ரவு-5

ஜெய் கம்பெனி வெளியே மயூரி வரும் நேரமாகப் பார்த்து நின்று கொண்டிருக்க, அப்போது அங்கு இருந்த வாட்ச்மேன் சுரேஷ், ஜெய்யைப் பார்த்துவிட்டு, “சார், என்ன ஆச்சு? இங்க நிக்கிறீங்க, ஏதாவது வாங்கணுமா?” என்று மரியாதையுடன் அவர் பேச, அவரைப் பார்த்துச் சிரித்த ஜெய், “அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் பார்த்துகிறேன். ஆமா, நீங்க டே ஷிஃப்ட் தானே சுரேஷ்?” என்று நெற்றியைத் தட்டியபடி அவரிடம் கேட்க, அதற்கு அவரும், “ஆமா சார், இந்த மாதம் முழுக்க ஃபர்ஸ்ட் ஷிஃப்ட் தான் சார்.” “ அப்படியா சரி, அப்போ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்க சுரேஷ்.” “என்ன ஹெல்ப் சார்?” “அது இந்த மாதம் கடைசி டூ வீக் நைட் பார்க்கிறீங்களா சுரேஷ்?”

“ஆ நான் பார்க்கிறேன் சார் எனக்கு எந்த ஷிஃப்ட் ஆனாலும் ஓகே தான் “ அதைக் கேட்டுச் சிறு புன்னகையைத் தந்த ஜெய் “அப்போ ஓகே சுரேஷ் நான் உங்க ஷிஃப்ட் அலைன் பண்றவங்க கிட்ட பேசிக்கிறேன் “ என்று சொல்லிவிட்டுப் போனை எடுத்துப் ஏதோ பார்த்து கோண்டு இருக்க அப்போது தான் மயூரி கார் உள்ளே நுழைந்தது. காரைப் பார்த்த ஜெய் அவள் கார் அருகே சென்று அதைக் நிறுத்தி முன் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டான். ஜெய்யை வெளியில் எதிர்பார்க்காத மயூரி அவனை என்ன என்பது போலப் பார்த்துக் கொண்டு காரை ஒரு ஓரமாக நிறுத்த “ஜெய் காரை நிறுத்தாத மயூ சீக்கிரம் காரை எடு சீக்கிரம் “ என்று அவளை யோசிக்க விடாமல் அவசரபடுத்தி  காரை எடுக்க செய்தவன் “வெளியில போ மயூ அந்தப் பக்கம் திரும்பு ரோட்டைப் பார்த்து ஓட்டு அச்சோ பேச டைம் இல்லை முதலில் போ அப்புறம் சொல்றேன் “ என்று மயூவைப் பேச விடாமல் ஜெய் செல்லும் வழியைச் சொல்ல கார் அடுத்த பத்து நிமிடத்தில் அருகில் புதிதாகத் திறக்கப்பட்ட ஒரு ரெஸ்டாரன்ட் முன் நின்றது. அந்த ரெஸ்டாரன்டைப் பார்த்த மயூ கடுப்புடன் ஜெய் பக்கம் திரும்பி “குரங்கு குரங்கு நான் என்னமோ ஏதோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன் “ என்று அவள் நெஞ்சில் கைவைத்து மூச்சை இழுத்து விட்டவள் மீண்டும் ஜெய்யைப் பார்த்து “ரெஸ்டாரன்டுக்கு ஏன்டா என்ன இப்படி ரோஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்த பிசாசு பிசாசு “ என்று அவனை அடிக்க அவள் அடியை எல்லாம் சிரித்துக் கொண்டு வாங்கிய ஜெய் “சரி அடிக்கிறதை நிறுத்து டி “ என்று அவள் கையைப் பிடித்தவன் “டின்னர்ன்னு கூப்பிட்டா மட்டும் வந்துடுவாயா? எப்பா பாரு வேலை இருக்கு அப்பறம் வரேன்னு சொல்லிட்டு அந்த நாழு  கோடு போட நீ குடுக்குற  சீன் இருக்கே எனக்கு கடுப்பாகாதா “

