Advertisement

இணை தேடும் இதயங்கள்
          அத்தியாயம்  –   4
 
அப்பா என்ன பிரச்சனை “,சக்தி பதற,
தம்பி இன்னைக்கு ராத்திரியே மலருக்கு யாருக்கும் தெரியாம கோவில்ல வைச்சு கல்யாணம் பண்ண போறாங்களாம்.. அந்த கிரிதரன் கோவில்ல எல்லா ஏற்பாடும் பண்ணிட்டானாம்பா..
 
அவனை.. வந்து வைச்சுக்கிறேன்.. நான் நேரா அத்த ஊருக்கு வந்திரவாப்பா..”
 
இல்லப்பா நான் அங்க கிளம்பிட்டேன்.. நீ வீட்டுக்கு வந்திரு.. அம்மா உன் கல்யாணத்தை பார்க்கனும்னு ரொம்ப ஆசைப்படுற நீ வா..!!
 எட்டு ஊரு வந்தாலும் அப்பாவ ஒன்னும் அசைக்க முடியாது..” தன் மீசையை நீவிவிட்டவர்
ஆமா சக்தி உன்னோட வண்டி வீட்ல இருக்கு..
 
ஆமாப்பா அது கொஞ்சம் மக்கர் பண்ணுச்சு.. அதான் என் பிரண்டோட வந்தேன்.. இப்ப அடுத்த பஸ்ல நான் ஊருக்கு வந்திருவேன் என்னவாயிருந்தாலும் நீங்க போன் பண்ணுங்க.. இல்ல என் பிரண்ட்ஸ்ஸ கூப்பிட்டுக்கங்க. அவங்களுக்கு போன்ல தகவல்ல சொல்லிருரவா..
 
இல்லப்பா இத நானே பார்த்துக்கிறேன். ஆனா இங்கே உங்க அப்பத்தாதான் நானும் வருவேன்னு ஊருக்கு முன்னாடி கிளம்பி நிக்கிது.. எவ்வளவோ சொல்றேன் வேணான்னு அடங்க மாட்டேங்கிது.. பத்தாததுக்கு வீட்ல இருக்குற மிளகாய்தூள், மிளகுதூள், காய்வெட்டுற கத்தி, பாக்குரல், ஒரு பைநிறைய ஜல்லிக்கல்லை வேற எடுத்து வைச்சிருக்கு..
 
எதுக்குன்னு கேட்டா சண்டை போட உதவும்னு சொல்லுது..  இப்ப எனக்கு அப்பத்தாவ பத்திரமா கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வர்றதுதான் கஷ்டமா இருக்கும் போல இப்பத்தாண்டா தெரியுது இந்த வெற்றிப்பயலுக்கு இம்புட்டு பிடிவாதம் எங்கயிருந்து வந்திச்சுன்னு அப்புடியே எங்க ஆத்தா மாதிரி.. தன் போக்கில் புலம்பியவர் சீக்கிரமா வந்திரு சக்தி..
 
தன் அப்பத்தாவிற்கு தங்கள் குடும்பத்து மேலிருக்கும்  பாசத்தை நினைத்துப் பார்த்தவன் மணியை பார்க்க ஆறாக ஐந்து நிமிடங்கள் இருந்தது.. எட்டு மணிக்கு அவர்கள் ஊருக்கு செல்வதற்கு கடைசி பஸ் அதற்குள் வரவேண்டும் என நகைக்டைக்கு செல்ல ஆட்டோவை பிடிக்க சென்றான்..
 
 
……………….
 
அங்கு கௌசிக் தன் தாய் தந்தையிடம் குதித்து கொண்டிருந்தான்.. ரமலியை ஒருவழியாக்காமல் விடமாட்டேன் என்று, அம்மா என்னால அவள கல்யாணம் பண்ணிக்கவெல்லாம் முடியாது..
எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்திட்டா.. கைநீட்டிட்டா எவ்வளவு திமிர் உடம்பெல்லாம் திமிரும்மா.. பொண்ணா இது ராட்சசி பேசாம நானே அவள போட்டுத்தள்ள போறேன்..!!”
 
டேய் டேய் மெதுவா பேசு அண்ணி பக்கத்து ரூம்லதான் படுத்திருக்காங்க.. அவ எப்ப உன்னை கல்யாணம் பண்றேன்னு சொன்னா..!! இத்தனை நாள பொறுத்திட்ட இன்னும் பத்து பன்னெண்டு நாள்தான் அப்புறம் சொத்து நம்ம கைக்கு வந்திரும்..
 
