Advertisement

சுரங்கம் 10
இறுதி ரவுண்ட் முடிந்து ஒரு நாள் கடந்துவிட்டது நியூ டிவி சேனல் லைவ் ஸ்கோரை ஒரு ஓரமாய் காட்டி கொண்டே இருந்தது அன்று காலை லைட் ஆரஞ் நிறத்தில் கணுக்கால் வரை உள்ள சுடி அணிந்து தயாராகி வந்தாள் நேஹா
“டாடி”
“என்ன பேபி இன்னைக்கும் சுடி ரொம்ப பிடுச்சுருச்சு போல”
“ஆமா டாடி அன்னைக்கு லீ என்னை எப்படிப் பார்த்தான் தெரியுமா”
“இது டாடிகிட்ட சொல்ற விஷயமாடா”
“கேளுங்க டாடி”
“சரி சொல்லு பேபி எப்படி பார்த்தான்”
“அப்டி பார்த்தான் பார்த்து என்ன சொன்னா தெரியுமா”
“என்ன சொன்னான்”
“லுக்கிங் கார்ஜியஸ்னு சொன்னான்”
“அதனால இனி எப்போது சுடி அப்டிதானே” 
“ஜினியஸ் டாடி நீங்க லவ்யூ நான் என்னோட டிசைனர் கிட்ட அவங்களையே செலட் பண்ணி அனுப்ப சொல்லிட்டேன்”
“சரி இன்னைக்கு என்ன பிளேன்”
“நேத்து ஒரு நாள் லீக்கு ரெஸ்ச் குடுத்தாச்சு சோ இன்னைக்கு அவன டிஸ்டப் பண்ண போறேன் “
“சரிடா முதல்ல வந்து இந்த டாடி கூட சாப்பிட” என்று அழைத்து சென்றார் அவர் பின்னே சென்றாலும் அவள் கை அலைபேசியில் அவனை அழைத்து இருந்தது
“ஹாய் என்ன பண்ணிக்கிட்டு இருக்க” என்று இவள் அலைபேசியில் வினவ அவள் தந்தை அவளை பார்த்தவாறே அவளுக்கு தட்டு வைத்தார
“ஆபீஸ் கிளம்பிட்டு இருக்கேன்”
“என்ன ஆபீஸ்கா எதுக்கு இன்னைக்கே”
” நான் ஒரு மாசமா வீட்டிலிருந்துதானே வேலை பார்த்துகிட்டு இருக்கேன் அங்க போனா தானே என்ன நடக்குதுன்னு தெரியும்”
“ஓகே அப்போ நானும் இன்னைக்கு ஆபீஸ் வரேன்”
“உனக்கு இன்னைக்கு ஷூட் இல்லையா “
“நான் அதை கேன்சல் பண்ணிட்டேன் “
அவள் கூறியதை கேட்டவன் ஒருநொடி அமைதியாக இருந்துவிட்டு “நேஹா நீ இப்படி பண்றது எனக்கு பிடிக்கல”
“நீ எதை சொல்ற…. நான் உன்னை பார்க்க வர்றதா”
“நீ ஷூட் கேன்சல் பண்றது நீ நல்லா யோசிச்சு தானே அது ஒத்துக்கிட்டு இருப்ப இப்போ எதுக்காக கேன்சல் பண்ண”
“அது வந்து”
“நான் எங்கேயாவது ஓடி போகப்போறேனா”
“நான் வேணும்னா மறுபடியும் போன் பண்ணி சொல்றேன் ஷூட் வைக்கிறதுக்கு ஆனால் இன்னிக்கி வைக்க முடியாது இல்ல”
“நேஹா நீ மாடலிங் ரொம்ப பிடிச்சு தான் செய்றனு எனக்கு தெரியும் எந்த காரணத்துக்காகவும் அதுல நீ எப்பவும் பின்வாங்கக் கூடாது புரிஞ்சதா”
“சரி நான் ஆபீஸ் வரவா”
“சரி அப்பா கூடவே வந்துரு நாளைக்கு கண்டிப்பா ஷூட் இருக்கணும் ரைட்”
“ரைட் பாய்” என்று கூறி வைத்துவிட்டு  தன் தந்தையை பார்த்து லீ ஷூட் வைக்க சொல்லிட்டான்”
அவர் சிறித்து கொண்டே “அதுக்கு ஏண்டா முகத்தை இப்படி வச்சிருக்கிற உனக்கு பிடிச்ச வேலை தானே அது”
“லீ கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு நெனச்சேன்”
“லைஃப் லாங்க் அவனோட தான் இருக்க போறே அப்புறம் என்ன”
“ஆனால் இன்னும் நான் என்னோட லவ் சொல்லலையே”
“ஏண்டா அவன் உனக்கு கிடைக்க மாட்டான்னு பயப்படுறியா”
