Advertisement

அனைவரும் அப்படியே ஸ்தம்பித்திருக்க ஒவ்வொரு அறைக்கும் அப்படி ஒரு சத்தம் கேட்டது.. தன் ஆத்திரம் தீரும் வரை அடித்தவள்,” யூ ஸ்கௌண்ட்ரல் யார் ஸ்கூலுக்குள்ள வந்து என்ன வேலை பார்க்கிற.. ?” அங்கு ஓரமாக நின்று அழுதுகொண்டிருந்த அந்த பத்தாம் வகுப்பு மாணவியை அருகில் அழைத்தவள் ,
 
ம்ம்ம் உனக்கு வர்ற கோபத்துக்கு என்ன செய்ய தோனுதோ செய்.. ?”
 அந்த பெண்ணின் தாய் தந்தையும் அங்குதான் நின்று கொண்டிருந்தார்கள்.. அவ்வளவு கோபத்தில் வந்தவர்கள் ரமலியின் செயலால் கொஞ்சம் மனம் நிம்மதி அடைந்து ஒதுங்கி நிற்க அந்த பெண்ணோ தன்  தாயை சரணடைந்தாள்..
 
அந்த மாணவியிடம் சென்றவள்,” எதுக்கெடுத்தாலும் அழக்கூடாது என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிக்க கத்துக்கனும்.. நீ ஸ்கூலுக்கு போன் கொண்டு வந்தது தப்பு.. பிடிப்பட்டா தைரியமா உங்க அப்பா அம்மாக்கிட்ட சொல்ற தைரியம் இருக்கனும்.. அதவிட்டுட்டு நீ வீட்டுல சொல்லாம இருக்க அவன் தவறான பாதைக்கு அழைச்சான்னு சொல்லி உன் பிரண்ட்ஸ்க்கு கிட்ட அழுதிருக்க..
 
 அந்த பொண்ணு தைரியமான பொண்ணா இருந்ததால மிஸ்கிட்ட சொல்லியிருக்கு.. அந்த தைரியம் ஏன் உனக்கு வரலை.?” அந்த மாணவியையும் ஆசிரியரையும் பாராட்டியவள் மாணவியின் பெற்றோரிடம்  மன்னிப்பு கேட்டு இதை பெரிது பண்ணாமல் விடச் சொல்லியவள்  மாணவியிடம் இனிமேல் பள்ளிக்கு போன் கொண்டுவரக்கூடாது என அறிவுரை வழங்கி அனைவரையும் அனுப்பினாள்..
 
அந்த அறையில் நின்றிருந்த அத்தை மகன் கௌசிக்கையும் அவனால் நியமிக்கப்பட்ட பிரின்ஸ்பாலையும் நோக்கி சென்று தன் போனை எடுத்து ஒரு வீடியோவை போட்டு காட்ட அதில் அந்த மாணவி தான் போனை கொண்டு வந்ததற்காக இருவரிடமும் மன்னிப்பு கேட்க அவர்கள் அவளை தவறான பாதைக்கு அழைப்பது போல, கௌசிக் அந்த பெண்ணை முத்தமிடுவதை போல முகத்தை அருகில் கொண்டுவந்து பயமுறுத்துவது  வீடியோவில் பதிவாகி அந்த மாணவி அழுதுகொண்டு வெளியில் செல்வது போல முடிந்திருந்தது..
 
இருவரும் அதிர்ச்சியுடன் அதை பார்த்தபடி நிற்க,” கௌசிக் இந்த நிமிசத்திலயிருந்து இந்த ஸ்கூலுக்குள்ள நீ கால வைக்கக்கூடாது.. மீறி நீ ஏதாவது செஞ்சா மறுநிமிசம் நீ போலிஸ் ஸ்டேசன்ல இருக்குற மாதிரி இருக்கும்.. அந்த பிரின்ஸ்பாலையும் வேலையை விட்டு அனுப்பியவள் பழைய பிரின்ஸ்பாலையே  உடனே வேலைக்கு வரச் சொல்லி போன் செய்தாள்.,
 
கௌசிக்கோ என்ன செய்வதென யோசித்தபடி அவளை முறைத்தபடி நின்றிருந்தான்.. தன்னை எல்லார் முன்னாடியும் கைநீட்டி அடித்தது.. அவமானப்படுத்தியது அப்படியே அவன் முகத்தில் அப்படி ஒரு குரூரம்..
 
