Advertisement

சுரங்கம் 3
நியூ சேனலின் சொந்தமான ஆடிட்டோரியம் நியூ பேண்ட் காம்படிஷன் செலக்சனுக்காக தயாராகிக் கொண்டிருந்தது அது லைவ் இல்லை என்றாலும் கேமராக்கள் அனைத்தும் போட்டியாளர்களை படம் பிடிக்கத் தயாராக இருந்தது
காம்படிஷனுக்கு ரெஜிஸ்டர் செய்வதற்காக உருவாக்கியிருந்த பேஜில் 250க்கும் மேற்பட்டோர் ரெஜிஸ்டர் செய்திருந்தனர்
காலை 11 மணி அளவில் அங்கு வந்திருப்பவர்கள் ஐ எண்ணிக்கை இட 250க்கு மேலேயே வந்திருந்தனர் முதலில் ரிஜிஸ்டர் செய்து இருந்தவர்களை வரிசையாக பர்வாமன்ஸ் செய்ய அழைக்க ஒவ்வொருவரும் வந்து அவர்களது திறமையை வெளிப்படுத்தினர்
அதிகமாக போட்டியாளர்கள் வந்து இருந்ததால் ஒரே நாளில் முடியாதென்று பாதிப் பேரை மறுநாள் வரச் சொல்லி அனுப்பி வைத்தனர் அதில் ஒருவனாய் லியானும்
லியான் வீட்டிற்குள் நுழைந்ததுமே “எப்படி அண்ணா பண்ணனுன உன்ன செலக்ட்  பண்ணிட்டாங்களா” என்று அவனது தங்கை வந்து கேட்டாள்
“என்னோட டேன் நாளைக்கு தாண்டா வருது அது மட்டுமில்லாம உடனே எல்லாம் சொல்ல மாட்டாங்க இரண்டு நாளைக்கு அப்புறம் தான் சொல்லுவாங்க”
“ஏன் அப்டி”
“அவங்க எதிர்பார்த்ததை விட ரொம்ப நிறைய பேர் வந்து இருந்தாங்க அவங்களுக்கு செலக்ட் பண்றதுக்கும் டைம் ஆகும் தானே”
“மொத்தம் எத்தனை பேர அண்ணா செலக்ட் பண்ணுவாங்க”
“அந்த மாதிரி கணக்கெல்லாம் இல்லடா நல்லா பண்ண எல்லாரையுமே செலக்ட் பண்ணுவாங்க”
“ஐ அப்படின்னா நீயும் கண்டிப்பா செலக்ட் ஆய்டுவ இல்லன்ணா அப்போ நான் உன்ன டீவில பாக்கலாம் இல்ல” என்று சந்தோஷ கூச்சலிட அவர்களின் பெற்றோரும் அதில் கலந்து கொண்டனர்
அடுத்த நாள் லியானை சூரியன் உச்சிக்கு வரும் நேரத்தில் அழைத்தனர் கையில் கிட்டாரோடு எப்பொழுதும் அணிந்திருக்கும் ஆடை மாறி டி-ஷர்ட் ஜீன்ஸ் போட்டு அதற்கு மேல் ஓவர்கோட் என்று கண்ணை பறிக்கும் விதமாக வந்தவனை “அங்கு வரக் கூடாது” என்ற தந்தையின் வார்த்தைகளை மீற முடியாமல் தன் முன் இருந்த லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் நேஹா
மைக்குக்கு நேராக போட்டிருந்த ஒரு உயர்ந்த சேரில் அமர்ந்து ஒரு காலை கீழே ஊன்றி கிட்டார் இல் தன் கைகளை வைத்துக்கொண்டு நிமிர்ந்து கேமராவை பார்க்க இவளும் லேப்டாப்பில் அந்த கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் கிட்டாரை பிளே செய்ய ஆரம்பித்தான்
My friends say I’m a fool to think
That you’re the one for me
I guess I’m just a sucker for love
‘Cause honestly the truth is that
You know I’m never leaving
‘Cause you’re my angel sent from above
Baby, you can do no wrong
My money is yours
Give you little more because I love you, love you
With me, girl, is where you belong
Just stay right here
I promise my dear I’ll put nothing above you, above you
Love me, love me
