Advertisement

சுரங்கம் 6
மதியின் வீட்டில் அவளுக்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடாகி இருந்தது மாப்பிள்ளை வீட்டில் பேசி காம்பெடிஷன் முடிந்த பின் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இப்போது நிச்சயதார்த்தம் மட்டும் வைத்திருந்தனர் மதி அவளது பேன்ட் மெம்பர்ஸ் அனைவரையும் அழைத்திருந்தாள் 
அத்தோடு இந்தக் காம்படிஷன் மூலமாக நண்பர்களான சிலரையும் அழைத்து இருந்தாள் அதில் நேஹாவும் அடக்கம்
அனைவரும் நிச்சயதார்த்தத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தனர் நேஹா இறுதியாக வந்து சேர்ந்தாள் 
அவள் மண்டபத்தின் உள் நுழைய போகும் போது மண்டப வாசலின் அருகே லியான் யாருடனோ பைசி கொண்டிருப்பதை பார்த்து அவனை நௌக்கி சென்றாள்
“ஹாய் லி”
“ஒ ஹாய் இப்பதான் வந்தீங்களா “
“ஆமா இப்ப தான் வந்தேன் எத்தன தடவ தான் உனக்கு சொல்றது லீ இப்டி பெரியவங்கட்ட பேசுற மாதுரி பேசாதேனு சில சமயம் நல்லா பேசுறல அப்புறம் ஏன்”
“ஹாய் மிஸ் நேஹா டீவில பாக்குறத விட நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று அவ்வளவு நேரம் லீயின் அருகே நின்றிருந்த பெண் சொல்ல
“தேங்க்யூ” என்று நேஹாவும் அவளை பார்த்தாள்
“என்ன என்ன யாருன்னு பாக்கறீங்களா நானும் இவன் இன்ரோ பண்ணுவான் பண்ணுவான்னு பார்க்கிறேன் என் பக்கமே திரும்ப மாட்டேகுறான் சோ நானே என்னை இன்ரோ பண்ணிக்கிறேன் என்னோட பேரு வித்யா உங்கள் லீயோட லவ்வர்” என்று அறிமுகபடுத்த
நேஹா அதிர்ந்து அவனை பார்த்தாள் அவன் கண்களிலும் மெலிதாக அதிர்வு தெரிந்ததோ என்று யோசிக்கும் போதே அவன் அந்தப் பெண்ணின் தலையில் கொட்டி “இன்னும் கொஞ்ச நேரமும் போச்சுன்னா நானே அறிமுகப்படுத்தி இருப்பேன்”என்று சொல்ல அந்த வார்த்தை அவள் சந்தேகத்தை விரட்டியடித்தது
“என்னடா நேஹா முழிக்கிறத பார்த்தா நீ என்ன பத்தி ஒரு வார்த்தை கூட இதுவரை சொன்னதில்லை போல நான் உனக்கெல்லாம் போய் லவ்வரா இருக்க ஒத்துக்கிட்டேன் பாரு என்ன சொல்லணும்”
“போதும் வாயை மூடு நேஹா நீங்க உள்ள போங்க எல்லாரும் உங்களுக்காக வெயிட் பண்ணுவாங்க நான் இவள அனுப்பி வச்சுட்டு வரேன்” என்று கூற அவளும் தலை அசைத்து சிரிப்புடன் மண்டபத்தின் உள்ளே சென்றாள்
ஆனால் லியான் இவர்கள் இருக்கும் இடம் வரும் முன்னே அனைவரிடமும் சொல்லிவிட்டு விடை பெற்று சென்று இருந்தாள்
வீட்டிற்குள் நுழைந்த நேஹாவை பார்த்ததும் அவள் தந்தை “என்ன பேபி பிரண்டோட எங்கேஜிமெண்ட் முடிஞ்சு லேட்டா தான் வருவேன்னு சொல்லிவிட்டு போனா இவ்ளோ சீக்ரமா வந்துட்ட” என்று கேட்க ஓடிவந்து அவர் அருகில் சோபாவில் அமர்ந்து அணைத்து கொண்டு அழத் தொடங்கினாள்
