இரவு-2

ஜெய் சிசிடிவியை உற்றுப் பார்த்தபடி இருக்கையில் அமர்ந்து இருக்க, அப்போது அவன் போன் வைப்ரேட் ஆக, “யாருடா அது கரடி மாதிரி?” என்று எண்ணியபடி போனை எடுத்து காதில் வைத்தான்.

“ஜெய், ப்ரியா இருக்கியா?” என்று அவன் வைக்கில் பாஸ்கர் பேசினார். அதற்கு ஜெய்,

 “என்ன, ஜெய்ன்னு கூப்பிடாதீங்கன்னு சொல்லிருக்கேன்ல? அங்கிள், இலான்னு கூப்பிடுங்க” என்று கோபமாக பேச

அதை கேட்ட பாஸ்கர், “இவன் ஒருத்தன் வேற வேல இல்லாம ” என்று முனங்க, அது சரியாக கேட்காததால் ஜெய்,

“என்ன சொன்னீங்க அங்கிள்?” என்று கேட்க, அதற்கு அவர் சிரித்தபடி,

“ஒன்னும் இல்ல இலா” என்று சமாளித்தபடி, “இலா, ஃப்ரீயான்னு சொல்லு, கொஞ்சம் பேசணும்”

 “அதான் கால் பண்ணிட்டீங்களே, என்னன்னு சொல்லுங்க” என்று சலித்தபடி சேரில் சாய்ந்து, அந்த சிசிடிவியைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அதற்கு பாஸ்கர்,

 “உங்க தாத்தா கம்பெனி பத்தி பேசணும் இலா. எப்போ அந்த கம்பெனியை ஒழுங்கா பார்த்துக்க போற இலா? அந்த கம்பெனி பக்கம் நீ வந்து ஒன் மன்த் ஆகப் போகுது. அதோட ஷேர்ஸ் வேற மாசம் மாசம் குறைஞ்சிட்டே போகுது இலா” என்று அக்கறை உள்ளவராக அவர் கடிந்து கொள்ள. அதை புரிந்து கொண்டவனாக ஜெய்,

 “அங்கிள், டோன்ட் வொர்ரி. ஷேர்ஸ் ரொம்ப டவுன் ஆகாம பார்த்துக்கிறேன்” என்று சமாதானம் செய்ய,

பாஸ்கர், “அந்த கேமிங் கம்பெனிக்குப் போற அளவு கூட உங்க தாத்தா கம்பெனிக்குப் போக மாட்டிக்கிற. உங்க தாத்தா கம்பெனில ஒரு பாதி அளவு ப்ராஃபிட் தருமா அது? அதையே ஏன் இலா பிடிச்சிட்டு இருக்க?”

“அங்கிள் அந்த கேமிங் கம்பெனி சொந்தமா நான் உருவாக்குனது. ஆனா ஆர்.கே கம்பெனி அப்படி இல்லை  நீங்க வார்த்தைக்கு வார்த்தை சொன்ன மாதிரி அது எங்க தாத்தா கம்பெனி தான்., அதை தாத்தாவுக்காகத்தான் பார்த்துக் கிட்டு இருக்கேனே  தவிர வேறு எதற்காகவும் இல்லை. கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க  அங்கிள்.”

ஜெய் பேசியதைக் கேட்டுத் புரிந்துகொண்ட பாஸ்கர் பேச்சை மாற்றும் விதமாக, “ஆமா, நம்ம மயூ பாப்பா வேலைக்கு வந்துட்டாங்கள?” என்று பாஸ்கர் பேசியதில் சிரித்த ஜெய்,

“இதை மட்டும் உங்க பாப்பா கேட்டா உங்களை ஒரு வழி ஆக்கிடுவா.” அதற்குச் சிரித்த பாஸ்கர்,

“ஆமா, ஆமா, பாப்பா கிட்ட சொல்லிடாத  இலா . அப்புறம் என்னைத் தேடி வந்து திட்டுவா” என்று பயந்தவர் போலப் பேசியவர் திடீரென்று அமைதியாகிவிட்டு சிறிது நேரம் கழித்து,

“மயூ ஆஸ்பிட்டல் போனாலா இலா? டாக்டர் என்ன சொன்னாங்க? ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?” என்று குறள் கறகரக்க  பேசினார்

