Advertisement

குளித்து வந்தவன் தன் போனை எடுத்து தன் தந்தைக்கு பேச பாலை கொண்டு வந்து கொடுத்தவள் சற்று நேரம் அவனை பார்த்தபடி நிற்க ம்கூம் பேச்சில்தான் கவனமாக இருந்தான்.. அவனருகில் அந்த கயிற்று கட்டிலில் அமர்ந்தவள் அவனையே பார்த்தபடி தன் சேலை தலைப்போடு விளையாடிக் கொண்டிருக்க அவனும் அவளை ரசித்தபடிதான்  பேசிக் கொண்டிருந்தான்.. போனை பேசி முடித்தவன் பாலை குடித்துவிட்டு டம்ளரை அவளிடம் கொடுக்க வெடுக்கென வாங்கியவள் எழுந்து உள்ளே செல்ல திரும்பி அதற்கு மேல் முடியாமல் எப்போதும் உள்ள வழக்கம் போல அவன் கன்னத்தில் முத்தமிட வர,
 
அவள் முகத்திலிருந்தே அவள் இதைத்தான் செய்ய போகிறாள் என்பதை அறிந்தவன் அவன் முத்தமிட வரும்போது சட்டென அவன் முகத்தை திருப்ப கன்னத்திற்கு பதிலாக அவள் இதழை அவன் இதழில் பதித்திருந்தாள்.. பதித்தது மட்டும்தான் இவள் நினைவில் இருந்தது சட்டென அவளை இழுத்து அந்த கட்டிலில் போட்டவன் அவள் இதழை விடவே இல்லை..
 
அவள் இதழில் முத்தமிட்டவன் அங்கேயே மூழ்கி போனான்.. அவன் முத்தமிட்ட வன்மையே சொல்லியது அவனது இத்தனை நாள் ஏக்கத்தை, கோபத்தை, தாபத்தை , . வெறும் கயிற்று கட்டிலில் படுத்ததால் அந்த கயிறு அவள் முதுகை அழுத்தினாலும், அவள் மூச்சுக்கு ஏங்கினாலும் அவன் இம்மி அளவும் அவளை அசையவிடவில்லை.. ஒரு அளவுக்கு மேல் அவளால் முடியாமல் அவன் மார்பில் கைவைத்து தள்ள,
 
என்னாச்சுடா அம்மு.. அவள் கழுத்தில் தன் முகத்தை புதைக்க அவன் தாடி அவள் முகத்தை உரசியது.. அந்த கயிற்றின் அழுத்தத்தில் அவள் ஒரு மாதிரி நெளியவும் அவளை கைகளில் ஏந்தி அவர்கள் அறைக்கு கொண்டு சென்று கட்டிலில் விட்டவன் அவள் மடியில் தலைவைத்து படுக்க அவள் தன் விரலால் அவன் தாடியை கோடிழுக்க ஆரம்பித்தாள்..
 போங்கத்தான் இந்த தாடி நல்லாவேயில்ல.. செமயா குத்துது..”
 
ஹாஹாஹா அதனாலதான்டா அம்மு நீ கன்னத்தில முத்தம் கொடுக்க வந்தப்போ நான் இந்த பக்கம் திரும்பினேன்.. தன் இதழை குவித்து காட்ட,
 
போங்கத்தான் ..”அவள் வெட்கத்துடன் தன் முகத்தை மூடிக் கொள்ள, அவள் பின் கழுத்தில் கையை கொடுத்து தன் முகத்திற்கு நேராக அவள் முகத்தை கொண்டு வர அவள் தலையில் சரம் சரமாக வைத்திருந்த மல்லிகைப்பூ அவன் முகத்தை வருடியது..
அத்தான பார்க்க வர்றதுக்காக அம்முக்குட்டி புதுச்சேலை, மேக்கப் எல்லாம் போட்டுருக்கிங்க போல..
முகத்திலிருந்த கையை எடுத்தவள் ஆச்சர்யத்துடன்,” கவனிச்சிங்களாத்தான்..??”
 
என் பொண்டாட்டிய நான் கவனிக்காம யார் கவனிப்பா.. நீதான் சும்மா இருந்தவனை பிள்ளை குட்டிக வேணும்னு உசுப்பேத்தி விட்டுட்டு ஹாயா ஊர் சுத்திட்டு வர்ற .. போடி உன் மேல அத்தான் கோபமா இருக்கேன்..?” அவள் கைவிரலை சொடுக்கெடுத்தபடி அவன் கோபமாக இருப்பதை போல காட்டிக் கொள்ள,
 
என் செல்ல அத்தான், பட்டு அத்தான் என அவள் அவன் கன்னத்தை பிடித்து கொஞ்ச தாயின் கொஞ்சலையும், அவரின் ஸ்பரிசத்தையும் அதிகம் அறிந்திராதவன் மலரின் அன்புக்கு முன்னால் அப்படியே சரணடைந்திருந்தான்.. தன்னை ஒப்பு கொடுத்தவனை ஒரு தாயாக மடிதாங்கியவள் தன் முத்திரையை அவன் முகமெங்கும் பதிக்க அவளுக்கும் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அன்பு செலுத்த ஒரு ஆள்.. தன் குழந்தையென கொஞ்சி தீர்க்க மலருக்கும் வெற்றியை அவ்வளவு பிடித்திருந்தது..
 
