கேப்பில் வீடு திரும்பி கொண்டு இருந்த மயூரியின் நினைவு எல்லாம் லல்லியை பற்றிதான். டாக்டர் சொன்னபடி என்றால் இவள் கனவில் வருவது அனைத்தும் நடந்தவை மட்டும் தான். அப்போ லல்லி ரத்தம் வடிய வந்ததும் உண்மையாக இருக்குமோ என்று எண்ணியவள் “கடவுளே அவுங்களுக்கு ஒன்னும் ஆகிருக்க கூடாது ப்ளீஸ்“ என்று வாய்விட்டு வேண்டி கொண்டாள். கடவுளாலேயே நடந்து முடிந்த ஒன்றை மாற்ற முடியாது என்று இவள் அறிய போகும் நாளும் தூரம் இல்லை.
அப்பார்ட்மெண்ட் நோக்கி சென்றவளுக்கு ஜெய்யிடம் இருந்து போன் வந்தது, அவன் சென்னை வந்து விட்டதாக. அதை கேட்ட மயூரி தலையில் அடித்தபடி அவன் வீடு நோக்கி சென்றாள். ஜூரத்திற்கு ஊசி ஒன்று போட்டு கொண்டவளுக்கு சிறிது நேரம் தூங்க வேண்டும் போல் இருந்தது. அதை கொடுக்கும் விதமாக ஜெய் கால் செய்ய கடுப்பாகி திட்டியபடியே சென்றாள் மயூரி. செல்லும் வழியில் மாணிக்கத்திற்கு கால் செய்து அவள் நலம் பற்றி சொல்லிவிட்டாள்.
இங்கு மயூரிக்காக ஆர்யன் ஹாலிலேயே காத்துக்கொண்டு இருந்தான். அவள் எப்போ வருவாள்? டாக்டர் என்ன சொல்லி இருப்பார்? ஏதாவது பெரிய விஷயமா இருக்குமோ? என்று பல யோசனைகள் அவன் தலையில் ஓடிய படி இருக்க, இவன் போனை இதோ இருபது தடவை மேலே ஆவது பார்த்து இருப்பான். போனை பார்த்தபடி “மயூரி கிட்ட நம்பர் வாங்கணும் முதல்ல. அவ நம்பர் என் கிட்ட இல்ல நாளும் என் நம்பர் அவ கிட்ட இருக்கும் தானே? இல்லை இருக்காதா?“ என்று அவனுக்கு அவனே பேசியபடி இருக்க, அப்போது பார்த்து அவன் போன் இசைக்க மயூரி தான் அழைத்து விட்டாளோ என்று எண்ணி ஆர்வமாக போனை எடுத்து காதில் வைக்க
“அவள் வருவாளா, அவள் வருவாளா, அவள் வருவாளா, அவள் வருவாளா என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா என்ற பாடலை செட் செய்ய எண் ஒன்றை அமுக்கவும் “ என்று கம்ப்யூட்டர் வாய் பேச, கடுப்பான ஆர்யன் “ யாரும் வர வேணாம், பாட்டைப் பாரு, நேரம் காலம் தெரியாம “ என்று போனை தட்டியவன் போனை கட் செய்து தூக்கிப் போடுகிறேன் என்று ஏதோ ஒரு பட்டனை அமுக்கி விட்டுவிட்டான்.
ஆர்யன் சத்தம் கேட்டு மாணிக்கம் எட்டிப் பார்க்க, இவன் ஹாலில் டீவியை மியூட் செய்துவிட்டுச் செய்று பார்க்க, மாணிக்கம் “என்ன சத்தம் இல்லாம நியூஸ் பார்க்கிறான், இவனுக்கு என்ன ஆச்சி “ என்று அவன் அருகில் செல்ல, மாணிக்கம் வரும் சத்தம் கேட்டு இவர் பக்கம் பார்க்காமல் கதவை ஆர்வத்தோடு ஆர்யன் பார்க்க, மாணிக்கத்திற்கு ஏதோ புரிவது போல இருக்க, அவர் சிரித்தபடி “ ஆர்யா என்ன பண்ற “ என்று அருகில் அமர, “ அவன் மாணிக்கத்தை திரும்பி கூட பார்க்காமல் முகத்தை கடுகடுவென வைத்தபடி
“ பார்த்தா தெரியல, செய்தி பார்க்கிறேன் ப்பா “ என்று பதில் மட்டும் தான் வந்தது இவரை இவன் திரும்பி பார்க்கவில்லை , மாணிக்கம் “ சரி நானும் அதே செய்தி பார்க்க தான் வந்திருக்கேன், ஆனா எனக்கு செய்தி சத்தமா பார்த்தா தான் புரியும், கொஞ்சம் சத்தம் கூட்டி வைக்கிறியா “ என்று கூறவும், ஆர்யன் “ பிச்..அச்சோ” என்று கீழ் உதட்டைக் கடித்தவன் ரிமோட்டை மாணிக்கத்திடம் போட்டுவிட்டு அவன் அறைக்கு ஓடிச் சென்று விட்டான். மாணிக்கம் கூப்பிடக் கூப்பிட.
