Advertisement

சுரங்கம் 1
இரவு நேரம் பத்தை தாண்டியிருந்தது வெளியே ஜோ என மழை பொழிந்து கொண்டிருந்தது அந்த மழை தூவல்களின் நடுவே இரண்டு கண்களும் மின்ன நீல நிற ஆடி கார் சறுக்கிக் கொண்டு போனது
அது இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ள கோவாவின் ஒரு கிளை சாலை
அந்தக் காரின் பின் இருக்கையில் அதிநாகரீக யுவதி ஒருத்தி அமர்ந்திருந்தாள் பசும்பாலில் குங்குமப்பூ கலந்தது போல் நிறம் அவள் அணிந்திருந்த ஆடையும் அவளின் காருக்கு பொருத்தமாக நீல நிறத்தில் கைகள் இல்லாமல் முழங்காலுக்கு மேலாக முடிந்து கண்ணை கவரும் விதமாக இருந்தது
வெளியே பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தவாறு வந்தவளின் கண்கள் காதில் ஒலித்த இசையின் காரணமாய் தன் கைபை பக்கம் திரும்பியது
அவளது வெண் பஞ்சு கைகள் கைபைக்குள் நுழைந்து சிறிது நொடிகளில் கைப்பேசியை எடுத்தது 
அதன் திரையில் டாடி காலிங் என்று வந்ததை கண்கள் பார்த்ததும் அவளது ஸ்டிராபெரி இதழ்களில் இருந்த மென்னகை புன்னகை ஆனது 
“டாடி இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நான் வீட்ல இருப்பேன் டோன்ட் வொரி”
“சரி பேபி மழை வேறு பெய்து அதான் கால் பண்னேன்” என்று கூறி அந்தப் பக்கம் நிசப்தமானது
கைப்பேசியை கைப்பையில் வைத்து விட்டு திரும்பியவளின் பார்வையில் தன் கார் செல்லும் திசையில் சற்று முன்பாக ரோட்டின் ஓரத்தில் ஐந்தாறு சிறுவர்களும் இரண்டு மூன்று இளைஞர்களும் மழையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது
தொலைவிலிருந்தே அவர்களைப் பார்த்துக் கொண்டு சென்ற அவளின் கண்கள் அவர்கள் அருகே கார் கடக்கும்போது விரிந்தது ‘இது அவன் தானே’ என்ற மனதின் கேள்வியுடன் அவர்கள் கண்ணில் இருந்து மறையும் வரைக்கும் அவனையே பார்த்துக்கொண்டு வந்தாள்
அவன் கண்ணில் இருந்து மறைந்ததும் இதன் முன் அவனைப் பார்த்த நினைவு அவள் மனக்கண் முன் வந்தது
சரியாக ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இவளைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து  தோழி வந்திருந்தாள் 
அப்போது அவள் தோழி தனியே சென்று சாப்பிங் செய்து கொண்டிருக்க அவளை பிக்கப் செய்ய வேண்டி இவள் சென்றாள் ஒரு மாலை மங்கிய நேரம் இவள் ஒரு கடையின் முன் காரை நிறுத்தி காத்திருக்க அப்போது இவள் காதில் வந்து தீண்டியது அந்தக் குரல்
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
நெஞ்ச ஒதச்சு ஒதச்சு
பறந்து போனா அழகா -3
அந்த குறலை கேட்ட காது அதை இடமாற்றம் செய்யும் முன் அவள் கால்கள் குறல் வந்த திசை நோக்கி நடந்தது
அவள் நின்றிருந்த ரோட்டின் மறுபுற ஹோட்டலில் இருந்து குறலோடு வந்த கிட்டார் இசை அவளை வசியம் செய்து இழுத்தது
யாரோ அவளோ
எனை தீண்டும் காற்றின் விறலோ
யாரோ அவளோ
