மயூரி எப்போதும் போல கம்பெனிக்கு காரில் சென்று இறங்கியவள் அவள் போனை பார்த்தபடி நடந்து செல்ல அவள் எதிரே வழியை மறைத்து ஒரு உருவம் நிற்க “யார்டா அது நம்மள மறைச்சி நிக்குறது “ என்று மனதில் சொல்லியபடி நிமிர்ந்து பார்த்த மயூரியின் கண்கள் கொழிகுண்டு அளவு பெரிதாக விரிந்து கொண்டது. கண்வெட்டாமல் அவனை பார்த்து “என்ன ஆர்யன் இப்படி மாறிட்டீங்க” என்று வாயைப் பிளக்க மயூரியின் செயலைப் பார்த்து ஆர்யனுக்கே வெட்கமாக ஆகிப் போனது. காலையில் இருந்து இவனை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகி மயூரியைப் போல வாயைப் பிளக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களிடம் தோன்றாத வெட்கம் மயூரியிடம் மட்டும்தான் தோன்றுகிறது ஆர்யனுக்கு.
ஆர்யன் இன்று காலை தன் அப்பாவிற்கு பிடித்தது போல மீசை தாடி ட்ரிம் செய்து மிக நேர்த்தியாக பார்த்து பார்த்து உடை அணிந்து வர மாணிக்கம் அவனை கைகளால் நெட்டி முறித்து தான் அனுப்பினார். சரி என்று ஆபிஸ் வந்தாள் இங்கு அனைவரும் இவனையே வியந்து பார்த்த படி இருக்க. அதை எதையும் கண்டுகொள்ளாமல் மயூரியை பார்க்கவே காத்துக்கொண்டு இருந்தான் ஆர்யன்.
இப்போது மயூரியும் இவனை ஆ.. என்று பார்க்கவும் ஆர்யாவுக்கு வெட்கத்தில் காது மடல் சிவக்க நின்றான். அவன் காதுகளை பார்த்த மயூரி “அச்சோ…ஆர்யன் உங்க காது இன்னைக்கும் ரெட்டா ஆகுது பாருங்களேன் “ என்று அவள் கைகளை நீட்ட ஆர்யன் உடனே அவன் காதுகளை இருகைகள் கொண்டு மறைத்து “ அது க்ளைமேட் ஜில்லுன்னு… இருக்குல.. அதான் மயூரி “ என்று வெட்கப்பட்டு சிரிக்க மயூரி வேகமாக அவள் போனை எடுத்து அவனை போட்டோ எடுத்து விட்டாள். ஆர்யன் “ மயூரி என்ன பண்றீங்க…ஏன் போட்டோ எடுத்தீங்க “ என்று அவள் போனை பறிக்க பார்க்க மயூரி அவனுக்கு முதுகு காட்டி திரும்பியவளாக அந்த போட்டோவை மாணிக்கத்திற்கு அனுப்பிவிட்டு திரும்ப ஆர்யன் பின்னிருந்தபடி மயூரியின் போனை தான் குனிந்து பார்த்து கொண்டு இருந்தான். ஆர்யனின் முகத்தை அருகில் பார்த்த மயூரி “ ஆ…….” என்று பயந்து சாய அவளை பிடித்து நிறுத்திய ஆர்யன் “ நான் தான் ஏன் இவ்வளவு பயம் “ அவளை அமைதிபடுத்தி நிற்க வைத்தான்.
