நிலா வானில் இன்றி வெறுமையாக இருக்க, வானமே இருளாக இருக்கும் வேளையிலும், பாகலுக்கு இணையாக வெளிச்சம் தரும் பல்புகளைச் சுற்றி மாட்டப்பட்டு, அந்த இடம் மட்டும் பகல் போல காட்சியளித்தது. போலிஸ்கள், ரிப்போர்ட்டர்கள், ஃபாரன்சிக் ஆபிஸர்கள் என்று சுற்றி குழுமியிருந்தனர் அந்தப் பகுதியில். அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் அங்கிருந்த கான்ஸ்டபிளை அழைத்து “டீடெய்ல்ஸ் தாயா…” என்று சொல்லியவனாக நடக்க, அந்தக் கான்ஸ்டபிளும் நடந்தபடியே சொல்ல ஆரம்பித்தார். “இங்க ரோட்டை அகலப்படுத்திட்டு இருக்கிறவங்க தோண்டின இடத்துல கையோட எலும்பு பார்த்துட்டு கால் பண்ணியிருக்காங்க சார். உடனே நம்ம டீம் வந்து தோண்டிப் பார்த்ததுல வெறும் எலும்பு மட்டும்தான் இருக்கு. நல்லா டீகம்போஸ் ஆகியிருக்கு. புதைச்சி மூணு வருஷம் மேல ஆகியிருக்கும்னு சொல்றாங்க அதுவும் டெஸ்ட் பண்ணி பார்த்துவிட்டு தான் க்ளியரா சொல்ல முடியுமா சார் அண்ட் போட்டுருக்க டிரஸ் ஜூவல்ஸை வச்சி பொண்ணுன்னு கன்பார்ம் பண்ணிருக்காங்க” என்று வேகமாக அவர் சொல்லி முடிக்க இன்ஸ்பெக்டர் “யாருன்னு தெரிஞ்சுதா” என்று கேட்ட அதற்கு அவர்
“இல்லை சார், எந்த க்ளூவும் கிடைக்கல” என்று இருவரும் பேசியபடி அந்த டெட் பாடி அருகே செல்ல, அந்த இன்ஸ்பெக்டர் முகத்தை கைக்குட்டையால் மூடியபடி அருகில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ் அங்கே வந்து அந்த சடலத்தையும் அதனுடன் இருக்கும் புடவையையும் எடுத்து ஸ்ட்ரெச்சரில் வைக்க. அப்போதுதான் இன்ஸ்பெக்டர் ஒன்றைப் பார்த்தார். அந்த சடலத்தின் அடியில் சிறிய பர்ஸ் போல் ஏதோ ஒன்று இருக்க, அதை க்ளவுஸ் போட்ட கையால் எடுத்துப் பார்த்தார். அது ஒரு பெண்ணின் பர்ஸ். அதை ஃபாரன்சிக் ஆபீஸரிடம் கொடுத்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கச் சொன்னவராக நிமிர்ந்து நின்றவர், யார் செய்த வேலையாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் அதே சமயம், சென்னையில் ஏதோ ஒரு மூலையில் இரு கண்கள் இந்த செய்தியை நியூஸில் பார்த்தபடி பதட்டத்துடன் வாயில் அரை நிலா டாலரை கடித்தபடி இருந்தது.