எனை தாலாட்டும் தாயின் குரலோ
(உன்ன நெனச்சு நெனச்சு)
ஹோட்டலின் உள்ளே சென்றவளின் கால்கள் தானாக வாசலின் அருகே மேடையில் இசைப்பவன் தெரியுமாறு ஒரு மேசையில் வந்து சயணம் கொண்டது
 
வாசம் ஓசை
இவை தானே எந்தன் உறவே
உலகில் நீண்ட இரவென்றால்
எந்தன் இரவே
கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்
பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல
எதுவும் இல்லை
உன்ன நெனச்சு நெனச்சு
உருகி போனேன் மெழுகா
பறந்து போனா அழகா
அவள் காதுகளில் கேட்டு கொண்டிருந்த அவன் குறல் மறையும் வரை அவள் ஒரு மாயலோகத்தில் இருப்பது போல் உணர்ந்தாள் அந்த இசை தடைபட்டதும் ஒருமுறை தன்னை சுற்றி பார்க்க அவள் அமர்ந்திருந்த மேசை சற்று இருளான  இடத்தில் மேடையை விட்டு சற்று தூரமாக இருந்து பின் மீண்டுமாய் அவனை நோக்கி பார்வைய திருப்ப அவள் கண்கள் விரிந்தன 
காரணம் அவன் மேடையிலிருந்து இறங்கி இவள் திசை நோக்கி வந்து கொண்டிருந்தான்
சிறிது நேரத்தில் விரிந்திருந்த அவள் கண்களில் புன்னகை வந்தது ஏனென்றால் அவன் இவள் அமர்ந்திருக்கும் மேசைக்கு நான்கு மேசைகள் முன்பாக சென்று அமர்ந்தான்
அவன் அமர்ந்ததும் ஒருபெண் அமர்ந்த வாக்கிலேயே அவனை அணைத்துக் கொண்டாள் அவளிற்க்காகத் தான் பாடி இருப்பான் போலும்
 பின் அந்த பெண் கேக்கை வெட்ட அங்கிருந்த அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர் அங்கு வேலை செய்பவர்கள் இவளுக்கும்  ஒரு பீஸ் கிடைத்தது
அவன் அங்கிருந்து செல்லும்வரை அவள் விழிகள் அவனை தொடர்ந்து கொண்டிருந்தது அவன் சென்றதும் இவளும் அங்கிருந்து எழுந்தாள் 
இவ்வளவு நேரம் அவனை கவனித்ததில் தெரிந்தது அது அவனது குடும்பம் அந்த இளம்பெண் அவன் தங்கையாக இருக்க வேண்டும் இல்லை அக்காவாக அதற்கு வாய்ப்புகள் குறைவே அவள் சிறுபெண்ணாக தான் தெரிகிறாள் என்று யோசித்துக் கொண்டே  கார் அருகில் வர அவள் தோழி அங்கு முறைப்புடன் இவளை வரவேற்றாள்
அதை எண்ணி இப்பொழுதும் அவள் இதழ்கள் சிரித்துக் கொண்டது அன்று அவள் திட்டதிட்ட இவள் சிரித்துக் கொண்டே இருந்ததால் அதற்கு வேறு தனியாய் திட்டு
‘இன்று இப்போது மழையில் பார்த்ததும் அவன் தானே அன்று லேசாய் முளைத்திருந்த தாடி மீசையோடு இருந்தான் இன்று மொத்தமாய் வழித்திருந்தான் ஒருவேளை எனக்கு மழையில் சரியாக தெரியவில்லையா 
இருக்காதே அவன் கண்கள் வரைக்கும் எனக்கு சரியாகத் தான் தெரிந்தது அவன் அன்று போல இன்றும் அழகாகத்தான் இருந்தான்’ என்று அவள் எண்ண சரியாக அவள் வந்து கொண்டிருந்த கார் வீட்டின் வாசலில் நின்றது 
இவள் படியேறி வாசல் கடந்து வீட்டினுள் பிரவேசிக்க அவள் தந்தை வந்து அவள் கையை பற்றிக்கொண்டார் “பேபி உனக்காகத் தான் காத்திருந்தேன் சீக்கிரமா போய் பிரஷ் பண்ணிட்டு வா நாம சாப்பிடலாம்”