“ அ… பின்ன பயப்படாம அமைதியா பக்கத்துல பூனை மாதிரி இருந்தா பயம் வராதா “ என்று ஆஸ்வாசம் மாக ஆர்யன் “ சரி அது இருக்கட்டும் என்ன ஏன் இப்போ போட்டோ எடுத்தீங்க பெர்மிஷன் இல்லாம “ என்று கோபம் போல் ஆர்யன் முகத்தை வைக்க அதை உண்மை என்று நினைத்து பயந்த மயூரி “ அது அங்கிளுக்கு அனுப்பத்தான் எடுத்தேன் வேற எதுக்கும் இல்ல ஆர்யன் “ என்று பயந்து பேசும் மயூரியை பார்த்து மனதில் சிரித்த ஆர்யன் நேரில் விரைப்பாகவே முகத்தை வைத்து கோண்டு “ எங்க அப்பா தான் என்ன தினமும் பாக்குறாரு தானே அவருக்கு ஏன் என்னோட போட்டோ அவருக்கு ஏன் இப்போ எடுத்து அனுப்பனும் “ என்று மயூரி அருகே குனிந்த படி பக்கெட்டில் கைகளை விட்டு கொண்டு பேச மயூரி மனதில் “ உங்க பையன் குரங்குல இருந்து மனிஷனா மாறிட்டாரு அங்கிள் னு உங்க கிட்ட எப்படி சொல்ல ஆர்யன் “ என்று மனதில் நினைத்தபடி ஆர்யனை நிமிர்ந்து பார்க்க ஆர்யனின் முகத்தை அருகில் பார்த்த மயூரிக்கு முகம் முழுக்க வியர்க்க கண்களை அங்கும் இங்கும் உருட்டியவள் அவன் கண்களை பார்க்காமல் “ அது அங்கிளுக்காக தான் நீங்க பழையபடி இருக்க மாதிரி போட்டோ இல்லன்னு ஃபீல் பண்ணாங்க அதான்… “ என்று மிக மெதுவான குறளில் போச ஆர்யன்
“எங்க அப்பா கேட்டா நான் போட்டோ எடுத்து தரப்போறேன். இப்போதான் அப்பா என் கூட நல்லா பேசுறாரே“ என்று அவளை மடக்க கடுப்பான மயூரி, “ஒரு போட்டோவுக்கா இவ்வளவு பேசுறீங்க ஆர்யன். சரி நான் உங்க போட்டோவை டெலிட் பண்ணிடுறேன். நீங்களே உங்க அப்பாக்கு போட்டோ எடுத்து அனுப்பிக்கோங்க “ என்று கோபமாக போனை எடுக்க, அவள் கையைப் பிடித்த ஆர்யன், “இப்படி பண்ண விட்டுருவனா? போட்டோ டெலிட் பண்ணா எடுத்தது இல்லைன்னு ஆகிடுமா மயூரி?“ என்று கண்கள் சிரிக்க ஆர்யன் கேட்டான். ஆர்யன் செய்யும் அளும்பில், “என்ன ஆச்சு இந்த ஆர்யனுக்கு இன்னைக்கு?“ என்று குழம்பியவளாக, “இப்ப நான் என்ன செய்யணும்னு சொல்றீங்க ஆர்யன்?“ என்று முகத்தில் சிறிது முறைப்பைக் காட்டிப் பேசினாள். அதற்கு ஆர்யன் இன்னும் அவள் அருகே சென்று
“டிக் ஃபார் டேட் தெரியுமா” என்று சொல்லிய வேகத்தில் அவள் அருகே நகர்ந்து நின்றவன் மயூரி சுர்தாரிக்கும் முன் அவளுடன் செல்ஃபி ஒன்றை எடுத்துக்கொண்டு நகர்ந்தவன் “பழிக்குப் பழின்னு தமிழ்ல சொல்லுவாங்க” என்று கண்களைச் சிமிட்டியவன் போனை காட்டியபடி “ஒன்னு கேட்கணும்னு வந்தேன் ஆனா இப்போ கேட்டா கிடைக்காதுன்னு நினைக்கிறேன் சோ நெக்ஸ்ட் டைம் கேட்டுகிறேன்” என்று மயூரியைப் பார்க்க அவள் இப்போ இங்க என்ன நடந்துச்சு என்று புரியாமலே “ஆ…” என்று பார்க்க மேலும் சிரித்த ஆர்யனின் காது நன்றாகச் சிவந்துதான் இருந்தது அப்போதும் மயூரியின் கண்கள் அவன் காதுக்கே செல்ல ஆர்யன் அதைக் கவனித்த விதமாக அவன் காதைப் பிடித்து இழுத்து விட்டுக்கொண்டே “ஷிப்ட் டைம் ஆச்சு மயூரி நாளைக்கு பார்க்கலாம்” என்று செல்லி சென்றான்.