 தன் நுனிக் கையால் அவள் உடலெங்கும் வருடியவன் அந்த பாதையிலே தன் முத்தத்தை செலுத்த அவள் வெற்றிடையில் தன் முத்தத்தை பதித்தவன் அங்கேயே சற்று இளைப்பாற கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் தங்கள் நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாற அங்கு காதலோடு மோகமும் கலந்திருந்தது.. வெற்றி தான் இத்தனை நாள் காத்திருப்பை அவளிடம் வன்மையாக இறக்கி வைக்க மலர் அந்த வன்மையை தன் மென்மையாலேயே வெல்ல ஆரம்பித்தாள்..
 
நாட்கள் சரசரவென ஓடியதில் வெற்றியும் மலரும் காதல் கிளிகளாக கொஞ்சிக் கிடக்க ராமலிங்கத்தின் துணையோடு ஹோட்டல் தொழில் தொடங்க முதல் அடி அவரால் துவங்கப்பட்டது.. சக்தி மலரின் தந்தை மூலமாக கிரிதரனை காரில் மோதியவர்கள் மேல் கேஸை பலமாக்க ரமலியின் மாமாக்கள் இருவரின் கவனமும் தங்கள் மகன்களை ஜாமீனுக்காக அலைவதிலேயே இருந்தது.. அதோடு ரமலியின் சொத்துக்களை ஏமாற்றி கையாடல் செய்த பல லட்சம் பணத்தை இப்போதே கொடுக்கும்படி வக்கீல் நோட்டீஸ் வந்திருக்க எந்த பக்கமும் செல்ல முடியாத நிலை..
 
அவர்கள் கையாடல் செய்த பணம் எக்கச்சக்கமாக இருக்க கொடுத்தால் நடுத்தெருதான்.. அதில் இப்போது கோர்ட் கேஸ் என அலைவது வேறு.. கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கி கொண்டிருந்தார்கள்.. ரமலிக்கு வியப்பு ஒரு கிராமத்து பள்ளியில் படித்தவனுக்கு இவ்வளவு அறிவா.. சக்தியை நினைக்கும்போது தன்னையறியாமல் ஒரு பெருமிதம் தோன்றியது.. மலர் இங்கிருந்த நாட்களில்தான் அக்கறை எது ,காதல் எது என்பதை கண்கூடாக கண்டாள்.. மூவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்றாலும் மலருக்கு பார்த்து பார்த்து செய்யும் போது அதில் அக்கறையும் அதே தனக்கு செய்யும்போது அதில் முழுக்க முழுக்க காதலும் தெரிந்தது,, தன்னை தொடும்போதும் முத்தமிடும்போதும் கணவனாக அவன் நெஞ்சில் ஆழமாக இறங்கியிருந்தான்.. சிறு ஈகோ அவளுக்கு அது மட்டும் இல்லையென்றால் ரமலி எப்போதோ சக்தியிடம் தன் காதலை சொல்லியிருப்பாள்…
 
தன் தந்தையெல்லாம் என்ன ஆண்மகன்.. பெண்களை இவ்வளவு கொண்டாட முடியும் என்பதை சக்தியை பார்த்துத்தான் தெரிந்து கொண்டாள்.. அப்பத்தாவிடம், தன் அன்னையிடம் . மலரிடம், தன்னிடம் என ஒவ்வொரு முகத்தை கண்டிருந்தாள்.. நம்பகமான இடங்களில் தன் நண்பர்களை கொண்டு வந்து வேலைக்கு அமர்த்தியிருக்க  இவன் பொறுப்பேற்ற பிறகு பள்ளியில் நிறைய மாறுதல் எங்கும் எதிலும் வெற்றி மட்டும்தான்.. அப்பத்தாவையும் விடவில்லை.. வாரத்தில் ஒரு நாள் பள்ளிக்கு அழைத்துவந்து அந்த காலத்து நீதி போதனை கதைகளை சொல்ல சொல்லி ஒரு வீட்டிலிருக்கும் பெரியவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்தியிருந்தான்..
அப்பத்தாவுக்கும் அதிக மகிழ்ச்சி சினிமா பாடல் மூலமாக நடனம் மூலமாக என அவர் அசத்தியிருக்க ரமலியே அவரின் திறமையில் மிரண்டிருந்தாள்.. இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பா என்று.. இவர் வந்ததிலிருந்து ரேணுகாவுக்கு நல்ல மாற்றம்.. அவரிடமும் தன் தொழிலை பற்றி சொல்லி சில ஆலோசனைகளை கேட்டிருந்தான்.. எல்லாரும் முக்கியமானவர்கள் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தான்.. மலரிடம் ஹோட்டலை ஒப்படைத்துவிட்டு வெற்றியும் ராமலிங்கமும் மூன்று ஹோட்டலை திறக்க முழுமூச்சாக ஈடுப்பட்டிருக்க முதலீடு ரமலியும் அதை நடத்துவது வெற்றியும் மலரும் என பேசப்பட்டு லாபம் பாதிபாதியாக பெற்று கொள்வதாக முடிவு செய்யப்பட்டது..
 