Say that you love me
Fool me, fool me
Oh, how you do me
Kiss me, kiss me
Say that you miss me
Tell me what I wanna hear
Tell me you (love me)
People try to tell me
But I still refuse to listen
‘Cause they don’t get to spend time with you
A minute with you is worth more than
A thousand days without your love, oh, your love (Baby, you can do ,love me)
My heart is blind but I don’t care
‘Cause when I’m with you everything has disappeared
And every time I hold you near
I never wanna let you go, oh (love me)
என்று அவன் பாடி முடிக்க எப்போதும்போல் அவனுடய இசையில் மாயலோகத்தில் சஞ்சரித்து இருந்தவள் மீண்டு மீண்டும் அவனைப் பார்த்தாள் இந்த பாடலை Justin Bieber பாடும் போது கூட இவ்வளவு ரசித்திருக்க மாட்டாள்
அடுத்தடுத்து வந்தவர்களும் அவர்களது திறமையை காட்ட இவள் கண்கள் அதை பார்த்தாலும் மனம் என்னமோ அவனது இசையிலேயே நின்றிருந்தது
லியான் சொன்னது போல் அடுத்த இரண்டு நாட்களில் 155 பேர் தேர்வாக அவர்கள் அனைவருக்கும் மொபைலில் மெசேஜ் அனுப்பி இருந்தனர் அவனிருக்கும் வந்திருந்தது அதை வீட்டில் பகிர அவனைவிட அவன் தங்கைதான் சந்தோஷத்தில் குதித்தாள் 
அந்த மெசேஜில் தேர்வானவர்கள் அனைவரையும் அடுத்த நாள் அதே ஆடிட்டோரியத்திற்க்கு  வர சொல்லி இருந்தனர்
அனைவரும் ஆடிட்டோரியத்தில் போடப்பட்டு இருந்த சேரில் அமர்ந்து இருக்க ஒருவன் மேடை ஏறி பேசத் தொடங்கினான்
“ஹாய் ஃபிரண்ட்ஸ் என்னோட பேர் அசோக் இந்த காம்படிஷன பொருத்தவரை உங்களுக்கு என்ன டவுட் இருந்தாலும் நீங்க என்கிட்ட கேட்கலாம் முதல்ல நீங்க பண்ண வேண்டிய விஷயத்தை நான்  சொல்றேன இன்னைக்கு நீங்க உங்களோட பேண்ட மெம்பர்ஸ் செலக்ட் பண்ணனும்”
“எப்படின்னு கேட்கிறீங்களா அதுக்கு ஒரு வழி இருக்கு எங்களுடைய சேனல் வெப்சைட் ஓபன் பண்ணி பாருங்க அதுல உங்களோட 155 பேர் பர்வாமன்ஸ்சும் அப்லோட் பண்ணி இருக்கோம் அத பார்த்து நீங்க டிசைட் பண்ணலாம் நீங்க யார தேர்ந்தெடுக்குறீங்களோ அவங்களுக்கு உங்க வீடியோலேந்து ஒரு ரிக்வெஸ்ட் கொடுங்க அவங்க அக்சப்ட் பண்ணிகிட்டடா நீங்க ஒரே பேண்ட்ல இருக்கலாம் ஒரு பேண்ட்ல குறைஞ்சது அஞ்சு பேர் கூடுதலா பத்து பேர் இருக்கலாம் அதுக்கு மேல குறையவும் கூடாது கூடவும் கூடாது”
“உங்களுக்கு நாங்க அஞ்சு மணி நேரம் டைம் தரோம் அதுக்குள்ள உங்க பேண்ட்ட நீங்க செலக்ட் பண்ணனும் மதிய சாப்பாடும் இங்கே உங்களுக்கு ரெடியா இருக்கு நீங்க சாப்பிட்டுட்டு கூட யோசிக்கலாம் ஆனால் அஞ்சு மணி நேரத்துக்கு அப்புறம் யாரு இன்னும் பேண்ட்ட  தேர்ந்தெடுக்கலியோ அவரங்கள நாங்களே ஜாயின் பண்ணி விட்டுவோம் சோ யுவர் டைம் ஸ்டார்ட் நவ் “என்று கூறி மேடையிலிருந்து இறங்கினான்
