Advertisement

சுரங்கம் 7
நேஹா ஒரு நாள் முழுவதும் வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்த நாள் அவள் தந்தை பனாஜியில் உள்ள நிறுவனத்திற்கு செல்ல அவருடனே அவளும் கிளம்பினாள் மூன்று மணி வரை அங்கு இருந்துவிட்டு அதன் பின் அவர் வாஸ்கோடா கிளைக்கு செல்ல அவள் தன் தோழிகளை சந்திப்பதாக கூறி விடை பெற்றாள்
ஆனால் யாரையும் பார்க்கும் எண்ணம் இன்றி காரில் சுற்றிக் கொண்டிருந்தாள் அப்பொழுது அவள் எதிரே பைக்கில் சென்று கொண்டிருந்தவர்களை பார்த்ததும் அவள் முகம் யோசனையாய் மாறியது அந்த பைக்கின் பின்னே தன் காரை செலுத்தினால் அது ஒரு ஐஸ்க்ரீம் பாரி முன் சென்று நின்றது
பைக்கில் வந்தவர்கள் இறங்கி உள்ளே செல்ல இவளும் அவர்கள் பின்னே சென்று அவர்கள் டேபிளின் அருகே உள்ள டேபிளில் அமர்ந்து கொண்டாள் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் கோபம் படிப்படியாக உயர ஆரம்பித்தது
ஒரு எல்லைக்கு மேல் தாங்க முடியாமல் எழுந்து அவர்களின் எதிரில் உள்ள சேரில் வந்து அமர்ந்தாள் இவளைப் பார்த்ததும் எதிரில் இருந்த பெண் “ஹாய் நேஹா” என்று முகம் கொள்ளா புன்னகையுடன் வரவேற்றாள்
“நீ வித்யா தானே”
“ஹேய் நாம ஒரே ஒரு முறைதான் மீட் பண்ணியிருக்கோம் இன்னும் உனக்கு என்ன ஞாபகம் இருக்கா”
“நீ லீயோட லவ்வர் தானே”
அவ்வளவு நேரம் வித்யாவின் அருகே அமர்ந்து நேஹாவை பார்த்துக் கொண்டிருந்தவன் “வாட்” என்று அதிர்ச்சியுடன் வித்யாவிடம் தன் பார்வையை திருப்பினான்
“இங்க பாரு நேஹா இது அருள் நாங்க ரெண்டு பேரும் மூணு வருஷமா லவ் பண்ணிட்டு இருக்கோம்”
“மூனு வருசமாவா பொய் சொல்லாத நீ தானே அன்னைக்கு என் கிட்ட சொன்ன நீ லீயோட லவ்வர்னு”
“நீ லீயானோட ஃப்ரண்ட் தானே உனக்கு தெரியாதா என்ன அவன் யாரையும் லவ் பண்ணல அதுக்கு ஃப்ரெண்ட்ஸ் கிண்டல் பண்றாங்கனு சொன்னான் அதுக்காக தான் அன்னைக்கு வந்தேன் அப்புறம் என்ன நினைச்சானோ வேணான்னு சொல்லிட்டான் ஒரு பிரியாணி கூட கொடுக்காம அனுப்பிட்டான்”
அருள் “இப்போ உனக்கு பிரியாணி தான்  ரொம்ப முக்கியமா” என்று கூறி அவளை முறைத்தான்
“அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நான் அருள் லியான் மூன்று பேருமே காலேஜ் ஃப்ரெண்ட்ஸ்”
அவள் கூற கூற தனக்குள் பொங்கி எழுந்த சந்தோஷத்தோடு அவளைப் பார்த்தவள் “சாரி …  தேங்க்யூ…… தேங்க்யூ சோ மச் அண்ட் காங்கிரட்ஸ் பார் யூர் லவ்” என்று படபடப்பாக கூறிவிட்டு அங்கிருந்து தன் காரை நோக்கிச் சென்றாள் அவள் நேரே சென்றது வாஸ்கோடாவில் இருக்கும் கம்பெனிக்கு
காரை கம்பெனி முன் பார்க் செய்தவள் லீயின் இடம் நோக்கி விரைந்தாள் மூச்சுவாங்க அவள் அந்த டேபிளின் அருகே நிற்க அவனது சேர் காலியாக இருந்தது உடனே பக்கத்தில் இருந்த அவனது நண்பனிடம் அவன் எங்கே என்று கேட்க அவன் இவளை பார்த்து முழித்தான்
