Advertisement

நீராகாரத்தை ஊற்றிக்குடித்தவளுக்கு காந்திய வயிற்றில் ஒரு ஜில்லென்ற உணர்வு..  பாலை அடுப்பில் வைத்தவள் எட்டி ஹாலை பார்க்க தங்கை மட்டும் புத்தகத்தை விரித்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.. சித்தியையும் இன்னொரு தங்கையையும் காணவில்லை.. தந்தைக்கு பாலை ஆற்றி கொண்டு போய் கொடுக்க தன் அருகில் அமரச் சொன்னவர்,
 
அவள் கையை பிடித்து தன் கண்ணில் ஒற்றியபடி,” என்னை மன்னிச்சிருத்தாயி..?”
 
 தன் தந்தையை அணைத்து,” அப்பா என்னப்பா இது விடுங்க..
இல்ல தாயி இன்னைக்கு நான் பேசனும் இத்தனை வருசமா  நான் செஞ்ச பாவத்துகெல்லாம் மன்னிப்பு கேட்கனும்..
 
அப்பா..” ஏதோ சொல்ல ஆரம்பிக்க..
இல்லத்தா நான் சொல்றத மட்டும் கேளு. உன் சித்திகாரி எங்கயோ போயிருக்கா நீ சீக்கிரம் வரணும்னுதான் சாமிய வேண்டிக்கிட்டு இருந்தேன்.. நான் செஞ்ச பாவம் எல்லாம் போதும் இனியாச்சும் எம்புள்ளைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிற மாதிரி செய்யனும்..
 
இந்த அப்பா மேல நம்பிக்கை இருந்தா ஒரு சத்தியம் மட்டும் செஞ்சு  குடு.. நான் என்ன சொன்னாலும் கேட்பேன்னு.. எதுக்கும் தடை சொல்ல மாட்டேன்னு உங்க அம்மா மேல சத்தியம் பண்ணுத்தா..” தன் கையை நீட்டி கேட்க,
 
இதுக்கும் மேல என்ன கஷ்டத்தை நாம அனுபவிக்க போறோம் என நினைத்தவள் தன் தந்தைக்காக தன் அன்னையை நினைத்துக் கொண்டு அவர் கையில் சத்தியம் செய்து கொடுத்தாள்…
 
அங்கு மதுரையில் ஒரு வீட்டில்,
 
ஹாலில் ஒரு பெரிய படம் வைக்கப்பட்டு அதற்கு மாலை போடப்பட்டிருந்தது.. அதன் அருகில் ஒரு பெண் மட்டும் அமர்ந்து அழுது கொண்டிருக்க சுற்றி நின்றவர்களுக்கோ முகம்தான் சோகமாக இருந்தது.. மனதோ குதூகலித்துக் கொண்டிருந்தது..  அந்த மகிழ்ச்சி தங்கள் முகத்தை எட்டிவிடாமல் ரொம்ப கவனமாக முகத்தை வைத்திருந்தனர்..
 
அறைக்குள் இருந்து ஒரு அழகிய பெண் வெளியில் வர கூடவே அவர்களது வக்கீலும் வந்தார்.. ஐந்தடி உயரம் அதற்கேற்ற உடல்வாகு, நல்ல சிவந்த நிறம், வெயில் படாத மேனி.. செல்வ செழிப்பில் வளர்ந்தவள். யாருக்கும் படப்படாத பார்வை, அணிந்திருந்தது சாதாரண காட்டன் சுடிதார்தான் அதுவே அவளை ஒரு மகாராணியை போல காட்டியது..
 
மாலை போட்டிருந்த புகைப்படத்தை வெறுப்பாக பார்த்தவள் அங்கிருந்த சோபாவில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து தன் சுற்றிலும் ஒரு பார்வையை செலுத்தி கொண்டிருந்தவளுக்கு போட்டாவின் அருகில் அமர்ந்து அழுதுகொண்டிருந்த தன் தாயை பார்க்கவும் முகம் மென்மையாக மாறியது..
 
