இரவு-6

காரிருள் சூழ்ந்திருந்த அந்த பகுதியின் மத்தியில் பிரம்மாண்டமாய் ஒரு பங்களா இருக்க அதை சுற்றி காடு போல மரஞ்செடிகள் அடர்ந்து பங்களாவை வெளியில் தெரியாமல் மறைத்திருந்தது. அந்த பங்களாவைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மரஞ்செடிகள் மட்டும் தான். அந்த பங்களாவ கைவிடப்பட்ட நிலையில் பராமரிப்பின்றி காட்சியளித்தது.

அந்த இருளின் நடுவில் கீற்றாக ஒரு சிறிய ஒளி ஒரு அறையில் இருந்து கசிந்துகொண்டிருந்தது. அந்த அறை தரைமட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அது ஒரு மிகப்பெரிய அறை அதில் போட பட்டு இருந்த தரையை உடைத்து மண்தரையாக்கி அங்காங்கே டைல்ஸ் சிதறி என்று  காணப்பட்டது .

அந்த அறையின் ஒரு மூலையில் பெரிய கிங் சைஸ் மரக்கட்டில் ஒன்று போடப்பட்டிருந்தது. அந்தக் கட்டிலில் அரை நிர்வாணமான நிலையில் அந்தப் பெண்ணைக் கைகால்கள் கட்டிப்போட்டு வைத்திருந்தாள் அவள். அந்த பெண் மயக்க நிலையில் இருக்க, அவள் அருகில் அவள் போட்டு இருந்த அறை நிலா டாலரைக் வாயில் வைத்து கடித்தபடி அவள் நின்று கண்ணிமைக்காமல் அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணும் கண்கள் திறந்து கை கால்களை அசைக்க, அது தான் கட்டுலோடு சேர்த்து கட்டப்பட்டு இருந்ததே, அதனால் அவளால் அசைக்க முடியாமல் போக, அந்தப் பெண் பயந்து, “ஏய், யாரு நீ? என்னை ஏன் கட்டி வச்சிருக்க? என்ன விடு!” என்று கத்த, அந்தச் சத்தத்தைக் கேட்டு மகிழ்ந்தவளாக அந்தப் பெண் வயிற்றின் மேலே ஏறி அமர்ந்து, அவள் கன்னத்தில் வேகமாக மாற்றி மாற்றி அறைய, வலி பொறுக்காமல் அந்தப் பெண் அலற, அதை ஒரு கொடூர திருப்தியோடு கேட்டு ரசித்தவளாக , மிக மெதுவாக அவள் கழுத்தை வருடியபடி, “யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்” என்று அந்தப் பெண்ணின் பயந்த முகத்தைப் பார்த்துச் சிரித்தவள், “ நைட் ஏன் வெளியே வந்த? தப்புதானே? வெளியே வந்து என்னைத் தொடுவியா? அதுவும் தப்புதானே? சொல்லு என்னைத் தொடுவியா?” என்று அவள் கழுத்தை நெறித்தபடி, “தொடமாட்டேன்னு சொல்லு! தொடமாட்டேன்னு சொல்லு!” என்று கத்த, அந்தப் பெண் கண் மேலே சொருகி உயிர் போய்விட்டது கூட தெரியாமல் அவள் கழுத்தை நெரித்து கொண்டு இருக்க, அந்தப் பெண்ணிடம் இருந்து எந்தச் சத்தமும் வரவில்லை என்றதும், மீண்டும் அவள் கன்னத்தில் இவள் ஓங்கி அறைய, அப்போதும் அவளிடம் அசைவில்லாமல் போக, அந்தப் பெண்ணின் மீது இருந்து இறங்கி, அவள் கை கால்களில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து, அந்தப் பெண்ணை அந்த அறையின் மற்றொரு மூலையில் தோண்டி வைத்திருந்த குழியில் போட்டு மூடியவள், பின் அந்தப் பெண் படுத்திருந்த கட்டிலில் அவள் படுத்து உறங்கிப் போனாள்.

ஆறு வயது ஆன மயூரி அவள் காதுகளை அடைத்தபடி ஒரு அலமாரிக்குள் சத்தம் எழுப்பாமல் பயந்து இருக்க, அவள் காதுகளை அடைத்தும் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் முனகல் சத்தம் அவள் காதில் கேட்க, அதைக் கேட்க விரும்பாதவளாக அவள் காதுகளை இன்னும் இறுக்கமாகக் கை வைத்து அடைத்தபடி இருந்தாள். இப்படியே எவ்வளவு நேரம் இருந்தாளோ, லலிதா வந்து கதவைத் திறந்தது கூடத் தெரியாமல் காதையும் கண்களையும் மூடியபடியே இருக்க, லலிதா மயூரியைப் பார்த்து மனம் பொறுக்காமல் அவளை அணைத்துப் பிடித்துக்கொண்டு, “கடவுளே, இந்தப் பெண்ணையாவது இங்கிருந்து காப்பாற்று” என்று அழுக, மயூரி உடல் முழுக்க வியர்வையில் நனைந்து அவள் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.

