மயூரி கையில் சாக்லேட்டுடன் ஓடி லலிதாவிடம் சென்றவள் லலிதாவை கட்டியணைத்தபடி “லட்சுமம்மா, இந்த கங்கம்மா எனக்கு சாக்லேட் வாங்கி வந்திருக்காங்க பாருங்களேன் எவ்வளவு பெருசா இருக்கு” என்று லலிதாவை அணைத்தபடி அவளிடம் காட்ட, அதைப் பார்த்த லலிதா அதை வாங்கிப் பிரித்துக் மயூரியிடம் கொடுத்தவள்,
“கங்கா வந்துட்டாளா? லேட் ஆகும்னு சொன்னாளே. சரி மயூ, நீ இதைச் சாப்பிட்டு இங்கேயே இரு. நான் போய்க் கங்காகிட்ட பேசிட்டு வரேன்” என்று செல்லப் போக,
மயூரி “லட்சுமம்மா” என்று அவள் கையைப் பிடித்து, “அது இந்த கங்கம்மா மட்டும் அடிக்கடி வெளிய போயிட்டு வராங்க. கடைக்குப் போறாங்க. சினிமா போறாங்க ஏன் உங்களையும் என்னையும் மட்டும் அனுப்ப மாட்டிக்கிறாங்க எங்கையும்? நம்மையும் விட்டா கங்கம்மா கூடப் போயிட்டு வரலாம்ல” என்று லலிதாவைப் பார்க்க,
லலிதா அவள் அருகே முட்டி போட்டு அமர்ந்து அவள் கன்னம் பற்றி, “கங்கம்மாக்கு யாரும் இல்லை. அம்மா இல்லை, அப்பா இல்லை, வீடுன்னு எதுவும் இல்லை. ஆனா நமக்கு. வீடு இருக்கு. குடும்பம் இருக்கு நமக்குன்னு வெளிய யாராவது இருப்பாங்களா? அதான் இவங்க விட மாட்டாங்க”
அதைக் கேட்டு முழித்த மயூரி, “அப்போ வீடு இருந்தா விட மாட்டாங்களா லட்சுமம்மா?” என்று சோகமாகக் கேட்க, அவளை அணைத்துக்கொண்ட லலிதா,
“வீடு இருந்தா நம்ம அங்கே போயிடுவோம்ல ம்மா? அதான் நம்மல வெளிய விட மாட்டாங்க” என்று சொல்லி மௌனமாக கண்ணீர் சிந்த, அது மயூரியின் தோளை நனைத்தது.
அப்படியே மயூரி எழுந்து அமர்ந்தாள். அவள் கண்ணிலும் கண்ணீர். அதைத் துடைத்தவள் அருகில் இருந்த டேபிளிலிருந்து மாத்திரை எடுத்துப் போட்டவளாக, “அப்போ லட்சுமம்மாவுக்கும் வீடு குடும்பம் இருந்துச்சா? அப்புறம் எப்படி அங்க மாட்டிருப்பாங்க?” என்று எவ்வளவு யோசித்தும் நினைவு வராமல் போக, மயூரி, “எப்படியாவது உங்களைக் கண்டுபிடிச்சி உங்க ஃபேமிலியோட நான் சேர்த்து வைக்கிறேன் லட்சுமம்மா” என்று உறுதி கொண்டவளாக எழுந்து பாத்ரூம் சென்று முகம் கழுவி வந்தவள் கிச்சன் சென்று பால் குடித்துவிட்டு வீட்டு வேலை சிலது செய்து முடித்துவிட்டு குளித்து எதிர்வீட்டுக்குச் சென்றாள்.
அங்கே மாணிக்கம் டிவி பார்த்துக்கொண்டு இருந்தவர் மயூரியைப் பார்த்துவிட்டு, “வாம்மா…” என்று சிரித்த முகமாக அழைத்து அவளுக்கு சாதம், சாம்பார், பொரியல் என்று உணவு கொடுத்து உண்ண வைத்துவிட்டு வேலைக்கு அனுப்பி வைத்தார். மாணிக்கம் ஸ்ட்ரிக்ட் ஆகச் சொல்லிவிட்டார். இனிமேல் வேலை செல்லும் நாட்களில் உணவு அவரிடம் தான் உண்ண வேண்டும் என்று. அதை மறுத்து மயூரி எவ்வளவு பேசியும் மாணிக்கம் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆர்யன் சொன்னபடி மாணிக்கம் மயூரிக்குத் தந்தையாக தான் ஆகி போனார். அவளும் அவரை அப்படியே பார்க்க, இருவரின் பிணைப்பும் உறுதியாகிக்கொண்டேதான் சென்றது.