 நீ தேவையில்லாத வேலை பார்த்து ஜெயிலுக்கு போற மாதிரி ஆக்கிறாத.. எல்லா ஆதரமும் பக்காவா அவகிட்ட மாட்டிக்கிறுச்சுன்னு சொல்ற அந்த வக்கிலுக்கும் நம்ம மேல நல்ல அபிப்ராயம் இல்லைடா.. சொத்து நம்ம கைக்கு வராம தடுக்க என்ன வழின்னுதான் யோசிச்சுட்டு இருக்காரு..
 
இவ்வளவு கோடிக்கணக்கான சொத்தும் குறையாம நம்ம கைக்கு வந்தா பரவாயில்லடா.. நானும் அண்ணன் உயிரோட இருக்கும் போது எப்படியும் அந்த ரமலிய நீதான் கட்டிக்கனும்னு உயில் எழுத வைக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன்..,
இந்த வக்கிலாலதான் நடக்காம போச்சு.. இப்பவும் நீ ஏதோ செய்ய போய் அது விபரீதமா முடிஞ்சிராம.. இப்ப பொறுமை ரொம்ப அவசியம்டா..
 
அவன் தந்தையோ,” டேய் மகனே காரியம் நடக்கனும்னா கழுதையோட காலையும் பிடிக்கலாம்.. நாம நினைச்சே பார்க்க முடியாத அளவுக்கு சொத்து வேணும்னா இந்த மாதிரி அடி அவமானங்களை எல்லாம் தாங்கித்தான் ஆகனும்..
இவ்வளவு  நாள் பொறுத்திட்ட இப்ப நாம வைக்கிற ஒவ்வொரு அடியும் ரொம்ப கவனமா வைக்கனும் பார்த்து நடந்துக்க புரியுதா.. ஆமா அவள வீட்ல காணோம்  எங்கடா தொலைஞ்சா..
 
ம்ம் புட் கம்பெனியில இருக்கிறான்னு நினைக்கிறேன்ப்பா..”
ரமலி அங்கு பைல் பார்த்துக் கொண்டிருக்க வக்கிலிடமிருந்து போன்,” ம்ம் சொல்லுங்க அங்கிள்..?”
 
ரமலி ஊட்டியில இருக்க நம்ம டீ எஸ்டேட்ல இருந்து போன் வந்துச்சு.. நம்ம எஸ்டேட்ல வேலை பார்த்த பொண்ணு ஒன்னு தற்கொலை பண்ணி இறந்திட்டதா நாம உடனே அங்க போகனும்..
 
என்ன காரணம்னு தெரியுமா அங்கிள்..?”
 
அது எதுவும் தெரியலம்மா ஆனா அங்கதான் உன்னோட ரெண்டாவது மாமாவும் அவர் மகனும் ஒருவாரம் இருந்திட்டு நேத்துதான் வந்திருக்காங்க.. அவங்களால எதாவது பிரச்சனை வந்திருக்குமோன்னு ஒரு டவுட் இருக்கு..
 நான் அங்க பக்கத்திலதான் ஒரு கேஸ் விசயமா வந்தேன்.. நான் முன்னாடி போறேன் நீ உடனே கிளம்பி வந்திரும்மா..”
 
ம்ம்ம் சரி அங்கிள்.. அடுத்த பிரச்சனையா பெருமூச்சு விட்டு தன் தாய்க்கு போன் செய்து விசயத்தை சொல்லியபடி அங்கிருந்தபடியே ஊட்டிக்கு தன் காரில் கிளம்பினாள்..
 டிரைவரை கூட்டிட்டு போம்மா தன் தாய் சொன்னதை காதில் வாங்காதவள் புயல்போல் தன் காரை கிளப்பியிருந்தாள்..
………………
மலர் கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.. என்னவோ இரண்டு நாட்களாக வீட்டில் நடப்பது சரியில்லை என அவளுக்கு தோன்றியது.. சித்தி தன்னிடம் சிரித்து சிரித்து பேசுவது ,எந்த வேலையும் சொல்லாமல் அனைத்தையும் அவர்களே செய்வது,
 
தேவைக்கு மட்டும் பேசும் சித்தி பெண்கள் இருவரும் அடிக்கடி வந்து பேசுவது, கூடவே சுற்றுவது ,தந்தை அருகில் சென்றால்கூட வால்பிடித்து பின்னால் திரிந்தார்கள்..
 
