Advertisement

இணை தேடும் இதயங்கள்
                          அத்தியாயம்  –  26
 
ரமலி சக்தியின் கையை பிடித்தபடி உறங்கியவள் சற்று நேரத்தில் அவன் மார்பில் முகம் புதைத்து உறங்க முயல அவள் அடிப்பட்ட கன்னம் அவன் சட்டை பட்டனில் பட்டு உறுத்தவும் வலியில் ஸ்ஸ்ஸ் என சத்தம் எழுப்ப அதுவரை அவளை அணைத்து படுத்துகிடந்தவன் மெதுவாக அவள் உறக்கம் கலையாதவாறு தன் பட்டனை கழட்டிவிட சுகமாக அவன் வெற்று மார்பில் தன் தூக்கத்தை தொடர்ந்தாள்..
 
அவள் மூச்சுக்காற்று அவன் மார்பில் சுட அவள் உச்சியில் முத்தத்தை பதித்தவன்  இறுக அணைத்துக் கொண்டு அவள் அண்மையை ரசிக்க ஆரம்பித்தான்.. எப்போதும் உள்ள பழக்கம் போல தான் சக்தியின் மார்பில் படுத்திருப்பதாக நினைத்தவள் படுத்தபடியே அவன் தூங்கும் முகத்தை பார்க்க தலையை தூக்கியவளுக்கு தான் தலகாணியில்தான் முகம் புதைத்திருப்பது தெரிந்தது..
 
நேற்று நடந்ததெல்லாம் நினைவுக்கு வர சட்டென அறையை விட்டு வெளியில் வந்தவள் அடுத்த அறையில் சக்தி உறங்குவதை கண்டவளுக்கு  நிம்மதியோடு ஏதோ ஒரு ஏமாற்ற உணர்வு பரவுவதை தவிர்க்க முடியவில்லை..
 
சரண் சக்தியாக மாறி இங்கு வந்த நான்கைந்து மாதங்களில் ஒரு நாளும் அவன் அவளை விட்டு விலகியதில்லை.. அவள் முரண்டுபிடித்தாலும் இருவரும் ஒரே அறையில்தான் படுத்திருந்தனர்.. வெளியில் அவனை பிடிக்காதது போல காட்டிக் கொண்டாலும் அவள் உள்மனது அவனது அண்மையை, முத்தத்தை, அணைப்பை வெகுவாக ரசிக்க ஆரம்பித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது..  அவன் அருகில் சென்றவள் அவன் தூங்கும் முகத்தை ரசிக்க கூடவே அவனது கோபமும் நினைவுக்கு வந்தது.. அவனது அலைஅலையான கேசம், அவன் மீசை, கன்னம் என அனைத்தையும் ரசித்தவள்,
 
அப்படியே திரும்பி கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க கன்னத்தில் நேற்று இருந்தது போல இருக்காமல் லேசாக வரி வடிவமாக அவன் கைவிரல் தெரிந்தது.. நேற்றிலிருந்து அவள் யோசித்தது ஒன்றுதான் அவனை எத்தனையோ முறை என்ன பேசினாலும் திட்டினாலும் கண்டு கொள்ளாமல் இலகுவாகவே எடுத்துக் கொள்பவன், தான் திட்டியதையே தன் அணைப்பாலும் முத்தத்தாலும் மறக்கச்செய்பவன், தன்னை அடித்தவனையே மன்னித்து வேலைப் போட்டுக் கொடுத்தவன் அவனுக்கே இவ்வளவு கோபம் வருகிறதென்றால் தான் அப்படி பேசியிருக்கக் கூடாது என்பதுதான், தன் தவறும் புரிந்தது.. அதைவிட அவனுக்கு அவன் குடும்பம் எவ்வளவு முக்கியம் அவர்கள் மேல் உள்ள பாசமும் தெரிந்தது.. ச்சே நாமளும் அம்மாச்சியை அப்படி பேசியிருக்கக் கூடாது ..
 
