இரவு 21

ஆர்யன் வயது 21 நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல் என்று மாணிக்கம் போல் இருந்தாலும் நிறம் தாய் போல வெண்மையாக தான் இருப்பான். அளவான மீசை ட்ரீம் செய்த தடி என்று காலேஜ் ஆண்சம் ஆண்கள் லிஸ்டில் இவனும் ஒருவன். இருந்தும் பெண்கள் மீது நாட்டம் இல்லை. படிப்பு, படிப்பு, படிப்பு மட்டுமே என்று தான் நாலு வருடமும் இருந்தான். அவன் அப்பா மாணிக்கம் கோயம்பேடு மார்கெட்டில் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அம்மா தெய்வானை, அவர் பெயருக்கென்றே சாந்தமான முகம். அந்த முகத்திற்கு கோபம் பட தெரியுமா என்ற அளவு இருக்கும். தெய்வானை மற்றும் மாணிக்கம் மிக பாசமான தம்பதி. இவர்களுக்கு ஏற்ற படி தான் இரு பிள்ளைகளும் இருந்தன. ஆர்யன் வாழ்த்தனம் அதிகமாக செய்தாலும் அம்மா முகம் சுருங்கினாள் போதும், அடங்கிவிடும். அம்மா செல்லம் அதித்தி கூட தெய்வானையிடம் மருத்து பேசுவாள் சில சமயம். ஆனால் ஆர்யன் அம்மா சொல்லுக்கு மறு சொல் கிடையாது. தெய்வானையும் பிள்ளைகள் இது செய்யக் கூடாது, அது செய்யக் கூடாது என்று கண் மூடி சொல்லும் ரகம் இல்லை. பிள்ளைகள் சொல்லும் ஒன்று சரியாக இருந்தாள் அதை தடை சொல்லி நிறுத்த மாட்டாள்.

ஆர்யன் தன் இன்ஜினியரிங் படிப்பை முடித்து ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தான். இவன் புதிது என்பதால் சம்பளம் குறைவுதான். அதிலேயே ஆர்யன் இருந்து வேலை பார்த்தபடி வேறு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்த தருணம் அது. இவர்கள் இருப்பது வாடகை வீடுதான். கீழே ஒரு வீடு, மேலே ஒரு வீடு. இவர்கள் கீழ் போர்ஷனில் இருந்து வந்தனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து அரை மணி நேரம் தூரம்தான் வீடு. அதுனாலேயே ஏழு வருடமாக அங்கேதான் இருக்கிறார்கள். மாணிக்கம் சம்பாத்தியத்தில் வீட்டைப் பார்த்துக்கொள்வது, வாடகை, கரண்ட் பில் இதனுடன் பிள்ளைகள் படிப்பு போக தெய்வானை திருமணத்திற்கும் சேர்த்து வைக்க வேண்டும். இதற்கே சரியாக போய்விடும் அவர் சம்பளம் . இது போக தேய்மானைக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது கனவு. தெய்வானை சொந்தங்கள் மத்தியில் வாடகை வீட்டில் இருப்பது இவர்கள் மட்டுமே. அதுனாலேயே இவர்கள் சொந்தங்கள் விசேஷத்தில் மாணிக்கத்திற்கு மதிப்பு குறைவே. அதுனாலேயே தெய்வானை அதிகமாக இவள் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டாள். அவர்கள் மத்தியில் ஒரு வீடு கட்டி வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தில் பணம் சேர்த்து வைப்பார். ஆனால் அதுவும் உடனே வேறு செலவு வந்து செலவாகி போய்விட வீடு கட்டும் கனவு கனவாகவே இருந்தது.

தன் அம்மாவின் கனவு ஆர்யனுக்கு நன்றாகவே தெரியும் அதனாலயே தன் அம்மாவின் கனவை அவன் கனவாக மாற்றி கொண்டு நன்றாக படித்து காலேஜ் முடிந்த அடுத்த மாதமே வேலைக்கும் சென்று விட்டான் ஆனால் அது அவனுக்கு போதவில்லை வேகமாக முன்னேற வேண்டும் என்னும் எண்ணத்தில் இருந்தான்.

