Advertisement

சுரங்கம் 5
நாட்கள் வேகமாக ஓடி மாதங்கள் ஏழு கடந்திருந்தது இதற்கிடையில் சில முக்கியமான சம்பவங்களும் நடந்திருந்தது நேஹா லியோனின் பேண்டோடு நெருங்கிய நட்பு உணர்வை ஏற்படுத்தி இருந்தாள்
முதல் முறை அவனிடம் சென்று பேசியதை இன்று நினைத்தாலும் ரசனை புன்னகை அவள் உதட்டில் வந்தமரும்
முதல் ரவுண்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேஹா நேராக லியானின் பேண்ட் இருந்த இடத்தை நோக்கி சென்றாள்
நேஹா “ஹாய் இன்னிக்கு ரொம்ப நல்லா பண்ணீங்க”
அனைவரும் சேர்ந்து தேங்க்யூ என்று கோரஸ் பாடினர்
கிஷோர் “நாங்கள் டிவில எல்லாம் பாத்துருக்கேன் ஆனா நேரில அதைவிட ரொம்ப அழகா இருக்கீங்க”
நேஹா “தேங்க்யூ”
சரண் “உங்க வயசு என்ன இருக்கும்”என்று கேட்க அவள் முடழித்தாள்
லியான் “சாரி தப்பா எடுத்துக்காதீங்க”
நேஹா “நான் தப்பா எடுத்துக்கல ஆனா வெளிய போயி இந்த மாதிரி வயசு கேட்டுடாதீங்க அப்புறம் உங்க நிலமை பாவமாய்டும்”
சரண் “இல்ல சாரி”இன்று என்ன கூறுவது என்று அவன் தடுமாற
லியான் “அது ஒன்னும் இல்ல சாருவயும் மகியையும் நாங்க எல்லாரும் சிஸ்னு தான் கூப்பிடுவோம் அதான் உங்கள எப்படி கூப்பிடறதுனு கேட்கிறான்”
நிகா “ஐயோ நீங்க என்ன சிஸ்டனு எல்லாம் கூப்பிட வேண்டாம்”என்று அவனைப் பார்த்து கிட்டத்தட்ட கத்தினாள்
மாணிக் “என்னங்க நீங்க பாய்ஸ் தான் அண்ணான்னு கூப்பிட டென்ஷன் வாங்க நீங்களும் அதே ரியாக்சன் கொடுக்குறீங்க”
நேஹா “நீங்க யாரும் என்ன சிஸ்டர்னு கூப்ட வேண்டாம்” என்று முழித்து கொண்டே கூற லியான் நன்றாகவே சிரித்து விட்டான் அந்த சிரிப்பை படம் எடுத்து இதய சுரங்கத்தில் சேகரித்தாள் அவள் 
பின் வீட்டிற்கு சென்று அவனுடன் முதன்முதலாக பேசியதை தந்தையிடம் சொல்லி குதித்தது தனிக்கதை அதன் பின் ஒவ்வொரு முறையும் அவர்களுடன் பேசிப் பேசி அவர்கள் பிராக்டிஸ் செய்யும் இடம் வரை செல்ல ஆரம்பித்திருந்தாள் லியானை லீ என்று அழைக்கவும் தான் அத்தோடு லீயிடம் தனியாக தான் கபூரின் மகள் என்பது  யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறியிருந்தாள்
இப்போது அனைவரும் எட்டாம் ரவுண்டுக்கு தயாராக இருந்தனர் மாணிக்கும் மதியும் மெயின் லீடாக பாட மற்றவர்கள்  இன்ஸ்றுமெண்ட்ஸ் வாசிப்பதாக ஏற்பாடு
இன்னும் இரண்டு பேண்ட்களுக்கு பின் இவர்களது டேன் இவர்கள் அங்கு செல்வதற்கு தயாராக அந்த நேரம் அவர்கள் காது கேட்ட இசையில் அனைவரும் அதிர்ந்தனர்
அங்கு ஸ்டேஜில் சுப்ரீம் பேண்ட் பர்வாம் செய்து கொண்டிருந்தனர் மொத்தம் ஒன்பது பேர் கொண்ட பேண்ட் அது
Hey En Goli Sodaave
En Kari Kozhambe
Un Kutti Puppy Naan
Take Me Take Me
Hey En Silukku Satta
Nee Weightu Katta
