ஃபாரன்சிக் ஆபிசர் ரிப்போர்ட்டின் காப்பியை எடுத்துக்கொண்டு வந்து கான்ஸ்டபிளிடம் நீட்ட, அதை வாங்கியபடி அவர், “ஏதவது க்ளு கண்டுபிடிக்க முரிஞ்சிதா சார்?” என்று அதை திருப்பியபடி கேட்க அதற்கு அவர் “இல்லை சார், பாடில இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியல்லை. கண்டுபிடிக்க முடிஞ்சது என்னம்மோ அந்தப் பாடியோட வயசு இருபதிலிருந்து முப்பது வயசுக்குள்ள இருக்கும் ஒரு பெண்ணினுடையது. கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கான். வேறு டேமேஜ் எதுவும் இல்லை. அன்ட் பாடியின் நகங்களைப் பிடுங்கி எடுத்திருக்கிறான். கழுத்தில் ஃபிங்கர் பிரிண்ட் கிடைக்கக் கூடாதுன்னு அங்கே ஆசிட் ஊற்றியிருக்கிறான். ஆக மொத்தத்தில் க்ளியராகப் பண்ணியிருக்கிறான். “ அதை கேட்டு சலித்துக்கொண்ட கான்ஸ்டபிள், “ சரி, அந்தப் பர்ஸில்ல என்ன இருந்தது சார்? “
“ம்ம்ம் அதோட போட்டோவும் சேர்த்து அட்டாச் பண்ணியிருக்கேன். அதுல இருந்து க்ளூ கிடைக்க வாய்ப்பு இருக்கும்னு நினைக்கிறேன். அதுல பிரெக்னன்சிய தடுக்குற டேப்லட்ஸ் நிறைய இருந்துச்சு. அதோட காண்டம்ஸ், கொஞ்சம் மணி, மேக்கப் போடுற பொருள், அப்புறம் ஆயில்மெண்ட் இவ்வளவுதான் இருந்துச்சு.”
“ஆயில்மெண்டா? எதுக்கு போடுறது?”
“அடிபட்டா போடுவது தான் சார், வேற ஒன்றும் ஸ்பெஷலா இல்லை“ என்று ரிப்போர்ட்டைக் கொடுத்துவிட்டுச் செல்ல, அந்தக் கான்ஸ்டபிள் “இதில என்ன க்ளூ கண்டுபிடிக்க முடியும்ன்னு சொல்லிட்டுப் போகிறாரு“ என்று புலம்பியபடி போலீஸ் ஸ்டேஷன் சென்று இந்த ரிப்போர்ட்டைக் கொடுக்க அதை முழுதாகப் பார்த்த இன்ஸ்பெக்டருக்கும் யோசனைதான் இந்தக் கேஸை எப்படி கையாள்வது என்று. முதலில் இறந்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் முகம் முழுக்க டீகம்போஸ் ஆகி இருக்க, யார் என்று அடையாளம் தெரியவில்லை. மூன்று வருடம் முன் காணாமல் போன நபர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க யாருடனும் மேட்சும் ஆகவில்லை. யார் இந்தப் பெண்? யார் இவளைக் கொன்று அங்கே புதைத்திருப்பர் என்று குழப்பமாகத் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தார் இன்ஸ்பெக்டர் கர்ணா.
