Advertisement

…இரவு ரமலியும் மலரோடு ஒரே அறையில் தங்கி கொள்ள, அப்பத்தாவோடு ரேணுகா தங்கிக் கொண்டார்.. சக்திக்கு எதுவும் தெரியவில்லையோ என்னவோ வெற்றிதான் தவித்து போனான் தன் மனைவியின் அருகாமைக்காக..!! அந்த இதழ் முத்தத்திற்கு பிறகு எதையும் பெற முடியாமல் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்..
 
வரவேற்புக்கு முதல்நாள் அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்றவர்கள் அங்கு மலரும் ரமலியும் அப்பத்தாவின் துணையோடு பொங்கல் வைத்து வழிபட மலருக்கு தாலி பிரித்து கோர்க்கப்பட்டது.. அன்று அவசரத்திற்கு மஞ்சள் கயிற்றில் மஞ்சளை வைத்து கட்டியிருக்க இப்போது ராமலிங்கம் சக்திக்கு செய்ய சொன்னதை போலவே தாலியும் தாலிச் செயினும் செய்ய சொல்லி வாங்கியிருந்தார்..
 
அம்மாள் பாதத்தில் வைத்து வாங்கப்பட்டு வெற்றியிடம் கொடுக்கப்பட மனம் முழுதும் மகிழ்ச்சியோடும் மலரை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி தாலியை கட்டியிருந்தான்.. பூசாரி இரு ஜோடிகளுக்கு மாலை கொண்டு வந்து கொடுத்து மாற்றிக் கொள்ளச் சொல்ல சக்தியும் வெற்றியும் தத்தம் மனைவிகளுக்கு குங்குமத்தை வைத்துவிட்டனர்..
 
சக்தி எந்த சேட்டையும் பண்ணாமல் தன் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.. தந்தையை பற்றி அவனுக்கு நன்கு தெரியும்.. ரமலிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று லேசாக தெரிந்தால்கூட மிகவும் வருத்தப்படுவார்.. அதனால்தான் அவர் இருக்கும் இடங்களில் எந்த வம்பும் இழுக்காமல் நல்லபிள்ளை போல நின்றிருந்தான்..
 
அனைவரும் சாமி கும்பிட்டு வீட்டுக்கு வர முதல்நாள் மாலையே  உறவினர்கள் வரத் துவங்கியிருந்தனர்.. பாதி பேருக்கு மேல் ரமலி மலர் இருவர் அழகிலும் மயங்கி போயிருக்க மீதி பேருக்கு வயிற்றெரிச்சல்.. இவ்வளவு அழகாவும் வசதியாவும் பொண்ணு அமைஞ்சிருக்கே.!!.
 
 ஏன் வள்ளி உன் மருமக இறந்தப்போ அவசரமா உன் பேத்திய வெற்றிக்கு கல்யாணம் பண்ணினோம்னு சொன்னிங்க.. இப்ப என்ன அதே மாதிரி சக்திக்கும் கல்யாணத்தை பண்ணி வைச்சிருக்கிங்க.. இந்த  பொண்ண பார்த்தாலும் பெரிய பணக்கார பொண்ணு மாதிரி இருக்கா.. என்ன நடந்துச்சோ…??”
 
ஏண்டி ஒருத்தர் விருந்துக்கு கூப்பிட்டா வந்து வயிறு நிறைய சாப்பிட்டு வாழ்த்திட்டு போவிங்களா அத விட்டுட்டு அதெப்படி இதெப்படின்னு கேள்வி கேட்கிறிங்க..?? போன மாசம்தான உன் தம்பி வேலைக்கு போன இடத்துல ஒரு கல்யாணம் பண்ணுன பொண்ணையே பிள்ளையோட இழுத்துக்கிட்டு வந்தான்.. உன் மருமகன்கூடத்தான் உன்மகள வேண்டாம்னு சொல்லிட்டு யாரோ கூடவேலைப்பார்கிற பொண்ணு வைச்சிருக்காணாமே.. இதப்பத்தி நான் எதாச்சும் கேட்டனா…??”
 