அறைக்குள் வந்தவன் பாத்ரூம் புகுந்து கண்ணாடி முன் நின்று “ என்னடா ஆரி பண்ற மயூரிக்காக நீ ஏன்டா வெயிட் பண்ற “ என்று அவனுக்கு அவனே கேள்வி கேட்க அதற்கு அவனின் ஒரு மனமோ “ பக்கத்து வீட்டுப் பெண்ணு என்ன ஆச்சின்னு தெரிஞ்சிக்க வேணும் “ என்று கூற மற்றொரு மனமோ “ இது அது தான் “ என்று அடித்துக் கூற ஆர்யன் இரண்டாவது மனம் சொன்னதை டீலில் விட்டுவிட்டு முதல் மனம் சொன்னதையே எடுத்துக்கொண்டான்.
போக்கு வரத்து நெரிசலில் கிருபா கலைப்பாக ஆபிஸ் முடிந்து பைக்கில் வீடு திரும்ப ட்ராஃபிக் போலிஸ் அவன் வண்டியை நிறுத்தி சாவியை எடுத்துவிட்டு “ எங்கடா ஹெல்மெட்? வா… வண்டியை ஓரம் கட்டு. வந்து ஃபைன் கட்டு “ என்று அவனை நிறுத்தி ஐந்தாயிரம் ஃபைன் கட்டச் சொல்ல ஃபைனைக் கேட்டு நெஞ்சில் கைவைத்த கிருபா “ சார் அவ்ளோ காசு இல்ல சார் ப்ளீஸ் சார் எதவது பாத்து பண்ணுங்க “ என்று கெஞ்ச அதற்கு அந்த போலிஸும் மனம் இரங்கி ரெண்டாயிரம் கட்டு என்று கூறவும் அதற்கும் முழித்த கிருபாவை பார்த்த போலிஸ் கடுப்பாகி “எவ்வளவு தான் வச்சிருக்க அப்போ “ என்று கத்த அவனோ இருநூறு ரூபாயை நீட்ட அந்த போலிஸ் அதிகாரி ஸ்ட்ரிக்டாக இரண்டாயிரம் கட்டு இல்ல வண்டியை ஸ்டேஷன் வந்து வாங்கிக்கோ என்று சொல்லிவிட்டார். கிருபா “ஒரு நிமிசம் சார் “ என்று போனை எடுத்து அவன் மனைவிக்கு போட அவள் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும் பின் அவன் அம்மா போனுக்கு அழைக்க அவர் அந்த போனை எடுக்க வில்லை பின் வேறு வழி இல்லாமல் ஆர்யனுக்கு கால் செய்ய அவன் போனில் “யார் அழைப்பது யார் அழைப்பது “ என்று பாட்டு ஓட கடுப்பாகி விட்டான் கிருபா “ போனை பார்த்தா தானடா தெரியும் எவன்னு “ என்று டென்ஷன் தாங்காமல் கத்த அங்கு இருந்த அனைவரும் இவனை ஒரு மாதிரி பார்த்தனர்.
