அவனது மாற்றம் அவனுக்கே வியப்பாக தான் இருந்தது, இது வரை எழாத ஹார்மோன் மாற்றம் இப்போது எழுகிறது என்றால் பிரகாஷ் சொன்னது போல நானும் அவளை விரும்புகிறேனோ என்று எண்ணிக் கொண்டிருந்தவன் பிரட்டை கருக்கி இருந்தான்.

“போ மாமா, வேஸ்ட்டா போச்சு”

“சாரி டி கவனிக்கலை”, என்று அவன் மன்னிப்பு வேண்ட “சரி விடு மாமா”, என்று சொல்லி அவளுக்கும் சேர்த்தே சாதம் வைத்தாள்.

அவள் ரசத்துக்கு எடுத்துக் கொண்டிருக்க அவளை பார்வையால் வருடினான். காலையில் எழுந்ததில் அவள் தலை முடிகள் களைந்திருக்க இரவு உடை கூட கசங்கி இருக்க ஆனாலும் அழகாக தெரிந்தாள்.

அவன் அவளையே பார்த்திருக்க திடிரென்று அவனைக் கண்டவள் அவன் பார்வையில் குழம்பி குக்கரில் விரலை வைத்து விட்டாள்.

“ஆ”, என்று அவள் அலற “பாத்து செய்ய மாட்டியா பாப்பு”, என்றவன் அந்த விரலை எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள அவளுக்குள் அடிவயிற்றில் மின்னல்கள் சிதறியது.

“ஆயின்மெண்ட் போட்டா சரி ஆகிடும் மாமா”, என்று சிறு கூச்சத்துடன் அவள் கையை இழுக்க அவன் தான் விட்ட பாடில்லை. அடி பட்ட இடத்தில் காற்றை ஊதியவன் அந்த விரலில் உதட்டைப் பதிக்க அவளுக்குள் பல அதிர்வுகள் எழுந்தது.

அவளது முகச் சிவப்பையும் உடல் நடுக்கத்தையும் கண்டவன் “இதைத் தான் சொன்னேன், நான் நானா  இல்லைன்னு”, என்று சொல்லி விட்டு அவனது உதட்டை மீண்டும் அழுத்தமாக அவள் விரலில் பதித்தான்.

அவனது முத்தம் மற்ற விரல்களுக்கும் பரிமாறப் பட அசைவின்றி நின்றாள்  அவள். விரலை இழுத்துக் கொள்ள ஒரு நிமிடம் ஆகாது தான். ஆனால் அவளால் அது முடிய வில்லை. அவனது தொடுகை அவளுக்கு கசக்குமா என்ன? காயம் பட்ட எரிச்சல் கூட அவளை விட்டுச் சென்றிருந்தது இப்போது.

அவளது ஐந்து விரலிலும் முத்தமிட்டவன் அவளது இரண்டு கன்னங்களையும் தன்னுடைய கையினால் தாங்கினான்.  அடுத்து என்ன நடந்திருக்குமோ? அதற்கு முன் “ழி”, என்ற ஜானின் குரலில் தான்  இருவரும் கலைந்தார்கள்.

“உன் நண்பன் வந்தாச்சு. நான் போட்ட மருந்து பத்தலைனா  அவனையே ஆயின்மெண்ட் எடுத்து போடச் சொல்லு. நான் குளிக்க போறேன்”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டான் அதிபன். உள்ளே வந்து கதவில் சாய்ந்து நின்றவனுக்கு உடலில் அவ்வளவு நடுக்கம்.

“நான் ஏன்  அப்படி செஞ்சேன்””, என்ற கேள்வி அவனை சுழற்றி அடித்தது. அதுவும் அவள் முகத்தில் இருந்த போது உணர்வுகள் அவனை காந்தமாய் அவள் பக்கம் இழுத்தது என்பது தான் உண்மை.

ஜான் மட்டும் வர வில்லை என்றால் அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே ஒரு மாதிரி இருந்தது.