என்னை நீ நினைச்சவுடன வெளியில போகச் சொல்ல முடியாது ரமலி.. உன் கைக்கும் முழுசா அதிகாரம் வரலை அதுக்கு இன்னும் பதினைஞ்சு நாள் இருக்கு.. இந்த அடிக்கும் அவமானத்துக்கும் நீ பதில் சொல்லித்தான் ஆகனும்..?” அங்கிருந்த சேரில் அமர அவள் சற்றும் பயப்படாமல் அங்கிருந்த சோபாவில்  பள்ளி தாளாளர் இருக்கையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தாள்..
வொய் மிஸ்டர் கௌசிக் இதைவிட நீ கேவலப்பட்டுத்தான் வெளியில போகனுமா.. என்கிட்ட இந்த வீடியோ மட்டும் இல்ல நீ எந்தந்த கம்பெனியில என்னன்ன பேசின செஞ்ச  உன் அப்பா செஞ்சது எல்லாமே என்கையில ஆதாரமா இருக்கு மரியாதையா நீங்களே விலகிட்டா  பரவாயில்ல..?”
 
மாமாவோட உயில்..!!” அவன் பேச ஆரம்பிக்க தன் கையை உயர்த்தி பேசவிடாமல் தடுத்தவள் வெளியே போக கையை காட்டியபடி பியூனுக்கு பெல் அடித்து வரச் சொன்னவள் ஸ்டாப் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்ய சொன்னாள்..
 
…………………………………….
இங்கு மலர் தங்கைகள் இருவரும் பள்ளிக்கு செல்லவும் பரபரவென வீட்டு வேலைகளை பார்த்தவள் பாத்திரங்களை அள்ளி தோட்டத்தில் போட்டு விலக்கிக் கொண்டிருக்க தன்னை யாரோ விடாமல் பார்க்கும் உணர்வில் திரும்பி பார்த்தாள்..  சித்தியின் தம்பி கிரிதரன்..!!
 
அவன் கண்கள் போகும் பாதையை பார்த்தவள் சட்டென சேலையை இறக்கிவிட்டு தன் கால்களை மறைத்து இடுப்பு பக்கமும் சேலையை இழுத்துவிட்டு சரிசெய்ய,” ஹிஹிஹி என இளித்தபடி அவள் அருகில் வந்தவன்,” எங்க மலரு யாரையும் வீட்ல காணோம் வீட்டை இப்படி திறந்து போடலாமா..?”
 
அவனை பார்க்கவும் மலருக்கு படபடவென வந்தது.. இவன் நடந்துக்கிறதெல்லாம் இப்ப கொஞ்சநாளா சரியில்லையே.. எதையாவது கொடுத்தால் கைய பிடித்து வாங்குவது , எதாவது கேட்பது போல அருகில் வந்து உரசிக்கொண்டு நிற்கிறான்..
 
முன்பெல்லாம் அப்பாவோடு சேர்ந்து வாழைத்தார் மண்டியில் இருந்ததால் அங்கேயே இருப்பான்.. இப்போது அப்பா வீட்டில் இருக்க உப்பு பெறாத விசயத்தை கூட அவரிடம் கேடப்து போல ஒரு நாளைக்கு நான்கைந்து முறை வந்துவிடுகிறான்..
 வந்தாலும் உடனே போகாமல் தன்னையே நோட்டமிடுவது, அதிலும் அவன் பார்வை அது ஒரு கழுகு  பார்ப்பது போல தன்னை மட்டும் வட்டமிட்டு கொண்டிருப்பதை அறிந்துதான் வேலையை முடிக்கவும் விறகுக்கு செல்வது இல்லையென்றால் கோவிலுக்கு கிளம்பிவிடுவாள்..
 
