இரவு 35

அந்த வருடம் தொடர்ந்து பெய்த மழையில் வீட்டு கூரை முதலில் லேசாக இடியத் தொடங்க அதை கவனித்து மாணிக்கம் தாய் மற்றும் தந்தை லட்சுமி மற்றும் மாணிக்கம் இருவரையும் எழுப்பி வெளியே அனுப்பி விட்டு இவர்கள் செல்லும் முன் வீடு இடிந்து விழுந்திருந்தது.  அம்மா அப்பாவின் உடலை அந்த இடிந்த வீடு முன் வைத்து கொண்டு மாணிக்கம் மற்றும் லட்சுமி அழுத படி அடுத்து என்ன செய்ய என்று புரியாமல் இருக்க அப்போது விஷயம் கேள்வி பட்டு வந்த மாணிக்கத்தின் அத்தை அவர் கனவர் மூலம் அனைத்துக் காரியமும் செய்து விட்டு கவர்ன்மென்ட் கொடுத்த பணத்தையும் எடுத்து கொண்டு செல்ல பார்க்க அதை கண்டு கொண்ட வீட்டு பக்கத்தில் இருக்கும் ஒருவர் அக்கம் பக்கம் இருப்பவரை எல்லாம் அழைத்து “ இதோ பாரும்மா… இந்த பிள்ளைங்களுக்கு வேற யாரும் இல்லை, சொந்தம்னு நீ மட்டும் தான் இருக்க நீயும் கவர்ன்மென்ட் தர பணத்தை மட்டும் எடுத்துட்டு இவங்கள விட்டு போன என்ன நியாயம் “ என்று கேள்வியாக நிறுத்த அதற்கு அவர்களின் அத்தை “ அதுக்குன்னு எங்க வீட்டுக்கு கூட்டி போக முடியுமா… நானே கஷ்டத்துல இருக்கேன் “ என்று சேலையை உதறி சொருகிய படி கேட்க அதற்கு அந்த பெரியவர் “ உனக்கு என்ன கஷ்டம் ஒரே பையன வச்சிருக்க அவனுக்கு நகைய போட போற இந்த பசங்கள பாரு பாவம் ஒரே ராத்திரில அப்பன் அம்மாவ இழந்துட்டு நிக்குதுங்க தங்க வீடும் இல்லை இப்போ எங்க போவாங்க உன் அண்ண பசங்கல நீ பாத்துக்காம வேற யாரும்மா பாத்துப்பா “ என்று பேசிய பெரியவர் பேச்சை கேட்டு அங்கு இருந்த அனைவரும் அதையே மாத்தி மாத்தி பேச வேறு வழியில்லாமல் இருவரையும் அவர் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார்.

ஆனால் மாணிக்கம் லட்சுமி வீட்டுக்குள் நுழையும் முன் நிபந்தனை போல “இங்க என் பையன படிக்க வைக்கவே கஷ்டமா இருக்கு இதுல உங்களையும் படிக்க வைக்க முடியாது அதுனால இங்க இருக்கனும்னா நீ வேலைக்கு போகனும் படிக்கிற கனவ தூக்கி எறிஞ்சிட்டு வேலைக்கு போக சரின்னா உள்ள வாங்க… “ என்று சொல்லி செல்ல வேறு வழியின்றி  இருவரும் உள்ளே சென்றனர். இவர்கள் வந்த இரண்டு நாட்களில் லட்சுமிக்கு ஒரு பாத்திரம் கடையில் வேலை வாங்கி கொடுத்து விட அந்த இடத்துக்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்தாள்.

லட்சுமி படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை மாணிக்கத்தின் படிப்பை நிறுத்த கூடாது என்ற எண்ணம் மட்டும் லட்சுமிக்குள் ஓடி கொண்டே இருக்க அருகில் இருந்த கவர்மெண்ட் பள்ளியில் தமிழ் வலி கல்வியில் சேர்த்துவிட்டாள் . அப்பா எண்ணெய் செக்கில் வேலை செய்தாலும் ஆங்கில வழிக் கல்வியில் தான் படிக்க வைத்து வந்தார் லட்சுமி மற்றும் மாணிக்கத்தை  ஆனால் இப்போது இந்த தமிழ் வழிக்கே அவள் அத்தையிடம் காலில் விழுந்து கொஞ்சாத குறையாக சம்மதம் வாங்கி இருக்க இதில்  ஆங்கில வழிக்கு ஒப்புக்கொள்ளவே மாட்டார். இப்போதைக்கு இதுலையாவது படிக்கட்டும் என்று சேர்த்துவிட்டாள்.

