Advertisement

நீங்க ஏன்த்தான் ஸாரி சொல்றிங்க..??”
 
நீ இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தப்போ நானும் உன்னை வேண்டாம்னு சொல்லி உங்க வீட்டுக்கு போ, வேற கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி என் பங்குக்கு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்..?”
 
 
விடுங்கத்தான் .. இப்பத்தான் அதெல்லாம் சரியாயிருச்சே.. ஆனா இவங்களை நான் ஒருநாள்கூட எதிர்த்து பேசாம அவங்க சொன்ன எல்லா வேலையும் பார்த்துக்கிட்டு ஒரு நாய் மாதிரிதான் கிடந்தேன்.. இப்ப இப்படி சாபம் விட்டுட்டு போறாங்க.. அவனை இன்னும் நெருங்கி அணைத்தவள் எனக்கு உங்ககூட ரொம்ப நாள் சந்தோசமா வாழனும் ..நம்ம பிள்ளைகள எல்லாம் நல்லா வளர்க்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு.. எனக்கும் அம்மா இல்ல உங்களுக்கு அத்தை இருந்தும் அவங்களால ஒன்னும் செய்ய முடியாம இருந்தாங்க.. ஆனா எனக்கு அப்படி நடக்காம என் பசங்களோடவும் உங்களோடவும் ரொம்ப நாள் நல்லா இருக்கனும்னு நினைக்கிறேன்.. இவங்க சொன்ன மாதிரி எதாவது நடந்திருமா அத்தான்..??”
 
 
அவளது பயம் கலந்த முகத்தை பார்த்தவன் ,”ஏய் லூசு இவங்க சாபமெல்லாம் எப்படிடீ பலிக்கும்..?? அவங்களுக்கு உன்னை பார்த்து பொறாமை.. இவளுக்கு இப்படிபட்ட வாழ்க்கை அமைஞ்சு சந்தோசமா இருக்காளேன்னு அதான் வாய்க்கு வந்தத சொல்லிட்டு போறாங்க.. அவள் முகத்தை தன்னை பார்க்கச் செய்தவன் அதோட இவ்வளவு அழகா, கம்பீரமா ஒரு புருசன் கிடைச்சிட்டானேன்னு காண்டு அந்தம்மாவுக்கு..!!! அவளை பார்த்து கண்ணடித்தவன், இதுக்கு போய் யாராச்சும் அழுவாங்களா.. முகத்தை பாரு மேக்கப் எல்லாம் கலைஞ்சு போச்சு ..??”பக்கத்தில் முகத்தை கொண்டு வந்தவன் அவள் முகமெங்கும் முத்தமிட கொஞ்சம் கொஞ்சமாக முகம் வெட்கத்தால் சிவக்க ஆரம்பித்தது..
 
 
கூச்சத்தில் அவனிடமிருந்து விலகப்போனவளை தடுத்தவன் ,”ஏய் மேக்கப் போடும்போது அசையக்கூடாது டிஸ்டர்ப் ஆகுதுள்ள..?? முத்தமிட்ட இடங்களை எல்லாம் கைகளால் தடவிப் பார்த்தவன் இறுதியில் அவள் இதழை கைகளால் வருடி அங்கு தன் இதழைப் புதைத்திருந்தான்.. ஒரு நீண்ட முத்தம் கொடுக்கப்பட்டு பெறப்பட்டது.. ஆமா எனக்கொரு டவுட்..??
 
கண்களை மூடி அந்த முத்தத்தை ரசித்திருந்தவள்,” என்னத்தான்..??”
 
புள்ளைங்கன்னு சொன்னியே எத்தன வேணும் நாலா அஞ்சா..??”
 
அவள் வெட்கத்தில் தன் முகத்தை மூடிக் கொள்ள..
 
போச்சு இதுக்கே இப்படி வெட்கப்பட்டா எப்படிடா அம்மு,..??” அதற்குள் யாரோ கதவை தட்ட ,
 
போச்சு எந்த கரடியோ வந்திருச்சு,..!! கதவை திறக்க சக்தியையும் ரமலியையும் பார்த்தவன்,” ஹிஹிஹி அண்ணனா..!!!
 
என்னாச்சுடா.. ஏன் இப்படி முகத்தை வைச்சிருக்க.. உன்னைய பந்தியத்தானே பார்க்கச் சொன்னேன்..??”
 
மலரை திரும்பி பார்த்து கண்ணடித்தவன்,” இதோ போயிட்டேன்ணே…??” அறையை விட்டு வேகமாக வெளியில் வந்திருந்தான்..
 