முன்பாவது இவனுக்கு அப்பாவிடம் ஒரு பயமிருக்கும் இப்போது அதுவுமில்லை போல மலருக்கு தோன்றியது. .இரண்டு நாட்களுக்கு முன்பு தன் தந்தையிடமும் இவனை பற்றி சொல்லிவிட்டாள்.. அவன் பேச்சு நடவடிக்கைகளை பற்றி சற்று நேரம் யோசித்த அவர் தந்தையோ ஒரு முடிவோடுதான் இன்று வெளியில் சென்றிருந்தார்..
 
இன்று ஹாஸ்பிட்டலுக்கு செக்கப்பிற்கு சென்றுவிட்டு வர நேரமாகும் என சொல்லிவிட்டுதான் சென்றார்.. சித்தியோ போனில் யாரிடமோ இன்று வட்டிக்கு பணம் கொடுப்பதாக பேசிக் கொண்டிருந்ததை கேட்டாள்… தன் தந்தையின் பணத்தை ஐந்து வட்டி பத்துவட்டியென வெளியில் வட்டிக்கு விட்டிருந்தாள்..
 
இப்ப வீட்ல யாரும் இல்லைன்னு தெரிஞ்சுதான் வந்திருக்கானோ.. கடவுளே இப்ப என்ன பண்றது.. அவனை லேசாக பார்க்க அவன் பார்வையும் அவளைத்தான் வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தது..
கறுத்த நிறம் கரணை கரணையாக கால் ,கைகள், வயது எப்படியும் முப்பத்தைந்தாவது இருக்கும்.. அவனை பார்க்கவே மலருக்கு மயக்கம் வருவது போலிருந்தது… நல்லவேளை வீட்டுக்குள்ள இருக்காம தோட்டத்தில நிற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்க,
 
என்ன மலரு மாமாவையே பார்த்துக்கிட்டு இருக்க மாமாவுக்கு ஒரு டம்ளர் காப்பித்தாயேன்.. அவளிடம் வழிந்தபடி சொல்ல..
என்ன செய்வது என்ன செய்வது யோசித்தவள் தோட்டத்துக்கு வெளிப்புறம் சென்று கொண்டிருந்த பக்கத்து வீட்டு காளியம்மை பாட்டியை பார்க்கவும் சட்டென முடிவெடுத்து ,”அப்பத்தா என அவரிடம் வேகமாக சென்றாள்..
என்ன மலரு..?” அவளை வாஞ்சையாக பார்க்க..
உங்ககிட்ட நான் ஐம்பது ரூபா கடன் வாங்கியிருந்தேன்ல..!! வீட்டுக்கு வாங்க இப்ப அப்பா வரவும் வாங்கி தந்துருறேன்..
 
நம்மகிட்ட எப்ப காசு வாங்கினா யோசித்தவருக்கு அவள் பின்னால் நின்றவனை பார்க்கவும் விபரம் புரிந்தது..
ஆமாத்தா காசக்கொடு வெத்தலை பாக்கு வாங்கக்கூட காசில்லாம இருக்கேன் ..” கதவை திறக்கச் சொல்லி உள்ளே வர அப்போதுதான் மலருக்கு மூச்சே வந்தது.. எங்க அப்பத்தா எப்ப காசு வாங்கினேன்னு கேட்டருமோன்னு,
 
சட்டென நூறு ரூபாயை தன் பையிலிருந்து எடுத்தவன்,” இந்தா கிழவி காசு நீ வீட்டுக்கு போ..
அந்த காசை வாங்காமல் அவனை ஒருமுறை முறைத்தவர்,” டேய் துப்பு கெட்டவனே யாரப் பார்த்துடா கிழவின்னு சொல்லுற.. எடுபட்ட பயலே.. என்ற புருசனே கண்ணம்மா, செல்லம்மான்னு தான் கூப்பிடுவாரு.. கிழவியாம்ல கிழவி… உன்கிட்ட பணம் நிறைய இருந்தா கொண்டு போயி குப்பையில போடு.. என்னமோ பெரிய இவன் மாதிரி காச நீட்டுறான்..” பேசிக் கொண்டே உள்ளே வந்தவர் சட்டமாக ஹாலில் அமர்ந்து தன் கைப்பையில் இருந்த பாக்குரலை எடுத்து அதில் வெற்றிலை பாக்கைப்போட்டு டக்கு டக்கு என இடிக்க ஆரம்பிக்க,
 