“உங்ககிட்ட தான் கேட்கிறேன் லீ எங்க”
“காம்பெடிஷன்… பிராக்டிஸ்…”
“ஓ.. தேங்க்யூ” என்று கூறியவள் தன் தந்தையின் அறை நோக்கி விரைந்தாள் அவளையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான் என்னடா நடக்குது இங்க என்ற எக்ஸ்பிரஷனோடு
தன் அறை கதவை திறந்துகொண்டு முகம் முழுக்க புன்னகையோடு வரும் தன் மகளைப் பார்த்ததும் கபூரின் முகமும் புன்னகை தத்தெடுத்தது
“டாடி அம் சோ ஹாப்பி” என்று ஓடி வந்து அவரை அணைத்து கொண்டு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள்
“என்ன ஆச்சு பேபி இவ்வளவு சந்தோஷம் காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா”
“டாடி லீ யாரையும் லவ் பண்ணல”
“என்னடா அன்னைக்கு இதே மாதிரி கட்டிப் பிடிச்சு அழுது யாரையோ லவ் பண்றான்னு சொன்ன இன்னிக்கு வந்து கட்டிப்பிடித்து சிரிச்சு லவ் பண்ணலைன்னு சொல்ற”
“நான் ஒரு லூசு டாடி அன்னைக்கு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி இருந்தா அவன் லவ் பண்ணலேங்குற விஷயம் எனக்கு தெரிஞ்சு இருக்கும் அவன் பிரண்ட் ஃப்ரெண்ட்லியா சும்மா சொல்லி இருக்காங்க நான் இப்பவே போய் அவன பார்க்கிறேன்” என்று கூறி அவர் கண்ணத்தில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு ஓடினாள் போகும் தன் மகளையே முகம் முழுக்க புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார் அவர்
முதலில் அவர்கள் எப்போதும் ப்ராக்டிஸ் செய்யும் கிஷோரின் தந்தை ஜிம்முக்கு சென்றாள் அங்கு சில பேர் வொர்க் அவுட் செய்துகொண்டிருக்க இவர்களது அறை நோக்கி சென்றாள் அஅ வெளியே பூட்டு தொங்கிக்கொண்டிருந்தது அங்கே இருந்த பணியாளிடம் விசாரிக்க அவர்கள் மதிய உணவிற்கு வெளியே சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்று கூறினார்
பின் அவர்கள் எப்போதும் ரிலாக்ஸ் செய்யும் பார்க்கிற்கு சென்று அங்கு இருப்பார்களோ என்று முழுவதும் சுற்றினாள் அங்கேயும் அவர்கள் இல்லை என்றதும் காரில் அங்கே இங்கே என்று சுற்ற ஆரம்பித்தாள் எங்காவது கண்ணில் படுகிறானா என்று அப்போதே லேசாக இருட்ட ஆரம்பித்திருந்தது
“ஐயோ இன்னும் நான் அவன  எங்கே தேட நான் அவனை பாக்குறதுக்கு ஃபைனல் வரைக்கும் வெயிட் பண்ணனுமா என்னால முடியாது னோட அட்ரஸ் இருந்திருந்தா….. அட்ரஸ்?” என்று யோசிக்கும் போதுதான் அவள் மூளையில் பல்ப் எரிந்தது அவனது டீடைல்ஸ் அனைத்தும்  எம்ளாய் டீடைல்ஸில் இருக்கும் என்பது நினைவு வர காரை மீண்டும் கம்பெனி நோக்கி திருப்பினாள்
மீண்டும் தன் முன்னால் வந்து நின்ற மகளை கபூர் பார்க்க “டாடி எனக்கு லீ வீட்டு அட்ரஸ் வேணும்”
“ஏண்டா இன்னுமா நீ அவனை பாக்கல அவனோட நம்பருக்கு கால் பண்ணி இருக்கலாமே”
“இல்லை டாடி என்கிட்ட லியோட நம்பர் இல்ல”