லியானிற்க்கு அவனது அருகில் அமர்ந்திருப்பவர்கள் பேசியதில் தெரிந்தது மேடையேறி பேசியவன் இந்த சேனலில் சிங்கின் காம்படிஷனை கோஸ்ச் செய்பவன்  ஒருவேளை இந்த காம்படிஷனுக்கும் அவனே செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்தனர்
லியான் ஒவ்வொரு வீடியவாக   பார்த்துக்கொண்டிருக்க நேரமும் கடந்து கொண்டிருந்தது இரண்டு மணிநேரங்கள் கடந்த நிலையில் ஒருவன் வந்து அவனிடம் அறிமுகம் செய்து கொண்டான்
“ஹாய் என்னோட பேரு மாணிக் இவங்க என்னோட ஃபிரண்ட்ஸ் சரண் ஆன்ட் கிசோர் எங்களோட பர்ஃபாமென்ஸ் பார்த்தீர்களா” என்று கேட்க லியான் அவன் மொபைலை காட்டினான் அதில் கிஷோர் பியானோ வாசித்து ஓடிக்கொண்டிருந்தது
மாணிக் “ப்ரோ எங்க ரெண்டு பேரோடதையும் கூட பாருங்க நாங்க மூணு பேருமே காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் உங்களுக்கு எங்களோடது ஓகே னா நம்ம ஜாயின் பண்ணிக்கலாம்”
லியான் “நான் ஆல்ரடி பாத்துட்டேன் எனக்கு ஓகே” என்று கூற நால்வருமே அவர் அவரின் மொபைலில் மற்ற மூவரின் பெயரோடு தங்களது பெயரை இணைத்துக் கொண்டனர்
சரண் “இப்போ நாம நாலு பேர் இருக்கோம் இன்னும் யாராவது வேணுமே”
லியான் “நான் அப்புறம் மாணிக் ரெண்டு பேருமே கிட்டார் அப்புறம் பியானோ கிஷோர் டிரம்ஸ் சரண் அப்படினா நமக்கு தேவ ட்ரெடிஷனல் மாதிரி வயலின் ஏதாவது”
கிஷோர் “நாங்க எல்லா வீடியோவும் பார்த்து முடிக்கல எல்லாத்தையும் பாத்திடலாம் யாராவது நமக்கு இல்லாமலா போய்விடுவாங்க” என்று கூறி மீண்டும் பார்க்கத் தொடங்கினர்
“டாடி லியான் 3 காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் கூட ஜாயின் பண்ணி இருக்கான் “
“ம்”
“டாடி இந்த ரெண்டு பொண்ணுகளை பாருங்களேன் மதி ஆன்ட் சாரு ரொம்ப நல்லா வயலினும் புல்லாங்குழலும் வாசிக்கிறாங்க இவங்கள நம்ம பேண்ட்ல ஜாயின் பண்ணி விடலாமா”
“இப்போதைக்கு நாம எதுவும் பண்ண முடியாது பேபி இன்னும் நாம கொடுத்த டைம் முடியல”
“அதுக்குள்ள அவங்க வேற ஏதாவது பேண்ட்ல  சேர்ந்துட்டாங்கண்ணா”
“நோ டாடி ப்ளீஸ் டாடி”
“இங்க பாரு பேபி இந்த காம்பெடிஷன்* ஸ்டன்லே சேட்ஸ் யாரும் கிடையாது ஒவ்வொரு தடவையும் எழுமின போறவங்கள மக்கள்தான் முடிவு பண்ண போறாங்க நீ இந்த மாதிரியே அப்பவும் பண்ணுனா”
“டாடி திஸ் இஸ் டூ மச் நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை எனக்கு இது எல்லாமே தெரியும் நான் காம்படிஷன் ல எதுவும் சேஞ்ச் பண்ண சொல்ல மாட்டேன் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு  லியான் பேண்ட் கண்டிப்பா வின் பன்னும்”
“அப்போ எதுக்காக இப்ப இந்த பொண்ணுகள சேர்க்க சொல்ற”
“என்ன டாடி நீங்க பேண்ட் ல ஒருத்தர் சொதப்பினாலும் மொத்தமா கெட்டுப் போயிடும் பெஸ்ட்டா இருக்க வேண்டானாலும் வொர்ஸ்ட்டா இல்லாம இருக்கனும் இல்ல”
“சரிதான் அப்படின்னா உன்னோட கண்ணுக்கு லியான தவிர யாரும் பெஸ்ட் இல்ல அப்டிதானே”
 
