“நான் டுவல்த் படிக்கும் போது நீ காலேஜ் படிச்சிட்டு இருந்த. அப்ப தான் நளினி உன்னை லவ் பண்ணுறதா சொன்ன. எனக்கு அப்படி ஒரு அழுகை வந்துச்சு. உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தோணுச்சு. அப்ப வர்ஷா தான் இதை லவ்ன்னு சொன்னா”
“ஏது அப்பவே வா?”
“ஆமா என்னை வெறுப்பேத்த தான் அவ உன் கிட்ட வந்து வந்து பேசுவா. எனக்கு அப்படியே எரியும். அவ அதை ரசிச்சு பாப்பா”
“என் கிட்ட சொல்லிருக்கலாம்ல டி”
“நீ என்னை உன்னோட குழந்தை மாதிரி பாத்தா நான் எப்படி வந்து நீ தான் வேணும்னு சொல்ல முடியும்?”
“அப்படின்னா வெண்ணிலா கூட கல்யாணம் பண்ண முடிவு எடுத்தாங்களே டி. அப்பவும் பேசாம இருந்த?”
“உனக்கு ஓகே வான்னு கேட்டேன். நீ எப்படியும் பண்ணி தானே ஆகணும். அதனால சம்மதம் தான்னு சொன்ன. நீ சரி சொன்ன அப்புறம் எனக்கும் ஓகே தான்”
“இவ்வளவு அன்பு வச்சிருக்குற நீ எப்படி வருணைக் கல்யாணம் பண்ண சம்மதிச்ச?”
“அது உன்னை காயப் படுத்தின வெண்ணிலாவை கஷ்ட படுத்தணும்னு தான். மத்த படி வருண் கூட வாழ்ந்திருப்பேனான்னு தெரியலை”
“எப்படி வாழ்க்கை முழுக்க கல்யாணத்தை நிறுத்தணும்னு நினைப்பா? உன்னால முடியுமா?”
“கையை கீறினா, கழுத்தை அறுத்து கிட்டா விட்டுடுவாங்க தானே? இல்லைன்னா மருத்துவ சேவைன்னு சொல்லிருவேன். உண்மையிலே எனக்கு அந்த ஆசை இருக்கு”, என்று அசால்ட்டாக சொல்ல அவன் தான் அதிர்ந்து போனான்.
“நான் ஜானை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னா..”
“நீ சொன்னா செஞ்சிப்பேன். ஆனா அவன் கூட எல்லாம் பிசிகல் ரிலெசன்சிப்ல இருக்க முடியாது. ஜான் சொன்னா புரிஞ்சிப்பான்”, என்று பட்டு பட்டென்று பதில் சொல்பவளை விழி பிதுங்கி தான் பார்த்தான்.
“அப்ப உண்மையிலே என்னை லவ் பண்ணுறியா டி?”
“அப்படி தான் நினைக்கிறேன்”
“இது வரைக்கும் நீ வெளிய காமிக்கவே இல்லை. ஒரு வேளை நீயே இப்ப தான் உணர்ந்துருக்கியா?”
“யார் சொன்னா? எனக்கு முன்னாடியே தெரியும்? உன் கிட்ட மறைச்சிருவேன்”
“எதை?”
“என்னோட பீலிங்க்சை தான்”
“புரியலை”
“ஏதாவது ரொமான்டிக் படம் பாத்தா உன்னை அதிகம் தேடும். ஆனா காமிச்சிக்க மாட்டேன். நீ கட்டிப் பிடிச்சிக்கிட்டா எனக்கு அவ்வளவு பிடிக்கும். நானும் அது தான் சாக்குன்னு ஒட்டிக்குவேன்”, என்று சொல்ல அவனுக்குள் சில பல மின்னல்கள்.
“என்ன டி இப்படி எல்லாம் சொல்ற? எனக்கு ஒரு மாதிரி இருக்கு?”
“அப்ப எதுவும் கேக்கக்காத. நான் சொல்லலை?”
“இப்ப மட்டும் எப்படி சொல்ல தோணுச்சு?”
“இப்ப நீ என் கூட தனியா இருக்கல்ல? அதான் காதல் ஓவர்புளோ ஆகிருச்சு போல?”, என்று சொல்ல உலகில் யாரும் இப்படி காதலைச் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டான்.
கூடவே வாழ்வின் நிதர்சனம் புரிய “நம்ம கல்யாணம் எல்லாம் நடக்காது டி. வீட்ல ஒத்துக்க மாட்டாங்க”, என்றான் தடுமாற்றமாக. முதல் முறையாக அவனை என்னவோ செய்தாள் பெண்.
“தெரியும் வயசை காரணம் சொல்லுவாங்க. அப்புறம் என் மேல உனக்கு ஈர்ப்பு இல்லைன்னு நீ சொல்லுவ. என் மேல எப்பவும் காதல் வராதுன்னு சொல்லுவ. அதனால நான் உன் கிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு எல்லாம் கேக்க மாட்டேன். நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ”, என்று சொல்ல அவனுக்கு அப்படி ஒரு திகைப்பு. அவள் எந்த அளவுக்கு யோசித்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.
அவனது முகத்தில் இருந்த உணர்வுகள் அவ்வளவு அழகாக இருக்க அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள வேண்டும் போல இருந்தது யாழிக்கு. இது வரை சொல்லியதற்கே அவன் என்ன யோசிக்கிறான் என்று புரியாத போது மேலும் இது பற்றி பேச ஒரு மாதிரி இருந்தது அவளுக்கு.
அதனால் “சரி மாமா எனக்கு தூக்கம் வருது. ரொம்ப வருஷமா எனக்குள்ள இருந்த ஸ்ட்ரெஸ் இன்னைக்கு குறைஞ்ச மாதிரி இருக்கு. நாளைக்கு வெளிய போகலாம். பை மாமா”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றவள் கதவை அடைத்து விட்டு உறங்க ஆரம்பித்தாள்.
