Advertisement

இணை தேடும் இதயங்கள்
                             அத்தியாயம்  –  22
 
ரமலி லாப்டாப்பில் வேலைப்பார்க்கும் சாக்கில் சக்தி செய்யும் அலப்பறையைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.. சோபாவில் அம்மாச்சியின் மடியில் படுத்தபடி ஏதோ போன் பேசிக் கொண்டிருக்க அவர் அவன் தலையை வருடியபடி அவனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார்.. ரேணுகாவோ தட்டில் குழிப்பனியாரத்தை நிரப்பி கொண்டு வந்து,
 இத மட்டும் சாப்பிடுங்க தம்பி..?”.அவனை கெஞ்சிக் கொண்டிருக்க, அவனுக்கு ராஜ உபச்சாரம்தான்.. எங்க போனாலும் இவனால் எப்படி அங்கயிருக்கவங்களோட அப்படியே ஐக்கியமாகிற முடியிது…!!
 
அப்பத்தா ரமலியை பார்த்தவர்.. ஏத்தா புருசன் சாப்பிடுறான் பக்கத்தில இருந்து என்ன வேணும் ஏது வேணும்னு கேட்பியா எப்ப பாரு லொட்டு லொட்டுன்னு அந்த பொட்டிய தட்டிக்கிட்டு இருக்க.. இங்க வா..?”
 
அதான் ரெண்டு பேரும் திணிக்கிறிங்களே அப்புறம் எதுக்கு நான்.. மனது நினைத்தாலும் கால் அவர்கள் அருகில் சென்றிருந்தது.. என்னவோ அம்மாச்சியை பார்க்கும் போது இவன் அப்படியே இவங்க ஜெராக்ஸோ..!! அவன் தலையை தூக்கியவர் தான் எழுந்துகொண்டு அவன் தலையை அவள் மடியில் வைக்க ஒன்றும் தெரியாத பச்சை பிள்ளையை போல முகத்தை வைத்திருந்தவனை பார்த்தவளுக்கு நறுக்கென்று மண்டையில் ஒரு கொட்டு வைக்கலாமா என தோன்றியிருந்தது..
 
இப்போதெல்லாம் ரேணுகா எங்கே மகளிடம் பேசினால் எதாவது வில்லங்கத்தை இழுத்து விடுவாளோ என நினைத்து அப்பத்தாவுடனே இருக்குமாறு பார்த்துக் கொண்டார்.. அதைவிட பெற்ற தாயை போல வள்ளி ஆத்தா தன் மீது பாசமாக இருக்க அவருடனே ஒண்டிக் கொண்டார்..
 
இவன் யாருக்கிட்ட இப்படி சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கான்.. தலையை இன்னும் வாகாக அவள் மடியில் வைத்துக் கொண்டவன் கையை பிடித்து தலையை கோத சொல்ல அம்மாவும் அம்மாச்சியும் தோட்டத்து பக்கம் செல்வதை பார்த்தவள் தலைமுடியை பிடித்து ஆட்டி,” டேய் நீ அடங்கவே மாட்டியா..??”
 
போனை கையால் மூடியவன்,” யேய் ராட்ச்சி.. என்ன வேலை பார்க்கிற இப்ப பாரு அ…??”
 
அப்பத்தாவை கூப்பிட போனவன் வாயை கப்பென மூடியவள்,” நான் பேசினா பதில் நீ குடுடா.. எதுக்கு இப்ப சின்னப்புள்ள மாதிரி அப்பத்தாவை கூப்பிடுற..??”
 
அப்படிங்கிற.. சரி.. போனை காதில் வைத்து இந்தா ரமலிக்கிட்ட பேசுங்க..
 
