இரவு 17

மயூரி மயக்கத்தில் இருந்து எழுந்து பொறுமையாக கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் முன் ஆர்யன் தான் நின்று கொண்டிருந்தான். ஆர்யனைப் பார்த்த மயூரியின் கண்களுக்கு அவன் முகத்திற்கு பதிலாக அந்தக் கருப்புப் புகை உருவமே தெரிய, பயந்து சோபாவில் எழுந்து அமர்ந்தவள் அவள் முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டு பயந்து நடுங்கத் தொடங்கிவிட்டாள். மயூரியின் பார்வையைப் பார்த்த ஆர்யன் ஸ்தம்பித்து நின்றுவிட்டான். என்ன பார்வை அது? ஏதோ அருவருப்பைப் பார்க்கும் பார்வை. என்னைப் பார்த்து அருவருக்கிறாளா மயூரி? என்று அதிர்ந்து போய் நிற்க, அருகில் நின்று கொண்டிருந்த வாட்ச்மேன் “மேம்… மேம்… என்ன ஆச்சு மேம்? என்ன பண்ணுது?” என்று அருகில் வர, அவனைப் பார்த்தும் பயந்து சோபாவின் ஓரம் ஒடுங்கி அமர்ந்தாள்.

அதைப் பார்த்த ஆர்யனுக்கு அப்போதுதான் புரிந்தது மயூரி இன்னும் பயத்தை விட்டு வெளியே வரவில்லை என்பதை. அதைப் புரிந்த அடுத்த நொடி ஆர்யன் அந்த வாட்ச்மேனைப் பார்த்து “நீங்க போங்க நான் பார்த்துக்கிறேன்” என்று சொல்ல அதை கேட்ட அவர் அங்கேயே தயங்கி “சார்…” என்று நிற்க, ஆர்யன் “நான் பார்த்துக்கிறேன் பயப்படாம போங்க” என்று அவரை அனுப்பிவிட்டு. ஆர்யன் மயூரியைப் பார்க்க அவள் உடல் நடுங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து அவள் அருகில் சென்று ஒற்றைக் காலை மடக்கி முட்டி போட்டவன் சோபாவை பிடித்தபடி மென்மையாக “மயூரி… மயூரி… பயப்படாத நான் ஆர்யன் ம்மா உன் பக்கத்துலதான் இருக்கேன் பயப்படாத மயூரி” என்ற ஆர்யனின் குரல் கேட்ட மயூரி மெதுவாக தலையை நிமிர்த்திப் பார்த்தாள். கண்களில் இருந்து தண்ணீர் வந்தபடி இருக்க, முகம் கசங்கி சிவந்து இருந்தது .

ஆர்யனைப் பார்த்து அவன் இடது கையைப் பிடித்த மயூரி “எனக்குப் பயமா இருக்கு ஆரி… என்னை வெளிச்சமா இருக்கிற இடத்திற்குக் கூட்டிட்டுப் போறியா ப்ளீஸ்….” என்று குரல் நடுங்க அழுதபடி கேட்க, ஆர்யன் அந்த ரூமை ஒரு முறை சுற்றிப் பார்த்தான். அனைத்து லைட்டும் போட்டு வெளிச்சமாக இருந்தது. அதைப் பார்த்துவிட்டு மயூரியைப் பார்க்க, அவள் “என்னை இங்கிருந்து அழைத்துச் சென்றுவிடு” என்று கெஞ்சும் விழியில் பார்த்தாள், ஆர்யன் உடனே எழுந்து நின்று  “சரி வா மயூரி, போலாம்” என்று மயூரியை எழுப்ப, அவள் அந்த ரூமைச் சுற்றிப் பார்த்தபடி பயந்து எழுந்தவள் கண்களில் அதே உருவம் தான் தெரிந்தது. அதைப் பார்த்துப் பயந்தவள் ஆர்யனின் கைகளில் முகத்தைப் புதைத்தபடி அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள். அவளைப் பார்க்க, இருட்டைப் பார்த்துப் பயந்து தந்தையிடம் ஒதுங்கும் குழந்தையாகத்தான் இவன் கண்களுக்குத் மயூரி தெரிந்தாள். மயூரியைக் கூட்டிக்கொண்டு இவன் வெளியே செல்ல, மயூரி ஆர்யனை விட்டு அகலவும் இல்லை, கண்களைத் திறந்து எதையும் பார்க்கவும் இல்லை. ஆர்யன் தான் மயூரியின் பேகையும் எடுத்துக்கொண்டு சென்றான். அங்கு இருந்த அனைவரும் இவர்களையே பார்க்க ஆர்யன் எதையும் கவனிக்காமல் அந்த வாட்ச்மேனிடம் சென்று “ மேம் எங்க வீட்டு எதிர்ல தான் இருக்காங்க நான் கூட்டிட்டு போய்க்கிறேன் “ என்று சொல்லிவிட்டு பார்க்கிங்கில் மயூரி கார் அருகே சென்று நின்றவனுக்கு கார் ஓட்டத் தெரியாது.

