காரில் ஏறியது வரையே அந்த திருநங்கைக்கு நினைவு இருந்து அதன் பின் என்ன நடந்தது என்று ஒன்றும் நினைவில் இல்லை. கண் விழித்துப் பார்த்தாள். ஏதோ ஒரு அறையில் கை கால்கள் கட்டிலில் கட்டப்பட்டு இருந்தன.
அதில் பயந்த அந்த திருநங்கையை சுற்றிப் பார்க்க, ஆங்காங்கே சிறு மஞ்சள் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டு இருந்தன. அதன் ஒளி பற்றாமல் அறை பாதி இருளில் மூழ்கி இருந்தது. அதனால் அந்த அறையே அமனிஸமாக காட்சி அளிக்க அதில் பயந்த அந்த திருநங்கை அவள் கைகளை விடுவிக்க அந்த கயிற்றை இழுக்க முயன்று கொண்டு இருக்கும் போது, தூரத்தில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டு, சத்தம் கேட்ட திசையைப் பார்க்க.
அங்கு முகத்தில் மாஸ்க்குடன் அதே பெண் கலித்தில் அணிந்து இருந்த அறை சந்திரன் டாலரை வாயில் வைத்து மெல்ல ஏதோ முனங்கியபடி நடந்து வந்தால். அந்தப் பெண் அருகில் வர வர அவள் முனங்கல் பாடலாக மாறி தெளிவாகக் கேட்டது.
“உன்னை கண் தேடுதே, உன் எழில் காணவே உளம் நாடுதே, உன்னை கண் தேடுதே, உன் எழில் காணவே உளம் நாடுதே, உறங்காமலே என் மனம் வாடுதே…”
என்று பாடியபடி அருகில் வந்து அந்த திருநங்கையின் வயிற்றின் மீது ஏறி அமர்ந்து கொண்டு கன்னத்தில் மாறி மாறி அறைய, வலி பொறுக்காமல் அவள் “என்ன அடிக்காதே, அடிக்கிறதை நிறுத்து” என்று கத்தியபடி கைக்கட்டை அவிழ்க்க முயல, அவளின் நல்ல நேரம் இடது கை கட்டு அவள் இழுத்த இழுப்பில் பிய்ந்து அறுந்து விட்டது, அந்தக் கையை வைத்து அந்தப் பெண்ணின் கழுத்தைப் பிடித்து நெறித்தபடி
“உன்னை மாதிரி எத்தனை சைக்கோவைத் தாண்டி வந்திருப்பேன், என் கிட்டயேவா?” என்று அவள் கழுத்தைப் போட்டு நெறிக்க, அந்தப் பெண் கொஞ்சம் கூட அசராமல் அவள் சட்டையில் இருந்த மினி பாக்கெட் கத்தியை எடுத்து அந்த திருநங்கையின் கழுத்தில் கண்முன் தெரியாமல் வெறிபிடித்தார் போல் “என்ன தைரியம் இருந்தா என்னை தொடுவா, தொடுவியா, என்னை தொடுவியா…?” என்று கத்தியபடி கழுத்து, நெஞ்சு என்று கத்தியால் அந்த திருநங்கை உடம்பில் அசைவில்லாமல் போகும் வரை குத்தி முடித்தாள்.
பின் அந்த உடலை இழுத்துக்கொண்டு அந்த அறையின் மூலையில் தோண்டி இருந்த குழியில் தள்ளி மண்ணைப் போட்டு மூடி விட்டு அவள் மீண்டும் அதே கட்டிலில் ரத்தத்தின் மத்தியில் முகத்தில் உறைந்த சிரிப்புடன் உறங்கிப்போனாள்.