அந்த கிழவியை கோபமாக முறைத்தவன் மலருக்கு முன்னால் ஒன்றும் சொல்ல முடியாமல், ஹிஹிஹி என அசடு வழிந்தபடி,” மலரு ஒரு காப்பி கேட்டனே… அவளை கிச்சனுக்கு அனுப்ப பிளான் செய்ய,
 
அந்த அப்பத்தாவும் மெதுவாக எழுந்தவர்,” இன்னைக்கு என்ன மலரு சமைச்ச..?” பேச்சு கொடுத்தபடி அவளோடு அடுப்படிக்குள் நுழைய அவரை கட்டிப்பிடித்தவள் அவர் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்..
 
அவளை சமாதானப்படுத்தியவர்,” இவனுக்கெல்லாம் எதுக்குத்தா பயப்படுற? அந்த விளக்கமாத்து கட்டைய எடுத்து நாலு போடு போட்டா துண்டக்காணோம் துணியக்காணோம்னு ஓடப்போறான்.. எடுப்பட்ட நாயி ..?”
மலர் தன் கண்களை துடைத்தவள் அப்பத்தாவிற்கும் சேர்த்து டீ போட மனதிற்குள்ளோ  அப்பத்தா அழகா அவன சமாளிக்குதே.. அதுக்குத்தான் வீட்ல எப்பவும் பெரிய மனுச இருக்கனும்னு சொல்றாங்களோ.. தன் அம்மாச்சியின் நினைவு வர தன் அன்னை இருந்தால் இந்த மாதிரி நிலைமை வந்திருக்குமா என்ற வேதனையும் கூடவே வந்தது..
 
அவள் தந்தை வரும்வரை அப்பத்தா பேசிக் கொண்டிருக்க சற்று நேரம் இருந்த கிரிதரனுக்கோ இன்னைக்கு இந்த கிழவி வீட்டுக்கு போகாது போல நாம கிளம்ப வேண்டியதுதான் இன்னொரு நாளைக்கு இந்த மாதிரி சந்தர்ப்பம் அமையுமா.. மலரை மேலிருந்து கீழாக பார்த்தவன் இந்த அழகு நமக்கு எப்ப சொந்தமாகும் பெருமூச்சு விட்டபடி வெளியில் கிளம்பியிருந்தான்..
 
மலர் தந்தை வரவும் அப்பத்தாவுக்கு நூறு ரூபாய் பணமும் வாங்கி கொடுத்து வெற்றிலை பாக்கு வாங்கி கொள்ள சொல்லி பணமும் கொடுத்தாள்.. காளியம்மை அப்பத்தாவோ மலர் அடுப்படியில் வேலை பார்க்கும் நேரத்தில் இங்கு அந்த கிரிதரன் வந்ததை மலர் அழுததை  சொல்ல வேதனையில் கண்மூடியிருந்தவர்.. நம்ம பொண்ணு இதுமாதிரி எத்தனை சோதனையை சந்திச்சாளோ ஒரு முடிவோடு போனை எடுத்து டயல் செய்ய ஆரம்பித்தார்..
 
இரண்டு நாள் கழித்து ஒரு மாலை பொழுதில் சக்தி தனக்கு போன் வர தந்தையின் நம்பரை பார்த்து,” ம்ம் சொல்லுங்கப்பா..
 
எங்க சக்தி இருக்க..
இங்க டவுனுக்கு வந்தேன்பா கொஞ்சம் வேலையிருந்துச்சு..
 
தம்பி வேலையை அப்புறம் பார்த்துக்கலாம் நீ என்ன பண்ற அங்கதான நாம எப்பவும் நகை வாங்கிற நகைக்கடை இருக்கு.. அவங்ககிட்ட உனக்கும் மலருக்கும் நடக்கிற கல்யாணத்துக்கு தாலி செய்ய சொலியிருந்தேன்.. அதை கொஞ்சம் வாங்கிட்டு வந்திருப்பா கொஞ்சம் வெரசா வா…. இங்க கொஞ்சம் பிரச்சனையாயிருச்சு…?”
 
                                                  இனி………….????

Advertisement