Advertisement

இருவரும் கம்பெனிக்குள் நுழைய எதிர்பட்டவர்கள் அனைவரும் இவர்களுக்கு விஷ்பண்ண தலையை ஆட்டியபடி இவர்களின் அறைக்குள் நுழைந்திருந்தார்கள்.. ரமலியின் பிஏ வந்து மீட்டிங்கிற்கு அனைவரும் வந்துவிட்டதாக சொல்ல சக்தியை பார்த்தவள்,” நீங்க மீட்டிங் வர்றீங்களா..??”
 
நோ..நோ அந்த பைலை குடுத்திட்டு போ… காரில வரும்போது அதுக்குள்ளயே தலையை குடுத்திட்டு இருந்தியே நானும் என்னன்னு படிச்சு பார்க்கிறேன்.. அவள் ஒன்றும் சொல்லாமல் சிசிடிவியில் அந்த அறையை காட்டிவிட்டு தன் பிஏவோடு செல்ல சக்தியும் தன்னோடு கம்பெனிக்கு வர ஆரம்பிக்கவுமே அவனுக்கு ஒரு பதவி கொடுத்து அவனுக்கு தனி கேபினே முன்பு கொடுத்திருந்தாள்..
 
அவன் இன்று ரமலியின் அறையில் அமர்ந்திருந்தவன் அந்த திரையில் அவள் அந்த அறைக்குள் கம்பீரமாக நுழையும் காட்சி தெரியவும் அவளை ரசிக்க ஆரம்பித்தான்… தன் முகத்தை கடுமையாக மாற்றியிருந்தவள் அனைவரும் அவளுக்கு வணக்கம் சொல்லவும் பதில் வணக்கம் சொல்லி பேச்சை ஆரம்பிக்க தான் பொறுப்பேற்றபின் நடக்கும் முதல் மீட்டிங் என்பதால் பொறுமையாகவே எல்லாருடனும் சுமூகமாக பேச்சை ஆரம்பித்தாள்..
 
 பல கம்பெனி பொருட்களின் தரத்தை புகழ்ந்தவள் அவர்களுக்கு தாங்கள் தரவேண்டிய தொகை நிலுவையாக இருந்தால் வாங்கி கொள்ளச் சொன்னவள்.. தரம் இல்லாத பொருட்களை தாங்கள் இனி நிறுத்தப்போவதாக அறிவிக்க பலர் முகத்தில் கவலை.. மொத்தமாக இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைக்கும் கம்பெனி.. சிலர் ஒருமாதம் மட்டும் தவணை கேட்டு அந்த பழைய ஆர்டர்களை எல்லாம் ரிட்டர்ன் எடுத்துக் கொண்டு புது ஆர்டர்களை தருவதாக சொல்ல இனி தரத்தில் எந்த குறையும் இருக்காது இந்த ஒருமுறை மட்டும் மன்னிப்பு கேட்க அந்த சிமெண்ட் தொழிற்சாலை ஆள்மட்டும் பேசாமல் இருந்தான்..
 
இவ மாமன்மகனுக சொன்ன மாதிரி ஆளு தளதளன்னுதான் இருக்கா திமிரு ஜாஸ்திதான்.. இவ்வளவு அழகுக்கு இந்த திமிருகூட இல்லாட்டி எப்படி..!! கேமராவையே பார்த்துக் கொண்டிருந்தவன் அந்த ஆளின் பார்வையை பார்க்கவும் நிமிர்ந்து அமர்ந்த சக்தி தன் கவனத்தை அந்த ஆள்மீதே வைக்க,
 
நீங்க நினைச்சவுடனயெல்லாம் என்னோட கான்டிராக்ட வேண்டாம்னு ஒதுக்க முடியாது.. பத்து வருசமா இந்த கம்பெனிக்கு சப்ளை பண்றோம்.. இப்ப நீங்க எங்கள வேண்டாம்னு சொல்றதுக்காக இப்படி பொய்புகார் சொல்றிங்கன்னு நினைக்கிறேன்..??” மற்றவர்களும் அப்படியிருக்குமோ என்று ரமலியை பார்க்க,
 
தன் பிஏவை கண்காட்ட அவர்களுக்கு ஒரு பைல் கொடுக்கப்பட்டு அதில் அந்த பொருட்கள் தரத்தை சோதித்த அறிக்கை இருந்தது.. அனைத்தும் அக்குவேறு ஆணிவேறாக அவ்வளவு தெளிவாக இருக்க மற்றவர்கள் அனைவரும் கப்சிப் இந்த ஆள்மட்டும் இது பொய்யறிக்கை என்று தாம்தூமென்று கத்த ஒரு கட்டத்தில் ரமலியையும் வா போவென்று ஒருமையில் பேச ஆரம்பித்துவிட்டான்.. ஓரே ரகளை..
 