என்னும் இரண்டு வருடத்தில் அதித்தி படிப்பு முடிந்து விடும் பின் அவள் திருமணம் வேறு இருக்கிறது என்று எண்ணியபடியே இருந்தவனுக்கு அறிமுகம் ஆனவன் தான் ரமேஷ்.

 ஆர்யன், கிருபா, விவேக், சரண் இவர்கள் நால்வரும் பள்ளியில் இருந்தே நண்பர்கள் எப்போதும் நால்வரும் ஒன்றாக தான் திரிவார்கள். இப்போது கல்லூரி முடிந்து நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஒன்றாக கூடி பேசுவார்கள் அப்படி தான் ஒரு ஞாயிறு அன்று கிரிக்கெட் விளையாட என்று நால்வரும் செல்ல அங்கு சரண் கூட்டி வந்தவன் தான் ரமேஷ். விளையாடி முடித்து அனைவரும் அமர்ந்து பேசி கொண்டு இருக்க பேச்சி விளையாட்டிலிருந்து பிஸ்னஸ் தொடங்குவதை பற்றி திசை மாறியது. அப்போது ரமேஷ் அவன் ஒரு ஐடி கம்பெனி ஒன்று தொடங்க போவதாகவும் அதற்கு கோடிங் தெரிந்தவர்கள் கிடைத்தாள் வேலைக்கு என்று வைக்காமல் பார்ட்னராக சேர்த்து கொள்ள போவதாக பேசிக்கொண்டு இருந்தான். அதில் ஆர்வம் கொண்டு அங்கு இருந்த அனைவரும் அவனிடம் அது எப்படி என்று கேட்டு கொண்டு இருந்தனர். அதை ஆர்யனும் ஆர்வமாக கேட்டு கொண்டு இருந்தான். அதை பார்த்த கிருபா, ஆர்யனிடம் மெதுவாக “டேய் அவனுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் இல்ல இப்போ உனக்கும் இல்ல சோ இது இப்போதைக்கு வேணாம்“ என்று சொல்ல அதை எங்கே அவன் காதில் வாங்கினான் அவன் கவனம் முழுவதும் ரமேஷ் இடம் தான் இருந்தது.

ரமேஷ் “எங்க அப்பா ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றாரு எனக்கு அதெல்லாம் செட் ஆகாது அதான் நானே பிசினஸ் செய்யப் போறேன், ஒரு நல்ல கோடர் கிடைச்ச பார்ட்னரா சேர்த்துக்கப் பார்க்கிறேன் உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா எனக்கு கால் பண்ணுங்க” என்று நம்பர் தந்துவிட்டுச் செல்ல அதை சேவ் பண்ணி வைத்துக்கொண்ட ஆர்யன் இரண்டு நாள் அதையே யோசித்தவனாக சரணிடம் ரமேஷைப் பற்றி விசாரித்தான். சரணும் நல்ல விதமாகவே அவனைப் பற்றிச் சொல்ல ஆர்யன் நேராக அவன் அம்மா அப்பா முன் சென்று நின்றான். இருவரிடமும் பிசினஸ் பற்றி ரமேஷ் சொன்னதைச் சொல்லி இவன் சேரப் விரும்புவதாக சோல்லி இவர்கள் விருப்பம் கேட்டு நின்றான். முதலில் தயங்கிய தேய்வானை பின் ஆர்யன் கண்ணில் தெரிந்த ஆசையில் சரி என்று ஒத்துக்கொள்ள மனைவி பேச்சைக் மறுப்பு சொல்வாரா மாணிக்கம் அவரும் சரி என்று சொல்லிவிட்டார். அதில் சந்தோஷப்பட்ட ஆர்யன் இருவரையும் கட்டிப்பிடித்து குதித்துத் தீர்த்துவிட்டான்.