“என்னது கோடு போடுறன நான் அனிமி ஆர்ட் பண்றது உனக்கு கோடு மாதிரி இருக்கா டா“ என்று முழு கோபம் வந்தவளாக அவன் முடியைப் பிடித்து ஆட்ட ஜெய் “ஆ… மயூ விடுடி வலிக்குது, சரி நீ பண்றது ஆர்ட் தான் கோடு இல்லை மன்னிச்சிரு தாயே தப்பா சொல்லிட்டேன் விடும்மா…” என்று அவன் கத்திய பின்னர்தான் அவன் முடியை விட்டாள் மயூ. பின் ஜெய் கார் கண்ணாடி வழியே அவன் தலை கோதி சரி செய்தவனாக மயூவைப் பார்க்க அவள் “அ, ஆன் எல்லாம் நல்லாத்தான் இருக்கு போலாமா“ என்று காரை விட்டு இறங்கிய மயூரி உடன் இவனும் இரங்கி இருவருமாக ஹோட்டலை நோக்கிச் சென்றார்கள். அங்கு ஒரு டேபிளில் மயூ அமர ஜெய் சென்று பஃபே முறையில் வைத்திருந்த உணவை மயூக்குப் பிடித்த உணவாகப் பார்த்துப் பார்த்து எடுத்து வந்து டேபிளில் அடுக்க அதை பார்த்த மயூ “உனக்குப் பிடிச்ச கீ ரைஸ் எடுக்கலயடா “ “இல்லை வேண்டாம் எனக்கு இது போதும் மயூ“ என்று டேபிளில் அமர்ந்த அவன் கையில் ஒரு அடி போட்டு விட்டு மயூரி எழுந்து சென்று ஜெய்க்குப் பிடித்த கீ ரைஸ் அதனுடன் பிரான் காரியும் எடுத்து வந்து வைத்து விட்டு “இப்போ சாப்பிடு“ என்று இருவரும் உண்டு முடிக்க மயூரி கை கழுவி வந்தவளாக “போலாமா ஜெய்“ என்று அவன் முகம் பார்க்க ஜெய் அவள் கையைப் பிடித்து டெசர்ட் வைத்திருந்த இடம் நோக்கி இழுத்துச் செல்ல மயூரி “ஸ்வீட் செக்‌ஷன் தனியா இருக்காடா அப்புறம் ஏன் நீ ஸ்வீட் எடுத்துட்டு வரல“ என்று பேசியபடி ஸ்வீட்டுகளைப் பார்க்க மயூரி கண்கள் மின்ன வாயைப் பிளந்து நின்றாள்.

அவளைப் பார்த்து ஜெய், “ரொம்பப் புலக்காத, வாயில ஈ போய்டப் போது” என்று அவள் தோளில் தட்டி, “இந்த ரெஸ்டாரன்ட்டின் ஸ்பெஷலே அதோட ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ்தான். நம்ம எத்தனை வெரைட்டி கேட்டாலும் தருவாங்க” என்றபடி ஒரு ப்ளேட் எடுத்து வந்து மயூரி கையில் தர, அவள் அதை வாங்கியவள் அவள் முன் இருந்த பல வகையான கேக், ஸ்வீட்ஸ், சாக்லேட் என்று இருந்த அனைத்திலிருந்தும் போதும் போதும் என்று சொல்லும் அளவு எடுத்துச் சாப்பிட்டாள். பின் இருவரும் சேர்ந்து காருக்கு வர, மயூரி காரில் ஏறியபடி, “என்ன ஜெய், ட்ரீட்லாம் பலமா இருக்கு. என்ன விஷயம்?” என்று ஜெய்யைக் குறு குறுவெனப் பார்க்க, அதற்கு ஜெய் அவள் பக்கம் திரும்பி, “அது மயூ…., இப்போ ரீசன்ட்டா ஒரு மீட்டிங் நடந்துச்சில்ல?”