“போன அங்கிள், ஒரு டென் டேஸ் முன்னாடி நான் டாக்டர் கிட்ட போன் பண்ணிக் கேட்டேன். இம்ப்ரூவ்மென்ட் இருக்கான்னு. அதற்கு டாக்டர் இவள்தான் ட்ரை பண்ண மாட்டிக்கிறாள்னு சொல்றாங்க அங்கிள்” என்று உள்ளே போன குரலில் பேச, அதைக் கேட்டு வருந்திய பாஸ்கர்,

“ இதுல நம்மால ஒன்னும் பண்ண முடியாது இலா ? அவ வலி பெருசு. அவதான் எல்லாத்தையும் தாண்டி வரணும்” என்று பேசிவிட்டு வைத்துவிட்டார். போனை வைத்த ஜெய் மயூரி பற்றியே யோசித்தபடி சுவரைப் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது அங்கு வந்த மயூரி பொறுமையாக அவன் அருகே வந்து அவன் முகம் அருகே சென்று

“அங்கு என்ன தெரிகிறது?“ என்று வடிவேல் பாணியில் கேட்டாள். திடீரென்று கேட்ட சத்தத்தில் ஜெய் பயந்து பின்னோக்கி சாய, அந்த சேர் பேலன்ஸ் செய்ய முடியாமல் சேரோடு சேர்ந்து ஜெய்யும் கீழே மல்லாக்க விழுந்து கிடந்தான்.

அதைப் பார்த்து வயிற்றைப் பிடித்தபடி மயூரி சிரிப்பதைப் பார்த்த ஜெய் வேகமாக எழுந்து மயூரியை அடிக்கப் போக, அதற்குள் மயூரி “ஜெய், வேணாம். ஆபிஸ் டிசென்ட் மெயின்டெயின் பண்ணனும்” என்று சொல்ல, அதைக் கேட்டு மயூரியை அடிக்க வந்த கையை ஏதோ முனங்கியபடி இறக்கிய ஜெய், மூச்சை இழுத்துவிட்டபடி

“ஏன் மீட்டிங் வரல மயூ?” என்று முகத்தைச் சீரியஸாக வைத்த படி கேட்க ,

 மயூரி “இதோ பாரு ஜெய், நம்ம இந்த கம்பெனி ஸ்டார்ட் பண்ணும்போதே என்ன சொன்னேன்? நான் அனிமேஷன் டிபார்ட்மென்ட் மட்டும்தான் பார்ப்பேன்னு. மத்த டீலிங்லாம் நீ தான் பார்த்துக்கோன்னு சொன்னேன்தானே? அப்புறம் என்ன? அதுவும் இல்லாம இன்னைக்கு நடந்த மீட்டிங்க்கும் என் டிபார்ட்மென்ட்க்கும் சம்பந்தமே இல்லை. அப்புறம் எதுக்கு நான் வரணும்?” என்று சரியாகப் பேச, அதற்கு மேல் என்ன பேச என்று தெரியாமல் ஜெய்

“அட்லீஸ்ட் நைட் டின்னர் ஆவது என் கூட சாப்பிடலாம்ல? அதை விட்டுட்டு வீட்டுலயே சாப்பிட்டு வர” என்று முகத்தைப் பாவமாக வைத்துக்கொள்ள,

“அவ்வளவு ஃபீலிங்கா இருந்தா நீ ஏன் மிட் நைட் டின்னர் என் கூட உட்கார்ந்து சாப்பிடக் கூடாது?” என்று மயூரி ஒற்றைப் புருவத்தை உயர்த்திப் பேச, அதில் திணறிய ஜெய் “அது மயூ, வந்து நைட் முழிக்க முடியுது கஷ்டமா இருக்கும்” என்று பல்லைக் காட்ட, அதைக் கேட்டு நக்கலாகச் சிரித்த மயூரி “ஆமா, சரக்கு போட்டு அவ்வளவு நேரம் முழிக்க முடியாதுதான்”

“மயூ இப்போல்லாம் நான் குடிக்கிறத குறைச்சிட்டேன் டி ட்ரஸ்ட் மீ “ என்று அவன் கண்களை சுருக்கி கெஞ்ச

