ரவு 32

ஜெய் மேலும் மயூரியைப் பற்றி சொல்லத் தொடங்கினான். “எங்க தாத்தா உடனே மயூவை ஆஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மென்ட் பார்த்தாங்க. அப்போ அவளுக்கு ட்ரீட்மென்ட் தந்த டாக்டர், அவளை யாரோ ரேப் பண்ண ட்ரை பண்ணியிருக்காங்க, அதுல இருந்துதான் இந்தப் பொண்ணு தப்பிச்சு வந்திருக்கணும்னு சொன்னதும், எங்க தாத்தா போலீஸ் கிட்ட இன்பார்ம் பண்ணிட்டு, மயூரி கண் முழிக்கிற வரை வெயிட் பண்ணி, அவ கண்ணு முழிச்சதும் அவகிட்ட கேள்வி கேட்டார் அவளுக்கு எதுவுமே நினைவுல இல்ல “ அதை கேட்ட

ஆர்யன், “போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா சார், மயூரி பத்தி தெரிஞ்சிக்க?” “ஆமாம், கொடுத்திருக்கிறோம். ஆனா, நோ யூஸ் இன்றுவரை எந்த இம்ப்ரூவ்மென்ட்டும் இல்லை. மயூரி போட்டோ வச்சி, அவ சொன்ன பெயர் வச்சி கல்கத்தா, தமிழ்நாடு ன்னு செக் பண்ணிட்டு தான் இருக்கோம் ஆனால், பிரயோஜனம் இல்லை,”

மாணிக்கம் “பாப்பா எங்கிருந்து ஓடி வந்துச்சுன்னாவது கண்டுபிடிச்சீங்களா தம்பி?“ என்று உள்ளே எழும் பதட்டத்தை மறைத்து இயல்பாகவே கேட்டார், அதற்கு ஜெய். “அப்போ எவ்வளவு தேடியும் எங்களுக்கு தெரியல அங்கிள் அவ எங்க இருந்து வந்தான்னு, ஆனா இப்போ இவளுக்கு வந்த நினைவு வெச்சுப் பார்த்தா மயூவை ரொம்ப சின்ன வயசுலயே தமிழ்நாட்டுல இருந்து கடத்தி வந்து பிராத்தல் இடத்துல வித்துருப்பாங்க போல அங்கிள்“ என்று சொல்லவும் மாணிக்கம், “தம்பி… என்ன சொல்றீங்க?“ என்று கலங்கிப் போக

