Advertisement

வெற்றி தங்களது வயலின் வரப்பில் அமர்ந்திருந்தான்.. சிந்தனைதான் சிந்திக்கிறான் சிந்திக்கிறான் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.. லீவு முடிந்து மேலும் சிலநாள் விடுப்பு எடுத்திருந்தான்..
 
நாளைக்கு வேலைக்கு கிளம்ப வேண்டும் மீண்டும் இனி இங்கு வரமனதில்லை .. அப்படியே ஆஸ்திரேலியா செல்லும் முடிவுக்கு வந்திருந்தான்.. இனி தாய்நாடே தேவையில்லை.. பணத்தை மட்டும் அப்பா பேருக்கு அனுப்பினால் போதும்..
 
அண்ணன் பற்றிய கவலைதான் அவனை அரித்துக் கொண்டிருந்தது.. அவனும் தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்துவிட்டான்.. சிறு தகவல்கூட கிடைக்கவில்லை.. இப்படியே எத்தனை நாள் இருப்பது..
 
 போலிஸ்காரர்களும் தாங்கள் விசாரித்த வகையில் அவராகத்தான் வீட்டை விட்டு சென்றிருப்பார் என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்.. அந்த பகுதியில் சல்லடையாக சலித்தாலும் எந்த தகவலும் தெரியவில்லை…
 
அப்பத்தாவும் அப்பாவும் கொஞ்சாநாள் வருத்தமா இருப்பாங்க.. அப்புறம் சரியாயிருவாங்க..!! என்ற முடிவுக்கு வந்தவன் தன்னுடைய கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் எளிதாக கழண்டு கொள்ள முடிவு செய்தான்..
 
அதைவிட சிறுவயதில் இருந்தே அவனுடைய கனவு வெளிநாடு அதை எதற்காகவும் விட்டுதர மனதில்லை.. கைக்கு வந்த வாய்ப்பை நழுவவிட முடியாது..
 
இப்போது கழுத்தில கட்டிய சுமையாக இருப்பது மலர்தான்.. என்ன பண்ணலாம் தீவிர யோசனைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தவன் வீட்டை நோக்கி நடந்தான்..
 
அங்கு இறப்புக்கு வந்திருந்த உறவுக்காரர்கள் எல்லாம் எப்போது ஊருக்கு செல்வார்கள் என காத்திருந்த கிரிதரனும் அவன் அக்காவும் மலரை அழைத்துச் செல்ல வந்திருந்தனர். .கிரிதரன் தன் அக்காவிடம் ஆடித்தீர்த்து விட்டான்..
 
“எக்காரணம் கொண்டும் மலரை என்னால விடமுடியாதுக்கா.. அவன் கல்யாணம் பண்ணாலும் பராவயில்லை அவ எனக்கு வேணும்.. நீதான் அவ உனக்குத்தான் உனக்குத்தான் சொல்லிக்கிட்டே இருந்த அதனாலதான் அவள நான் தொடக்கூட இல்லை.. எங்க போயிர போறா.. என்னைக்கிருந்தாலும் என் கைக்கு வந்திருவான்னு நினைச்சேன்.. அப்படியே வெறி வந்தவன் போல ஆஆஆஆஆஆ… கத்தியவன் அவ அழகு எனக்குத்தான் சொந்தமாகனும்..” அக்காவை வற்புறுத்தி அழைத்து வந்திருந்தான்..
 
எளிதாக சமையலை முடித்த மலர் அம்மாச்சியை கட்டாயப்படுத்தி  சிறிது தயிர் சாதத்தை ஊட்டி விட்டவள் மற்றவர்களை காணாமல் முன்னறையில் அமர்ந்திருந்தாள்.. வெளியில் சித்தியின் குரலும் கிரிதரனின் குரலும் தன்னை பெயர் சொல்லி அழைப்பது கேட்டு.. தயங்கி தயங்கி வெளியில் வர
 
மலரை பார்க்கவும் ஓடி வந்து கட்டிபிடித்து அழுத அவள் சித்தி நீலிக்கண்ணீர் வடித்து  கண்ணே மணியே என கொஞ்சியவர் ,”அங்க உன் தங்கச்சியெல்லாம் நீ இல்லாம சாப்பிடாம கிடக்குதுக.. உங்க அப்பாரையும் பார்த்துக்க ஆளில்ல.. இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்.. நீ மகாராணி மாதிரி இருந்தா போதும் ஒரு வேலையும் பார்க்க வேண்டாம் வா மலரு..?” என அவள் கையை பிடித்து இழுத்தார்..
 