இங்கு மயூரி அப்போதுதான் ஆபீஸ் முடித்து சோர்வாக காரில் வந்து இறங்கி தன் அப்பார்ட்மெண்ட் நோக்கி நடக்கத் தொடங்கினாள். அப்போது அவள் எதிரில் வந்து நின்ற ஆர்யன், “குட் மார்னிங் மயூரி!” என்று புன்னகை முகமாகச் சொல்ல, அவன் திடீர் குட் மார்னிங்கில் பயந்து நெஞ்சில் கை வைத்துப் பின் நகர்ந்த மயூரி, ஆர்யனைப் பார்த்து, “நல்லா சொன்னீங்க குட் மார்னிங்!” என்று ஆர்யனை நிமிர்ந்து பார்க்க ஜாகிங் உடையில் முகத்தில் மலர்ந்து பிரகாசத்துடன் பளிச்சென்று நின்றவனைப் பார்த்து கண்களை மூடிய மயூரி “ அப்பா கண்ணு கூசுது ஆர்யன் யாராவது இந்த சூரியனை ஆஃப் பண்ணுங்க ப்ளீஸ்“ என்று நக்கல் செய்ய ஆர்யன் முகத்தை உர் என்று வைத்தபடி “ மயூரி… என்ன நக்கலா “ என்று சொன்னவனின் முக மாற்றத்தைப் பார்த்த மயூரி “ சும்மா ஃபன்கு ஆர்யன் “ என்று கண்களை சிமிட்டி சிரித்த மயூரியைப் சீரியஸாக பார்த்து ஆர்யன் “ உங்க போன் எங்கே மயூரி “ என்று சம்பந்தம் இல்லாமல் கேட்க மயூரியும்
“ போனா! இதோ, பேக்ல தான் இருக்கு ஆர்யன் எதுக்கு போன் “ என்று அதை எடுத்தபடி கேட்க அதற்கு ஆர்யன் பத்து இலக்க போன் நம்பரை சொன்னபடி “ சேவ் பண்ணுங்க மயூரி “ என்று அதே சீரியஸ் முகத்துடன் சொல்ல மயூரி புரியாமல் “ யார் நம்பர் ஆர்யன் நான் ஏன் சேவ் பண்ணனும் “ என்று வாய் பேசினாலும் கை தானாக நம்பரை சேவ் செய்ய அழுத்திவிட்டு “ என்னன்னு சேவ் பண்ணனும் யார் நம்பர் இது “ என்று பல கேள்வியுடன் ஆர்யனைப் பார்க்க அவன் செய்கையில் முகத்தில் தோன்றிய புன்னகையுடன் “ நான் சொல்ற நேம்ல சேவ் பண்ணுங்க எ..எ…ஆர்…ஒய்…எ..என் ஆர்யன் சேவ் பண்ணிக்கொங்க மயூரி “ என்று சிரிக்க மயூரி முதலில் யார் பெயர் அது என்று பார்த்தவள் பின் அது ஆர்யனது என்றதும் என்னது என்று அவன் முகத்தை யார்டா நீ என்பது போல பார்த்து வைக்க ஆர்யன் “ என் நம்பரை தந்திருக்கேன். பதுளுக்கு உங்க நம்பர் தந்தா நல்லா இருக்கும் “
“ என் நம்பர் தான் அங்கிள் கிட்ட இருக்கே வேணும்னா வாங்கிருக்கலாமே “
“உங்க அங்கிள் பக்கா ஜென்டில் மேன். பெர்மிஷன் இல்லாம ஒரு பொண்ணு நம்பரை அவர் பையனாவே இருந்தாளும் தரமாட்டார். அதான் டிரெக்ட் அப்ரோச்சுக்கு நான் வந்துட்டேன் “ என்று புருவம் உயர்த்த, அதை கேட்டு மயூரி மாணிக்கம் அங்கிளை “எங்க அங்கிள் செம” என்று எண்ணிக்கொள்ள, அதை அவள் முகம் பார்த்து கண்டுகொண்டா ஆர்யன். “உங்க அங்கிள் அளவு இல்லனாலும் நானும் ஜென்டில்மேன் தான். அதான் என் நம்பரை கொடுத்துவிட்டு வெயிட் பண்றேன்” என்றவன் முகம் அந்த சிரிப்பை இழக்கவே இல்லை. அந்த சிரிப்பில் மயூரி தான் அவளை இழந்து கொண்டிருந்தாள் கொஞ்சம் கொஞ்சமாக.
