“அம்மா பாப்பா அசையுது பாரும்மா உனக்கு தெரியுதா ம்மா…. பாப்பா நான் தான் உங்க அக்கா நீங்க வெளி வந்ததும் நான் தான் உங்களைப் பாத்துக்கபோறேன்..” என்று மயூரி அவள் அம்மாவின் மேலிட்ட வயிற்றில் காதை வைத்து பேசிக்கொண்டிருக்க அவள் அம்மா கையில் இருக்கும் வளையல்கள் சத்தம் போட மயூரியின் தலையை கோதிவிட்டபடி அவள் பேசுவதைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது மயூரி தன் அம்மாவை நிமிர்ந்து பார்த்துக்கொண்டு “அம்மா பாப்பாவை என் கூடத்தான ஸ்கூலுக்கு அனுப்புவீங்க” என்று கேட்க அதற்கு அவள் அம்மாவும் “ஆமாண்டா மயிலு பாப்பாவை நீங்கதான் பத்திரமா பார்த்துக்கணும் சரியா” என்று அவள் கன்னம் வருட அதை கேட்டு சிரித்த மயூரி அவள் அம்மா மடியில் சுகமாக படுத்துக்கொண்டு கண்களை மூடியவள் இங்கு கனவில் இருந்து கண்களைத் திறந்தாள். அப்போது அவள் கண் முன் ஆர்யனின் முகம் பதட்டத்துடன் இருப்பதை பார்த்தவளுக்கு அவன் முகம் பார்த்த பின்பே அவளுக்கு நடந்தது நினைவு வர, பயந்து எழுந்து அமர்ந்தாள்.
அவள் பயத்தைப் பார்த்து ஆர்யன் அவளிடம் ஏதோ பேசுவது தெரிந்தாலும், அதை எதையும் அவள் கவனிக்கவில்லை. அவள் யோசனை முழுக்க கனவில் அவளைத் துரத்தியவன் மீது தான். அவன் கையில் நான் மாட்டி இருப்பேனா இல்லை தப்பியிருப்பேனா என்று அதையே யோசித்தவள், ஆர்யனின் குரலில் சுயம் வந்து.
“நீங்க இங்க எப்படி?” என்று கேள்வி கேட்டவள் மீண்டும் அவள் மனதோடு போராடத் தொடங்கினாள். “ஏதாவது எனக்கு ஆகியிருக்குமோ? சின்ன வயசுல அவன் துரத்தினானே, என்ன ஏதாவது பண்ணியிருப்பானோ? அந்த இடத்துல அப்போ நான் அவங்கள்ள ஒருத்தியா இருந்து தான் தப்பிச்சு வந்துருப்பனோ அப்போ லட்சுமி அம்மா அவங்க என்ன பாத்துக்கலையா என்னையும் அவங்கள்ல ஒருத்தியா ஆக விட்டுடாங்களா “ என்று அவள் மூளையோடு போறாடி யோசிக்க தொடங்கியவளுக்கு ஆர்யன் பேசும் எதுவும் புரியவில்லை அவள் புரிந்துகொள்ளவும் விரும்பவில்லை அவள் மனம் தனிமை நாட ஆர்யனை போக சொல்லி விட்டாள்.
ஆர்யனும் சோர்வான நடையுடன் அவன் வீட்டுக்குள் நுழைய அப்போது மாணிக்கம் “எங்க ஆர்யன் போன போனை கூட எடுக்காம “ என்று ஹாலில் டீ குடித்தபடி கேட்க, அதற்கு ஆர்யன் பெருமூச்சி ஒன்று விட்டபடி சோபாவில் அமர்ந்து “வாக்கிங் போய்ட்டு வந்தேன் பா“ அதை கேட்டு ஜன்னலை மாணிக்கம் எட்டிப் பார்க்க, வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டு இருக்க, மாணிக்கம் “இந்த வெயில்ல வாக்கிங்கா?“ என்று அவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டு, தலை ஆட்டியபடி திரும்பி கொண்டார்.