தயங்கினாலும் தன் கையை அவரிடமிருந்து உதறியவள் ,”விடுங்க சித்தி நான் அங்க வரலை.. அப்பா என்னை இங்கதான் இருக்கச் சொல்லியிருக்காங்க.. நீங்க போங்க..” இவர்கள் பேச்சுக்குரல் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்க்கள் ஒவ்வொருவராக வெளியில் வர,
 
தன்னிடமிருந்து கையை உதறவும் இவளுக்கு என்ன திமிரு என் கையவே உதறுவாளா.. பயம் விட்டுப்போச்சா எல்லாரும் தன்னை ஒரு மாதிரி பார்ப்பதை பார்த்தவருக்கு அவமானமாக தோன்ற,
 
“என்ன மலரு நான்தான் நாலுவயசில இருந்து உன்னை வளர்க்கிறேன்.. யாரோ வந்து கூப்பிட்டாங்கன்னு நீ இங்க வந்தா என்ன அர்த்தம்.. என் தம்பிக்குத்தான் உன்னை பேசி முடிச்சிருந்தோம்.. இப்படி திடிருன்னு நீ இங்க இருந்துக்கிட்டா அவனோட வாழ்க்கையை பத்தி யோசிச்சியா.. ஏதோ ஒரு மஞ்சகயித்துல மஞ்சள கோர்த்து கட்டிட்டா அதெல்லாம் கல்யாணமாயிருமா.. அத கழட்டி அவங்க முகத்துல வீசிட்டு எங்களோட வா..??” தன் சத்தத்தை மெதுமெதுவாக உயர்த்தி அவளோடு சண்டைக்கு தயாராக,
 
கிரிதரன் பல்லை கடித்தான்..இந்த அக்காட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன் சண்டை வேணாம் சும்மா ஐஸ் வைச்சு பேசி கூட்டிட்டு போயிரலாம்னு சொன்னப்போ மண்டைய மண்டைய ஆட்டிட்டு இப்ப இங்க மலர பார்க்கவும் தன்னோட வேலைய காட்ட ஆரம்பிக்கிது..
 
அவரின் குரல் சத்தமாக ஒலித்து அடுத்து மலரும் அவள் தம்பியும் அங்கே ஒன்றாக குடும்பம் நடத்தியது போல அவள் ஒழுக்கத்தை பற்றி அசிங்கமாக பேச ஆரம்பிக்க பளார்.. என அறையும் சத்தம்..
 
அழுது கொண்டிருந்த மலர் நிமிர்ந்து பார்க்க அவள் தந்தைதான் இந்த அறை வைத்திருந்தார்.. இருவரும் பேய் முழிமுழிக்க ஆரம்பித்தனர்.. இவர் ஊருலதான இருந்தாரு எப்ப வந்தாரு..
 
காலையில் தன் வீட்டிக்கு சென்றுவிட்டு மதியம்தான் சிலவேலைகளை முடித்துக் கொண்டு இங்கு வந்தார்..அவர் வந்தது இவர்களுக்கு தெரியாது.. அங்கே இருப்பதாகத்தான் நினைத்திருந்தார்கள்..
 
“உங்க ரெண்டு பேருக்கும் என்னோட மக வீட்ல என்ன வேலை..??” அவர்களை முறைத்தபடி கேட்க,
 
உள்ளுக்குள் வெலவெலத்தாலும் ,”இ.. இல்ல.. அ..அதுவந்து மலர கிரிக்குத்தானே கட்டலாம்னு பேசினோம்..?”
 
“பேசினோமா யார் பேசினா நீயா பேசிக்கிட்ட..!! நீ யாரு என் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ..எவ்வளவு திமிர் இருந்தா என் பொண்ணபத்தி வாய்க்கு வந்ததை சொல்லுவ.. உன் தம்பி மொகரைய கொஞ்சம் பாரு அவன் என் மகளுக்கா.. கொன்னுருவேன் பார்த்துக்க..அவ ஒரு மகாலெட்சுமி.. மலரு எங்க இருக்கனுமோ அங்க கொண்டு வந்து சேர்த்துட்டேன்.. இப்ப மரியாதையா ரெண்டுபேரும் வெளிய போங்க..”
 
வாசலை கைகாட்டியவர் அங்கு ஊராட்கள் சிலபேர் இருக்கவும் இருவரையும் சற்று இருங்க என கைகாட்டியவர் வீட்டிற்குள் சென்று வெளியில் வந்து ஒரு பையை ராமலிங்கத்திடம் கொடுத்தார்..
 
“என்ன மச்சான் ..”அந்த பையை வாங்க யோசிக்க..
 