தந்தை தன்னிடம் ஏதோ சொல்வருவது போல தோன்றினாலும் தங்கைகளை பார்க்கவும் ஒன்றும் சொல்லாமல் அமைதி அடைந்துவிடுகிறார்.. சித்தியின் பார்வையும் தன்னையே நோட்டமிட்டு கொண்டிருந்ததை அறிந்தாலும் எதையும் வெளியில் காட்டாமல் எப்போதும் போலவே இருந்தாள்..
 
மலர் கோவிலுக்கு கிளம்பியவள் தன் தந்தையிடம் சொல்லிக் கொள்ள வர, தன் பர்ஸில் இருந்து காசை எடுத்தவர் மலரிடம் கொடுத்து ,”ஒரு அர்ச்சனை பண்ணிரும்மா..
 
தந்தையை பார்த்தவளை கண்ணால் பணத்தை வாங்க சொல்லி கண்ஜாடை காட்டியவர் பார்த்து செலவு பண்ணுமா.. பார்த்து என்பதில் அழுத்தத்தை கொடுக்க யோசித்தபடி வெளியே வந்தவளோடு சித்தி பெண்ணும் கூடவே வந்தாள்..
 
தன் தாயின் நச்சரிப்பு தாங்க முடியாமல் கோவிலுக்கு துணைக்கு வந்தவள் கோவில் அருகில் வரும்போதே ,”அக்கா நீ கோவிலுக்கு போ நான் பக்கத்தில இருக்க என் பிரண்ட் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்..பத்து நிமிசத்துல வந்துற்றேன் நீ சீக்கிரமா வா..” சொல்லிவிட்டு ஓட,
 
இவளை யாரு துணைக்கு வர சொன்னது எப்பவும் நாம மட்டும்தானே கோவிலுக்கு வருவோம் புதுசா என்னன்னமோ நடக்குது யோசித்தபடி பர்ஸில் இருந்து அர்ச்சனை வாங்குவதற்கு காசை எடுக்க அதிலிருந்து சிறிதாக மடித்த ஒரு பேப்பர் விழுந்தது..
 
தந்தைதான் எழுதியிருந்தார்..” ஆத்தா மலரு என்னை மன்னிச்சிரும்மா..உன்னை என்னால ஒழுங்கா பார்த்துக்க முடியல.. நல்ல இடத்திலயாச்சும் கல்யாணம் பண்ணி குடுக்கலாம்னு பார்த்தா உன் சித்தியும் அவனும் விடமாட்டாங்க போல..
 
 கிரிதரனோடு இன்று இரவு கோவிலில் கட்டாய கல்யாணம் நடத்தயிருப்பதை எழுதியிருந்தவர்.. அந்த பொறுக்கியெல்லாம் என் தங்கத்துக்கு மாப்பிள்ளையா.
நான்தான் எல்லாத்துக்கும் காரணம்.. அத நானே சரிபண்ணிட்டேன்.. உங்க மாமாக்கிட்ட தகவல் சொல்லிவிட்டுட்டேன்..
 
கோவிலின் பின் வாசலில் தாய்மாமாவும், அம்மாச்சியும் நிற்பதை எழுதியிருந்தவர் அவரோட போம்மா இனி உன் வாழ்க்கையும் எதிர்காலமும் அங்கதான் உங்க மாமா குடும்பம்தான் இனி உன்னோட குடும்பம்..
 உங்க அம்மாவோட ஆசையும் அதுதான் ..அண்ணன் பையனுக்குத்தான் உன்னை கட்டனும்னு சொல்லிட்டே இருப்பா..
 
உங்க மாமா குடும்பம் ரொம்ப நல்லவங்க என்னை மாதிரி பச்சோந்தி இல்லம்மா.. நான் என்னோட சுகத்தை மட்டுமே நினைச்சு உனக்கு சொல்ல முடியாத துரோகத்தை பண்ணிட்டேன்..
 உங்க அம்மாச்சி அன்னைக்கு என் கால்ல விழுந்து கெஞ்சினாங்க உன்னைய வளர்க்கிறேன்னு ஆனா நான் பண்ணின தப்பு எவ்வளவு பெரிசுன்னு இப்பத்தான் புரியுது..
 
இப்பவாவது என்னோட தப்பை சரிபண்ணனும்னு நினைக்கிறேன் .. இனி அதுதான் உன்னோட குடும்பம் யார் வந்து கூப்பிட்டாலும் வரக்கூடாது.. சந்தர்ப்ப சூழ்நிலையால நானே வந்து கூப்பிட்டாக்கூட வராத.. இது என் மேல சத்தியம்.. இதோடு அந்த கடிதம் முடிந்திருந்தது..
 