 ஆர்யன் “சார் போதும் மயூ பத்தி சொன்னது” என்று அவனை நிறுத்த பார்க்க ஜெய், “அங்கிளுக்கு மயூ பத்தி தெரியுறதுல தப்பு இல்ல. இதை மயூவா சொல்ல சங்கடமா இருக்கும். அதான் நான் சொல்றேன். அவ ஏன் இப்படி இருக்கான்னு தெரிய வேணாமா” என்று ஆர்யனை பார்த்து பேசியவன் மீண்டும் மாணிக்கத்திடம் திரும்பி அவர் கைகளை பிடித்தபடி, “அவ உண்மையான பேரு மயூரி இல்ல அங்கிள், அங்க இருக்கவுங்க இவளுக்கு வச்ச பேருதான் மயூரின்னு சொன்னா. அங்க இருந்த ஒரு தமிழ்நாட்டு லேடிதான் இவள பாத்துகிட்டாங்கன்னு சொன்னா இவளை தப்பிக்க வைக்க உதவுனதும் அவங்க தான்னு சொல்லி அவங்களை தத்ரூபமா வரைஞ்சு கொடுத்து தேட சொல்லிருக்கா அங்கிள் நாங்களும் கல்கத்தாவில் இருக்க எல்லா ப்ராத்தல் நடக்குற இடத்துலயும் தேடிட்டு தான் இருக்கோம் ஆனா எந்த க்ளுவும் கிடைக்கல “ என்று அவன் தலையசைத்து பேச மாணிக்கம் “ பாப்பா வரைஞ்சு தந்த படம் எங்க தம்பி “ என்று கேட்டவர் மனதில் அனைத்து கடவுள்களிடமும் “ அந்த அறையில் பார்த்த அதே படமாக இருக்க கூடாது “என்று வேண்டுதலுடன் கேட்க அவன் வேண்டுதல் எந்தக் கடவுளும் ஏற்றுக்கொள்ளவில்லை போல ஜெய் காட்டியது அதே பெண்ணின் படம் அதாவது லல்லி என்கின்ற லட்சுமி தேவியின் படம். அதைப் பார்த்து கலங்கிய கண்ணைக் கட்டுப்படுத்தி மனதில் மீண்டும் ஒரு வேண்டுதல் “கடவுளே என் லட்சுமி எந்த இடத்தில் இருந்தாலும் பரவாயில்லை அவளைப் பத்திரமாக என் கிட்ட கூட்டி வந்துருங்க கடவுளே உனக்கு நான் அலகு குத்தி காவடி எடுக்கிறேன் “ என்று வேண்டியவர் ஜெய்யிடம் “இவங்களை இப்போ வரை தேடிட்டு இருக்கீங்களா தம்பி “ என்று கேட்டார் அதற்கு ஜெய் “ஆமா அங்கிள் சீக்கிரமா கண்டுபிடிச்சிருவோம் மயூரி கூட சொல்லிட்டு தான் இருக்கா இவங்கள அந்த இடத்துல இருந்து கூட்டிட்டு வந்துடனும் அவங்க ரொம்ப நல்லவங்கன்னு போலிஸ் ஒரு பக்கம் தேடுது நாங்களும் ஒரு பக்கம் ஆள் வச்சி தேடிட்டு தான் இருக்கோம் அங்கிள் “ அதை கேட்டு மனதில் ஒரு நம்பிக்கை பிறக்க மாணிக்கம் “ சரி தம்பி நம்ம மயூ ஏன் இருட்டுல தூங்க மாட்டேங்கிறாங்க ஏன்னு உங்களுக்கு தெரியுமா “

“ஏன்னு எனக்கு தெரியாது அங்கிள் ஒருவேளை அவ இருந்த இடத்துனால கூட இருக்காலாம் என்னதான் மயூரிக்கு முழுசா நினைவு வரலைன்னாலும் அவ பயப்படுறத பாத்தா அங்க அவளுக்கு பெருசா ஏதோ நடந்துருக்கணும் அது நினைவு வரலைன்னாலும் அவ உடம்புக்கு அது நினைவு இருக்கும்ல அங்கிள் அதான் இப்படி,  அந்த ப்ராத்தல் ஏறிய நாளே நைட் தானே..” என்று எதோ சொல்ல வந்தவனை ஆர்யன் “ போதும் சார் பேசுனது மயூரி தூங்கட்டும் “ என்று முகத்தை கடினமாக வைத்து பேசியவன் மாணிக்கத்தைப் பார்த்தும் “ இதுக்கு மேல பேசாதீங்க” என்பது போல பார்வையில் கடுமையை ஏற்றிச் பார்த்தவன் மீண்டும் மயூரியைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.