மயூரி கால்கள் நகர்வேனா என்று அவனையே பார்த்துக்கொண்டு நிற்க, தூரமாகச் சென்ற ஆர்யன் ஏதோ தோன்ற திரும்பிப் பார்க்க, மயூரி அசையாமல் இவனையே பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு என்ன என்று தலையசைத்துக் கேட்டான். அதற்கு மயூரி ஒன்றும் இல்லை என்று மறுப்பாகத் தலையசைத்து நிற்க, அதை பார்த்து அழகாக சிரித்த ஆர்யனும் இடம் வலமாகத் தலையசைத்து “ஒன்னும் இல்லையா மயூரி“ என்று உதடு அசைத்து கேட்டான். மயூரி மனம் “இதுக்கு மேல நிக்காத மயூ“ என்று எச்சரிக்க, வேகமாக இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாள்.
ஆர்யன் அவள் சென்ற வேகத்தில் ரசித்தவனாக இவன் வண்டி நிற்கும் இடம் சென்றான். ஆர்யனுக்கு மயூரியின் மீது முதலில் இருந்தே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது. அதனாலோ தான் என்னவோ அவள் குடிப்பாள் என்று தெரிந்து கோபமாக வந்தது ஆர்யனுக்கு. அவளை பார்க்கும்போதெல்லாம் முறைத்து வைத்தான். அதுவும் பின் இல்லை என்று தெரிந்ததும் சந்தோஷம் தான் ஆனாலும் அவன் அவளை விட்டு விலகியே இருந்தான். அவனின் குற்ற உணர்வால் இவளைத் தள்ளியே வைத்திருந்தான். இப்போது அதுவும் சரியாகி அப்பாவுடன் சேர்ந்துவிட்டதாலே பழைய துள்ளலுடன் மீண்டு வந்த ஆர்யனின் நினைவில் முழுவதும் அவளே ஆட்சி செய்தாள்.
மயூரியுடன் நெருங்க வேண்டும், அவளுடன் தன் அப்பா அம்மா போல் ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய மறுநொடி அவளைத் தேடி வந்துவிட்டான். வாழ்க்கை முழுக்க மயூரி வேண்டும் என்ற நிலைக்கும் வந்துவிட்டான் ஆர்யன்.
காதல் ஒரு அழகிய உணர்வு. காதலிக்கும் இருவரிடமும் அது தோன்றும் போது, அதே காதல் பயங்கரமான உணர்வும் தரும் இருவரில் ஒருவர் இடத்தில் அது தோன்றாமல் போகும் போது. ஆர்யனுக்கு மயூரியின் மீது வந்த உணர்வு மயூரிக்கும் வரவேண்டும். ஆனால் அவளுக்கு வருமா? அவள் உணர்வே பல சமயம் ஏன் என்று தெரியாத போராட்டத்தில் இருக்கும் மயூரிக்கு ஆர்யனின் உணர்வு புரியுமா?
சென்னையை விட்டு மிக தொலைவில் ஊருக்கு போகும் வண்டிகள் லாரிகள் என்று செல்லும் அந்த அகலமான சாலையின் ஓரத்தில் ஆண், பெண் என்று பத்து பேருக்கு மேலே மண்வெட்டியால் தோண்டிக்கொண்டிருந்தனர் அந்த மாலை வேளையில். அவர்களை ஒருவன் தலையில் தொப்பி அணிந்தபடி கையில் கைக்குட்டையால் நெற்றியில் இருக்கும் வேர்வையை துடைத்தபடி “ஏ… அங்க பள்ளமா இருக்கு பாரு, மண்ணை அள்ளி அங்க போடு சீக்கிரம்… காலையில ஆரம்பிச்சது இன்னும் இருபது மீட்டர் கூட சரி பண்ணியிருக்க மாட்டீங்க போல. சார், நாளைக்கு வந்து திட்டப் போறாரு” என்று கத்திக்கொண்டிருந்தான்.