கடிதத்தை பார்க்கவும் கண்கலங்கி தன் தந்தையை நினைத்து பார்த்தவளுக்கு கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது.. அவனோட கல்யாணமா..  
அப்பாவ விட்டுட்டு மாமா வீட்டுக்கா அங்க அம்மாச்சி மாமாவ தவிர யாரையுமே தெரியாதே..!! தன் நிலையை நினைத்து அழுதவள் கோவிலுக்கு பின்புறம் நடக்க ஓரெட்டு எடுத்து வைக்க,
 
சரியாக அந்த நேரத்தில் வழியை மறித்தான் கிரிதரன்.. வண்டியை குறுக்க நிறுத்தவும் ஒருநிமிடம் யாரென்று நிமிர்ந்து பார்த்தவள் கிரிதரனை பார்க்கவும் அப்படியே இரண்டடி பின்னால் வைத்தாள்..
 
அவளை பார்த்து ஈஈஈ.. என இழித்தபடி,” என்ன மலரு உன்னை பார்க்கத்தான் வீட்டுக்கு போனேன்..  அக்காதான் சொன்னிச்சு நீ கோவிலுக்கு போயிருக்கேன்னு மாமாவோட வண்டியில வா ரெண்டுபேரும் ஜோடியா போவோம்..” வண்டியை ஸ்டார்ட் செய்து அவளிடம் மெதுவாக வண்டியை கொண்டு செல்ல,
 
தன் அருகில் வந்தவனை ஒரே தள்ளாக தள்ளியவள் கோவிலின் பின்புறம் ஓட இப்படி தள்ளுவாள் என எதிர்பார்க்காதவன் வண்டியோடு கீழே விழுந்திருந்தான்.. கஷ்டப்பட்டு எழுந்தவன் மலரின் பின்னாலேயே ஓடியபடி ,
ஏய் மலரு என்னாச்சு..? மாமன எதுக்கு தள்ளிவிட்ட..” கத்திக் கொண்டு அவளை நோக்கி ஓடிவந்தான்..
 
தன் மாமாவையும் அம்மாச்சியையும் பார்க்கவும்,” அம்மாச்சி ..”என கத்தியபடி அவர்களை நோக்கி ஓடிவந்தவளை அப்பத்தா கட்டி அணைத்திருந்தார்..
ஆத்தா என் செல்லமே, தங்கமே நான் என்ன பண்ணுவேன் பிள்ளை இப்படி துரும்பா இளச்சு போச்சேப்பா..” அவன் வருவதை பார்க்காமல் அவர் மலரை அணைத்தபடி பேசிக் கொண்டிருக்க,
 
ராமலிங்கத்தை பார்த்தவள்,” மா..மாமா அங்க..” தன் பின்னால் கைகாட்ட அப்போதுதான் மூச்சுவாங்க ஓடிவந்து கொண்டிருந்த கிரிதரனை பார்த்தார்கள்..
 மலரை வேகமாக காரில் ஏறச் சொன்னவர் அதற்குள் வேகமாக வந்திருந்தவனின் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதிவைத்தார்..
 
யாருவுட்டு பொண்ணுடா உனக்கு வேணும்..? எவ்வளவு கொழுப்பு உனக்கு உன் கெட்ட கேட்டுக்கு என்ற தங்கச்சி மக கேக்குதோ..?” அவனை மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டவர் காரின் முன்சீட்டில் கிடந்த அரிவாளை எடுக்க,
 அங்கு சத்தம் கேட்டு கூடியவர்கள் அரிவாளோடு ராமலிங்கத்தின் கோபமுகத்தை பார்க்கவும் அப்படியே பின்னால் போயினர்..
 
கூட்டத்தை நோக்கி தன் அரிவாளை காட்டியவர்,” மலரு என் வீட்டு மருமக அத தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.. எவனாவது தடுக்கிறதா இருந்தா முன்னாடி வா..
 