மயூரி ஆர்யனையே கண் எடுக்காமல் பார்த்தபடி இருக்க ஆர்யன் “ தூக்கம் வரலையா மயூரி “ என்று சிரிப்புடன் கேட்க மயூரி அவன் சொன்னது புரியாமல் “ அ…” என்று அவனையே பார்க்க அவள் செய்கையில் ஆர்யன் தன் ஒரு கையால் முகம் மூடி சிரித்தவன் “ டயர்டா இருக்கும், போய் ரெஸ்ட் எடுங்க. நாம அப்புறம் பேசலாம் “ என்று அவளை அனுப்ப மயூரிக்கு ஒன்றும் புரியாமல் “இப்போ என்ன நடந்துச்சி?” என்று யோசித்துச் செல்லச், சென்ற மயூரியை “ மயூரி…” என்று மீண்டும் அழைத்த ஆர்யன் “.. குட் நைட்” என்று தலை சாய்த்துச் சொன்னவன் “முன்னாடி சொன்ன குட் மார்னிங் எனக்காக, இப்போ சொல்ற குட் நைட் உனக்காக. நல்லா தூங்கு” என்று சொல்லி அவன் சென்று விட, மயூரி “இவன் நம்மளை ஏதோ பண்றான்ப்பா” என்று புலம்பியபடி லிஃப்டில் ஏறியவள் போனில் அவன் நம்பரை பார்த்தபடி.
“இந்த நம்பரை என்ன பண்ணலாம்” என்று அதையே பார்த்தவள், பின் அவள் கண்களை மூடிக்கொண்டு கால் பட்டனை அமிக்கியவள், அந்தக் கால் சென்றதும் அதை வேகமாக கட் செய்துவிட்டு, “அச்சோ! தெரியாம கால் போயிருச்சு. நான் வேணும்னு பண்ணலை, கரெக்ட் தான?” என்று அவளுக்கு அவளே போய் சொல்லியபடி, அவளைத் திட்டும் மனசாட்சி வாயில் டேப் போட்டு ஒட்டிவிட்டவள், “என்னதான் நடக்கட்டும், நடக்கட்டுமே” என்று பாட்டு பாடியவளாக அவள் வீடு சென்றாள்.
இங்கு ஜாகிங் முடிந்து ஆர்யன் குளித்து ஆபீஸ் கிளம்பியவன் போனை எடுத்துப் பார்க்க மிஸ்டுகால் ஒன்று வந்திருந்தது. அதைப் பார்த்ததும் கண்டுகொண்டான் மயூரி நம்பராகத்தான் இருக்கும் என்று யூகித்தவனாக வாட்ஸ்அப் டிபி பார்க்க அவளேதான். அதில் அவனுக்கு வந்த மகிழ்ச்சியை முகத்தில் காட்டியவனாக அவள் நம்பரை இதய வடிவ இமோஜி ஒன்று போட்டு, பின் ‘மை லைஃப்’ என்று டைப் செய்து, அதனுடன் ஒரு மயில் இமோஜியைச் சேர்த்து சேவ் செய்தான்.
மயில் என்றதும் மயூரி தான் நினைவுக்கு வருவாள். ஏன் என்றால், அவள் வரைந்த ஓவியம் அனைத்திலும் மயிலின் இறகை வரைந்து வைத்திருப்பாள். அவள் கையெழுத்துக்கு பதிலாக அதன் அர்த்தம் தெரியவில்லை என்றாலும், அதன் பின் மயிலைப் பார்க்கும் போதெல்லாம் மயூரியின் நினைவே வரும். அதனாலேயே அவள் நம்பரையும் அதனைக் கொண்டே சேவ் செய்தவன் கம்பெனிக்குக் கிளம்பிச் சென்றான்.
இங்கு ஜெய் காலை எட்டு மணி போல விழித்து தன் தாத்தாவின் நினைவு இடத்திற்கு கிளம்ப தொடங்கினான். ஜெய்யின் முகத்தில் எப்போதுமிருக்கும் மகிழ்ச்சி இந்த ஒரு வாரமாக இல்லாமல் தான் இருந்தது. அதன் காரணமும் அவன் தாத்தா தான். ஆம், ஜெய்க்கு அவன் தாத்தா என்றாள் உயிர். ஜெய் அவன் அப்பா அம்மா உடன் இருந்ததை விட தாத்தாவுடன் இருந்ததே அதிகம். ஆனந்த், ஹெலன் இருவரும் இவனை சிறு வயதிலேயே போர்டிங் ஸ்கூலில் நன்றாக படிக்க வேண்டும் என்று சேர்த்து விட, இவன் வீட்டுக்கு வருவதே விடுமுறைக்கு மட்டும் தான் என்று ஆகி போனது.