நேற்று அவர்கள் ஊருக்கு சென்றதிலிருந்து அழுது கொண்டே இருந்தவளுக்கு சற்று நேரத்திலேயே புத்தி தெளிய ஆரம்பித்துவிட்டது.. தன் காலடியில் சிதறிக் கிடந்த போனை பார்த்தவள் அதை உடைத்ததற்கு கூட தன்னை அடிக்கவில்லை என்பதும் நியாபகத்திற்கு வர, தன் தாய்க்கு தெரிந்த அளவுக்கூட நமக்கு சக்தியை தெரியவில்லையோ.. நாமும் சற்று நிதானமாக பேசியிருக்கலாம்.. அப்படியே யோசனையிலேயே இருந்தவள் தூங்கிப் போக மாலைதான் கண்விழித்தாள்..
 
கண்விழித்தவளுக்கு இப்போதுதான் தன் தனிமை தெரிந்தது.. இத்தனை நாட்களில் அவன் வேறு எங்கு சென்றாலும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை எங்கு இருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்வான்.. லேசாக குரலில் சோர்வு தெரிந்தாலோ இல்லை குரல் மாற்றமாக உணர்ந்தாலோ அடுத்த அரை மணி நேரத்தில் அவள் கண்முன் நிற்பவன், அவள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை தான் பார்த்துக் கொண்டு அவளை ஒய்வெடுக்கச் சொல்லிவிடுவான்..
 
வேலைமுடிந்தாலும் தலைவலியென்றால் நெற்றியை நீவி விடுவது ஜலதோசம் என்றால் சுடுதண்ணீர் காயவைத்து கொடுப்பது என ஒரு குழந்தையை கவனிப்பது போல கவனித்துக் கொள்வபவன் இன்று இவ்வளவு நேரமாகியும் தன்னை தேடவில்லை.. தான் ஒருத்தி தனியாகவே வளர்ந்தவளுக்கு அவன் செய்த செயல் எல்லாம் ஒரு மகாராணியாய் தன்னை உணர்த்தியது.. அவனது அண்மை அவளை மாயம் செய்திருந்தது..
 
இன்று அவன் அடித்ததோடு இல்லாமல் கண்டு கொள்ளாமல் விட்டுச் சென்றது, சாப்பிட்டாயா என கேட்கக்கூட ஆளில்லாமல் இருப்பது, அதுவே அவளுக்கு கண்ணீரை வரவழைக்க, தன் தாயும் அங்கு சென்றது இவ்வளவு பெரிய பங்களாவில் தான் மட்டும் தனியாக தனிமையும் சேர்ந்து இனி சக்தி இங்கு வரமாட்டானோ அங்கேயே தங்கி கொள்வானோ என ஏதேதோ தோன்ற அழுகை நிற்கவேயில்லை… இப்போதுதான் சக்தி தன் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதை உணரத்துவங்கினாள்..  அழுதழுது அப்படியே உறங்கிவிட சாப்பிடாமல் படுத்தது இப்போது அவளுக்கு பசியை தூண்டியது..
 
சக்தி ரமலியோடு படுத்திருந்தவன் விடியற்காலையில்தான் இந்த அறைக்கு வந்தான்.. மங்கம்மா எழுந்தா சாமியாடுவாளே என.. அதோடு அடித்தது வேறு அவனுள் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியிருக்க இப்போதும் அரைக்கண்ணால் ரமலியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் தன்னை வந்து பார்த்தது கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தது என.. போச்சு நம்மள எழுப்பி சண்டை போடப்போறாளோ.. சக்தி எதுக்கும் தயாரா இருந்துக்கோ அவன் கண்ணைத்திறக்காமல் இருக்க அவன் அருகில் வந்தவளுக்கு,
 