அப்போது தோண்டிக் கொண்டிருந்தவர்களுள் ஒருவன் அருகில் இருந்தவன் காதில் “இப்போ இந்த ஆளுக்கு என்னவா இப்படி கத்திட்டு இருக்கான் இப்ப வந்து“ அதற்கு அவன் அருகில் இருந்தவன் “உனக்கு தெரியாதா? இங்க நாளைக்கு ரோடு வேலை எவ்வளவு முடிஞ்சிருக்குன்னு பார்க்க கலெக்டர் வரப்போறாராம். இந்த ரோடு சின்னதா இருக்குன்னு பெருசு பண்ணச் சொல்லி ஒரு மாசம் ஆகப்போகுது இல்லையா? அதான் கத்திட்டு இருக்கான் சீக்கிரமாக முடிக்கணும்னு.“ “ஆ… நல்ல கதையாக இருக்கே, ஒரு நாளில என்னத்தை ரோடு போட?” என்று அவன் பேச, அந்த மேற்பார்வையாளன் “ஏய்… என்ன பேச்சு அங்கே?” என்று அதட்டி உருட்டி வேலை செய்ய வைத்துக்கொண்டிருந்தான். அப்போது ரோடு அகலம் செய்துகொண்டிருந்த இடத்தில் ஆலமரம் ஒன்று வெட்டப்பட்டு, அதன் வேரை மட்டும் விட்டுச் சென்றிருக்க, அதை அனைவரும் சேர்ந்து தோண்டி எடுத்துப் போட்டனர். அந்த இடம் இப்போது பெரிய குழியாகக் காட்சியளிக்க, அதைப் பார்த்த மேலாளன் “என்ன பார்த்துட்டு நிக்கிறிங்க? பக்கத்தில இருக்க மண்ணை வாரிப் போடுங்க!” என்று சொல்லவும், அருகில் இருந்த அவர்கள் மண்ணை வாரிப் போட, உடனே அந்த மேலாளர்
“டேய் பக்கத்துலன்னா பக்கத்துலயே தோண்டுவீங்களாடா அறிவில்லை கொஞ்சம் உள்ளே போய் தோண்டுங்கடா” என்று அதட்டிவிட்டுச் செல்ல உடனே மூவர் கடப்பாரை, மண்வெட்டி என்று எடுத்து அந்த ஹைவே அருகே காடு போல இருந்த இடத்தில் கொஞ்சம் தள்ளிச் சென்று தோண்டிக் கொண்டிருக்கும்போது ஏதோ துணி போல ஒருவனுக்கு மாட்ட, அது என்ன என்று இழுத்தவனின் கையில் ஒரு கையின் எலும்புக்கூடு வந்து விழுந்தது அதை அவன் பார்த்து பயந்து கீழே விழுந்தவன் “சார்…. இங்கே எலும்பு இருக்கு சார்” என்று கத்தினான். அதற்கு அவன் “என்னது எழும்பா இருக்க, சரி அதுக்குப் போய் இப்படி ஏன் கத்துற எலும்பு இருந்தா தூக்கிப் போட்டுட்டு தோண்ட வேண்டியதுதான” என்று மிருகத்தின் எலும்பாக இருக்கும் என்று நினைத்து சோல்லி வந்தவன் அங்கு ஏதோ புடவையுடன் ஒரு கையின் எலும்பு இருக்கவும் அதைப் பார்த்துப் பயந்தவன், “மனித எலும்பு இங்கே எப்படி? போலீஸ்… போலீஸுக்குக் கால் பண்ணுங்க!” என்று பதட்டமாக அவன் கையில் இருந்த துணியால் முகம் துடைத்தான். நல்வினையோ தீவினையோ, நீ எது செய்கிறாயோ அது உன்னைத் தேடி வரும். விரைவாகவோ அல்லது தாமதமாகவோ கண்டிப்பாக உன்னை வந்து சேரும். காத்திரு….