யாருமே முன்வரவில்லை அனைவருக்குமே அவள் சித்தியை பற்றியும் கிரிதரனை பற்றியும் தெரியும்.. தட்டுத்தடுமாறி எழுந்த கிரிதரனை நோக்கியவர்
 
டேய் என்ற மருமகளை கூட்டிட்டு போறேன் மீசை வைச்ச ஆம்பளையா இருந்தா தடுத்து பாருடா ..”அரிவாளை கையில் வைத்தபடி முன்சீட்டில் ஏறியவர் டிரைவரிடம் காரை எடுப்பா உத்தரவிட,
 
காரை ஸ்டார்ட் செய்யும் நேரத்தில் அப்பத்தா,” அடே தம்பி சத்தநேரம் இந்த பிளசருகார நிப்பாட்டுப்பு..” டிரைவருக்கு உத்தரவிட்டபடி கீழே இறங்கியவர்,
 
நேராக கிரிதரணிடம் சென்று தன் கையில் வைத்திருந்த மிளகாய் தூளை அவன் முகத்தில் போட்டுவிட்டு, இந்த கொள்ளிக்கண்ண வைச்சு என்ற பிள்ளை  நீ பார்ப்ப அது அவிஞ்சு போக..!!” சாபமிட்டபடி மீண்டும் வந்து காரில் ஏறி தன் பேத்தியை தன்னோடு அணைத்துக் கொண்டார்..
 
தன் கண் முன்னாலேயே மலரை கூட்டிக் கொண்டு செல்வதை கண்டவனுக்குள் வெறிவர ஓடிப் போய் தன் வண்டியை எடுத்தவன் தன் அக்காவீட்டுக்கு வண்டியை வேகமாக செலுத்தினான்..
…………………
இங்கு பஸ்ஸாண்டிற்கு வந்த வெற்றி ஏழு மணி பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தான்.. அண்ணன் திருமணம் என்றதும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தவன் ஒரு வாரம் விடுப்பு எடுத்து தன் அண்ணன் திருமணத்திற்கு தன்னுடைய பரிசாக ஒரு காரை புக் செய்து சர்பிரைஸாக கொடுக்க முடிவெடுத்தான்..
 
இரண்டு நாளில் டெலிவரி செய்துவிடுவோம் என சொல்லியிருந்தார்கள். அப்பத்தாவை கூட்டிட்டு வந்து காரை புக் செய்யவில்லையே என்ற வருத்தம் மட்டும்தான்.. நம்ம அண்ணன் புல்லட் வாங்குனதுக்கே இந்த அப்பத்தா என்னா அலப்பறை குடுத்துச்சு..
 
 இப்ப காரை பார்த்தா என்ன செய்யும் யோசித்தபடி பஸ்ஸை விட்டு இறங்கியவன் வீட்டை நோக்கி நடக்க இந்த பஸ் மட்டும்தான் ஊருக்குள் வரும் அடுத்து வரும்
எட்டுமணி பஸ் ஊருக்குள் வராமல் ஊர் எல்லையிலே இப்போது புதிதாக போட்டிருக்கும் பைபாஸ் ரோட்டிலேயே இறக்கி விட்டுவிடுவார்கள்.. ஒரு மூன்று கிலோமீட்டர் நடந்து வந்தால்தான் ஊர்வரும்..
 
தன் வீட்டின் அருகில் வரும்போதே வீட்டில் கூட்டமாக இருக்க என்னவோ ஏதோவென்று வேகமாக ஓடிவந்தான்..
அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க.. வெற்றியை பார்க்கவும் ஓடிவந்த பக்கத்து வீட்டு அப்பத்தா,” ஐயோ ராசா உங்க ஆத்தாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லையே..
 
ரொம்ப இழுவை ஆரம்பிச்சிருச்சேப்பா வீசிங் அதிகமானதை சொல்லி தன் ஒப்பாரியை துவங்க அதிர்ச்சியில் தன் பையை அங்கேயே போட்டவன் தாயை நோக்கி ஓடினான்..
 
தன் நடுங்கிய கைகளால்,” அம்மா என்றழைத்தபடி அவரை வருட லேசாக விழித்தவர் வெற்றியை பார்க்கவும் கண்களில் ஒரு ஒளி தோன்றியது போல இருந்தது..
வெ…வெ..வெற்றி..!!!” தன் பெயரை சொல்லுமுன் அவருக்கு உயிர் போய் உயிர் வந்ததை போல இருந்தது.. தன் நடுங்கிய கைகளால் மெல்ல தாயின் முகத்தை வருடியவனுக்கு கண்ணில் நீர் கரகரவென ஊற்றத்துவங்கியது..
 
சக்தி நகைக்கடையில் தாலியை வாங்கியவன் அதை தன் உள் பையில் பத்திரப்படுத்திவிட்டு தங்கள் ஊருக்கு வரும் பஸ்ஸில் ஏறியிருந்தான்..
 
                                                இனி………………???????

Advertisement