“அவனோடதில்லன அவனோட ஃப்ரெண்ட்ஸ்”
“இல்ல டாடி அவனுக்கு தெரிஞ்சவங்க எல்லாரோட நம்பரையும் நான் எரேஸ் பண்ணிட்டேன்”
“மொபைல் நம்பர எரேஸ் பண்ணி என்ன பிரயோஜனம்”
“டாடி”
“அட்ரஸ் உன்னோட மொபைலுக்கு ஷேர் பண்ணிட்டேன்”
“லவ் யு டாடி நான் உங்களோட சன்-இன்-லாவ பார்த்துட்டு வரேன்” என்று சிட்டாக பறந்து விட்டாள்
அவன் வீடு இருக்கும் ஏரியாவினீ அருகில் சென்றவள் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தால் இடையில் கார் டைங்கை ஃபுல் செய்யவும் அவள் மறக்கவில்லை வெளியே என்றால் திடீரென்று அவன் முன் போய் நின்று பேசலாம் ஆனால் வீட்டில் யார் யார் இருப்பார்கள் என்று புரியாமல் அங்கேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தாள்
அப்பொழுது அவள் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது “என்னம்மா என்னோட மருமகனை பார்த்தாச்சா”
“இன்னும் இல்ல டாடி நான் இங்இ வந்துட்டேன் ஆனால் வீட்டுக்குள்ள எப்படி போறதுனு தான் தெரியல நான் திடீர்ன்னு போனா அவங்க வீட்டில என்ன சொல்லுவாங்க”
“நான் இங்க நம்ம வீட்டுக்கு வந்துட்டேன் மா நீயும் கிளம்பி வா நாளைக்கு பாத்துக்கலாம்”
“எனக்கு பாக்கணும்னு இருக்கு டாடி”
“அப்படின்னா நீ வீட்டுக்குள்ளே போய்தான் ஆகனும்”
“ஏதாவது காரணம் சொல்லுங்களே”
“என்ன சொல்றது நான் லீயோட பிரண்ட் லீய பார்க்க வந்திருக்கேனு சொல்லு”
“முடியாது இனிமே யார்கிட்டையும் லீய  என்னோட ஃப்ரெண்ட்னு சொல்ல மாட்டேன் என்னோட ஸ்வீட் லவ்வர்”
“சரிதான் ஏன் திடீர்னு காணாம போயிட்டேனு கேட்டால் என்ன பதில் சொல்ல போற”
‘உண்மையை சொல்லுவேன் ? சரி டாடி நான் போனை வைக்கிறேன் எப்படியாவது இன்னிக்கு நான் பாத்துட்டு தான் வருவேன் பாய் டாடி” என்று கட் செய்துவிட்டு அவன் வீடு தெரியுமாறு சற்றுத் தொலைவில் காரை நிறுத்தி நோட்டம் விட தொடங்கினாள் ஏதாவது வழி கிடைக்குமா என்று”
அப்போது லியானின் பைக் அவனையும் அவன் தங்கையும் சுமந்துகொண்டு அவள் காரை கடந்து அவனது வீட்டிற்குள் நுழைந்தது ஒரு நிமிடத்திற்குள் அது கடந்துவிட என்ன செய்வது என்று இவள் தான் முழித்துக் கொண்டிருந்தாள்
பல மாதங்கள் கழித்து அவனை நேரில் ஒழுங்காக கூட பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எழுந்தது அதோடு இன்று பார்த்தே ஆக வேண்டும் என்ற உறுதியும் கூடியது
காரில் இருந்து கொண்டே மூளை இருக்கும் தலையை தட்டி தட்டி யோசிக்க அவளுக்கு ஒரு ஐடியாவும் வரவில்லை நேரம் தான் போய் கொண்டிருந்தது அப்போது கார் கண்ணாடிகளில் தண்ணீர் பட்டு தெறிக்க வெளியே பார்த்தாள் மழை பொழிந்து கொண்டிருந்தது
பட்டென்று அவளிற்க்கு ஒரு ஐடியா உதித்தது உடனே காரின் கதவுகளை திறந்து கொண்டு அவனது வீட்டை நோக்கி சென்றாள்
