இரவு 36

ஞாயிற்றுக்கிழமை  காலை எப்போதும் போல விழித்த லட்சுமி அருகில் உறங்கி கொண்டு இருந்த மாணிக்கத்தை பார்த்தாள். எப்படி தம்பியிடம் அவள் மும்பைக்கு செல்வதை சொல்வது என்று சுத்தமாக தெரியவில்லை ஆனால் எப்படியாவது சொல்லிதான் ஆக வேண்டும் என்று நினைத்தவள், அவனை எழுப்பி “ தம்பி எழுந்திருடா விடிஞ்சிருச்சி  பாரு “ என்று எழுப்ப மாணிக்கம் கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்தவன் அறை தூக்கத்தில் “ வேலைக்கு கிளம்பிட்டியா அக்கா பாத்து போயிட்டு வா “ என்று கொட்டாவி விட்டவனை பார்த்து சிரித்த லட்சுமி அவன் தலையை கலைத்துவிட்டபடி “ இன்னைக்கு நான் லீவ்டா சீக்கிரம் கிளம்பு நம்ம வெளியே போலாம் “ என்று லட்சுமி சொன்னதை கேட்டு கண்களை விரித்து மாணிக்கம் “ இன்னைக்கு உனக்கு லீவ்வா அக்கா ? என்ன வெளியே கூட்டிட்டுப் போறியா அத்தை சரின்னு சொல்லிடாங்களா “ என்று ஆர்வமாக கேட்ட தன் தம்பியை பார்த்து சிரித்த லட்சுமி “ அதெல்லாம் சரின்னு சொல்லுவாங்க நீ போய் ரெடி ஆகிட்டு வா..” என்று எழுப்பி விட்டவல் நேறாக அவள் அத்தையிடம் சென்று “ நான் மாணிக்கத்தோட வெளிய போறேன் வர சாயங்காலம் ஆகும் “ என்று செல்லி போனவளை நிறுத்திய அவள் அத்தை

 “ வேலைக்கு போகாம எங்க தம்பி கூட போற “ என்று அவளை பார்த்து முறைத்த படி கேட்க லட்சுமி “ அதான் இன்னும் மூனு நாள்ல வேற வேலைக்கு போறேன் தானே, அப்புறம் எதுக்கு இந்த வேலைக்கு போகனும் அதான் நின்னுட்டேன்“ என்று சொல்லிவிட்டு அவள் திரும்ப அவள் அத்தை “ போன மாசம் பாத்த வேலைக்கு சம்பளம் வாங்கிட்டு நில்லுடி “ என்று அவர் உடலை நகர்த்த முடியாமல் நகர்த்தி அவள் பின்னேயே சொல்ல அவரை ஒரு பொருட்டாக கூட கண்டுகொள்ளாமல் லட்சுமி அவள் வேலையை பார்த்த படி “ அது எல்லாம் வாங்கிட்டு தான் நின்ன ஆனா சம்பளத்தை உங்க கிட்ட தரமாட்டேன் அதான் புது வேலைக்கு காசு வாங்கியிருக்கிங்கள அது போதாதா உங்களுக்கு “ என்று சொல்லி சென்றவளை பார்த்து முறைத்த படி வாயில் அவளை அறைந்துகொண்டே சென்றார்.

மாணிக்கமும் அக்காவுடன் வெளியே செல்லும் ஆசையில் வேகமாக கிளம்பி நிற்க இருவருமாக சேர்ந்து வெளியே செல்வதை ஜன்னல் வழியே பார்த்த அவர்களின் அத்தை “ அவ அக்கா இங்க இருக்க வரை தானே அவ போகட்டும் இவனை பார்த்துக்கிறேன் “ என்று முனங்கிய படியே இருந்தார். இங்கு லட்சுமியும் மாணிக்கமும் அருகில் இருந்த கோவிலுக்கு முதலில் சென்று வந்தவர்கள் பின் ஒரு நல்ல உணவகத்திற்கு சென்று மாணிக்கத்திற்கு பிடித்ததை எல்லாம் அவள் சம்பாதித்த காசில் வாங்கிக் கொடுத்துவிட்டு, பின் மாணிக்கத்தைச் சினிமாவுக்குக் கூட்டிச் சென்று, அன்று முழுக்கத் தம்பியுடனே திருச்சியைச் சுற்றி வந்தாள் லட்சுமி. மீண்டும் திரும்பி தம்பியை பார்க்க முடியாது என்று தெரிந்தோ தெரியாமலோ ஏதோ மனதில் தவறாக தோன்ற, தம்பியுடனே  அன்று மட்டும் இன்றி அவள் மும்பை செல்லும் வரையுளும் அவன் கூட தான் இருந்தாள்.