யாரென்றே தெரியாமல் போனை காதில் வாங்கியவள் அந்த பக்கம் வக்கீல்…. அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை… எனக்கு தெரியும் ரமலி.. நான் ஒருத்தர பார்த்தவுடனயே தெரிஞ்சுக்குவேன்.. அவங்க எப்படி என்னன்னு…!! பத்தியா நம்ம சக்திதான் உனக்கு ஏத்தவன்னு நான் நினைச்சேன்… அது சரியாப்போச்சு.. உங்க அம்மா என்னை என்ன காச்சு காச்சினாங்க.. அவங்களே ரெண்டு நாளைக்கு முன்னாடி போன்பண்ணி நான் அவங்க குடும்பத்துக்கு இவ்வளவு தங்கமான மாப்பிள்ளையை கொடுத்ததுக்கு அவ்வளவு நன்றி சொல்லிட்டாங்க…
 
பல்லை கடித்தவள்,” அப்ப ஏன் அங்கிள் நான் போன் பண்ணா எடுக்கலை.. நேரா ஆபிஸ்க்கும் வந்தேன் உங்கள பார்க்க முடியல..??”
 
அவருக்கு தெரியும் தன்னை திட்டத்தான் அவள் தேடிக் கொண்டிருக்கிறாள் என்று அங்கிள் ரொம்ப பிஸிமா.. ஒரு கேஸ் விசயமா வெளியூர் போயிட்டு இன்னைக்குத்தான் வந்தேன்..
 
அப்ப சரி அங்கிள் நாளைக்கு வர்றேன் உங்கள பார்க்க..??”
ம்ம் போனை சக்திக்கிட்ட குடு..?”
 
சொல்லுங்க சித்தப்பா..ம்ம் சரி சரி கவலைப்படாதிங்க நான் பார்த்துக்கிறேன்.. நானும் வர்றேன்.. கண்டிப்பா வரவேற்புக்கு வந்திரனும் …ம்ம் பத்திரிக்கை கொண்டு வர்றேன்..?”
 
சித்தப்பாவா…. அடேய் அவர வைச்சுத்தான் உன்னை விரட்டலாம்னு பிளான் போட்டேன்.. அவரையும் உன் கைக்குள்ள போட்டுக்கிட்டியா.. கடுப்புடன் போனை வாங்கி கட் செய்ய,
 
போன் பேசும்போது இதென்னடி வேலை..?” அவள் பின் கழுத்தில் கைக்கொடுத்து அவள் முகத்தை தன் முகத்தருகே கொண்டு வந்தவன் அவள் இதழை சிறைசெய்திருந்தான்.. முதலெல்லாம் அவனுடன் முரண்டு பிடிக்கும் மனசு இப்போதென்னவோ அவனுடன் இணக்கமாக இருக்கவே விரும்புகிறது.. சற்று தன்னையும் அறியாமல் நெகிழ்ந்தவளுக்கு தெரியவில்லை.. சக்தியை கணவனாக தன் மனம் அவன் பழைய நினைவுகளை மறந்த அன்றே ஏற்றுக் கொண்டதை..!!! போன் சத்தத்தில் தன் நினைவுக்கு வந்தவள் இப்போதுதான் பார்த்தாள் தன் வாயிலும் அந்த பனியாரம் இருப்பதை..!! தன் முகத்தை அவனிடமிருந்து பிரித்தவள்,
 
டேய் உன் அலும்புக்கு ஒரு அளவே இல்லையா..?” கோபத்தில் அவனை அடிக்கவர அவன் ஹாலை சுற்றிக் கொண்டு ஓட, அங்கு இருவருக்கும் இடையே ஒரு அழகான காதல் விளையாட்டு ஆரம்பமானது..
 
நொடிக்கொரு தரம் தன் முகத்தை தொட்டு தொட்டு செல்லும் வெற்றியின் பார்வை மலருக்குள் ஏதேதோ எண்ணங்களை தோற்றுவிக்க, வெற்றிக்கோ தான் அவளுக்கு கொடுத்த இதழ் முத்தம்தான் அவன் நினைவில் இருந்தது.. மலருக்கு தான் காண்பது கனவா நினைவா என அடிக்கடி தன்னை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.. வலிக்கவே செய்தது.. சக்தி போன் செய்து இன்று இரவே அங்கு வருவதாக சொல்லியிருக்க அடுத்த ஐந்தாறு நாட்கள்தான் இருந்தது வரவேற்புக்கு..
 