Love Vu Sotta Sotta
Talk Me Talk Me
Aei My Dear Machchan
Nee Manasu Vechcha
Namma Orasikkalaam
Nenju Jigu Jigu Jaa
Hey My Dear Raani
En Dream la Vaa  Nee
Namma Onna Seraa
Fire Paththikiruchchaa
Raa Namma Beachu Pakkam Pothaan
Oru Dappaang Kuththu Vesthaan
Nee Ennudaiya Rowdy Baby
Raa You are only Girl Friendu
I will Give You Poochendu
We Will Make us New Trendu Baby
இவர்கள் இசைக்க ஆரம்பிக்க அங்கு‌ பார்த்த கொண்டிருந்த நேஹாவும் அதிர்ந்து விட்டாள் இதே பாடலை லீயின் பேண்ட் பிரக்டிஸ் செய்ததை இவளும் பார்த்தாள் தானே
கிசோர் “இப்ப நாம என்ன பண்றது”
மதி “ஒரே பாட்ட இரண்டு பேண்ட் பர்வாம் பண்ண கூடாதுனு இல்லையே நாம ப்ராக்டிஸ் பண்ணதையே பண்ணுவோம் வேற வழி இல்ல”
சரண் “எல்லாம் இந்த சாருவாலதான் நீ தானே இந்த பாட்டுக்கு நாம பர்வாம் பண்ண போறத அவங்க கிட்ட சொன்ன”என்று சொல்ல சாரு அதிர்ந்து அவனை பார்த்தாள்
மதி “சரண் யோசிச்சு பேசு ப்ளீஸ் சாரு இந்த மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் அதோட அவ எதுக்காக சொல்லனும்”
கிஷோர் “எத வச்சு நீ சாரு சிஸ் தான் இந்த மாதிரி பண்ணானு சொல்ற”
சரண் “அந்த டீம்ல ஒருத்தன் குரங்கு மாதிரி இருப்பானே அவன் கூட இவங்க பேசறது நான் பார்த்திருக்கேன்”
சாரு “அவன் என் கூட ஸ்கூல்ல படிச்சா அதனால பார்க்கும்போது பேசுவேன் அவ்வளவுதான் மற்றபடி நான் அவன்கிட்ட இத பத்தி எல்லாம் பேசினது கூட கிடையாது”
லியான் “காய்ஸ் நான் சொல்றத கேளுங்க இப்ப இத பத்தி பேச வேண்டாம்”
சாரி “ப்ரோ சத்தியமா சொல்றேன் நான் எதுவும் பண்ணல”
லியான் “உன்ன பத்தி எங்களுக்கு எல்லாருக்குமே தெரியும் அவன் எதோ டென்ஷன்ல இப்படி பேசறான் அவ்வளவுதான் இப்ப நம்ம பர்வாம் பண்ண போறத பத்தி மட்டும் தான் யோசிக்கணும்”
கிஷோர் “அதான் மதி சிஸ் நம்ம பிராக்டிஸ் பண்ணதையே பண்ணலாம்னு சொன்னாங்களே”
மாணிக் “இல்ல நாம அதே பண்ணா சரியா வராது”
மதி “நம்ம கிட்ட இப்ப டைம் இல்ல இன்னொன்னுக்கு பிரக்டிஸ் பண்றதுக்கு”
மாணிக் “நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு கண்டிப்பா  கொஞ்ச நேரத்துல ரொம்ப நல்லப் பர்ஃபாமென்ஸ் கொடுக்க முடியும்”
கிஷோர் “அப்போ எதுக்கு எல்லாருக்கும் ஒரு மாசம் டைம் தராங்க”
லியான் “ஒரு மாசம் டைம் தர்றது நமக்கு பிராக்டிஸ்காக இல்ல இந்த காம்படிஷன் நம்மளோட கடமைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காக ஒருவேளை மத்த காம்பெடிஷன் மாதிரி இதுவும் இருந்திருந்தா நான் கண்டிப்பா இல்ல கலந்து இருக்க மாட்டேன் என்ன மாதிரி உள்ளவங்களுக்காக தான் ஒரு மாசம் டைமே  தவிர நம்மளால கொஞ்ச நாள்ள பர்வாம் பண்ண முடியாதுனு இல்ல புருஞ்சதா”