முகம் வியர்க்க, தலை வின் என்று வலிக்க நெற்றியைப் பிடித்தபடி அமர்ந்தவள், டாக்டர் தந்த மாத்திரையை வேகமாகத் தேடி அதைப் போட்டுக்கொண்டு சிறிது நேரம் கண்களை மூடி  அமர்ந்துவிட்டாள். அமர்ந்து இருந்தவள் காதில் முனகல் சத்தமும் அதனுடன் வலி தாங்கமுடியாமல் பல பெண்கள் கத்தும் சத்தமும் கேட்க, அந்தச் சத்தத்தைக் கேட்டு மயூரிக்கு குமட்டி கொண்டு வர வேகமாக பாத்ரூம் சென்று வாந்தி எடுத்தாள். பின் அங்கேயே முகம் கழுவி ஒரு சோர்ந்த நடையுடன் வெளியே வந்தவள் அவள் போனில் பாட்டை சத்தமாக வைத்தபடி சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

 இசையின் சத்தத்தில் அந்தப் பெண்களின் சத்தத்தை மறைக்க முயன்றாளோ? அங்கேயே அமர்ந்து விட்டாள் . எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருப்பாள் என்று தெரியவில்லை. ஜெய்யின் போன் காலில் தான் சுயம் வந்தவளாக போனை எடுத்து காதில் வைக்க, ஜெய் “மயூ, முழிச்சிட்டியா?” என்று கேட்க, அதற்கு மயூரி “ம்ம்ம் டா..” என்று சோர்வாகப் பதில் சொல்ல, அவள் குரல் மாற்றத்திலேயே ஏதோ சரியில்லை என்று கண்டுகொண்ட ஜெய் “என்ன ஆச்சு மயூ? வாய்ஸ் ஏன் டல்லா இருக்கு. உடம்புக்கு ஏதாவது முடியலையா?” என்று அக்கறையுடன் கேட்க

“அதெல்லாம் ஒன்றும் இல்லை ஜெய் இப்போதான் தூங்கி முழிச்சேன்“

அதை கேட்ட ஜெய் “என்னது இப்போ தான் முழிச்சியா டுடே ஏன்  லேட் மயூ  “

“இப்போ நான் லேட்டா முழித்ததுதான் முக்கியமாடா எதுக்கு கால் பண்ண அதைச் சொல்லு“

 “அது டுடே என் தாத்தா ஆபீஸ்க்கு வந்திருக்கேன். இங்க வொர்க் கொஞ்சம் பெண்டிங் இருக்கு. சோ, ஒரு த்ரீ டேஸ் சீக்கிரமா இங்க வந்துருவேன். அதைச் சொல்லத்தான் கால் பண்ணேன்“

“ஓ… சரிடா“

“என்ன சரி? மார்னிங் எனக்காக வெயிட் பண்ணு. பிரேக்பாஸ்ட் என் கூடத்தான். அதைச் சொல்ல தான் கால் பண்ணேன். சரி, வச்சிறேன். இங்க கொஞ்சம் வேலை இருக்கு“ என்று வைத்துவிட்டான். ஜெய்யுடன் பேசிய பின் கொஞ்சம் தெளிவான மயூரி பொறுமையாக எழுந்து ஆபீஸ் கிளம்பிச் சென்றவள், அங்கு ஆரியனின் மெயில் பார்த்து தலை வெடிக்காத குறையாக கோபம் கொண்டாள்.

பின் அதற்கு பதில் மெயிலாக “இந்த கேமின் கோடிங் வேலையை இந்த டீம் இரண்டு நாட்களில் முடிக்கவில்லை என்றால் வேறு டீம்க்கு தரப்படும். அந்த டீம் இதே கேரக்டருடனே கேமின் கோடிங்கை பண்ண வேண்டும்“ என்று கோடிங் டீம் மற்றும் மேனேஜர் இருவருக்கும் மெயில் ஒன்றை போட்டுவிட்டு, பின் மறுநாள் இவள் லீவ் என்று ரிமைண்டரில் அனைவருக்கும் தெரியும்படி செட் செய்துவிட்டு, இவள் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாள். பின் அவள் ஷிஃப்ட் முடிந்ததும் ஜெய்யைப் பார்த்துவிட்டு அவள் வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.