இப்படி மூன்று மாதம் அங்கு வேலை பார்த்துக்கொண்டு லட்சுமி இருக்க மாணிக்கம் காலை பள்ளிக்கு சென்று மாலை வீடு வந்த பிறகு அவரை பாத்திரம் விலக்கு, வீட்டை பெருக்கு என்று மற்ற வேலை செய்ய வைப்பார் அவர் அத்தை. காலை ஒன்பதுக்கு செல்லும் லட்சுமி வீடு வர ஒன்பது ஆகிவிடும் வரும் போதே சொர்வக தான் வருவாள் அதுனாலேயே மாணிக்கம் இங்கு அவர் செய்யும் வேலையை சொல்ல மாட்டார் இதை கேட்க போய் அக்காவை இந்த வேலை பார்க்க வைத்த் விடுவார்கள் என்று  எண்ணி. இரவு வரும் அக்காவின் வலிக்கும் பாதங்களை பிடித்து விட்டு அன்று பள்ளியில் நடந்த கதையை பேசிக்கொண்டு இருப்பான் முடிந்தவரை வீட்டில் இவனை அடிக்கும் அத்தையை பற்றி எதுவும் பேச மாட்டான்.

இப்படியே சென்ற அவர்கள் வாழ்க்கையில் வந்தான் அவன் வினோத் லட்சுமி வேலை பார்க்கும் கடையின் முதலாளி மகன் லட்சுமி நல்ல கலையான பெண் மாநிறமாக இருந்தாலும் அவளை கடந்து செல்பவரை ஒரு முறை திரும்பி பார்க்க வைத்து விடுவாள்.  சிலர் அவள் அழகுக்காக திரும்பி பார்த்தால் பலர் அவள் இடையைத் தாண்டி வளர்ந்திருந்த முடிக்காகவே பார்ப்பர். முதலில் வினோத் இவளின் முடியின் அளவை பார்த்து விட்டு தான் யார் என்று முகத்தை பார்த்தான். பார்த்ததும் அவனுக்கு பிடித்துப்போக ஒரு நாள் இவள் வேலையை விட்டு செல்லும் போது இரவு நிற்க வைத்து “ லட்சுமி எனக்கு உங்களை புடிச்சிருக்கு  ஐ லவ் யூ “ என்று சொல்லி விட லட்சுமி தைரியமாக அவன் கண்ணை பார்த்து “ சாரி எனக்கு உங்களை பிடிக்கல்லை “ என்று சொல்லிவிட்டு நகரப் போனவளை மறித்து நின்ற வினோத் “ ஏன் என்னை பிடிக்கல்லை உனக்கு நான் யாருன்னு தெரியும்தானே “  என்று அவன் முதலாளி பையன் என்பது தெரியாமல் பேசிகிறாளோ என்று அவன் கேட்டான். அதற்கு லட்சுமி  “நீங்க யார வேணும்னாலும் இருங்க எனக்கு உங்கள பிடிக்கல்லை அதுவும் இல்லாம நான் மைனர் பெண்ணு என்கிட்ட இப்படி பேசுறதே தப்பு தெரியும்தானே வழிவிடுங்க இப்படி என் கிட்ட வந்து பேசுற வேலை வச்சிக்காதிங்க அப்புறம் நான் வேற முடிவு எடுக்க வேண்டியது இருக்கும் அப்போ ஓனர் பையன்னுலாம் பாக்க மாட்டேன் “ என்று மிரட்டி விட்டு சென்று விட்டாள் .

அவள் பேச்சில் கடுப்பான வினோத் “ இவளை எதவது பண்ணனுமே “ என்று யோசித்தவன் முதலில் அவளை பற்றி சுற்றி விசாரித்தான். விசாரித்த வரையில் அவள் நிலையை பற்றி தெரிந்து கொண்டவன் “ யாருமில்லாமலே இவ்வளவு திமிரா உனக்கு உன்ன என்ன பண்ணுறேன் பார் “ என்று கேவலமாக யோசிக்க தொடங்கினான்.