போட்டோவில் இருப்பவர் அவள் தந்தை.. லண்டனில் இருந்து தன் தந்தையின் மறைவுக்குத்தான் வந்திருந்தாள்.. தன் தாயை அணைத்து தன் அருகில் அமரவைத்தவள் மற்றவர்களை பார்த்து ,எல்லாரும் இங்க ஏன் நின்னுட்டு இருக்கிங்க.. அவங்க அவங்க வேலையை பார்க்கலாம்..??”
 
அவளின் மூத்த அத்தை தன் மகனை அழைத்து அவளிடம் குழைந்தபடி,” பாப்பா அப்ப கல்யாண வேலையை பார்க்கவா.. அண்ணனுக்கு என் பையன உனக்கு கட்டிவைக்கத்தான் விருப்பம் எப்பவும் சொல்லிக்கிட்டே இருப்பாரு..??”
 
அதற்குள் சின்ன அத்தையோ,” என் பையனக்கூடத்தான் மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு எப்பவும் வாயார கூப்பிடுவாரு.. ரமலிக்கும் இவனுக்கும்தான் பொருத்தம்னு எப்பவும் சொல்லிட்டு இருப்பாரு..??”
 
இருவரையும் ஒரு முறை முறைத்தவள் அவர்கள் முகத்தை பார்க்க வெறுப்பாக உணர்ந்து ,”இன்னும் ஒரு மாசம் டைம் இருக்கு எனக்கு தெரியும் யார கல்யாணம் பண்ணிக்கனும்னு..? இப்ப எல்லாரும் போங்க..” வேலைக்காரியிடம் சொல்லி அன்னைக்கும் வக்கிலுக்கும் ஜூஸ் கொண்டுவரச் சொன்னவள் மறுபடி தன்னிடம் பேச வந்தவர்களை கண்ணாலே சுட்டெறிக்க பயந்தவர்கள் வாய்க்குள் முனுமுனுத்தபடி  தங்கள் அறைகளை நோக்கி சென்றனர்..
 
அங்கிள் அப்ப உங்களுக்கு முதல்லயே தெரியும்தானே இந்த உயிலை பத்தி..?”
ரமலியை பார்க்க பார்க்க வக்கிலுக்கு பிரம்மிப்பாக இருந்தது.. லண்டனுக்கு போகும்போது சிறு பெண்ணாக தெரிந்தவள் இப்போது ஒரு மகாராணியை போல ஆளுமை திறனுடன் வந்து தன்னை கேள்வி கேட்கிறாள்..
தெரியும்மா..
என்னை பத்தி தெரிஞ்சும் எப்படி அங்கிள் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு நினைச்சிங்க..
 
ஸாரி ரமலி நான் இத ஒன்ன மட்டும் சொல்லிக்கிறேன்மா.. உங்க அப்பாவ வைச்சு மட்டும் எல்லா ஆண்களையும் எடைபோடாத.,. நிறைய நல்லவங்களும் இருக்காங்க..
 
மீண்டும் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தவள், அப்ப நான் அவர் இறந்த இந்த ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணிக்காட்டா இந்த சொத்து எல்லாம் அவரோட ரெண்டு தங்கச்சி குடும்பத்துக்கு போயிரும் அதானே.??”
 
தன் தாயிடம் சென்றவள்,” அம்மா வாங்க நாம ரெண்டுபேரும் லண்டனுக்கே போயிருவோம் எந்த சொத்தும் நமக்கு தேவையில்ல.. எனக்கு படிப்பிருக்கு அங்க போய் ஒரு வேலையை பார்த்துக்கலாம் ..
 
இதைத்தான் அவள் சொல்லுவாள் என நினைத்த வக்கில்,” நீங்க உங்க அத்தை குடும்பம் நினைச்சமாதிரி செய்றிங்கம்மா.. அவங்களுக்கு விட்டுக்கொடுக்கிறிங்க..??”
 
என்ன அங்கிள் சொல்றிங்க..??”
 