அதைப் பார்த்து அமைதியான கிருபா ஆர்யனுக்கு தொடர்ந்து பெண் செய்ய ஆர்யன் இரண்டாவது ரிங்கில் தான் போனை அட்டன் செய்தான். அவன் போன் எடுத்ததும் பேசத் தொடங்கினான் கிருபா “ என்ன பாட்டு டா அது சுட்டிஹேஸன் புரியாம ஒழுங்கா ரிங் டோனை மாத்திடு “ என்று கத்திய கிருபாவிடம் ஆர்யன் “சரிடா மாத்திடுறேன் அத சொல்ல தான் கால் பண்ணியா “ “ இல்ல வேற விஷயமாதான் கால் பண்ணேன் அதுக்குள்ள அந்த ரிங் டோன் குழப்பிடுச்சி, சரி அத விடு எனக்கு ஒரு இரண்டாயிரம் அனுப்புடா “ “ அவ்வளவு பெரிய அமௌன்ட் உனக்கு எதுக்குடா “ “ என்னது பெரிய அமௌன்டா என்னடா அண்ணனும் தங்கச்சியும் விளையாடிரிங்களா கஷ்டப்பட்டு கை நிறைய சம்பாதிக்கிறது நானு அப்புறம் உன் தங்கச்சி என்னடான அதை முழுக்க எடுத்துட்டு பாக்கெட் மணி மாதிரி இருநூறு ரூபா தரா நீ என்னன்னா அவ்வளவு காசு எதுக்குன்னு கேக்குற நான் போறன்டா எனக்கு பைக்கும் வேணாம் வேற எதுவும் வேணாம் “ என்று கிருபா கத்த அருகில் இருந்த போல்ஸ்ஸோ “அங்க போய் கத்திட்டு வா சும்மா காது பக்கத்துல இருந்து நோய் நோய்னு “ என்று அவர் வேற கத்த அதை போன் வழியாக கேட்ட ஆர்யன் உடனே “ சரி நீ கத்தாத நான் இதோ சென்ட் பண்ற “ என்று அனுப்பி விட்டான். கிருபா அந்த பணத்தை கட்டி விட்டு அவன் வீட்டுக்கு புலம்பிய படியே சென்றான்.
இங்கு ஆர்யன் போனை கீழே வைத்து விட்டு ஹோபாவில் தலை சாய்ந்து அமர மாணிக்கம் “ மயூரி பாப்பா கால் பண்ணாங்க டாக்டர் பார்த்துட்டாங்களாம் பெரிசா ஒன்னும் இல்லையாம் அவுங்க அப்படியே அவங்க நண்பனைப் பார்த்துவிட்டு வரேன்னு சொல்லிடாங்க அதான் இங்க வர லேட் ஆகுது “ என்று சொல்லிவிட்டு செல்ல ஆர்யன் மனதில் “இவளுக்கே உடம்பு சரியில்லை அந்த ஃபிரண்டா நாளைக்கு பார்த்தா என்ன “ என்று அப்போதும் அவனுக்கு மயூரி மீது கோபமே வர அவன் தலையை உலுக்கிய ஆர்யன் “ அவ எங்க போனா உனக்கு என்னடா ஆரி “ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டான்.
இங்கு ஜெய் வீட்டு முன்னாடி காரை நிறுத்திய மயூரி இறங்கி அவன் வீட்டுக்குள் செல்ல அங்கு ஜெய் உடை கூட மாற்றாமல் லேப்டாப்பை ஹாலில் வைத்து சிசிடிவியில் நேற்று இரவு நடந்ததை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். ஜெய்க்கு அதை பார்க்க பார்க்க முகம் கோபமாக மாறிக்கொண்டே போக அதை வைத்தே மயூரி அவன் எதைப் பார்க்கிறான் என்று புரிந்துகொண்டவளாக அமைதியாக வந்து அமர்ந்தாள். ஜெய் அதை முழுதாக பார்த்து முடித்தவனாக நிமிர்ந்து மயூரியை முறைத்துப் பார்க்க மயூரி “ நீ ஜப்பான்ல இருந்த அதான் உன்னை ஏன் டிஸ்டர்ப் பண்ணணும்னு “