ஜெய் “என்ன இவன் இவ்வளவு டென்ஷன் ஆகிறான்” என்று நினைத்தபடி அமைதியாகிவிட்டான். இங்கு மாணிக்கம் தான் அமைதியின்றி மனதில் இருப்பதைச் சொல்லவும் முடியாமல் அதை நம்பவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தார். மூன்று மணி நேரம் கழித்து மயூரி கண்களை திறந்து பார்க்க, அறையில் இருந்த வெளிச்சம் கண்ணைக் கூசியது, உடனே கைகளை வைத்து கண்ணை மூடிக்கொண்டு, பின் பொறுமையாக கையை விலக்கிப் பார்க்க, அவள் முன் மூன்று ஆண்கள் கண்ணில் கலக்கத்தைச் சுமந்தபடி பார்த்துக்கொண்டு இருந்தனர். முதலில் மூவரையும் பார்த்து புருவம் சுருக்கி யோசித்த மயூரி, பின் நினைவு வந்தவளாகத் தெளிந்து எழ முயல, ஆர்யன் அவள் எழுந்து அமர உதவினான். ஜெய் மயூரியைப் பார்த்து, “மயூ, இப்போ உனக்கு ஓகேவா?” என்று கேட்க, அதற்கு மயூரி, “ம்ம்ம்… ஆமா, நீ எப்ப வந்த ஜெய்?” என்று நார்மலாகப் பேசவும் தான் இங்கு ஒருத்தருக்கு மூச்சே வந்தது. அதற்கு ஜெய், “மேரி டாக்டர் தான் எனக்கு கால் பண்ணி இன்பார்ம் பண்ணாங்க.”  அதை கேட்டு மீண்டும் புருவம் சுருக்கி யோசித்த மயூரி, “டாக்டருக்கு எப்படி தெரியும் நான் ஓகே இல்லைன்னு?”

“நீ பண்ண ஸ்டன்டுக்கு இந்நேரம் ஊருக்கே தெரிஞ்சி இருக்க வேண்டியது. டாக்டரோட போச்சேன்னு சந்தோஷப்படு. உடம்பு சரியில்லைன்னா ஆஸ்பத்திரி போகணும்னு தோணவே தோணாதுல. சரியான லூசு மயூ நீ!” என்று ஜெய் திட்ட, அதை கேட்ட மயூரி லேசாக புன்னகைத்தபடி, “நெக்ஸ்ட் டைம் ஸ்டன்ட் பண்ற முன்னாடி எல்லார் கிட்டயும் சொல்லிறேன்.”  என்று பேசியபடி அருகில் திரும்ப, ஆர்யன் இவளையே முறைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் முறைப்பை பார்த்து தலையை திருப்பியவள், “என்னவாம் இவருக்கு? இப்படி முறைக்கிறார்!” என்று நினைத்தபடி மாணிக்கத்தைப் பார்க்க, அவர் “என்ன பாப்பா, பார்த்திருக்க வேண்டாமா? சரி, நடந்ததைப் பற்றி பேச வேண்டாம். நீங்க முதல்ல சாப்பிடுங்கள். டாக்டர் ஏதோ மாத்திரை போடச் சொன்னாங்க நீங்க முழித்ததும் , வெறும் வயிற்றில் மாத்திரை போடக் கூடாது பாப்பா. இதோ போய் நான் உனக்கு கஞ்சி எடுத்து வறேன்” என்று எழுந்து சென்ற மாணிக்கம் கஞ்சி எடுத்து வர, மயூரி அதற்குள் பாத்ரூம் சென்று வந்து விடலாம் என்று கட்டிலை விட்டு இறங்க, ஒரே நேரத்தில் ஆர்யன் மற்றும் ஜெய் “எங்க போற?” எனக் கத்த, அவர்கள் கத்தியதில் பயந்த மயூரி நெஞ்சில் கைவைத்து அவர்களைப் பார்த்து முறைத்தபடி திரும்பியவள், “ஏன் இப்போ பேய் மாதிரி கத்துறீங்க? ஏன் உங்ககிட்ட சொல்லிட்டுத்தான் ரெஸ்ட் ரூம் கூட போகணுமா? ரொம்ப பண்றீங்க ரெண்டு பேரும்” என்று திட்டிவிட்டுச் செல்ல, ஜெய் உடனே எழுந்து கொண்டு, “சரி நான் ஹால்ல இருக்கேன்” என்று எழுந்து சென்றுவிட்டான். ஆர்யனும் அவன் பின்னாலேயே ஹாலுக்கு வந்துவிட்டான். இங்கு கஞ்சோடு வந்த மாணிக்கம் இவர்கள் இருவரையும் பார்த்து விட்டு “ மயூரி! தனியா விட்டு இங்க என்ன பண்றீங்க ரெண்டு பேரும் “ என்று  கேட்க அதற்கு ஆர்யன் மற்றும் ஜெய் திருதிருவென முழித்து நிற்க அதே நேரம்  மயூரியே ஹாலுக்கு வந்துவிட்டாள். ஹாலுக்கு வந்த மயூரி கஞ்சை குடித்தபடியே நேரத்தை பார்க்க மணி எழு என்று காட்ட புரையேர தலையில் தட்டிக்கொண்டு “ இவ்வளவு நேரமா நான் தூங்கி இருக்கேன் “ என்று வாயை பிளக்க டிவியை பார்த்தபடி ஜெய் “ஆமா மயூ நான் கூட உன் பேர ஸ்லீப்பிங் பாட்டின்னு மாத்திடலாமன்னு யோசிச்சிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீ மூழிச்சிட்ட “ என்று வாய் பேச கடுப்பான மயூரி அவன் மீது அருகில் இருந்த பில்லோவை தூக்கி அடித்தபடி “வாய் ஓவர் ஆகிடுச்சிடா உனக்கு சாரி ஆகி வந்து பாத்துக்குறேன் “ என்று கத்தி விட்டு கஞ்சை குடிக்க ஜெய் “அ..அ..அ “ என்று டிவியில் ஓடும் மேட்சில் ஐக்கியமாகி விட இவர்கள் இருவரையும் பார்த்த ஆர்யன் தான் வியந்து போனான் இருவரும் பேருக்கு தான் ஒரு கம்பேனி முதலி இங்கே என்னவென்றால் அடித்து கொண்டு திட்டிக்கொண்டும் இருக்க அதுவும் ஜெய்யை இப்படி இலகுவாக பார்த்து மலைத்து போனான் ஆர்யன்.