 சக்தி இன்றே அங்கு சென்றுவிடலாம் தந்தை அதிகம் அலைந்தால் அவருக்கு ஆகாது.. வெற்றியும் அதிகநாட்கள் வெளியூரிலே இருந்ததால் அவனுக்கு அதிக ஆட்களை தெரியாது.. தான் போனால்தான் சரியாக இருக்கும் என்று நினைத்தவன்,
 
அனைவரையும் அன்றே அங்கு கிளப்பியிருந்தான்… ரமலிக்குத்தான் இரு மனசு.. நாம அங்களோடவே வாழ போறமா…. சக்தி தன்னை விட்டுவிடுவான் என்ற நம்பிக்கை போயிருந்தது.. தன்னால் அவனை விரட்ட முடியாது தோல்வியை ஒத்துக் கொள்ள மனதில்லாமல்தான் அவனுடன் சண்டையிடுவதே..
 
 அதைவிட ராமலிங்கம் போன்செய்து வெற்றி இனி இங்கேதான் என சொல்லியிருக்க அப்பத்தாவால் தாங்க முடியவில்லை.. தன் பேரனை இன்றே பார்த்துவிடவேண்டும் என்று ஒரே அடம்..
 
மலருக்கு அடிப்பட்ட அன்றே வெற்றி வேலைக்கென்று இன்னும் இரண்டு மூன்று பெண்களை சேர்த்திருக்க ஹோட்டலை பற்றி பிரச்சனை இல்லை.. வெற்றி அதை அழகாக தன் கைக்குள் கொண்டு வந்திருந்தான்.. அனைவரும் வந்தாலும் சாப்பாட்டை இங்கிருந்தே எடுத்துக் கொள்ளலாம் என வெற்றி சொல்லியிருக்க மலருக்குத்தான் வருத்தம்..
 
அத்தான் நானே சமைக்கிறேனே.. நான் சமைச்சா பெரிய அத்தானுக்கு ரொம்ப பிடிக்கும்..
 
அவள் கையை பிடித்தவன்,” ந்தா பாரு மலரு அண்ணி எப்படிபட்டவங்கன்னு நமக்கு தெரியாது.. அப்பா சொன்னவரைக்கும் அவங்க ரொம்ப வசதிவாய்ப்பா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. அவங்க இங்க தங்கும்போது நீ சமையல்காரி மாதிரி கரண்டி பிடிக்கிறத நான் விரும்பலை.. அதோட அவங்க இளக்காரமா உன்னை பார்த்தா என்னால தாங்க முடியாது… இத்தனை நாள் நீதான சமைச்ச நான் ஏதாவது சொன்னேனா.. இப்ப வேண்டாம்..அவங்க குணத்தை தெரிஞ்சுக்கிட்டு பார்த்துக்கலாம்.. டெய்லியும் எல்லாத்தையும் டேஸ்ட் பாரு.. வேலைப் பார்க்கிறவங்கள உன் கைக்குள்ள கொண்டு வந்து உன் பக்குவத்தை சமையல்ல புகுத்து..
 
எனக்கு இன்னும் ரெண்டு இடத்துல இதுமாதிரி ஹோட்டல் திறக்கனும்னு ஒரு எண்ணம் அப்பாக்கிட்ட கேட்கனும்.. அப்ப எல்லா ஹோட்டலுக்கும் வந்து நீ கரண்டிய பிடிக்க முடியாது.. என்னோட பொண்டாட்டியா சூப்பர் வைஸ் பண்ணு இல்லையை கேஷ் கவுண்டர்ல உட்காரு..
 
அவனை பிரமிப்பாய் பார்த்தவள் அவன் சட்டை பட்டனை திருகியபடி ,”ஏன்த்தான் உங்களுக்கு வேலைய விட்டதுல கஷ்டமா இல்லையா..??”
 
