Advertisement

இணை தேடும் இதயங்கள்
                                                  அத்தியாயம்  –  25
 
சக்தி கொடுத்த அறையில் ரமலி அப்படியே அதிர்ந்து போய் நிற்க அவளை நோக்கி விரலை நீட்டி எச்சரித்தவன், யார்கிட்ட என்ன பேசுற.. பல்லை பேத்துருவேன் பார்த்துக்க.. ??”தன் வேட்டியை மடித்து கட்டியபடி அப்பத்தாவின் கையை பிடித்து வெளியில் அழைத்து வர,
 
வாழ்வில் முதல் முதலாக வாங்கும் அறை, கன்னத்தில் ஐந்து விரலும் பதிந்து அப்படியே சிவந்து போய்விட்டது.. சக்தியை இலகுவாகவே பார்த்திருந்தவள் அவனின் கோபமுகத்தை பார்த்து வெலவெலத்துவிட்டாள்.. அவளுக்கும்தான் கோபம் வரும்,, கோபம் வந்தால் சட்டென கைநீளும்.. ஆனால் இப்படி ஒரு அறையை சக்தியிடம் எதிர்பார்க்கவில்லை..
 
அப்பத்தா சக்தியை முறைத்தவர், என்னப்பு இது பொம்பள புள்ளைய கைநீட்டுற வேலை.. இத உன்கிட்ட நான் எதிர்பார்க்கல.. ? நீங்க ஏதோ பேசிக்கிட்டு இருக்கிறது தெரியாம  நான்தான் தேவையில்லாத நேரத்தில உள்ள நுழைஞ்சிட்டனோ..??”
 
தன் அப்பத்தாவை கட்டி அணைத்தவன் அவர் கன்னத்தில் முத்தமிட்டு, அப்பத்தா நீங்க எப்ப வேணும்னாலும் உள்ள வரலாம்.. நான் எப்பவும் உன்னோட பேரன் அதே சக்திதான் என்ன வீடுமட்டும்தான் மாறியிருக்கு மத்தபடி எதுவுமே மாறல.. அவளுக்கு கொஞ்சம் பேய் பிடிச்சிருக்கு அத ஓட்டத்தான் இப்ப அடிச்சேன்.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. நாங்க ரெண்டுபேரும் புருசன் பொண்டாட்டி .. இப்ப அடிச்சுக்குவோம் அப்புறம் கூடிக்குவோம்.. நீங்க கவலைப்படாதிங்க.. நீங்க கேட்ட எம்ஜிஆர் பட சீடி வாங்கிட்டு வந்திருக்கேன் வாங்க போட்டுவிடுறேன்.. அந்த பட சீடியை போட்டுவிட்டவன் அவரோடு சோபாவில் அமர ரேணுகா இருவருக்கும் டீயோடு வந்தார்.. அவருக்கு மேலே நடந்தது எதுவும் தெரியவில்லை ஆனால் ஏதோ சத்தம் கேட்டது போல இருக்க இருவரையும் பார்க்கவும் டீயோடு வந்திருந்தார்..
 
இருவரும் டீயை எடுத்துக் கொள்ள, தம்பி மதியத்துக்கு என்ன சமைக்க சொல்ல.. ?? ஆத்தா உங்களுக்கு சளியா இருக்குன்னு சொன்னிங்கள்ல அதான் நாட்டுக்கோழி குழம்பு வைச்சிருக்கேன்.. வேற எதுவும் வேணுமா..??” அவர் அருகில் அமர,
 
ரேணுகாவுக்கு பதில் சொல்லாமல் தன் பேரனை பார்த்தவர், சக்தி எனக்கு மலரை பார்க்கனும் போல இருக்கு.. என்னை ஊருல விட்டுட்டு வர்றியா.. தன் அப்பத்தாவின் முகத்தை பார்த்தவன் அதிலிருந்த வாட்டத்தை பார்த்து ரமலி மேல் கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு தன் அத்தை இருக்கும் போது எப்படி பேசுவது என யோசிக்க,
 
இருவரின் முகத்தையும் பார்த்த ரேணுகா சட்டென, தம்பி நானும் ஆத்தாவோட ஊருக்கு போறேன்பா.. எனக்கும் மலர பார்க்கனும் போல இருக்கு..
 
இருங்கத்தை எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு அதை முடிச்சிட்டு வர்றேன்.. ரெண்டு பேரும் கிளம்புங்க.. போவோம்.. சட்டென மாடியேறி போக அங்கு ரமலி நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள்..
 
