Advertisement

அத்தியாயம் பதினெட்டு :

அப்போது வந்த பக்கத்துக்கு வீட்டுப் பெண், “என்ன?” என்று பாட்டியிடம் கேட்க, அவர் “ஜனனி அழகு!” சொல்ல,

“எஸ் தீதி யு ஆர் பியுட்டிபுல்!” என்றவள், “திஸ் இஸ் மை நியூ கேமரா, ஐ வான்ட் டு டேக் போத் ஆஃப் யு” என்றாள்.

வாசுவின் கோபத்தை பார்த்து அவனருகில் முக மலர்ச்சியோடு நின்றவள், வாசுவிடம் ரகசியம் பேசினாள், “என்னை விட்டுட்டு, உங்களை மட்டும் எடுப்பாளோ?” என்று,

வாசு திரும்பவும் முறைத்துப் பார்த்தான்.  

“ஹி, ஹி, நோ, முறைச்சிஃபையிங் வாசுத்தான்!” என்று சிரிப்போடு சொல்ல,

“படுத்தாதடி!” என்று சொன்ன வாசுவின் முகம் சற்று சீரியசாய் இருக்க, விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டி வைத்தாள்.

திரும்ப வெளியில் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை, யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அன்று எங்கே போகலாம் என்று ப்ளான் செய்ய, “ஐ வில் டேக் யு டு தி டெம்பிள்ஸ்” என்று அந்த யுவதி சொல்ல,

எல்லோரும் ரெடியாக சென்றனர்.

வாசு ரூம் செல்ல “எதுக்கு கோபம்?” என்றாள் அவன் பின்னோடு சென்று ஜனனி.

“இன்னுமா எனக்கு நீ தான் மேட்ச்! நீ மட்டும் தான் மேட்ச்ன்னு புரியலை! எல்லோர் முன்னாடியும் அவ்வளவு சந்தேகமா பேசற! நீ தெரிஞ்சு தான் பேசறியா? தெரியாம பேசறியா?” என்று கோபமாக வாசு பேசினான்.

“தெரியும் தான்! ஆனா அப்போ அப்போ ஒரு டவுட்டு வருது! அஞ்சு வருஷம் வெயிட் செஞ்சு கல்யாணம் பண்ற அளவுக்கு உன் கிட்ட என்ன இருக்குதுன்னு!” என்று சொல்ல,

“திரும்ப திரும்ப உளறக் கூடாது. ஒரு பொண்ணுக்கு இருக்குற எல்லாம் இருக்கு!” என்று நக்கலாக சொன்னான்.  

ஜனனி “ஐயோ! என்ன பேச்சு இது?” என்று ஒரு முக பாவனையைக் கொடுக்க,

“நானா பேசறேன்! நீ என்னைப் பேச வைக்கிற! அப்புறம் என்ன இப்படி பேசறேன்னு ஒரு லுக்!” என்று கோபமாகச் சொன்னான்.

அப்போதும் எதற்கு இப்படிப் பேசினாய் என்று ஜனனி பார்த்திருக்க, வேகமாக அவளை இழுத்து அணைத்தான்.

“உனக்கு புரியாது… அம்மா சொன்ன மாதிரி நான் வாழ்க்கை எதுக்குன்னு ஒரு பிடிப்பு இல்லாத சமையத்துல எனக்கு ஒரு பிடிப்பு கொடுத்தவ நீ!”

“எப்பவும் என் மனசுக்குள்ள உன்னோட ஞாபகம் தான், தனியா யாரோடையும் அதிகம் பேசாத என்னை, எனக்குள்ள உன்னோட பேச வைச்ச! எங்கயோ நீ இருந்தாலும், எனக்குள்ள துடிச்சது உன் இதயம் தானேடி!” என சொல்லி இன்னும் இறுக அணைத்தான்.

“வலிக்குது!” என்று முணுமுணுத்தாள்,

“வலிக்கட்டும்! அதுதான் உனக்கு பனிஷ்மென்ட். இனிமே உனக்கு இந்த சந்தேகம் வரும்!” என்று அவள் முகம் பார்த்தவன், காதல் கணவனாய் அவனுக்கு தோன்றிய இடத்தில் எல்லாம் முற்றுகையிட,

“அச்சோ! சொல்ல மாட்டேன்! எல்லோரும் வெளில இருக்காங்க!” என்று கெஞ்சிய பிறகு தான் விட்டான்.

