Advertisement

காலை எட்டுமணியாகவும் லேசாக விழிப்பு வந்த ரமலியின் காதிற்குள் ஏதோ ஒரு இதயத்தின் சத்தம் லப்டப் லப்டப் என ஒலிக்க இந்த சத்தம் எங்கயிருந்து வருது.. இந்த கட்டில் ஏன் இவ்வளவு கல்லுபோல இருக்கு என்று நினைத்தவள் குப்புற படுத்தபடி முகத்தை மறுபக்கமாக திருப்பி வைக்கவும் சக்தியின் மார்பு முடிகள் அவள் முகத்தை கூசச் செய்ய தூக்க கலக்கத்தில் அதை கையால் பிடித்தபடி நிமிர்ந்து பார்க்க அதிர்ச்சியில் பே..வென விழித்திருந்தாள்..
 
தான் சக்தியின் மேல் படுத்திருப்பது தெரிந்தது.. நாம எப்படி இவன் மேல ..!! சட்டென அவன் மேலிருந்து இறங்க,
 
ஸ்ஸ்ஸ் ஹப்பா இப்பவாச்சும் இறங்குனியே இன்னும் கொஞ்சநேரம் படுத்திருந்தா நான் ஹார்ட் அட்டாக்ல மேல போயிருப்பேன்.. பார்க்கத்தான் பஞ்சு போல இருக்க ம்மா.. என்னா கணம்..??”
 
கோபத்தில் காண்டானவள்..டேய் நீ எப்படிடா இங்க வந்த..??”
 
டேயா….?? ம்ம் ரொம்ப நல்லது இப்படித்தான் பொண்டாட்டிக எல்லாம் காலையில எழுந்தவுடன புருசன மரியாதையா கூப்பிடனும் வெரிகுட், வெரிகுட், .. நீ தைரியமான பொண்ணாயிருந்தா இந்த வார்த்தையை எங்க அப்பத்தாவுக்கு நேரா கூப்பிட்டு பாரு பார்ப்போம்..
 
ஆமாண்டா அப்படித்தாண்டா கூப்பிடுவேன் டால்டா.. நானும் போனாப்போது கொஞ்சம் அமைதியா இருந்தா ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்கிற.. நீ ஏண்டா இங்க வந்த..??”
 
அப்ப நான் இங்க உன்கூட படுத்தது தப்புன்னு சொல்ற..?”
ஆமா..
படுக்கக்கூடாதுன்னு சொல்ற..?”
ஆமா.. ஆமா..
தோளை உலுக்கியவன் அவள் கையை பிடித்து,” அப்ப வா கீழ போய் உங்க அம்மாக்கிட்டயும், எங்க அப்பத்தாக்கிட்டயும் நியாயத்த கேட்போம்.. ஐம்பதுநாள் நான் இவக்கூடத்தான் படுத்திருந்தேன் இப்ப என்னவோ என்னை வேண்டான்னு சொல்றான்னு ஒரு பஞ்சாயத்தை வைப்போம்.. அவங்க இது தப்புன்னு சொன்னா நான் இனி உன் பக்கத்திலகூட வரலை..??”
 
அவள் ஆ….வென வாய்திறந்தபடி நிற்க அவள கீழிதழைப்பிடித்தவன் ,”இதுக்குத்தாண்டி ரொம்ப பேசக்கூடாதுன்னு சொல்றது..? இப்ப பாரு வார்த்தை வராம நிக்கிது..அப்புறம் இனி ஒரு தரம் வாடா போடான்னு சொன்ன உனக்கு ஆறு மாசம் டைம் கொடுத்தேன் பாரு அத ஆறு நாளாக்கிறுவேன் பார்த்துக்கோ…!!ம்ம் இப்ப நீயே யோசிச்சுக்கோ மாமன எப்படி கூப்பிடுறதுன்னு..ராத்திரியெல்லாம் என்மேல படுத்து உருண்டு மாமன செம டயர்டாக்கிட்ட..?” கைகளை தூக்கி சோம்பல் முறித்தவன் கட்டிலின் மறுபுறம் இறங்கி அவள் கடுப்பில்  நிற்பதை கண்டு கொள்ளாமல் அங்கிருந்த அலமாரியை திறந்து அன்று தான் போடவேண்டிய துணிகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்..
 