நீ என் பொண்ணு மாதிரிதான் ரமலி.. ஒன்னு சொல்றேன் நான் வயசிலயும் அனுபவத்திலயும் பெரியவன் உங்க ரெண்டு அத்தை குடும்பமும் சொத்துக்காகத்தான் இங்க வந்து இருக்காங்க.. அவங்க பசங்கள்ல ஒருத்தருக்கு உன்னை கட்டிட்டா மொத்த சொத்தும் ஒரே அத்தைக்கு போயிரும்.. நீ லண்டனுக்கு போயிட்டா சொத்த ரெண்டு பங்கா வைச்சு ரெண்டு அத்தையும் எடுத்துக்க போறாங்க.. ஆக மொத்தம் லாபம் அவங்களுக்குத்தான் ..
 
அப்ப நீ அவங்களுக்கு விட்டுக் கொடுக்க போறியாம்மா.. கொஞ்சம் யோசி நீ படிச்ச பொண்ணுமா .. உங்க அத்தை ரெண்டு பேர் பேச்சை கேட்டும் உங்க அப்பா அவங்க பசங்கள்ல இருந்து ஒருத்தரத்தான் கல்யாணம் பண்ணனும்னு எழுத சொன்னாரு..
அப்புறம் நான் ஒரு வேளை உனக்கு வேற யாரையும் பிடிச்சிருந்தா அதுக்கு தடை வந்திரும்னுதான் உங்க அப்பாட்ட பேசி உனக்கு பிடிச்சவர கல்யாணம் பண்ணிக்கட்டும்னு எடுத்து சொன்னேன்..
நீ சொன்ன மாதிரி இன்னும் டயம் இருக்கு அதுக்குள்ள என்ன வேணா நடக்கலாம்.. நீங்க யோசிச்சு என்னன்னு எனக்கு போன் பண்ணுங்க நான் கிளம்புறேன்..
 
அவர் இருவரிடமும் விடைபெற்று செல்ல, அப்படியே சோபாவில் கண்மூடி அமர்ந்தவளை அவள் தாய் அரவணைத்துக் கொண்டார்.. சிறுவயதில் தன் தந்தைமேல் மிகவும் அன்பாக இருந்தவள் தான் இன்று அவ்வளவு வெறுப்பாக இருக்கிறாள்.. அப்பாவை மட்டும் அல்ல ஆண்களையே வெறுக்கிறாள்..
 
லண்டனில் இருந்தபோதும் பல ஆண்கள் அவள் அழகில் மயங்கி அவளிடம் நட்பாக ,காதலாக பழக ஆசைப்படுவதாக சொல்ல அனைவரையும் அசட்டை செய்பவள் யாரையும் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாள்..
 
அவளுக்கு இரு யோசனையாக இருந்தது ..லண்டனுக்கு போவோமா இல்லை இங்கேயே இருந்து போராடுவோமா.. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தான் சொத்தா.. அப்படிப்பட்ட சொத்து தேவையா அவள் முகத்தில் யோசனையை கண்ட அவரது தாயோ…
 
அம்மு இது உன் தாத்தா காலத்து சொத்துடா.. உங்க அப்பா சம்பாரிச்சதவிட அழிச்சதுதான் அதிகம்…மிச்சம் இருக்கிறதையாவது  நீ பார்த்து முன்னுக்கு கொண்டுவா உங்க தாத்தாவும் பாட்டியும் ரொம்ப நல்லவங்க..
 உங்க தாத்தா ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாரிச்சது.. அத நீதான்மா பார்த்துக்கனும் .. அதுவரைக்கும் உங்க தாத்தா  நல்ல ஆளுகளா பார்த்து வேலைக்கு வைச்சதால இத்தனை வருசம் இந்த சொத்து நம்ம கையில இருக்கு..
 
இதையும் நீ வேணான்னு போனா இத உங்க அத்தைங்க பங்கு போட்டுக்குவாங்க.. தொழிலை பார்க்காம இத அவங்க வித்துட்டு காசாக்கிருவாங்க ஆனா இத்தனை வருசம் நம்மள நம்பி நம்மகிட்ட வேலை பார்க்கிறவங்களோட குடும்பத்தை நினைச்சுப்பாரு…
 
யோசிச்சு பார்க்கிறேன்மா..”
 