“ஃப்ரெஷ் அப்றமா ஆய்க்கலாம் முதல்ல நான் சொல்றத கேளுங்க நான் இன்னைக்கு மறுபடியும் அவனை பார்த்தேன்”
“யாரமா சொல்ற”
“அதான் டாடி அன்னைக்கு ஒரு நாள் ஹோட்டல்ல பார்த்தேனு சொன்னேனே ஆ.. அதுக்கு முன்னாடி அம்மா இறந்து போனப்ப பார்க்ல பார்த்ததா சொன்னேன்ல அவன் தான் பா இன்னைக்கு மழையில் குட்டிஸ் கூட சேர்ந்து டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்”
“ஒரு அந்தப் பையன ஆமா ஒவ்வொரு வாட்டியும் ஏன் பார்த்துட்டு வர பேசலாமே”
“தெரியல டாடி அவன பார்த்துட்டு தான் இருக்கத் தோணுது பேசணும்னு இது வரைக்கும் தோணலையே தோணும் போது அடுத்த நிமிஷம் நான் அவன் முன்னாடி நின்னு பேசியிருப்பேன்”
“சரிமா ஆமா இன்னைக்கு உன்னோட ஷூட் நல்லபடியா முடிஞ்சுதா”
“இந்த நேஹாவோட ஷூட்ல ஏதாவது குறை இருக்குமா டாடி”
“நிச்சயமா இல்லடா சரி சீக்கிரமா டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா டாடி உனக்காக கீழே வெயிட் பண்றேன்” என்று அவளை அவள் அறையில் விட்டு வந்தார் அந்த பாசமான தந்தை
நேஹா பதினைந்து வயது இருக்கும்போது தன் தாயை ஒரு காய்ச்சலால் இழந்தாள் சிறுவயதிலிருந்து தந்தையையே எல்லாவற்றிற்கும் நாடுவாள் என்றாலும் அவள் தாயின் இழப்பு அவளை பெரிதும் பாதிக்கவே செய்தது
 அன்று அவளை மீட்து அந்த அவனின் இசையே அன்றும் தூரத்திலிருந்தே அவனையும் அவன் இசையும் ரசித்திருந்தாள்
அவள் தந்தை கபூர் அவளை திசைத்திருப்ப எண்ணி அவளுக்குப் பிடித்தமான மாடலிங் துறையில் அவளை திருப்ப இந்த ஐந்து வருடங்களில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து பல ரசிகர்களையும் சம்பாதித்து வைத்திருந்தாள்
மாடலிங் துறையில் தனக்கென இடத்தைப் பிடித்திருந்தாலும் தந்தையின் தொழிலை கவனிக்க வேண்டி தொலைதூர கல்வி மூலமாக டிகிரி முடித்து இப்போது மாஸ்டர் டிகிரி பயின்று கொண்டிருக்கிறாள்
அவள் தந்தை கபூர் ராதோவிற்க்கு வாஸ்கோடாகாமா மார்க்கோ என்ற இரண்டு இடங்களிலும் நேகா மார்க்கெட் என்று பெரிய அளவில் மார்க்கெட் இருந்தது அதோடு கோவா தலைநகரமான பனாஜியில் ஒரு டிவி சேனலும் ஒரு ஐடி நிறுவனமும் இருந்தது அதன் சிறு கிளை ஒன்று வாஸ்கோடாகாமாவில் தற்போதுதான் நிறுவியிருந்தார்
கபூர் அவரது அலுவலக அறையில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவரது மொபைல் பேபி அழைப்பதாய் எடுத்துக் காட்டியது
“சொல்லு பேபி”
“டாடி எங்க இருக்கீங்க”
“வாஸ்கோட ஐடி பார்க்ல இருக்கேன் பேபி”
“சரி டாடி அப்டினா நான் அங்க வரட்டுமா அத ஆரம்பிச்சதுல இருந்து நான் இன்னும் அங்க வரல இல்ல”
“யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் மை பேபி”
“ஓகே டாடி நான் இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்பேன்”