ரமலிக்கு இங்கு பொறுமை போய் கொண்டிருந்தது… அவன் குரல்தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்க பளாரென ஒரு சத்தம் அனைவரும் கப்சிப்பென அடங்க சக்தி அங்கு ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான்..
 யாரை வா போன்னு பேசுற..? பல்லை தட்டி கையில கொடுத்திருவேன் பார்த்துக்கோ.. அவனுக்கு அங்கு இருப்பு கொள்ளவில்லை.. அவன் கண்கள் இரண்டையும் தோண்டவேண்டும் போல வெறி வந்திருக்க அவன் பேச்சு அவனை கொல்லும் வெறியை கொடுத்திருந்தது..
 
ஓவரா பேசிட்டல இன்னும் ஒரே வாரத்துல உன்னோட கம்பெனிய இழுத்து மூடிக்காட்டவா.. யாருக்கிட்ட ராஸ்கல்.. பொருளை தரமில்லாம அனுப்பிட்டு என்ன சவுண்டு..??”
 
அனைவரும் அதிர்ந்து நிற்க ரமலி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. ஏனென்றால் தான் செய்ய போன வேலையைத்தான் சக்தி செய்திருந்தான்..சரணாக இருந்தால் ஆச்சர்யப்பட்டிருப்பளோ என்னவோ இப்போது மனதுக்கு திருப்தியாக இருந்தது.. அவன் பேசிய பேச்சு அப்படி யாரோ சொல்லிக் கொடுத்து பேசுவது நன்றாக தெரிந்தது..
 
சக்தியை இவர்கள் அனைவரும் இன்றுதான் பார்க்கிறார்கள் நெருங்கிய சிலபேருக்குத்தான் இவளுக்கு திருமணம் முடிந்தது தெரியும் பலபேருக்கு தெரியாது.. யார்டா இவன் அடிய பார்த்தா பெரிய சண்டியர் அடிமாதிரி இருக்குது ஆனா கோர்ட் சூட்டெல்லாம் போட்டு பக்கா ஜென்டில்மேன் லுக்ல இருக்கான்.. அனைவரின் முகத்தையும் பார்த்து இவளுக்கு லேசாக சிரிப்பு.. பயபுள்ளைக அம்புட்டும் பயந்திருச்சுக போல..!!
 
இவளை முறைத்தபடி,” இவன் நம்ம கம்பெனிக்கு தரவேண்டிய அமௌண்ட் எவ்வளவு.?”.
 
அவள் அமௌண்டை சொல்லவும்,” இந்த அமௌண்ட் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள தரணும் இல்லைனா நீ அனுப்பி வைச்ச எல்லா சிமெண்ட்டும் போக வேண்டிய இடத்துக்கு போயிறும் அப்புறம் நான் ஒன்னும் செய்ய வேண்டாம்.. கலப்படம்னு நிரூபனம் ஆனா அதுவே எல்லாம் தானா நடக்கும்..??”
 
அடிவாங்கியவன்,” இத சொல்ல நீ யாரு..?”
 
ரமலியோ கோபத்துடன்,” மரியாதை.. மரியாதை ரொம்ப முக்கியம்.. இவர் இந்த கம்மெனியோட ஜி எம்.. அதோட என்னோட கணவர்.. இப்ப இவர் சொல்லலாம்தானே..?” அங்கிருந்தவர்களோ இந்த பொண்ண வா போன்னு சொன்னா இவரு அடிக்கிறாரு இவர மரியாதையில்லாம பேசினா இந்தம்மா கோபப்படுது.. நமக்கெதுக்கு வம்பு அனைவரும் சக்தியிடம் கைகொடுத்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள சற்று நேரம் கழித்து, ஓகே பிரண்ட்ஸ் நீங்க எல்லாரும் கிளம்பலாம்…??”
 