மதியம் போல் இருவரும் உணவை உண்டு முடித்து கோவில் குலத்தருகே அமர்ந்து இருக்க லட்சுமி மெல்ல அவள் மும்பைக்கு செல்ல போவதைப் பற்றி சொல்ல மாணிக்கம் கண்கள் கலங்க  “ வேணா க்கா இங்கேயே இரு நீயும் என்ன விட்டு போய்ட்டா நான் எப்படி அக்கா இருப்பேன் “ என்று லட்சுமியின் கையை பிடித்து அவன் கேட்க லட்சுமிக்கும் கண் கலங்கும் போல் தான் இருந்தது அதை வெளியில் காட்டாமல் மாணிக்கத்தின் கண்களை துடைத்தபடி “ அழுகாதடா தம்பி அக்கா என்ன அங்கேயேவா இருக்க போறேன் வேலை பாத்து கொஞ்சம் காசு சேத்திட்டு உன்னையும் கூட அங்கேயே கூட்டிக்க போறேன்  “ என்று அவன் கன்னம் கிள்ளி பேச லட்சுமியின் கையை தட்டிவிட்ட மாணிக்கம் “ ஏன் இங்க பாக்குற வேலைக்கு என்ன அத பாத்துட்டு என் கூடவே இரு அக்கா ஏன் அத்தை ஏதாவது சொல்றாங்கள வேணும்னா  நானும் உன் கூட  வேலைக்கு வரேன் நீ எங்கயும் போகாத என் செல்ல அக்கால “ என்று முகத்தை பாவமாக வைத்த படி பேச, அவன் தலையில் தட்டிய லட்சுமி “ நீ வேலைக்கு போக தான் நான் இவ்வளவு கஷ்டம் படுகிறேனாடா இதுக்கு அப்புறம் இப்படி ஏதாவது பேசினா பிச்சிருவேன் “என்று மிரட்டினாள்.

அதற்கு மாணிக்கம் “ ம்ம்ம் இனி இப்படி பேசமாட்டேன் ஆனா என்னை விட்டு நீ போகாத க்கா “ என்று தலை சாய்த்து லட்சுமி கையை பிடித்து கண்ணில் இருந்து நீர் வர கேட்க லட்சுமிக்கு உருகியே போனது அவளும் கண்ணீர் விட்ட படி “ அக்கா சொல்றத கேளு தம்பி நம்ம அம்மா அப்பா கஷ்டப்பட்டு நம்மை காப்பாற்றியிருக்காங்க நம்ம அதுக்கு ஏத்த மாதிரி நல்லா இருக்க வேணும் தானே “ என்று கேட்டதற்கு மாணிக்கம் ஆம் என்பது போல தலை ஆட்ட அதில் லேசாக சிரித்த லட்சுமி “ நம்ம நல்லா இருக்க வேணும்னா நான் அங்க போய் தான் ஆகனும் தம்பி அங்க ஒரு பாட்டிய பார்த்துக்க தான் போறேன் அவங்க தனியா தான் இருக்காங்களாம் நான் அங்க போய் அவங்க கிட்ட எப்படியாவது பேசி உன்ன கூப்பிட்டுகிறேன், நீ அது வரை எனக்காக நல்லா சாப்பிட்டு தூங்கி நல்ல படிச்சி சமத்தா இருக்கனும் சரியா “ என்று கேட்க மாணிக்கம் மனதே இல்லாமல் தலை அசைத்தான்.