அப்பத்தாவிடம் பேசியவருக்கு அடுத்து பேச வாய் வரவில்லை.. அத்தனை பேரும் தன்னையே இளக்காரமாக பார்க்க சட்டென அந்த இடத்தை விட்டு வெளியேறினார்.. யாருக்கிட்ட இந்த வள்ளிக்கிட்டயே வேலையை காட்டுறாளா..!!
 அப்புறம் சாந்தா சொல்லு..??” அடுத்து நின்றவரிடம் பேச்சை துவங்க…. அடுத்து யாருமே ரமலியை பற்றியும் மலரை பற்றியும் மூச்சுவிடவில்லை
 
மறுநாள் அதிகாலை நான்குமணிக்கு கண்விழித்த மலர் மற்ற அனைவரும் நல்ல தூக்கத்தில் இருக்கவும் தான் குளித்துவிட்டு வரலாம் என நினைத்து தலை குளித்து கொல்லை புறத்தில் நின்று தலையை துவட்டிக் கொண்டிருக்க பின்னால் இருந்து யாரோ அணைக்கவும் கத்தபோனவளின் வாயையும் சேர்த்து அணைத்திருந்தான் வெற்றி..
 
 கத்தி ஊரக்கூட்டிராத அம்மு அத்தான்தான்டா..??” அவளை இடுப்பில் கைகொடுத்து தூக்கியவன் வெளிச்சமில்லாத அந்த பெரிய மாமரத்தின் பின்னால் தூக்கிச் சென்றவனிடமிருந்து திமிறி இறங்கியவள் ..
 
என்னத்தான் யாராவது வந்திர போறாங்க..??”
 
வந்தா வரட்டும்.. கொஞ்சநேரம் பேசாம இரு..?” அவளை இறுக அணைக்க இவளும் அந்த அணைப்பில் தன்னை மறந்தாள்.. ரெண்டு தரம் தாலி கட்டிட்டு இதுகூட இல்லனா எப்படி..??” அவன் போட்ட தாலிச் செயினை எடுத்துப் பார்த்தவன் அந்த மர வேரில் அமர்ந்து அவளை தன்னோடு இழுத்துக் கொள்ள  இந்த ஒரு வாரமாக அவளோடு பேசமுடியாமல் தவித்தவன் இப்போது மலர் அருகில் இருக்க பேச்சு இல்லாமல் அவளை அணைத்தபடியே அமர்ந்திருந்தான்..
 
அவன் நெஞ்சி தலைவைத்து சாய்ந்திருந்தவள், அத்தான் விடியப் போகுது எல்லாரும் எழுந்திருவாங்க..??”
 
அவள் உச்சியில் முத்தமிட்டவன் அவளை இறுக அணைக்க அங்கு அப்பத்தாவின் குரல் கேட்டது..
 
ஏல முத்து அங்கிட்டு எதுக்கு இப்ப மாமரத்துக்கிட்ட போற.. இங்கிட்டு போல.. இம்புட்டு வழியிருக்கும் போது அங்க என்ன வேலை..??” அங்கு தன் பேரனும் பேத்தியும் இருப்பதை பார்த்தவர் அவருக்கு வேறு வழியை காட்ட,
 
இருவரும் தங்கள் நினைவுக்கு வந்தவர்கள் மலர் மெதுவாக எட்டி பார்க்க ஆங்காங்கே ஓரிருவர் எழுந்து வருவதை கண்டவள் வெற்றியின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்து மரத்தை சுற்றிக் கொண்டு ஓடிவந்தாள்..
 
எப்ப பாரு கன்னத்திலயே குடுக்கிறாளே அதுக்கு பக்கத்தில தான என்னோட உதடும் இருக்கு அது இவ கண்ணுக்கு தெரியாதா.. சின்ன வயசில எப்படி இருந்தாளோ அப்படியே இருக்கா ..!!
 