“ஒரு மனசு சொல்லுது லீ எனக்கு தான்னு ஆனா இது… ரொம்ப….ப்ச்  பீல் எப்படி சொல்றதுன்னு தெரியல டாடி”
“என்னோட மனசு ரொம்ப ஸ்ட்ராங்கா சொல்லுது பேபி லீ என் பொண்ணு கூட கடைசி வரைக்கும் வருவான்னு”
“லவ் யூ டாடி சரி சீக்கிரமா சாப்பிடுங்க லேட் ஆகுது இல்ல ஆபீஸ் போகணும்”
இருவரும் அலுவலகத்தினுள் காரில் நுழைய நேஹாவின் முகம் அவள் கண் கண்ட காட்சியில் கோபத்தால் சுருங்கியது
“என்ன பேபி லியான் கிருஷ்ணன் மாதிரி  போல சுத்தி கோபியர்களா இருக்காங்க ” என்று அவள் தந்தை கூற அவளோ ஏதும் கூறாமல் காரிலிருந்து இறங்கி அவனை நோக்கி சென்றாள்
அங்கு  அவனை சுற்றி காலேஜ் மாணவிகள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர் அதுவும் அவர்கள் அவனை தொட்டுத் தொட்டுப் பேச பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு இன்னும் கோபம் ஏறியது இவளுக்கும் ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் தான் இவளும் தொட்டு பேசுவாள் தான் ஆனால் அவர்களை பார்த்தாலே தெரிந்தது அவனிடம் வழிந்து கொண்டு நிற்பது
லியான் அவர்களது கார் வந்ததுமே கவனித்து விட்டான் அவள் பக்கத்தில் வந்து நின்றதும் அவளை நோக்கித் திரும்ப 
“மிஸ்டர் லீ இந்த ஒரு மாசமா நீங்க செஞ்ச வேலைக்காரன் ரிப்போர்ட் என்னோட டேபிள்ள இன்னும் கொஞ்ச நேரத்துல இருக்கணும்” என்று கூறி அவனை முறைத்து சென்றாள்
அவள் சென்றதும் கபூர் அவன் அருகில் வந்து “ரொம்ப நல்லா பர்வாம் பண்ணி இருந்த லியான் ஆனா ஒரு விஷயம் ஜெயிச்சாலும் தோத்தாலும் சரி அதை ஃபேஸ் பண்ண தயாரா இருக்கணும்”
“கண்டிப்பா அப்பா”
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு இளம்பெண் “ஹலோ சார் எங்க லீ கண்டிப்பா ஜெயிப்பான் பார்த்துக்கிட்டே இருங்க” என்று கூற அவர் சிரித்தார்
“ஓகே கேர்ள்ஸ் எனக்கு வேலை இருக்கு நான் கிளம்புறேன்” என்று கூறி அவன் அவருடனே திரும்ப “நான் உன்கிட்ட லவ் பண்றேன்னு சொன்னேன் அதுக்கு எதுவும் சொல்லல ” என்று இன்னொரு பெண் கேட்க அவன் புன்னகையோடு திரும்பி “சாரி” என்று சென்று விட்டான்
கோபத்தோடு சில அடிகள் முன்னால் சென்றிருந்த நேஹா அவன் தன் பின்னால் வராமல் இருக்கவும் திரும்பி வந்தவளின் காதுகளில் அது நன்றாகவே விழுந்தது மீண்டும் முகத்தைச் சுருக்கி கேபின் நோக்கி சென்றாள்
கபூர் அவரது கேபினுக்கு வர அவள் அங்கிருந்த சோபாவில்  கடுகடுவென அமர்ந்து இருந்தாள்
“என்னம்மா ரொம்ப கூலா இருக்க மாதிரி இருக்கு” என்று கேட்க அவரை திரும்பிப் பார்த்து ஒரு முறைப்பு
“நான் ஏசி கூலா இருக்கான்னு கேட்டேன் இல்லேன்னா விட்ருமா” என்று கூறியவாறு அவர் தன் வேலையை கவனித்தார்
சிறிது நேரம் அமர்ந்து இருந்தவள் எழுந்து லியானின் டேபிள் அருகே சென்று அவனை முறைத்து நின்றாள்
“எஸ் மேம்”
“நான் ரிப்போர்ட் கேட்டேன்”