“ஆமா, என்னைக் கூட வரச் சொன்னியே.” “ஆ… அந்த மீட்டிங்தான் மயூ.”

 “சரி, அந்த மீட்டிங்கு என்ன?”

 “அந்த ப்ராஜெக்ட் ஓகே ஆகிற மாதிரி இருக்கு.”

“ஏ… சூப்பர் ஜெய்! அப்போ அதுக்காக தான் இந்த ட்ரீட்டா ?”

“அப்படியும் சொல்லலாம். ” என்று ஜெய் இழுத்தபடி மயூரி முகம் பார்க்க அவளும் ஜெய்யைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். மயூவைப் பார்த்தபடி ஜெய், “இந்த ப்ராஜெக்ட்டுக்காக ஒரு ஒன் வீக் ஜப்பான் போகணும் மயூ. சோ, அந்த வீக் ஆபிஸை நீதான் பார்த்துக்கண்ணும்” அதைக் கேட்ட மயூரி காலில் சலங்கை இல்லாமலே ஆடத் தொடங்கிவிட்டாள்.

 “என்ன நினைச்சிட்டு இருக்கா ஜெய்? ஆபிஸுக்கு மார்னிங் எல்லாம் என்னால் எப்படி வர முடியும். நான் தூங்கணும். உனக்கு என்னைப் பத்தி தெரியும் தானே? ஒன் வீக் என்னால் முடியவே முடியாது. பேசாம நமக்கு இந்தப் ப்ராஜெக்ட் நமக்கு வேண்டாமுன்னு சொல்லு.” என்று ஏதேதோ பிதற்ற மயூரியின் பதட்டமான முகத்தைப் பார்த்தவன் அவள் கைகளைப் பிடித்தபடி “மூச்சை நல்லா இழுத்து விடு மயூ“ என்று அவளுடன் சேர்ந்து இவனும் மூச்சை இழுத்து விட சிறிது நேரத்தில் கோபம் குறைந்தவளாக மயூரி ஜெய்யை பார்த்து “சரி நீயே சொல்லு நீ இல்லாத டைம் நான் என்ன பண்ணனும்“ என்று கைகளைக் கட்டியபடி கேட்க அதைக் கேட்டு கண்களைச் சிமிட்டிய ஜெய் “பெருசா ஒன்னும் வேணாம் நைட் ஷிப்ட் அப்போ கொஞ்சம் என் வேலையையும் சேர்த்துப் பார்க்கணும் ஒன்லி எமர்ஜென்சி வர்க் மட்டும் தான் மயூ அவ்வளவு  தான்“ என்று அவன் அழகாக அவள் கைபிடித்துக் கெஞ்ச ஒரு நிமிடம் யோசித்த மயூரி பின் “சரி பார்த்துக்கிறேன் ஆனா மார்னிங் ஆபிஸ் வரமாட்டேன் அதை மட்டும் என் கிட்ட கேட்காத“ அதற்கு ஜெய் மகிழ்ச்சியுடன்

 “இல்ல இது போதும் மயூ“ என்று இருவரும் பேசியபடி கம்பெனிக்குச் சென்றனர். கம்பெனி கார் பார்க்கிங்கில் ஜெய் கையில் பருப்புப் பாயசத்தைக் கொடுத்த மயூரி “இதை சூடு பண்ணி குடி“ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.