ரமலியின் கம்பெனியிலிருந்து தொழிலாளர்கள் வேன்களில் வந்திறங்கியிருக்க  அனைவரையும் சக்தியும், வெற்றியும் பார்த்து பார்த்து கவனித்தார்கள்.. ரேணுகா மனது கேட்காமல் தன் நாத்தனார் இருவருக்கும் முறைப்படி பத்திரிக்கை வைத்திருக்க அதை வாசலில் தூக்கி எறிந்தவர்கள் வாய்க்கு வந்ததை பேசி அவரை தூற்றியிருந்தார்கள்..
 
எல்லா வேலையும் முடிந்து அனைவரும் களைப்புடன் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்க மலர் இரவு சமையலை கவனித்துக் கொண்டிருந்தாள்.. மலர் அம்மாச்சியை இங்கேயே தன்னுடன் தங்க சொல்லி கேட்டுக் கொண்டிருக்க சக்தி அதெல்லாம் வேண்டாம் தன்னுடன் தான் வரவேண்டும்.. நாங்க ஊருக்கு போகும்போது நீயும் வந்து பத்து நாள் தங்கிட்டு வரலாம் வா என அழைக்க,
 
போங்கத்தான் அப்ப என்னோட ஹோட்டல் என்னாறது..??”
 
இவர்களை பார்த்துக் கொண்டிருந்த வெற்றியோ அடிப்பாவி அம்மு அப்ப புருசன விட்டுட்டு போறது பெருசில்ல.. அந்த ஹோட்டல்தான் உனக்கு பெரிசாப்போச்சா.. இருடி தனியா ஒரு சான்ஸ் கிடைக்கட்டும் அப்ப  இந்த அத்தான யாருன்னு காட்டுறேன்..
 
நாளை ஞாயிற்றுக் கிழமையாய் இருப்பதால் நாளை மாலை கிளம்பலாம் என முடிவெடுத்திருக்க ரமலியும் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன் செல்லில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவள் தங்கள் மாமா போன் செய்யவும் சற்று தள்ளிச் சென்றாள்..
 
ம்ம்ம் சொல்லுங்க..??”
 
என்ன ரமலி நீ பண்றது கொஞ்சம்கூட நல்லாயில்ல.. என் பசங்கள வெளிய எடுக்க நாங்க எவ்வளவோ மூவ் பண்றோம்.. எங்களால முடியல.. உன்புருசனுக்குத்தான் ஒன்னும் ஆகலைல அப்ப உனக்கு என்ன பிரச்சனை.. மரியாதையா இந்த பிரச்சனையில இருந்து நீயா விலகிரு.. இல்ல உன்னையும் உன் புருசனையும் இல்லாம ஆக்கிருவேன் பார்த்துக்கோ..??”
 
 
ம்ம்ம் முடிஞ்சா அத செஞ்சு பாருங்க பார்ப்போம்.. இந்த வெத்து உருட்டு மிரட்டலெல்லாம் வேற யார்கிட்டயாவது வைச்சுக்கோங்க.. நீங்களெல்லாம் என்னோட சொந்தகாரங்கன்னு சொல்றதுக்கே எனக்கு வெக்கமா இருக்கு.. எப்ப இந்த அளவுக்கு நீங்க பேச துணிஞ்சிட்டிங்களோ இனி நானும் சும்மா இருக்கிறதா இல்ல.. எப்படி உங்க பசங்க ரெண்டு பேரையும் வெளியில கொண்டு வர்றிங்கன்னு பார்ப்போம்..??
 
எவ்வளவு திமிரு இருந்தா என் வீட்டுக்காரர் மேலயே அவன் காருல மோத வருவான்.. நான் பேசாம கைகட்டி வேடிக்கை பார்க்கனும்.. அவர யாருன்னு நினைச்சிங்க.. உங்கள மாதிரி துரோகிங்க இல்ல.. முடிஞ்சா அவருக்கு நேருக்கு நேரா நின்னு மோதுங்க.. இனி நீங்க எனக்கு எதிரா ஒரு ஸ்டெப் முன்னால வைச்சா உங்கள பத்து ஸ்டெப் பின்னாடி போக வைச்சிருவேன்.. அத மட்டும் நியாபக்கத்துல வைச்சிக்கோங்க.. எதாயிருந்தாலும் மோதி பார்த்துருவோம் நான் ரெடியாத்தான் இருக்கேன்.. யாருக்கிட்ட..??” போனை கட் செய்து சோபாவில் தூக்கி வீசியவள் திரும்பி பார்க்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அங்கேதான் நின்றிருந்தனர்..
 
 
அனைவரும் ரமலியின் தைரியத்தை வியந்து நிற்க ரேணுகாவிற்கு மகள் இனி எப்போதும் மருமகனை பிரிய மாட்டாள் என தோன்ற நெஞ்சில் அப்படி ஒரு நிம்மதி.. இரு பெண்களாய் மட்டும் இருந்தவர்களுக்கு இத்தனை பேர் சொந்தமாக கிடைத்ததே போதும் என்ற எண்ணம்..
 
