Advertisement

மீண்டும் இங்கு வெற்றியை பார்த்த போது ஒருநிமிடம் தன்னை விடமுடியாமல்தான் வந்துவிட்டானோ என நினைத்திருக்க அவன் தன் தந்தையின் சம்மதத்திற்கு வந்திருப்பது தெரிய அவளுக்கு தன் மேலேயே பாவமாக இருந்தது இப்படி பாசத்துக்காக ஏங்குறியேடி.. அம்மாச்சியோட அன்பும்  மாமாவோட பாசமூமே போதும் தன்னைத்தானே சமாளித்துக் கொள்ள பழகிக்கொண்டாள்.. ஆனால் சக்தி தன்னை யாரென்று தெரியாத போதே தன்னை அந்த கிரிதரனிமிருந்து காப்பாற்ற போராடியவனை பார்த்த போது அவன்மேல் தனக்கொரு மூத்த சகோதரன் போன்ற பாசமே வந்திருந்தது.. தன்னை கேலி செய்தாலும் தன்னுடை நலத்தில் அக்கறை கொண்டு பேசினான்..
 
 இப்போது வலியவந்து தன்னோடு பேசும் வெற்றியோடு பழகி மீண்டும் அவன் வெளிநாட்டிற்கு போனால் தன்னால் அதை தாங்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டவள், அதோடு அவனுக்குத்தான் உன்னைப்பிடிக்காதே மூஞ்சிக்கு நேரா சொன்னதுக்கு அப்புறமும் அவன் முன்னாடி அழற போதும் இனி எப்போதும் அவனை விட்டு தள்ளியிருக்க முடிவு செய்தாள்.. எல்லாவற்றையும் தனக்குள்ளேயே அடக்கி வைத்தாள்..அதோடு தன்னிலைக்கு மீண்டிருந்தவள் வெற்றி மறுபடி தன்னோடு பேச வர அவனை முறைத்தபடி கண்டு கொள்ளவில்லை.. மணி ஆறாகவும் என்றும் மாமா இருந்தால் அதோடு வீட்டுக்கு கிளம்பிவிடுவாள் .. அப்போதுதான் மறுநாளைக்கு தேவையான வேலைகளை செய்ய அவளுக்கு ஏதுவாக இருக்கும்..
 
இன்று வெற்றியிடம் கடையை ஒப்படைத்து செல்ல மனதில்லாமல் அவள் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க ராமலிங்கம் போன் செய்திருந்தார் தான் வர ஒன்பது மணியாவது ஆகும் என்றும் வந்து முக்கியமான விசயம் சொல்லப் போவதாகவும் அம்மாச்சி அத்தானை பற்றி கேட்டதிற்கு நேராக வந்து சொல்வதாக சொல்ல என்னவாக இருக்கும் என்ற யோசனையிலேயே அன்றைய பொழுதை கழித்தாள்..
 
ரமலியின் அறையில் படுத்திருந்த சக்திக்கு ஏதேதோ யோசனை இப்ப இந்த பொண்ணுக்கிட்ட நாம நடந்துக்கிற முறை சரியா.. விருப்பம் இல்லாதவள கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து, எந்த பொண்ணுக்கிட்டயும் நாம இது மாதிரி நடந்ததில்லையேடா .. பொண்ணுககிட்ட அரட்டை அடிப்போம் .. கேலிபண்ணுவோம்.. இது கொஞ்சம் ஓவரோ..ப்பச்.. இன்னொரு மனமோ அப்ப டைவர்ஸ் வாங்கிக்க ரெடியா இருக்கியா.. ச்சீ ..ச்சீ.அப்ப அவ சொல்ற மாதிரி சர்டிப்பிக்கெட்ட வாங்கி ஊரெல்லாம் காட்டு நீ ஆம்பள இல்லைன்னு சொல்றதுக்கு அது ஒன்னே போதும்..கோபம் சுருசுருவென எழ… அப்ப வாய மூடு இப்ப சரியாத்தான் நடக்குது.. எப்படியிருந்தாலும் அவதான உன்னோட பொண்டாட்டி என்ன கொஞ்சம் சண்டித்தனம் பண்ணுறவ மாதிரி இருக்கா உன்னால அவள உன்வழிக்கு கொண்டுவர முடியாதா.. அந்த அளவுக்கு எதுக்கும் லாயக்கில்லாதவனா நீ..
 