அந்த காரை வெறித்தபடி ஆர்யன் “இப்போ எங்கே போக? எப்படி இவளைக் கூட்டிட்டுப் போக?” என்று அவன் தலையைக் கோதியவன் மெல்ல “முதல்ல கார் ஓட்டக் கத்துக்கணும் ” என்று முணுமுணுத்தவன் மயூரியைப் பார்க்க அவள் அதே நிலையில் அவன் தோளில் முகம் புதைத்தபடியே இருக்க, அவளை லேசாக உலுக்கிய ஆர்யன் “என் பைக்ல போலாமா மயூரி?” என்று அவள் அருகே சாய்ந்து கேட்க, அதற்கு மயூரியிடம் இருந்து “ம்ம்ம்” என்ற சத்தம் மட்டுமே மிக மெதுவாக வந்தது. உடனே அவளை அழைத்துக்கொண்டு அவன் பைக் அருகே சென்றவன், மயூரியின் கைகளைப் பிடித்து அவளை அவனை விட்டு விலக்க, அவள் கண்களை இறுக மூடியபடி உடல் நடுங்க நின்றாள். அவளிடம் “பைக்ல ஏறு மயூரி” என்று சொல்லவும், தலையசைத்தபடி அவன் கையை விட்டுவிட்டு அவன் தோளைப் பிடித்து ஏறி அமர்ந்தவள் மீண்டும் அவன் முதுகில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

மயூரி அமர்ந்ததும் வண்டியை ஓட்டிய ஆர்யனுக்கு ஒன்றும் புரியவில்லை. இவளை எங்கு அழைத்துச் செல்ல என்று எதுவும் தெரியாமல் இவன் பாட்டுக்கு வண்டி ஓட்டியபடி இருந்தான். இங்கே மயூரி கண்களுக்குள் அதே உருவம் மீண்டும் மீண்டும் தென்பட்டு பயமுறுத்த ஆர்யன் சட்டையை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள். அதுவும் இன்றி அவளின் உடலில் புழுக்கள் ஊர்ந்து கொண்டிருப்பது போலவும் தோன்ற அவள் உடல் அருவருப்பில் நடுங்கச் செய்ய இவை அனைத்தையும் உணர்ந்து கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்த ஆர்யனும் கலங்கித்தான் போனான். “எதுக்கு இவ்வளவு பயம்? இப்படி பயப்படுற அளவு என்ன பார்த்த?” என்று தலை முழுக்க மயூரியே ஆட்சி புரிய சென்னையையே சுற்றிச் சுற்றி வந்தான். எங்கே போகிறான் என்று கூட அறியாமல் மயூரியின் வெளிச்சத்தை தேடி அலைந்து கொண்டு இருந்தான் ஆர்யன் .

 திடீரென்று வண்டி நின்றது. மயூரி அப்போதும் கண்களைத் திறக்கவில்லை. அவள் காதில் ஓரிரு வண்டிகள் சத்தம் மட்டும் கேட்டது. அதை உற்று கவனித்தவள் “ஏன் வண்டியை நிறுத்தி இருக்காங்க? ஒருவேளை அப்பார்ட்மெண்ட் வந்துருச்சோ?” என்று எண்ணியவளின் காதில் “கண்ணைத் திற மயூரி” என்று மெதுவாகச் சொல்ல மயூரி அவன் முதுகிலே முகம் புதைத்தபடி மறுப்பாகத் தலையசைக்க ஆர்யன் முகத்தில் சிறு புன்னகை தோன்றியது. பின் மீண்டும் மயூரியிடம் “வெளிச்சமா இருக்கிற இடத்தைப் பார்க்கணும்னு சொன்னியே, பார்க்க வேணாமா மயூரி?” என்று சொல்ல அதைக் கேட்டு மெதுவாக அவன் மீதிலிருந்து முகத்தை எடுத்தவள் கண்களைத் திறந்து பார்க்க ஆதவன் தன் கதிர்களை மெல்ல வானில் பரவவிட்டபடி உதயமாகிக் கொண்டிருந்தார்.