லட்சுமி சொன்னது படி, புதன் கிழமை அவள் கிளம்பும் வரை மாணிக்கத்துடன்  தான் இருந்தாள். அவளை அழைத்து செல்ல ஒரு வயதான வட இந்திய பெண் ஒருத்தியை வினோத் அனுப்பி வைத்தான். எங்கே இவன் வந்தால் லட்சுமி கடைசி நிமிடத்தில் மனம் மாறிவிடுவாளோ என்று இந்த பெண்ணை ஏற்பாடு செய்து விட்டு இவன் கிளம்பிவிட்டான். லட்சுமியும் அந்த பெண்ணுடன் ரயில் ஏறும் கடைசி நிமிடம் வரை மாணிக்கம் அவன் அக்கா,வின் கைகளை பிடித்த படி,” சீக்கிரமா வந்துடு க்கா போய் கடிதம் போடு, முடிந்தா நம்ம தெரு கடைக்கு போன் போடு, பார்த்து க்கா “ என்று எதேதோ பேசியபடியே இருந்த மாணிக்கம் அவன் அக்கா, சென்று ஒரு வாரம் அழுதபடி, காய்ச்சலில் விழுந்து விட்டான்.

ஒரு வாரம் கழித்தே அவன் அழுகை நின்று பள்ளிக்கு செல்வது, அத்தைக்கு வீட்டு வேலை பார்ப்பது என்று இருந்த மாணிக்கத்திற்கு நினைவு முழுக்க அக்கா, போய் சேர்ந்து இருப்பாளா? போய் கடிதம் போடுறன்னு சொன்னாளே என்று தபால் காரர் வரும் போது எல்லாம் அவரிடம் கடிதம் ஏதாவது வந்திருக்கிறதா என்று கேட்பதையே வழக்கமாக வைத்திருந்தான். கடிதத்திற்காக காத்திருந்த மாணிக்கத்திற்கு ஐந்து மாதம் ஆகியும் ஒரு கடிதமும் வரவில்லை.

 அத்தையும் லட்சுமியை திட்டியபடியே இருக்க ஒரு நாள் பள்ளிக்கு சென்றவன் அக்கா வேலை பார்த்த அந்த பாத்திர கடை தாண்டி செல்ல அங்கு அந்த கடை முன் அந்த கடை ஓனர் பையன் நின்று கொண்டு இருந்தான். அப்போது அவன் அத்தை சொன்னது நினைவு வந்தது “அந்த ஓனர் பையன நம்பி இவள அனுப்பினது தப்பா போய்டுச்சே “ என்று அத்தை புலம்பல் நினைவு வர ஓடி வினோத்திடம் சென்று

“ அண்ணா, அண்ணா எங்க அக்கா எப்படி இருக்கா “ என்று கேட்டு அவன் முன்னே நிற்க, வினோத் மாணிக்கத்தை மேலும் கீழும் ஒருமாதிரி பார்த்த படி “ எந்த அக்கா “ என்று கையில் சிகரெட்டை ஊதியபடி கேட்க அதற்கு மாணிக்கம் “ அது என் அக்கா, எங்க லட்சுமி அக்கா இங்க உங்க கடையில கூட வேலை பார்த்தாங்களே நீங்க கூட மும்பைக்கு ஒரு பாட்டிய பாத்துக்க அனுப்பினீங்ககளே “ அதை கேட்டு சிகரெட்டை நன்றாக இழுத்து மாணிக்கம் மீது ஊதியபடி “ ஓ… உங்க லட்சுமி அக்காவா…..”என்று சிகரெட்டை காலில் போட்டு கசக்கியவன் “அவ வேலை பாத்த வீட்டு பக்கத்துல இருந்த இந்தி காரண கூட்டிட்டு ஓடிப்போய்ட்டா “என்று நக்கலாக சிரிக்க மாணிக்கம் “ அச்சோ அண்ணா நீங்க வேற யாரோ பத்தி சொல்றிங்க நான் லட்சுமி அக்காவ பத்தி பேசுறேன் உங்க கடையில முடி கூட நீளமாக வச்சிருப்பாங்களே “ என்று அடையாளம் சொல்லி அவன் முகத்தை மாணிக்கம் பார்க்க வினோத் “ ப்ச் நானும் அந்த அக்காவ பத்தி தான் சொல்றன் போய் வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் ஆகல்லை  அதுக்குள்ள எவனுடனோ ஓடிப்போயிட்டா அவளால எனக்கு தான் நஷ்டம் இன்னொரு தடவை அக்கா சொக்கா ன்னு வராதே “ என்று அவனை தள்ளிவிட்டு கடைக்குள் சென்று விட்டான்.