அப்ப நீ கல்யாணம் பண்ணிக்கிறியா சந்தோசமாக கேட்டவர் ஆனா யாரை.. ??” அவருக்கு தெரியும் தன் நாத்தனார் பையன்களின் குணங்களை பற்றி தன் கணவரையே உரித்து வைத்திருந்தனர்.. இருகுடும்பமும் பாதிநாள் இங்குதான்..
அவரோடு சேர்ந்து இவர்களும் குடி, பார், டிஸ்கோ கிளப், ரேஸ் எதையும் விட்டுவைக்கவில்லை.. அதைவிட முக்கியமாக பெண்களுடனும் அவர்களுக்கு பழக்கம் இருக்கும் என்பதையும் உணர்ந்திருந்தார்..
 
தன் கணவரின் குணம் தெரிந்ததுதான் என்றாலும் இப்படி ஒரு செக்கை வைப்பார் என எதிர்பார்க்கவில்லை… அதுவும் ஒரே மகளின் வாழ்க்கையில் விளையாடும் அளவில்.. தன் தாயின் கவலை முகத்தை பார்த்தவள் ,
அம்மா போய் ரெஸ்ட் எடுங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்…
 
தன் அறைக்கு சென்றவள் குளித்து சாதாரண வெள்ளைநிற குர்தி அணிந்து தலையை போனிட்டைல் போட்டவள் கழுத்து காதில் மெலிதான  பிளாட்டினம் கண்களில் கூலர்ஸ் அணிந்து தன் பிஎம்டபியூ காரில் ஏற நேராக அவர்கள் பரம்பரை தென்னந்தோப்பில் கட்டப்பட்டிருந்த  தாத்தா பாட்டியின் கல்லரைக்கு சென்று அந்த பளிங்கு மண்டபத்தில் அப்படியே அமர்ந்துவிட்டாள்..
 
அங்கு மலரின் சித்தியோ தன் தம்பியை அடித்துக் கொண்டிருந்தாள்.. டேய் அறிவு கெட்டவனே நீ அவள கல்யாணம் பண்ணிக்க போறதை வெளியில சொல்லாம வைன்னு தானே சொன்னேன்.. ரெண்டு நாளைக்கு முன்னாடி பார்ல தண்ணி அடிச்சிட்டு அவள கட்டிக்க போறத சொல்லியிருக்க..??
உனக்கு தேவை அவ..!! எனக்கு தேவை குறையாத சொத்து.!!. நான் இத்தனை வருசம் போட்ட பிளானெல்லாம் வீணாக்கிருவ போல.. மரியாதையா வாயை மூடிக்கிட்டு பேசாம இரு சும்மாவே இந்த ரெண்டுமாசமா அவரு வீட்ல இருந்துக்கிட்டு எல்லாத்தையும் ரொம்ப கவனமா பார்த்துட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்..
அதுனாலதான் அவளகூட இப்பல்லாம் நான் ரொம்ப பேசுறது இல்லை.. அவ தாய்மாமா ரொம்ப பொல்லாதவர்.. அவருக்கு மட்டும் நீ அவளை கல்யாணம் பண்ணிக்க போறது தெரிஞ்சுச்சு உன்னை ஒரே வெட்டா வெட்டிருவாரு அப்புறம் நீ இந்த ஆசையை மறக்க வேண்டியதுதான்..??”
 
ஐயோ அக்கா அத மட்டும் நடந்திறாம பார்த்துக்க உனக்கே தெரியும் எனக்கு மலருன்னா உயிருன்னு..??”
டேய் தெரியும்டா உனக்கு எது மேல ஆசைன்னு நீ அவ அழகைதானே விரும்புற.. பேசாம இரு.. அடுத்த வாரமே ஒரு நாள பார்த்து காதும் காதும் வைச்ச மாதிரி ஒரு கோவில்ல கல்யாணத்தை முடிஞ்சிரலாம்..!!”
அவன் கண்களில் இப்போதே கல்யாண நடப்பது போல கற்பனை வர கண்களில் ஆசையும் அவனுடைய அக்கா கண்களில் பேராசையும் வந்த்து..
 
                                                  இனி…………………. ???????  

Advertisement