பின் சாப்பிட்டு முடித்த மயூரி மாணிக்கம் கையைப் பிடித்தபடி “எனக்கு நான் என்ன பண்ணேன்னு சரியா நினைவு இல்லை அங்கிள். ஆனா உங்க முகத்தையெல்லாம் பார்க்கும் போது நீங்க எல்லாம் பயப்படுற மாதிரி பண்ணியிருக்கேன்னு தெரியுது” என்று சொன்னதை கேட்ட ஆர்யன் “மயூரி நீங்கள் எதுவும் யோசிக்காதீங்க. நீங்க எதுவும் பண்ணலை. எதுவா இருந்தாலும் டாக்டர்கிட்ட போயிட்டு அப்புறம பேசிக்கலாம். நீங்க யோசிக்காதீங்க” என்று கண்டிப்பாக சொல்ல மாணிக்கம் மற்றும் ஜெய்யும் அதையே சொல்ல மயூரியும் அமைதியானாள். பின் மீண்டும்

மயூரியே  “சரி நைட் ஆச்சு யாரும் சாப்பிடலையா இங்க என் கூடவே இருக்கீங்க இதுக்கு அப்புறம் பயம் இல்லை நான் சமாளிச்சிடுவேன் நீங்கலாம் போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க “ என்ற் சொல்ல அதை கேட்டு மாணிக்கம் “ அதை நீ சொல்லாத பாப்பா நைட் நீங்க முழிச்சி தான இருப்பீங்க இன்னைக்கு ஒரு நாள் நாங்களும் முழிச்சி இருக்கோம் நாளைக்கு டாக்டர் எல்லாம் சரின்னு சொல்ற வரை நீங்க என் கண்ணு முன்னாடி தான் இருக்கனும் பாப்பா “ என்று ஸ்ட்ரிக்டாக சொல்லி விட்டு அங்கேயே சட்னி, தோசை என்று செய்து ஜெய் மற்றும் ஆர்யனுக்கு கொடுக்க ஜெய் ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி மூடில் ஒரு பக்கம் மயூரியை வம்பு செய்ய கொண்டு மறுபக்கம் மாணிக்கத்திடம் சொல்ல கொஞ்சி கொண்டு இருக்க ஆர்யன் ஜெய்யை பார்த்து