முதல்ல அப்பா சொல்லும் போதெல்லாம் கஷ்டமாத்தான் இருந்திச்சு.. ஆனா இப்போ நான் ரொம்பவே திருப்தியா உணர்றேன்.. இதுவும் பிடிச்சிருக்கு அதவிட என் அத்தை மகள ரொம்பவும் பிடிச்சிருக்கு.. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. அப்ப உனக்கு…??”
 
எனக்கா… அவள் சற்று யோசித்தவள் தன் முந்தானை கொண்டு அவன் கண்ணை மூடியபடி நான் சின்னப்பிள்ளையில இருந்து ஒருத்தர் பின்னாடி மட்டும்தான் சுத்துவேனாம்.. அவங்களத்தான் கட்டிப்பிட்டிப்பேனாம்.. முத்தம் கொடுப்பேனாம்.. அம்மாச்சி சொன்னாங்க.. அப்போ அப்பதில இருந்து அவங்கள மட்டும்தான பிடிச்சிருக்குன்னு அர்த்தம்… இப்பவும் அவங்கள மட்டும்தான் பிடிக்கும்.. இருவரும் அந்த முற்றத்தில் கயிற்று கட்டிலில் அமர்ந்து அந்த நிலா வெளிச்சத்தில் பேசிக் கொண்டிருக்க வெளியில் போன ராமலிங்கம் இன்னும் வீடு திரும்பவில்லை..
 
வெற்றி கட்டிலில் படுத்து மலரை தன் மேல் சாய்த்துக் கொள்ள அவனுக்கு மலர்மேல் சிறுவயதிலிருந்து காதலெல்லாம் இல்லை.. இப்போது இங்கு வந்தபிறகுதான் அவள் முகமே தன் நினைவுக்கு வந்தது.. கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதிற்குள் வந்து கொண்டிருந்தவள் காயம் பட்ட அன்று ரத்தத்தோடு பார்த்தபோது மலர் அவன் மனைவியாக உள்ளுக்குள் அடியெடுத்து வைத்துவிட்டாள்..
 
 தன் தாயை போலவே அவளும் ரொம்ப வீக்காக இருப்பதை கண்டவன் எங்கே இவளும் தன்னைவிட்டு பிரிந்துவிடுவாளோ என்ற எண்ணம் சுளீரென தாக்க.. தங்கள் வீட்டு ரத்தம் தன் அத்தை மகள்.. இவ எனக்குன்னு பிறந்தவ , இவ என்னோட பொறுப்பு நான்தான் இவள பார்த்துக்கனும்.. எல்லாம் செய்யனும் என்ற எண்ணம் அடியாளம் வரை சென்றதை தவிர்க்க முடியவில்லை.. இருவரும் இந்த நிமிடத்தை இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.. வெளியில் கார் சத்தம் கேட்டு அப்பத்தாவின் குரல் கேட்கவும் தன் நிலைக்கு வந்தவள் அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டபடி கதவை திறக்க ஓடினாள்.. வெற்றிக்கு முகம் கொள்ளாச் சிரிப்பு..
 
அடுத்த ஐந்தாறு நாட்கள் எப்படி பறந்ததென்றே தெரியவில்லை… வந்த அன்று மட்டும்தான் ரமலிக்கு ஏதோ போல இருந்தது.. சக்தியும் வெற்றியும் தந்தையின் சொல்கேட்டு அனைத்து வேலைகளையும் கையில் எடுக்க அப்பத்தா தன் பேரன் பேத்தி இருவரையும் பார்த்து சந்தோசத்தில் பேச்சே வராமல் இருந்தவர் அதுவும் பேத்தியின் கையில் காயத்தை பார்க்கவும் ஏன் சொல்லவில்லை என முறுக்கி கொண்டார்.. வெற்றியை மனதார வாழ்த்தி சீக்கிரமே கொள்ளு பேரன் பேத்தி வேண்டுமென ஆர்டர் போட மலருக்குத்தான் வெட்கம் தாங்கவில்லை..
 