எப்போதும் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கும் மயூரி இன்று முதல் முறை அதன் உதயத்தைப் பார்க்கிறாள். இவர்கள் வண்டி பாலத்தின் மேலே நின்று கொண்டிருக்க, பாலத்தின் கீழே பெரிய ஏரி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அதன் மத்தியில் சூரியன் உதயமாகிக்கொண்டிருக்க, அந்தக் காட்சியைப் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. அதன் அழகில் மெய்மறந்தவளாக மயூரி கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க, சூரிய ஒளி கண்களைக் கூசத் தொடங்கியதும் தலையை ஆர்யனை நோக்கித் திருப்ப, ஆர்யன் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். சூரிய ஒளி ஆர்யன் முகம் பட்டு அவனின் கண்கள் தங்கமென மின்ன, அதை அசையாப் பார்வையுடன் பார்க்க, அவள் பார்வையைப் பார்த்த ஆர்யன் கண்கள் சிரிக்க, “காபி குடிக்கலாமா மயூரி?” என்று கேட்டான். ஆர்யன் குரல் கேட்ட பிறகே மயூரி தெளிந்தவளாகத் சம்மந்தமாக தலை அசைத்தாள்.

பின் அங்கிருந்து பக்கத்தில் இருந்த டீ கடையில் வண்டியை நிறுத்திய ஆர்யன் மயூரியிடம் “காப்பியா இல்லை டீயா” என்று கேட்க, அதற்கு அவள் “பால் போதும்” என்று தயங்கியபடியே பதில் சொன்னாள். அதற்கு ஆர்யன் “டீ காப்பி குடிக்க மாட்டியா என்ன” என்று கேட்க, அதற்கு ஆமாமாம் என்பது போல தலையை ஆட்டினாள். இவனும் சென்று மயூரிக்கு பால், இவனுக்கு காப்பி என்று வாங்கி வர, அதுவரை மயூரி கண்கள் அலைபாயச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தாள். என்ன என்று தெரியாத பயம் ஒன்று அழுத்தத் தொடங்கியது. ஆண்களைப் பார்த்தாலே பயந்து பார்த்தாள். அதற்குக் காரணமும் இவளுக்குத் தெரியவில்லை. எதற்கு என்று தெரியாமலே நடுங்கிக்கொண்டு இருந்தவளிடம் ஆர்யன் “மயூரி பால்” என்று அவளைக் கூப்பிட, அவள் உடல் பயத்தில் தூக்கிப்போட, திரும்பிப் பார்த்தவள் அது ஆர்யன் என்றவுடனேதான் நிம்மதி அடைந்து பாலை வாங்கிக் குடிக்கத் தொடங்கினாள். ஆர்யனும் அவளை வெகு நேரமாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். அங்கு கடந்து செல்லும் ஆண்களை எல்லாம் பார்த்து பயப்பட்டுக்கொண்டு இருப்பதை இதை பார்த்து அவனுக்குத் தோன்றியது, இதுவே “மயூரிக்கு பெரிதாக ஏதோ நடந்திருக்கிறது. அதான் இப்படி பயப்படுகிறாள்” என்று நினைத்தவன் மறுநொடியே “இந்த விஷயத்தில் இருந்து இவளை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடு கடவுளே” என்று பொதுவாக அனைத்து தெய்வங்களிடமும் வேண்டிக்கொண்டவனாக மயூரியையே பார்த்தான்.

இங்கு மயூரியோ “என்ன நம்மளை இப்படி பார்க்கிறாங்க, அப்புறம் பார்க்காமல் என்ன பண்ணுவாங்க, நீ பண்ண வேலை அப்படி உன்ன பாத்து பயப்படாம பாக்குறறேன்னு சந்தோஷ படு மயூ” என்று தலையைத் திருப்பிச் சுற்றிப் பார்ப்பது போலத் திரும்பிக் கொண்டாள். மயூரி திரும்பியதும் தான் ஆர்யனுக்கு அவன் அவளையே பார்ப்பது புரிய “பிச்…” என்று கண்களை மூடித் திறந்தவன் பார்வையை மாற்றிக் கொண்டான். பின் இருவரும் அங்கிருந்து கிளம்பினர். ஆர்யன் வீடு செல்லும் வழியில் பார்க் ஒன்றைப் பார்க்க அங்கு வண்டியை நிறுத்தி மயூரியிடம் திரும்பி “இங்கு உட்கார்ந்துவிட்டுப் போலாமா?” என்று கேட்க மயூரி “ம்ம்ம்….” என்று தலையை ஆட்டி கீழே இறங்கினாள்.

