Advertisement

தொங்கிப்போய் வெளியில் வந்த பிஏவை சக்தி தன் பங்குக்கு ரெண்டு வைத்தவன்.. ராமலிங்கம் போன் செய்து அங்கு ஹோட்டல் கட்டும் இடத்திற்கு வரச் சொல்ல உள்ளே ரமலி வேலையில் இருக்கவும் அவளை தொந்தரவு செய்யாமல் வந்தபடியே கிளம்பிவிட்டான்.. அங்கு வேலை முடியவே மணி இரண்டாயிற்று பசி வயிற்றை கிள்ள ரமலி சாப்பிட்டாளா. தெரியாமல் அவளுக்கு போன் செய்ய,
 
ஹலோ பெரியத்தான் நான் மலர் பேசுறேன்..?”, மெல்லிய ரகசிய குரலில் பேச,
 
இவனுக்கு ஆச்சர்யம்,” மலரு இங்க வந்திருக்கியா என்ன..? ரமலி போன் உன்கிட்ட எப்படி.?. இப்படி நேரத்தில நீ அலையலாமா..??”
 
அத்தான்.. அத்தான் அக்காதான் இங்க வந்திருக்காங்க.. காலையில பதினோரு மணிக்கே வந்திட்டாங்க.. நான் மாசமா இருக்க விசயத்தை நீங்க சொல்லலையா.. ரொம்ப கோபமா இருக்காங்க.. அதோட திருவிழாவையும் சொல்ல மறந்திட்டிங்க போல அதுவும் அக்காவுக்கு கோபம்..” அவள் ரகசிய குரலில் சொல்ல,
 
சக்தியோ ஆஹா சொர்ணாக்கா அங்க போயிட்டாளா நம்மகிட்ட ஒருவார்த்தை சொல்லலை..,” ம்ம்ம் அது சரி மலரு நீயேன் இவ்வளவு மெதுவா பேசுற..?”
 
அதுவாத்தான் அக்காதான் அவங்க இங்க வந்தத உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க.. பாவம் நீங்க அவங்கள தேடுவிங்க தானே.. அதான் இப்ப நானே சொல்லிட்டேன்..
 
ஹாஹாஹா..” சிரித்தவன் அவள் உடல்நலத்தை விசாரித்து எல்லாரின் நலனும் விசாரித்து போனை வைத்தான்..
 
ரமலிக்கு இன்று காலை அலுவலகத்திற்கு சென்றாலும் சக்தியின் கோபவார்த்தை காதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது.. நீ அப்பத்தாக்கிட்ட மன்னிப்பு கேட்காம உன்கிட்ட பேச மாட்டேன்னு சொன்னது அதைவிட அப்பத்தாவும் சட்டென ஊருக்கு கிளம்பி போனது அவளுக்கு ஏதோ போலிருக்க நேரில் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டுத்தான் மறுவேலை என்று சென்றுவிட்டாள்..
 
ரமலியை பார்க்கவும் பெண்கள் மூவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.. வெற்றி வேலையாக வெளியில் சென்றிருக்க ரேணுகாவிற்கு ஒரு நிமிடம் கண்கள் கலங்கிவிட்டது எங்கே மகள் அவள் வாழ்க்கையை கெடுத்துக் கொள்வாளோ என்று பயந்து போயிருக்க இப்போதுதான் நிம்மதி அவரிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் மலரிடமும் அம்மாச்சியிடமும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் மலர் உண்டாயிருப்பது தெரிந்து அவ்வளவு மகிழ்ச்சி.. சக்தி இதைக்கூட தன்னிடம் சொல்லவில்லையே என்ற கோபம்..
 
தனிமையில் அப்பத்தாவின் கையை பிடித்தவள்,” ஸாரி அம்மாச்சி..  நான் தெரியாம பேசிட்டேன்.. மன்னிச்சுக்கோங்க.. ஏதோ வேற டென்சன்ல இருந்தேன்..
 
அவளை சமாதான படுத்தியவர், விடுத்தா விடு நான் அத அப்பவே மறந்திட்டேன்.. இதுக்காகவா இந்த வெயில்ல இவ்வளவு தூரம் ஒத்தையில வந்த.. அதான் நேத்தே உன் புருசன் உனக்காக என்கிட்ட அவ்வளவு மன்னிப்பு கேட்டான்.. மலர் மாதிரி நீயும் நல்ல சேதிய சீக்கிரமா சொல்லு எங்களுக்கு இன்னும் ரொம்ப சந்தோசமா இருக்கும்..” பேச்சோடு பேச்சாக அப்பத்தா இதையும் சொல்லி வைக்க,
 
அம்மாச்சி நான் அவங்களையும் அப்படி பேசினது தப்புதான்..?”
 