அவள் கையை பிடித்து இழுத்தவன் அங்கிருந்த சோபாவில் அவளை தள்ள அப்படியே மிரண்டு போய் அமர்ந்திருந்தவளின் கன்னத்தில் இருந்த தன் விரல் தடத்தை பார்த்து தன் மேல் கோபம் வந்தாலும் அதை அடக்கியவன், இப்ப உனக்கு என்ன பிரச்சனை அந்த டென்டர் யாருக்கு கிடைச்சுச்சுன்னா..??”
ஒன்றும் சொல்லாமல் இருந்தவளிடம் அவளின் போனை எடுத்து நீட்டியவன்,” நான் அன்னைக்கு அமௌண்ட் கோட் செஞ்சு அனுப்பும்போது யார்யார் இருந்தா.. சொல்லு..?” அதட்ட,
 
பயம் இருந்தாலும் தன்னை சமன்படுத்தியவள் இப்ப என்ன சொல்லி இவன் நம்மக்கிட்ட பேசப்போறான்.. சட்டென பழைய ரமலி மீள.. நீங்க, நான், என்னோட பிஏ..??”
 
இப்போ அவனுக்கு போன் செஞ்சு கேளு யாருக்கு டென்டர் கிடைச்சிருக்குன்னு, அவனுக்கு வேணாம் வேற ஸ்டாப்கிட்ட கேளு..”
 
போனை எடுத்து பேசியவள் விபரம் கேட்க,” ஸாரி மேம் நம்ம கம்பெனியவிட வேற ரெண்டு கம்பெனி குறைஞ்ச அமௌண்ட் கோட் பண்ணியிருந்தாங்க.. அதுல உங்க மாமா கம்பெனிக்கு கிடைக்க வேண்டிய பிராஜக்ட் கடைசி நேரத்தில RR கன்ஷ்ட்ரக்சன்ஸ் கம்பெனிக்கு கிடைச்சிருக்கு.. இது ஏதோ புது கம்பெனி போல  மேம்.. ஆனா இதுல உங்க மாமா கம்பெனி நம்மளவிட ரெண்டு ரூபா மட்டும் கம்மியா கோட் பண்ணியிருந்தாங்க.. அதைவிட ஒரு ரூபாய் கம்மியா கோட் செஞ்சு RR கன்ஷ்ட்ரக்சன்ஸ் இந்த பிராஜக்ட்ட வாங்கியிருக்காங்க..
 
ரமலி இதுல என்ன நமக்கு லாபமிருக்கு என்பது போல அவனை பார்க்க அவள் முன் ஒரு பைலை தூக்கிப் போட்டவன் ரேணுகா, ரமலி இருவரின் பெயரிலும்தான் அந்த புது கம்பெனி துவங்கப்பட்டிருந்தது.. இந்த கம்பெனிக்குத்தான் இப்ப இந்த ஆர்டர் கிடைச்சிருக்கு போதுமா.. இன்கம்டாக்ஸ் பிராமளம் வந்ததால உங்க பேர்ல இந்த கம்பெனிய ஆரம்பிச்சிருக்கேன்.. உன்கூடவே வைச்சிருக்கியே அந்த பிஏ அவன்தான் அந்த அமௌண்ட்ட உங்க மாமாக்கள்கிட்ட சொன்னது எனக்கு முதல்லயே டவுட் இருந்திச்சு..  அதான் இப்ப கிளியர் பண்ணிக்கிட்டேன்..
 
 அவள் கன்னத்தை பிடித்து தன்னை பார்க்கச் செய்தவன்.. இப்ப என்னால உனக்கு என்ன அவமானம் வந்திச்சு.. ம்ம்ம்..” உருமியவன் இன்னும் கன்னத்தை அழுத்தி, இதோ பார் இன்னைக்கு மாதிரி இனி ஒரு தரம் எங்க அப்பத்தாவையோ இல்லை எங்க வீட்டு ஆளுங்க யாரையாவது எடுத்தெறிஞ்சு பேசுன இன்னைக்கு காட்டினது சாம்பிள்தான்.. அப்ப என்ன செய்ய வேணா நான் தயங்க மாட்டேன்.. எங்க அப்பத்தாவ வெளியில போக சொல்ற.. அவங்க வயசென்ன.. அவங்கள பத்தி உனக்கு என்ன தெரியும்.. தோ..பாரு எனக்கு எங்க அம்மா எவ்வளவு முக்கியமோ அதவிட ஒருபடி மேல எங்க அப்பத்தா.. எங்களுக்காகவே வாழ்றவங்க அவங்க அவங்கள போய்.. ச்சே உன்கிட்ட இப்படிபட்ட வார்த்தையை நான் எதிர்பார்க்கலை.. வெளிநாடெல்லாம் போய் படிச்சு பிரயோசஜம் இல்ல.. முதல்ல மரியாதைய கத்துக்கனும்.
 