இப்போது சக்தியை பார்க்கையில் நம்மள விட்டுட்டு போகலை திரும்பி வந்துட்டான் என்பது நிம்மதி தந்தாலும் அவளை விட்டு தனியாக படுத்தது ஏமாற்றத்தை தந்தது .. அவன் முகத்தை பார்க்க தூங்குவது போல இருக்கவும் மெதுவாக அவன் கையை தூக்கிப் பார்த்து,
 
மெதுவாக அந்த கையை தன் கன்னத்தில் வைத்துப் பார்த்தாள்.. இப்போது அவளுக்கு நடிகர் செந்திலும் கவுண்டமணியும் பேசுவது போல சந்தேகம் வந்தது.. அறைஞ்சா பளார்ன்னு அவ்வளவு பெரிய சத்தம் எங்கயிருந்து வந்திச்சு.. இந்த கையில இருந்தா இல்ல நம்ம கன்னத்தில இருந்தா..??” இன்னொரு தரம் அவள் கன்னத்தில் வைத்துப் பார்க்க சக்திக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. அவள் வாய்விட்டுத்தான் இப்போது பேசிக் கொண்டிருந்தாள்.. டேய் உலக்கையை கையா வைச்சிருக்கியா.. ம்மா என்ன அடி..??” அவன் லேசாக திரும்பி படுக்க அவன் கையை விட்டவள் வேகமாக பாத்ரூமிற்குள் நுழைந்திருந்தாள்..
 
தலகாணியில் முகத்தை புதைத்து சிரித்து முடித்தவனுக்கு இந்தம்மா பார்க்கத்தான் டெரர் பீஸ் போல காமெடி பீஸ்தானா.. அவளின் மேல் இன்னும் காதல் பெருக அவளுடன் சேர்ந்து வாழும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தான்.. நேற்றும் தொழிலை பார்க்காமல் இன்று இப்படி படுத்திருப்பது தவறென புரிய , இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான அந்த பிஏவையும் தனியாக கவனிக்க வேண்டியருந்தது..
 
சக்தி எழுந்து உள்ளறையில் இருக்கும் பாத்ரூமில் குளித்து கிளம்பி வர ரமலியும் அங்கேதான் கிளம்பினாலும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை.. ரமலி சக்திக்கு இன்னும் தன் மேல் கோபம் குறையவில்லையோ என நினைக்க சக்திக்கு இந்த சண்டைக்காரி சண்டைய ஆரம்பிச்சிருவாளே.. ஆரம்பிச்சா சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்திருக்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் பேச்சு எழவில்லை..
 
ரமலி இன்று சேலை அணிந்து வர அவனுக்கு காண்டாக இருந்தது.. நாம நல்லா பேசும்போதெல்லாம் அங்கி மாதிரி மேலயிருந்து கீழவரைக்கும் ஒரே டிரெஸ்ஸா போட்டிருப்பா இப்ப பாரு சேலையில இருக்கா.. அவனுக்கு அவளை இன்று கண்டிப்பாக இறுக்கி அணைத்து ஒரு முத்தமாவது கொடுக்க வேண்டும் போலிருக்க என்ன கோக்குமாக்கு பண்ணலாம் என யோசித்துக் கொண்டிருந்தான்.. இருவருக்கும் டிபனை எடுத்து வைத்த வேலைக்கார அக்காவிடம்,
 நீங்க உள்ளே போய் வேற வேலைய பாருங்கக்கா நாங்களே டிபன வைச்சிக்குறோம்..??”
சரி தம்பி..” அவர் உள்ளே செல்ல,
 
 ரமலி நல்ல பசியில் இருந்ததால் அவள் சாப்பிடுவதில் குறியாய் இருக்க அவன் அவளை பார்வையால் சாப்பிட்டு கொண்டிருந்தான்..டக்கென ஒரு யோசனை தோன்ற கிளாஸில் இருந்த தண்ணீரை கீழே ஊற்றியவன்  தன் போக்கில் சாப்பிட ஆரம்பித்தான்..
 