“இனிமே இந்த மாதிரி உளறின, இன்னும் பயங்கரமா பனிஷ்மென்ட் குடுப்பேன்” என்றவனிடம்,

தூரமாக சென்று “இதுக்கு பேர் உங்க ஊர்ல பனிஷ்மென்டா” என்று கண்ணடித்தாள்.

“அப்போ வேற என்னவாம்?” என்று வாசு புன்னகைக்க,

“ம்ம்ம், அதெல்லாம் சொல்ல முடியாது” என்று சொல்லிச் சென்றாள். இருவர் முகத்திலுமே புன்னகை வெகு நேரம் உறைந்திருந்தது.

கோவில் சென்று திரும்ப வீடு வரும் போது “நாளைக்கு நாங்க கிளம்பறோம்!” என அனுராதா சொல்ல,

“என்ன?” என்ற ஜனனியின் முகம் சுருங்கி விட்டது.

“மூணு நாள் ஆகிடுச்சு, அங்க பாட்டி, தாத்தா, அப்பா, பெரியப்பா, எல்லோரும் தனியா இருக்காங்க ஜனனி. சாப்பாட்டுக்கு கஷ்டம். எத்தனை நாள் கடையில சாப்பிடுவாங்க!” என்று செல்லம்மாள் பொறுமையாக சொல்ல,

“ம்” என்றவள், “சரி, நீங்க போங்க, இவங்க இருக்கட்டும்!” என்று ஸ்வாதியையும் அவினாஷையும் ரகுலனையும் காட்டினாள்.

“இல்லை ஜனனி, அங்க ஹோட்டல் பார்க்கணும், நெக்ஸ்ட் மந்த் நீங்க வாங்க!” என்றார்.

“நாங்களும் ஆஃபிஸ் போகணும் கா!” என்று அவர்களும் சொல்ல, அரை மனதாக தலையாட்டினாள்.

அவள் சோகமாக இருப்பதை பார்த்து “அது இத்தனை பேரை ஒரு நாலஞ்சு நாளா டார்ச்சர் செஞ்சவ, இப்போ என்னை மட்டும் செய்யணும்னு ஃபீல் பண்றா!” என வாசு சொல்ல,

“ஹையோ, வெரி பேட் நக்கல் அண்ட் நான் டென்ஷன் ஆகலை!” என்று ஜனனி சிரிக்காமல் சொல்ல, எல்லோரும் மனம் விட்டு சிரித்தனர்.

“தெய்வம் அத்தான் நீங்க!” என்றான் ராகுலன் திரும்பவும்.

அடுத்த நாள் காலையிலும் ஜன்னி சோர்வாக இருக்க, “அக்கா, நாங்க போறதுல உனக்கு இவ்வளவு வருத்தமா?” என்று அவினாஷ் கேட்கவும்,

“இல்லை அவி, மீ மைசெல்ப் ஃபீலிங் டல்” என்று அவள் சொன்னது தான் போதும்,

“என்ன? என்ன பண்ணுது?” என்று அம்மா, பெரியம்மா, அத்தை என்று மூவரும் அவளை முற்றுகையிட்டனர்.

“ஏன்மா?” என்றாள் பரிதாபமாக ஜனனி.

“டூ மந்த்ஸ் ஆகிடுச்சு! ஏதாவது குட் நியூஸ் இருக்கா, உன்னோட டீல்ல ஏதாவது முனேற்றம் இருக்கா?” என்றார் ஸ்வாதி மெதுவாக.

“என்ன டூ மந்த்ஸ் ஆகிடுச்சா?” என்ற ஜனனி, “இப்போ தான் அத்தை கல்யாணம் ஆன மாதிரி இருக்கு, எனக்கு ஞாபகமில்லை, எப்போ லாஸ்ட் டைம் ஆனேன்னு!” என்று மெதுவாக ஸ்வாதியிடம் சொல்லவும்.

“இது கூடவா மறப்ப!” என்று அம்மா கடிய, அசடு வழிந்து நின்றாள். பின்னே “உங்க பையன் எல்லாத்தையும் என்னை மறக்க வெச்சிடறார்!” என்றா சொல்ல முடியும்.