“எஸ் மேம் ஒன் செக்” என்று கூறி அவள் கையில் ஒரு ஃபைலை கொடுக்க அவனை முறைத்து விட்டு திரும்பி சென்றாள்
அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பன் அன்றும் ஒருநாள் வந்து அவனை கேட்டதாக கூற அவன் தலையசைத்து கேட்டுக்கொண்டான் வேறு எதுவும் கூறவில்லை
லியான் கூறியபடியே அவள் அடுத்த நாள் ஷூட்டிங் சென்றிருந்தாள் அதனால் அவளால் அவனை காணவே முடியவில்லை இந்த ஒரு வாரத்தில் இடையில் ஒரே ஒருமுறை இவள் கால் செய்திருந்தாள் இன்று போட்டிக்கான முடிவுகள் அவர்கள் சேனலில் அறிவிக்கப்படும் ஏனோ இந்த நிமிடம் அவனோடு இருக்க வேண்டும் என்று அவள் மனம் ஏங்கியது ஆனால் அவள் இப்போது அமர்ந்திருப்பது ஷூட்டிங் ஸ்பாட்டில்
சிறிது நேரத்தில் தன் முன்னால் நிழலாட நிமிர்ந்து பார்த்த அவளின் கண்கள் விரிந்தது ஏனென்றால் அவள் முன்னால் நின்று இருந்தவன் அவளுக்குறியவன்
“நான் எல்லார்கிட்டயும் பேசிட்டேன் நம்ம போகலாமா” என்று கேட்க அவள் சந்தோஷமாகவே அவனுடன் சென்றாள் அவன் பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்ய அவளும் அதன் அருகே வந்தாள்
அவள் அணிந்திருந்த ஆடையை பார்த்தவன் “உன்னோட கார் எங்க இந்த டிரஸோட உனக்கு பைக் ஓகேவா” என்று கேட்க அவளும் குனிந்து தன் ஆடையை பார்த்துக் கொண்டாள் மிகவும் சிறியதாகவே இருந்தது அதை ஷூட்டிற்க்காக போட்டிருந்தாள்
அதோடு அவள் இதற்கு முன் பைக்கில் சென்றது இல்லை சிறுவயதிலிருந்து கார் தான் தயக்கமாக இருந்தாலும் அவள் முகத்தில் அவனோடு செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருந்ததை கண்டவன் “சரி ஏறி உட்கார” என்று கூற அவளும் பின்னால் ஏறி அமர்ந்து இரு கைகளால் அவனை இறுக்கி முதுகோடு சாய்ந்து கொண்டாள்
அவள் எப்படி உணர்ந்தாளோ தெரியாது ஆனால் அவன் உடல் முழுதும் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தான் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் போன வேகத்தில் ஒரு கடையின் முன் சென்று நிறுத்தினான் அவனது பைக்கை
நேஹா இறங்கி அந்தக் கடையை வேடிக்கை பார்த்தாள் இதன் முன் அவள் இதுபோன்ற கடைகளுக்கு வந்ததேயில்லை அவள் ஏதும் பேசாமல் பார்த்துக் கொண்டே நிற்க இவன் கை பிடித்து உள்ளே அழைத்து சென்று ஆடைகளை தெரிவு செய்து கொடுத்தான் இப்பொழுதே போடுவது போல் இருக்க  சைஸ் ஃப்ரீ டாப்பும் பேண்டும் எடுத்துக் கொடுத்தான் 
பின் துணி மாற்றும் அறைக்கு அழைத்து சென்று விளைக்கை அணைத்து விட்டு மாற்றுமாறு கூறி சென்றான் அத்த ஆடையும் நிறமும் அவளுக்கு பொருத்தமாகவே இருந்தது
பின் அங்கிருந்து சென்றவர்கள் நின்ற இடம் கிஷோர் தந்தையின் ஜிம் இவர்கள் உள்ளே செல்ல அனைவரும் டிவியின் முன் படபடப்பாக அமர்ந்திருந்தனர் இவர்களும் ஏதும் பேசாமல் அவர்களோடே சென்று அமர்ந்து பார்த்தனர் அங்கு கவுண் டவுண் ஸ்டார்ட் ஆகி இருந்தது
10
9
8
.