மயூரியின் கார் கம்பெனிக்குள் நுழைந்து பார்க்கிங் நோக்கிச் செல்ல அங்கு ஆர்யனும் அப்போதுதான் வேலையை முடித்துவிட்டு பார்க்கிங் நோக்கி வந்துகொண்டிருந்தான். காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மயூரி கீழே இறங்க அங்கே ஆர்யன் நடந்து செல்வதைப் பார்த்து
“அட நம்ம அங்கிளோட பையன்! ஆமா, இவர் என்ன டிபார்ட்மென்ட்ல வொர்க் பண்றாருன்னு தெரியலையே. சரி, நேர அவர் கிட்டயே போய்க் கேட்டுருவோம்” என்று நினைத்தபடி ஆர்யனை நோக்கிச் சென்று
“ஹலோ ஆர்யன்” என்று ஆர்யனை நிறுத்திப் பேச,
ஆர்யன் “என்னவா இருக்கும்? அவங்களே வந்து பேசுறாங்க” என்று யோசித்தபடி “ஹலோ மேம்” என்று முகத்தை விறைப்பாக வைத்துப் பேச, அந்த மேமை கேட்ட மயூரி
“ஆபிஸ் வெளிய மயூரின்னு கூப்பிடுங்க ஆர்யன்” என்று பெருந்தன்மையாகப் பேச, அதைக் கேட்டு எரிச்சலான ஆர்யன்
“இல்லை, பரவாயில்லை, நீங்க என்னன்னு சொல்லுங்க மேம்” என்று சொன்னதைக் கேட்டு முகம் மாறிய மயூரி
“அது, நீங்க இங்க என்ன பொசிஷன்ல வொர்க் பண்றீங்கன்னு கேட்க வந்தேன்” மயூரி முகம் மாற்றம் கண்ணில் பட்டாலும் ஆர்யன் விரைப்பாகவே நின்றுகொண்டு
“நான் கோடிங் டீம் ஹெட்டா வொர்க் பண்றேன் மேம். வேற ஏதாவது கேட்கணுமா?” என்று கேட்க, அதைக் கேட்டு மயூரி
“இல்லை, வேற ஒண்ணும் இல்லை, நீங்க போலாம்” என்று சொன்னதுதான் தாமதம், ஆர்யன் அவன் ஸ்ப்ளெண்டர் பைக்கை எடுத்து இவளைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் செல்ல, அதில் கடுப்பான மயூரி “அங்கிள் பையன்னு பேசினா ரொம்பத்தான் சீன் போடுறான்” என்று முகத்தை உர்ரென்று வைத்து அவன் பைக்கைப் பார்த்தபடி நிற்க, ஆர்யன் திரும்பித்தான் பார்க்கவில்லை, ஆனால் பைக்கின் சைட் மிரர் வழியே இவளைத்தான் பார்த்தபடி சென்றான். மனதில் “நல்ல அழகான பொண்ணு, நல்ல வேலை, நல்லா சமைக்கிறா, ஜாலியா பேசுறாள், இருந்தும் தேவையில்லாத கெட்ட பழக்கம் கத்து வச்சிருக்க” என்று வீடு செல்லும் வழியெல்லாம் அவள் நினைவுதான் ஆர்யனுக்கு.
இங்கு மயூரி முகத்தை உர் என்று வைத்தபடி அவள் சிஸ்டம் சென்று அமர்ந்தவள் “அவன் என்ன பொசிஷன்ல இருந்தா உனக்கு என்ன மயூ நீ ஏன் போய் கேட்ட “என்று அவளை அவளே திட்டிக்கொண்டு சிஸ்டத்தை ஓப்பன் செய்தவள்
“ஆமா அவன் என்ன டிபார்ட்மெண்ட் சொன்ன கோடிங் டிபார்ட்மெண்ட்டா “ என்று யோசித்தவளுக்கு அந்த மெயில் ஞாபகம் வர அதை வேகமாக எடுத்து பெயர் பார்க்க அதில் பெரிதாக “ஆர்யன் கோடிங் டீம் “என்று இருக்க அவள் நெற்றியில் அவளே அடித்தபடி “மயூ ஊர்ல இருக்க எல்லாரையும் எனிமி ஆக்கி வச்சிருப்ப போலயே டி “என்று அந்த மெயிலை பார்த்து “இது நாலாதான் அப்படி மூஞ்சை கட்டிட்டு போறாரு போல “ என்று பெருமூச்சு ஒன்று விட்டபடி “இதை அங்கிள் கிட்ட சொல்லி அங்கிளை பேச விடாம பண்ணிருவாங்களோ “ என்று யோசித்தவள் அன்று முழுவதும் அதையே நினைத்து கொண்டு இருந்தாள்.அதனாலேயே அன்று மயூரி எப்பவும் விட மிகவும் கலைப்பாக வீட்டிற்கு வந்தாள்.