 அப்போது தெய்வானை “ ஆரி இங்க வா..” என்று அழைத்து அருகில் அமர வைத்தவர் “ இந்த ஒரு வருஷம் நீ இந்த பிஸ்னஸ் உனக்கு சரியா வருதான்னு பாரு அப்படி ஒரு வருஷமும் எதுவும் பிடிபடலன்னா வேற வேலைய தேடிக்கனும் செய்வியா ப்பா “ என்று ஆர்யன் முகம் காண அவனும் சிரித்தபடி தன் அன்னையின் மடியில் படுத்து கொண்டு  “ இந்த பிஸ்னஸ் வர்க் ஆகலனா உடைஞ்சி போய்டாம கண்டிப்பா வேற வேலைய தேடிப் பிடிப்பேன் ம்மா அத நினைச்சு நீ டென்சன் ஆகாத பி கூல் “ என்று கன்னம் கிள்ளி கொஞ்ச, மாணிக்கம் “ டேய் என் பொண்டாட்டி கன்னத்தை விடுடா “ என்று வம்பு செய்ய ஆர்யனும் “அப்போ உங்க கன்னத்தை தாங்க “ என்று அவர் முதுகில் ஏறி காதை பிடித்து திருகி விட்டு ஓடி சென்று விட்டான் சிரித்த முகமாக. அவன் சிரிப்பு மறையவே கூடாது என்று வேண்டி கொண்டவராக தெய்வானை சாய்ந்து கண் மூடினார். அன்று அவருக்கு தெரியவில்லை தன் மகனின் சிரிப்பை அவரோடு சேர்த்து எடுத்து செல்லப் போகிறார் என்று.

ஆர்யனும் ரமேஷிடம் போனில் பேசி நேரில் அவனைப் பார்க்கச் சென்றான். நேரில் ஆர்யனின் திறமையைக் கண்டுகொண்ட ரமேஷ் அவனை இவனுடன் சேர்த்துக்கொண்டான். ஆரம்பத்தில் சிறு தடுமாற்றம் இருந்தாலும் போகப் போக அதுயும் சரிசெய்து எப்படியோ ஒரு ப்ராஜெக்ட்டையும் பெற்றுக்கொண்டனர். அதைச் சொன்னபடி சிறப்பாக முடித்தும் கொடுத்துவிட அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் ரமேஷ்  ஆர்யனை  க்ளப்புக்கு அழைத்துச் செல்ல, முதலில் ஆர்யன் மறுக்க, ரமேஷ் “என்ன ஆர்யன், போகப் போக பெரிய கிளைன்ட் மீட்டிங்னு எல்லாம் போற மாதிரி இருக்கும். அங்கே இப்படி ஆல்க்ககால் வேண்டான்னு சொல்லுவிங்களா? என்ன இது, சும்மா ஒரு சோஷியலைஸ்க் காக கத்துக்குறது தப்பு இல்லை. நான் எல்லாம் சோஷியல் ட்ரிக்கர்தான், வாங்க” என்று அழைத்துச் சென்றுவிட்டான்.

 முதல்முறை குடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லத் தயங்கி, இரவு மிகத் தாமதமாகத் தடுமாறியபடியே வீடு வந்தான் ஆர்யன். அன்று இரவு இவன் வந்ததை யாரும் பார்க்காததால், இவன் குடித்தது யாருக்கும் தெரியாமல் போக, ஆர்யன் இதையே பலமாகக்கொண்டு வந்தான். முதலில் வீக் எண்ட் மட்டும் என்று போய், பின் அது மூன்று நாட்களுக்கு ஒருமுறை என்று மாறி, பின் ஒருநாள் விட்டு ஒருநாள் என்று போய், இப்போது தினமும் குடிக்கவில்லை என்றால் கோடிங் செய்ய முடியாது என்ற நிலைக்கே சென்றுவிட்டான் ஆர்யன்.