எங்கள என்ன நினைச்ச நீ வளர்க்கிற நாய்க்குட்டினா.. உன் கழுத்தில தாலி மட்டும் கட்டாம இருந்தேன்னா உன் முகத்தில கூட முழிக்க மாட்டேன்.. மனுசங்களோட குணத்தை வைச்சு எடைபோடு.. எப்பவும் தொழில், சம்பாத்தியம், சொத்துன்னு இருக்காம.. உனக்கு மட்டும்தான் கோபம் வருமா.. நான் பழசெல்லாம் மறந்திருக்கும் போது நம்ம கல்யாணம் நடந்துச்சே அதுக்கே உன்மேல கோர்ட்ல கேஸ போட்டு உங்கள சந்திக்கு இழுக்க எவ்வளவு நேரமாகும்.. என்ன என்னபார்த்தா கோபம் வராதவன் மாதிரி இருக்கா.. இன்னைக்கு மாதிரி என் கோபத்தை காட்டினேன் நீ தாங்க மாட்ட பார்த்துக்கோ..
 
 என்னடா பார்க்க ரொம்ப ஈஸியா இருக்கானேன்னு நினைச்சுராத.. நான் அதே பட்டிக்காட்டான்தான்.. நீ பார்த்த சரண் வேணா நீ சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு ஆமா சாமி போட்டிருக்கலாம்.. ஆனா நான் அப்படியில்லைன்னு உனக்கு இன்னைக்கு தெரிஞ்சிருக்கும்.. உன் சொத்த பார்த்தோ இல்ல இந்த வீட்ட பார்த்தோ நானோ இல்ல எங்க குடும்பமோ இங்க வரலை.. அதுக்குன்னே உங்க சொந்தகாரங்க இருக்காங்க..
 
 இந்த பிராஜக்ட் கிடைக்கலைனா என்ன இப்ப குடியா முழுக போகுது.. இப்ப உங்களுக்கு இருக்க சொத்துக்கே இன்னும் நாலுதலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம்.. இவ்வளவு நாள் என்னோட வேலையையெல்லாம் விட்டுட்டு வந்ததுக்கு நல்ல மரியாதைய கொடுக்கிற.. இதோ பார் நீயா வந்து எங்க அப்பத்தாகிட்ட மன்னிப்பு கேட்காம நான் உன்கிட்ட ஒருவார்த்தை பேசமாட்டேன்.. முதல்ல உறவுகளோட அருமைய புரிஞ்சுக்கோ.. எதுக்கெடுத்தாலும் ஜங்கு புங்குன்னு குதிக்காத..
 
 அவளை அப்படியே சோபாவில் தள்ளியவன் வேகமாக வெளியில் வர,
 
ரமலியோ அப்படியே திக்பிரம்மை பிடித்தது போல அமர்ந்திருந்தாள்.. அவங்க அப்பத்தாவ பேசினதுக்கா இவன் இப்படி பட்டாசு மாதிரி பொழிஞ்சிட்டு போறான் அப்படியே வாயடைத்து போயிருந்தாள்.. சற்று நேரம் கழித்து மாடியேறி வந்த ரேணுகா தன் மகளின் முகத்தை பார்த்தவர் அவள் கன்னத்தில் இருந்த விரல்தடம் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை என்பதை உணர்த்த,
 