 
ராமலிங்கத்திற்கு இப்போதுதான் கொஞ்சம் திருப்தி.. ரமலியையும் சக்தியையும் பார்க்கும் போது இருவரும் ஒற்றுமையாக இல்லையோ, இந்த பெண்ணால் சக்தியை கணவனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ என்ற எண்ணம்.. சக்தி சமாளித்து விடுவான்தான்.. ஆனால் அவனொரு தங்கம் அது சேருமிடத்தில் சேரவேண்டுமே .. அவன் மதிப்பு தெரிந்த இடத்தில்தான் இப்போது இருக்கிறான் என்பது ரமலியின் பேச்சிலிருந்து தெரிய தன் மகனுக்கு கண்ணைக்காட்டியவர் வெளியில் வரவும் மற்றவர்களும் அவரோடு சேர்ந்து வெளியில் வந்திருந்தனர்..
 
 
அப்பத்தாவோ,’ அடி ஆத்தி பேத்தி கையில ஒரு சாட்டைய மட்டும் குடுத்தா போதும் போலயே அவனுகள நம்ம எம்சிஆரு மாதிரி நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்னு அடி பிச்சு எடுத்துருமோ..??’
 
 
 அங்கிருந்த சோபாவில் தன் நெற்றியை பிடித்தபடி அமர்ந்திருக்க அவள் அருகில் அமர்ந்த சக்தி அவள் கையோடு தன் கையை இணைக்க தன்னை மறந்தவள் அவன் நெஞ்சில் சாய்ந்துவிட்டாள்.. இந்த சொத்துக்காக எவ்வளவு தூரம்தான் இவர்களோடு போராடுவது..
 
தேவையில்லாம உங்களையும் இந்த பிரச்சனையில இழுத்து விட்டுடனோ.. இனி வெளிய போகும்போது வரும்போது கொஞ்சம் கவனமா இருங்க..??” அவள் கைவிரலோடு விளையாடிக் கொண்டிருந்தவன்..
 
நாம வெளியில போகாம வீட்டுக்குள்ளயே இருந்துக்குவோமா.. வெளியில போனாத்தான அவங்க எதாச்சும் பண்ணுவாங்க.. எனக்கு துணைக்கு நீயும் இரு வெளியிலதான் உன் மாமனுக இருக்கானுங்கள்ல..??”
 
 
டேய் நான் என்ன சொல்ல வர்றேன் நீ என்ன புரிஞ்சுக்கிற.. என்னை பார்த்தா பயந்தாங்கொள்ளி மாதிரி இருக்கா.. தி கிரேட் ரமலி சுனாமியே வந்தாலும் சூன்னு விரட்டிடுவேன்.. இவங்க எம்மாத்திரம்..?” தன் மனைவி கொஞ்சம் பார்ம்க்கு வந்ததை கண்டவன்,
 
 
ம்ம் அப்ப மெட்ராஸ்ல சுனாமி வந்தப்போ நீ எங்க போயிருந்த அவள் முகம் கோபமாக மாறவும் ஏய் விடுடி அவனுகளெல்லாம் ஒரு ஆளுன்னு ரொம்ப பில்டப் கொடுக்காம..!!
 
டேய் நான் சொல்ல வர்றது உனக்கு புரியலையா.. ஏற்கனவே அவங்க ரெண்டு மூனுதடவை உன்னை கொல்லப்பார்த்தானுக..
 
 
அது நான் சரணா இருக்கும் போது நடந்திருக்கும்.. அவங்க என்னையும் தொடமுடியாது.. என் பொண்டாட்டியவும் தொடமுடியாது…. அவள என் மனசுக்குள்ள இங்க வைச்சிருக்கேன்..தன் நெஞ்சை தொட்டு காட்டியவனை பார்க்கும்போது கடவுளே இவன் என்ன எல்லாத்தையும் அசால்டா எடுத்துக்குறான்.. அவன அடிச்சவங்களையே மன்னிச்சு விட்டுருறான்.. இவனுக்கு எதுவும் ஆகக்கூடாது ..
 
 
 உனக்கு எல்லாம் விளையாட்டுத்தான் போடா..” அந்த ரூமை விட்டு வெளியே செல்ல போனவளை பின்னாலிருந்து அணைத்தவன்,
 
 
                      ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
                      கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
                வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
                      இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
                 கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
                       கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
                 ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
                       சம்மதமுன்னு சொல்லு கிளியே
                 சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
                       கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்
                 சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
                       சக்தியின் கணக்கு மொத்தமும் ஒனக்கு….??”
 
அவள் கழுத்தில் முகம் புதைக்க அவன் காதலில் கட்டுண்டு அப்படியே உருகி நின்றாள்..
 
 
                                                                இனி………………????

Advertisement