அதன் விளைவாக மறுநாளே லட்சுமியின் அத்தை,  மாமாவை சென்று சந்தித்து பேசினான். பேசியவன் மும்பையில் இவன் சொந்தம் ஒருவர் வீட்டுக்கு தங்கி வேலை செய்ய ஒரு பெண் வேண்டும் சம்பலம் நிறைய தருவார் வயதான பெண் தான் பயமில்லை அட்வான்ஸ் பணமும் தர ரெடியாக இருக்கிறார் லட்சுமியை அனுப்பி வையுங்கள் என்று சொன்னான். லட்சுமியின் அத்தை அவனை ஏற்ற இறக்கமாக பார்த்து விட்டு “ ஏன் லட்சுமிய போகச் சொல்கிறீங்க இதனால உங்களுக்கு என்ன லாபம்? நீங்க யாரு முதல“ என்று கேட்டு விட்டு அவனை பார்க்க, அவன் அலட்டிக்கொள்ளாமல் “ நான் லட்சுமி வேலை பாக்குற கடை ஓனர், உங்க குடும்ப சூழ்நிலை பாத்தி தெரியும் எனக்கு அதான் உதவலாம்னு வந்தேன் வேணாம்னா விடுங்க “ என்று எழுந்து செல்ல பார்க்க உடனே பதறிய லட்சுமியின் அத்தை “ அச்சோ தம்பி கோபிச்சிக்காதிங்க  யாருன்னு விசாரிக்க தான் கேட்டேன் “ என்று பல்லை காட்டி சிரித்தவர் அவன் தந்த இருபது ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு லட்சுமியை விற்று விட்டார்கள். ஆம் காசு என்றதும் எதையும் ஒழுங்காக விசாரிக்காமல் விற்றதுபோல அவளை பாழுங்குலிக்குள் தள்ளிவிட்டனர்.

அன்று இரவு லட்சுமி வேலை விட்டு வருவதற்காக அவள் மாமா அத்தை தூங்காமல் காத்து இருக்க முதலில் அவர்களை பார்த்து “என்ன அதிசயம் நாம வர டைம் முழிச்சி இருக்காங்க இவங்க காரணம் இல்லாம இப்படி செய்ய மாட்டாங்களே சம்பளம் நாள் கூட இன்னைக்கு  இல்ல“ என்று எண்ணியபடி அவர்களை கண்டுக்கொல்லாமல் சமையல் அறை சென்று அவள் தம்பியுடன் சாப்பிட்டு முடித்து மாணிக்கத்தை தூங்க வைத்து விட்டு அவள் மட்டும் வந்து இவர்கள் முன் அமர்ந்தாள்.

இருவரும் அவள் வந்ததிலிருந்து இவர்களை கண்டுகொள்ளாமல் செய்த அனைத்தையும் பார்த்து கோபம் வந்தாலும் இப்போது கோபம் பட்டு காரியத்தை கெடுத்து கொள்ள கூடாது என்று நினைத்தவர்களாக “ லட்சுமி இன்னைக்கு வேலை அதிகமா ம்மா ஏன் இவ்வளவு லேட் வேலை கஷ்டமா இருக்கா ம்மா “ என்று பாசமாக நாக்கில் தேன் வடிய பேசினார்.