அம்மாச்சியின் அருகில் வந்தவள் மெதுவாக அவரை நோக்கி வர,
 
வாத்தா..” அவள் கன்னத்தை உருவி திருஷ்டி கழித்தவர்,” எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்கனும்..  துண்டை வாங்கி அவள் தலையை துவட்டி விட்டு, போத்தா போய் நகை நட்ட எடுத்து போட்டு கிளம்பு..??”
ரமலியும் மலரும் பட்டுப்புடவை கட்டி நகைகளோடு கிளம்பி வர சக்தியும் வெற்றியும் ஒரு நிமிடம் தன்னை மறந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்… சுற்றி இருக்கும் அனைவரும் மறைய அவரவருக்கு தன்னுடைய மனைவிகள் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தனர்..
 
அண்ணன் தம்பி இருவரும் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக ஆண்மைக்கு இலக்கணமாக விளங்கினர்..
 
ராமலிங்கம் இரு ஜோடிகளையும் தன் மனைவியின் படத்திற்கு முன் விழுந்து வணங்க சொல்ல சக்திக்கு தன்னை அறியாமல் இரு சொட்டு கண்ணீர் வழிந்திருந்தது.. ரமலி சக்தியின் கையை பிடித்து அழுத்த அவன் பிடித்த பிடியில் இருந்த அழுத்தமே இந்த நேரத்து அவன் மனதை காட்டியது.. இவர் துன்பத்துக்கு நானும் ஒரு காரணம் தானே..!!
 
ராமலிங்கம் , அப்பத்தா , ரேணுகா , மூவரும் இரு ஜோடிகளையும் மனதார வாழ்த்தி திருநீறு பூசிவிட்டு ஆசிர்வாதம் செய்ய கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வர துவங்கினர்..
 
பெரியவர்களை பார்க்கவும் சக்தியும் வெற்றியும் அவர்களின் காலில் விழ மலரும் ரமலியும் அவர்களை பின்பற்றினார்கள்.. வெற்றி தன் மனைவிக்கு இவர்கள் யார் என்ன உறவென்று அறிமுகப்படுத்தி வைக்க ரமலிக்கு இது புதிதாகவே இருந்தது..
 
கால்ல விழுந்தா ஆசிர்வாதம் வாங்குவாங்க ஹாய்ன்னு சொன்னா பத்தாதா.. இவன் வேற படக்கு படக்குன்னு விழுந்துருறான்.. சக்தியின் கண் வருகிறவர்களை வரவேற்பது மற்ற வேலைகளை பார்ப்பது, தன் நண்பர்களுக்கு வேலைகளை பிரித்துக் கொடுப்பது என பம்பரம் போல சுழண்டு கொண்டிருக்க ரமலியோடு பேச நேரமில்லை..
 
போட்டோவுக்கு போஸ் கொடுத்து, கீழே விழுந்து கும்பிட்டு என மலரும் ரமலியும் களைத்து போயிருக்க சக்திக்கு சிரிப்பு ,”என்கிட்ட எவ்வளவு சண்டை போடுற..? ரெண்டு தரம் விழுந்து எந்திரிச்சதுக்கே இப்படி இருக்க..!!”
 
டேய் ஒரு தரமா கும்பிட்டேன் இப்பவே ஒரு 200 தரம் விழுந்திருப்பேன்டா.. என் முகத்தை பாரு அவங்க பூசிவிட்ட திருநீற வைச்சே நாம ஒரு கடையே ஆரம்பிச்சிரலாம் போல..!!”
 
தன் கர்சிப்பால் அவள் நெற்றியை துடைத்து விட்டவனுக்கு சிரிப்பு வந்தாலும்,” யேய் அடங்குடி, வாடான்னு சொல்லாதன்னு சொல்லியிருக்கேனா இல்லையா.. உனக்கு எங்க போனாலும் இந்த வியாபார புத்தி தானா.. அவங்க நல்ல மனச நினைடி..??”
 