ஆனாலும் அப்படியும் இருக்குமோ என்று நினைந்த நொடி, ஒரு அமைதி அவளுள், “ஹே, நானும் அம்மா ஆகப் போகிறேனோ!” என்று மனம் குதூகலமிட்ட போதும், வெளியில் அது வரவில்லை. பொறுப்புணர்வு இன்னும் கூடியது.

ஸ்வாதியும் செல்லம்மாளும் அங்கே எங்கே மெடிகல் ஷாப் இருக்கின்றது என்று பார்க்கச் செல்ல, வெளியில் இருந்த யுவதியை “வில் யு கைட் அஸ்!” என்று அழைத்து சென்றனர்.

வாசு உள்ளே குளித்துக் கொண்டிருந்தான். அதனால் அவனுக்கு தெரியவில்லை. இவள் ரூமின் உள் சென்று அமர்ந்து கொண்டாள். வெளியே வந்தவன், உடை அணிந்து கொண்டே “என்ன ஜனனி இங்க உட்கார்ந்து இருக்க, அதுவும் அமைதியாயிருக்க, என்ன விஷயம்?” என்றான்.

பதில் சொல்லாமல் வாசுவைப் பார்த்து இருந்தால் ஜனனி. 

“நான் டிரஸ் மாத்துறதை பார்த்ததே இல்லையா?” என்று கண்ணடித்தான். அதற்கும் பதில் சொல்லாமல் பார்த்து இருந்தாள்.

உடை அணிந்து முடித்தவன், “என்னடா இது உலக அதிசயம்! ஜனனி அமைதியாயிருக்கா?” என்று அருகில் அமர்ந்தான். அவனின் இடுப்பில் கை கோர்த்து அவன் மீது சாய்ந்து கொள்ள, “ஜனனி, டிரஸ் கசங்குது!” என்றான்.  

வாசுவை ஒரு பார்வை பார்த்த ஜனனி, தன் முகத்தை அவனின் ஷர்ட்டில் தேய்க்க,

“அட! என்ன இது கலாட்டா! இதை நான் டிரஸ் பண்ணும் முன்ன பண்ணவேண்டியது தானே! அது என்ன டிரஸ் மேல! சின்ன பையனை ஏமாத்துற!” என்றான்.

அதற்கும் பதில் பேசாமல், “என்னவோ பேசிக் கொள்!” என்று அணைத்த வாக்கிலேயே  அமர்ந்து இருந்தாள்.

“ஜனனி என்ன விஷயம்?” என்று அவனும் அணைத்துப் பிடித்துக் கேட்டான்.

“அம்மா, ப்ரெக்னன்சி டெஸ்ட் பண்ற கிட் வாங்கப் போயிருக்காங்க!” என்று மெல்லிய குரலில்  முணுமுணுத்தாள்.

“நிஜமாவா, அப்படியா?” என்று சந்தோஷமாக கேட்டான்.

“தெரியலை, டென்ஷனா இருக்கு! என்று இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள்.

“எதுக்கு டென்ஷன்?” என்று கேட்டவனிடம்,

“தெரியலை” என்று பதில் சொன்னவளின் குரலில் அவ்வளவு கலக்கம்.

“எதுக்கு, சொல்லு ஜனனி” என்று வாசு பொறுமையாக மீண்டும் கேட்க,

“நம்ம கல்யாணம் நடந்ததே இன்னும் நம்ப முடியலை. டூ மந்த்ஸ் ஆகிடுச்சு அதையும் நம்ப முடியலை. எத்தனை நாள் இதையே யோசிச்சிட்டு இருந்திருக்கேன், இப்போ எல்லாம் டக்குன்னு சரியாகவும் பயமாயிருக்கு!”

“அதுவும் லேட்டா ப்ரெக்னன்ட் ஆனா ரொம்ப காம்ப்ளிகேஷன்ஸ்ன்னு படிச்சேன்!” என்றால் கலக்கமாக.  

“முதல்ல இந்த நெட் பார்க்கிறதை விடு, அதெல்லாம் முப்பது வயசுக்கு மேல, அதுவும் எல்லோருக்கும் கிடையாது. ஜஸ்ட் ரிஸ்க் ஃபாக்டர்ஸ் அவ்வளவு தான், அதுவும் எங்கயோ ஒருத்தருக்கு தான்!” என்றான்.

