Advertisement

எவனாவது பொண்டாட்டிக்கிட்ட ஜென்டில்மேனா நடந்துக்குவானா அவனுக்கு ஏதாவது பைத்தியமா இருக்கும் … வா நான் வந்து ரொம்ப நேரமாச்சு எங்க அப்பாவும் அப்பத்தாவும் வீட்டுக்கு வரப்போற மருமகளைப்பார்க்க ரொம்ப ஆசையா இருக்காங்க..வாவா..”
 
இவ்வளவு சொல்றேன் மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன பண்றது.. வேணும்னா வாங்க ஹாஸ்பிட்டல்ல ஒரு செக்கப் போதும் நான் இன்னும் உங்களோட குடும்பம் நடத்தலைங்கிறதுக்கு ஒரு சர்டிப்பிக்கெட் போதும்..??”
 
இவ்வளவு நேரம் இலகுவாக அமர்ந்திருந்தவன் அவளின் இந்த வார்த்தையில் அவனுக்குள் ஒரு வெறி வந்திருந்தது.. அவளை இழுத்து கட்டிலில் தள்ளியவன் அவள் மேல் படர்ந்து அவள் இதழில் தன் இதழை புதைக்க ரமலிக்கு ஒரு பெரிய சுழலுக்குள் மாட்டியது போன்றொரு சூழல்..ஒரு நீண்ட முத்தத்தை அவளுக்கு கொடுத்தவன் அதிலிருந்து அவளை மீள விடவில்லை..அவள் ஏதோ சொல்லவருவதும் தன்னிடம் முரண்டு பிடிப்பதும் தெரிந்து மீண்டும் மீண்டும் அவள் இதழில் தேன் குடிக்க ஒரு நிலைக்கு மேல் முடியாதவளுக்கு கண்ணீர் பெருகியது..தன் இதழில் அவள் கண்ணீரை உணரவும்தான் அவளைவிட்டு விலகினான்.. அவள் முகத்தை பார்க்க கன்னத்தை அழுத்தி அவளை அசையவிடாமல் பிடித்திருந்ததால் அவன் கைவிரல்கள் அதில் பதிந்து உதடு கன்றிப்போயிருந்தது…
 
தனக்குள் கொஞ்சம் பொறுமையை கொண்டு வந்திருந்தவன், மறுபடியும் இந்தமாதிரி வார்த்தையையோ இல்ல இந்த மாதிரி நினைப்போ உனக்கு இருக்குன்னு தெரிஞ்சுச்சு அப்பவே அந்த சர்டிப்பிக்கெட்ட செல்லாம ஆக்கிருவேன் பார்த்துக்க..
உன்கூட இருந்தானே அந்த சரணோ இல்ல புவனோ அவனுக்கு உண்மையிலே பைத்தியம்தான் போல அதான் இவ்வளவுநாளும் உன்னைவிட்டு விலகியிருந்திருக்கான்.. நானெல்லாம் பக்கா கிராமத்துகாரன் இதுமாதிரின்னு வெளியில தெரிஞ்சிச்சு உன்னை யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க.. எனக்குத்தான் வேற பேர் வைச்சிருவாங்க.. உன்னோட அறிவெல்லாம் உன்னோடவே வைச்சிக்கோ.. அப்புறம் இதுமாதிரி நீ நிறைய பார்க்கிறமாதிரி ஆயிரும்..
 
உன்னை பொருத்தவரை இந்த கல்யாணம் எப்படியோ எனக்கு இனி வாழ்நாள் முழுதும் நீதான் என்னோட மனைவி..!! அது எனக்கு தெரிஞ்சு நடந்தாலும்.. இல்ல தெரியாம நடந்தாலும்.. நீ வெளிநாட்டுலயே இருந்ததா சொன்னாங்க அதுனால உனக்கு கணவன் மனைவியோட அர்த்தம் தெரியலைன்னு நினைக்கிறேன்.. வேணும்னா பண்ணிக்கிறதுக்கும் வேணாம்னா டைவர்ஸ் பண்றதுக்கும் இது ஒன்னும் சீரியல் இல்ல வாழ்க்கை… வேணும்னா உனக்கு கொஞ்சம்நாள் அவகாசம் தர்றேன் அதுக்குள்ள உன்னோட மனச என்னோடவும் என் குடும்பத்தோடவும் சேர்ந்து இருக்க மாதிரி தயார் பண்ணிக்கோ புரியுதா…
 
ரமலிக்கு இப்போது இவன் விலகினால் போதும் என்றிருந்தது.. இவளுக்கு அவனுடைய இந்த முரட்டுத்தனத்தை பார்த்து கொஞ்சம் பயமே வந்திருந்தது.. இதுபோல் ஒருவனை அவள் பார்த்ததில்லை … எல்லாரும் இவளின் கோபத்திற்கும் தைரியத்திற்கும் பயந்து போயிருக்க அந்த தைரியம் இப்போது சக்தியிடம் செல்லுபடியாகவில்லை… ஒருவேளை முழுதைரியத்தை அவள் காட்டவில்லையோ என்னவோ..!!!
 
சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் கோபத்துடன் கொஞ்சநாள் இருக்குள்ள அதுக்குள்ள நாம இவன படுத்துர பாட்டுல தன்னால டைவர்ஸ் கொடுத்திரனும் .. இந்த ரமலிய யாருன்னு நினைச்சான் பல்லை கடித்தவள் அவன் தன் முகத்தை பார்ப்பது தெரியவும் முகத்தை சாதாரணமாக்கி எழுந்து நிற்க,
 
அவனும் எழுந்து,” கீழ போவமா அங்க எங்க அப்பாவும் அப்பத்தாவும் இருக்காங்க.. இங்க பேசின மாதிரி ஏதாவது அவங்கள எதிர்த்தோ இல்ல உன்னிஷ்டத்துக்கோ நீ பேசின இப்ப இங்க நடந்துச்சோ அது அங்க எல்லார் முன்னாடியும் நடக்கும் பார்த்துக்கோ.. அவள் சிவந்த இதழையே பார்த்தவன் இத்தனை நாள் நான் எப்படி நீ சொல்றத கேட்டுட்டு உன்னை தொடாம கூட இருந்திருக்கனோ அதே மாதிரி இனி நான் சொல்றதுக்கெல்லாம நீ தலையை மட்டும் ஆட்டினா போதும்.. உனக்கு அவகாசம் எத்தனை நாள் வேணும்  எல்லாத்தையும் இப்பவே பேசி முடிவெடுத்துக்கலாம்…
 
ரமலி சட்டென முடிவெடுத்து ..”ஒரு வருசம்..
 
ஹாஹாஹா ஒரு வருசமா கேடி.. அதுக்கெல்லாம் வேற ஆளப்பாரு.. அதுக்கு நான் சாமியாராவே போயிரலாம்.. வேணும்னா  90 நாள் எடுத்துக்கோ..
 
ஐயோ மூனுமாசமா அதுக்குள்ள இவன விரட்டிர முடியுமா … பெருமூச்சு விட்டவள் பிளீஸ் ஒரு ஆறுமாசமாவது டைம் கொடுங்க..??”
 
அவ்வளவு நாளா… ம்ம்ம் சரி பட் ஒன் கண்டிசன்.. வாழ்க்கையை துவங்கதான் ஆறுமாசம் உன்னை தொட, அவள் கையை பிடித்து இழுத்தவன் இப்படி அணைக்க இப்படி முத்தம் கொடுக்க  அவள் இதழில் மீண்டும் முத்தமிட இதுக்கெல்லாம் நேரம் காலமோ அல்ல தடையோ கூடாது அதுக்கு சரின்னா நானும் ஆறுமாசத்துக்கு ஒத்துக்குறேன்.. டீலா நோ டீலா..??” அவளை நோக்கி கைநீட்ட கைகுலுக்குவதை தவிர அவளுக்கு வேறு வழியில்லை..
 
இருவரும் ஒன்றாக மாடியில் இருந்து இறங்கி வர அங்கு அமர்ந்து  நொடிக்கொருதரம் மாடியையே பார்த்திருந்த மூவருக்கும் ஏதோ லேசாக புரிந்தது..
 
எப்போதும் போல தாமதமாக எழுந்த வெற்றியோ இன்றும் மெதுவாக கிளம்பி ஹோட்டலுக்கு செல்ல மதிய வேளையே வந்திருந்தது.. இன்று கடைப்பையன் ஒருவன் வராமலிருக்க ஏதோ மாநாட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள் வேனை அங்கு ஒரு ஓரமாக நிறுத்தி சாப்பிட வந்திருந்தார்கள்.. அதில் ஒரு சிலர் தண்ணீர் அடித்திருக்க போதை சற்று அளவுக்கு மீறியிருந்தது..
 
எதை ஆர்டர் கொடுத்தாலும் அதை குறை சொல்லியபடி எல்லாவற்றையும் மாறி மாறி கொண்டுவரச் சொல்லிக் கொண்டிருக்க அனைவருக்கும் வேலை இருந்துகொண்டே இருந்தது..
 
அவர்களில் ஒருவன் பார்வை தேனியின் சுறுசுறுப்போடு அங்கு பரிமாறிக் கொண்டிருந்த மலரின் மீது விழுந்திருக்க மீண்டும் மீண்டும் வேண்டும் என்றே அவளிடமே ஏதாவது கொண்டு வரச் சொல்லிக் கொண்டிருக்க மலருக்கு கஷ்டமாக இருந்தது.. ஹோட்டல் ஆரம்பித்த இத்தனை நாட்களில் இதுமாதிரி ஆட்கள் வந்தால் மாமாவே மலரை வெளியில் விடாமல் அவரே பார்த்துக் கொள்வார்.. எல்லைமீறும்போது அவர்களை நோக்கி வேட்டியை மடித்துக் கொண்டு மீசையை முறுக்கியபடி முறைத்தாலே போதும் அப்படியே அடங்கிப்போவார்கள்…
 