பார்க்கிங் ப்ளேசில் இருந்து ஓடி வந்த மயூரி அவள் இருக்கையில் வந்து அமர்ந்தவள் கை தானாக கம்புட்டரை இயக்கினாலும் தலைக்குள் முழுக்க ஆர்யன்தான் “ சாமியாருன்னு நினைச்சா ஒரே நாளில்ல இப்படி ஃப்ளட் பண்றா அளவு முன்னேரிருக்காரு ஆர்யனா இது நம்பவே முடியல “ என்று யோசித்தவளின் தலையில் அவளே தட்டிக்கொண்டு “ ஏ லூசு மயூரி அவன் உனக்கு ரூட் விடுறது பச்சையா தெரியுது நீ என்னன்னா நம்புறதா இல்ல வேனாம்மா ன்னு பூவா தலையா போட்டு பாக்குற “ என்று அவளுக்கே திட்டியபடி “ அவனை விட்டு தள்ளியே இரு மயூ உனக்கு இருக்குற பிரச்சன போதாதுன்னு புதுசா இழுத்து வைக்காத “
“அன ஆர்யன் பிரச்சனை இல்லையே அவர் எவ்வளவு அமைதி. அவரால என்ன பிரச்சனை வர போது?“ “அடியே லூசு மயூ, நீயே ஒரு பெரிய பிரச்சனைதான் பிசாசு. நீ எப்போ நார்மலா இருப்ப, எப்போ பேய் மாதிரி கத்துவன்னு அவர் உன்ன பார்த்துட்டே இருக்கணும்னு நினைக்கிறியா மயூ? பாவம் ஆர்யன் மாணிக்கம். அவங்க ஃபேமிலிக்கு நீ செட் ஆக மாட்ட.“ என்று அவளுக்கு அவளே சொல்லி கொண்டவள்
“ஆமா இப்போ ஏன் நான் இவ்வளவு ஓவரா திங்க் பண்றேன் ஆர்யன் வந்து இன்னைக்கே பொறப்போஸ் பண்ண மாதிரி அவர் வந்து சொன்ன பிறகு இது செட் ஆகாதுன்னு ரிஜெக்ட் பண்ணிடுவோம் சரியா மயூ அது வர….ஆர்யன் நல்ல ஃபிரண்டு “ என்று அவள் மனதோடு போராடிய மயூரி ஆர்யன் காதல் சொல்லும் முன்பே அவனின் காதலை இழுத்து மூட திட்டம் போட்டு கொண்டு இருந்தாள் மயூரி. பாவம் இவளுக்கு எங்க தெரியப் போகிறது நம்ம ஆர்யன் அந்தக் காதலை மட்டும் இவளிடம் சொல்லாமல் இவளைக் காதலிக்கப் போவது.
இப்படி மயூரி தலையில் ஆர்யன் அமர்ந்துகொண்டு இறங்குவேனா என்று ஆட்டம் காட்டிக்கொண்டு இருக்க, இவள் எதிரே இருக்கும் இவள் டீம் பெண்கள் இருவர் மிக மிக மெதுவான குறளில் ஆர்யனைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, அது தெளிவாக நம் மயூரி காதில் விழுந்தது. நார்மல் நாட்களில் காட்டு கத்து கத்தினாலும்” ஏதாவது பேசினியா இப்போ நீ “ என்று கேட்கும் மயூரி, இன்று ஆர்யனைப் பற்றி என்றதும் பாம்பு காது போல கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். “ஏய் சாரைப் பார்த்தியா டி, செமையாக வந்திருக்காரு டி.”
“எந்த சார்ட்டி ஜெய் சாரா அவர் ஆபீஸ்க்கு வரலைன்னு கேள்விப்பட்டேன் ” “ப்ச் அவர் இல்லேடி நம்ம ஆர்யன் சார் இருக்காருல அவர சொல்றேன் நீ அவர பார்க்கலயா “ “பார்க்கலையே டி நான் இப்போ தான் வந்தேன் சார் டே ஷிப்ட் தான சீக்கிரம் கிளம்பிடுவாருள “ “நானே ஜஸ்ட் மிஸ்ல பார்த்தேன் அவர் உக்காந்துட்டு ஹெல்மெட் போட போகும் போது தான் பார்த்தேன் செமையா சேஞ்ச் ஆயிட்டாரு டி “ “ என்ன சொல்ற நீ, அவர் கிட்ட நீ என்ன பார்த்த எப்பவும் தாடி மீசன்னு ரிஷி மாதிரி இருப்பாரே டி“ என்று அவள் சலித்துக்கொள்ள “அது முன்னாடி டி இன்னைக்கு அப்படியே பல பலன்னு இருந்தாரு தெரியுமா மீசை தாடிய ட்ரிம் செஞ்சுட்டு மாஸ்ஸா இருந்தாருடி “