ஆர்யன் நேரத்திற்கே தூங்கி காலை சீக்கிரம் எழுந்திரிக்கும் பழக்கம் உள்ளவன். அப்படி இருந்தவன் திடீரென்று இரவு தாமதமாக வருவது, காலை தாமதமாக எழுவது என்று இருக்க, தேய்வானை ஒருநாள் காலை அவனிடமே நேரடியாகக் கேட்டுவிட்டார் அதற்கு ஆர்யன் ஏதோ சொல்லி சமாளித்து விட்டான்.

அன்று முதல் காலை கஸ்டபட்டாவது எழுந்து விடுவான். இவன் மீது சந்தேகம் வராதபடி நடந்து கொண்டான். ஆனால் இவன் குடிப்பது, அதுவும் தினமும் குடிப்பது நண்பன் ஒருவன் மூலம் கிருபா காதில் விழ, அவன் நேரில் ஆர்யனைப் பார்த்துத் திட்டி, பொறுமையாகப் பேசி என்று எவ்வளவு சொல்லியும் ஆர்யன் கேட்காமல் போக, அவன் அப்பாவிடம் ஆர்யன் குடிப்பதைப் பற்றி சொல்லிவிட்டான்.

அது தெரிந்து ஆர்யன் கிருபாவை ரோடு என்றும் பார்க்காமல் குடித்துவிட்டு அடித்த அடி இன்றும் கிருபாவால் மறந்திருக்க முடியாது. வீட்டுக்குத் தெரிந்த பிறகு ஆர்யன் குடிப்பதை நிறுத்துவான் என்று பார்த்தால் அவன் குறைந்தானே தவிர நிறுத்தவில்லை. தேய்வானை மற்றும் மாணிக்கத்திடம் நேராகச் சென்று “என்னால இதைக் குடிக்காம எதுவும் பண்ண முடியல. டெய்லி குடிக்கிறது தப்புதான். அதனால குறச்சிக்கிறன் ஆன குடிக்கிறதை நிறுத்த முடியாது” என்று எப்போதும் அவர்கள் கண்ணைப் பார்த்துப் பேசும் மகன் தலைகுனிந்து பேசிச் செல்ல, அதிலேயே இருவரும் உடைந்து போனார்கள். அன்று முதல் தான் டெய்லி என்பது போய் மூன்று நாட்களுக்கு ஒருமுறை என்று மாற்றி கொண்டான்.

இப்படி இவன் வாழ்க்கை சென்று கொண்டு இருக்க, இவர்கள் கம்பெனிக்கு ஒரு பெரிய ப்ராஜெக்ட் ஒன்று வந்தது. அதை முடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் இவர்களுக்கு. அதுக்காகவே ராத்திரி பகல் பாராமல் இவன் ப்ராஜெக்ட் செய்து முடிக்க ப்ராஜெக்ட் கொடுக்கப்படும் நாளுக்கு முன், இவன் வைத்திருந்த ஃபைல் கரப்ட் ஆகி, இவன் ப்ராஜெக்ட் வைத்து இருந்த அனைத்தும் எரிந்து போய் விட்டது என்று ரமேஷ் சிம்பிளாக சொல்லி, ப்ராஜெக்டில் இருந்து இவர்கள் விலகுவதாக சொல்லிவிட்டான். இது கேட்டு அதிர்ந்த ஆர்யன் ரமேஷை தேடி செல்ல அவன் முழு போதையில் குடித்தவனாக இருக்க ஆர்யன் அவனை பார்த்து “நான் பேக்கப் ஃபைல் வச்சிருக்கன் ரமேஷ், அதை சப்மிட் பண்ணலாம். அதுக்குள்ள நீங்கள் ஏன் வெளியே வந்திங்க ப்ராஜட்டை விட்டு?” என்று கேட்க, அதற்கு அவன் கூலாக “அந்த ப்ராஜெக்ட்டை சப்மிட் பண்ணாம இருக்க பணம் வாங்கிவிட்டேன். அதுவும் இல்லாம, என் கம்பெனி கூட அவன் டை அப் பண்ணிக்கிறன்னு சொல்லிட்டான். சோ இந்த ப்ராஜெக்ட் வேண்டாம்” என்று இலட்சியமாக  சொல்ல, அவன் சட்டையை பிடித்த ஆர்யன் “டேய், நாலு மாசம் உழைப்புடா இது. ஓகே ஆகி இருந்தா நாம் எங்கே போய் இருப்போம் தெரியுமா?” என்று ஆர்யன் கண்கள் சிவக்க கத்த