இங்கு மாணிக்கம் மயூரி வந்தாள் தெரிய வேண்டும் என்று கதவை திறந்து வைத்து இருக்க மயூரி லிஃப்டில் இருந்து இறங்கியவள் சோர்வாக நடந்து வந்தவள் மாணிக்கம் வீடு திறந்து இருப்பதைப் பார்த்து நிற்க மயூரி நிற்பதைப் பார்த்த மாணிக்கம் வேகமாக வந்து சைகையில் இதோ வரேன் என்று சொல்லிவிட்டு அவர் உள்ளே போக அதை பார்த்து மயூரி பயந்துதான் போனாள் “என்ன அங்கிள் வந்து திட்டப் போறாரா “ என்று யோசித்து நிற்க.
அப்போது மாணிக்கம் கையில் ஒரு பெரிய க்ளாசோடு வர மயூரி “இந்த கொரியன் ட்ராமா மாதிரி தண்ணியை மூஞ்சில ஊத்தப் போறாங்களா அங்கிள் “ என்று முகம் வெளிர நிற்க சரியாக அந்த நேரம் ஜாகிங் முடிந்து வந்த ஆர்யன் மயூரியின் வெளிறிய முகத்தைப் பார்த்துவிட்டு “என்ன இந்த பொண்ணு இப்படி நிக்குது “ என்று யோசித்தபடி அவள் அருகே வர. அதற்குள் மாணிக்கம் மயூரி அருகே வந்து க்ளாசை நீட்டி “டயர்டா இருப்பல்லமா அதான் பால் எடுத்து வந்தேன் “ என்று பாலை கொடுக்க அப்போதுதான் மயூரிக்கு மூச்சே வந்தது அதை பார்த்த ஆர்யன் “என்னது பாலா ரம் குடிக்கிற பொண்ணு பால் எப்படி குடிக்கும் “ என்று யோசித்து முடிக்கும் முன் மயூரி ஒரே மடக்கில் பாலைக் குடித்துவிட்டு “எப்பவும் போல உங்க ஏலக்காய் பால் சூப்பர் அங்கிள் “ என்று பாராட்ட அதை ஆர்யன் வினோதமாகப் பார்த்தபடி அவன் ரூம் சென்றான். ஆர்யனைப் பார்த்ததும் மயூரி ஜெர்க் ஆக அதையும் நோட் செய்தபடிதான் அவன் சென்றான்.
உள்ளே சென்ற ஆர்யன் ” என்னைப் பார்த்து ஏன் அப்படி முழிக்கிறா” என்று யோசிக்க, அப்போது நினைவு வந்தவனாக, “ஓ… மேயில் எனக்கு தான் அனுப்பிருக்கான்னு கட்டுபுடிச்சிட்டா போல, அதான் அப்பா கிட்ட சொல்லியிருப்பேனோன்னு பயந்து முழிக்குற போல” என்று மயூரி நின்ற விதத்தை நினைத்து சிரித்தவன், “அப்பாவைப் பற்றி இந்தப் பொண்ணுக்கு இன்னும் சரியா தெரியல்லை போல” என்று குளிக்கச் சென்றான்.