விடுமுறை அப்போதும் அவன் தாத்தா வந்து இவனை அழைத்துச் சென்றுவிடுவான். அதனாலேயே அம்மா அப்பா இழப்பில்கூட இவனுக்கு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. தாத்தாவுடன் போய் இருந்துகொண்டான். ஆனால் அவர்கள் இறந்து மூன்று வருடத்தில் தாத்தாவும் விபத்தில் இறந்துவிட மிகவும் உடைந்துபோனான்.
இப்போதும் அவன் தாத்தாவின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் நினைவு நாள் நெருங்க நெருங்க அவனுக்குள்ளேயே ஒடுங்கத் தொடங்கிவிடுவான். முன்பாக இருந்திருந்தால் மயூரி இவனை ஏதாவது செய்து இயல்புக்கு கொண்டு வர முயற்சி செய்வாள். ஆனால் இன்று இவன் மட்டும் தனியே அந்த நினைவே கசக்க எதுவும் பேசாமல் கிளம்பி தாத்தாவின் நினைவு இடத்திற்கு சென்று பூக்கள் வைத்துவிட்டு சிறிது நேரம் அமர்ந்தவன் கிளம்பி வீட்டுக்கு வந்தான். எப்போதும் இந்த நாள் தாத்தாவை பார்த்துவிட்டு மயூரியுடன் ஆஸ்ரமத்திற்கு செல்பவனுக்கு இன்று மயூரி இன்றி அங்கே செல்லவும் விருப்பம் இல்லை.
அதனால் வீட்டுக்குச் சென்றான். அங்கு காரை நிறுத்திய ஜெய் அங்கே மயூரியின் காரைப் பார்த்துவிட்டு மகிழ்ந்தவன் அவளைத் தேடி வீட்டுக்குள் நுழைய அங்கே மயூரியுடன் மாணிக்கம் அமர்ந்திருந்தார். மயூரி போனில் ஜகனுடன் பேசியவள் “ ஜெய் வந்துட்டான் ஜெக தாத்தா நான் அப்புறம் பேசுறேன் “ என்று வைத்தவள் ஜெய்யைப் பார்த்து “ ஆஸ்ரமம் போலியா ஜெய் நீ அங்க போயிருப்பியோன்னு நினைச்சேன் சாரிடா லேட் ஆகிருச்சு “ என்று பேசியவள் மாணிக்கத்தைக் காட்டி “ நான் சொன்னேன்ல டா என் எதிர்த்த வீட்டு அங்கிள் செம ஸ்வீட்னு அது இவர் தான் “ என்று சொன்னவள் மாணிக்கம் இடம் திரும்பி “இவன் தான் அங்கிள் என் ஃபிரண்ட் ஜெய் “ என்று இருவருக்கும் அறிமுகப்படுத்த மாணிக்கம் அழகாக கைகளைக் குவித்து “வணக்கம் தம்பி“ என்று சொல்லவும் ஜெய்யும் பதிலுக்குத் தன்னைப் போல வணக்கம் வைத்தான். பின் மயூரி பக்கம் திரும்பி கண்களாலேயே “என்ன மயூரி இது“ என்று மாணிக்கத்தைக் காட்டி கேட்க அதற்கு மயூரி “அது அங்கிள் கிட்ட சொல்லிட்டு வரலாம்னு போன அங்கிள் என்னன்னு கேட்டாரு தாத்தா நினைவு நாள்னு சொன்னதும் அவரும் வந்துட்டாரு டா ஹெல்ப் பண்ண“ என்று சிரித்த மயூரியை என்ன செய்ய என்று முழித்தான் ஜெய்.