 சக்தியின் தந்தைக்கும் தாய்க்கும் அவன் சிறுவயதாய் இருக்கும் போது அடிக்கடி சண்டைவரும்.. அதை சண்டை என்றே நினைத்திருந்தவனுக்கு பதினைந்து வயதுக்கு மேல் தான் தாய் தந்தையின் அன்பு என்றே புரிந்தது..
 
வசந்தா தன் கணவரிடம்,” ஏங்க என்னை தள்ளி வைச்சிட்டு நீங்க வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க.. என்னால எதுவும் முடியலைதானே பிள்ளைகளையும் வளர்க்க முடியல உங்களுக்கும் ஒரு சோறு சமைச்சுக்கூட போட முடியலை எப்போதெல்லாம் அந்த பேச்சை ஆரம்பிக்கிறாரோ அப்போதெல்லாம்,
 
ஏண்டி அப்ப இதுமாதிரி எனக்கு உடம்பு சரியில்லைனா நீ என்னை வேணான்னு சொல்லிட்டு வேற கல்யாணம் செஞ்சுக்குவியா.. எனக்கு உடம்பு சுகத்தோட நம்ம மனசுதாண்டி பெரிசு.. மறுபடி மறுபடி இந்த பேச்சை ஆரம்பிக்காதன்னு சொல்றது உனக்கு காதுலயே ஏறாதா..” வசந்தாவை கடுமையாக திட்டி வீட்டிற்கே வராமல் தோப்பிலேயே தங்கிவிடுவார்.. பின் தன் மகனைவிட்டுத்தான் அவரை அழைத்துவரச் சொல்வார்..
 
இவனுக்கு கூட கோபம் வரும் ஏம்மா முதல்லயே அப்பா பேச்ச கேட்டிருக்கலாம்தானே.. எதுக்கு சண்டை போடுறிங்க அப்புறம் அழுதுக்கிட்டே இருந்திட்டு அவரை கூட்டிட்டி வரச் சொல்றிங்க.. போங்கம்மா என சலித்துக் கொள்பவன் வயது ஏற ஏற தன் தாய் தந்தையின் அன்பையும் காதலையும் புரிந்து கொண்டான்.. தானும்தன் மனைவியோடு அப்படி ஒரு காதலோடும் அன்போடும் வாழவேண்டும் என நினைத்திருந்தான்..
 
தாலியை பார்த்தே அன்றே அதை தான் கட்டியிருந்தால் அவள்தான் தன் மனைவி என முடிவு செய்திருந்தவன் அவள் எப்படியிருந்தாலும் அவள்தான் தன் மனைவி என்பதில் முடிவாக இருந்தான்.. அப்படிப்பட்டவனிடம் வந்த அன்றே அவள் டைவர்ஸை பற்றி பேசவும் அவனுள் இருந்த கிராமத்தான் வெளியில் வந்து தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தான்.. இன்னும் ஆறு மாசம் இருக்குள்ள அதுக்குள்ள இந்த மாமன்தான் வேணும்..டைவர்ஸ் கேட்டதுக்கு மன்னிப்பு கேட்க வைக்கிறேனா இல்லையான்னு பாரு கண்ணைத்திறந்து ரமலியை பார்க்க அவள் பால்கனியில் நின்று போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்..
 
வெண்மை நிற குர்தி போட்டு தலையை விரித்துவிட்டிருக்க காதில் ஏதோ வைரம் போல மின்னியது ..செதுக்கி வைத்த சிலைதான்.. ஒரு ஓவியம்போல இருந்தாள் நெற்றியில் சிறு கடுகை போல ஒரு பொட்டு உதட்டில் லிப்ஸ்டிக் போட்டிருந்தாள்.. அவள் இதழையே பார்த்தவன் அப்ப நாம முத்தம் கொடுக்கும் போது இவ லிப்ஸ்டிக் போட்டிருந்தாளா.. பெரும் சந்தேகம் வந்திருக்க அதை அவளிடமே கேட்கவும் செய்தான்.. அவள் போனில் கவனமாய் இருந்தவள் இவனது கேள்வியில் தடுமாறி அதிர்ந்து போனை கையால் மூடியபடி அவனை முறைத்தாள்..
 