அட விடுத்தா அதான் உன் புருசன் சொல்லிட்டானே நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு அடிச்சிக்குவோம் நாளைக்கு கொஞ்சிக்குவோம்னு அப்புறம் ஏன் நான் வாய திறக்கப் போறேன்..
 
ரமலிக்கு இன்னும் சந்தோசம் நமக்காக சக்தி அங்க அம்மாச்சிக்கிட்ட பேசினானா.. அவர்களோடு அரட்டை அடித்தபடி பேசிக் கொண்டு மதிய சாப்பாட்டை சாப்பிட்டாள்.. தான் பேசாமல் போனாலும் வலிய வலிய வந்து ரேணுகா பேசிக் கொண்டிருக்க சிறிது நேரத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாதவள் தன் தாயின் மடியில் தலைவைத்து படுத்துவிட்டாள்..
 
ம்மா நீங்களும் என்னை விட்டுட்டு இங்க வந்துட்டிங்கள்ல..?”
 
அவள் தலையை வருடிக் கொடுத்தவர், அதனாலதாண்டா நீ இங்க வந்த.. தம்பியும் நைட்டு அங்க வந்தாங்க.. நான் அங்கேயே இருந்திருந்தா ஒருவேளை தம்பி இங்கயே தங்கிட்டா என்ன பண்ணுறது அதான் உன்னை விட்டுட்டு வந்தேன்.. எனக்கும் உங்க ரெண்டு பேரையும விட்டா வேற யார் இருக்கா சொல்லு..?”
 
ம்மா அவரின் பாசத்தின்முன் அவர் மடியில் சிறு குழந்தையாய் மாறியிருக்க தன் தாய் சொன்னது அனைத்தும் உண்மை என புரிந்தவள்.. இப்ப நீங்களும் அம்மாச்சியும் ஊருக்கு கிளம்புறிங்களாம்மா..
 
இல்லடா சின்ன மாப்பிள்ள எங்கள நம்பித்தான் மலர விட்டுட்டு போயிருக்காரு.. புள்ளையும் காலையில இருந்து ரெண்டு மூனுதரம வாந்தி எடுத்திருச்சு.. நாங்க இங்கயே இருக்கோம்.. அப்புறமா வர்றோம்.. மலருக்கும் வேற யார் இருக்கா..
 
மலரை அழைத்து ரமலி தன் தாயோடு அவர் மடியில் படுக்க வைக்க மலருக்கும் தன் தாயின் நினைவு.. இரவெல்லாம வெற்றிதான் தாயாக அவளை மடிதாங்குகிறான்.. தன் கணவன் நினைவு வர வெற்றியே அங்கு வந்திருந்தான்..
 
ரமலியோடு ,”அண்ணி என சற்று நேரம் பேசியவன் கண் நொடிக்கொருதரம தன் மனைவியை வருடிச் சென்றது.. அவனை பார்க்கவும் காப்பி போடலாம் என மலர் கிச்சனுக்குள் நுழைய பின்னாலேயே வெற்றியும சென்றிருந்தான்..
 
அவள் கையை பிடித்து தன்னை பார்க்கச் செய்தவன்,” என்ன அம்மு முகம் வாடிப் போயிருக்கு.. உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா..?”
 
அவன் மார்பில் சாய்ந்தவள்,” இல்லத்தான் அம்மா நியாபகம் வந்திருச்சு அதான்..
 
அவளை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவன்,” ஏய் உனக்கு அம்மா அப்பா எல்லாமா நான் இருக்கேன்டா.. எதுக்கும் கவலைப்படாத..” காப்பியை அவனே போட்டவன் அவளுக்கு கொடுக்க அதை வாங்காமல் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்..
 
இந்த மாதிரி நேரத்தில் அவள் உடலில் ஏற்படும் மாற்றங்கள்தான் என்பதை உணர்ந்தவன் அவள் மூடை மாற்றுவதற்காக அவளை தன் அறைக்குச் தூக்கிச் செல்ல ஐயோ அத்தான் விடுங்க அக்கால்லாம் இருக்காங்க..??”
 
இருக்கட்டும்டி கொஞ்சநேரம் அத்தான கவனி அப்புறமா அக்காவ கவனிக்கலாம்..
அவனிடமிருந்து திமிறி இறங்கியவள் ,”போதும் அத்தான் நைட்டு கவனிக்கிறதே போதும் ஆள விடுங்க ..”அவனிடமுருந்து விலகி அவர்களை நோக்கி ஓட அவளின் சிரிப்பை பார்த்தபடி தன் அறைக்குள் நுழைந்தான்..
 