வினோத் சொன்னதை கேட்டு அதிர்ந்து நின்றுவிட்டான் மாணிக்கம் எப்படி வீட்டுக்கு சென்றான் என்று தெரியவில்லை கால் போன போக்கிலே அவன் அத்தை வீட்டு தின்னையில் அமர அப்போது அவன் அத்தை, மாமா வீட்டுக்குள் சண்டை போட்டது தெரு வரை கேட்டது. “ அழகா மாசம் ஐந்தாயிரம் காசு கொடுத்துட்டு இருந்தா, எவனோ சொன்னான்னு  மும்பைக்கு அனுப்பி இப்படி ஒன்னும் இல்லாம பண்ணிட்டியே “  என்று அவன் மாமா கத்த, அதை கேட்டு அவன் அத்தை “ நான் என்ன கனவா கண்டேன் இப்படி இந்த பெண்ணு ஓடிப்போகும் ன்னு, இங்க இருந்த வரை நல்ல பிள்ளை மாதிரி இருந்துட்டு அங்க ஏதோ வசதியா யாரோ கிடைக்கவும் போயிட்டா போலையே இப்போ என்ன பண்றது “ என்று கேட்க அதற்கு அவன் மாமா “ உக்கும் இப்போ வந்து கேளு இவ சம்பளம் வரும்ன்னு நம்பிக்கையில வேற கடன் வாங்கி வீடு கட்ட ஆரம்பிச்சிட்டோம் “ என்று யோசிக்க அதற்கு அத்தை “  அவ போனா என்ன? அவ தம்பி இருக்கான் ல்ல? அவனை அனுப்புவோம் “ என்று பேசி முடித்தனர். அவர்கள் பேசியதில் மாணிக்கத்திற்கு புரிந்தது இதுவே அவனின் அக்கா ஏதோ நல்ல பையனை திருமணம் செய்து இருகிறாள் என்ற வகையில் புரிந்து கொண்டவன் “அக்காவாது நல்லா இருக்கட்டும் கொஞ்சம் நாள் கழிச்சி நம்மை கூப்பிட வருவா “ என்று மனதை தேற்றிக்கொண்டான்.

மாணிக்கத்தின் அத்தை மாமா முடிவு செய்தபடி இவனை அரிசி மண்டியில் மூட்டை தூக்க வேலைக்கு சேர்த்துவிட மாணிக்கமும் என்றைக்காவது ஒரு நாள் அக்கா தேடி வருவாள் என்று காத்து இருந்தான்.

இதை கேட்டு மயூரி ஜெய் ஆர்யன் மூவரும் மிகவும் வருந்திதான் போனார்கள் மயூரி “ போலிஸ் கிட்ட ஹெல்ப்க்கு போகவே இல்லையா, அங்கிள்? “ அதை கேட்டு முகத்தை துடைத்த மாணிக்கம் “ மூனு வருஷம் அப்புறம் எனக்கு சந்தேகம் அக்கா ஏன் என்ன தேடி வரலன்னு நானும் போலிஸ் கிட்ட போய் கம்பளைண்ட் பண்ணினேன் அதுக்கு அவங்க கம்பளைண்ட் எடுத்துக்க மாட்டோம் உங்க அக்கா விருப்ப பட்டு போயிருக்கா அவள வந்தால்தான் உண்டு ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க எனக்கு அப்போ எதுவும் தெரியாது. அதனால திரும்பி வந்துட்டேன் அப்புறம் என்ன தெய்வா கல்யாணம் பண்ணிகிட்டு சென்னைக்கு வந்த பிறகு திரும்பி கம்பளைண்ட் தந்தேன் விசாரிக்கிறேன்னு சொன்னாங்க நானும் ஒரு வருஷம் அலைச்சன் ஆனா எந்த பிரயோஜனமும் இல்லை “