தன் கையில் இருந்த பாயசத்தைப் பார்த்த ஜெய், “சோ ஸ்வீட் டி மயூ நீ” என்று சொல்லி, அவன் நீல விழிகளும் சேர்த்துச் சிரிக்க, தலை கோதியபடி மயூரி சென்ற திசையைப் பார்த்தான். இங்கு அவள் டேபிளில் அமர்ந்த மயூ எப்போதும் போல வேலையைத் தொடங்கப் போக, அப்போது அவள் டீமில் வேலை செய்யும் பார்வதி அங்கு வந்து தயங்கியபடி, “மேம்…” என்று அழைக்க, அதற்கு மயூரி, “சொல்லுங்க பார்வதி, என்ன ஆச்சு?” என்று கேட்க, அதற்கு பார்வதி தயங்கித் தயங்கி, “கோடிங் டீம் ஹெட் நம்ம டிசைன் பண்ண கேரக்டரை மாத்தச் சொல்லி மெயில் போட்டுருக்காரு மேம்” என்று ஒரு வழியாகச் சொல்லிவிட, அதைக் கேட்ட மயூ அவள் உதட்டைக் கடித்து யோசித்தவாறு, “அந்த நரேனா நமக்கு மெயில் போட்டது? அவன் நம்ம தப்பவே பண்ணாலும் சரின்னுதானே போவான்?” என்று அவள் யோசிக்க, அதற்கு பார்வதி, “அவர் இல்லை மேம், அந்த டீம் ஹெட்டை மாத்திட்டாங்க. இப்போ போட்டுருக்கவரு புதுசு. இங்க வந்து த்ரீ மன்த் தான் ஆகுது. இதுக்கு முன்னாடி இலா சார் மெயின் கம்பெனியிலதான் வொர்க் பண்ணாராம்”

“ஓ… புதுசா? அப்போ என்ன பத்தி தெரியாம போட்டுருப்பான் அந்த மெயில்ல. நான் பார்த்துக்குறேன், நீ போ” என்று அவளை அனுப்பிவிட்டு, மயூரி, “அந்த மெயிலை முழுதாகக் கூடப் படிக்காமல், ‘கேரக்டர் சேஞ்ச் பண்ண வேண்டாம், இதுதான் நல்லா இருக்கு’ என்று மொட்டையாக மெயிலை அனுப்பிவிட்டு, இவள் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

இங்கு ஆபிசில் மறுநாள் ஆர்யன் அந்த மெயிலைப் பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டவன் மனதில் “எப்படி ஒரு டீம் ஹெட்டா இருந்துட்டு இப்படி கேர்லெஸ்ஸா மெயில் போடுறாங்க ” என்று கடுப்பாகி மீண்டும் மெயிலில் “கேரக்டர், ஸ்டோரி லைனுக்கு மேட்ச் ஆகவில்லை. சோ, அதை சேஞ்ச் பண்ணித்தான் ஆக வேண்டும்” என்று மீண்டும் ஒரு மெயில் போட்டுவிட்டு, அதனுடன் அந்த கேமின் கோடிங் வேலையை நிறுத்திவிட்டதாக சொல்லி, அதையும் அந்த மெயிலுடன் இணைத்து கோடிங் நிறுத்தி வைக்க இதுவே காரணம் என்பது போல மெயில் போட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான் ஆர்யன். இது எதுவும் தெரியாத மயூரியோ டாக்டர் முன் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்த டாக்டர் மேரி சிரித்த முகத்துடன் “வாங்க மயூரி, எப்படி இருக்கீங்க? வொர்க்லாம் எப்படி போகுது?”

“எல்லாம் சூப்பரா போகுது டாக்டர்” என்று சிரித்த முகமாகப் பேசியவள் டாக்டரைப் பார்த்து “டாக்டர், இப்போ இந்த ரெண்டு நாளா எனக்கு ஒரு ட்ரீம் வருது டாக்டர். அதுல இருந்து நான் முழிக்கும்போது எனக்குத் தலை ரொம்ப வலிக்குது டாக்டர்”