“உன்னைப் பத்தின விஷயம்னா எனக்கு டிஸ்டர்ப் ஆகுமா மயூ“ என்று முகம் சிவக்கக் கேட்க மயூரி “ஜெய் நீ பக்கத்துல இல்லடா அதான் நீ வந்ததும் சொல்லிக்கலாம்னு“ “ஓ… நான் பக்கத்துல இல்லன்னு தான புதுசா வேற ஆளைப் பார்த்துட்ட“ என்று வார்த்தையை விட்டான். வார்த்தையை விட்ட பிறகே புத்தி வர “மயூரி.. அது…“ என்று தினறியபடி அவளைப் பார்க்க அவள் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. கோபப்படுவாள் என்று நினைத்த ஜெய்க்கு அவள் நிரும்மலமான முகத்தைப் பார்த்து பயம்தான் வந்தது. மயூரி கோபத்தில் கத்தினால்கூட அதை அடுத்த நிமிடம் மறந்து விடுவாள். ஆனால் இந்த அமைதி இது புதிது. அவள் என்ன செய்வாளோ என்று அவள் முகம் பார்க்க ஹோபாவில் சாய்ந்த மயூரி ஜெய்யைப் பார்த்து
“சரி நான் வேற ஆளைப் பிடிச்சதாவே இருக்கட்டும். அதுனால உனக்கு என்ன பிரச்சனை ஜெய்?“
“மயூ அது தெரியாம சொல்லிட்டேன் சாரி“ “மனசுல இருக்குறது தான வரும் ஜெய். ஆனா என்ன நினைச்சிட்டு அந்த வார்த்தையை சொன்னன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்“ “அது கோபத்துல சொன்னது டி எதுவும் நினைச்சி நான் சொல்லல“
“உண்மையாவா ஜெய்“ என்று ஜெய்யை உற்று பார்க்க அவள் பார்வையில் தடுமாறிய ஜெய் அவளை பார்ப்பதைத் தவிர்த்தபடி “ஆமா…மயூ“ என்று தலைகுனிந்த படியே சொன்னான் அதை கேட்ட மயூரி “ அன்னைக்கு லைட் ஆஃப் பண்ணி தூங்குனதுல இல்யூசன் வர ஸ்டார்ட் ஆகிருச்சி அதுல தான் கத்த ஆரம்பிச்சன் அப்போ வந்து முதல்ல ஹெல்ப் பண்ணது ஆர்யன் தான் அண்ட் உன் ரூம்ல க்கு போயும் இல்யூசன் ஸ்டாப் ஆகல அதான் அவர ஹெல்ப் பண்ண கேட்டன் என்னோட ஃப்ளாட்ல தான் இருக்காரு சோ என்ன கூட்டிட்டு போக ஹெல்ப் பண்ணாறு நானும் கோஞ்சம் நேரத்துல நார்மல் ஆகிட்டன் இத என் போன்ல சொல்லலனா நீயே எப்பவாது தான் இப்படி ஜாலியா ட்ரிப்னு போற அத ஏன் டிஸ்டர்ப் பண்ணணும்னு நினைச்சன்“ என்று ஜெய்யை பார்க்க அவன் மயூரியை பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டான்.
“இதோ பாரு ஜெய் நீ எனக்கு ஒரு நல்ல ஃபிரண்டு, நல்ல ரிலேஷன், நல்ல கார்டியன், நல்ல வெல்விஷ்சர் இப்படி நிறைய விதத்துல நான் உன்னை இப்படி தான் பாக்குறன் இதுக்கு முன்னாடி நீ என்ன எப்படி பாக்கறன்னு நான் யோசிச்சது இல்லை அன எனக்கு தெரிஞ்சாகனும் சொல்லு ஜெய் நீ என்னை எப்படி நீ பாக்குற ஜெய்?“ என்று மயூரி கேட்க அதற்கு ஜெய் திக்கி தினறாமல் தயங்காமல் உடனே பதில் சொன்னான் “நீ எனக்கு ஒரு நல்ல தோழி மயூ அதுக்கு மேல எதுவு இல்லை வேற எந்த இடத்துலயும் உன்ன என்னல பாக்க முடியாது நான் இப்படி டென்சன் ஆனத நினைச்சி என்னை தப்ப நினைக்காத மயூ என்ன பொருத்த வர நீ என் கிட்ட இருந்து எதுவும் மறைக்க குடாது நினைச்சன் அதான் இந்த கோபம் சாரி மயூ“