“என்ன ஜெய் சாரா சைட் அடிக்கிறதுல இருந்து இவர் கிட்ட தாவிட்டியா டி?“ “ச்சீ லூசு ஜெய் சார் இன்டர்நேஷனல் சைட்னா நம்ம ஆர்யன் சார் லோக்கல் சைட் டி ரெண்டையும் மெயின்டெயின் பண்ணுவேன்“ என்று அவள் பெருமையாக காலரை தூக்கிவிட்டால் அதை பார்த்து சிரித்த அந்த பெண் “ஆமா என்ன திடீர் மாற்றம் சார் கிட்ட பொண்ணு எதாவது செட் ஆகிருக்குமோ?“
“இருக்கலாம் ஆனா செட் ஆகி இருக்க கூடாதுன்னு வேண்டிக்கிறேன்“
“ஏன்டி உனக்கு இப்படி ஒரு நல்ல எண்ணம்?“ “நெக்ஸ்ட் வீக் டே ஷிப்ட் அதான் ட்ரை பண்ணி பார்க்கலாம்னு இருக்கன் அதான் இந்த நல்ல எண்ணம்“ என்று கண்ணடிக்க “ஏ சிங்கிள் தான் கெத்துன்னு சொல்லுவியேடி? இப்போ அது எங்க போச்சி ?“
“ஏன் சிங்கிள்னா மிங்கிள் ஆக கூடாதா? அது அவர பத்தி அவங்க டீம் கிட்ட பேசியிருக்கேன் டி, ஆள் ரொம்ப நல்லவராம், சைலன்டும் கூட. அதை கேட்டதுல இருந்தே லைட்டா கிரஷ் இருந்துச்சு, இன்னைக்கு வேற இப்படி பல பலன்னு பாத்துட்டன அதான் ட்ரை பண்ணப் போறேன்“ என்று அவள் நெளிய, அதற்கு அந்த பெண் “பெஸ்ட் ஆஃப் லக் டி“என்று வேறு கதைக்கு தாவி விட மயூரி வேகமாக எழுந்து அந்தப் பெண்ணை எட்டிப் பார்த்தவள் செய்த முதல் வேலையே அடுத்த இரு மாதங்களுக்கு அவளை நைட் ஷிஃப்டிலேயே வைக்கப் போவதுதான். இது தெரியாமல் அந்தப் பெண் கனவில் மிதக்க, மயூரி “இவர யாரு இப்போ தாடியை எடுக்கச் சொன்னது கேட்ட அப்பாகாகன்னு சொல்லுவாரு. முதல்ல அங்கிள் கிட்ட போய் இந்த லுக் உங்க பையனுக்கு நல்லா இல்லைன்னு அவுங்க பையன் கிட்ட சொல்லச் சொல்லணும்” என்று யோசித்தவளாக வேலையைத் தொடர்ந்தவளுக்கு அப்போதுதான் ஜெய்யின் நினைவே வந்தது.
அவனைப் பார்த்து ஒரு வாரம் ஆகி இருக்கும். எப்போதும் மயூரியைப் பார்க்க அவனே வருபவன் இப்போது ஒரு வாரமாக ஆளை காணோம். ஜெய் ஒரு வாரமாக போன் கூட செய்யவில்லை அதை நினைத்த மயூரி “என்ன ஆச்சு இவனுக்கு” என்று யோசிக்கும்போது வேலை இவளைச் சூழ்ந்துகொள்ள அப்படியே மறந்துபோனாள் மயூரி. இங்கு ஜெய்யோ தனிமையில் அவன் ரூமில் நிலவை வெறித்தபடி சிகரெட்டை ஊதித் தள்ளிக்கொண்டு இருந்தான். நினைவு எல்லாம் இவன் தாத்தாவிடம் தான். நாளை இவன் தாத்தாவின் நினைவு நாள். மயூரி போன வருடம் எல்லாம் இந்த நாள் முழுக்க ஜெய்யுடன் தான் இருப்பாள். மதியம் வருபவள் இரவு வரை இவனுடன் தான் இருப்பாள். ஆனால் இந்த வருடம் அவள் வருவாள் என்று நம்பிக்கையே இல்லை ஜெய்க்கு முன்பு போல் இல்லை மயூரி நிறைய தனிமையில் இருக்க விரும்பிகிறாள் இவனுடன் தினமும் பேசும் மயூரி இப்போது இவனுடன் பேசி மூன்று நாட்களுக்கு மேலே ஆகிறது அதுனாலேயே அவள் வர மாட்டாள் என்ற எண்ணத்தில் இருந்த ஜெய்க்கு நாளை காலையே மயூரி அவன் வீட்டு வாசலில் வந்து நிற்க போவது தெரியவ போகிறது.