“டாடி இப்ப நான் கேட்டது செய்ய போறீங்களா இல்லையா” என்று கேட்க அவர் மொபைலில் இருந்து அசோக்கிற்கு கால் சென்றது
அந்தப் பெண்கள் இருவரும் ஒரு மொபைலை வைத்து  பார்த்துக் கொண்டிருக்க அசோக் அவர்கள் அருகில் சென்று “எஸ் கியூஸ் மீ எதாச்சு உதவி தேவைபடுதா” என்று கேட்க கண்ணாடி போட்டு இருந்த பெண் அவனைப் பார்த்து முறைத்தாள் இன்னொருத்தி “அது வந்து சார் யாரை செலக்ட் பண்றதுன்னு ரொம்ப கன்ப்யூஸ் டா இருக்கு” என கூறினாள்
“ஒரு நிமிஷம் அந்த மொபைலை இப்படி கொடுங்க’ என்று அதனை வாங்கி அதில் ஏதோ கிளிக் செய்தான் “இத பாருங்க இது நீங்க எவ்.பி யூஸ் பண்ற மாதிரி தான் உங்களுக்கு இதுல யாரோட பர்வாமன்ஸ் பிடிச்சிருக்கோ அவங்களுக்கு ரிக்வெஸ்ட் கொடுங்க அக்சப்ட் பண்ணிக்கிட்டா நீங்கள் ஒரே பேண்டிவ் இருந்துக்கலாம் இதுல ஆல்ரெடி குரூப்பா சேர்தவங்க பேரும் இருக்கு இதுல எந்த பேண்டோட சேர விருப்பமோ அவங்களுக்கு கூட நீங்க ரிக்வெஸ்ட் கொடுங்கலாம் ” என்று அவர்களிடம் கூறிவிட்டு சென்றான்
“ஏன்ன டாடி இன்னும் அந்த பொண்ணுங்க பேண்ட்ல சேரல”
” அவங்களுக்கும் நாம ஒரு வாய்ப்பு கொடுக்கணும் பேபி அவங்களுக்கு வேற ஏதாவது டீம் பிடிச்சிருந்தா”
“டாடி”
“பேபி லியானுக்கு அவனோட பேண்ட்ல யாரு இருக்கனும்னு முடிவெடுக்க தெரியாதா”
“தெரியும் டாடி ஆனா இதுவரைக்கும் ஏன் அவன் அவங்க இரண்டு பேரையும் பார்க்கல” என்ற கேள்விக்கு அவள் தந்தை முழித்து கொண்டிருந்தார்
அதே நேரத்தில் சாரு என்ற பெண் புல்லாங்குழல் இசைப்பதை மொபைலில் பார்த்துக் கொண்டிருந்தான் லியான்
“காய்ஸ் இங்க பாருங்க இந்த பொண்ணு ரொம்ப நல்லா வாசிக்குது” என்று காட்ட அவர்களுக்கும் அவளது வாசிப்பு பிடித்திருந்தது அடனே ஒரு  ரிக்வெஸ்ட் அனுப்பி வைத்தான்
அந்தக் கண்ணாடி அணிந்து இருந்த பெண் “உனக்கு ஒரு ரிக்வெஸ்ட் வந்திருக்கு சாரு பாரு”
“ஆமா மதி நாம போய் அவங்கட்ட பேசிப் பார்க்கலாமா”
“பேசிப் பாக்குறதுக்கு முன்னாடி முதல்ல அவங்க பர்வாமன்ஸ் பாக்கணும்” என்று கூறி லியோனின் வீடியோவை பார்த்தவர்கள் நல்லா பாடுறாங்க நல்லா வாசிக்கிறாங்க என்று கூறி அவனுடன் ஜாய்ன் ஆகி இருந்த மூவரின் வீடியோவையும் பார்த்தனர் அவர்களுக்கு நால்வருமே நன்றாகவே  செய்திருப்பதாக தோன்றியது
“சரி வா நாம போய் அவங்கள தேடலாம்” என்று ஆடிட்டோரியத்தில் தேடத் துவங்க அவர்கள் நால்வரும் இவர்களிடம் வந்து சேர்ந்தனர்
லியான் “ஹாய் நான் லியான் ஐடி விள்ட்ல ஒர்க் பண்றேன்”
சரண் “ஹாய் நா சரண்  இவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ் கிஷோர் அண்ட் மாணிக் நாங்க மூணு பேருமே காலேஜில மாஸ்டர் டிகிரி பண்ணிட்டு இருக்கோம்”
சாரு “ஹாய் என்னோட பேரு சாரு இது என்னோட ஃப்ரெண்ட் மதி நாங்க ரெண்டுபேரும் காலேஜ் முடிச்சாச்சு”
கிஷோர் “காலேஜ் முடிச்சு இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் எங்களோட சின்ன பொண்ணுங்களா தான் இருப்பீங்க இல்லையா”