அனைவரும் சக்தியை பார்த்துக்கொண்டே விடைபெற அந்த சிமெண்ட் கம்பெனி ஆளும் இவர்களை முறைத்துக் கொண்டே வெளியேறினான்..
 
அவள் தண்ணீர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடித்து கொண்டிருக்க அதை பிடுங்கியவன் தன் வாயில் சரித்திருந்தான்.. அவன ஏன் தேவையில்லாம அடிச்சிங்க..?”
 
ஆமா நீ அடிக்க எழுந்திருச்ச அதுக்குள்ள நான் அடிச்சிட்டேன்னு கோபம் அதானே.. ??” நம்மள கண்டுபிடிச்சிட்டானே.. என்ன முழிக்கிற.. அவன்கிட்டயெல்லாம் இவ்வளவு நேரம் பேசினதே தப்பு .. அவனும் அவன் பார்வையும் இன்னும் ரெண்டு போடாம விட்டுட்டேன்.. உன்னைப்பார்த்தா இப்படி பொறுமையா பேசுற ஆள்மாதிரி தெரியலையே..??”
 
ப்பச் எங்க தாத்தாவோட பிரெண்ட் கம்பெனி அது.. நாங்க கஷ்டப்பட்ட காலத்திலகூட அவங்க பணம் வாங்காம நிறைய பொருள் இறக்கினதா தாத்தா அடிக்கடி சொல்லியிருக்காங்க அதான் அவனுக்கு ஒரு லாஸ்ட் சான்ஸ் கொடுக்கலாம்னு பார்த்தேன்.. நீங்க கெடுத்துட்டிங்க..??”
 
வாய்தான் இப்படி சொல்லுது முகம் என்னவோ இதை எதிர்பார்த்த மாதிரியே பிரகாசமா இருக்கே..??” அவள் முகத்தை தன் கைகளால் பிடித்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட அவன் மார்பில் கைவைத்து அவனை தள்ளியவள்..
 
கோபத்துடன் அங்கிருந்த வாட்டர் பாட்டில் தண்ணீரை அவன்மீது அப்படியே ஊற்ற செத்தடி இன்னைக்கு…??” தன் தலையில் இருந்து வடிந்த தண்ணீரோடு இப்போது அந்த அறைக்குளேயே அவளை விரட்ட ஆரம்பித்திருந்தான்..
 
அன்று முழுவதும் வெற்றி மலரை பார்த்துக் கொள்ள இரவு எட்டுமணிக்கே ஹோட்டலை அடைத்துவிட்டு மருமகளை பார்க்க வந்த ராமலிங்கம் பார்த்தது வெற்றி அவளுக்கு இரவு உணவை ஊட்டுவதைத்தான்.. இட்லியை அவன் வைத்த சட்னியோடு அவளுக்கு ஊட்டிக் கொண்டிருக்க பார்த்த அவருக்கு மனம் நிறைந்தது..
 
அதுவரை கவலையில் இருந்தவர் இப்ப மலருக்கு அடிப்பட்டதும் ஒரு வகையில நல்லதோ என எண்ணினார்.. வீட்டுக்குள் வந்த மாமாவை பார்க்கவும் கூச்சப்பட்டு போதும் என்று தடுத்தவளை  ரெண்டு இட்லி எப்படிடி போதும்..?” கோபப்பட்டு திட்டி இட்லியை அவள் வாயினில் திணிக்க அவரும் இவர்களை கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் நுழைந்திருந்தார்..
 
ஒரு பத்து நிமிடம் கழித்து வெளியில் வர அங்கு முற்றத்தில் அமர்ந்திருந்த மலரை பார்க்கவும்,” கை எப்படிம்மா இருக்கு..??”
 
அது ஒன்னுமில்ல மாமா.. லேசான காயம்தான் சீக்கிரமே சரியாயிரும்..
தன் தந்தைக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்து அவரை அழைக்க பரிமாற வந்தவளை தடுத்து,” நீ போய் மாத்திரை போடு ..?” அவளை விரட்டியவன் இவனே எல்லாம் செய்ய,
 
நாளையில இருந்து நீயும் மலரும்தான் ஹோட்டலை பார்த்துக்கனும் வெற்றி.. ஒரு பத்து நாள் எனக்கு இந்த வரவேற்பு வேலை இருக்கு அங்க இங்க நகர முடியாது.. என்ன பார்த்துக்கிறியா..??”
 