அவள் வெள்ளை நிற பென்ஸ் காரில் வெள்ளை நிற ஷார்ட் ஸ்கர்ட் அணிந்து தேவதையாய் இறங்கினாள் அலுவலகம் முன்பு அங்கு அவளை வரவேற்க சில அலுவலக பணியாளர்கள் கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தனர்
‘சும்மா சுத்தி பார்க்க வரேன்னு சொன்னதுக்கு இந்த ஏற்பாடா’ என்று நினைத்துக்கொண்டே அனைவரிடமும் புன்னகையுடன் அதனை வாங்கி தன் கார் டிரைவரிடம் கொடுத்தாள்
அங்கே அவனும் கையில் பூங்கொத்துடன் நின்றிருந்தான் அதனைப் பார்த்த மறுநொடி விரிந்த கண்கள் அடுத்த நொடியே யோசனையாய் மாறியது ஏனெனில் அவன் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை ஏதோ இயக்கப்பட்ட ரோபோட் போல் அவளிடம் பூங்கொத்தை நீட்டினான்
அவனை அந்த மழைநாளில் பார்த்து இரண்டரை மாதங்கள் தான் தாண்டி இருக்கும் அதற்குள் இவனது புன்னகைக்கு என்னவானது என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்தினுள் நுழைந்தாள் வாசலிலேயே காத்திருந்து அவள் தந்தை அவளை அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றார்
“டாடி வெளியே லைட் ப்ளு கலர் ஷர்ட் போட்டுகிட்டு எனக்கு ஒரு பூங்கொத்து கொடுத்தானே அவன்தான் டாடி அவன்”
“அவன்தான் அவன்னா யார அப்படி சொல்ற ஒருவேளை அந்த கிட்டார் பார்ட்டியா”
“ஆமா டாடி அவன்தான் அவன் இங்க தான் வேலை பார்க்கிறானா”
“நீ யாரை சொல்றேன்னு எனக்கு கரெக்ட்டா தெரியல ஆனா வெளிய உன்னை வெல்கம் பண்ணவங்க எல்லாருமே இங்க வேலை பார்க்கிறவங்க தான்”
“ஓகே டாடி அப்போ நான் போயி அவங்க யாருன்னு தெரிஞ்சிட்டு வரேன்”
“பேபி யார்கிட்டயும் போய் விசாரிக்காத நீயே சுத்தி பாரு இது சின்ன ஆபிஸ் தான் ஈஸியா கண்டுபிடிக்கலாம்”
“ஓகே டாடி நான் பாத்துக்குறேன் ஆனாலும் டாடி மூனு மாடியா இருந்தாலும் இவ்வளவு அகலமா பெருசா வச்சிருக்கீங்க இதை போய் சின்னதுன்னு சொல்றீங்க”
“பனாஜில இருக்கிறத விட சின்னதுனு சொன்னேன் பேபி”
“ஓகே டாடி நான் போய் என்னோட டிடெக்டிவ் வேலைய பாத்துட்டு வரேன்”
அந்த மூன்று மாடியை சுற்றி வந்தும் அவள் கண்களுக்கு அவன் காட்சி அளிக்கவே இல்லை பின் இன்னொரு முறை கவனமாய் பார்க்கலாம் என்று மீண்டும் சுற்ற இரண்டாவது தளத்தில் அவள் கண்களுக்கு பிடிபட்டான் அவன்
நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து மேசையில் அவன் இடக்கையை ஊன்றி அதில் நெற்றியை தாங்கியவாறு அமர்ந்திருந்தான் அவனது பக்கவாட்டு தோற்றம் தான் அவளது கண்களுக்கு கிடைத்தது இருந்தும் அவனை சரியாகவே கண்டுவிட்டாள்
அவன் பக்கத்தில் இருந்த நபருடன் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தான் அவர்கள் நண்பர்கள் போலும் அவர்களின் பாடி லாங்குவேஜ் அப்படித்தான் கூறியது அவளுக்கு
பக்கத்தில் சென்று பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்தவாறே அவள் அடி மீது அடி வைத்து அவனை நோக்கி நகர அவர் அடுத்து சொன்ன வார்த்தை அவள் நடைக்கு தடை போட்டது  