எப்போதும் போல ஒன்பது மணிக்கு கண்விழித்த வெற்றி வீட்டின் அமைதியில் முகத்தை கழுவி வந்து பிளாஸ்கில் இருந்த காப்பியை ஊற்றிக் குடிக்க அவனுக்கு மலரை இரவு தான் கூட்டி வந்ததே மறந்துவிட்டது..தன் தாயின் நினைவு மற்றதை மறக்கச் செய்திருக்க தன் லாப்டாப்பை திறந்தவன் தனக்கு ஒரு ஈமெயில் வந்திருக்கவும் அதை திறந்து பார்த்தான்…
 
 தன் மேலதிகாரியிடமிருந்து வந்திருக்க இன்னும் பத்து நாளில் ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்திருப்பதாக சொன்னவர்கள்.. வெற்றியை ஒன்றுக்கு பலமுறை யோசித்து வரும்படி சொல்லியிருந்தனர்.. தன் தந்தையிடமிருந்து ஒரு ஈமெயில் வந்திருந்ததாகவும் அதில் அவன் தாயார் இறந்தது.. அவனுக்கு திடிரென திருமணம் முடிந்தது, அவன் அண்ணன் காணாமல் போனது என அனைத்தும் சொல்லி இவ்வளவு பிரச்சனை இருந்தும் தன் மகன் இந்த கம்பெனி மேல் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும் இந்த பிரச்சனைகளில் தங்களோடு இருப்பதைவிட தங்கள் கம்பெனிக்கு உழைப்பதே முக்கியமாக கருதுவதாக எழுதியிருந்தார்..
 
 இவ்வளவு பாராட்டி எழுதியிருந்தாலும் தாங்களும் மனிதர்கள்தான் இந்த சூழ்நிலையில் கம்பெனி ஊழியராக நீங்கள் எங்கள் கம்பெனிக்கு உழைப்பதைவிட ஒரு மகனாக உங்கள் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய கடமைதான் முக்கியம்..
அதோடு இது இரண்டு வருட கான்டிராக்ட் என்பதால் இடையில் என்ன பிரச்சனை வந்தாலும் திரும்பி வரமுடியாது என்பதை எழுதியிருந்தவர்கள் உங்கள் பிரச்சனைகளை மனதில் வைத்து பலமுறை யோசிச்சு இன்னைக்கு பனிரென்டு மணிக்குள்ள உங்க முடிவை சொல்லிருங்க..
நாங்க உங்கள கம்பெல் பண்ணலநீ அங்க வந்தா ஒரு நல்ல ஊழியராத்தான் அடையாளம் காட்டப்படுவிங்க.. ஆனா இங்க இருந்தா இத்தனை நாள் வளர்த்த உங்கள் தந்தைக்கு நல்ல மகனாக இருப்பீர்கள்.. ஆனால் எந்த முடிவாயிருந்தாலும் அது உங்களோடதுதான்.. எதையும் தாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக என்று முடித்திருந்தார்கள்..
 
மணியை பார்த்தவன் மணி ஒன்பதரை.. இன்னும் நல்லா யோசிச்சு அப்பாக்கிட்டயும் கலந்துக்கிட்டு பதினோறு மணிக்கு மேல சொல்லிக்கலாம்.. இந்த அப்பா என்ன வேலையெல்லாம் பார்த்து வைச்சிருக்காங்க.. நல்ல வேலை அவங்ககிட்ட என்னைப்பத்தி திட்டி சொல்லாம விட்டாரே..
 
அவங்க ஈமெயில் ஐடி இவருக்கு எப்படி தெரிஞ்சுச்சு.. நம்ம பயலுக எவனோ இதுக்கு உடந்தையா இருந்திருக்கானுக.. மணியை பார்த்தவன் இப்ப ஆபிஸ் நேரமாச்சே.. லஞ்ச் டயம் வரட்டும்டா மாட்டுனிங்க..?? பல்லை கடித்தவன் கிளம்பி தங்கள் ஹோட்டலுக்கு வண்டியை விட்டவனுக்கு இப்போதுதான் இரவுதான் மலரை அழைத்து வந்தது நியாபகத்திற்கு வந்தது..
 
ஐயோ அவ எப்படி போனான்னு தெரியலையே.. அப்பாவேற அந்த டிரைவரை பஸ் ஏத்த கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்களே.. திமிரு நான்தான் கூட்டிட்டு வந்தேன்.. ஏன் என்னை எழுப்பினா நான் கூட்டிட்டு போக மாட்டேனா..?? இருடி இன்னைக்கு இருக்கு உனக்கு…!! வண்டியை வேகப்படுத்தி ஹோட்டலுக்கு சென்றவன் ஹோட்டல் வாசலில் ஒரு ஆட்டோ நிற்பதை பார்க்கவும் நிறைய ஆட்கள் வேறு இருக்கவும் ஐயோ கூட்டம் ஓவரா இருக்கோ வேகமாக தன் வண்டியை நிறுத்திவிட்டு வர அங்கு பார்த்த காட்சியில் அப்படியே நின்றுவிட்டான்..
 