ஜெய் பேசியதைக் கேட்டு நிம்மதி ஆன மயூரி “ ஜெய் எல்லார் கிட்டயும் எல்லாத்தையும் சொல்லிட முடியாது எல்லோருக்கும் பிரைவசி ஒன்னு இருக்கும் இப்படி நீ இன்னும் சின்னப் பையன் மாதிரி பொய் சொன்னா உன் பேச்சு கா..ன்னு சொல்லிட்டு இருந்தா கடைசி வரை தனியா சாமியார தான் நீ இருக்கனும் . அதனால கொஞ்சம் பூஸ்ட் ஆர்லிக்ஸ் சாப்பிட்டு வளர்ர வழிய பாரு ஆள் மட்டும் வளர்ந்தா போதாது அறிவும் வளரனும் “ என்று அவன் தலையில் கொட்ட
“ அ… வலிக்குது எருமை “ என்று தலையைத் தேய்த்தபடி “ அப்போ மயூ உனக்கு பெர்சனல் ஸ்பேஸ் வேணும்னு சொல்றியா “ “ அட லூசு அப்போ உனக்கு இன்னும்மா புரியல அந்த ஸ்பேஸை உனக்கு நான் தரனும் தான் முதல்ல தனியா வீட்டைப் பார்த்து போனது அது கூட உனக்கு புரியல்லையா டா “ “ அப்போ நீ அதற்காகத்தான் வேற வீட்டுக்கு போனாயா…நான் கூட சொத்து சேர்க்க ஆரம்பிச்சிட்டியோ ன்னு நினச்சேன் “ என்று சொல்லி ஜெய் சிரிக்க மயூரி “ உன்னை வச்சிகிட்டு ஒன்னும் பண்ண முடியாது நீ இப்படி சிரிச்சிக்கிட்டே இரு நான் கிளம்புகிறேன் “ என்று மயூரி எழுந்திருக்க ஜெய்
“ என்ன வந்ததும் போற மயூ “ என்று அவனும் எழுந்திரிக்க “ டேய் டயர்டா இருக்குடா நைட் ஆவதற்குள்ள லைட்டா ஆவது தூங்கணும்டா ப்ளீஸ் புரிஞ்சிக்கோ” என்று நேரம் பார்க்க மணி நாலு என்று காட்டியது அதை பார்த்து தலையில் கை வைத்த மயூரி ஜெய்யை பார்த்து முறைத்து விட்டு “ டூ டேஸ் ஆபிஸ் கிட்ட நான் வர மாட்டேன் நீயே சமாளிச்சிக்கோ போடா “ என்று செல்ல போகும் அவளை பார்த்த ஜெய் “ மயூ சாரிடி…” என்று கத்தி ஜெய் கூற திரும்பிய மயூரி அவள் கைகளால் அந்த சாரியை கிழித்து கசக்கி குப்பையில் போடு என்பது போல சைகை செய்து விட்டு சென்றுவிட்டாள். இதன் பின் மயூரி வாழ்க்கை எப்போதும் போல தான் சென்றது அடிக்கடி வரும் கனவு கூட வருவது குறைந்து இருந்தது அதன் பதில் இல்யூஷன் மட்டும் இருளான இடத்தை பார்த்தால் தோன்றும் அப்படி தோன்றும் போதுலாம் டாக்டர் கொடுத்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வாள். இப்படியே இரு மாதங்கள் ஓடி விட்டது. அன்று மாலை எப்போதும் போல மயூரி மாணிக்கத்திடம் டீயை குடித்த மயூரி “ ஆங்கிள் உங்களுக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன் “ என்று புன்னகை முகமாக பேச “எனக்கு கிப்ட்டா எதுக்கு ம்மா “