 இன்னும் மயூரி முழுதாக இயல்புக்கு வரவில்லை. அவளை இப்படியே அவள் வீட்டில் தனியாக விடவும் ஆர்யனுக்கு மனம் இல்லை. அதனாலேயே இங்கு உட்கார்ந்து செல்வோம் என்று சொன்னது. இருவரும் ஒரு கல் பெஞ்சில் அமர்ந்திருக்க அந்தப் பார்க்கில் ஒன்று இரண்டு பேர் நடந்து கொண்டிருக்க அதைப் பார்த்தபடி இருவரும் இருந்தனர். அதில் ஒரு சிறுவன் அவன் தந்தையுடன் நடக்க வந்திருந்தான். அவன் அழகாக அவன் தந்தையின் கையைப் பிடித்தபடி ஏதோ கைகாட்டி பேசிக்கொண்டு சென்றான். அதைப் பார்த்த மயூரிக்குப் புன்னகை அரும்ப லேசாக இதழ் விரிய சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மயூரியின் முகத்தில் தோன்றிய சிரிப்பைப் பார்த்த ஆதி, நிம்மதியானவனாக “மயூரி…, இப்போ நீங்க ஓகேவா?” என்று கேட்க, அதற்கு அவள் ஆம் என்பது போல தலையசைத்துவிட்டு, ஆர்யனைப் பார்த்து “தாங்க்ஸ் ஆர்யன், டுடே நீங்க இல்லைன்னா என்ன பண்ணிருப்பேன்னு தெரியல” என்று சிரிக்க, அதற்கு ஆர்யன் “சாரி மயூரி” என்று மன்னிப்பு கேட்க, அதை புரியாமல் பார்த்த மயூரி “நீங்க ஏன் சாரி கேட்கணும்?” என்று தலை சாய்த்துக் கேட்க, ஆர்யன் “நான் தான் லைட் ஆஃப் பண்ணேன், நீங்க தூங்கிட்டு இருந்தீங்க, அதான் நல்லா தூங்கட்டுமேன்னு…” என்று இழுத்தவனாக அவன் புருவத்தை இடது கைகளால் தேய்க்க, மயூரி “அது பரவாயில்லை, நீங்க தெரியாம தானே பண்ணீங்க ஆர்யன், உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு இருட்டுனா பயம்னு? தட்ஸ் ஓகே ஆர்யன்.”

“இருந்தாலும் சாரி மயூரி” என்றவன் எழுந்து நின்று மயூரியிடம் திரும்பி “ஒரு வாக் போலாமா?” என்று கேட்க, அவளும் எழுந்து கொண்டாள். காலைப் பனி லேசாக விலக, அந்தக் குளிரை ரசித்தபடி இருவரும் அந்தப் பார்க்கைச் சுற்றி நடந்தனர். ஆர்யன் மயூரியைப் பார்த்து “உங்களுக்கு இருட்டுனா பயம் தானே? அப்புறம் எதுக்கு நைட் ஷிஃப்ட் போறீங்க? டே ஷிஃப்ட்டே வொர்க் போலாமே” என்று கேட்க, அதற்கு மயூரி விரல்களுக்குச் சுடக்கு எடுத்தவளாக “அது வந்து ஆரியா…” என்று இழுக்க, ஆர்யன் “இல்லை, கஷ்டமா இருந்தா சொல்ல வேணாம் மயூரி” என்று மயூரி முகம் பார்க்க, அதில் குழப்பமே எஞ்சி இருந்தது.

ஆர்யன் சொன்னதைக் கேட்ட மயூரி, “அது ஆர்யன், என்னால நைட் தூங்க முடியாது. எனக்கு இருட்டுனா பயம் இல்லை. இருட்டில தூங்க தான் பயம். அதுதான் என் பிரச்சனை,” என்று அவள் சொன்னதைப் புரியாமல் பார்த்த ஆர்யன், “சரி, அப்போ நைட் லைட் ஆன் பண்ணி வச்சிட்டு தூங்கலாமே?”

 “நான் அதை ட்ரை பண்ணியிருக்க மாட்டேன்னு நினைக்கிறீங்களா, ஆர்யன்?” என்று முறைத்தபடி கேட்டாள். அதற்கு ஆர்யன், “இல்லை மயூரி, எனக்குத் தோனுனதை சொன்னேன்.” “நான் நைட் தூங்க ட்ரை பண்ணியிருக்கிறேன் ஆர்யன். அப்போல்லாம் ஒரு டென் டு ட்வென்டி மினிட்ஸ் தான் தூங்க முடியும் அப்பறும் மூச்சுத் திணறி எழுந்துருவேன். எதுக்கு பயப்படுறேன்னு தெரிஞ்ச கூட அதிலிருந்து வெளியே வர ட்ரை பண்ணலாம். ஆனா எதுக்குன்னே தெரியாம பயப்படுறது இருக்கே, அது கொடுமை. அதைப்பத்தி யோசிச்சி யோசிச்சி மென்டல் ஆகிவிடுவேன் போல இருக்கும்,” என்று தலையைப் பிடித்த மயூரியை அதிர்ந்து பார்த்தான் ஆர்யன்.

அவன் பார்வையை பார்த்து மயூரி