மலரின் கையில் கத்தியோ அரிவாள் மனையோ ஏதோ வெட்டியிருக்கும் போல மணிக்கட்டுக்கு சற்று மேலே உள்ள சதைப்பகுதியில் ஆழமான காயமாக பட்டிருக்க ரத்தம் ஆறாக ஓடியிருந்தது..
 
 ஐயோ மலர் என்னாச்சு..?” கத்தியபடி வேகமாக அவளிடம் ஓடியவன் தன் லேப்டாப் பையை அங்கிருந்த கடைப்பையனிடம் கொடுத்துவிட்டு அவளை பிடிக்க வந்தவர்களை விலக்கி தன் கையால் தூக்கியவன் வேகமாக அங்கு தயாராக இருந்த ஆட்டோவில் ஏற்ற அதுவரை மருமகளின் ரத்தத்தை பார்த்து பதறிப் போய் நின்றிருந்தவர் தன் மகனின் பதட்டத்தை காணவும் தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தார்..
 
ஆட்டோவில் ஏறப்போனவர் பிறகு என்ன நினைத்தாரோ சட்டென இறங்கி கொண்டு,” நீ ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போ வெற்றி ..”அவனை அவசரப்படுத்த இது எதுவும் அவன் கண்ணுக்கு தெரியவில்லை.. தன் மனைவியின் ரத்தத்தை பார்த்தே இவன் உறைந்து போயிருந்தான்..
 
அவளை ஹால்பிட்டலில் சேர்த்தவன் காயம் ஆழமாக இருக்கவும் ஐந்து தையல் போட்டிருந்தார்கள்..” ஒரு வாரத்துக்கு கையில தண்ணி படாம பார்த்துக்கோங்க.. ரொம்ப அசைவு இந்த கைக்கு கொடுக்க வேண்டாம்.. மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுக்க அவளை வெளியில் கூட்டிவந்தவனுக்கு இப்போது கோபமும் சேர்ந்தே வந்திருந்தது..
 
ஏய் லூசு கவனமா வேலை பார்க்கமாட்டியா..?? கொஞ்சம் இறங்கி வெட்டியிருந்தா மணிக்கட்டு நரம்பு கட்டாயிருக்கும் ..இப்பவும் பாரு எவ்வளவு ரத்தம் போயிருச்சு.. சும்மாவே எலும்பி மாதிரிதான் இருக்க.. இவ்வளவு ரத்தமும் போனா அப்புறம் உடம்புல எப்படிடி தெம்பிருக்கும்.. கிறுக்கி..??”
 
அவனை காண்டாக பார்த்தவள் பார்வையில் அத்தனைக்கும் காரணம் நீதான் என்றிருந்தது.. காலையில் இவள் எப்போதும் போல வந்திருந்தால் பொறுமையாக வேலையை பார்த்திருப்பாளோ என்னவோ இவள் லேட்டாக வரவும் கஷ்டமர்களும் வந்துகொண்டே இருக்க அவர்களுக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லை..
 
இவள் வேலை செய்தால் வேலை முடியவும் அந்த இடத்தை அப்போதே சுத்தப்படுத்தி அந்தந்த பொருட்களை அந்த இடத்தில் வைக்கச் சொல்லியிருப்பாள்.. இன்று வேலைப்பார்த்தவர்களோ காய் நறுக்கி அந்த குப்பைகளை அப்படியே போட்டு வைத்து அங்கேயே கத்தி. அரிவாள்மனை எல்லாவற்றையும் போட்டு வைத்திருக்க தரையில் ஆங்காங்கே சாம்பார் , சட்னி என அனைத்தும் சிதறியபடி இருக்க முதலிலேயே இதை மலர் பார்த்துவிட்டாள்..
 
 அவளுக்கு எப்போதும் சுத்தம் முக்கியம்.. எதாவது கேட்கலாம் என்றால் அனைவரும் ஒவ்வொரு வேலையில் இருக்க கொஞ்சம் கூட்டம் குறையவும் பார்த்து கொள்ளலாம் என நினைத்தவள், ஒருவர் பொங்கல் வடை கேட்க வேகமாக அதை எடுத்துக் கொண்டு செல்லும் போது கீழே சிந்தியிருந்த எண்ணெயை பார்க்காமல் கால்வைத்து விழ அவள் விழுந்த இடம் அவர்கள் கத்தி, அரிவாள் மனையும் போட்டு வைத்திருந்த இடம் அவள் கையில் வைத்திருந்த தட்டு ஒரு மூலையில் விழுந்திருக்க அவள் கையை அந்த கத்தி பதம்பார்த்திருந்தது..அந்த கத்தி ஆழமாக அவள் கையில் இறங்கியிருக்க ரத்தம் பீரிட்டு வர ஆரம்பித்திருந்தது..
 