“உனக்கு எப்படி தெரியும்? அப்போ உனக்கும் பயம் இருக்கு தானே! நீயும் லேட்டா கர்ப்பம் ஆனா என்ன பிரச்சனை வரும்னு நெட் பார்த்த தானே!” என்றாள்.  

“அடியேய்!” என்று செல்லமாக கடிந்தவன், “நான் யூனியன் பப்ளிக் செர்விஸ் கமிஷன் பாஸ் பண்ணியிருக்கேன். அப்போ நிறையப் படிப்பேன். அதுல தெரிஞ்சிக்கிட்டது. ஒத்துக்கோ ஜனனி,  ஒத்துக்கோ! உன் அத்தான் ஒரு ஆஃபிசர்” என்று காலர் தூக்கி விட்டான்.  

“அய்யே!” என்று ஜனனி உதடு சுளித்தாள்.

“காலையில என்னை டெம்ப்ட் பண்ணாத, எல்லாம் நல்லதாவே நடக்கும்!” என்று மென்மையாக நெற்றியில் முத்தமிட்டான்.

அதற்குள் “ஜனனி” என்ற செல்லம்மாளின் குரல் கேட்க, எதோ எக்ஸாம் போகும் பெண் போல அவள் முகத்தில் அவ்வளவு டென்ஷன்,

சிரித்தவன், “ஆல் தி பெஸ்ட். நான் இங்கயே இருக்கேன். நீ போ! இல்லை எல்லோர் முன்னயும் நீ பண்றதுக்கு சிரிச்சு வைப்பேன். போ!” என்று அவளை அனுப்பினான்.

வேறு ரூமில் டெஸ்ட் செய்து பாசிடிவ் என்று வரவும்,

ஸ்வாதி, அம்மா, பெரியம்மா என்று அனைவர் முகமும் உற்சாகத்தில், அனுராதா தன் அப்பா அம்மாவிடம் சொல்லப் போக, செல்லம்மால கணவருக்கு அழைக்க, ஸ்வாதி தன் பெற்றோருக்கு அழைக்க,

இதுவாகத் தான் இருக்க வேண்டும் என்று யூகித்த அவினாஷும் ரகுலனும் ஒருவரை ஒருவர் அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வாசுதேவனிடம் விரைந்தாள் ஜனனி,

“எனக்கு கல்யாணமும் ஆகிடுச்சு! எனக்கு குழந்தையும் பிறக்கப் போகுது!” என்று சொன்ன போது குரலில் ஒரு குதூகலம் இருந்தாலும் ஜனனியின் கண்களில் நீர் கூட,

“லூசு” என்று வழக்கம் போல வாசு அவளுக்கு ஒரு பாராட்டைக் கொடுத்தாலும், ஜனனியை நோக்கி கை விரித்து நின்றான்.  

அவனின் கைகளில் அடைக்கலமானவள், நிமிர்ந்து அவன் முகம் பார்க்க “தேங்க்ஸ் ஜனனி!” என்றான்.

“எதுக்கு?”

“இதுக்கு!” என அணைத்துப் பிடித்திருந்ததை காட்டியவன், “அதாவது நீ என் வாழ்க்கையில வந்ததுக்கு, என் கைக்குள்ள வந்ததுக்கு, எனக்குள்ள வந்ததுக்கு, என் இதயமா வந்ததுக்கு, என் இதயமா மாறினதுக்கு! இப்போ புதுசா இன்னொரு இதயம் உருவாக்குறதுக்கு!” என கண்ணடித்து கவிதை பேசினான்.  

“அய்யோடா! கவிதை! கவிதை! அருவி மாதிரி கொட்டுது!” என்று ஜனனி கிண்டல் பேச,  

“ம்ம்ம்!” என்றவன், “கவிதையோட கீழ போட்டுக்கோ எழுதினவர் யாருன்னு தெரிய”

“யாரு?”   

“இப்படிக்கு உன் இதயம்!” என்றான் கண்களில் காதலை தேக்கி ஜனனியைப் பார்த்தவாறே.

“அது யாரு?” என்றாள் புரியாதவள் போல,  

“எனக்குள்ள இருக்குற உன் இதயம்!” என்றவனை இறுக அணைத்துக் கொண்டாள், அவன் வார்த்தையாகச் சொன்னதை, அப்படித்தான் எனக்கும் என்று காட்டுவது போல மேலும் மேலும் இறுகியது அணைப்பு.

                          ( நிறைவுற்றது )

 

 

Advertisement