இதை அறியாத ரமலி சாப்பிட்டு கைகழுவ சென்றவள் அந்த தண்ணீரில் கால்வைத்து வழுக்கி சக்தியின் மேலேயே விழுந்திருக்க அவள் உதடு அவன் கன்னத்தில் அழுத்தியிருந்தது…. உள்ளுக்குள் தன்னையே மெச்சிக் கொண்டவன் அந்த முத்தத்தை ஆழ்ந்து ஒரு நிமிடம் ரசிக்க கையோ அவளை தூக்குவது போல அவள் வெற்றிடையை சோதித்துக் கொண்டிருந்தது..
 
முதலில் தவறி விழுந்துட்டமோ எப்படி விழுந்தோம் என தெரியாமல் பதறி எழ முயன்றவள் இப்போதுதான் உணர்ந்தாள் அவனின் கையை அழுத்தத்தை..  இவன் என்ன பண்றான் எழ முடியாமல் அவன் மார்பில் கைவைத்து எழ சக்தியோ அவளை முறைத்தபடி,
 
பார்த்து நடக்கமாட்டியா கண்ண எங்க வைச்சு நடக்குற..?” கோபம் போல பேசிவிட்டு வேகமாக சென்று கைகழுவி வெளியில் வந்தவன் தனக்குத்தானே கைகொடுத்துக் தன் கன்னத்தையே பிடித்து முத்தமிட்டுக் கொண்டான்..
 
ரமலி வருவதற்குள் வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்ப வெளியில் வந்து பார்த்த ரமலி சக்தியை காணாமல் இன்னும் கோபமாத்தான் இருக்கான் போல நினைத்தவள் தன்னுடைய காரை தன் கன்ஷ்ட்ரக்சன்ஸ் கம்பெனிக்கு விட்டாள்..
 
அவன் பள்ளியில் இருக்கும் போது பியூன் வந்து ஒரு பார்சலை கொடுத்துவிட்டு மேடம் கொடுத்துவிட்டதாக சொல்ல அதில் இப்போதைய மாடல் செல்போன் அவனுடைய சிம் போடப்பட்டிருந்தது.. அந்த பேப்பரில் ஸாரி என எழுதப்பட்டிருக்க அதை பார்த்தவனுக்கு சிரிப்பு இவ நம்மள ஐஸ்வைக்கிறாளா.. அப்போதே அவளை பார்க்க வேண்டும் போலிருக்க அவள் எங்கு இருக்கிறாள் என்பதை விசாரித்தவன் அந்த கம்பெனிக்கு செல்ல காரை செலுத்தினான்..
 
அங்கு ரமலி போனில் தன் மாமன்களை லெப்ட் ரைட் வாங்கி கொண்டிருந்தாள்.. அவளின் கோபக்குரல் கேட்டு உள்ளே செல்லாமல் வெளியிலிருந்து அவளை ரசிக்க எதிரில் அந்த பிஏ நடுங்கியபடி நின்றிருந்தான்..  அவனை பளார் என அறைந்தவள்,
 
 நீ அந்த சிமெண்ட்காரனும் எங்க மாமாவும் சொன்னாங்கன்னுதான ஆடுன .. அந்த சிமெண்ட் எல்லாம் கலப்படம்னு இப்ப சிமெண்ட் கம்பெனி மூட கவர்மெண்ட் ஆர்டர் போட்டிருக்கு.. அப்புறம் எங்க மாமாக்கள் மேல நாங்க போட்டிருக்கிற கையாடல் கேஸ்ல அவங்க இன்னும் கொஞ்ச நாள்ல நடுரோட்டுக்கு வந்துருவாங்க நீயும் அவங்களோட போய் ரோட்ல நில்லு.. வெளிய போ என் முகத்திலயே முழிக்காத..??” வெளியே கையை காட்டியவள் அங்கிருந்த சோபாவில் ஓய்ந்து போய் அமர,
 

Advertisement