இங்கு ஆர்யன் அடிக்கடி மயூரியின் கதவையே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு இருக்க அதை கவனித்த மாணிக்கம் “ ஆமா நம்ம மயூரி பாப்பாவ வேற என்ன என்னும் காணோம் அவுங்க வர நேரம் ஆகிருச்சே “ என்று கேள்வியாக ஆர்யனை பார்க்க அதற்கு அவன்“ அது நேத்து வேலை அதிகம்ல ப்பா அதான் லேட் ஆகுதோ என்னம்மோ “ என்று வாய் பேசினாலும் கண் அவள் வீட்டு வாசலையே பார்க்க அவன் மயூரி வீட்டையே பார்பதை பார்த்த மாணிக்கம் “ ஆரி போண்ணு பாக்க ஆரம்பிச்சிறளாமா “ என்று போட்டு வாங்க பார்க்க அதை கேட்டு தலையை வேகமாக திருப்பிய ஆர்யன் “ இப்போ என்ன ப்பா அவசரம் “ என்று திருட்டு முழி முழிக்க மாணிக்கம் அவன் பதட்டத்தை காணாத படி “ என்ன அவசரமா என்னும் நாலு மாசத்துல உன் வயசு முப்பதுடா ஆர்யன் அது நினைவு இருக்குல “
“ முப்பது தான ப்பா….” என்று அவன் இழுக்க மாணிக்கம் “ நேரா அறுபதாம் கல்யாணம் செஞ்சுக்க போறியா ஆர்யன் “ என்று சொல்ல அதை கேட்டு கடுப்பாகி ஆர்யன் “கொஞ்சம் போருங்கன்னு சொன்னதுக்கு அறுபதாம் கல்யாணம் வரை போய்டிங்க விட்டா அது வரை எனக்கு நீங்களே கல்யாணம் ஆக விட மாட்டிங்க போலையே “ “அப்போ கல்யாணம் ஆசைலாம் இருக்கு “ என்று அவனை அர்த்தமாக பார்த்து விட்டு எழுந்து சென்று விட்டார் ஆர்யன் தான் தலையை பிடித்தபடி “ இவர் வேற நேரம் காலம் புரியாம “ என்று புலம்பியபடி இருக்க, மாணிக்கம் டீ கப்பை அவனுக்குக் கொடுத்துவிட்டு அமைதியாக அருகில் அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்துவிட்டார். ஆர்யன் டீயை கையில் வைத்த படியே மயூரியைப் பற்றியே நினைத்துக்கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தான். அப்போது திடீரென்று மயூரியின் அலறல் சத்தம் கேட்டு, ஆர்யன் மற்றும் மாணிக்கம் திடுக்கிட்டு எழுந்து, என்னவோ ஏதோ என்று அவள் வீட்டை நோக்கிச் செல்ல, கதவு ஆர்யன் விட்டுச் சென்றதுபோல பாதி திறந்து இருக்க, இருவரும் உள்ளே பதட்டத்துடன் “மயூரி என்ன ஆச்சு?” என்று ஆர்யனும் “பாப்பா எங்கே இருக்கீங்க?” என்று மாணிக்கமும் பதட்டத்துடனே உள்ளே பார்க்க, அவள் வரையும் அறையில் இருந்து சத்தம் வந்தது. உடனே ஆர்யன் வேகமாக கதவைத் திறந்து பார்க்க, மயூரி தலையில் வலியும் ரத்தத்தோடு கண்களை மூடிக்கொண்டு கீழே தரையில் சுருண்டு விழுந்து அழுதுகொண்டு இருந்தாள்.