அவருக்கு எதுவுமே புரியவில்லை “பேபி என்ன ஆச்சு ஏன்டா அழுவுற என்ன ஆச்சுன்னு சொல்லு மா எதுவா இருந்தாலும் சரி பண்ணிடலாம் அழாதடா” என்று ஏதேதோ கூற அவள் அழுகை நின்றபாடில்லை
“பேபி இப்ப அழுகுறத நிறுத்திட்டு என்னன்னு சொல்ல போறியா இல்லையா” என்று சற்று குறல் உயர்ந்த கேட்டு அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்து விட்டார்
“டாடி டாடி லீ”
“லியானுக்கு என்னடா”
“நான் இன்னைக்கு என் லீயோட லவ்வர பார்த்தேன்”
‘இது என்ன புதுக்கதை’ என்று நினைத்துக்கொண்டே “எப்போ” என்று கேட்டார்
“இன்னைக்கு ஃபங்ஷன்ல”
“பேபி லியானே உன்கிட்ட சொன்னானா” 
“இல்லை டாடி இன்னைக்கு பங்க்ஷன் போம்போது லியான் ஒரு பொண்ணு கிட்ட பேசிட்டு இருந்தான்”
“என்னம்மா நீ ஒரு பொண்ணு கிட்ட பேசினா அது உடனே லவ்வரா”
“இல்லை டாடி அந்த பொண்ணு தான் சொன்னா அதுவும் லீ முன்னாடியே தான் அந்த பொண்ணு அவளை என்னோட லீயோட லவ்வர்னு சொன்னா”
“சரிடா அவன் லவ் பண்ண லவ் பண்ணிட்டு போடும் நீ ஏன் டா இப்படி அழுகுற டாடிக்கு கஷ்டமா இருக்குடா”
“டாடி ஐ லவ் ஹிம்”
“இதுவரைக்கும் இத சொன்னதே இல்லையே பேபி”
“எனக்குத் தெரியலையே டாடி நான் அந்த பொண்ணு பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் லீ என்னோட வாழ்க்கைல ரொம்ப ஸ்பெஷலான ஒருத்தன்னு மட்டும் தான் நினைச்சேன் எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும் டாடி எல்லாரையும் விட எனக்கு அவன ரொம்ப பிடிக்கும் டாடி” என்று அழுதுகொண்டே கூறியவள் திடிரென
“எனக்குத் தெரியலை சரி உனக்கு ஏன் டாடி தெரியல நான் அவன லவ் பண்றேன்னு நான் உன் கிட்ட இது வரைக்கும் யாரையும் பத்தி இவ்வளவு பேசினது இல்லையே டாடி அப்படி இருக்கும்போது உனக்கு ஏன் டாடி தெரியல நான் அவன லவ் பண்றேன்னு நீ ஏன் டாடி என்கிட்ட சொல்லல நான் லவ் பண்றத” என்று கத்திக் கொண்டிருந்தாள் அழுதுகொண்டே அவள் அறை நோக்கி சென்றாள்
சிறிதுநேரம் யோசனையோடு இருந்த கபூர் தன் மகளின் அறை நோக்கி செல்ல அவள் தூக்கத்திலும் அழுது கொண்டே படுத்திருந்தாள் அவள் தலையை தடவிக் கொடுத்தவாறு அருகில் இருந்தவரின் கண்களில் அத்தனை வலி
ஒன்பதாம் ரவுண்டிர்க்காண நாள் நெருங்கி வந்தது நேகா யாருடனும் பேசாமல் மொபைலை ஆப் செய்து வைத்து வீட்டிலேயே இருந்தாள்
“பேபி இன்னும் ரெண்டு நாள்ல ப்ரோக்ராம் இருக்கு நீ இப்படியே இருந்தா என்ன அர்த்தம்”
“நான் ப்ரோக்ராம்க்கு வரல டாடி”
“என்ன பேபி இப்படி சொல்ற நீ ஒன்னும் ப்ரோக்ராமை சும்மா பார்க்க வரல நீதான் ப்ரோக்ராமை கோஸ்ட் பண்ற”
