Advertisement

அங்கு ஒரு ஐந்து வயது பெண்குழந்தை ஓடிவந்து  அவனிடம் கையை தூக்க சொல்லி நீட்ட அந்த குழந்தையை தூக்கியவனின் இரு கன்னத்திலும் முத்தமிட்டு,” தாங்க்ஸ் அங்கிள்  தன் முதுகுக்கு பின்னால் ஒளித்து வைத்திருந்த அவர்கள் பள்ளியில் பூக்கும் அந்த இட்லி பூ கொத்தை எடுத்து நீட்ட,
 
அந்த பூச்செண்டு போல இருந்த குழந்தையை முத்தமிட்டு அந்த பூவை வாங்கியவன் எதுக்குடா..??”
அதுவா… அதுவா.. நீங்க மிஸ் என்னை காலையில திட்டும்போது மிஸ்ஸ திட்டுனிங்கள்ள அதான் பிரண்ட்ஸ் எல்லாம் உங்ககிட்ட தாங்க்ஸ் சொல்லச் சொன்னாங்க..
 
ஓஓஓஓ குட் கேர்ள்.. என்ன இன்னும் ஸ்கூல்விட்டு போகாம இருக்கிங்க..
 
அதுவா எங்க மம்மி இன்னைக்கு லேட்.. அதான்.
 
ரமலியின் முகத்தை பார்த்தவன் பாவம்,” இந்த ஆன்ட்டிக்கும் ஒரு முத்தம் கொடுக்குறியா..??”
 
மாட்டேன் என தலையை ஆட்ட,” ஏன்டா..
இவங்க எங்க மிஸ்ஸோட பேசுவாங்க.. பேர்டு ஆன்ட்டி..
 
இல்லடா பாவம் நல்ல ஆன்ட்டி ஒன்னே ஒன்னு கொடுங்க.. உதட்டை சுருக்கி வைத்து அவள் கன்னத்தில் பட்டும் படாமல் ஒற்றி எடுத்த குழந்தை. தூரத்தில் தன் தாயின் ஸ்கூட்டியை பார்க்கவும் அவனிடமிருந்து நழுவி பாய் சொல்லி இறங்கி ஓட பார்த்திருந்த ரமலிக்கே ஒரு நிமிடம் சக்தியை பார்த்து பொறாமையாய் இருந்தது…
 
மழலைச் சொல்லுக்கும் அதன் முத்தத்திற்கும் ஈடு இணை எதுவுமில்லை என்பதை உணர்ந்தவள் அந்த நிமிடத்தை ரசித்தபடி அவனுடன் நடக்க,
 
நமக்கும் இதுமாதிரி ஒரு குழந்தை இருந்தா நல்லாயிருக்கும்ல.. அந்த குழந்தையின் ஓட்டத்தை ரசித்தபடி சக்தி சொல்ல தலையை ஆட்ட போனவள் தன் நிலைக்கு வந்து வேகமாக ஆபிஸ் அறைக்குள் நுழைந்திருந்தாள்..
 
கணவன் மனதை அடைய எளிதான வழி அவன் வயிறுதான் விதவிதமாக சமைத்து அவன் இதயத்தை அடைவார்கள் என்று சொல்வார்கள்.. ஆனால் இங்கு வெற்றி தன் மனைவிக்கு ஊட்டிவிட்டு அவளுக்கு பார்த்து பார்த்து செய்தே அவள் இதயக்கதவை தட்டியிருந்தான்.. என்ன வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் எவ்வளவு கூட்டமிருந்தாலும் மனைவி மீது வைத்த கவனிப்பை சிதறவிடவில்லை..
 
ஒருவாரம் சென்றிருந்த நிலையில் அன்று காலையில் தன் தந்தையிடம் ,”அப்பா எனக்கு மெட்ராஸ்ல கொஞ்சம் வேலையிருக்கு இன்னைக்கு கிளம்பலாம்னு இருக்கேன்..
 
கேட்டிருந்த மலரும் ராமலிங்கமும் அப்படியே திகைத்தபடி நிற்க மலருக்கு அழுகை தாங்கவில்லை.. இதுக்குத்தான் இவங்க பக்கம் பார்வைய செலுத்தாம இருந்தேன்.. ஊட்டிவிட்டு, சேலைகட்டிவிட்டு ,மருந்து கொடுத்து ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செஞ்சிட்டு இவர் மெட்ராஸ்க்கு போறாரா.. மெட்ராஸ்க்கு மட்டும்தான் போறாரா இல்ல.. அப்படியே வெளிநாட்டுக்கும் போகப்போறாரா.!!.தன் மனநிலையை அவனுக்கு காட்டவிரும்பாதவள் தலையை குனிந்து தன் கண்ணீரை அடக்கியபடி உள்ளே செல்ல,
 