அவன் வீட்டு காமோன்ட் கேட்டை திறந்து காலிங் பெல்லை அடித்தாள் அதோடு சேர்ந்து அவளது இதயமும் இசைத்தது கதவு திறக்கப்பட அந்தப் பக்கம் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி இருந்தார் அவரைப் பார்த்ததுமே அது லியானின் தாய் என்று அவளால் கண்டுகொள்ள முடிந்தது
“ஹாலோ ஆன்ட்டி என்னோட பேரு நேஹா வண்டியில் வந்துட்டிருந்தேன் திடீரென மழை வந்துடுச்சு அதான் இங்க வந்துட்டேன்”
“உள்ளே வாம்மா” என்று அவளை வரவேற்றார் அப்போது அங்கே வந்த அவனது தங்கை
“நீங்க நேஹா தானே பேண்ட் காம்படிஷன் ஸ்டார்டிங் நீங்கதானே அந்த ப்ரோக்ராமை கோஸ்ட் பண்ணீங்க ” என்று கேட்டால்
“ஆமா இடையில் ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு அதான் அதிலிருந்து வெளியே வந்துட்டேன்”
“அண்ணா உன்னோட ஃப்ரெண்டு வந்து இருக்காங்க கீழவா” என்று மேல் நோக்கி குரல் கொடுத்தாள்
நேகா தன் கைகளில் பட்டு தெறித்து விழுந்த மழைத்துளியை கைகளால் துடித்து விட்டவாறு இருக்க அவன் தாய் ஒரு டவலை எடுத்து அவனிடம் நீட்டினார் அதை ஒரு புன்சிரிப்போடு பெற்றுக் கொண்டாள்
அந்நேரம் படியில் இறங்கி வந்த லியான் இவளைப் பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி பின் யோசனைக்கு தாவினான்
“ஹாய் லு அது வெளியே மழை பெய்து அதான்”
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க”என்று அவன் தங்கை கூற
“என்னோட புரோபஷன்க்கு இது ரொம்ப முக்கியமாச்சே”
“என்னன்னா பேசாமல் சிலை மாதிரி நிக்குற”
“வா நேஹா”
“நான் ஆல்ரெடி வந்துட்டேன் லீ” என்று கண் சிமிட்டி கூற அவன் அவளையே பார்த்து நின்றான்
“ஆன்ட்டி நீங்க தப்பா நினைக்கலேனா  நான் நைட் இங்க ஸ்டே பண்ணிக்கலாமா மழை வேறு பெய்து இந்த நைட்ல நான் வண்டி ஓட்டிட்டு போக விரும்பல”
“சரிம்மா நீ என் பொண்ணு கூட தங்கிக்க”
” நீங்க வாங்க உங்களுக்கு நான் எங்களோட வீட்டு சுத்திகாட்டுறேன்” என்று அவனின் தங்கை அவள் கைபற்றி அழைத்து சென்றாள் அவர்களின் வீட்டில் கீழே ஒரு ஹாலும் கிச்சனும் இரண்டு அறைகளும் இருக்க மேலே ஒரு அறையும் அத்தோடு சேர்ந்து ஒரு சிறிய ஹாலுடன் கூடிய பால்கனியும் இருந்தது
நேஹா அந்த பால்கனிக்கு செல்ல அங்கிருந்து வந்த மலர்களின் நறுமணம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது
“இது எல்லாம் எங்க அம்மாதான் பராமரிக்கிறாங்க அண்ணாவுக்கு இந்த இடம் ரொம்ப பிடிக்கும் இங்க உக்காந்து தான் கிட்டார் வாசிக்கும்”
அப்போது கீழிருந்து அவளின் தாய் அழைக்க அவளை அங்கேயே விட்டு அவள் சென்றாள்
அப்போது நேகா என்ற பின்னிருந்து குரல் கேட்க திரும்பி பார்த்தாள் அங்கு அவளது ஹீரோ தான் நின்றிருந்தான்
“திடீர்னு காணாம போயிட்ட இப்போ திடீர்னு வந்திருக்க என்ன காரணம்”
” திடீர்னு காணாம போனதுக்கு காரணம் நீதான்?”

Advertisement