மயூரியின் நிலையைப் பார்த்து ஆர்யன் உள்ளே செல்ல, மாணிக்கம் அதிர்ந்த பார்வையுடன் அந்தப் படங்களை வெறித்தபடி நின்றுவிட்டார். இங்கு மயூரியை நெருங்கிச் சென்ற ஆர்யன், “மயூரி, என்ன ஆச்சு? ஏன் இப்படி படுத்துட்டு இருக்கீங்க?” என்று அவளைத் தொட்டுத் தூக்கப் சென்றான். ஆர்யன் கை மயூரியின் மீது பட்டதும், வெறி பிடித்தது போல, “என்னைத் தொடாத! விடுடா! விடுடா! லட்சு ம்மா! லட்சு ம்மா! என்னைக் காப்பாத்துங்க…” என்று கத்தியபடி அவன் கையைத் தள்ளிவிட்டு சுவற்றோடு ஒன்றி அமர்ந்தவள் அவள் கால்களில் முகம் புதைத்து அழுகத் தொடங்க ஆர்யன் “மயூரிம்மா நான் ஆர்யன்டா இங்க பாரு மயூரி நான் உன் ஆர்யன் என்ன தெரியலையா..” என்று அவள் தலையைத் தொடப் போக அவன் கைகளைப் பிடித்துக் கடித்துத் தள்ளிவிட்ட மயூரி “என்கிட்ட வராத போடா போ… லட்சுமிம்மா.. இங்க வாங்க லட்சுமிம்மா… இவரைப் போகச் சொல்லுங்க” என்று தொண்டை கிழியக் கத்தியவள் மீண்டும் முகத்தை அவள் கால்களில் புதைத்துக்கொள்ள
“ஆர்யன் அதிர்ந்து அமர்ந்துவிட்டான். அவன் பார்வை முழுக்க மயூரியையே பார்க்க, அவள் உடல் பயத்தில் நடுங்குவது நன்றாகத் தெரிந்தது. அதைப் பார்த்தபடி என்ன செய்ய என்று எண்ணியவன் கண்ணில் அப்போதுதான் அவள் தலையில் இருந்து ரத்தம் லேசாகக் கசிவதைக் கவனித்து, “மயூரி, தலையில ரத்தம் வருது பாரு” என்று அவளிடம் நெருங்க, மயூரி மீண்டும் கத்தி அவனைத் தள்ளிவிடப் பார்த்தாள்.
ஆர்யனுக்கு மயூரியை எப்படி சமாளிப்பது என்றே தெரியாமல் போக அவள் படும் பாட்டை பார்க்க முடியாமல் தலையை திருப்ப அப்போது தான் மாணிக்கம் அதிர்ந்து அறையின் வாயிலிலேயே நிற்பதை பார்த்தவன் “அப்பா அங்கேயே நின்னு என்ன பண்றீங்க இங்க வாங்கப்பா மயூரியை பாருங்க தொடவே விட மாட்டிக்கிறா தலையில வேற ரத்தம் வருது “ என்று கலங்கிப் போய் அவன் கத்தவும் தான் நினைவு பெற்றவராக அருகில் வந்து “பாப்பா… என்னம்மா ஆச்சு “ என்று நெருங்க மாணிக்கத்தைப் பார்த்து பயந்து கத்தத்தான் செய்தாள். அவள் நிலையைப் பார்த்த மாணிக்கம் “என்ன ஆர்யன் ஆச்சி ஏன் பாப்பா இப்படி நடந்துக்கறா “ என்று பதட்டத்துடனே பேச ஆர்யன் “அப்புறமா தெளிவா சொல்றேன்ப்பா இப்போ முதல்ல இவளை என்ன பண்ணண்ணு பார்க்கணும் “ என்று யோசிக்க மாணிக்கம் “ஆம்புலன்ஸ் கூப்பிட்டு ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிடலாமாப்பா “ என்று கேட்கவும் தான் ஆர்யனுக்கு நினைவு வந்தவனாக “ ஒரு நிமிஷம்ப்பா “ என்று எழுந்து அவள் அறை சென்று படுக்கை அருகில் இருந்த மேசையில் இருந்து இவளின் ஆஸ்பிட்டல் ரிப்போர்ட்டை பார்த்து அதன் மூலம் மருத்துவரை அழைத்தான்.
அங்கு மறுமுனையில் டாக்டர் மேரி போனை எடுத்ததும் மயூரியின் நிலைமையைச் சொல்லி மருத்துவரை அழைக்க, அவரும் இவன் அவசரம் உணர்ந்து முடிந்த அளவு சீக்கிரமாக வருவதாகச் சொல்லிவிட்டு வைத்தார். டாக்டரிடம் பேசி முடித்து மயூரி இருந்த அறைக்கே சென்று அவள் எதிரில் அமர்ந்தவன் மாணிக்கத்திடம் டாக்டர் வருவதாக சொன்னதை சொல்லிவிட்டு மயூரியையே கண்இமைக்காமல் கவலை படிந்த முகத்துடன் பார்த்தான். இங்கு மாணிக்கம் அந்த அறையில் உள்ள ஓவியங்களை சுற்றி சுற்றி பார்த்தபடி மனதில் தோன்றும் கேள்வி, பதட்டம், சோகம் என்று சுழலும் உணர்வுகளை எதுவும் காட்டாமல் அமர்ந்து இருந்தான்.