அன்று காலையிலிருந்து ரமலிக்கு ஒரே டென்ஷன்.. ஒரு பெரிய தனியார் நிறுவனத்திற்கு பில்டிங் கட்டுவதற்காக டென்டர் அறிவிக்கப்பட்டிருக்க சக்திதான் அந்த நிறுவனத்திற்கு அமௌண்டை நிர்ணயித்திருந்தான்.. ரமலி அதனை தான் செய்வதாக எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை.. இன்று அதன் முடிவு தெரியும் நாள்.. இவள் டென்சனாக இருக்க அவனோட கூலாக தன் செல்லில் ஏதோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான்..
 
இவளுக்கு அதை பார்க்க பார்க்க எரிச்சல்.. ஏற்கனவே இருமுறை தன் மாமன்களும். அந்த சிமெண்ட் தொழிற்சாலைகாரனும் அந்த டென்டரை தாங்களே பெற்று காட்டுவதாக ரமலியிடம் சவால்விட்டிருந்தார்கள்.. அதனால்தான் ரமலி அதில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தாள்.. அவள் குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்று கொண்டிருக்க அவள் பிஏ போன் செய்திருந்தார்.. டென்டர் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்று..
 
அவ்வளவுதான் இவ்வளவு கோபமும் ஆத்திரமும் எங்கிருந்ததென்று தெரியவில்லை சக்தியின் போனை வாங்கி தூக்கி எறிந்தவள் அவன் முன் ஆங்காரமாக நின்றிருக்க, போன் சுக்குநூறாக உடையவும் சக்திக்கும் கோபம் வந்திருந்தது..
 
ஏய்.. அவன் சத்தமிட..
 
இப்ப திருப்தியா .. இதுக்குத்தான் நானே அத டீல் பண்றேன்னு சொன்னேன் .. போச்சு எல்லாம் போச்சு எல்லாம் தெரிஞ்சமாதிரி நடந்துக்கிட்டிங்க இப்ப என்னாச்சு எல்லார் முன்னாடியும் எனக்கு அவமானம் வந்துதான் மிச்சம்.. இதுக்குத்தான் எல்லாம் தெரிஞ்சமாதிரி எல்லா விசயத்திலயும் மூக்கை நுழைக்கக்கூடாதுன்னு சொல்றது..” அவள் சத்தமிட்டு கொண்டிருக்க தன் பேரனை பார்க்க வந்திருந்த அப்பத்தா இவர்களின் சத்தமான குரல் கேட்டகவும் என்னவோ ஏதோ என்று உள்ளே நுழைந்திருக்க,
 
ரமலியின் கோபமுகத்தையும் குரலையும் கேட்டு ,”ஏத்தா புருசன்கிட்ட இப்படித்தான் பேசுவியா.. கொஞ்சம் அமைதியா பேசினா என்ன..??”
 
அமைதியா.. அமைதியா பேசமுடியுமா இது எவ்வளவு லாபம் தரக்கூடிய பிராஜக்ட்.. போச்சு எல்லாம் இவனால போச்சு.. அம்மாச்சியின் மீதும் கோபம் வர,
 
அவரை நோக்கி கையை நீட்டியவள், அம்மாச்சி நீங்க இதுல தேவையில்லாம தலையிடாதிங்க.. உங்க வேலை எதுவோ அத மட்டும் பாருங்க..??”
 
அவ்வளவுதான் இவ்வளவு நேரம் இலகுவாக இருந்தவன் அப்பத்தாவை பேசவும்,” ஏய் வாய மூடுடி யார்கிட்ட என்ன பேசனும்னு தெரியாம பேசாத..??”
அவனை முறைத்தவள்,” அப்படித்தான் பேசுவேன்.. என் விசயத்தில யார் தலையிட்டாலும் எனக்கு பிடிக்காது.. அம்மாச்சி நீங்க கொஞ்சம் வெளியில போங்க..??”
சொல்லி முடிக்கவில்லை பளார் பளார் என இரு கன்னத்திலும் அறை வாங்கியவள் அப்படியே அதிர்ந்து போய் நின்றாள்..
       
                                                இனி…………???

Advertisement