“மயூரிக்கு தப்பாம இருப்பாங்க போல, இவரும் அவள போல வாலு இல்லாத குரங்கா தான் இருக்காரு” என்று எண்ணிக்கொண்டாலும் மனதில் நிம்மதி பறவ தான் செய்தது. இரவு மயூரி மூவரையும் உறங்க சொல்லி ஒற்றை காலில் நிற்க யாரும் அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.  இரவு முழுக்க படம் பார்ப்போம் என்று முடிவெடுத்து மயுரியின் வீட்டில் ஹாலில் ஓடிடியில் படத்தை போட்டு படத்தோடு சாப்பிட பாப்கார்ன், ஜூஸ், சிப்ஸ் என்று உணவை ஆர்யன் வாங்கி வர மாணிக்கம் மற்றும் ஜெய் ஹாலில் கீழே அமர்ந்து பார்க்க போர்வை விரித்து என்ன படம் எல்லாம் பார்க்கலாம் என்று முடிவு எடுத்து கொண்டு இருந்தனர்.

 மயூரியை கவனிக்காமல் இவர்கள் பாட்டுக்கு வேலை பார்க்க கடுப்பான மயூரி “ இது என் வீடு “ என்று கத்த ,பதிலுக்கு  ஜெய் “ அப்படியா நான் கூட அம்பானி வீடுன்னு நினைச்சேன் “ என்று சொல்ல, அதை கேட்டு புரியாமல் பார்த்த மயூ “ அம்பானியா..” என்று கேட்க “ ஆமாம் அம்பானி தான், ஏன் அவரத் தெரியாதா உனக்கு “ “ டேய் இப்போ எதுக்குடா நீ அவரை இழுக்குற “ “அ… வேண்டுதல் “ என்று ஜெய் மீண்டும் சீரியஸாக மாணிக்கத்துடன் சேர்ந்து படத்தைத் தேட மயூரி இதுக்கு மேல முடியாது என்று அமர்ந்து விட்டாள். கடைசியாக ஜெய் மாணிக்கம் சேர்ந்து நான்கு படம் தேர்வு செய்து படம் பார்க்கத் தொடங்கினர்.

முதல் படம் நால்வரும் முழித்து பார்த்தன இரண்டவது படத்தில் மாணிக்கம் ஹோபாவில் சாய்ந்து தூங்கி விட்டார் மூன்றவது படம் முடிவில் ஜெய் ஆர்யனின் வயிற்றை கட்டி கொண்டு அவன் மடியில் படுத்து விட ஆர்யன் அவன் தலையில் கை வைத்தபடி தூங்கி போனான்.  இவர்கள் மூவரையும் பார்த்த மயூரி கண்கள் கலங்க “ யாரும் இல்லன்னு நினைச்சன் அது தப்பு எனக்கு இத்தனை பேரு இருக்கும் போது எனக்கு எப்படி யாரும்மில்லாம போவாங்க “ என்று நினைத்து உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் அவர்களை பார்த்தவள் எழுந்து பால்கனி சென்று அவளுக்கு வந்த கனவுகளை கொர்க்க தொடங்கினாள்.

வாழ்க்கை எப்போதும்  ஓரே மாதிரி இருக்காது, சந்தோஷம், துக்கம், என்று கலந்து வருவது தான் வாழ்க்கை சந்தோஷத்தை அனுபவிக்க சோகம் வேண்டும் சோகத்தை மறக்க சந்தோஷம் வேண்டும் இரண்டும் மாற்றி மற்றி வந்தாளும் இரண்டையும் ஏற்று வாழ்வது தான் வாழ்க்கை.