இவ ஆத்தாவையும் ஏதோ சொல்லிட்டாளோ மனம் கிடந்து அடித்துக் கொண்டது.. தன் மருமகனை பார்த்த இத்தனை நாட்களில் தன் அப்பத்தாவின் மேலும் தன் குடும்பத்தின் மேலும் உயிரையே வைத்துள்ளார் என்பதை மலரும் அவர் தந்தையும் இங்கு வந்து தங்கியிருந்த போது அவர்களிடம் நடந்துகொண்ட முறைகளில் இருந்தே கண்டு கொண்டிருந்தவர் தன் மகளின் துடுக்குதனத்தையும் அறிந்தவராயிற்றே.. .. இவ மனசில பட்டதை அப்படியே பேசிருவாளே.. அவருக்கு தெரியும் இன்னும் மகளும் மருமகனும் சேர்ந்து வாழவில்லை என்று என்ன வேலையாய் இருந்தாலும் கவனத்தை தன் மகள் மீதே வைத்திருந்தார்.. அவள் எடுத்தெறிந்து பேசினாலும் சக்தி கண்டு கொள்ளாமல் விளையாட்டும் கேலியுமாக அதை எடுத்துக் கொள்வதை, இன்று அடிக்கும் அளவுக்கு வந்திருக்கிறது என்றால் கண்டிப்பாக தன் மகளின் தவறாகத்தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டார்..
 
 பெருமூச்சுவிட்டவர், ரமலி நானும் உங்க கிராமத்துக்கு போறேன்.. அவள் ஏதோ சொல்லவர தடுத்தவர் இது உன்னோட வாழ்க்கை நீயே புரிஞ்சு நடந்துக்கோ.. உங்கப்பா பல பெண்களோட தொடர்புல இருந்தாரு குடி, சீட்டு கிளப்புன்னு போடாத ஆட்டமில்ல.. ஆனா எல்லாம் தெரிஞ்சும் நான் பொறுமையாத்தான் இருந்தேன்.. ஆனா உனக்கு ஸ்ரீராமர் மாதிரி மாப்பிள்ளையையும் ஒரு நல்ல குடும்பத்தையும் கடவுள் கொடுத்திருக்காரு.. அத தக்க வைச்சிக்கிறதும், தலையில மண் அள்ளி போட்டுகிறதும் உன்னோட விருப்பம்.. இங்க என்ன நடந்திச்சுன்னு நான் கேட்க வரலை.. நான் ஊருக்கு போறேன்னுதான் சொல்ல வந்தேன் .. வரவா மகளின் கன்னத்தை தடவி கொடுத்தவர் வெளியில் வந்திருந்தார்.. சற்று நேரத்தில் கார் கிளம்பும் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக பார்க்க சக்தியோடு தாயும் அம்மாச்சியும் கிளம்பியிருந்தது தெரிந்தது.. சோர்வோடு அங்கு கிடந்த சோபாவில் அமர சக்தி ஆரம்பித்த புது கம்பெனி பைல் அவளை பார்த்து சிரித்தது.. அதை தூக்கி மூலையில் எறிந்தவள் கட்டிலில் குப்புற படுத்து அழ ஆரம்பித்தாள்…
 
குப்புற படுத்து தூங்கி கொண்டிருந்த வெற்றியின் நாசியில் நல்ல சோப்பின் மணம் வர மெதுவாக கண்விழித்தவன் பார்த்தது அங்கு தலைவாரிக் கொண்டிருந்த மலரைத்தான் கையை தூக்கி தலையை வார அவன் கண்ணுக்கு பளிச்சென தெரிந்த அந்த எலுமிச்சை நிற இடையும் அவள் சேலை மறைக்காத பிளவுஸும்தான் இரவு தன் கையில் குழைந்த அந்த வெண்ணைதேகம் இன்னும் மோகத்தை மிச்சம் விட்டிருக்க சட்டென எழுந்தவன் அவன் பின்னால் வந்து அவள் கழுத்தில் முத்தமிட்டுக்கொன்டே முன்புறமாக வர,  சட்டென தன் கணவன் தன்னை இப்படி அணைப்பான் என எதிர்பார்க்காதவள் தூக்கியிருந்த கையை இறக்குவதற்குள் தன் கையால் அவள் வயிற்றோடு சேர்த்து அணைத்திருந்தான்..
 
அவன் நெஞ்சில் அப்படியே பின்னால் சாய்ந்தவள் ,”என்னத்தான் நேரமாச்சு போய் குளிங்க..”
 
ம்ம்ம்ம் அவளை முத்தமிட்டு கொண்டே தன் கைகளில் ஏந்தியவன் உன்னை யாரு அதுக்குள்ள குளிக்கச் சொன்னது அத்தான எழுப்பிவிட்டிருக்கலாம்ல..
 
அவன் வெற்று மார்பில் தன் முகத்தை புதைத்தவள்.. போங்கத்தான் இப்படித்தான் தினமும் எதாவது சொல்லி லேட்டாக்குறிங்க கிளம்புங்க..?”
 

Advertisement