“ப்ளீஸ் டாடி என்னால முடியாது” என்று அவள் கூறி முடிக்கும் முன்பே கண்களிலிருந்து கண்ணீர் கன்னம் தாண்டி இருந்தது
“சரி அப்போ நீ மாடலிங் பண்ணு நீ மாடலிங் நிறுத்தி ஒரு வருஷம் ஆகப்போகுது “
“டாடி “
“எதுவுமே பண்ண மாட்டேனு சொன்னா எப்படி டா நீ எப்படி இருக்கிறத பாக்குறதுக்கு டாடிக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா”
“ஓகே டாடி நான் மாடலிங் பண்றேன்”
“சரி டா இப்போ வந்து சாப்டு”
“நீங்க போங்க டாடி நான் வரேன்”
ஒன்பதாவது ரவுண்ட் மிகச் சிறப்பாக எப்போதும் போல் ஆடம்பரமாகவும் ஆரம்பமானது மியூஸிக் மைன் பேண்ட் முழுவதும் நேகாவிற்காக காத்திருந்தனர் ஏனெனில் ஒரு மாதமாக அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லை எப்பொழுதும் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால் வந்து வாழ்த்தி செல்பவளின் வரவிற்காக இன்றும் காத்திருந்தனர் ஆனால் அவள் வந்தபாடில்லை
நிகழ்ச்சி ஆரம்பமானது ஆனால் ஆரம்பித்தது அசோக் “ஹாய் ஃப்ரண்ட்ஸ் என்ன திடிர்னு நான் வந்திருக்கேனு பார்க்குறீங்களா உங்க கிட்ட முக்யமான ஒரு விஷயம் சொல்லதான் வந்திருக்கேன் இந்த ரவுண்லேந்து ஒவ்வரு மாசமும் ஒவ்வரு கோஸ்ட் வருவாங்க நம்ம பைண்ட்ட என்கரேஜ் பண்றதுக்காக……..”
மதி “எங்க தான் போன இந்த நேஹா ஒரு மாசமா எந்த ஒரு போனும் இல்ல மெசேஜ் இல்ல அன்னிக்கு என்னோட எங்கேஜிமெண்டுக்கு வந்தது தான் இப்போ புரோகிரம் அசோக் கோஸ்ட் பண்றாங்க எதுவுமே புரிய மாட்டேங்குது”
கிஷோர் “ஒருவேளை அவங்களுக்கு முக்கியமான வேலை வந்திருக்குமோ என்னவோ”
மதி “ஒரு மெசேஜ் பண்ண கூடவா டைம் இருக்காது”
லியான் “சரி அத அப்புறமா பார்த்துக்கலாம் நாம இன்னைக்கு அஞ்சாவதா பர்வாம் பண்ணனும் ரெடி ஆகுங்க” என்று கூற அனைவரும் அவன் கூறியதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர் 
என்றும் போல் அன்றும் அவர்கள் மிகவும் திருத்தியாகவும் நன்றாகவும் பர்வாம் செய்திருந்தனர் 
நேஹா அடுத்த இரண்டு மாதங்களில் மாடலிங் செய்ய ஆரம்பித்திருந்தாள் அவள் தந்தைக்காக பழையபடி இருக்க முயற்சித்தாலும் அவள் கண்களில் ஒரு ஏக்கம் குடியேறி இருந்தது
முதலில் எல்லாம் வெளி இடங்களில் ஷூட்டிங் என்றாலும் இரவு எத்தனை நேரமானாலும் வீட்டிற்கு வந்து விடுபவள் இப்பொழுது அங்கேயே தங்கி சூட்டிங்கை செய்ய ஆரம்பித்தாள்
முதலில் அவள் தந்தையும் எந்த ஒரு எதிர்ப்பும் கூறாமல் அவள் போக்கிலேயே விட்டார் அவள் கொஞ்சம் கொஞ்சமாய் திரும்பி வரட்டும் என்று ஆனால் அவளோ நாட்கள் போகப்போக வெளியில் தங்கும் நாட்களை கூட்டிக் கொண்டாள்