மயூரி காரில் ஏறி கம்பெனியை நோக்கிச் சென்று கொண்டிருந்தவளுக்கு ஜெய்யிடம் இருந்து போன் வர, அதைப் பார்த்தவள் “இப்போவாச்சி என் ஞாபகம் வந்துச்சே இவனுக்கு” என்று காலை அட்டென்ட் செய்து “சொல்லுங்க சார், ரொம்ப பிஸியா இருக்கீங்க போல” என்று நக்கலாகப் பேச, அதற்கு ஜெய்
“மயூ… அப்படி இல்லடி, இங்க வந்ததும் வந்துட்டோம், அப்படியே சுத்திப் பார்த்துடலாம்னு பார்த்தேன்” என்று குரல் மெலிந்து வர, உடனே மயூரி
“ச்சீ எருமை! ஃபீல் பண்ணாத. நான் சும்மாதான் அப்படி பேசினேன். மூஞ்ச தூக்கி வைக்காத சரியா, ஆமா எப்போ ரிட்டர்ன் நீ?”
“இன்னும் த்ரீ டேஸ் இங்கதான் ஸ்டே மயூரி…” என்று இளிக்க, மயூரி “ஒழுங்கா த்ரீ டேஸ்ல வந்துரு. அதுக்கு மேல என்னால முடியாது” “கண்டிப்பா வந்துருவேன் மயூ. ஏதாவதுனா கால் பண்ணு. பாய்…” என்று வைத்துவிட்டான்.
மயூரியும் கம்பெனியை அடைந்துவிட உள்ளே சென்றாள். அங்கே இவள் டீமின் இரு ஷிஃப்ட் மெம்பர்கள் அனைவரும் ஒன்றாக ஏதோ பரபரப்பாக நின்று பார்த்து கொண்டிருக்க, அங்கு வந்த மயூரி
“ஹாய் காய்ஸ், என்ன அதிசயம் மார்னிங் ஷிஃப்ட் மெம்பர்ஸ் என்னும் கிளம்பாம இருக்கிங்க” என்று அவர்களைப் பார்க்க, அங்கு இருந்த அனைவரின் முகமும் பதட்டத்துடன் இருக்க, மயூரி உடனே ஏதோ பிரச்சனை என்று புரிந்துகொண்டவளாக
“என்ன ஆச்சு? என்ன பிரச்சனை?” என்று அருகில் செல்ல, மீலா சிஸ்டம் முன் அமர்ந்தபடி “மேம், நம்ம ரெடி பண்ணிட்டு இருந்த ஃபைனல் சாப்டர் ஃபைல் சிஸ்டம் இஷ்யூல டெலிட் ஆகிடுச்சு மேம்” என்று தடுமாற்றத்துடன் சொல்லி முடிக்க அதைக் கேட்ட மயூரி சாதாரணமாக “அதோட டெமோ காப்பி இருக்குல்ல? அதை மாடிஃபை பண்ணிக்கலாம். நோ இஷ்யூஸ்” என்று கூலாக சொல்ல
அதற்கு மீலா “ அது மேம் டேட்டாவும் சேம் சிஸ்டத்தில் தான் ஸ்டோர் பண்ணி வச்சிருக்காங்க. நம்ம டீம் ஐடியில ஸ்டோர் பண்ணவில்லை. சோ அதுவும் போய்டுச்சி “ இதை கேட்டு கோபமான மயூரி
“ என்ன கேர்லெஸ்ஸா சொல்லிட்டு இருக்கீங்க மீலா? நம்ம டீம் ஐடியில ஸ்டோர் பண்ணணும்னு றது பேசிக். அதுகூட தெரியாம உங்களை…. இந்த ஃபைலை நம்ம கோடிங் டீம்க்கு என்னும் ஒன்டேள சப்மிட் பண்ணணும் நீங்க என்ன பண்ணி வச்சிருக்காங்க . பிச் உங்களை “ என்று வேகமாக டேக் டீமில் இருந்து ஒருவரை அழைத்து ஃபைலை திரும்பி எடுக்க முயல அதுவும் பயன் இல்லாமல் போனது.
மயூரி கோபத்தின் உச்சிக்கே சென்றவள் மீலா மற்றும் பகல் வேலை பார்ப்பவர்களை நன்றாக திட்டிவிட்டாள். அதை அந்த ஃப்ளோரில் இருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தபடி அவர்களுக்குள் பேச அதை பார்த்த பின்பே அமைதியானாள். மயூரி கோபம் தணிய கண்களை மூடி ஐந்து நிமிடம் அமர்ந்தவள் பின் கண்களை திறந்து அங்கு இருந்த அனைவரையும் பார்த்து “ வேற வழி இல்லை. 48 ஹவர்ஸ்க்குள் நம்ம அதை திருப்பி வரஞ்சிதான் ஆகணும் “ அதை கேட்டு அனைவரும் எப்படி முடியும் என்பது போல பார்த்தனர்.