அவர் கையில் திணித்தவர்,” இது என் மகளுக்கு சேரவேண்டிய நகை என் முதல் மனைவியோடதும் என் பங்கும் சேர்த்து 100 பவுன் இருக்கு அதோட 3 லட்சம் பணம் வைச்சிருக்கேன் கல்யாண செலவுக்கும் சீர்வரிசைக்கும் ஏதோ என்னால முடிஞ்சது மாப்பிள்ளை.. திடிருன்னு கல்யாணம் நடந்ததால என்னால இவ்வளவுதான் பிரட்ட முடிஞ்சது.. “
 
ராமலிங்கம் பதறி அதை வாங்க மறுக்க,” இப்பவாச்சும் ஒரு தகப்பனா என்னோட கடமையை செய்யவிடுங்க மாப்பிள்ளை..?’ அவர் கெஞ்சி கேட்கவும் ஒன்றும் மறுத்து பேச முடியாமல் அதை வாங்கி மருமகளிடம் கொடுத்தார் …
அதிர்ச்சியாகி நின்றிருந்த மனைவியிடமும் கிரிதரனிடமும் திரும்பியவர்..” இதோ பாரு என் பொண்ணப்பத்தி இனி ஒருதரம் தப்பா பேசுறதா பார்த்தேன்.. அப்புறம் நீ உன் தம்பியோட உன் பிறந்த வீட்டுக்கே போயிரனும்..
 
அப்புறம் மலரா இங்க வரலை.. உங்களோட பிளான தெரிஞ்சு நான்தான் அவங்க மாமாவோட அனுப்பிவைச்சேன்.. இனி மலரு எப்பவும் இங்கதான்.. என் பொண்ண  நீ நல்லா பார்த்துக்குவன்னுதான் முட்டாள்தனமா உன்னை கல்யாணம் பண்ணினேன்.. உன்னால என் பொண்ணு அனுபவிச்சதெல்லாம் போதும்…இனி எந்த தொந்தரவு தந்தாலும் நீங்க என்னோட வேற முகத்தை பார்க்கிற மாதிரி ஆயிரும் பார்த்துக்கோ..”
 
அவர் சொன்ன எதுவுமே அவர் மனைவி காதில் விழவில்லை.. “நம்ம பீரோவுல வைச்சிருந்த நகை எப்படி இவரு கைக்கு வந்திச்சு.. ஐயோ ஒன்னா ரெண்டா நூறு பவுன் போச்சே..” அவருக்கு அந்த எண்ணம்தான்..
 
கிரிதரனை பார்த்தவர்,” நாளையில இருந்து நீ என் கடைக்கு வரக்கூடாது.. என் வீட்டுப்பக்கமும் தலைவைச்சு படுக்ககூடாது.. மற்றவர்களை பார்த்தவர்..” இவன் சரியான பொம்பள பொறுக்கி என் பொண்ண கட்டாய கல்யாணம் பண்ண பார்த்தான்..அது பிடிக்காமத்தான் நான் இங்க அனுப்பி வைச்சேன்.. தாயில்லாத பொண்ணு இனி நீங்கதான் என் பொண்ண பார்த்துக்கனும்..” ஊராட்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு,
 
ராமலிங்கத்தை பார்த்தவர் ,”நானும் கிளம்புறேன் மாப்பிள்ள அவசரமா கிளம்பி வந்தேன்.. வந்ததும் எவ்வளவு நல்லதா போச்சு..என் பொண்ண உங்க கையில ஒப்படைச்சிட்டேன் இனி அவ உங்க பொறுப்பு.தன் மகளை அழைத்தவர் மலரு அப்பா உனக்கு ஏற்கனவே சொன்னதுதான் உங்க மாமாவையும் அம்மாச்சியையும் நீதான் இனி பார்த்துக்கனும்.. இனி இதுதான் உன்னோட வீடு நான் நேரம் கிடைக்குபோதெல்லாம் உன்னை வந்து பார்த்துக்கிறேன்மா..” அவர் மனைவியோடும் கிரிதரனோடும் தன் வீட்டுக்கு கிளம்ப,
 
மலரை இந்த வீட்டில் இருந்தும் தன் வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கும் முடிவோடு வெற்றி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான்.. மலரின் வாழ்க்கை அடுத்தவர் காலில் உதைபடும் கால் பந்தின் நிலையில் இருந்தது..ஆளாளுக்கு விளையாடத் துவங்கினர்..
 
அங்கு சக்தி ரமலியோடும் வக்கீலோடும் மதுரையை நோக்கி காரில் புறப்பட்டிருந்தான். .வக்கீல் தன் காரில் வர இவர்கள் இருவரும் ஒரே காரில் வந்தனர்.. அவன் மனதிற்குள் நமக்கு பழசெல்லாம் மறந்திட்டாலும் இந்த பொண்ண முதல்லயே கல்யாணம் பண்றதா சொல்லியிருக்கோம் போல,
 
இனி என் வாழ்க்கை இந்த பொண்ணோடதான் ..இந்த பொண்ணோட எல்லா நல்லது கெட்டதுலயும கூடவே இருக்கனும்..அதோட நம்மளால முடிஞ்ச அளவு நல்ல கணவனா நடத்துக்க முயற்சி பண்ணனும்.. முடியுமான்னு தெரியலை ஆனா முடியனும்.. இருவரும் தாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழப்போகும் வாழ்க்கையை பற்றி யோசித்துக் கொண்டு வந்தார்கள்.
 
                                                         இனி……….???????

Advertisement