“அப்படியே மயக்குறா என்னை. இன்னும் அவளை விட்டு தள்ளியே இருக்கணும் பா. நான் என்ன யோசிக்கிறேன்னு தெரியாம அவ கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்க கூடாது”, என்று முடிவு எடுத்து விட்டே குளிக்கச் சென்றான்.

அவன் குளித்து கிளம்பி வந்த போது “பாத்து செய்ய மாட்டியா ழி?”, என்று கடிந்த படி அவளுக்கு மருந்திட்டுக் கொண்டிருந்தான் ஜான். ஆனால் இம்முறை அதிபனுக்கு அவன் மேல் எந்த பொறாமை உணர்வும் வரவில்லை, அவள் மனதுக்குள் இருப்பது நான் தான் என்ற கர்வம் அவனை பொறாமை கொள்ள விட வில்லை.

அடுத்து வந்த நாட்கள் இயல்பாக சென்றது. தன்னுடைய மனதில் இருப்பதைச் சொன்ன பிறகும் அதற்கான எந்த பதிலும் அதிபன் சொல்லாததால் அவளும் அவனிடம் நெருக்கம் காட்ட வில்லை. அவனோ நெருங்கினால் தவறாக ஏதாவது செய்து விடுவோம் என்று எண்ணியே ஒதுங்கி இருந்தான். அவளுக்கும் புராஜெக்ட், ஹாஸ்பிடல் வேலை இருந்ததால் பிஸியாகவே இருந்தாள்.

அன்று இரவு சோர்வாக வந்து அமர்ந்தாள் யாழி. “இன்னைக்கு ரொம்ப வேலையா பாப்பு? ரொம்ப டயர்டா இருக்க?”, என்று கேட்டான் அதிபன்.

“புராஜெக்ட் வொர்க் கொஞ்சம் இழுக்குது மாமா. இன்னும் ஒரு மாசத்துல எல்லாம் சப்மிட் பண்ணனும் அதான்”

“வேணும்னா ஹாஸ்பிடல் வேலையை விடேன். படிப்புல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணலாம்ல?”

“அங்க வொர்க் பண்ணுறது தான் புராஜெக்ட்க்கு ஹெல்ப் பண்ணுது மாமா. அதை விட்டா சரியா இருக்காது”, என்று சொன்னவளுக்கு அவன் அக்கறை மயிலிறகாக வருடியது போல இருந்தது.

அடுத்த நாள் அலுவலகத்தில் வைத்து “என்ன முடிவு பண்ணி இருக்க யாழி விஷயத்துல?”, என்று கேட்டான் பிரகாஷ்.

“எனக்கும் அவளைப் பிடிக்கும் டா”, என்று அதிபன் ஒத்துக் கொள்ள “இதை தான் எப்பவும் சொல்லுறியே?”, என்றான் பிரகாஷ்.

“இல்லை இல்லை, நானும் அவளை லவ் தான் பண்ணுறேன்னு தோணுது. இது சரி வருமா பிரகாஷ்?”

“கண்டிப்பா சரியா வரும் டா. நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சா தான் சந்தோஷமா இருக்க மாட்டீங்க. ஒழுங்கா அவ கிட்ட போய் காதலைச் சொல்லு”

“சொல்லிறலாம்னு சொல்லுறியா””

“ஆமா போய் சொல்லிரு”, என்று சொல்ல அவன் முகத்தில் வெட்கம் வந்தது. அடுத்து அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தான் பிரகாஷ்.

அன்று தான் யாழிக்கு கல்லூரி கடைசி நாள். அதனால்  “மாமா பீச்சுக்கு போகலாமா?”, என்று யாழி கேட்டதும் அவனும் அழைத்துச் சென்றான். அவனுக்கும் அவளிடம் பேச வேண்டும் போல இருந்தது.