ஏன் என்றால் ஒரு சாப்டர் முடிக்க ஒரு வாரம் அல்லது அதற்கு மேலும் நேரம் எடுக்கும். அதை எப்படி இவ்வளவு சீக்கிரமாக முடிக்க முடியும் என்று பார்க்க மயூரி மார்னிங் ஷிப்ட் மெம்பர்ஸை பார்த்து “ இங்க பாருங்க இந்த ப்ராப்ளம்க்கு மெயின் ரீசன் நீங்க தான். சோ அதை சால்வ் பண்ண ஹெல்ப் பண்ண போறதும் நீங்கதான் “ என்று அவர்களை பார்த்து சிரித்த மயூரி அனைவரையும் சேர்த்து அந்த சாப்டரை கிரியேட் பண்ண வைத்தாள். டே ஷிப்ட் மெம்பர்ஸ்களை வீட்டுக்கு அனுப்பாமல் அவர்களையும் வேலை பார்க்க வைத்தாள். அதே சமயம் இவளும் அவர்கள் கூட சேர்ந்து வரைந்தாள்.
காலை விடியத் தொடங்கி மற்ற டீம் மெம்பர்ஸ் வீட்டுக்குச் சென்றுவிட அனிமேஷன் டீம் மட்டுமே மிஞ்சி இருந்தது. இதில் மயூரிக்கு மதியம் கேமின் டெமோ மீட்டிங் வேறு இருக்க அதையும் இவளே சேர்த்து பார்த்துக்கொண்டாள். அப்படியே மாணிக்கத்திடம் போன் செய்து வேலையாக இருப்பதாகவும் வீட்டுக்கு இன்று வர முடியாது என்று சொல்லி வைத்துவிட மாணிக்கம் புலம்பித் தீர்த்துவிட்டார் ஆர்யனிடம்
“என்ன கம்பெனி வச்சு நடத்துறான் எல்லா வேலையையும் பாப்பா கிட்டயே தரான் நீயெல்லாம் வேலையை விட்டு டைம்க்கு வர பாப்பாக்கு மட்டும் இப்படி லேட் ஆகுது அங்க போய் சீக்கிரமா வேலை முடிச்சிட்டினா பாப்பாக்கு போய் உதவி பண்ணலாம் தான வீட்டுக்கு சீக்கிரம் வந்து நீ என்ன பண்ணபோற, முதல பாப்பாவ வேற வேலைய பாக்க சொல்லணும் ” என்று பொரிந்தபடியே இருந்தார் மாணிக்கம்.
இதை அனைத்தையும் கேட்ட ஆர்யன் “விட்டா போய் எல்லா வேலையையும் என்னையே பார்க்கச் சொல்லுவீங்க போலயே” என்று முனங்கியவனாக மனதில் “ஏன் வீட்டுக்கு வரல அப்படி என்ன வேலையா இருக்கும்” என்று யோசித்தபடி வேகமாக வேலைக்குக் கிளம்ப மாணிக்கம் அவன் கையில் டீ ப்ளாஸ்க் மற்றும் கேக், இட்லி அதற்குத் தொட்டுக்க சட்னி என்று பார்சல் செய்து கொடுத்தவர் “பாப்பா கிட்ட கொடுத்துரு நான் போன் பண்ணி சொல்லிட்டேன் பாப்பா வாங்கிப்பா” என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு போய்விட ஆர்யன் “இவங்க பண்ற அலம்பல் இருக்கே தெய்வமே விட்ட என்னை டெலிவரி பாய்யா மாத்திருவாங்க போல ” என்று அலுத்துக்கொண்டு கம்பெனிக்குச் சென்றான்.
சென்றவன் நேராக மயூரி டேபிள் சென்று மாணிக்கம் தந்த அனைத்தையும் கொடுக்க மயூரி அதை வாங்கிக்கொண்டு “தாங்க்ஸ் ஆர்யன்“ என்று மீண்டும் வேலையில் கவனம் வைக்க அதை பார்த்த ஆர்யனும் “வேலை அதிகம் போல“ என்று அவன் சீட் சென்றுவிட்டான்.
இங்கு மயூரி மீட்டிங் முடித்து அந்த மீட்டிங்க்கான ரிப்போர்ட் பார்த்து பின் வரைந்து என்று புயல் போல வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் மட்டும் இல்லை அவள் டீம் முழுவதும் அவளுடன் சேர்ந்து வேலை செய்துகொண்டு இருந்தன. அதன் பலனாக இரவு எட்டு மணி அளவில் அனைத்தையும் வரைந்து முடித்தனர். அதன் பின்னே மயூரி இரு ஷிப்ட் டீமையும் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒரு நாள் லீவும் தந்துவிட்டாள். ஆனால் அவள் இன்னும் வீடு செல்லவில்லை. என்னோரு கேமின் டெமோ ஒன்று இவளிடம் கொடுத்து செக் செய்ய சொல்லியிருந்தனர்.
அதையும் முடித்துவிட்டாள். நாளை லீவ் சொல்லிவிடலாமே என்று நினைத்தவளாக இரவு ஒரு மணி வரை கேம் செக் செய்துகொண்டு இருந்தாள். இருநாள் தொடர்ந்து விழித்ததன் விளைவாக மயூரி அவள் அறியாமலே உறங்கியும் போனாள் இரவு இரண்டு மணியளவில். உறங்க இரவுகள் பல கழித்த மயூரிக்கு இது முதல் உறங்கும் இரவு. இதனால் அவளுக்கு ஏதாவது நிகழுமா? இல்லை ஒன்றும் ஆகாமல்