இன்னும் தான் வெளிநாடு போகபோவதில்லை என்பதை சொல்லாதிருந்தவன் ,”சரிப்பா நாங்க பார்த்துக்குறோம்..
 
காலையில மட்டும் போய் ஹோட்டலை திறக்கிறேன் எட்டு மணிக்கு மேல என் வேலையை பார்த்துக்கிறேன்..
 
சரிப்பா சரிப்பா..தலையை தலையை ஆட்டும் மகனை கண்டவருக்கு வியப்பு.. என்னடா ஒரே நாள்ல வந்த மாற்றம்.. சாப்பிட்டுவிட்டு தன் அறைக்கு படுக்க போக,
 
மலருக்கோ பெரும் கவலை நாம ஸ்கூட்டிய இன்னும் ஒரு வாரத்துக்கு ஓட்ட முடியாது.. இன்னைக்கு மாதிரி அவதி படவும் முடியாது அவள் முற்றத்தில் நடைபழகி கொண்டிருக்க நடு முற்றத்தில் தன் கட்டிலை போட்டவன் படுக்கையை விரித்தபடி என்ன படுக்க போகாம இருக்க இப்பவும் வயிறு வலிக்கிதா…??”
 
அவனிடம் வேகமாக சென்றவள் அவன் அருகில் அந்த நடுமுற்றத்தை சுற்றி பதிக்கப்பட்டிருக்கும் பட்டியக்கல்லில் அமர்ந்தபடி,” ஏங்க உங்கள எழுப்பனும்னா என்ன பண்ணனும்..?” தன்னுடைய நீண்ட நேர யோசனைக்கான காரணத்தை கேட்ட,
 
அவளை முறைத்தவன் ,”இதத்தான் இவ்வளவு நேரம் சுத்தி சுத்தி யோசிச்சியா..??”
தலையை எல்லாப்பக்கமும் ஆட்ட அவள் தலையில் கைவைத்து அழுத்தியவன், கூப்பிட்டா எழுந்துக்க போறேன்..??”
 
அப்படியும் எழுந்துக்காட்டா..?”
இதென்னடி கேள்வி தொட்டு எழுப்புனா எழுந்துக்க போறேன்..??”
அப்பவும் முழிக்காட்டா..
உன்னை வெளுக்க போறேன் பாரு..?? ம்ம் என் செல்போனுக்கு கூப்பிடு அத என்னோட தலைமாட்டுல வைச்சுத்தான் படுப்பேன் அந்த சத்தத்தில முழிச்சிக்கிறேன்..
ஹிஹிஹி அப்பவும் முழிக்காட்டா..?” அவளை ஒரு மாதிரி பார்த்தவன்..
ம்ம் ஒரு வாளி தண்ணிய எடுத்து என் தலையில ஊத்து… எழுந்துக்குவேன்...கடுப்புடன் சொல்ல,
அப்ப சரி அதையே செய்றேன்.. எழுந்தவள் தன் சந்தேசத்தை தீர்த்துக் கொண்டு உள்ளே செல்ல திரும்ப அவள் அடிபடாத கையை பிடித்து இழுத்தவன்..
 
இவன் மார்பில் விழுந்தவளை தன்னை பார்க்க செய்து...ஏன் இந்த கொலைவெறி..??”
தன் அடிப்பட்ட கையை வருடியபடி கேட்டவனிடம் , “ இல்ல மத்த எல்லாத்தையும் இன்னைக்கு செஞ்சு பார்த்துட்டேன்.. இந்த தண்ணி ஊத்துறது மட்டும்தான் பாக்கி நாளைக்கு அத செஞ்சுருறேன்..
என் மேலயே தண்ணிய ஊத்துவியா அடிங்.. ..??”அவளை மண்டையில் கொட்டவர அவனை தள்ளிவிட்டவள் தன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்திருந்தாள்…
 
                                                இனி……………?????

Advertisement