ஏய் என்னடி கேக்குறேன் பதில் சொல்லாம இருக்க..??”
 
ம்ம் எனக்கு உடம்புல ரொம்ப ரத்தம் இருந்துச்சு அதான் ஏன் தேவையிலலாம இவ்வளவுன்னு வெளியேத்திட்டேன்….?”
 
இந்த திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. நைட்டு ஒருத்தன் உன்ன கூட்டிட்டு போனானே காலையில அவன எழுப்பி கூட்டிட்டு வரணும்னு அறிவு இல்ல.. அப்படி வந்திருந்தா இதுமாதிரி நடந்திருக்குமா..இப்ப நான் கரெக்டா வரவும் உன்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தேன்..
 
அவளுக்கு வந்த கோபத்திற்கு பல்லை கடித்தவள் இவங்க இப்படியே பேசி பேசி நம்ம கோபத்தைத்தான் அதிகப்படுத்துவாங்க போல.. ப்ளிஸ்ங்க எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு நாம கிளம்புவோமா..??”
 
மயக்கம் வர்ற மாதிரி இருக்கா..??” அவள் தோளில் கைப்போட்டு அணைவாக பிடித்தவன் ஒரு ஆட்டோவை வரவழைத்து ஒரு பூபோல அவளை ஏற்றி நேராக ஜூஸ் கடைக்கு அழைத்துச் சென்று ஆப்பிள் , மாதுளை, ஆரஞ்சு என ஒரே நேரத்தில் இரண்டு மூன்று ஜூஸ் கொண்டுவரச் சொல்லி அவளை குடி குடி என பாடுபடுத்திக் கொண்டிருக்க உண்மையிலேயே மலரால் முடியவில்லை.. ஒரு ஜூஸை மட்டும் குடித்தவள் மற்றதை வேண்டாம் என சொல்லி அந்த டேபிளிலேயே தலைவைத்து படுத்திருக்க வெற்றியால்தான் தாங்கமுடியவில்லை…
 
ஏய்.. மலர் என்னாச்சு..?” அவன் கன்னத்தை தட்டியவன் அவள் கண்மூடியிருக்கவும் ச்சே நாம இன்னும் ரெண்டுநாள் ஹாஸ்பிட்டல்ல வைச்சிருந்திருக்கலாம்.. அந்த டாக்டர்தான் அட்மிட் பண்ணவேண்டாம் கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாங்க.. அந்த டாக்டரை திட்டியவன் அவள் இடுப்பில் கைகொடுத்து தூக்கிக் கொண்டு வர கண்விழித்து பார்த்தவள் பதறி கீழே இறங்க போகவும்,
 
ஏய் அடங்குடி..?”  அவளை இறங்கவிடாமல் தடுத்தவன் ஆட்டோ வரைக்கும் தூக்கிவந்து தங்கள் ஊருக்கு கிளம்ப அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.. அங்கிருந்து ஒரு இருபது நிமிடங்களாவது ஆகும் ரத்தம் நிறைய போனதாலோ இல்லை காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருந்ததாலோ என்னவோ மலருக்கு கண்ணைக் கட்டியது..
 
நேராக ஹோட்டலுக்கு வந்தவர்கள் இறங்க போனவளை தடுத்தவன் அவன் மட்டும் இறங்கி தன் தந்தையிடம் சென்று சொல்லிவிட்டு வர ராமலிங்கமும் தன் மருமகளை வந்து பார்த்தவர் வீட்டில் இன்று ரெஸ்ட் எடுக்கும்படி சொல்லி வெற்றியை  கவனத்துடன் பார்த்துக் கொள்ளச்சொன்னார்.. பின்னாலேயே அவனுக்கும் மலருக்கும் சாப்பாட்டை கடைப்பையன்களிடம் அவனது வண்டியில் கொடுத்துவிடுவதாக சொல்லி அவர்களை முன்னால் போகச் சொன்னார்..
 
ஆட்டோவை கிளப்பியிருக்க கடைப்பையன் ஓடிவந்து அவன் காலையில் தன்னிடம் ஒப்படைத்த லாப்டாப் பையை கொடுக்க அப்போதுதான் அதை எதற்கு கொண்டு வந்தோம் என்பது நினைவு வந்து பதறி மணியை பார்க்க மணி இரண்டு…..!!!!
 
                                                      இனி……………….?????

Advertisement