இங்கு ஆர்யன் மயூரியின் மெயிலைப் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் அதிர்ந்துதான் போனான். அதைவிடப் பெரிய அதிர்ச்சியாக அந்த மெயிலுக்கு மேனேஜர் சரி என்று ஒத்துக்கொண்டு அனுப்பிய பதில் மெயில்தான். இந்த மெயிலைப் பார்த்து ஆர்யன் “நாம் என்ன தப்பு பண்ணினோம்?” என்று யோசித்துக்கொண்டு இருக்க, அப்போது அங்கு வந்த விவேக், “அது மயூரி மேம்தான். இந்த கம்பெனியோட செகண்ட் சி.இ.ஓ ஜெய் சாருக்குப் பிறகு எல்லாம் இவங்க தான் பார்த்து பாங்க சார். அண்ட் இந்த ஸ்டோரி டீம்தான் பழைய ஃபைலை மாத்தி அனுப்பிவிட்டாங்களாம். அப்டேட் பண்ண ஃபைலில இருந்த கேரக்டர் டிசைனிங் மேட்ச் ஆகுது சார். இப்போ என்ன பண்ண சார்? கோடிங் பாதிக்கு மேல முடிஞ்சிறுச்சி. முழுசா முடிக்க அட்லீஸ்ட் நாளு நாள் வேணும் சார். இரண்டு நாள்ல முடியாது. அதுவும் இல்லாமல் இந்த கோடிங் வேற டீமிற்குப் போய்ட்டா நாம்ம பண்ணிய இரண்டு மாத வேலை வேஸ்ட்  ஆகிடும் சார்” என்று சொல்லிவிட்டு ஆர்யனைப் பார்க்க, ஆர்யன் எதையோ யோசித்தவனாக பின்,

 “சரி, நான் மெயில் போட்டு மயூரி மேம் கிட்ட டைம் கேட்கிறேன்” என்று சொல்ல, அதற்கும் விவேக்,

“சார், மேம் லீவ் சார். ஒன் டே முடிஞ்சி ஈவினிங் தான் சார் வருவாங்க” என்று அவன் சொல்லி முடிக்கும் முன், ஆர்யன் கோபத்துடன் எழுந்து நிற்க அதை பார்த்து விவேக் பயந்து தள்ளிச் செல்ல, அவன் தள்ளி சென்றதை பார்த்து அவனை அவனே மனதில் திட்டியபடி, ஆர்யன் கண்களை மூடி கோபத்தைக் குறைத்தவனாக விவேக்கிடம் திரும்பி, “போய் நம் டீம் மெம்பர்ஸ் எல்லாரையும் மீட்டிங்கிற்கு கூட்டிட்டு வா…” எனச் சொல்லிவிட்டு மீட்டிங் அறைக்குள் சென்றுவிட்டான்.

மீட்டிங் அறைக்கு அனைவரும் வந்ததும் அனைவரையும் பார்த்த ஆர்யன் “ ஏதாவது ஐடியா இருக்கா “ என்று கேட்க அங்கு இருந்த அனைவரும் திருதிருவென முழிக்க அதைப் பார்த்த ஆர்யன் தலையை இருபக்கமும் சலிப்பாக அசைத்தபடி “ இங்க பாருங்க இப்போ  தப்பு யார் மேலன்னு பேச நேரமில்லை. நம்ம கஷ்டப்பட்டு பண்ண வேலை நம்மை விட்டுப் போகக்கூடாது. அதற்காக என்ன பண்ணலாம்னு பேசத்தான் இந்த மீட்டிங். சோ பி சீரியஸ் “ என்று சொல்லிவிட்டு அனைவரையும் பார்க்க அப்போது காவியா “ வேறு வழி இல்லை சார். இந்தக் கோடிங்கை டூ டேஸில் முடிக்கிறதைத் தவிர “ என்று அவள் சொல்லிமுடிக்க அதையேதான் அங்கு இருந்த அனைவரும் தலையசைத்து ஆம் என்று சொல்ல ஆர்யன் கோடிங் வேலையை பகுதி பகுதியாக பிரித்துக் கொடுத்துவிட்டு அதை மேற்பார்வை அதாவது எரர் பக்ஸ் கிளியர் பண்ணும் வேலையை இவன் எடுத்துக்கொண்டான். கோடிங் டீமில் இருக்கும் அனைவரும் தீயாய் வேலை செய்யத் தொடங்கினர்.