டேய் போடா..
போடி.. 
இருவரும் ரகசியமாக சண்டை போட்டு கொண்டிருக்க அடுத்து ஒரு வயதான தம்பதிகள் வரவும் சண்டைக்கு இடைவேளை விட, ரமலிக்கு இரண்டு காலிலும் அப்படி ஒரு வலி.. அம்மாடி இவன் நம்மள பலிவாங்கவே இப்படி ஒரு வரவேற்புக்கு ஏற்பாடு பண்ணியிருப்பானோ.. இருவரின் களைத்த முகத்தை பார்க்கவும்,” ஒரு பத்து நிமிசம் ரெஸ்ட் எடுத்துக் கோங்க … எதாவது ஜூஸ் குடிச்சிட்டு வாங்க..?” சக்தி இருவரையும் அனுப்பிவிட்டு அண்ணன் தம்பி இருவருமே பந்தியை கவனிக்க செல்ல, இப்போதுதான் இருவருக்கும் மூச்சே வந்தது..
 
ஒரு பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும் ரமலிக்கு ஒரு முக்கியமான போன் வந்திருக்க இங்கே ஒரு சத்தமாக இருக்கவும் சற்று தள்ளி நின்று பேசியவள் வரும்போதுதான் கவனித்தாள் சக்தி யாருடனோ தனியாக பேச செல்வதை அப்படி என்ன பேசப்போறான்.. இவளும் அவர்கள் பின்னால் செல்ல
சொல்லு கபிலா…அப்படி என்ன என்கிட்ட தனியா பேசனும்..?”
அது வந்து… அது வந்து..
 
டேய் இழுக்காம சொல்லு அங்க பந்தி வேலை பாதியில விட்டுட்டு வந்திருக்கேன் நீ சாப்பிட்டியா..?”
 
இல்ல மச்சான்.. ஸாரிடா அவன் கையை பிடித்தவன் அன்னைக்கு உன்னை அடிச்சது நானும் என்னோட பிரண்ட்ஸ்ம்தான்.. ஸாரிடா உங்க ஊரு பொண்ணு உன்னை உயர்வா பேசி என்னை வேணாம்னு சொன்ன கோபத்தில அப்படி செஞ்சிட்டேன்.. கோபம் என் கண்ணை மறைச்சிருச்சு.. ஆனா சத்தியமா சொல்றேன்டா அன்னைக்கே உங்க அம்மா இறப்பாங்க.. நீ காணாம போவ , உனக்கு நினைவு எல்லாம் மறக்கும்னு எனக்கு தெரியாதுடா.. ப்ளிஸ் என்னை மன்னிச்சிரு..
 
கேட்டிருந்த ரமலிக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வர, இவன் என்ன எதுவுமே பேசாம இருக்கான் சக்தியை பார்க்க கண்ணை மூடி தன்னை சமன் செய்வது தெரிந்தது..
 
தெரியும் மச்சான் அத நீதான் செஞ்சதுன்னு..!!”
 
இருவரும் அதிர்ச்சியாக,” என்னடா சொல்ற.. உனக்கு தெரியுமா ..??தெரிஞ்சுமா என்கிட்ட பேசிட்டு இருக்க.. உனக்கு எப்படிடா தெரியும்..??”
அடிக்கும் போது என் கை உன்னோட காப்ப ஒரு தரம் தொட்டு பார்த்தப்போ அது நீதான்னு கண்டுபிடிச்சிட்டேன்.. இந்த மாதிரி வித்தியாசமா காப்பு நீ மட்டும்தானே போட்டிருப்ப.. அப்புறமா எனக்கு நினைவு திரும்பி இங்க வந்த அன்னைக்கு என் மனைவிய நீதான எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்த அப்ப உன்னோட கையை பார்க்கவும் அப்பவே உன்னை கண்டு பிடிச்சிட்டேன்.. காரணத்தையும் நானே தெரிஞ்சுக்கிட்டேன்…
 
மச்சான்..” என்ன சொல்வதென்று தெரியாமல் அவனையே பார்த்தபடி கண்கலங்கி என்ன பேசுவது என தெரியாமல் அப்படியே நிற்க அவனை எட்டி அணைத்த சக்தி,
 
விடு கபிலா நான் அத மறக்கவே முயற்சி பண்றேன்..
 
                                               இனி………………?????

Advertisement