.
.
.
5
.
.
.
.
2
1
தி நியூ மியூசிக் பேண்ட் வின்னர் இஸ் ஸ்பிரிண்ட் மியூசிக் என்று அந்த டிவி மிகுந்த சத்தத்தோடு அறிவிக்க இவர்கள் அனைவரும் அமைதியாகவே இருந்தனர் சிறிது நேரத்திற்கு மௌனமே அங்கு ஆட்சி செய்தது
அந்த அமைதியைக் குலைத்தது சரணின் அழுகை “டேய் என்னடா இது என்று” கூறி மாணிக்கும் கிஷோரும் அவனை அணைத்துக்கொள்ள அவன் அழுகை நின்றபாடில்லை மதிக்கும் சாருக்கும் கஷ்டமாக இருந்தாலும் அருகில் சென்று அவன் தோளை அழுத்தி கொடுத்தனர்
சிறிது நேரம் அமைதியாக இருந்த லியான் அவர்கள் அருகே சென்று “காய்ஸ் நாம ஃபைனல் வரைக்கும் வந்திருக்கோம் முதல்ல எத்தனை பேண்ட் இருந்தது மறந்துட்டீங்களா நாம இரண்டாவது இடத்துல இருக்கோம் இதுக்கு இப்படி அழுதா எப்படி அந்த டிவி பாரு அங்க என்ன சொல்லிக்கிட்டு இருக்காங்க நிறைய பேருக்கு நம்ப பேண்ட் ரொம்ப பிடிச்சிருக்கு”
“நாம வின் பண்ணலேனு நிறைய பேர் ஃபீல் பண்றாங்க இத்தனை பேரோட அன்பு கிடைச்சதுக்கு அப்புறம் எதுக்காக நீ  ஃபீல் பண்ற நம்ம வின் பண்ணாதது வருத்தம் தான் இருந்தாலும் நம்ம சந்தோஷ படுறதுக்கு இந்த காம்படிஷன் நமக்கு நிறைய கொடுத்திருக்கு” என்று ஏதேதோ கூறி  தேற்றினான்
அடுத்த இரண்டு நாட்களிலேயே அவன் சரியாகி விட்டான் ஏனென்றால் மக்கள் இடத்தில் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பு அப்படி அதுவே அவனுக்கு இதை கடந்து வர சக்தியைக் கொடுத்தது  இதில் லியானிற்க்கு நேஹாவை  தேற்றுவதே பெரும்பாடாக இருந்தது அவள் ஏதும் பேசாமல் இவன் பேசுவது எல்லாம் கேட்டுக்கொண்டு அமைதியாகவே இருந்தாள்
இப்படியே ஒரு வாரம் கழிந்து அந்த மியூசிக் நைட்டும் வந்தது அந்த இடமே நிரம்பி வழிந்துகொண்டிருந்தது ரசிகர்களால் நிற்கக்கூட இடமில்லாமல் போட்டியில் கலந்து கொண்ட பலரும் இங்கே வந்திருந்தனர் அனைவரும் இவர்களுக்கும் வாழ்த்துக் கூறினர்
ஆனால் நேஹா இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வில்லை அவன் அழைப்பை ஏற்று அவன் கூறுவதை கேட்டாளே தவிற ஒரு வார்த்தை கூட பேசவில்லை 
முதல் முறை இந்த சத்தத்தில் அவளிற்கு கேட்கவில்லையோ என்று நினைத்தவன் ஒவ்வொரு முறையும் அவள் அவ்வாறே செய்ய அதன் பின்னே புரிந்து கொண்டான் அவள் அமைதியை
சிறிது நேரம் யோசித்தவன் அவள் தந்தைக்கு அழைத்தான் நேஹா வராததால் அவரும் வீட்டிலேயே இருப்பதாக கூற சில விஷயங்கள் அவரிடம் பேசியவன் அவளை பார்க்க புறப்பட்டான்