“ எதுக்கா டேய்லி இப்படி ஸ்பெஷலா டீ போட்டு தரீங்களே அதுக்காகவே டேய்லி கொடுக்கலாம் கிப்ட். ஆனா டேய்லி என்னால தர முடியாத காரணத்தினால் இப்போ தரேன் “ என்று எழுந்து அவள் வீட்டுக்கு சென்று கையில் ஃப்ரேம் போட்டோவுடன் வந்தவள் அதை மாணிக்கம் பார்க்க திருப்ப, மாணிக்கம் மலர்ந்த முகத்துடன் பார்த்தார். மாணிக்கத்தை தத்ரூபமாக வரைந்திருந்தாள் மயூரி. அதை பார்த்து வியந்த மாணிக்கம் “ நீ ரொம்ப அருமையா வரையுர ம்மா! எவ்வளவு அழகாக இருக்கு “ என்று அதை திருப்பி திருப்பி பார்த்தவர் “ ஒரு நிமிஷம் ம்மா “ என்று உள்ளே சென்று அவர் போனை எடுத்து வந்து “ இதுல என்ன, இந்த படத்தோட சேர்த்து போட்டோ எடுத்து அந்த வாட்ஸ் ஆப்பில்ல போட்டு விடும்மா எல்லாரும் பார்க்கிற மாதிரி “ மயூரியும் போனை வாங்கி அவரை போட்டோ எடுத்து ஸ்டேட்டஸில் போட்டாள். பின் மாணிக்கம் அந்த படத்தை எடுத்து உள்ளே வைத்து வந்தவர், மயூரியிடம் “ உனக்கு நேரம் இருந்தா இதே மாதிரி ஒரு படம் வரைஞ்சி தரியா ம்மா? “ என்று கேட்க அதற்கு மயூரியும்
“ என்ன அங்கிள், இதுல என்ன கஷ்டம் இருக்கு? எப்படின்னு சொல்லுங்க வரஞ்சிறேன் “
“ அது ஆர்யன் அம்மா, நானு ஆரி, அப்பறம் என்னோட பொண்ணு, அவங்க பசங்க கிருபா தம்பின்னு எல்லாரும் இருக்க மாதிரி ஒரு படம் வரைஞ்சி தரியா ம்மா? “.
“ ஓ.. போமலியா வா அங்கிள் வரஞ்சிறலாமே ஆனா அதுக்கு எனக்கு எல்லார் ஃபோட்டோவும் வேனும்மே “
“ இந்த போன்ல இருக்கும் பாரு ம்மா எல்லார் ஃபோட்டோவும் “ என்று போனை நீட்ட மயுரியும் அதில் அனைவரது போட்டோவையும் எடுத்தபடி அனைத்து போட்டோவையும் பார்த்து கொண்டு இருக்க அதில் ஒரு போட்டோவில் ஆர்யன் மிக ஸ்டைலாக சர்ட் அணிந்து கண்ணாடி அணியாமல் ட்ரிம் செய்த தாடி மீசையுடன் முகத்தில் இருந்த மிகுந்த சிரிப்புடன் போஸ் கொடுத்து இருந்தான். அந்த படத்தை பார்த்து வாயை பிழந்த மயூரி மாணிக்கத்திடம் அதை காட்டி “ ஆங்கிள் உங்களுக்கு என்னோரு பையன் இருக்கான்னு சொல்லவே இல்லை “ என்று கண்களை விரித்து கேட்க அந்த படத்தை பார்த்து சோர்ந்தவராக மாணிக்கம் “ அது ஆர்யன் தான் ம்மா அவன் பழைய போட்டோ அது நான் ஞாபக அர்த்தமா வச்சிருக்கன் “ என்று அந்த போட்டோவை பார்த்து அவர் வருந்த மயூரி “ என்ன ஆச்சி அங்கிள் ஏன் இவ்வளவு ஃபீல் பண்றிங்க “ என்று மாணிக்கத்தை பார்க்க அதற்கு ஒரு பெரு மூச்சி ஒன்று விட்டவராக மாணிக்கம் “ என் பையன இப்படி பாத்து எத்தன வருசம் ஆகுது தெரியுமா ம்மா அப்போலாம் அவன் வீட்டுல இருந்தாளே வீடு கலகலன்னு இருக்கு எதவது குறும்புத்தனம் பண்ணிட்டே இருப்பான் ஆனா இப்போ “ என்று அந்த புகைபடத்தை வருடியவர் அவர் பாட்டுக்கு பேச தொடங்கினார்.“ஆர்யன் பாக்க என்ன மாதிரி இருந்தாளும் நிறம் சிரிப்பு எல்லாம் அவங்க அம்மா தான் அவனுக்கு அவங்க அம்மா ன்னா ரொம்ப பிடிக்கும் அவங்க அம்மாக்கு உதவனும்னே சமைக்கலாம் கத்துகிட்டான் அப்படி பட்ட பையன் அவன் ஆனா இப்போ எல்லாம் போச்சி அந்த விஷயம் மட்டும் நடக்காம இருந்துருந்தா …”