ராமலிங்கமோ இத்தனை நாட்கள் பார்த்தும் பார்க்காத வகையில் மகன் மருமகள் நடவடிக்கைகளை கவனித்திருந்தவர் இனி எப்போதும் இவர்கள வாழ்வு சிறந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்திருந்தார்.. இன்று மகனின் இந்த பேச்சால் மனம் தளர்ந்து போயிருக்க திட்டக்கூட வாய்வரவில்லை.. மனதெல்லாம் அவன் மீது வெறுப்பு வர ஏதேனும் அதிகமா பேசிவிடுவோமோ என எண்ணி பல்லை கடித்தபடி அடுத்து தன் வேலையை பார்க்கச் சென்றார்..
 
அடுத்த இரண்டு நாட்களும் மலருக்கு எப்படி பொழுது போனது என்று கேட்டால் தெரியாது யார் என்ன கேட்டார்கள்..வாங்கினார்கள் ம்கூம் எதுவும் நினைவில்லை.. கண்ணீர் கண்ணை மறைத்தபடி இருக்க தன் மாமாவின் முன் திடமாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.. இரவு முழுவதும் தலையணை முகம் புதைத்து ஒரே அழுகை.. அவனை நினைத்து நினைத்து ஏங்கி கொண்டிருந்தாள்..
 
 அன்று காலை எப்போதும் போல கண்விழித்தவள் வெளியில் வந்து பார்க்க மாமா  எழுந்த அரவம் தெரியவில்லை.. அவர் அறையை திறந்து பார்த்தவள் அவர் கட்டிலில் படுத்திருக்கவும் அவரிடம் சென்று மாமா என லேசாக குரல் கொடுக்க,
 
சட்டென கண்விழித்தவர் மலரை பார்க்கவும் எழுந்து நேரமாச்சாத்தா.. இதோ இப்ப கிளம்பிருறேன்.. வெளியில் ஏதோ கதவு தட்டும் சத்தம் கேட்ட மலர் திறக்க போகவும் இன்னேரத்தில யாரு..” இருத்தா நான் பார்க்கிறேன்..?” கதவை திறக்க வெற்றி..!!!
 
தன் மகனை காணவும் இரண்டு நாட்களாக தன் மருமகள் பட்டபாடு நினைவு வர,” இப்ப எதுக்கு வந்த ஏதாவது மறந்திட்டு போயிட்டு எடுக்க வந்தியா…?” கோபமாக உள்ளே செல்ல,
 
எடுக்க வரலைப்பா எடுக்க போனேன்..” என்ன என்பது போல பார்த்தவரை, என்னுடைய பொருளெல்லாம் எடுத்துக்கிட்டு அதோட வேலையும் வேணான்னு எழுதிக்கொடுக்க போனேன்..
 
அப்ப வெளிநாடு..??” குப்பென ஒரு மகிழ்ச்சி..
 
எந்த நாடும் இல்லப்பா இனி எப்பவும் இங்கதான்..தன் மகனை கட்டித்தழுவியவர்.. அவன் கன்னத்தை தட்டிக் கொடுத்து ,
ரொம்ப சந்தோசமா இருக்கு வெற்றி.. இத்தனை நாள் நான்பட்ட கஷ்டத்துக்கு இன்னைக்கு ஒரு விடிவு கிடைச்சிருச்சு.. வேகமாக தன் மனைவியின் படத்தின் அருகே அழைத்துச் சென்றவர் வசந்தா கேட்டியா உன்னோட செல்ல மகன் உன்கூடவே இருக்கேன்னு ஒத்துக்கிட்டான்.. சொல்லிக்கிட்டே இருப்ப அவன விட்டுறாதிங்க,,.. விட்டுறாதிங்கன்னு..!! அவன் எங்கள விடாம எங்களோட இருக்கேன்னு வந்திட்டான்.. அவருக்கு கண்கலங்கியது.. தன்னை கட்டுப்படுத்தியவர் நான் முன்னாடி கிளம்பி போறேன்.. நீ கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு ஒரு எட்டுமணி போல மலரை கூட்டிட்டு வா..?” சந்தோசமாக குளிக்கச் செல்ல,
 
தன் தந்தையின் மகிழ்ச்சியை தன்னுள் உணர்ந்தவன்… மலரை தேடிச் செல்ல அவள் நின்ற இடத்தில் அப்படியே நின்றிருந்தாள்..
 
அவளிடம் சென்றவன் தோளில் கைவைத்து உலுக்க,
 
தன் நினைவுக்கு வந்தவள் கண்ணீர் ஊற்றியபடி அவனை நோக்கி தன் கையை விரித்திருந்தாள்.. நான்கு வயதில் தான் பார்த்த அதே செய்கை..!!!
 