 “பிச், இதை முடிச்சி அடுத்த ப்ராஜெக்ட் கிடைச்சி என்னால டைம் வேஸ்ட் பண்ண முடியாது. இப்போ பார், நாம்ம விலகினது நாள நான் சீக்கிரமாவே அந்த இடத்தை இப்போ ரீச் பண்ணிட போறேன்.” என்று அவனை மட்டும் சொல்ல, அதில் சுதாரித்த ஆர்யன் “பண்ணிட போறேன்னா?.. அப்போ நானு?” என்று அவனை உற்று பார்க்க, “உனக்கு என்ன? நீ இந்த கம்பெனி எம்ப்ளாயி ஆ இருக்க அப்படியே இருப்ப” என்று தோளை குழுக்க, ஆர்யன் அதிர்ந்து “என்ன பார்ட்னர்னு சொன்னாயே…” என்று கேட்க, ரமேஷ் “அது… அப்போ இருந்த சூழ்நிலையில சொன்னேன். ஆனா இப்போ இருக்க சூழ்நிலை வேறாச்சே” என்று சிரிக்க, ஆர்யனுக்கு வந்த கண்முன் தெரியா கோபத்தில் அவன் முகத்தில் குத்தி அவன் கையை உடைத்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

வீடு வந்த ஆர்யனுக்கு கோபம், வெறுப்பு, ஆத்திரம் என்று அனைத்தும் சேர்ந்து கொதித்துக் கொண்டு இருந்தவன் ரமேஷை என்ன செய்யலாம் என்று யோசித்தவனாக , கோட் மூலமாக செல்வோமா என்று யோசித்து, தெரிந்த ஒரு வக்கில் பேசினான்.

அதற்கு அந்த வக்கில், “அவன் அந்த கம்பெனியில் நீங்கள் பார்ட்னர் என்று ஏதாவது பாண்டில் சைன் பண்ணித் தந்தாரா அவர்?” என்று கேட்க, அதற்கு ஆர்யன் இல்லை என்று சொல்லவும், அவரும் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டார். அதிலு அழுத்தம் தாங்க முடியாமல் ஆர்யன் நாடிச் சென்றது என்னவோ மதுவைத்தான். பகல் நேரம் குடிக்காத ஆர்யன் அன்று சாராயக் கடைக்குச் சென்று வாங்கி, அங்கு நின்றே குடித்தவன், என்னும் இரண்டு பாட்டில் வாங்கி கொண்டு போதையில்  நடந்து வீடு வந்தவன், வீட்டு வாசலிலேயே அமர்ந்து குடிக்க ஆரம்பித்துவிட்டான். அந்த நேரம் பார்த்து அவன் அம்மா கடைக்குச் சென்று வீட்டுக்கு நடந்து வந்தவர், இவன் இருந்த கோலத்தைப் பார்த்து, ஆர்யன் என்று கேட்டதைத் திறக்க அந்த ஒரு நொடிதான். எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. கழுத்தில் ரத்தம் வடிய, கழுத்தில் கைவைத்தபடி, “ஆரி….” என்று கத்தியபடி கீழே விழுந்தார் தெய்வானை.