“தொட்டு உணர்ந்து ரொம்ப நாள் ஆச்சுடா”
“என்ன லவ்வர் கூட சண்டை போட்டுட்டியா”
“என்ன கிண்டலா”
“பின்ன நீ என்னடா கிட்டார ஒரு லவ்வர் ரேஞ்சுக்கு பேசிட்டு இருக்க தொட்டு உணரல்லியாம்மா உன் முன்னாடி இருக்க கம்ப்யூட்டர் தொட்டு வேலையை பாருடா”
“நான் என்ன என்னோட கடமை செய்ய மாட்டேன்னா சொல்றேன் அதுக்கு இடையில எனக்கு பிடிச்ச விஷயத்தையும் பண்ணா நல்லா இருக்குன்னு ஃபீல் பண்றேன் அவ்வளவுதான்”
“அப்ப இந்த வேலையை பிடிச்ச விஷயமா மாத்திக்க”
“போடா உனக்கு புரியாது கிட்டார் எடுத்து வாசிக்க ஆரம்பிச்சா அப்படியே எனக்கு வேற உலகத்துக்கு உள்ள போற மாதிரி இருக்கும் ஐ லவ் தட் “
“அப்போ ஏதாவது ஒரு பேண்ட்ல போய் சேர்ந்து கிட்டார் ப்ளே பண்ண வேண்டியதுதானே இங்க இருந்து எதுக்கு பொலம்புற”
“சேலரிக்காகத் தான் இந்த சேலரி இல்லேன்னா என் குடும்பம் ஒன்னும் இல்லாம போயிடும்னு சொல்லல ஆனா இவ்வளவு நாள் என்னை வளர்த்து படிக்க வச்சிருக்காங்க நானும் ஏதாவது திரும்ப செய்யனும் இல்ல”
“அத ஏன் டா இப்படி புலம்பி புலம்பி செய்ற”
“பிரெண்டுனு உன் கிட்ட போய் சொன்னேன் பாரு உனக்கு என் ஃபீல்  புரியமாட்டேங்குது போடா “என்று அவன் சொன்னது போல் கம்ப்யூட்டரை தொடத் தொடங்கினான்
“டாடி நான் பாத்துட்டேன்”
“நான் எங்கம்மா ஒளிஞ்சிருக்கேன் நீ என்ன பார்த்ததுக்கு இவ்வளவு சந்தோஷப்பட”
“ஐயோ டாடி நான் அவனை பார்த்தேன்னு சொன்னேன்”
“சரி அந்த கிட்டார் பார்ட்டி பெயர் என்ன பேபி” என்று கேட்க அவர் சொன்ன பேபிக்கு ஏற்றாற்போல் உதட்டை பிதுக்கினாள்
“இன்னைக்கும் சும்மா தூரத்தில் இருந்து பார்த்துட்டு வந்துட்டியா” என்று கேட்க மேலும் கீழுமாக தலையை அசைத்தாள்
“டாடி இங்க ஒர்க் பண்றவங்க டீடைல்ஸ் எல்லாம் உங்க கம்ப்யூட்டர்ல இருக்கும்ல அதை பார்த்து அவன் பேர் என்னன்னு சொல்லுங்க பார்க்கலாம்”
“ஏம்மா நீ யாரை சொல்றேன்னே எனக்கு தெரியல அப்படி இருக்கும்போது நான் யாருன்னு தேடுவேன்”
“சரி சரி அப்போ நீங்க சீட்ல இருந்து எழுந்துக்கோங்க நான் பார்க்கிறேன்” என்று கூறி தந்தையை விலக்கிவிட்டு எம்பிளாய்ஸ் டீடைல்ஸ் ரிப்போர்ட்டை ஓபன் செய்து தேடத் தொடங்கினாள் சிறிது நேரத்தில் கண்டுபிடித்து விட்டாள்
அவன் பெயர் லியான்
“டாடி அவன் பேர பாருங்களேன் அவன மாதிரியே அழகா இருக்கு”
‘லியான் நல்ல பேருடா ஐடி படிச்சிட்டு வேற ஒரு சின்ன கம்பெனியில் வேலை பார்த்துகிட்டு இருந்தான் இங்க இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி இங்க சேர்ந்திருக்கான் ரொம்ப நல்லா இன்டர்வியூ பண்ணி இருந்தான் நானும் வீடியோ பார்த்தேன்” என அவளின் தந்தை அவனைப் பற்றிக் கூற அதைக் காதால் கேட்டுக் கொண்டே கண்களால் அவன் டீடைல்ஸை பார்த்துக் கொண்டிருந்தாள்………….
     

Advertisement