ரமலியின் பயந்த முகத்தை பார்த்தால் இதுமாதிரி என்ன வேலைப்பார்த்தாலும் சில நாய்களோட தொல்லை இருக்கத்தான் செய்யும் மலரு.. நீதான் தைரியமா இருக்கனும்.. பொம்பளைங்க எப்பவும் புலி மாதிரி இருக்கனும்.. பயந்த எலி மாதிரி இருக்கக்கூடாதுத்தா… இன்று பார்த்து மாமா இல்லாம ஊருக்கு போயிட்டாங்களே…
 
மலர் பரிமாறுவதற்கு தோதாக சேலையை லேசாக தூக்கி சொருகியிருக்க அதில் சேலை விலகி பளிரிட்ட வெண்ணிற இடையை பார்த்தவனுக்கு  புத்தி தடுமாற அதை தொட்டுபார்க்கும் ஆசையில் கையை கொண்டு போக அவன் கையை பின்னால் இருந்து மடக்கியிருந்தான் அந்நேரம் அங்கே வந்திருந்த வெற்றி… ம்ம் என்ன சாப்பிடக் கை வேண்டாமா..??”
 
மலரை முறைத்தவன்,” ம்ம் போ உள்ள… ?”அவள் வேகமாக உள்ளே செல்ல நானே அவள அங்க தொட்டதில்ல இவனுக்கு என்ன திமிரு ஓங்கி அவன் மூக்கில் ஒரு குத்துவிட ரத்தம் பொலபொலவென ஊற்றியிருந்தது…
 
 கசாமுசாவென சத்தம் கிளம்ப அவர்களை கூட்டி வந்திருந்த ஒரு பெரியவரோ,” எனக்கு தெரியும்டா நீ இதுமாதிரி அடிவாங்குவன்னு.. எத்தனை தரம் சொன்னேன் பேசாம இருங்கன்னு.. இப்ப அனுபவி..” வெற்றியை பார்த்து மன்னிப்பு கேட்டவர் பில்லுக்கு பணம் செலுத்திவிட்டு அனைவரோடும் வெளியேற,
 
மலரைத்தேடிச் சென்றவன் அவள் பின்புறம் ஒரு கல்லில் அமர்ந்திருந்தாள்.. உன்னை யாரு வெளியில வரச் சொன்னது.. ஆள் ரொம்ப வந்தா எனக்கு போன் பண்ண மாட்டியா.. எங்க அப்பா அண்ணன்கிட்ட உதவி வாங்க தோனுது நான் செய்ய மாட்டேனா.. உனக்கு ஏண்டி இவ்வளவு திமிரு..??”
 
அவனை காண்டாக முறைத்தவள்,” உங்கள இப்ப யாரு கைநீட்டச் சொன்னா .. இத்தனை நாளு நீங்களா வந்து எனக்கு உதவி பண்ணுனிங்க … இல்ல இனியும் பண்ணப் போறிங்களா.. எப்படியும் இன்னும் கொஞ்சநாள்ல வெளிநாட்டுக்கு கிளம்பி போகத்தானே போறிங்க அப்ப எவன் என்னை எங்க தொடுறான்னு பார்த்துக்கிட்டு இருக்க போறிங்களா…??” வெகுநேரம் இருந்த டென்சனை இப்போது வெற்றியை பார்க்கவும் கொட்டி கவிழ்க்க,
 
அவள் பேச்சு அவன் மனதை தைத்தாலும் கோபம் கண்ணை மறைக்க அவளை தன்புறம் இழுத்தவன் ,”எவனுக்காவது உன்னை தொட தைரியம் வருமாடி சீவிர மாட்டேன்..” தன் மீசையை முறுக்கிவிட,
 
கிழிச்சிங்க.. பேசாம போயிருங்க.. என் பேச்சுக்கு வராதிங்கன்னு நேத்துத்தான் சொன்னேன்.. நீங்களும் மாமாவோட ஊருக்கு போயிருக்க வேண்டியதுதானே யாரு உங்களை வெத்தலை பாக்கு வைச்சு அழைத்தா….
 
ப்பா வாயாடி இது இப்புடி பேசுது.. நீ என்னோட அத்தை மகதானான்னு எனக்கு சந்தேகம் வருது… அப்ப எவ்வளவு அமைதியா இருப்ப இப்ப ஏண்டி இப்புடி மாறிட்ட..!!”
 
தான் பேசுவது அதிகம்தான் என்பதை உணர்ந்தவள் வேண்டாம் என்றவன் அப்படியே போயிருந்தால் ஒன்றும் தோன்றியிருக்காதோ என்னவோ இப்போது சிலநாட்களாக தன்னையே பார்த்தபடி தன்னை சுற்றிசுற்றி வருவது பெண்ணான அவளுக்கும் மனதை தொட்டிருந்தது.. அவனிடமிருந்து விலகியவள் மளுக்கென்று வழிந்த கண்ணீரை துடைத்தபடி தன் முகத்தை கழுவி முன்புறமாக நுழைந்தாள்.. அவள் கோபத்தை தாங்கியவனால் அவள் அழுகையை தாங்க முடியவில்லை.. நாம வர கொஞ்சம நேரம் ஆகியிருந்தா என்னாயிருக்கும்…!!!
 
                                                       இனி………………??????
 
 
 
 
 

Advertisement