இங்கு மயூரி அதற்குள் மாணிக்கத்திடம் அந்த மெயிலைப் பற்றி விளக்கி, “அது நான் வேணும்னு பண்ணல்லை அங்கிள். வேற டீம் பண்ண தப்புக்கு நானும் என்ன பண்ணுவேன்?” என்று பாவமாக முகத்தை வைத்துப் பேச, அதைக் கேட்ட மாணிக்கம், “இதுக்க ம்மா நீ சோகமாக இருக்க? வேலைன்னா அப்படி இப்படி தாம்மா இருக்கும். அதை நினைச்சி வருந்தலாமா?”
“அய்யோ அங்கிள்! நான் ஃபீல் எல்லாம் பண்ணல்லை. நீங்க என்னை தப்பா நினைச்சிடு விங்களோன்னுதான் இதைச் சொல்றேன்” என்று மயூரி பேசியதை கேட்டு புரியாத பார்வை பார்த்த மாணிக்கம், “நான் ஏன்மா உன்னை தப்பா நினைக்கனும்?”
“அது வந்து அங்கிள், நான் மெயில் போட்டதே உங்க பையனுக்கு தானே, ஏன் இதபத்தி உங்க பையன் எதுவும் சொல்லல்லையா?“ என்று கேள்வியாகப் பார்க்க மாணிக்கம் சிரித்தவராக, “ரெண்டு பேரும் ஒரே இடத்திலய வேலை பார்க்கிறீங்க? அது சரி, இதைப் பாரு மயூ பாப்பா, வேலை விஷயம் அது உங்க ரெண்டு பேருக்குள்ள தான். அதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நீ என்ன பண்ணாலும் நான் உன்கிட்ட கேட்கமாட்டேன். என் பையனும் வேலை விஷயத்தை வீட்டுக்கு எடுத்து வர மாட்டான். நீ தைரியமா வேலையில அவனை என்ன வேணுமானாலும் பண்ணு. அதில நான் வரமாட்டேன்“
என்று மாணிக்கம் சொன்னதைக் கேட்ட பின்பு தான் இவளுக்கு மூச்சே வந்தது. மயூரி, “நீங்க இதுலயும் சூப்பர் அங்கிள்“ என்று சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குள் சென்றுவிட்டாள். இங்கு மாணிக்கம் மயூரி இடம் பேசிமுடித்து சமையல் அறை சென்று பார்க்க, அப்போது தான் ஆர்யனுக்கு காபி தராதது நினைவுக்கே வந்தது, உடனே மாணிக்கம் வேகமாகப் பாலை சூடு செய்து காபி தூள் கலந்து ஆர்யன் அறைக்கு எடுத்துச் செல்ல, அங்கே அவன் பால்கனி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியபடி,
“கடைசியா ஞாபகம் வந்திருச்சு போல“ என்று காபியை வாங்கியவன், “போற போக்கப் பார்த்தா அந்த பெண்ணை உங்க பொண்ணுன்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருவீங்க போல“ என்று காபியை அருந்த, மாணிக்கம்,
“அப்படி இல்லைப்பா, நைட் முழுக்க வேலை பார்த்துட்டு வெறும் வயிறோடு தூங்கப் போகுமாப்பா? அதான் பால் ஆவது குடிச்சிட்டு தூங்கட்டும்னு பார்த்தன். இந்த பொண்ணுக்கு நைட் வேலையா போயிடுச்சு. என்ன ஓனர் அவன் பெண் பிள்ளையைப் போய் நைட் முழிக்க விடுறான்? ஏன் அந்த வேலையை காலையில் பார்த்தா முடியாத என்ன?“ என்று புலம்பியபடி சென்றார்.
அப்போது தான் ஆர்யனுக்கும் அந்த சந்தேகம் வந்தது. “இந்த பொண்ணு தான் கோ ஓனர். அப்போ எப்போ வேண்டுமானாலும் ஆபிஸ் வரலாம் தானே. அப்படி இருந்தும் ஏன் நைட் வொர்க் பண்ணணும்? அதுவும் இல்லாமல் அனிமேஷன் டீம்க்கு நைட் ஷிப்ட் டே வேணாம்மே “ என்று யோசித்தபடி காபியைக் குடித்தான்.