“ அந்த பாத்திர கடை ஓனர் பையன் பேரு அந்த கடை பெயரெல்லாம் சொல்லுங்க அங்கிள் நான் விசாரிக்க விதத்துல விசாரிக்குறேன் “ என்று ஜெய் சொல்ல மாணிக்கம் அவன் பெயர் ,கடை பெயர் என்று அனைத்தும் இன்று சந்தித்து பேசியது போல சொல்லியவர் மயூரி பக்கம் திரும்பி “ என் அக்கா எங்கேம்மா இருக்காங்க அவுங்க ஏன் ம்மா உன் கூட தப்பிச்சி வரல்லை  “ என்று கேள்வியாக கேட்க மயூரி கலங்கிய குறளில் “ எனக்கு ஞாபகம் இல்ல அங்கிள் “என்று தலையை தாழ்த்தி கொண்டாள்.

 மயூரி கண் முன் லட்சுமி ரத்தம் வழிய நின்ற கோலமே வர அவள் கண்களை இறுக மூடிக்கொண்டு கைகளில் அவள் உடையை பிடித்த படி மனதோடு “ கடவுளே லட்சுமியம்மா க்கு ஒன்னும் ஆகிடக் கூடாது ப்ளீஸ் ப்ளீஸ் “ என்று தலை குனிந்து மாணிக்கத்தை பார்க்க முடியாமல் தவித்து கொண்டு நின்ற மயூரியை பார்த்த ஆர்யன் அவள் கைகளை பிடித்த படி “ அத்தைக்கு ஒன்னும் ஆயிருக்காது ப்பா இவ சின்ன பெண்ணுன்னு இவளை மட்டும் காப்பாத்தி விட்டுட்டு அவுங்க அங்க தான் இருப்பாங்க நாம அந்த இடத்தை கண்டுபிடிச்சா போதும் அத்தையை கூட்டிட்டு வந்துடலாம் நீங்க தைரியமா இருங்க “ என்று மயூரிக்கும் சேர்த்து தைரியம் சொல்ல அவள் கண் கலங்க அர்யனை தான் பார்த்தாள்.

அவனும் அவளின் கையில் ஒரு அழுத்தம் தந்து அனைத்தும் சரியாகிவிடும் என்பது போல கண்களை மூடி திறந்தவன் மாணிக்கத்தை அவர் அறைக்கு ஒய் வெடுக்க அழைத்து சென்று விட்டான். பின் மாணிக்கத்தை பெட்டில் படுக்க வைத்துவிட்டு வெளியே வர மயூரி முகம் பெய் அறைந்தது போல வெளிரி இருக்க ஜெய்யும் யாரிடமோ போனில் பேசி விட்டு அப்போது தான் வந்தான். ஜெய்யும் மயூரியின் முகத்தை பார்த்து விட்டு அவள் தலையில் தட்டி “ ஏ லூசு பயப்படாத அவுங்களுக்கு ஒன்னும் ஆகிருக்காது கண்டுபிடிச்சிரலாம் நான் அந்த கடைய பத்தி இப்போ தான் விசாரிச்சேன் இன்னைக்கு இவினிங் குள்ள அவன பத்தி நீயூஸ் எல்லாம் கிடச்சிடும் “ என்றவன் நிமிர்ந்து ஆர்யனையும் பார்த்து “ அங்கிள் எப்படி இருக்காங்க ஆர்யன் “ என்று கேட்க அதற்கு அவன் “ பரவாள பழைச நினச்சதுல கொஞ்சம் ஃபீல் பண்றாங்க வேற எதுவும் இல்ல “ அதை தலை ஆட்டி கேட்டு கொண்டான். பின்பு நால்வருமே அங்கேயே இருந்து வினோத்தை பற்றி கிடைக்க போகும் செய்திக்காக காத்து இருந்தனர்.