நேஹா தன் இரவுணவை தந்தையோடு முடித்து விட்டு அறையில் படுத்திருந்தாள் அப்போது அறை கதவு திறப்பது போல் சத்தம் வரவே தந்தை தான் என்று நினைத்து கண்மூடி படுத்திருந்தாள்
“ஹாலோ பியூட்டி குயின்” என்று தன் காதருகில் கேட்ட குறலில் பதறி எழுந்தாள்
அவள் அவனையே விழி விரித்து பார்க்க “ஹாய் என் கூட கொஞ்ச நேரம் வெளிய வர முடியுமா”
“நீ லீ”
“இரு நான் டிரஸ் எடுத்து குடுக்குறேன்” என்று அளள் கபோர்டில் இருந்து அவனே ஒன்றை எடுத்து மாற்றி வருமாரு கூறினான் அவள் அவனை பாரத்தவாறே அதை வாங்கி சென்றாள்
ஆடை மாற்றி முடித்தவளின் மனதில் பல கேள்விகள் ‘நான் கனவு கான்கிரேனோ லீஎப்டி இங்க வர முடியும் இப்ப ரூம்ல இருப்பான’ என்ற கேள்விகளுடன் அவள் கதவை திறக்கு கட்டிலில் அமர்ந்து இவளைத் தான் பார்த்து கொண்டிருந்தான்
“லீ நீ இங்க எப்டி வந்த செக்யூரிட்டி கிட்ட என்ன சொன்ன” என்று கேட்க்க அவள் கை பிடித்து வெளியே அழைத்து வந்தவன் “அவர் என்ன பார்த்தா தானே கேள்வி கேக்குறதுக்கு நான் வரும்போது யாரையும் கானும்” என்று கூறி யாரும் இல்லாத வீட்டில் இருந்து மறைந்து மறைந்து அவளை அழைத்து சென்றான்
வெளியே அவன் கூறியது போலவே செக்யூரிட்டி இல்லாமல் இருக்க அவர்களே கதவை திறந்து சென்றனர் அவளுக்கு இது புது அனுபவமாக இருந்தது 
அவனோடு பைக்கில் அந்த இரவில் செல்வதும் அவளுக்கு நிறம்ப பிடித்திருந்தது எந்த கேட்க்காமல் அவனை அணைத்தவாறு அமர்ந்து அந்த பயணத்தை ரசித்து கொண்டிருந்தாள்
அவன் அவளை அழைத்து வந்தது இருவரும் முதல் முறை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பார்க் அதை பார்த்தவள் மகிழ்சியாக அதனுள் செல்ல போக அதன் வாசல் மூடி இருந்தது
“லீ சின்ன வயசுல இங்க வந்தது அதுக்கப்புறம் விட்டு போச்சு உள்ள போக ஆசையா இருக்கு எப்டி போறது” என்று அவனை பார்த்து ஆசையாக கேட்டாள்
“ஆசை இருந்தா ஏறி குதிக்க வேண்டியதான்” என்று கூறி அந்த பார்க்கின் சைடில் அழைத்து சென்று அங்கு போட பட்டிருந்த கல்லின் மூலன் செவுர் ஏறி குதிக்க வைத்து அழைத்து சென்றான்
பார்க்கின் உள் சென்றதும் துள்ளி குதித்து “இது ரொம்ப நல்லா இருக்கு இந்த மாதிரி என்னோட லைவ்ல நான் செஞ்சதே இல்ல”என்று கூறினாள்
அவன் அவள் மகிழ்ச்சி ததும்பும் முகத்தை பார்த்தவாறே அங்கு இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான் ஆவளும் அவன் அருகே வந்து அமர்ந்துகொண்டாள்