அதிக அளவில் மன அழுத்தம் ஏறி அப்படியே அங்கேயே அமர்ந்து விட்டான் அதிபன். எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக ஒருத்தியால் பகிர முடியுமா என்று அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“கூடவே இருந்தியே செவ்வாழை? ஒரு வார்த்தை சொன்னியா”, என்பது தான் அவனது எண்ணமாக இருந்தது. அடுத்து என்ன செய்ய என்ன முடிவு எடுக்க என்று தெரியாமல் உடனே பிரகாஷை தான் அழைத்தான்.
“சொல்லு டா”
“தூங்கிட்டியா”
“இல்லை மாப்பிள்ளை, மூவீ தான் பாத்துட்டு இருக்கேன்”
“ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் டா”
“சொல்லு”
“யாழி என்னை லவ் பண்ணுறாளாம் டா”
“ஹா ஹா தெரிஞ்ச விஷயம் தானே டா. அவ மட்டும் இல்லை. நீயும் அவளை லவ் தான் பண்ணுற? கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவ. நல்ல தெளிவா யோசிச்சு பாரு. உனக்கே விடை தெரியும்”, என்று சொல்லி விட்டு போனை வைத்தான் பிரகாஷ். அவன் சொன்னதைக் கேட்டு மேலும் குழம்பித் தான் போனான் அதிபன்.
ஒரு வேளை அப்படித் தானோ என்று எண்ணி அப்படியே பனியில் அமர்ந்து விட்டான். அடுத்த நாள் காலையில் காச்சல் கொதித்தது அதிபனுக்கு.
“ஐயோ மாமா, நைட் முழுக்க பனியிலயா இருந்த? உள்ள வா”, என்று அவனை உள்ளே கை தாங்களாக அழைத்துச் சென்றவள் படுக்கையில் படுக்க வைத்தாள்.
அவன் உடல் வெப்ப நிலையை பரிசோதித்தவள் ஒரு டம்ளர் பாலைக் கொடுத்து குடிக்க வைத்து மாத்திரையை விழுங்க வைத்தாள்.
பின் ஜானை அழைத்தவள் “மாமாவுக்கு ஃபீவர் அதிகமா இருக்கு டா ஜா. இன்ஜெக்ஷன் மட்டும் கொண்டு வரியா? நாளைக்கு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்து டிரிப்ஸ் போட்டுக்குறேன்”, என்றாள்.
“இன்னைக்கு உன்னை பாக்க முடியாதேன்னு நினைச்சேன், இதோ வந்துட்டேன்”, என்று சொல்லி போனை வைத்த ஜானை எண்ணி முதல் முறையாக குற்ற உணர்வு வந்தது யாழிக்கு.
ஜானிடம் உண்மையை சொல்லி இருக்க வேண்டுமோ அவன் மனதில் ஆசையை வேர் விட வைத்து விட்டேனோ? அன்று வெண்ணிலாவை குறை சொன்னோமே? இன்று தானும் அதே தவறை தானே செய்திருக்கிறோம் என்று எண்ணியவள் தன்னுடைய மாமனை கவனிக்க ஆரம்பித்தாள்.
அதிபன் அமைதியாக அவள் சொல்வதை கேட்டுவிட்டு படுத்திருந்தான். ஆனால் எதுவுமே பேச வில்லை. அவள் என்னவோ இயல்பாக தான் இருந்தாள். அவனால் தான் இயல்பாக பழைய படி அவனது பாப்புவாக அவளைப் பார்க்க முடிய வில்லை.
அப்போது இரவு உடையில் இருந்தாள் யாழி. சாதாரண நைட் டிரஸ் தான். ஆனால் அதில் கூட பேரழகாக இருக்கிறாளோ என்று முதல் முறையாக அவனுக்கு தோன்றியது. இத்தனை நாள் இல்லாத கவர்ச்சி அவன் கண்ணில் இன்று தெரிந்ததுவோ? அவளது அழகை அந்த உடை வாரி வழங்க வஞ்சனை இல்லாமல் அவன் கண்கள் ரசித்தது.
அதிபன் இது வரை எந்த பெண்ணையும் தவறாக பார்த்தது இல்லை. மற்ற பெண்களிடம் பேசும் போது கூட அவன் பார்வை அவர்களின் முகத்திலோ கண்களிலோ மட்டும் தான் இருக்கும். கழுத்துக்கும் அதற்கு கீழேயும் சென்றது இல்லை.
முதல் முறையாக அவன் பார்வை அவள் தேகத்தில் பதிய முயன்றது. அவள் அழகை மட்டுமே அவன் கண்கள் வெறித்து பார்த்தது.
“எப்பா இந்த பாப்பு என்ன மாதிரி அழகா இருக்கா? ஒரு மாதிரி பாக்க தோனுதே?”, என்று தனக்குள் முணங்கிக் கொண்டான்.
உடையை தாண்டி பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனைத் தூண்ட “டேய் அதி நீ பன்றது ரொம்ப தப்பு டா”, என்று அவன் மனசாட்சியே அவனை திட்டித் தீர்த்தது.
அவன் மனதில் இருந்த தடுமாற்றம் இன்று அவளை புதிய பரிமாணத்தில் காட்ட கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இழந்து கொண்டிருந்தான் அதிபன். அவன் பார்வை அவளை விட்டு நகர மறுத்தது. “பாவி பாவி ஏதோ பேசி என்னைக் கெடுத்து விட்டுட்டா”, என்று மனதுக்குள் அவளைத் திட்டித் தீர்த்தான்.