 அதை கேட்டு அவர்களை சந்தேகமாக பார்த்த லட்சுமி “ கஷ்டம்லாம்  இல்லை அத்தை  “ என்று கேட்டதுக்கு மட்டும் தான் பதில் என்பது போல அமர்ந்து இருந்தவளை பார்த்த அவள் அத்தை நேராக விஷயத்துக்கு வந்தார் “ இதோ பாரு லட்சுமி முன்னாடி இங்க மூனு பேரு தான் உங்க மாமா கொடுத்த சம்பளத்தை வச்சி சமாளிச்சிட்டன் ஆனா இப்போ அப்படி இல்லை நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எல்லா செலவும் அதிகம்  ஆகுது, நீ கொடுக்குற ஐந்தாயிரம் பத்தல அதுனால உனக்கு வேற வேலை நாங்க பாத்து வச்சிருக்கோம் அங்கேயே தங்கி வேலை பாக்குற மாதிரி மாதம்  பத்தாயிரம் தராங்களாம் உன் செலவையும் அவங்களே பாத்துக்குறாங்களாம் இன்னும் ஒரு வாரத்தில நீ அங்க கிளம்புற “ என்று சொல்லிவிட்டு எழுந்து செல்ல போக, லட்சுமி “ தங்கி பாக்குற வேலைக்கு நான் போகமாட்டேன் அத்தை, இந்த வேலையே எனக்கு போதும் “  என்று பிடிவாதமான குரலில் சொல்லியவளை பார்த்து அவள் மாமா “ உனக்கு இந்த வேலை போதும்தான் ஆனா எங்களுக்கு நீ கொடுக்கற காசு பத்தாது ஒழுங்கா உங்க அத்தை சொல்றத கேளு “ என்று மிரட்டலான குரலில் அவள் மாமா பேச, லட்சுமி அவர் பக்கமே பார்க்கமல் “ இதோ பாருங்க  அத்தை மூணு வேலையும் சாதம் தான் நாங்க சாப்பிடுறோம் கறின்னு கூட எதுவும் நீங்க எங்களுக்கு தரது இல்லை நாங்க படுக்குற ரூம்ல அந்த குண்டுபல்ப்ப தவிர வேற எதுவும் இல்லை இப்படி இருக்க நான் கொடுக்குற ஐயாயிரம் போதாதா “  அவள் சொல்லிய கணக்கை கேட்டு கடுப்பான அவள் அத்தை

“இவ்வளவு கணக்கு பார்க்கிற உன்னை எல்லாம் எங்க வீட்டுல வச்சிக்க முடியாது ப்பா நாளைக்கே உன் தம்பிய கூட்டிட்டு கிளம்பு ஏதோ போனா போதும் ன்னு வீட்டுல இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்கிற கதையால இருக்கு எங்களுக்கு எதுக்கு இந்த தேவையில்லா வேலை நீங்க கிளம்புங்க “ என்று மனசாட்சியே இல்லாமல் பேசும் தன் அத்தையை சிறிது நேரம் அமைதியாக பார்த்தாள். அந்த பார்வையில் என்ன இருந்தது என்று அவள் அத்தைக்கு புரிய வாய்ப்பு இல்லை அவள் மனதின் பெரும் போராட்டத்திற்கு பிறகு வாயை திறந்தாள் லட்சுமி

“ எங்க வேலை அத்தை” என்று அவள் கேட்க அதை கேட்டு குதிக்காத குறையாக அவள் அத்தை, “என் செல்லம் லட்சுமி நீ, நீ பயப்படாத வேலை ஒன்னும் அவ்வளவு கஷ்டமா இருக்காது ஒரு வயசான கிளவிய பாத்துக்கனும் அவ்வளவு தான்” என்று பல்லை காட்டி சிரிக்க லட்சுமி முகம் சலனம் இல்லாமல் இருக்க அதே கேள்வியை கேட்டாள் “ எங்க அத்தை வேலை “ என்று அதை கேட்ட அவள் அத்தை, “மும்பையில வேலை அவங்களே கூட்டிட்டு போவாங்களாம் நீ பயப்பட வேண்டாம் “ என்று சொல்லிவிட்டு அவர்கள் அறைக்கு செல்ல திரும்ப லட்சுமி “ இந்த வேலை உங்களுக்கு யார் சொன்னா “ என்று அடுத்த கேள்வி கேட்க அவள் அத்தை,” நீ வேலை பாக்குற கடை முதலாளி தான்மா “ என்றதும் புருவம் சுருக்கி யோசித்தவள் “ பையன் லவ் சொன்னா இந்த வேலை தரது அவர் அப்பா பிரச்சனை வராதுன்னு நினைக்குறேன் “ என்று அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.

லட்சுமி வேலைக்கு ஒற்றுக்கொண்ட சந்தோஷத்தில் அவள் அத்தை மாற்றி சொல்லிவிட அதுவே அவள் வாழ்க்கையை நரகத்தில் தள்ள வழியாக அமைந்தது. ஒருவேளை அன்று அவள் அத்தை உன் கடை முதலாளி பையன் என்று சொல்லியிருந்தால் இப்படி லட்சுமி லல்லியாக மாறி இருந்திருக்க மாட்டாளோ என்னவோ. விதி வலியது அதன் வழியில் பிடிக்கிறதோ இல்லையோ நம்மை அழைத்து செல்ல வைத்து விடும் என்பது மறுக்க முடியாத உண்மை .