ஏய் என்னடி முறைப்பு.. இந்த உதட்டுசாயமெல்லாம் நல்லாவே இல்ல .. உன்னோட உதடே நல்ல ரோஸ்கலருலதான இருக்க அப்புறமும் ஏன் இந்த கர்மத்தை எல்லாம் போட்டுக்குற..
 
பட்டிக்காடு, பட்டிக்காடு என மனதிற்குள் நினைத்தவள் ,”அது என்னோட விருப்பம் இந்த மாதிரி கண்ரோல் பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வைச்சிக்காதிங்க.. போனை காதில் வைத்தவள் அப்புறமா பேசுறேன்.. கட்செய்துவிட்டு அங்கேயே ஊஞ்சலில் அமர்ந்தாள்..
 
சட்டென எழுந்து அவளிடம் சென்றவன் அவள் உதட்டுச்சாயத்தை தன் உதடுகளால் துடைத்தெடுக்க.. யூ ஸ்டுப்பிட் என்ன வேலை பார்க்கிறிங்க ..?”அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள,
 
 ஏய் என்னோட வேலையை பார்க்கவிடு.. உன்னை கண்ரோல் பண்ணல, உன்கிட்ட பேசலை நான் என்னோட வேலையை மட்டுமே பார்க்கிறேன்..அட இது ஸ்ட்ராபெர்ரி பிளேவர் போல அந்த லிப்ஸ்டிக்கின் பிளேவரை ஆராய்ந்து கொண்டிருந்தான்..
 
ரமலிக்கு சட்டென தன் தந்தையின் முகமும் தன் மாமன் மகன்களின் முகமும் முன்னால் வர,” பொம்பளைங்கன்னா எப்பவுமே இப்படித்தான் நடந்துக்குவிங்களா.. அவங்க உடம்புதான் பெருசுன்னு..ச்சே இதுதான் ஆம்பள புத்தி..” சொல்லிவிட்டு உள்ளே செல்ல திரும்ப அவளின் கையை பிடித்து தன்புறம் சுண்டி இழுக்க பூங்கொத்தாய் தன் மார்பில் சாய்ந்தவளை அணைத்தபடி அவளோடு ஊஞ்சலில் அமர்ந்தவன்,
 
 ஏய் நானென்னமோ வேற பொண்ணுக்கிட்ட இது போல நடந்துக்குறமாதிரி சொல்ற நீயாத்தான் ஆசைப்பட்டு என்னை கல்யாணம் பண்ணிகிட்ட.. அதுவும் எங்க குடும்ப தாலியை வேற போட்டிருக்க அப்புறமும் நான் உன்கிட்ட இந்த மாதிரி நடக்காம வேற பொண்ணுக்கு முத்தம் கொடுத்தா தப்பு, உனக்கு கொடுக்கலைன்னாத்தான் தப்பு..
 
ரமலி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.. தேவையில்லாம புலிவால் புடிச்ச கதையா போயிருச்சே… கௌசிக்கையோ அவன் தம்பியையோ கட்டியிருந்தாக்கூட உட்காருன்னா எட்டுக்குட்டிக் கரணம் போடுவானுக .. தேவையில்லாம இந்த அங்கிள் பேச்சை கேட்டு வம்ப விலைகொடுத்து வாங்கிட்டமோ, நீங்க நினைவு வராம பழைய சரணாவே இருந்திருக்கலாம்..?” அவள் மனதிற்குள் நினைப்பதாக வெளியில் சொல்லியிருக்க,
 
சக்தியோ,” அவன் மட்டும் இப்ப என்கையில கிடைச்சான்… ரொம்ப ஸாப்ட் ஹீரோ மாதிரி உன்கிட்ட ஆக்ட் கொடுத்திருக்கான்.. எப்படி அது முடியும்.. நமக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் அது வராது…. அதெப்படி இவ்வளவு அழகான ஒரு பொண்ணை பக்கத்தில வைச்சிக்கிட்டு சும்மா பார்த்துக்கிட்டு மட்டும் இருக்க முடியும்.. சரண் என்பவன் வேறொரு ஆள் போலவே பேசிக் கொண்டிருக்க,
 
ஐயோ கடவுளே அவனை கையெடுத்து கும்பிட்டவள் எனக்குத்தான் ஆறுமாசம் டைம் கொடுத்திருக்கிங்கள்ல அதுக்குள்ள என்னை பாடா படுத்தாதிங்க.. ப்ளிஸ்..!!”
 