மாலை ஐந்துமணி ஆகவும் ரேணுகா இருவருக்கும் தலைவாறி தலைநிறைய மல்லிகை பூவை வைத்துவிட ரமலி ஊருக்கு கிளம்புவதாக சொல்லவும் அனைவரும் நாளைக்கு செல்லலாம் என தடுக்க அவளுக்கு சக்தியை பார்க்க வேண்டும் போல இருந்ததால் சக்தியோடு திருவிழாவுக்கு வருவதாக சொல்லி கிளம்பிவிட்டாள்.. ரேணுகாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி தன் மகள் வாழ்க்கையில் இனி அவள் கணவனோடு சேர்ந்து வாழ்ந்துவிடுவாள் என,
 
ரமலி ஊருக்கு வர மணி ஏழுக்கு மேலாகியது வீட்டிற்கு வரும்போது சக்தியின் காரை காணவில்லை.. இன்னும் வரலையோ நம்மள தேடியிருப்பானா.. அவளுக்கு என்னவோ புது பெண்ணை போல வெட்கம் வந்தது..  சேலையை மாத்தலாம் என மாடியேறியவள் பின் ஏதோ தோன்ற இறங்கி வந்தாள்.. ஹாலில் டிவியை போட்டு எல்லாச் சேனலையும் மாற்றி பின் எதுவும பிடிக்காமல் ஏதோ ஒரு பாடல் சேனலை வைக்க சக்தியிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என யோசித்துக் கொண்டிருந்தாள்..
 
சக்தி வெற்றிக்கு போன் செய்து ரமலி ஊருக்கு வந்துவிட்டதை தெரிந்து கொண்டவன் அந்த புது பிராஜட் வேலை இழுத்துக் கொள்ள வீடு வரவே  மணி எட்டரைக்கு மேலாகியது..
 
உள்ளே நுழைந்தவன் ஹாலில் இருந்த ரமலியை பார்க்க காலையில் இருந்ததை விட ப்ரெஷ்ஷாக தலை நிறைய பூவோடு கண் மட்டும் டிவியை பார்க்க சிந்தனை அவளுக்கு வேறெங்கோ இருப்பது தெரிந்தது.. மாலையே அப்பத்தாவும் போன் செய்து ரமலி தன்னிடம் மன்னிப்பு கேட்டதை சொல்லி தனியாக அவளை மட்டும் ஏன் அனுப்பி வைத்தாய் என திட்டியிருக்க அந்த திட்டு எல்லாம் அவனுக்கு பூமழையாய்தான் பொழிந்தது..
 
நாம சொன்னதுக்காக மன்னிப்பு கேட்டாளா.. அவனும் அவள் அருகில் அமர்ந்து டிவியை பார்க்க அங்கு முகேன் பாடலை பாடிக் கொண்டிருக்க,
 
                                                                               “   நீதான் நீதான்
                                                                        நீதாண்டி எனக்குள்ள
                                                                   நான்தான் நான்தான்
                                                                         நான்தான்  உன் புள்ளஎன் புள்ள ..
                                                        
                                                          சாத்தியமாநான் சொல்லுறேண்டி
                                                                        உன் பார்வை ஆள தூக்குதடி
                                                          சத்தியமா நானும் பாத்துக்குறேன்
                                                                        உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி..”
 
 
அந்த பாடலை தானும் ரசித்தவன் சற்று பொறுத்து ரமலியை கவனிக்க அவள் தன் நினைவுக்கு திரும்பாததை கண்டு சத்தமாக கிச்சனை நோக்கி,” அக்கா டிபன் ரெடியா..?’ என கேட்க சத்தத்தில் தன் நினைவு வந்தவள் சக்தியை பார்க்கவும் தான் யோசித்தது எதுவும் நினைவுக்கு வராமல் மாடியேறினாள்..
 
சக்தியும் அவள் பின்னால் வந்தவன் தன் உடை மாற்றி குளித்து வர அதுவரை கட்டிலில் உள்ளறையில் அமர்ந்திருந்தாள்..
 
என்னாச்சு மேடத்துக்கு இவ இவ்வளவு அமைதியாவெல்லாம் இருக்க மாட்டாளே.. அவள் புறம் சென்றவன் தான் நேற்று அடித்த கன்னத்தை தடவி,” ஸாரிடி நான் அப்படி அடிச்சிருக்க கூடாது.. ரொம்ப ஸாரி.. இனிமே இப்படி செய்ய மாட்டேன்.. இன்னும் அமைதியாக இருக்கவும் வேணும்னா நீ என்ன ரெண்டு அடி வைச்சிக்கிறியா..?” தன் கன்னத்தை அவளிடம் காட்ட,
 
அறைவது போல கையை கொண்டு வந்தவள் அந்த கையை அவன் கன்னத்தில வைத்து மறுகன்னத்தில் தன் இதழை புதைத்திருந்தாள்..
 
சக்தி கண்ணை விரித்து அவளை பார்க்க விரும்பியே அவன் விழியில் விழுந்தவளை அப்படியே தன் கைகளில் அள்ளியிருந்தான்..
 
                                          இனி………….?????
 

Advertisement