“இப்போ மேடம் சரி ஆய்டிங்களா”
“ம் அது நான் ரொம்ப எதிர்பாத்தேனா அதான்”
“எனக்கு இதுவே ரொம்ப சந்தோசத்த தான் குடுக்குது ஆமா இது மட்டும் தான் காரணமா இன்னைக்கு வராததுக்கு”
“ம்”
“சரி வா இப்ப போகலாம் ம்”
“இல்ல இல்ல வேண்டாம்”
“ஏன்”
“அங்க போனா பொண்ணுக எல்லாம் உன்கிட்ட வந்து பேசுவாங்க” எனறு முகத்தை சுழித்து கூறினாள்
“பேசுறதுல என்ன இருக்கு”
“எனக்கு பிடிக்கல”
“ஏன்”
“ஏனா நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் உன்ன அவங்க பார்க்க கூடாது ” என்று அவனை பார்க்காமல் வேறு பக்கம் பார்த்து முகத்தை உம் என்று வைத்து கூறினாள்
“அப்போ என்ன உனக்குள்ள ஒளுச்சு வச்சுக்கோ”
“முடுஞ்சா பண்ண மாட்டேனா” என்று முகத்தை திருப்பிபவள் அதன் பின்னே அவன் கூறியது புரிந்து அவனை பார்த்து கேட்டாள் ” லீ நீ என்னோட ப்ரோபோஸல அக்ஸப் பன்னிகிட்டியா”
“நீ இப்போ ப்ரோபோஸ் பண்ணியா” என்று அவன் சிறித்து கொன்டே வினவ
“விளையாடாத லீ “என்று அவள் சினுங்க அவளை தூக்கி மடியில் அமர வைத்தான்
“நீயும் என்ன லவ் பண்றியா? நிஜமா? எப்போ இருந்து”
“ஆமா நானும் உன்ன நிஜமா லவ் பண்றேன் எப்போ இருந்துனு கேட்டா சத்யமா எனக்கு தெரியாது நீ குட்டியா இந்த பார்க்ல விளையாடும் போதே என் மனசுல வந்துட்ட ஆனா எப்ப காதல் ஆச்சுனு தான் தெரியல”
“உனக்கும் முன்னாடியே என்ன தெரியும் வோவ்” என்று கூறி அவனை இருக்கி அணைத்தாள்
பின் அவன் மடியில் இருந்து எழுந்து நின்று “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா”
“பண்ணிக்கலாம் என்னோட தங்கச்சிக்கு முடுச்சுட்டு பண்ணிக்கலாம்”
“எவ்ளோ நாள் ஆகும்”
“ஒன் இயர்”
“ஒன் இயரா ஏன் அவ்ளோ லேட்”
“அதுக்கு முன்னாடியே அவளுக்கு ஏத்த மாதுரி ஒருத்தன் கெடச்சா முடுச்சுற வேண்டியதான்”
“சரி உன்னோட வோன் குடு நான் டாடி கிட்ட சொல்லனும் இத கேட்டா ரொம்ப சந்தோசபடுவார்” என்று அவள் முகம் முழுக்க புன்னகையோடு கை நீட்ட இவன் எழுந்து அவள் கைப்பற்றி தன்னை நோக்கி இழுத்தான்
அவளது முன்னுடல் மொத்தமாய் அவன் மீது மோதியது “பேச வேண்டியவங்க எல்லார் கிட்டையும் பேசியாச்சு”என்று கூற
” எல்லார்கிட்டயும்னா என் டாடி கிட்ட உன் வீட்ல எல்லார் கிட்டையுமா” என்று கேட்டு வாய் பிளக்க அதில் தன் உதட்டை பொருத்தி கொண்டான்
அவள் கேட்டதற்கு பதிலாய் “ம்” என்ற சத்தம் அவளிடம் இருந்தே வந்தது

Advertisement