சரி சரி ரொம்ப கெஞ்சாத இப்ப வா எனக்கு பசிக்கிது நாம சாப்பிட போகலாம்.. ஊஞ்சலை விட்டு இறங்கியவன் அவள் கையை பிடித்து இழுத்தபடி கீழறிங்கி வந்தான்..
 
மணி எட்டாகவும் ஹோட்டலில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள் தன் ஸ்கூட்டியை எடுத்து வெளியில் தயாராக வைக்க வெற்றி,” ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்குத்தானே போறோம் அப்புறம் எதுக்கு ரெண்டு வண்டி.. என்னோட வண்டியிலயே போவோம் வா..?”
 
மலருக்கு தன்னுடைய வண்டியிருந்தால்தான் விடியற்காலையில் வர தோதாக இருக்கும் அதோடு வீட்டிலிருந்து ஏதாவது கொண்டு வரவேண்டும் என்றால் முன்னால் வைத்து கொண்டுவரமுடியும் அவன் புல்லட்டில் அந்த வசதி இல்லாததால் அவன் சொன்னதை காதில் வாங்காதவள் தன் போக்கில் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய அதை ஆப் செய்து சாவி. எடுத்து தன் பையில் போட்டுக் கொண்டவன்,” என்னோட வா அவள் கையை பிடித்து தன்புறம் இழுக்க,
 
அவனிடமிருந்து விலகியவள்,” ப்பச் இதென்ன வம்பு சாவிய கொடுங்க.. என்னோட வம்புக்கு வராதிங்க.. நீங்களா இத்தன நாளு கூட்டிட்டு வந்து கூட்டிட்டு போனிங்க.. இல்ல இனிமேலும் வரப்போறிங்களா.. என்னோட வழிய நான் பார்த்துக்குறேன்.. நீங்க உங்க வேலை எதுவோ அத மட்டும் பார்த்தா போதும்..??” சாவிக்காக தன் கையை நீட்ட,
 
கடுப்பானவன்,” இதென்ன எப்ப பார்த்தாலும் இத்தனை நாளு, இத்தனை நாளுன்னு ஒரு பேச்சு நீ இங்க வந்து என்ன பத்து வருசமா ஆச்சு அம்பது அறுபது நாளுதான விடு.. இன்னைக்கு நடக்கிறத மட்டும் பேசுவோம்.. வர்றதா இருந்தா என்னோட வா ஒரே வண்டியிலதான் போறோம்.. அப்புறம் உன்னிஷ்டம்..?” பத்து நிமிடங்கள் அவளும் பேசாமல் நிற்க அவனும் வண்டியை ஸ்டார்ட் செய்தபடி ஆக்ஸிலேட்டரை திருகிக் கொண்டிருந்தான்..
 
நேரம் ஆக ஆக அதிக சத்தம் எழுப்ப மலருக்கோ இவருக்கு பிடிவாதம் என்ன கூடவே பிறந்ததா.. எல்லாத்திலயும் பிடிவாதம் அவன் உர்றென்றிருந்த முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் கடுப்போடு அவனோடு புல்லட்டில் ஏறியிருந்தாள்..வெற்றியோ ப்பா வண்டியில ஏத்தவே நமக்கு எல்லா எனர்ஜியும் போயிருச்சே… இவள… அவள் கையை பிடித்து தன் இடுப்பில் வைத்தவன் அவளை ஒட்டி பின்னால் நகர்ந்து அமர்ந்து வண்டியை ஸ்டார்ட் செய்திருந்தான்…!!
 
                                              இனி……….?????

Advertisement