சாரு “சரி ஓகே இப்ப நாம வேற பண்ணனும்னா இப்டி பேசிட்டு இருக்குறத விட்டுட்டு அத பத்தி யோசிக்கலாம்” என்று கூறி முடித்த நொடி “எஸ் கியூஸ் மீ” என்ற குரல் வாசலில் கேட்டது அனைவரும் திரும்பிப் பார்க்க அங்கு சற்று முன் சரண் கூறிய குரங்கு நின்றிருந்தது
சரண் “என்ன வேனும்”என்று காட்டமாகவே கேட்டான்
“ஐ யம் சாரி”
கிசோர் “எதுக்கு “
“அன்னிக்கு நான் சாருக்கு போன் பண்ணும் போது நீங்க பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்திருப்பீங்க போல போண்ல கேட்டது நான் என்னோட பேண்ட் மெட்ஸ் கிட்ட இந்த மாதிரி எனர்ஜிடிக் கானா சாங்ஸ் பண்ணலாம்ன்னு சொன்னேன் ஆனா அவங்க இப்படி இந்த சாங்கே பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கல சாரி”
மதி “இது உனக்கு முன்னாடியே தெரியும்னா நீ அப்பவே சொல்லி இருக்கலாமே இப்ப எதுக்கு வீணா சாரி கேட்டு சீன் கிரியேட் பண்ற”
“இல்ல இத பத்தி எனக்கு முன்னாடியே தெரியாது நாங்கள் வேற தான் ப்ராக்டிஸ் பண்ணி இருந்தோம் என்னோட இன்ஸ்றுமெண்ட்ஸ் திடீர்னு பிராப்ளம் ஆயிடுச்சு அதனால தான் நான் ஸ்டேஜுக்கு போகல ஆனா அவங்க திடீர்னு இப்படி பண்ணு வாங்கனு நான் எதிர்பார்க்கல”
மாணிக் “இங்க பாரு எங்களுக்கு டைம் ரொம்ப கம்மியா இருக்கு ப்ளீஸ் நீ போறியா”என்றதும் அவள் சென்றுவிட்டான்
சாரு “சாரி நான் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்து இருக்கணும்”
லியான் “இப்ப அத பத்தி பேச வேண்டாம் இப்ப நம்ம……” என்று அவர்கள் செய்யப் போவதை பற்றி பிளான் செய்ய ஆரம்பித்தனர்
இவர்களது பேண்ட் நேமை கூறி அங்கு நேஹா அழைக்க இவர்கள் ஸ்டேஜ் ஏறினர் அவள் தவிப்புடன் இவன் முகம் காண இவன் தன் இமைகளை மூடித் திறந்து அவளுக்கு தைரியம் அளித்தான்
லியான் கிட்டாரோடு மைக்கின் அருகே ஒரு சேரில் அமர அவனருகே மாணிக் நின்றிருந்தான் மற்ற அனைவரும் அவரவர் இன்ஸ்றுமெண்ட்ஸோடு தயாராக இருந்தனர்
முதலில் மாணிக் இசைக்கு ஆரம்பிக்க அவர்களின் குழுவும் இணைந்தது அத்தோடு லியோனின் மாயக்குரலும்
கண்ணிலே கண்ணீரிலே
பிரிந்தே நான் போகின்றேன்
விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே
நான் மெல்ல மெல்ல கரைந்தேன்
அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும் விழைந்தேனே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே
இரவும் என் பகலும்
உன் விழியின் ஓரம் பூக்கின்றதே
உதிரும் என் உயிரும் உன்
ஒரு சொல் தேடி அலைகின்றதே
எண்ணானதோ என் காதலே
மண் தாகம் தீரும் மழையிலே
அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை தொடர்ந்திட
நானும் விழைந்தேனே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே….. 