இருவரும் கடலைப் பார்த்த படி அமர்ந்தார்கள். காற்றின் வேகம் கொஞ்சம் அதிகமாக இருக்க அவள் தலை முடி கலைந்து விளையாடியது. அவளது ஆடையும் அலைபாய அவள் அழகில் அவன் மனம் தடுமாறியது. அவள் மேல் பாயும் கண்களை தடுக்க முடியாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

இருவரும் அமைதியாக இருக்க அந்த அமைதியை கலைத்தது யாழி தான். “மாமா இங்க இருக்குற போட் எல்லாம் வித்தியாசமா இருக்குல்ல?”, என்று கேட்டாள்.

“ஆமா இங்க எல்லாமே பிரம்மாண்டம் தான். ஆனா இதை விட பேரழகு நம்ம ஊரு கடல்ல கட்டுமரத்துல அவ்வளவு தைரியமா போவாங்க பாரு நம்ம மீனவங்க. அவங்களை விட இது அழகு இல்லை”

“அதுவும் சரி தான். அப்புறம் மாமா என் படிப்பு முடிஞ்சிட்டு. நாம நம்ம ஊருக்கே போயிருவோமா? படிச்ச படிப்பை நம்ம மக்களுக்கு பயன்படுத்தணும்னு தான் மாமா இங்க வந்தேன்”

“நல்ல விஷயம் தான் யாழி, ஊருக்கே போகலாம்”, என்று சொல்ல அவள் முகம் மலர்ந்தது.

“அப்படின்னா நம்ம வீட்டுக்கு வருவியா?”

“அதுக்கு வாய்ப்பு இல்லை டா. வேணும்னா நீ அங்க வந்து இரு”

“நான் எப்படி அங்க வந்து இருக்க முடியும்?”, என்று அவள் சோகமாக கேட்க “என் பொண்டாட்டியா ஆகிட்டா அங்க வந்து என் கூடவே இருக்கலாம் தானே?”, என்று அவன் பட்டென்று சொல்லி விட அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“மாமா..”

“எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு யாழி. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?”, என்று அவன் கேட்டதும் சந்தோஷமாக இருந்தாலும் “உனக்கு என் மேல லவ் எல்லாம் இல்லை மாமா. நான் சொன்னதுக்காக வேணும்னா உனக்கும் அப்படி தோணிருக்கலாம். அதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க யோசிக்காத”, என்றாள்.

“நீ சொன்னதுக்காக எல்லாம் தோணலை. அதே போல முன்னாடியும் உன் மேல காதல் இருந்ததுன்னு சொல்ல மாட்டேன். ஆனா இங்க அமெரிக்கா வந்ததுல இருந்து உன் மேல காதல் வந்துருச்சு டி”

“பொய்”

“உண்மை தான், ஜான் உன் கிட்ட நெருங்க நெருங்க எனக்குள்ள அவ்வளவு கோபம், குழப்பம். அதுக்கு எல்லாம் விடை தான் நீ என் கிட்ட பேசின அப்புறம் கிடைச்சது. எனக்கும் நீ வேணும் டி. உன்னை என்னால வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது”, என்று சொன்னதும் அவனை இறுக கட்டிக் கொண்டாள்.

அவன் கரங்களும் அவளை அனைத்துக் கொண்டது. இருவரும் சந்தோஷமாக வீட்டுக்குள் வர “குட் நைட் பாப்பு”, என்றான் அதிபன்.

“தூங்க போறியா அதுக்குள்ள? கொஞ்ச நேரம் என் கூட பேசிட்டு இருக்கலாம்ல?”, என்று ஆசையாக கேட்க “இதுக்கு மேல உன் கூட இருந்தா பேசிட்டு மட்டும் இருப்பேனான்னு தெரியலை டி. இப்ப எல்லாம் என் மனசு என் கிட்டயே இல்லை. உன்னை தப்பு தப்பா பாக்கச் சொல்லுது”, என்று வெளிப்படையாகவே சொல்ல முகம் சிவந்து போனாள்.