 மறுநாளிலிருந்து ரேணுகாவோடு இந்த ஊரையே வலம் வந்தவர் அனைவருக்கும் ரேணுகாவை அறிமுகப் படுத்தியிருந்தார்.. அவர்களின் கள்ளமில்லா பேச்சிலும் செய்கையிலும் ஒன்றி போனவர் அப்பத்தாவை விட்டு பிரியவில்லை.. அவர்களுக்கும் அத்தனை வியப்பு அவர் போட்டிருந்த நகைநட்டிலும் வந்திறங்கியிருந்த காரிலுமே அவர்களின் வசதி தெரிந்திருந்தது.. இவரின் எளிமையிலும் குணத்திலும் கவரப்பட்டார்கள்.. ரமலி மட்டும் ஒதுங்கி ஒதுங்கி நிற்க சக்தி கண்டு கொள்ளவில்லை..
 
 
மலரின் குணம் தெரிந்தவன் தன் வேலையை பார்க்கச் செல்ல இரண்டு மூன்று முறை வலிய சென்று மலர் பேசவும் ரமலியும் தன் கூட்டை விட்டு வெளியில் வந்திருந்தாள்.. அக்கா அக்கா என தன்னையே சுற்றி வரவும் தன் தங்கையை போல எண்ணியவள் அவளுடனேயே தன் நேரத்தை கழித்தாள்..
 
 இருவரும் காலையிலேயே மலரின் ஸ்கூட்டியில் ஹோட்டலுக்கு செல்பவர்கள் மதியம் வரை அங்குதான்.. ரமலிக்கு இது மிகவும் பிடித்தமான இடமாக இருந்தது..அதைவிட மலரின் கைவண்ணம் எதை செய்தாலும் தனி ருசி இருப்பதை பார்த்தவளுக்கு அதை வியக்காமல் இருக்க முடியவில்லை.. அதோடவும் பாராட்டவும் செய்தாள்…
 
 ஏழை முதல் பணக்காரர்கள் வரை பல்வேறு தரப்பட்ட மக்களை பார்த்தாள்… வயதான சிலபேர் பணம் கொடுக்காமல் சாப்பிட்டு செல்வதை பார்த்து விபரம் கேட்டவளுக்கு இது அனைத்தும் மாமாவின் ஏற்பாடு பணம் இல்லாதவர்களுக்கும், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்கும் இங்கு எப்போதும் உணவு இலவசம் என்று… மனதிற்குள் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..
 
இதுவரை இந்த தொழிலை மட்டும் செய்யாதவள் இதில் அதிகம் லாபமும் மனதிற்கு மகிழ்ச்சியும் இருப்பது போல தெரிய வெற்றியுடன் இதை பற்றி பேச வேண்டும் என முடிவு செய்து கொண்டாள்.. வெற்றியும் அண்ணி என்ற மரியாதையுடனும், பாசத்துடனும் பழக சக்தியை விட வெற்றியுடன் பழகுவது ரமலிக்கு எளிதாக இருந்தது.. மனதிற்குள்ளோ அவனும் நல்லாத்தான் பேசுறான் கையும் வாயும்தான் சும்மா இருக்க மாட்டேங்குது..!!
 
மாலை வீட்டிற்கு வருபவர்கள் குளித்து புது உடை மாற்றி ரமலியோடு காரில் கிளம்ப இருவரும் வரவேற்புக்கு போட்டுக் கொள்ள நகை உடை என பர்சேஸ் செய்யவே நேரம் சரியாக இருந்தது.. மலருக்கு தன் பெயரில் இருந்த பணத்தோடு வெற்றியும் நிறையவே பணம் கொடுத்து தன் ஏடிஎம் கார்டையும் கொடுத்திருந்தான்.. ராமலிங்கமும் மலருக்கு கொடுத்தது போலவே ரமலிக்கு தன் மனைவியின் நகைகளை கொடுத்தவர் மாடல் பிடிக்கவில்லை என்றால் மாற்றி கொள்ளச் சொன்னார் ரமலி எவ்வளவு மறுத்தும் கேட்கவில்லை..
 

Advertisement