இசைத்து முடித்து அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அவர்கள் பர்வாம் செய்தது அவர்களுக்கு திருப்தி ஆகவே அமைந்திருந்தது
அன்று ப்ரோக்ராம் முடிந்ததும் எப்போதும் போல் நேஹா அவர்கள் பேண்ட் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாள் “காய்ஸ் இப்பதான் போய் பேசிட்டு வரேன் அவளுடைய இன்ஸ்றுமெண்ட்ஸ் ஏதோ ப்ராப்ளம் ஆயிடுச்சு அதனால தான் திடீர்னு சேஞ்ச் பண்ணி இருக்காங்க”
லியான் “அவங்க தெரியாம எல்லாம் பண்ணல வேணும்னு தான் பண்ணி இருக்காங்க”
நேஹா ” என்ன சொல்ற லீ”
சரண் “ஆமா அவங்க நாங்க இந்த பாட்டுக்கு பர்வாம் பண்ண போறது தெரிஞ்சுகிட்டே தான் அப்படி பண்ணி இருக்காங்க”
நேஹா “வாட் இத நாம கண்டிப்பா சும்மா விடக்கூடாது நான் என்ன பண்றேன்னு பாருங்க” என்று கூறி அவள் திரும்ப அவள் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் லியான் அவனின் முதல் தொடுகை அந்த நிலையையே அவளை மறக்க வைத்திருந்தது
லியான் “எதுவும் பண்ண வேண்டாம் இனிமே நாங்க கேர்ஃபுல்லா இருப்போம்”
கிஷோர் “அப்படி என்ன பண்ண முடியும் உங்களால”
நேஹா “இந்த வாட்டி அவங்க இன்ஸ்ட்ருமென்ட்ஸ் பிராப்ளம் ஆன மாதிரி அடுத்தவாட்டியும் ஆகிட்டா எப்படி இருக்கும்”என்று ஒத்திப் புருவத்தை தூக்கி கேட்க
லியான் “நான் எதுவுமே பண்ண வேண்டாம்னு சொன்னேனே”
நேஹா “நான் பண்றேன்னு சொல்லலியே எப்படி இருக்குனு தான் கேட்ட இல்லையா கிஷோர்”
கிஷோரும் ஆமா ஆமா என்று வேகமாக தலையை அசைத்தான் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்
லியான் எதுவும் செய்யவேண்டாம் என்று கூறியிருந்தாலும் நேஹாவின் மனம் அதனை ஏற்க மறுத்தது இரவு தந்தையிடம் இங்கு நடந்தது அனைத்தையும் கூறினாள் அவள் தந்தையும் லியான் கூறியது போன்றே இனிமேல் அவர்கள் கவனமாய் இருப்பார்கள் இது ஒரு பாடம் என முடித்துக்கொண்டார் இதற்குமேல் இதை பேச வேண்டாம் என்று
“போங்க டாடி வரவர நீங்களும் லீ மாதிரியே பேசு ஆரம்பிச்சுட்டீங்க” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாள்
லியான் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது ஒருவர் வந்து அவனை எம்டி அழைப்பதாக கூற இவனும் அவர் அறைக்கு சென்றான்
“ஹலோ எங் மேன் எப்படி போகுது உங்களோட காம்பெடிஷன்”
“ரொம்ப நல்லா போகுது சார் உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் நீங்க மட்டும் என்கிட்ட பேசலனா நான் கண்டிப்பா இத மிஸ் பண்ணி இருப்பேன்”
“என்னோட சேனல்ல நீ பர்வாம் பண்றது எனக்கு தான் பெருமை அதோட என்னோட பொண்ணு சொன்னா அந்த ப்ராப்ளம் பத்தி ரொம்ப நல்லா மேனேஜ் பண்ணி இருக்க”
“தேங்க்யூ சார் அப்புறம் இன்னொரு விஷயத்தில் கூட நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் என்னோட ஒர்க்க கம்மி பண்ணதுக்கு”
“நான் எதுவுமே பண்ணல நான் உன்னோட எக்ஸ்ட்ரா ஒர்க் மட்டும்தான் கட் பண்ணேன்”
“வேலை பார்க்கும் போது எனக்கே தெரியுது சார்”சிரிக்க அவர் முகத்திலும் புன்னகை வந்தது

Advertisement