லை என்று அவளை அனுப்பி வைத்துவிட்டான்
அவளது ஒவ்வொரு ஷூட்டையும் அவன் இணையதளத்திலும் டிவியிலும் பார்த்துக் கொண்டேதான் இருந்தான் முன்பே ஒவ்வொரு முறையும் அவள் திரையில் வரும்போது அவன் ரசிப்பான் அது காதல் என்று அவளை பார்க்காமல் தவித்ல பின்பு தான் அவன் முட்டாள் மனம் புரிந்து கொண்டது
எப்பொழுதுமே தன் கிட்டாரோடு இணைந்துவிட்டால் மனம் முழுக்க மகிழ்ச்சி அடைபவன் அவள் கண்முன் இல்லாமல் மறைந்ததும் அந்த மகிழ்ச்சி குறைந்த பின்பு தான் அவன் மனதை தெரிந்து கொண்டான் தன் இதய சுரங்கத்தில் இருக்கும் இசை அவள் என்று 
அப்போதே முடிவெடுத்துவிட்டான் இந்தப் போட்டியில் வென்று அவளிடம் காதலை கூற வேண்டுமென்று ஆனால் இப்போது இவன் மனதில் அவள் எந்தளவு வேரூன்றி இருக்கிறாளோ அதே அளவு அவன் அவள் மனதிலும் இருக்கின்றான் என்பதை முழுதாக அறிந்து கொண்டவன் மனது சந்தோஷத்தில் மிதந்தது அதை பற்றியே அவன் நினைவுகள் சுழன்று கொண்டிருக்க அத்தோடு அவன் உறங்கியும் போனான்
நேஹா அவன் தங்கையின் அறையில் கப்போர்டை நோண்டிக் கொண்டிருந்தாள் “உன்னோட ட்ரெஸ்ல பாதிக்கு மேல சுடிதார் தான் இருக்கு உனக்கு அதுதான் ரொம்ப பிடிக்குமா”
“எனக்கில்ல என் அண்ணாவுக்கு அண்ணா சம்பாதிக்க ஆரம்பிச்சதும் அவங்கதான் டிரஸ் எடுத்து கொடுப்பாங்க எல்லாமே சுடி தான் மாடர்ன் ட்ரஸ் எடுத்து குடுக்க சொன்னால் அதுதான் நீ எடுக்குறியேனு சொல்லிடறாங்க இந்தாங்க இந்த ட்ரஸ் நீங்க நைட்டுக்கு போட்டுக்கோங்க” என்று ஒரு நைட் பேண்டையும் டாப்பையும் எடுத்துக் கொடுத்தாள்
இரவு நேஹாவின் நினைவுகளிலேயே உறங்கியதால் அவன் கண் விழிக்கும் போதும் உதட்டில் புன்னகை இருந்தது
அறைக்குள்ளேயே குளித்து ஒரு டவலை இடுப்பில் கட்டியவன் நேத்து ஐயன் செய்து வெளியே தொங்க விட்ட தனது கால் சட்டை எடுப்பதற்காக கதவைத் திறந்து வந்தான் அதை எடுத்து விட்டு திரும்பியவன் பார்வையில் விழுந்தாள் தூங்கி எழுந்ததால் முடிகள் லேசாக கலைந்து அவன் தங்கையின் ஆடையை அணிந்து அவனையே பார்த்து நிற்கும் நேஹா
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நிற்க அப்போது அங்கே வந்த அவன் தங்கை “அண்ணா நீ புதுசா சிக்ஸ்பேக் ட்ரை பண்றேன்னு இப்படி நிற்க வேண்டிய அவசியமில்லை போ போய் ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு அடக்க ஒடுக்கமா வா  பாரு அவங்க எப்டி நிக்குறாங்கனு ” என்று  கூறிக்கொண்டே நேஹாவின் கையை பிடித்து இழுத்து சென்றாள்
லியான் தயாராகி கீழே வரும்போது நேஹாவும் நேற்று அவள் அணிந்திருந்த ஆடைக்கு மாறி இருந்தாள் அவன் கீழே வருவதை பார்த்ததும் அவள் கண்களை அங்கே இங்கே என அலைந்ததிலேயே அவள் படபடப்பாக இருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது
அவளுக்கு அவன் அருகில் வருவது போல் இருக்கவும் “ஆன்ட்டி டாடி போன் பண்ணி இருந்தாங்க நான் வீட்டுக்கு கிளம்புறேன்”
“வீட்டுக்கு முன்னாடி வண்டி எதையும் காணோம் உன்னோட வண்டியை எங்கம்மா நிறுத்தி வைச்சுட்டு வந்த நீ சொல்லு அங்கிள் போய் எடுத்துட்டு வருவாரு”
“எங்க தான் ஆன்ட்டி பக்கத்துல ஒரு ப்ளூ கலர் கார் நீக்குதுல அதுதான் நான் எடுத்துகுறேன்” என்று கூற அவர் அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தார் ஆனால் இருந்த மனநிலையில் அவளுக்கு அது புரியவில்லை
“சரி ஆன்ட்டி நான் கிளம்புறேன் போயிட்டு வரேன் அங்கிள் போயிட்டு வரேன்” என்று அவன் தங்கைக்கும் அவனுக்கும் பொதுவாக கூறியவள் விருட்டென்று கிளம்பி சென்றாள்
“நான் கூட வண்டினு  சொன்னதும் ஸ்கூடினு நினைச்சேன் காரில் வந்தா கூடவா மழைக்காக நிப்பாங்த” என்று அவனது தந்தை கேட்கவும்
“அப்பா அவங்க இப்பதான் கார் பளகுறாங்களா  இருக்கும் அதான் மழை வந்ததும் நிறுத்தி இருப்பாங்க” என்று அவன் தங்கை கூறினாள் 
அவர்கள் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது அவளது செயலை நினைத்து

Advertisement