இங்கு லியான் போட்டிகளிலும் ஆபீஸ் வேளையிலும் தன் முழு நேரத்தையும் செலவழித்து கொண்டிருந்தான்
பிராக்டீஸ் செய்யும் போது அப்போது செய்யும் சிறு சிறு தவறுகளோடும் கேலி கிண்டல்களோடும் பறந்தோட தொடங்கியது அவர்களின் நாட்கள்
ஆனால் இங்கு நேஹாவிற்க்கு ஒரே நாளை போக்குவதே மிகவும் கடினமாக இருந்தது அவளுக்கு மாடலிங்கில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் தட்டிக் கழிக்காமல் செய்துகொண்டே இருந்தாள் சற்று நேரமாவது எதைப்பற்றியும் சிந்திக்க வேண்டாம் என்று ஆனால் அதுவும் அவளுக்கு சாத்தியப்படவில்லை
இப்போது நியூ பேண்ட் காம்படிஷன் பத்தொன்பதாவது ரவுண்டை எட்டியிருந்தது அதாவது பைனல் ரவுண்ட் அதற்கு இனி இரண்டு வாரங்களே இடையில் இருந்தது அனைத்து சேனல்களிலும் இதற்கான விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தது
மியூசிக் மைன்
            VS
ஸ்பிரின்ட் மியூசிக் 
இரண்டு பேண்டுமே தங்களது பிராக்ட்டிஸை தீவிரப்படுத்தி இருந்தனர் இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மியூசிக் நைட் அந்த ஒன்றே அனைவரையும் இயக்கி கொண்டிருந்தது
அனைவரும் எதிர்பார்த்ததை விட இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது  பேண்டில் இருக்கும் தனித் தனி நபர்களுக்கும் தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் இருந்தது எவ்.பி யும் இணையதளமும் மிகவும் பிஸியாக இருந்தது இந்தப் போட்டியின் காரணமாக
நேஹா லீயை நேரில் பார்த்து பதினொரு மாதங்கள் கடந்திருந்தது ஆம் நேரில் தான் அவனைத்தான் தினமும் இணையதளத்திலும் டிவியிலும் பார்க்கிறாளே
அவள் அவனது கடந்த மாத பர்வாமன்ஸை மொபைலில் பார்த்துக் கொண்டிருக்க அவள் டாடியிடம் இருந்து கால் வந்தது
“ஹலோ டாடி”
“இன்னும் எத்தனை நாள் அங்கேயே இருக்கப் போற பேபி நீ வீட்டுக்கு வந்து மூனு மாசமாகப் போகுது”
“அது வந்து டாடி…  ஷூட்”
“செல்லு பேபி நீ என்ன சொன்னாலும் நம்புறேன்”
“சாரி டாடி”
“நீ அங்கே இருந்து என்ன பண்றேன்னு எனக்கு தெரியாதுனு நினைக்கிறாயா பேபி சரி அத விடு எப்ப வர்றே உன்னோட டாடியை பார்க்க”
“இப்போ ஒரு ஷூட் போயிட்டு இருக்கு டாடி இன்னும் ஒன் வீக்ல வரேன்”
“சரிடா உனக்காக காத்திருக்கேன்”
“பாய் டாடி”
நேஹாவிற்க்கு இத்தனை மாதங்களில் மனதின் வலி சற்றும் குறைந்ததாகத் தெரியவில்லை லீயிடம் இருந்த அவள் மனதை திசை திருப்பவும் அவளால் முடியவில்லை இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்றும் புரியவில்லை ஆனால் தன் தந்தைக்காக அவரிடம் கூறியது போலவே ஒரு வாரத்தில் வீட்டிற்கு வந்திருந்தாள்

Advertisement