மதி “நாங்க மாஸ்டர் டிகிரி முடிச்சூ ஒரு வருஷம் ஆகுது”
மாணிக் “அதுக்காக எல்லாம் அக்கான்னு கூப்பிட முடியாது வேணும்னா சிஸ்னு கூப்பிடுறோம்”
லியான் “சரிமா உங்க ரெண்டு பேர்ல யாருக்காவது பாடத் தெரியுமா நீங்க ரெண்டு பேரும் பர்வாமன்ஸ்ல இன்ஸ்றுமெண்ட் மட்டும்   மட்டும்தான் பிளே பண்ணி இருக்கீங்க”
சரண் ” ப்ரோ நாம சாருவோட பர்வாமன்ஸ்’ மட்டும்தானே பார்த்தோம்”
லியான் “நான் செலக்சன் டைம்ல பார்த்தேன் இவங்க வயலின் வாசித்தது நீங்களும் பாருங்க”
மதி “எனக்கு அந்த அளவுக்கு பாட வராது ஆனா சாரு நல்லா பாடுவா”
கிஷோர் “அவங்க பாடினா யார் புல்லாங்குழல் வாசிப்பா”
சாரு “எங்க ரெண்டு பேருக்குமே புல்லாங்குழல் வயலின் வாசிக்க தெரியும்”
மாணிக் “இவங்க ரெண்டு பேரையும் முதல்ல நம்ம பேண்ட்ல ஜாய்ன் பண்ணிக்கலாம் அப்புறம் சர்ச் பண்ணி பார்க்கலாம் நமக்கு இன்னும் டைம் இருக்கு இல்ல அதுக்குள்ள யாராவது நமக்கு ஏத்த மாதிரி வந்தாங்கன்னா அவங்களையும் அட் பண்ணிக்கலாம் இல்லனா இதுவே ஓகே என்ன ப்ரோ” என்று கேட்க லியோனும் அதற்கு ஆமோதித்தான் பின் பெண்கள் இருவரின் பெயரையும் அவர்களோடு இணைத்துக் கொண்டனர்
“டாடி இங்க பாருங்க நான் சொன்ன ரெண்டு  பொண்ணுங்களும் லியான் பேண்ட்ல சேர்ந்துட்டாங்க”
“பாத்தியா அவனே கண்டு பிடிச்சிட்டான் இல்ல இதுல நம்ம பன்றதுக்கு எதுவுமே இல்லை”
“என்ன டாடி நீங்க எனக்கு யாரைப் பிடிச்சதோ அவனுக்கும் அவங்கள தான் பிடிச்சிருக்குன்னு சொல்றேன் சந்தோஷ படாமல் போங்க டாடி”
அசோக் கொடுத்த ஐந்து மணி நேரம் முடியும் வரைக்கும் அந்த ஆறு பேர் கொண்ட குழுவின் கவனத்திற்கு வேறு யாரும் வரவில்லை அதனால் அவர்கள் உடனே பேன்ட் முடிவடைந்தது
மீண்டும் அசோக் மேடை ஏறி “ஹலோ ப்ரெண்ட்ஸ் நிறைய பேர் சாப்பிடல போல ஏதோ எக்ஸாம்கு டைம் கொடுத்ததுபோல சாப்பாடு கூட மறந்து ஓடிட்டு இருக்கீங்க அட் தி லாஸ்ட்  நீங்க உங்க பேண்ட் தேர்ந்தெடுத்ததற்கு அப்புறம் ஒருத்தர் கூட தனியா இல்லைங்கிறது ரொம்பவே சந்தோஷமான விஷயம் இப்போ எங்களுக்கு எந்த வேலையும் இல்ல” என்று கூற அனைவருமே சிரித்தனர்
“அதோட இன்னொரு முக்கியமான விஷயம் இன்னும் ரெண்டு வாரத்துல மே மாதத்தோட முதல் ஞாயிறு வருது நம்ம காம்பெடிஷன் ஓட கிராண்ட் ஓபனிங் நடக்கப் போகுது மொத்தம் இருபது பேண்ட்டா  நீங்க பிருஞ்சு இருக்கீங்க எல்லாருமே அன்னைக்கு பர்வாம் பண்ணனும் எல்லாருமே அதுக்கு தயாராகுங்கள் முதல் நாள் எலிமினேஷன் எதுவும் கிடையாது அப்றம் உங்களுக்கு ஒரு ஒர்க் இருக்கு அன்னைக்கு நீங்க உங்களோட பேண்ட் நெய்ம் அலோன்ஸ் பண்ணனும்”
“ஓகே கய்ஸ் இன்னும் இரண்டு வாரத்துக்கு அப்புறம் உங்களை நான் இங்க இதை ஆடிட்டோரியத்தில் பார்க்கிறதுக்கு முன்னாடி சாப்பிட்டு போங்கய்யா சாப்பாடு எல்லாம் வேஸ்ட் ஆகுது இல்ல ” என்று கூறி சென்றான்

Advertisement