“தலைவலி வருதா? அப்படி தலைவலி வரமாதிரி என்ன ட்ரீம் அது மயூரி?” என்று கேட்டதும் மயூரியும் அந்தக் கனவை டாக்டரிடம் சொல்ல, அதைக் கேட்ட டாக்டர், “அது கனவு இல்லை மயூரி, அது உங்க நினைவுகள். நீங்க மறந்த நினைவுகள் திரும்பி உங்களுக்கு இந்தக் கனவு மூலம் நினைவுக்கு வருது மயூரி”

“நானும் அதுதான் யோசிசேன் டாக்டர். ஆனா கனவுல வரவங்களோட முகம் எனக்குத் தெளிவா தெரியல டாக்டர். நான் எவ்வளவு யோசித்தாலும் ஞாபகம் வரல டாக்டர். அப்புறம் கனவுல நடுவுல நிறைய விஷயம் தெளிவா இல்லை டாக்டர்.” என்று குழப்பமான முகத்துடன் பேசிய அதற்கு மேரி “அது உங்க பிரைன் கொஞ்சம் கொஞ்சமா இப்போதான் உங்க நினைவுகளைத் தேடத் தொடங்கி இருக்கு மயூரி. அதான் சில விஷயம் சரியா நினைவு வரமா இருக்கு. நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாம ரிலாக்ஸாக இருங்க. எல்லாம் நினைவும் திரும்பி வரும்.” என்று அவள் தலைவலிக்கு வேறு மாத்திரையை எழுதிக் கொடுத்துவிட்டு, “பரவாயில்லை மயூ. டூ இயர் ட்ரீட்மென்ட்ல இப்போ தான் உங்க நேம் நினைவு வர அளவு இம்ப்ரூவ் ஆகி இருக்கீங்க.” என்று சொல்ல, அதைக் கேட்டுச் சிரித்த மயூரி, “தாங்க்யூ டாக்டர்” என்று கிளம்பிவிட்டாள்.

அந்த இருள் நிறைந்த சாலையில் நள்ளிரவு நேரம் காரில் கருப்பு நிற சட்டை அணிந்து அவள் தோள் வரை இருந்த முடியை ஒரு கையால் தள்ளிவிட்டபடி ஒரு சாலைக்குள் வண்டியைச் செலுத்தினாள் அவள். அந்தச் சாலையில் பெண்கள் சிலர் அழகாக உடை அணிந்தபடி வரும் வண்டிகளை நோட்டமிட்டுக்கொண்டு இருந்தனர். அவர்களைக் காரில் இருந்தபடி இவள் சுற்றிப் பார்க்க, அவர்களுள் ஒரு பெண் மட்டும் முட்டி வரை ஆடை அணிந்து தனியாக நின்றபடி மேக்கப் செய்துகொண்டு இருக்க, அவள் முன்னே காரை நிறுத்தி கண்ணாடியைச் சிறிது இறக்கி அந்தப் பெண்ணைக் கையை அசைத்து அவள் அருகில் வருமாறு அழைக்க, அந்தப் பெண்ணும் ஆர்வமாக வந்து கண்ணாடி அருகே குனிந்து “ஒன் நைட்க்கு ஐயாயிரம், ரூம் செலவுலாம் நீ தான் பார்த்துக்கணும், ஓகேனா சொல்லு” என்று நிற்க, அவளும் “எனக்கு ஓகே” என்று சொன்னதும், அவள் குரலை வைத்து அந்தப் பெண் “பெண்ணா நீ…? அது சரி” என்று ஒரு சிரிப்புடன் காரில் ஏறி அமர்ந்தாள். அந்தப் பெண் அமர்ந்ததும் காரைக் கிளப்பியவள் ஒரு கையில் கார் ஸ்டீயரிங்  பிடித்தபடியும் மற்றொரு கையில் அவள் போட்டிருந்த அரை நிலா வடிவ செயினை வாயில் வைத்துக் கடித்தபடியும் அந்த இருளில் காரின் ஓளியில் சென்றது அந்த ஆடி கார்.