பாய்ந்து அவளை தூக்கியவனின் இரு கன்னத்திலும் அழுந்த முத்தமிட இருவருமே அந்த நாளுக்கு சென்றிருந்தனர்..
 
அவளிட்ட அத்தனை முத்தத்தையும் ஆழ்ந்து வாங்கியன் திருப்பியெல்லாம் முத்தமிடவில்லை.. முத்தமிட தோன்றவில்லை.. அவளின் மென்மையான உதடுகள் அவனின் முரட்டு கன்னத்தில புதைந்து எழ அவனால் தாங்கமுடியவில்லை.. தடுக்க முடியவில்லை.. அப்படியே ஜிவ்வென வானில் பறப்பது போலிருந்தது..
 
அவளோடு அவன் அறைக்குள நுழைந்தவன் அந்த கட்டிலில் அமர அவன் மடியில் மலர்..!!
 
நீங்க ஊருக்கு போகலையாத்தான்..??” அதற்கு ஒரு முத்தம்
ஆமான்டா பட்டுக்குட்டி..
இனி எப்பவும் எங்களோடவேவா.. அடுத்த கன்னத்தில்
 
ஆமான்டா லட்டுமா..” அவளின் முத்தத்தோடு அவள் கண்ணீர் துளிகளும் சேர்ந்திருக்க இவ்வளவு மகிழ்ச்சியை இவளால் தாங்க முடியாமல் மயக்கம் வருவது போலிருந்தது.. இரண்டு நாளும் இரவு முழுவதும் தூங்காமல் அழுது கொண்டே இருந்தவளுக்கு இப்போது அந்த தூக்கம் அவள் கேளாமலே வந்திருந்தது.. தன்னை அறியாமல் அப்படியே தூக்கத்திற்கு சென்றிருக்க,
 
பேசிக் கொண்டிருந்தவள் அப்படி சட்டென தூங்கவும் முதலில் பதறியவன்,” மலர் மலர்” என கன்னத்தை தட்ட ம்ம்ம் “ என்ற முனகலும் சீராக ஏறி இறங்கிய மூச்சையும் பார்க்கவும்தான் சுயத்துக்கு வந்தான்..
 
அவளை தூக்கி கட்டிலில் சரியாக படுக்க வைத்து அவளருகில் படுக்க போனவன் தந்தையின் குரல் கேட்கவும் வெளியில் வந்திருந்தான்..
வெற்றி இன்னைக்கு வேணா நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு நாளைக்கு ஹோட்டலுக்கு வர்றிங்களா..??”
 
இல்லப்பா கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்தா போதும்.. அவர் வாசலில் கால்வைக்க
அவர் பின்னாலே வந்திருந்தவன்.. அப்பா..?”
என்ன வெற்றி.
அது வந்து…??”
சொல்லு.. என்ன வேணும்.
இல்ல அது வந்து நான் இனி எப்பவும் இங்கதான் இருக்கப்போறேன்.. அதோட எங்க கல்யாணமும் திடிருன்னுதான நடந்திச்சு அண்ணனோட சேர்த்து எங்களுக்கும் வரவேற்பு வைச்சிருறிங்களா..?”
 
நேத்துத்தான் பத்திரிக்கை வந்திச்சு.. இனி அத மாத்த முடியாதே..!! ம்ம் சரி அத  பார்த்து நீயும் மலரும் என்ன செய்யனும்னு முடிவு பண்ணுங்க.. நான் அதுமாதிரி செய்றேன்.. இப்பவே ரொம்ப நேரமாச்சு நான் கிளம்புறேன்..
 
மனதில் ஏமாற்றம் பரவ பத்திரிக்கையோடு அவர்கள் அறைக்குள் நுழைந்தவன் மலரின் அருகில் கட்டிலில் அமர்ந்தபடி பத்திரிக்கையை பிரித்து பார்க்க அவன் கண்களையே நம்ப முடியவில்லை..
 
கண்ணை கசக்கிவிட்டு பார்க்க சக்தி வெற்றி இருவருக்கும்தான் வரவேற்பு என அச்சிடப்பட்டிருந்தது..
 
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மலரை பார்த்தவன் இப்ப போய் இந்த லட்டுமா இப்படி தூங்குறாளே..!! அவளோடு அருகில் படுத்தவன் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவளிட்ட ஒவ்வொரு முத்தமும் இப்போது இனித்தது.. பேபி நம்மள காணாம ரொம்ப தவிச்சிட்டாளோ..!! அவளுக்கு அடிப்பட்டு கொஞ்சம் குணமாகியிருந்த கையை சற்று தள்ளி வைத்தவன் அவளை இறுக்கி அணைத்து அவள் இதழில் தன் இதழை புதைத்திருந்தான்…
 
                                                   இனி……….?????

Advertisement