“ குறைக்கத் தான செஞ்சிருக்க முழுசா நிறுத்தலல “ என்று சொல்லிவிட்டு அவள் டிப்பார்ட்மென்ட்  நோக்கிச் சென்றவள் கதவுக் கிட்டே சென்று இவனைத் திரும்பிப் பார்த்து அவள் பேகில் இருந்து பிஸ்கட் பாக்சைத் தூக்கி ஜெய்யை நோக்கி போட அதை கரைக்டாக ஜெய் பிடித்து விட்டு அவளை பார்க்க , மயூரி

“ பிஸ்கட் இருக்கு இன்னைக்காவது குடிக்காம இதைச் சாப்பிடு “ என்று சொல்லிவிட்டுச் செல்பவளைப் பார்த்து சிரித்தபடி அந்த பாக்சை திறந்து பிஸ்கட் ஒன்று எடுத்துச் சாப்பிட்டபடி “ சோ ஸ்வீட் “ என்று மயூரி சென்ற திசையைப் பார்த்து சொன்னான்.  தன் டீமுக்கு வந்து அனைவரிடமும் வேலையைப் பிரித்துக் கொடுத்த மயூரி அவள் சேரில் அமர்ந்து வரையத் தொடங்கியவள் அந்த வேலையில் மூழ்கிப் போனாள். காலை ஆறு மணி அளவில் தன் டீமில் இருந்தவர்கள் அனுப்பி  வைத்து விட்டு பகல் நேர டீம் மெம்பர்கள் வந்த பிறகே இவள் வீடு செல்ல கார் நோக்கி சென்றாள்.

காரில் அப்பார்ட்மென்ட் உள்ளே நுழையும்போது இவள் பிளாக் முன் ஒரு பெரிய லாரி நிறைய பொருட்களுடன் நிற்க அதை என்ன என்று பார்த்தபடி அவள் வண்டியை பார்க் செய்துவிட்டு லிஃப்ட் உள்ளே ஏறினாள்.

 அவளுடன் இரு நபர்கள் லிஃப்டில் ஏறினர் ஒருவன் சிறிய பையனாக இருக்க அவன் கையில் ஒரு பெட்டி இருந்தது அவன் அருகில் இருந்தவன் கையில் இரண்டு  பெரிய பெட்டி இருக்க அதை அசால்டாகத் தூக்கியவனைப் பார்த்து யார்டா அத் என்று நினைத்தபடி  அவனை லிஃப்ட் கதவில் தெரியும் வின்பம்  வழியாகப் பார்த்தால்.

அவளை விட இரண்டு அடி உயரம் அதிகமாக இருந்தான். ஆறு அடிக்கு அதிகமாக இருப்பான் போல என்று எண்ணியபடி அவன் முகம் பார்க்க, அவன் முகத்தைத் தாடி மீசைக்குள் தேட வேண்டும் போல முகத்தில் மினி காடு ஒன்றை வளர்த்து வைத்திருந்தான். இதில் கண்ணாடி வேறு அணிந்திருந்தான் அதனுடன் கையில் ஆம்ஸ் என்று மினி பீம் போல் இருந்தவனை  பார்த்த மயூரி மனதில் தோன்றியது இதுவே “ ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன் வெயிட்டா “ என்று சூர்யா டயலாக் தான் நினைவு வந்தது .

அதை நினைத்ததும்  தலையை உலுக்கிக் கோண்டு அவனை பார்க்க அதற்குள்  அவளின்  ஃப்ளோர் வந்துவிட்டது. அந்த ஃப்ளோரில்தான் இவர்களும் இறங்கி, இவளின் வீட்டு எதிரே இருக்கும் வீட்டுக்குள் சென்றனர். அதைப் பார்த்தபடி, “புதுசா வந்திருக்காங்க போல” என்று நினைத்தபடி உள்ளே சென்றாள்.

உள்ளே சென்ற மயூரி அவள் அறை சென்று இலகுவான உடைக்கு மாறிய பின், அவள் ரூம் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு சூரிய ஒளியை உள்ளே வரும்படி செய்துவிட்டு, ஏசியை நன்றாகக் குறைத்து வைத்துவிட்டு லைட்டைப் போட்டுப் படுத்து உறங்க சென்றாள் மயூரி.